Dinamalar

உலக நாயகன் குளோஸ் ,  
 

உலக நாயகன் குளோஸ்

ஜெர்மனி அணியின் சிறந்த முன்கள வீரர் மிராஸ்லாவ் குளோஸ், 40. கடந்த 2001ல் சர்வதேச கால்பந்து அரங்கில் அறிமுகமான இவர் ஜெர்மனிக்காக அதிக கோல்(137 போட்டி, 71 கோல்) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

தென் கொரியாவில் 2002ல் நடந்த உலக கோப்பை தொடரில் முதன்முறையாக பங்கேற்ற இவர், 5 கோல்கள் அடித்து அணியை பைனலுக்கு அழைத்து சென்றார். சொந்த மண்ணில் 2006ல் நடந்த உலக கோப்பையில் அதிகபட்சமாக 5 கோல்கள் அடித்து 'கோல்டன் ஷூ' விருது வென்றார்.

தென் ஆப்ரிக்காவில் 2010ல் நடந்த உலக கோப்பையில் மூன்றாவது முறையாக பங்கேற்ற இவர், 4 கோல் அடித்தார். கடந்த 2014ல் (பிரேசில்) அதிக எதிர்பார்ப்புடன் நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் களமிறங்கிய குளோஸ் 2 கோல் தான் அடித்தார்.

இருப்பினும் உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி முதலிடத்தை பெற்ற குளோஸ் (16) புதிய சாதனை படைத்தார். இது ஜெர்மனி அணி நான்காவது முறையாக உலக கோப்பையை முத்தமிட உதவியது. இந்த திருப்தியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து பிரியாவிடை பெற்றார் குளோஸ். கிளப் அணிகளை பொறுத்தவரை ஜெர்மனியை சேர்ந்த வெர்டர் பிரீமென், பேயர்ன் முனிச் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மிரோஸ்லவ் குளோஸ் அபாரம்

மிரோஸ்லவ் குளோஸ் அபாரம்

ஜூன் 15,2018 உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த நான்கு (2002, 2006, 2010, 2014) உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவர், ...
பிரேசில் அணி ஆதிக்கம்

பிரேசில் அணி ஆதிக்கம்

ஜூன் 15,2018 உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் என, 7 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில் ...
வில்லா விஸ்வரூபம்

வில்லா விஸ்வரூபம்

ஜூன் 15,2018 ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டேவிட் வில்லா, 36. இவருக்கு இளம் வயதிலேயே சோதனை காத்திருந்தது. இவரது நான்காவது வயதில், வலது கால் தொடை எலும்பில் முறிவு ...