Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களால் மக்கள் அவதி
மார்ச் 18,2019

வீரபாண்டி: தார்ச்சாலை போடுவதற்காக, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் நடக்காததால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆட்டையாம்பட்டி அருகே, ராஜாபாளையம் பஞ்சாயத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் ...

 • அரசுப்பள்ளி அருகே எரிக்கப்படும் குப்பையால் மாணவர்கள் அவஸ்தை

  மார்ச் 18,2019

  வீரபாண்டி: அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, சாலையின் இருபுறங்களிலும் குப்பையை தீ வைத்து எரிப்பதால், எழும் புகையால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அரியானூரில் இருந்து, ஆட்டையாம்பட்டிக்கு செல்லும் சாலையில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே, சாலையின் இருபுறங்களிலும் ...

  மேலும்

 • அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொது மக்கள்

  மார்ச் 18,2019

  மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, தப்பகுட்டை ஊராட்சி ஆறாவது வார்டுக்கு உட்பட்ட சின்னமாரியம்மன் அருந்ததியர் தெருவில், 140 குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடை தூர்வாரப்படவில்லை. சிறிய மழை பெய்தாலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வீட்டினுள் செல்கிறது. இவர்கள் பயன்படுத்த, சில ...

  மேலும்

 • தொடர்ந்து எரியும் குப்பை: சிரமப்படும் பொதுமக்கள்

  மார்ச் 18,2019

  மல்லூர்: மல்லூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு, ச.ஆ. பெரமனூர் கிராமம் அருகேயுள்ளது. அங்கு, கடந்த, 14ல், ஒரு ஏக்கரில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை தீப்பற்றி எரிந்தது. சேலம் தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடியும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்த நாள், பேரூராட்சி பணியாளர்கள், ஒரு ...

  மேலும்

 • பிரிவு சாலையில் எதிரொளிப்பான் இல்லாததால் விபத்து

  மார்ச் 16,2019

  இடைப்பாடி: சென்டர் மீடியன் மீது, லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதற்கு, எதிரொளிப்பான் இல்லாததே காரணம் என, மக்கள் குற்றம்சாட்டினர். சேலம் மாவட்டம், காரிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கு சொந்தமான லாரியில், பவானியிலுள்ள நிறுவனத்திலிருந்து, கிழங்கு மாவை ஏற்றிக்கொண்டு, டிரைவர் முருகன், ...

  மேலும்

 • சாலையில் கழிவுநீர்

  மார்ச் 16,2019

  மகுடஞ்சாவடி: இடங்கணசாலை, நல்லணம்பட்டியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள பல வீதிகளில், சாக்கடை வசதி செய்து தரப்படாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். மேலும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ...

  மேலும்

 • பிரதான சாலையில் டவுன் பஸ்கள்: பயணிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து

  மார்ச் 13,2019

  பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், சீலநாயக்கன்பட்டி முதல், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை சர்வீஸ் சாலை உள்ளது. பிரதான சாலையில், புறநகர் பஸ்கள், சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ்கள், இருபுறத்திலும் உள்ள சர்வீஸ் சாலையில் இயக்க வேண்டும். சேலத்திலிருந்து மல்லூர் உள்பட பல்வேறு ...

  மேலும்

 • திருமணிமுத்தாற்று பாலம் அடியில் குப்பை எரிக்கும் புகையால் அவதி

  மார்ச் 12,2019

  வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் திருமணிமுத்தாறு பாலத்தின் இருபுறங்களிலும் நெய்க்காரப்பட்டி, பூலாவரி மற்றும் உத்தமசோழபுரம் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டி வைத்து அவ்வப்போது எரிக்கின்றனர். இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை சாலையை மறைத்து விடுகிறது. ...

  மேலும்

 • விதிகளை மீறி இயங்கும் லாரிகள்: இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

  மார்ச் 11,2019

  பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், பனமரத்துப்பட்டி பிரிவில், மேம்பாலம் உள்ளது. அதன் கீழ், வாகனங்கள் செல்ல, வர, இரு சாலைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. சரக்கு வாகனங்கள், விதிகளை மீறி, எதிர் திசையில் வேகமாக செல்கின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, விபத்தில் ...

  மேலும்

 • டயர் கழிவு எரிப்பால் மூச்சுத்திணறல்

  மார்ச் 10,2019

  மல்லூர்: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லூர் அருகே அம்மாபாளையம் ஏரி, 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு, புதிய மற்றும் பழைய தார்ச்சாலைக்கு இடையில், டயர் கழிவுகளை கொட்டி தீ வைக்கின்றனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை எழும்புகிறது. இதனால், நெடுஞ்சாலையில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ...

  மேலும்

 • உயர்கோபுர மின்விளக்கு அமைத்தும் வெளிச்சமில்லை

  மார்ச் 10,2019

  பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, தும்பலில், உயர்கோபுர மின் விளக்கு அமைத்தும், போதிய வெளிச்சம் இல்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: தும்பல் பஸ் ஸ்டாப் வழியாக, தினமும் கருமந்துறை, திருவண்ணாமலை, அரூர் பகுதிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. அதனால், பஸ் ஸ்டாப் ...

  மேலும்

 • இருளில் வேடப்பட்டி; பாம்புகளால் பீதி

  மார்ச் 10,2019

  பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சி, வேடப்பட்டி மலைக்கிராமத்தில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, 16 மின்கம்பங்கள் உள்ளன. அதில், மாரியம்மன் கோவில் அருகே மட்டும், விளக்கு எரிகிறது. மேல் கொட்டாய், கருப்பு கோவில், மயானம், புளியமரத்துக்காடு உள்ளிட்ட இடங்களில், மூன்று ...

  மேலும்

 • குண்டும், குழியுமான சாலையால் சிரமம்

  மார்ச் 08,2019

  மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, கனககிரி ஊராட்சி, செட்டியார்காடு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள தெருக்களில் போடப்பட்ட சாலை, 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. இதனால், குண்டும், குழியுமாக மாறி, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, ...

  மேலும்

 • சர்வீஸ் சாலையில் விபத்து: மின்விளக்கு அவசியம்

  மார்ச் 06,2019

  பனமரத்துப்பட்டி: சர்வீஸ் சாலையில் விளக்குகள் இல்லாததால், விபத்து நடக்கிறது. சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை இருபுறமும், சீலநாயக்கன்பட்டி முதல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை, சர்வீஸ் சாலை உள்ளது. கிழக்கு பகுதி சர்வீஸ் சாலையில், ராஜாராம் காலனி, நிலவாரப்பட்டியில் தனியார் மில், அருந்ததியர் காலனி உள்ளிட்ட ...

  மேலும்

 • கழிப்பிடம் இல்லை; பொதுமக்கள் அவதி

  மார்ச் 05,2019

  மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, ரெட்டியூர், அருந்ததியர் காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, பொதுக்கழிப்பறை இல்லாததால், மக்கள், அருகிலுள்ள ஓடை பகுதிக்கு செல்கின்றனர். அங்கு, விஷ ஜந்துக்கள் உலா வருவதால், பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X