Dinamalar

சீறுமா இங்கிலாந்து ‘சிங்கங்கள்’: பதறுமா குரோஷிய அணி ,  
 

சீறுமா இங்கிலாந்து ‘சிங்கங்கள்’: பதறுமா குரோஷிய அணி

மாஸ்கோ: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து, குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 28 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி இன்று சாதிக்கும் பட்சத்தில், 52 ஆண்டுகளுக்குப் பின் பைனலுக்கு முன்னேறி சாதிக்கலாம்.

ரஷ்யாவில் 21வது 'பிபா' உலக கோப்பை தொடர் கால்பந்து தொடர் நடக்கிறது. கோப்பைக்கான போட்டியில் இருந்து இதுவரை 29 அணிகள் வெளியேறிவிட்டன. இன்று மாஸ்கோவில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து(செல்லமாக மூன்று சிங்கங்கள்), குரோஷிய அணிகள் மோதுகின்றன.

ரசிகர்கள் அதிகம்

லீக் சுற்றில் 2 வெற்றி பெற்றாலும் பெல்ஜியத்துடன் தோற்ற போது சற்று சறுக்கியது இங்கிலாந்து. அடுத்து 'ரவுண்டு-16' போட்டியில் 'பெனால்டி' வரை சென்று தான் இங்கிலாந்து கரை சேர்ந்தது. இருப்பினும் அர்ஜென்டினா, போர்ச்சுகல், பிரேசில் உள்ளிட்ட முன்னணி அணிகள் வெளியேறிய நிலையில் இங்கிலாந்து பங்கேற்கும் போட்டிகள் 'டிவி' பார்வையாளர்களை அதிகம் ஆக்கிரமித்துள்ளது.

பயிற்சியாளர் கரேத் சவுத்கேட்டின் துடிப்பான வியூகத்தால், இங்கிலாந்தின் ஏராளமான ரசிகர்களும் ஆதரவு தருகின்றனர். கோல் கீப்பர் ஜோர்டன் பிக்போர்டு நட்சத்திர வீரராக நம்பிக்கை தருகிறார். சுவீடன் அணிக்கு எதிரான காலிறுதியில் இவரது சிறப்பான செயல்பாடு தான் அணியை அரையிறுதிக்கு கொண்டு வந்தது.

கேப்டன் ஹாரி கேன் இதுவரை 6 கோல் அடித்து, தங்க காலணி ('கோல்டன் பூட்') விருதை முதல் வீரராக உள்ளார். இன்றும் கடந்த போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காத இவர் இம்முறை வெற்றிக்கு உதவலாம். தவிர, ஹெண்டர்சன், ஸ்டெர்லிங், கடந்த முறை கோல் அடித்த டேல் அல்லி, மாகுயரேவும் கைகொடுக்கும் பட்சத்தில் 1966 க்குப் பின் மீண்டும் கோப்பை வெல் முயற்சிக்கலாம்.

எதிர்பாராத வருகை

குரோஷிய அணி இத்தொடரில் சில ஆச்சர்யங்களை நிகழ்த்தலாம் என கணிக்கப்பட்டது. இதற்கேற்ப லீக் சுற்றில் அர்ஜென்டினாவை சாய்த்தது. இந்த அசத்தல்கள் தொடர, தற்போது 100 சதவீத வெற்றியுடன், 1998க்குப் பின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மத்திய கள பகுதியில் உலகளவில் சிறப்பாக திகழும் லுகோ மாட்ரிக் (2 கோல்), ராகிடிச் என இருவரும் இந்த அணியில் இருப்பது பயிற்சியாளர் ஜலட்கோ டாலிக்கிற்கு பெரும் பலமாக உள்ளது. தவிர மரியோ மாண்ட்ஜூகிச், இவான் பெரிசிக், ரெபிக் என பலரும் கோல் அடிப்பதில் வல்லவர்கள் மட்டுமன்றி, கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து அணிக்காக விளையாடி வருவது பலம்.

'ரப்பர் சிக்கன்' பயிற்சி

அரையிறுதிக்கு தயாராக இங்கிலாந்து வீரர்கள் ரப்பர் சிக்கனை வைத்து ஜாலியாக பயிற்சியில் ஈடுபட்டனர். இரு பிரிவாக பிரிந்த வீரர்கள், இந்த சிக்கனை எதிரணி வீரர்கள் மீது எறிவர். அவர் தன் மேல் பட்டு விடாமல் விலக வேண்டும். போட்டியின் போது பந்தை லாவகமாக பெறுவதற்காக இப்படி பயிற்சி செய்தனர்.

விடாவுக்கு தடையா

குரோஷியாவின் தற்காப்பு பகுதி வீரர் தோமாகோஜ் விடா. ரஷ்யாவுக்கு எதிராக காலிறுதியில் கூடுதல் நேரத்தில் கோல் அடித்தவர். இந்த வெற்றியை உக்ரைனுக்கு சமர்பிப்பதாக, துணை பயிற்சியாளர் இவிகா ஆலிச், விடா தெரிவித்தனர்.

ஏற்கனவே உக்ரைனுடன் சர்ச்சை உள்ளதால் கோபமடைந்த ரஷ்யா, 'பிபாவிடம்' புகார் தெரிவித்தது. இதனால் இவிகா ஆலிச்சை உடனடியாக திருப்பி அனுப்பியது குரோஷியா. தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட விடாவை, 'பிபா' எச்சரித்தது. தற்போது உக்ரைனுக்கு ஆதரவான இரண்டாவது வீடியோ வெளியிட்டார் விடா. இது எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இதனால் இன்றைய அரையிறுதியில் பங்கேற்க விடாவுக்கு தடை வரலாம் எனத் தெரிகிறது.Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

ஜூலை 16,2018 பாரிஸ்: உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. நேற்றிரவு பாரிஸ் சென்ற வீரர்கள் திறந்த பஸ் மூலம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, ...
அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

ஜூலை 16,2018 மாஸ்கோ: அர்ஜென்டினா கால்பந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து சாம்பாவோலி விலகினார். அர்ஜென்டினா அணி 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் பெரிய ...
‘கோல்டன் பால்’ யாருக்கு

‘கோல்டன் பால்’ யாருக்கு

ஜூலை 16,2018 இந்த சீசனில் தொடர் நாயகன் விருதை குரோஷிய கேப்டன் மாட்ரிச் கைப்பற்றினார். இதனையடுத்து இவருக்கு சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது. ஹாரி கேன் ...