Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
மிதமான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஏப்ரல் 19,2019

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை மிதமான அளவு மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலையில் அதிக வெப்பம் நிலவியது. ...

 • ஜனநாயக கடமையாற்றிய 99 வயது முன்னாள் எம்.எல்.சி.,

  ஏப்ரல் 19,2019

  திருச்செங்கோடு: இந்திய அரசியல் அமைப்பின் நிர்ணயசபை உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.சி.,யுமான காளியண்ணன், திருச்செங்கோட்டில் ஓட்டுப் போட்டார். திருச்செங்கோட்டில் வசித்து வருபவர் காளியண்ணன், 99. இவர், இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்துள்ளார். எம்.பி., எம்.எல்.சி., உள்ளிட்ட பல்வேறு பதவிகளை ...

  மேலும்

 • சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை

  ஏப்ரல் 19,2019

  நாமக்கல்: சின்னமுதலைப்பட்டி அருகே, சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. நாமக்கல், மூன்றாவது வார்டு சின்னமுதலைப்பட்டி, நான்காவது வார்டு என்.ஜி.ஜி.ஓ., காலனி ஆகிய பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. பட்டணம், நைனாமலை உள்ளிட்ட ...

  மேலும்

 • ஓட்டுப்பதிவு முடிந்து இயந்திரத்துக்கு 'சீல்': எண்ணும் மையத்தில் ஒப்படைப்பு

  ஏப்ரல் 19,2019

  நாமக்கல்: லோக்சபா தேர்தல் முடிந்ததையடுத்து, ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், 'சீல்' வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று, ஓட்டு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), ...

  மேலும்

 • 75.60 சதவீதம் ஓட்டுப்பதிவு

  ஏப்ரல் 19,2019

  குமாரபாளையம்: ஈரோடு லோக்சபா தொகுதிக்கு, குமாரபாளையம் சட்டசபை தொகுதியில், 75.60 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இதுகுறித்து, தாசில்தார் தங்கம் கூறியதாவது: குமாரபாளையம் தொகுதியில், 279 மையங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்த வாக்காளர்கள், ஒரு லட்சத்து,84 ஆயிரத்து, 91 பேர்; ஆண் - 91 ஆயிரத்து, 191 பேர்; பெண் - 92 ...

  மேலும்

 • கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

  ஏப்ரல் 19,2019

  திருச்செங்கோடு: திருச்செங்கோடு அணிமூர் கிராமத்தில், நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் செய்தனர். இதனால், இரண்டு ஓட்டு சாவடிகளில் மக்கள் ஓட்டுப் போடவில்லை. ஆர்.டி.ஓ., மணிராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பொதுமக்கள் தரப்பில், 'ஒவ்வொரு ...

  மேலும்

 • அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

  ஏப்ரல் 19,2019

  மின்மாற்றி அருகே குப்பை குவிப்பு: குமாரபாளையம் நாராயண நகர், ரேஷன் கடை எதிரில், மின்மாற்றி இருக்கும் இடத்தில், அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து, பகுதியினரை துன்புறுத்துவதோடு, தொற்றுநோய் பரவவும் ...

  மேலும்

 • தண்ணீர் வராததால் மக்கள் தவிப்பு

  ஏப்ரல் 19,2019

  நாமக்கல்: புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சிபுதூரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பஞ்சயத்து நிர்வாகம் மூலம், போர்வெல் அமைத்து அதிலிருந்து, மேல்நிலை நீர்த்தேக்கத்தொடிக்கு ஏற்றி அங்கிருந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், வடக்கு பிள்ளையார் கோவில் ...

  மேலும்

 • ஆவத்திபாளையம் ஓடை சீரமைக்க வேண்டுகோள்

  ஏப்ரல் 19,2019

  பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, ஆவத்திபாளையத்தில் ஓடை செல்கிறது. இங்கு வளர்ந்துள்ள முட்புதர் கடந்த சில நாட்களுக்கு முன் அகற்றப்பட்டது. தற்போது, கழிவுநீர் தேங்கியிருப்பதால், பல இடங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. இதை அகற்றி விட்டு, ஓடையில் கழிவுநீர் தனியாக செல்லும் வகையில் வடிகால் அமைக்க ...

  மேலும்

 • கத்தேரி சாலை வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?

  ஏப்ரல் 19,2019

  குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கத்தேரி செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தனியார் வங்கி உள்ள வளைவில், வேகத்தடை இல்லாததால், அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படுகின்றனர். அருகிலேயே அரசு பள்ளி இருப்பதால், மாணவ, மாணவியர் விபத்தில் சிக்கும் நிலை ...

  மேலும்

 • ஓட்டளிப்பது குறித்து மா.திறனாளிகள் விழிப்புணர்வு

  ஏப்ரல் 19,2019

  ராசிபுரம்: ராசிபுரத்தில், மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வுடன் ஜனநாயக கடமையாற்றி அசத்தினர். ராசிபுரம் அருகே, குருக்கபுரம் வெற்றிநகரை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன்கள் இளையராஜா, 30 பூபதி, 28. இருவரும், கடந்த சில ஆண்டுகளாக தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் சிகிச்சை பெற்று ...

  மேலும்

 • மலைவாழ் மக்கள் 188 பேர் தேர்தல் புறக்கணிப்பு

  ஏப்ரல் 19,2019

  கொல்லிமலை: சாலை வசதி செய்யாததால், கொல்லிமலை மலைவாழ் மக்கள், 188 பேர், லோக்சபா தேர்தலை புறக்கணித்தனர். கொல்லிமலை ஒன்றியம், அரியூர்நாடு ஊராட்சியில், அரியூர் கஸ்பா கிராமத்தில், 50 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு, கடந்த, 40 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரவில்லை. இதுகுறித்து, ...

  மேலும்

 • வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

  ஏப்ரல் 19,2019

  நாமக்கல்: மாவட்டத்தில், வெப்பத்தின் தாக்கம் காலை முதல் இருந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்று, 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, ...

  மேலும்

 • வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வமுடன் ஓட்டளிப்பு

  ஏப்ரல் 19,2019

  நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.நாமக்கல் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த, கொ.ம.தே.க., வேட்பாளர் சின்ராஜ், நேற்று முன்தினம் மாலை, குடும்பத்துடன் காரில் கரூர் சென்றபோது, விபத்தில் சிக்கினார். நேற்று காலை, 10:00 மணியளவில், ...

  மேலும்

 • ஓட்டுப் பதிவு தாமதமாக துவக்கம்

  ஏப்ரல் 19,2019

  குமாரபாளையம்: குமாரபாளையத்தில், முதல் ஓட்டு போடுவதில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஓட்டுப் பதிவு தாமதமாக துவங்கியது. லோக்சபா தேர்தலுக்கு, குமாரபாளையம், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், ஏழு ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை, தி.மு.க., - அ.தி.மு.க., பூத் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X