மொரப்பூரில் நிற்காத ரயில்கள்: அரூர் ரயில் பயணிகள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2014
02:06

அரூர்: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன்களில், சில ரயில்கள் நிற்காது, என தென்னக ரயில்வே அறிவித்துள்ளதால்,அரூர் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கடந்த, 1861ம் ஆண்டு ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. 153 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தென்னக ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில்வே ஸ்டேஷனில், 20 ரயில்கள் நின்று செல்கிறது. மேலும், இந்த வழியில், 75க்கும் மேற்பட்ட ரயில்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

இந்நிலையில், கடந்த, 2006, ஜனவரி, 11ம் தேதி, திருவனந்தபுரம்- ஹைதரபாத் சபரி எக்ஸ்பிரஸ் வண்டி எண்கள், 17229, 17230, மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களான வண்டி எண், 12685, 12686, 2009, மார்ச், 1ம் தேதி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று சென்றது.

இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் என நாள்தோறும், 500க்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வந்தனர்.

இவ்விரு ரயில்களும், வரும், ஜூன், 30ம் தேதி வரை மட்டுமே, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் எனவும், அதன்பின், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்காது எனவும், தென்னக ரயில்வே, அறிவித்துள்ளது. மேலும், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், நின்று சென்ற பொக்காரோ எக்ஸ்பிரஸ் வண்டி எண், 13351, 13352 ஆகிய ரயில்களும், வரும், ஜூன், 30ம் தேதிமுதல், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், நிற்காதென, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த மூன்று ரயில்களையும், மீண்டும் மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களும், வணிகர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X