முதல் பக்க செய்திகள் 

கர்நாடகாவில் 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா : அதிருப்தி மந்திரி கை ஓங்குகிறது
நவம்பர் 07,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக 52 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அதிருப்தி மந்திரிகளான ரெட்டி சகோதரர்களின் கை ஓங்குகிறது.கர்நாடகா பா.ஜ.,வில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. "எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்'என, மாநில அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக இரு தரப்பினரும் டில்லியில் முகாமிட்டு, கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால், எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் ரெட்டி சகோதரர்கள் பிடிவாதமாக உள்ளனர். கோவா மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 60 பேரை, ரெட்டி சகோதரர்கள் தங்க வைத்துள்ளனர். எடியூரப்பாவுக்கான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த எம்.எல்.ஏ.,க்களில் 52 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இவர்கள், தங்களது ராஜினாமா கடிதங்களை அதிருப்தி கோஷ்டி தலைவரான ஜனார்த்தன் ரெட்டிக்கு, "பேக்ஸ்' மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதங்களை டில்லியில் முகாமிட்டுள்ள தங்கள் ஆதரவாளரும், கர்நாடகா சட்டசபை சபாநாயகருமான ஜெகதீஷ் ஷெட்டாரிடம் ஒப்படைக்கும்படியும் அந்த எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால், அதற்கான கடிதங்களை முறைப்படி தங்கள் கட்சித் தலைவரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதிருப்தி கோஷ்டி தலைவருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனால், பா.ஜ., வில் உள்ள நெருக்கடி வித்தியாசமாக இருக்கிறது.இறங்கி வந்தார் எடியூரப்பா:இதற்கிடையே, பா.ஜ., தலைவர்களுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து, ரெட்டி சகோதரர்களை சமாதானப் படுத்துவதற்கு முதல்வர் எடியூரப்பா தயாராகியுள்ளார். இதன் முதல் கட்டமாக, ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று, தனது முதன்மை செயலராக இருந்த பாலிகாரை, அந்த பதவியில் இருந்து மாற்ற உத்தரவிட்டுள்ளார்.மேலும், ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக செயல்படும் மாநில அமைச்சர் ஷோபாவையும், அமைச்சர் பதவியில் இருந்த நீக்கவும் அவர் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இது தவிர, பெல்லாரி மாவட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட 18 அதிகாரிகளை மீண்டும் அங்கு மாற்றுவதற்கும் எடியூரப்பா தயாராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது:ரெட்டி சகோதரர்களுக்கு சாதகமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் மேலும் சில கோரிக்கைகளையும் பரிசீலிக்க தயாராக உள்ளேன் என, கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். கட்சியின் நலன் கருதி இதுபோன்ற நடவடிக்கைளை எடுக்க திட்டமிட்டுள்ளேன். நான், பா.ஜ.,வின் தீவிர விசுவாசி. கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவுக்கு கட்டுப்படுவேன்.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.ஐதராபாத் புறப்பட்டார் ரெட்டி: கடந்த சில நாட்களாக டில்லியில் முகாமிட்டிருந்த அதிருப்தி கோஷ்டி தலைவர் ஜனார்த்தன் ரெட்டி, நேற்று ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், ரெட்டி சகோதரர்களின் சில கோரிக்கைகளை எடியூரப்பா செயல்படுத்த சம்மதித்திருப்பது குறித்து அவரிடம், கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இதில் ஜனார்த்தன் ரெட்டி ஓரளவு சமாதானம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:ரெட்டி சகோதரர்களின் முக்கிய கோரிக்கைகளை எடியூரப்பா ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், ரெட்டி சகோதரர்களின் கை ஓங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, தனது முதன்மை செயலரை மாற்றுவதற்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஐதராபாத் ஓட்டல்களில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, அவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ரெட்டி இறங்கியுள்ளார். இதற்காகவே, அவர் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.ஜனார்த்தன் ரெட்டி ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளது, பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டி சகோதரர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என, பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அரசியல் ஒரு சாக்கடை என்று இருந்தேன். ஆனால் அது சாக்கடையை விட கேவலமானது என்று இவர்கள் புரிய வைத்து விட்டார்கள். இனி அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி சாக்கடையை கேவல படுத்த வேண்டாம். 
by Ram,Thanjavur,India    08-11-2009 01:39:30 IST
 என்னமோ ! சமீப காலமாக பீ.ஜெ ,பீக்கு நேரம் சரி இல்லை. தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. இதனை கட்சி மேலிடம் தீர்க்க ஆய்ந்து நாட்டு நலனுக்கும் ,மக்கள் நலனுக்கும் வுரிய கட்சியாக அதனை புனர் நிர்மாணம் செய்ய வேண்டும்.ரெட்டி சகோதரர்களை ரொட்டி ஆக்குங்கள். எடியூரப்பா வுமக்கு இது பெரிய இடையூரப்பா.!  
by ibnusalih,abudabi,,a,India    08-11-2009 00:15:33 IST
 super aapu. thanks to reddy brothers 
by P RAJNISH,ABU DHABI,India    07-11-2009 22:13:54 IST
 நல்ல ஆப்பு தன் வினை தன்னை சுடும்  
by r sivakumar,madurai,India    07-11-2009 21:01:30 IST
 வாழ்க ஜனநாயகம் என்பது பேச்சுக்கே, அரசியல் வாதிகள் கொஞ்சம் நல்லது செய்ய விரும்பினால் கூட இது போன்ற பண முதலைகள் அவர்களை விடுவதில்லை -  
by tk ramesh,nigeria,India    07-11-2009 19:58:14 IST
 தேர்தல் நேரத்தில் காசு கொடுக்கும் போதும் மற்ற கட்சி சட்ட மன்ற உறுபினர்களை பா ஜ பக்கம் இழுக்கும் போதும் ரெட்டி சகோதரர்களை பயன்படுத்திய பா ஜ கட்சி இப்போது அவஸ்தைபடுகிறது. அப்பொழுது ரெட்டிகளின் பணம் ஆதரவாகவும் இப்பொழுது எதிராகவும் இருக்கிறது. 
by தமிழன்,Bangalore,India    07-11-2009 19:41:50 IST
 பணம் பத்தும் செய்யும் .கர்நாடகாவில் பணம் பதவியை விட்டும் இரக்கும்.
 
by m.m. raja,nagercoil,India    07-11-2009 19:37:38 IST
 இந்த மாதிரி எம் எல் ஏக்களைக் கடத்தி, பணம் செலவழித்து, பணம் சம்பாதித்து, பகல் கொள்ளை அடித்து, சுயநலம் சொரூபமாய் இருந்துகொண்டு, அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் - ஆட்களை வளரவிட்டால் - இந்த நாடு உருப்படும் என்று தோன்றவில்லை - இந்த மாதிரி செய்கைகளில் - எந்த கட்சிக்குமே வெட்கம் கிடையாது.  
by KG Gouthaman,Chennai,India    07-11-2009 19:21:20 IST
 ரெட்டி சகோதரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள். தங்கள் சுயநலத்துக்காக ஊழல் செய்த அதிகாரிகளை திரும்ப கேட்கிறார்கள். இது கூடாது. நாட்டிற்க்காக உழைக்கும் பா.ஜ.க கட்சியில் இவர்கள் இருக்க லாயகற்றவர்கள்.

பாரத் மாதா கி ஜெய். 
by V.M. வினோத்,Coimbatore,India    07-11-2009 19:10:05 IST
 ரெட்டிகளை பத்தி படிக்கவே நேரம் போதாது போல ... யப்பா சாமிகலா இனிமேயாவது சீட் கொடுக்கும் போது மக்கள் மீது அக்கறை உள்ளவர்களுக்கு கொடுங்கப்பா ... திருட்டு பசங்களுக்கு சீட் கொடுத்தா இப்படிதான் ஆகும் .... ரெட்டியை சொல்லி குற்றமில்லை அவருக்கு ஆதரவு கொடுக்கும் எம் எல் எ பசங்களை சொல்லணும் ... இவனுகளைஎல்லாம் பார்த்துகங்க கர்நாடக மக்களே ... தமிழ் நாட்டில் மாதிரி குடும்ப ஆட்சி இல்லாமல் நல்ல கட்சியை தேர்ந்தெடுத்த உங்களுக்கு கிடைத்த பரிசு இந்த ரெட்டி பயலுங்க ... ரெட்டிகளை ஹெலிகாப்டரில் அனுப்பிவச்சா எல்லாம் சரியா போகும்... ஜெய்ஹிந்த் ...  
by m பக்ருதீன் லண்டன் ,london,United Kingdom    07-11-2009 19:00:31 IST
 ஏன்டா வெட்டி பசங்களா . வேற வேலையே இல்லையா ... 
by S கோவிந்தசாமி,karnataka,India    07-11-2009 17:09:10 IST
 BJP is once again established his stand. If CM''ship is important for Ediyurappa, he would have surrendered the Reddies. BJP has once again proved that they exist only for ethical values. Whatever the present status is only a temporary set back. I am sure that BJP will regain its fame soon.  
by R. ஸ்ரீதரன்,Bangalore,India    07-11-2009 15:18:16 IST
 Please get rid of rotty business in karnataka&Ap,this is stinks,spoiled rottys. 
by cel Palaniswamy,Sydney,Australia    07-11-2009 15:10:03 IST
 கர்நாடக பா.ஜ.க. அரசு கவிழ்வது நாட்டுக்கு மிகவும் நல்லது. காங்கிரஸ் தலைமை-இல் நாடு மிக விரைவில் வல்லரசாக மாறும். ஜெய் கோ காங்கிரஸ்.!  
by S ரவீந்திரன்,Thoothukudi,India    07-11-2009 14:38:04 IST
 அத்வானி ஜி அந்த 52அச்செம்ப்ளிக்கு தேர்தலை சந்தியுங்கள்,நிச்சயம் பி ஜெ பி தான் ஜெயிக்கும்! அவர்கள் வண்ட வாளம் தண்ட வாளத்தில் ஏறும்,அப்பொழுது தெரியும் அந்த காங்கிரஸ் வைரசுக்களுக்கு! அவர்களுக்கு பிறகு திரிசங்கு தான்...... 
by k thiru,chennai,India    07-11-2009 14:10:31 IST
 எடியுரப்பா நல்ல முதல்வர்களில் ஒருவர். காங்கிரஸ் ரெட்டி சகோதரர்களோடு கை கோர்த்து இந்த நாலாந்தர வேலையில் ஈடுபடுகிறது  
by m முருகன்,chennai,India    07-11-2009 13:41:26 IST
 நல்ல சண்டை
நல்ல பொழுது போச்சுபா
 
by ragu,chennai,India    07-11-2009 13:17:49 IST
 ரெட்டிய அப்படியே ரொட்டியாக்குங்கள்.  
by ABDUL kassim,dubai,India    07-11-2009 12:11:41 IST
 காங்கிரஸ் இன் விளையாட்டு உச்சகட்டம்!! காங்கிரஸ் சாரே!!!! இந்தியா உங்களுக்கு தான் சொந்தம் என்று நினைக்காதீர்கள்...... மீண்டும் அடுத்த தேர்தலில் ஜெயிச்சா என்ன பண்ணுவீங்க??? இப்பதான் தெரியுது இத்தனை வருஷம் நாட்டை கொள்ளை அடிச்சி இருக்கீங்கள்!!! ராஜா/அமெரிக்கா  
by tk ராஜா குமார் ,parma,United States    07-11-2009 11:39:48 IST
 ரெட்டி சகோதரர்கள் ஊழலுக்கு துணை போகாததால் அரசு அலுவலர்கள் இடமாற்றம்; முதல்வர் பதவியை விடக்கூடாது என்பதற்காக கோரிக்கைகள் பெரும்பாலனவைகளை எடியூரப்பா ஏற்றுக்கொண்டார்; என்னைய்யா இது! நாடா இல்லை காடா !  
by பெ சக்திவேல்,தாராபுரம்,India    07-11-2009 11:32:11 IST
 இது ஒரு தேச அவமானம். ரெட்டி சகோதரர்கள் போல் மற்ற எல்லா மாநிலத்திலும் இருவர் இருந்தால் கூடிய விரைவில் ஜனநாயகம் அழிந்துவிடும் . தன் சுயநலத்திற்காக ஒரு மாநில அரசின் நிர்வாகத்தை மாற்றி அமைக்க முயலுவது மிக கேவலம் . 
by k ஸ்ரீராம்,SRIRENGAM,India    07-11-2009 11:28:37 IST
 stable govt give only cong 
by s uthayakumar,gobi,India    07-11-2009 11:02:00 IST
 எடியுரப்பாவிற்கு ஆப்பா? யார் இந்த ரெட்டி சகோதரர்கள்?
 
by H மக்தும்,Abu Dhabi,United Arab Emirates    07-11-2009 10:56:47 IST
 பணத்தை வாங்கிக்கொண்டு ஒட்டு போடும் நம் மக்கள் திருந்தினால்தான் இந்த மாதிரியான பண முதலிகளின் கொட்டத்தை அடக்க முடியும்  
by Sekar,India,India    07-11-2009 10:22:28 IST
 தேர்தல் நிதி கொடுத்தவன் அதிகாரம் கேட்கிறான். நிதி வாங்கும் முன் யோசித்திருக்கவேண்டும் வேண்டும்  
by vm moorthy,hyderabad,India    07-11-2009 09:50:21 IST
 very good  
by kayal mohamed,dubai uae,United Arab Emirates    07-11-2009 09:40:47 IST
 உருப்படாத கட்சின்னு நிரூபிசுட்டாங்க
எடியுரப்பா உருப்படாத தலைவன்  
by HK செல்வா ,karnataka,India    07-11-2009 09:14:38 IST
 

இரும்பு மனிதர் ???
செயல் வீரர் ????
வருங்கால இந்தியா ????? என்று
- தனக்கு தானெய் பட்டம் சூடிகொண்ட -
கனவு மனிதர் அத்துவானி என்ன செய்கிறார் ???

பிரதம மந்த்ரி கனவு இன்னும் கலையவில்லையா ???

தலைவர்கள் மக்களுக்காக இருக்க வேண்டும் -
மக்களை பிளவு படுத்தி - தலைவர்களாக இருக்க கூடாது

.
 
by s oli,chennai,India    07-11-2009 09:02:33 IST
 இந்த அரசியல்வாதிகள் அனைவரும் பணத்திற்க்காக எது வேண்டுமானலும் செய்ய கூடியவர்கள். மக்கள் இவர்களை அடையாளம் கண்டு குமாரசாமி, தேவேகோவ்ட போன்றவர்களை எப்படி தண்டிதர்களோ அப்படிதான் தண்டிக்கவேண்டும். மக்களை மடையர்கள் என்று நினைத்து கொண்டார்களா இந்த மானம் கெட்ட மனிதர்கள்.  
by d சிவகுமார்,chennai,India    07-11-2009 08:48:33 IST
 Impose Art356 to Offlaod these dirty&tricky POLITICIANS(poverty suckers) to save KARNATAKA 
by vet sundas,Chennai,India    07-11-2009 07:29:39 IST
 காங்கிரஸ் மூலம் இந்த நிகழ்வு. ரெட்டி பிரதர்ஸ் சொத்துகளை முடக்க சதி செய்து அவர்களுக்கு நெருக்கடி தருகிரார்கள். பணம் தான் எந்த நிகழ்வுக்கு காரணம்.  
by S ராம்,Chennai,India    07-11-2009 06:48:02 IST
 This Reddy brothers Should be deported to Andaman Jail. Public are every where same. They are to be blamed. They are expecting one day benefit on election date. They are being robed for their whole generation. This CBI will dance to their owners. will catch poor persons only to save their owners. Pity the more than one crore population of India. So only srilanka also want to sit on our Head.  
by R Ram,Chennai,India    07-11-2009 06:34:54 IST
 ஊழலுக்கு துணை போனதாலேயே 18 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். ரெட்டி சகோதரர்கள் அவர்களை மீண்டும் கேட்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு இவர்களின் ஊழலுக்கு துணை போயிருப்பார்கள். பாரதிய ஜனதா ஆட்சியை இழந்தாலும் இவர்கள் கோரிக்கையை ஏற்க கூடாது. அடுத்த தேர்தலில் மக்கள் நிச்சயம் குமாரசாமிக்கு கொடுத்த தண்டனையை இவர்களுக்கும் கொடுப்பார்கள்.  
by இரா பாலகிருஷ்ணன் ,கருவிழ்ந்தனாதபுரம்,India    07-11-2009 05:30:43 IST
 எடியூரப்பா - என்ன வெச்சு காமெடி கீமடி பண்ணலையே ? <ணீ>மக்கள் - என்ன கொடுமை ரெட்டி சார் ? <ணீ> <ணீ>பா ஜ க , ரெட்டி பிரதர்ஸ் ஐ நிச்சயம் ஆதரிக்க கூடாது. இது அவர்களின் கட்சி கட்டுக்கோப்பின்மையை காட்டுகிறது  
by K ம,uk,United Kingdom    07-11-2009 05:19:45 IST
 எடியுரப்பா பெஸ்ட் முதல் அமைச்சர் இன் இந்தியா. காங்கிரஸ் உதவா கரை. வாழ்க பாரதிய ஜனதா பார்ட்டி  
by Ind இந்தியன்,USA,India    07-11-2009 04:47:10 IST
 Mr.Edi.. so far you have given a good governance to the people of Karnataka. Today Reddy brothers demand something. Tomorrow you will have to follow the same thing. Instead dissolve the ministry and face the election. Since you have done something good, you will be re elcted without these reddy''s.

Dont follow reddy''s tails. It will create a bad image to you and BJP. Are BJP shrunk to reddys? Its total shame.. Again power is going to the money holders. They wont allow you to do anything good.  
by S ஸ்ரீராம்,chicago,United States    07-11-2009 04:13:32 IST
 லக்ஷ்மி மேடம்,
கர்நாடகாவில் தனது கட்சியினரை கட்டுப்படுத்த முடியாத ஒரு கட்சி தான் இந்தியாவை கட்டுப்படுத்த போகிறதா? சும்மா தமாஷ் பண்ணாதீங்க ப்ளீஸ்!!!!!!!! 
by S Samsudeen,Dubai,United Arab Emirates    07-11-2009 03:30:43 IST
 நல்லவங்களுக்கு சோதனை. கர்நாடகால நல்ல அரசியல் இருந்துச்சு. ஓகே. இனிமே கஷ்டம்  
by p arun,chennai,India    07-11-2009 03:05:07 IST
 மொத்தத்தில் இவர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்துவிட்டு கவர்னர் ஆட்சியை கொண்டுவரவேண்டும். ரெட்டி சகோதரர்கள் ரொட்டி சகோதரர்கள் என்று ஜனநாயகத்தை கேளிகூத்தக்கி கொண்டு இருக்கிறார்கள். பாஜகவுக்கு கிடைக்ககூடாத மண் குடம் கிடைத்துவிட்டது. மொத்தத்தில் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைக்கபோக்கிறார்கள். 
by s. mathan kumar,kumasi,Ghana    07-11-2009 02:56:49 IST
 டியர் திரு ரெட்டி பிரதர்ஸ், அப்படியே தமிழ்நாடுக்கு தண்ணி திறந்து விட சொல்லுங்க? நம்ம முதல்வர் இனி ரெட்டி சார்கிட்ட பேசறது தான் சரியான தீர்வு கொடுக்கும் ..........என்ன சொல்றீங்க ? 
by V சிவகுமார்,Michigan USA,United States    07-11-2009 01:33:56 IST
 பாரதிய ஜனதா பார்ட்டிக்கு நீங்க சனி ஆரம்பம். சீக்கிரம் வேற ஆட்சிய கொண்டுவாங்க. கர்நாடக மக்கள் சந்தோஷப்படுவார்கள். பெல்லாரி சகோதர்கள் உங்களுக்கு நன்றி  
by ஹபீப்தீன்,RIYATH,Saudi Arabia    07-11-2009 01:31:56 IST
 யார் இந்த ரெட்டி சகோதரர்கள்? நம் நாட்டுக்காக என்ன செய்து உள்ளார்கள்? எடியுரப்பா மாதிரி நல்ல முதல்வர்கள் என்ன பாடு படுகிறார்கள் இந்த மாதிரி பண முதலைகளிடம்! மக்களின் தீர்ப்பு தேர்தலில் தெளிவாக இருந்தால் மட்டுமே இந்த மாதிரி சூழ்நிலைகளை தடுக்க இயலும். அது வரை இந்த கேலி கூத்து இந்திய அரசியலில் தொடரும். வாழ்க இந்திய ஜனநாயகம்! 
by M Nagarajan,Leeds,United Kingdom    07-11-2009 01:00:20 IST
 என்ன கொடுமை ஐயா இது?. யார் இந்த ரெட்டி சகோதரர்கள்?. அவர்களுக்கு என்ன வேண்டும். அவர்கள் சுயநலத்துக்காக ஒரு மாநில ஆட்சியையே கலைக்க முயல்வதா. அவர்கள் கேட்கும் விலையையும் அவர்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் நம் அரசியல்வாதிகளுக்கு உயிருக்கு அடுத்தவை பதவி தானே. வாழ்க ஜனநாயகம்  
by M அமானுல்லா ,Dubai,United Arab Emirates    07-11-2009 00:53:03 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்