முதல் பக்க செய்திகள் 

பள்ளிக்கூட வேன் குளத்தில் பாய்ந்து 9 குழந்தைகள் பலி : வேதாரண்யத்தில் பரிதாப சம்பவம்
டிசம்பர் 04,2009,00:00  IST

வேதாரண்யம் : தறிகெட்டு ஓடிய பள்ளி வேன், குளத்தில் மூழ்கி ஒன்பது குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும், நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வேதாரண்யம் அருகே நடந்த இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் கலைவாணி மகா நர்சரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரை, சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து பள்ளிக்குச் சொந்தமான வேன் மூலம் அழைத்து வருவது வழக்கம். வழக்கம் போல், நேற்று காலை 9 மணிக்கு, நாகக்குடையான் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு மாணவ, மாணவியரை வேனில் அழைத்து வந்து கொண்டிருந்தனர். வேனை நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். கத்திரிப்புலம் பனையடிக்குத்தகை அருகே வரும் போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த 22 குழந்தைகளும், இரண்டு ஆசிரியைகளும் நீரில் மூழ்கினர். குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வேனில் சிக்கி மூழ்கிய ஒன்பது பேரை மீட்டனர்வேதாரண்யம் மற்றும் நாகை தீயணைப்புத் துறையினர், குளத்தில் மூழ்கி வேனுக்கு அடியில் சிக்கியிருந்த ஆசிரியை நாகக்குடையானைச் சேர்ந்த மாரியப்பன் மகள் சுகந்தி(21), கார்த்திகேயன் மகன்கள் ஜெயசூரியன் (யு.கே.ஜி.,), ஜெயபிரகாஷ்(7) ஒன்றாம் வகுப்பு, சிவபார்வதி மகன் அஜய்(6) ஒன்றாம் வகுப்பு, பாண்டியன் மகள் விஜிலா (யு.கே.ஜி.,), குமார் மகன் ஹரிராஜன் (எல்.கே.ஜி.,), மனோகர் மகள் அபிநயா(8), ஸ்ரீபதி மகள் மகாலட்சுமி(7), செட்டிப்புலத்தைச் சேர்ந்த முருகையன் மகள் ஈஸ்வரி இரண்டாம் வகுப்பு, மன்னார்குடியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் அஜய்(6) ஒன்றாம் வகுப்பு, ஆகிய 10 பேரின் உடல்களை மீட்டனர். அவர்களது உடல்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.வேனில் பயணம் செய்த 22 குழந்தைகளில் ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இறந்த ஒன்பது பேரின் உடல்கள் கிடைத்துள்ளன. இரண்டு ஆசிரியைகளில் இறந்த ஒரு ஆசிரியையின் உடல் கிடைத்துள்ளது. மேலும், ஒரு ஆசிரியை மற்றும் நான்கு குழந்தைகளின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, குளத்தில் நீர் நிறைந்து 20 அடி ஆழம் வரை இருந்தது. டீசல் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி, உடல்களைத் தேடி வருகின்றனர். கரியாப்பட்டினம் போலீசார், விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் மகேந்திரனை தேடி வருகின்றனர்.குழந்தைகள் பலியாக காரணம் என்ன? வேதாரண்யம் அருகே குளத்தில் வேன் கவிழ்ந்து பத்து பேரை பலி வாங்கிய வேனை ஓட்டி வந்த டிரைவருக்கு லைசென்ஸ் கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் கலைவாணி மகா நர்சரி பள்ளிக்குச் சொந்தமான வேனை, நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஓட்டினார். நேற்று காலை 9 மணியளவில் கத்திரிப்புலம் பனையடிக்குத்தகை அருகே வரும் போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் மகேந்திரன் வேனை வேகமாக ஓட்டியுள்ளார். நான்கு டயர்களும் மோசமான நிலையில் இருந்ததால், பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்று குளத்துக்குள் கவிழ்ந்தது.வேன் விழுந்ததும் டிரைவர் மகேந்திரன், குழந்தைகளைக் காப்பாற்றாமல் தப்பியோடி விட்டார். நான்கு குழந்தைகளைக் காப் பாற்றி விட்டு, கிளீனர் சுப்ரமணியன்(15) ஓடி விட்டார். பயிற்சி பெற்ற டிரைவரை நியமிக்காமல், அடிக்கடி வேன் டிரைவரை பள்ளி நிர்வாகத்தினர் மாற்றி வந்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. விபத்துக்குள்ளான வேனை ஓட்டிய மகேந்திரன், நாகக்குடையான் கிராமத்தில் வயலில் டிராக்டர் ஓட்டி உழவு செய்து வந்துள்ளார். அவர் டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவரை பள்ளி வேனை இயக்க நியமித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோர விபத்தில் இரு மகன்களை (ஜெயசூரியன், ஜெயபிரகாஷ்) இழந்த கார்த்திகேயனும், அவரது மனைவியும் கதறி அழுதது, காண்போர் அனைவரையும் கண் கலங்கச் செய்தது. இந்த கோர சம்பவம் குறித்து தகவலறிந்ததும், வேதாரண்யம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

மொபைல் போன் காரணம்: விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி வேனில் 15 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. ஆனால், நேற்று 22 பேர் பயணம் செய்துள்ளனர். வேன் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. டிரைவர் மொபைல் போனில் பேசியபடி வேனை ஓட்டி வந்ததால், வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, டெல்டா மாவட் டங்களில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட் டத்தில் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. நாகை மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டிருந்தால், இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்காது. இவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.

பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் தீர்வு வரும்: பள்ளி வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாவதற்கு, பள்ளி நிர்வாகிகள் மற்றும் வேன் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் தான் முழு முதற் காரணம். மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிக்கு வருவதற்கும், பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்வதற்கும், பள்ளி நிர்வாகிகள் முழு பொறுப் பேற்க வேண்டும்.  மாணவர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலிக்கும் பள்ளிகள், மாணவர்களின் உயிரை பாதுகாப்பதற்கு தேவையான முக்கியப் பணியை செய்ய வேண்டும். இதைச் செய்யாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். "அங்கீகாரம் ரத்து' என்றால், பள்ளி நிர்வாகிகள் தானாக வழிக்கு வருவார்கள். மேலும், விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதோடு, வேன் முறையாக பராமரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டால், வாகனத்தின், "பர்மிட்டை' ரத்து செய்ய வேண்டும்.

பள்ளி வேன்கள் சாலையில் சென்றால், தனியாக தெரிய வேண்டும் என்பதற்காகவும், அந்த வாகனத்தைப் பார்த்து மற்ற வாகனங்கள் பொறுமையாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், பள்ளி வேன்களுக்கு, "மஞ்சள்' கலரில் பெயின்ட் அடிக்க வேண்டும் என்றும், "பள்ளி வாகனம்' என முத்திரை பதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு பல மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.இந்த உத்தரவை, எந்த டிரைவர்களும் கடைபிடிப்பதில்லை. விபத்து நடந்தால், அரசு பல உத்தரவுகளை போடுகிறது. ஆனால், அந்த உத்தரவுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றவா என்று, அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

போக்குவரத்துத் துறை தான் பொறுப்பு : கைகாட்டுகிறது கல்வித்துறை: "பள்ளி வாகனங்களை கண்காணிக்கவும், தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும், கல்விச் சட்டத்தில் இடமில்லை. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தான், பள்ளி வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். எனினும், மாவட்ட வாரியாகபள்ளிவாகன டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடரும் பள்ளி வாகன விபத்துகள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளை பார்வையிடவும், பள்ளிகளில் போதிய வசதிகள் இருக்கின்றனவா என்பதை பார்வையிடவும் தான், கல்விச் சட்டத்தில் இடம் உள்ளது. பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யவும், முறையாக பராமரிக்காத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்விச் சட்டத்தில் அதிகாரம் இல்லை. இந்த அதிகாரம், போக்குவரத்துத் துறையிடம் தான் இருக்கிறது. எனவே, இந்தப் பிரச்னையில் போக்குவரத்துத் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், விபத்துகளை குறைப்பதற்கு, கல்வித்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்க, விரைவில் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்படும். மாவட்ட வாரியாக, பள்ளி வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்கவும், விதிமுறைகள் குறித்து எடுத்துக் கூறவும் முகாம்கள் நடத்தப்படும்.

பள்ளி வேன்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும், தகுதி வாய்ந்தவர்கள் தான் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதையும் பள்ளி நிர்வாகம் தான் கவனிக்க வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அதை மீறி, வாகன டிரைவர்கள் மெத்தனமாக செயல் பட்டு, விபத்துகள் நடந்தால், சம்பந்தபட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கவும் கல்விச் சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும். இதை எதுவுமே செய்யாமல் இருந்தால், பள்ளி வாகன பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது. பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுரை மட்டும் தான் கூறிக் கொண்டிருக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 I sincerely agree with M Sankaranarayanan,Doha.

''''I still feel better India would have been under British rule .Atleast We will have better Roads,Buildings,Safety measures,Severe Punishment against defaulters etc. ''''

-Well said sir. District collector should be punished. Whole RTO is run by bribery. As said in Indian movie, they are ready to eat the rice out of the corpse, but not ready to do the duty -
My heart goes to the those small kids ....I pray the almighty ... 
by ஜகன்,Alaska,United States    05-12-2009 14:04:52 IST
 இந்த சம்பவத்க்கு நம் அரசாங்கமே காரணம்  
by sa saravanan,karaiyankadu, thiruthuraipoondi,India    04-12-2009 23:51:32 IST
  உடனடியாக இதற்கு ஒரு முடிவு அரசு எடுக்காவிட்டால் இனிமேலும் இந்த நிகழ்வுகள் நடகத்தான் செய்யும் நம்மை விட்டு பிரிந்த பிஞ்சு உள்ளங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.  
by V Giri,pollachi Coimbatore,India    04-12-2009 20:38:59 IST
 district collecter is responsible for this incident 
by s muthu,dxb,United Arab Emirates    04-12-2009 20:15:55 IST
  மழைக்காக தஞ்சை மாவட்டம் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டபோது ,அதன் பிரிவு மாவட்டங்களன திருவாரூர்,நாகை,மாவட்டங்களுக்கு லீவ் விட்டுஇருந்தால் இன்று 10 உயிர்கள் பரிதாபமாக போய் இருக்காது. மழை தஞ்சையை விட அதிகமாக திருவருர் ,நாகை மாவட்டதில்தான் பெய்தது. மழைகாலம் முழுவதும் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறையை போல விடுமுறை விடவேண்டும்,தன் குடும்பத்தை மட்டும் பாதுகாப்புடனும் செல்வ செழிப்போடு வாழ வைக்க வேண்டும் என்று என்னும் ஆட்சியாளர்களே ,அதிகாரிகளே இந்த விபத்திற்க்கு முழு காரனமும் நீங்கள்தான். 
by K.S. அன்புசெல்வன்,திருதுறைபூண்டி,India    04-12-2009 19:29:35 IST
 suganthi teacher is great.. she save three childrens.  
by k கண்ணன்,vedaranyam,India    04-12-2009 18:53:51 IST
 என்ன தவம் செய்தோம் இந்த மக்களாட்சியை பெற. எங்கும் எதிலும் மெத்தனம். கடமை உணராத ஓட்டுனர், கல்வியை வியாபாரம் செய்யும் பள்ளி நிர்வாகம், லஞ்சம் மட்டும் பெற்று உரிமம் வழங்கும் அதிகாரிகள் . கைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் இவர்களெல்லாம் இருக்கும் போது குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக பயணிக்க முடியும். நமக்கு தேவையில்லை பொறுப்பற்ற இந்த மக்களாட்சி. தேவை நேர்மையான ராணுவ ஆட்சி மட்டுமே. 
by K Prabhakharan,Chennai,India    04-12-2009 17:38:08 IST
 RTO ஆபீசில் லஞ்சம் கொடுத்தால் போதும் வாகனம் ஓட்டத்தெரியவர்க்கும் ஓட்டுனர் உரிமம் கிடைக்கும் . ஆரம்பத்திலே லஞ்சத்தை ஒழித்தால்தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். எதற்காக லஞ்சம் வாங்குகிறார்கள் அரசாங்கம் ஊதியம் தருவதில்லையா?  
by g ராஜேந்திரன்,chennai,India    04-12-2009 16:50:34 IST
  உரிமம் இல்லாத வாகனத்தை பயன் படுதியுள்ளர்கள்.
பள்ளி வாகனகள் மஞ்சள் வர்ணத்தோடு இருக்கவேண்டும் என்பது விதிமுறை அதை கூட பின்பற்றவில்லை.(படத்தை பார்த்தேன்)
கல்வித்துறை,RTO
பள்ளிநிர்வாகம் உடன் தண்டிக்கப்படவேண்டும்.


 
by sanil,singapore,India    04-12-2009 16:44:54 IST
 CHILDREN IS LOVE. SUGANTHI TEACHER IS VERY GREAT. 
by s chitradevi,COIMBATORE,India    04-12-2009 16:08:07 IST
 புது இதயம் புத்தகம் படிக்க வேண்டிய வேலையில்,
இந்த கொடுமையை எண்ணமுடியாமல் இதயம் வலிக்கிறது.
துயரத்தில் வாடும் நெஞ்சங்களுக்கு
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.  
by mr.R Mehamozhi,vedaraniam,India    04-12-2009 15:55:15 IST
 

அந்த சின்ன பிஞ்சுகள் எப்படி துடித்திருக்கும் ...கடவுளே.அவர்களின் பெற்றோர்களுக்கு எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள்.
வெறும் அரசு உத்தரவு இருந்து என்ன பிரயோஜனம்.செயல்படுதபடாத சட்டம்,அதை மதிக்காத மக்கள்,முந்தைய தவறுகளில் இருந்து கற்றுகொள்ளதிருதல்,இன்னும் எத்தனையோ கெட்ட வழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுசெல்கிரோமே!நமக்கு நாமேதான் எதிரி. 
by pavendhan,Brisbane,Australia    04-12-2009 15:44:00 IST
 My deep condolence to those little childrens & my humble request to tamil nadu government please cancel that school''''s recognisation immediately 
by hk nazar,thopputhurai - vedaranyam,India    04-12-2009 15:22:21 IST
 பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பள்ளியின் உரிமமும் ரத்து செய்ய வேண்டும்.
 
by s kamalakkannan,aalampattu. sivagangaj dist.,India    04-12-2009 15:17:19 IST
 வாலிபனே கிளம்பிடு புயலாய்.மக்களுக்கு நன்மை செய்யாத அரசையும் அதிகாரிகளையும் சம்ஹாரம் செய்ய. சட்டங்கள் ஏட்டு சுரக்காய். அது கறிக்கு உதவாது. நம் நாடு நம் மக்கள் அதை காப்பது நம் கடமை. 
by g. விஜயகுமார் ,madurai,India    04-12-2009 15:11:41 IST
 அட கடவுள'''''''''''''''''''''''''''''''' இது மாதிறி பள்ளிக்கூடங்களை அரசு கண்டறிந்து , உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.  
by S Indira Gandhi,Tuticorin,India    04-12-2009 15:10:01 IST
 do or die to prevent accidents 
by G.M. NAGARAJAN,madurai,India    04-12-2009 15:08:14 IST
 இறந்த குழந்தய்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினால்மட்டும் போதாது . இனிமேல் இது போன்ற மற்றும் ஓர் நிகழ்ச்சி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவரை ஒருவர் குற்றம் சொன்னால் மட்டும் போதுமா ? ஒவ்வொரு வரும் தங்களுக்குள் இருக்கும் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் எல்லோரும் மனிதபிமனதுடன் தான் நடந்து கொள்கிறோம் என்று .. இறந்தது நம் குழந்தயாக இருந்திருந்தால் நம் மனது என்ன பாடு படும் .. செல் போன் இல்லை என்றால் நாம் உயிர் வாழ முடியாத ? இப்படி அரும்புகள் உயிர் விட்டதே இது தான் தகவல் புரட்சியா! பள்ளி நிர்வாகம் என்றால் என்ன? என்று அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு வகுப்பு எடுத்தால் மட்டும் போதாது அந்த பள்ளிகள் ஒழுங்காக செயல் படுகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும் அரசு . அதை தவறவிட்டதால் தான் இன்று நாம் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருக்கிறோம்.

முதலில் கும்பகோணம் சம்பவம் அடுத்து இந்த சம்பவம் இப்படி எத்தனை சம்பவத்தை பார்ப்பது . ஈடு இணை இல்லாத இந்த உயிரின் மதிப்பு இறக்கும் போது தான் தெரியும் ஆனால் அப்படி பட்ட உயிர் கருப்பா சிவப்பா என்று கூட தெரியாத அந்த இளம் பிஞ்சுகள் தண்ணீருக்குள் முழ்கும் போது எப்படி இருந்திருக்கும் .. நினைத்து பாருங்கள் அந்த ஒரு கடைசி நிமிடத்தை .. இறந்த குழந்தய்களுக்கு நம் கண்ணீரை தவிர வேறு என்ன கொடுக்க முடியும் ....


சிறகை விரித்து விண்ணில் பறக்க வேண்டிய உன்னை
இப்படி தண்ணீரில் மூல்கவிட்டோமடா

 
by P Ramesh,chennai,India    04-12-2009 14:46:36 IST
 i feel very much for this accident. i request govt to take strict action on driver and warning to all those who are careless.
i request all driving peoples to take care while driving.
 
by s vijayanand,kuwait,India    04-12-2009 14:39:58 IST
 சொல்ல முடியாத வலி இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு மட்டும் அல்ல, நமக்கும்தான்.  
by K சந்தோஷ் குமார் ,coimbatore ,India    04-12-2009 14:39:50 IST
 இறைவா, ஏன் எங்களை படைத்தாய் இந்த கொடூர சம்பவத்தை கேட்கவா. வேண்டாம் கடவுளே வளரும் முன்னே கருகும் இப்படி பட்ட சம்பவங்கள் இனியும் வேண்டாம். இதயம் வலிக்கிறது அம்மா, என்று கூப்பிடும் குழந்தைகளை அய்யோ என்று அழ விடாதே இறைவா. 
by S சகாய செல்வி,Viluppuram.,India    04-12-2009 14:29:33 IST
 உண்மையாகவே இதயம் துடிக்கிறது. 
by R ராதாகிருஷ்ணன்,QATAR,India    04-12-2009 14:16:43 IST
 குழந்தைகளை இழந்த பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுனர் இது ஒரு புறம், வந்தவாசியில் நடந்த தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்களுக்கு சுடச்சுட வெஜிடபிள் சூப், கமகம பிரியாணி பொட்டலங்கள் என தடபுடலாக கவனிப்பு நடந்தது. தயவு செய்து அனைத்து பள்ளியில் பணிபுரியும் ஓட்டுனர்கள் கவனமாக பள்ளி வாகனங்களை ஒட்டிச்செல்ல வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளி நிர்வாகம் தங்களுடைய வாகன ஓட்டுனர்களை அழைத்து பேச வேண்டும். வேதாரனியத்தில் நடந்தது போல சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பள்ளி நிர்வாகம் செயல் பட வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏன் என்றால் தனி மனிதன் நினைத்தால் தான் விபத்து நடக்காமல் தடுக்க முடியும். அதிகாரிகளும் மற்றும் அரசாங்கமும் பணத்தை மட்டும் தேடிக்கொண்டு, பொது மக்களை மறந்து விடுகிறார்கள். பொது மக்களும் பொறுப்பை உணர்த்து நடந்துகொண்டால் இந்த மாதிரி விபத்துகளை தடுக்கலாம். விபத்தக்குள்ளானவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். 
by S.A. Genova,Trichy,India    04-12-2009 14:11:18 IST
 மிகவும் வருந்தத்தக்க சம்பவம். பள்ளி வாகன ஓட்டுனர்கள் கண்மூடித்தனமாக வண்டியை ஓட்டுகிறார்கள். நூற்றுக்கு தொண்ணூறு பேர் வாகனத்தை ஓட்டும் போது தான் போன் பேசிக்கொண்டு செல்கிறார்கள். ''''ஹெட் போன்'''' உபயோகித்தலுமே அது தவறு தான். கவனம் சிதறி விடும். 2 வீலர் ஆனாலும் 4 வீலர் ஆனாலும் சரி. மிகவும் மோசமான சாலையும் இதற்கு ஒரு காரணம். டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது எவ்வளவு குற்றமோ, அது போல சாலையை சரி வர பராமரிக்கததும் குற்றமே.
மின்சார இணைப்பு வேலை என்றாலும் தொலைபேசி வேலை என்றாலும் குழியை தோண்டி விட்டு எனக்கென்ன என்று போய் விடுகிறார்கள். ஏதாவது ஒரு விபத்து ஏற்படும்போது தான் அதை பராமரிக்கிறார்கள்.
இப்போது பாதாள சாக்கடை என்று ஊர் முழுக்க பல வருடங்களாக தோண்டி வேலையும் முடியாமல் சாலையும் பராமரிக்காமல் உள்ளது.
விபத்துக்காக காத்திருக்கிரர்களா??
சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிள்ளைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
by kr தனுஷ்கோடி,Virudhunagar,India    04-12-2009 14:04:38 IST
 we should take action against this problems. we have not blame any government and maganements. the government not protect everyone in tamilnadu. they give solution to overall.we are the responsible for this kind of problems. please learn lesson from this incident, don''''t do any mistake realted to it. 
by Y michael,chennai,India    04-12-2009 14:01:33 IST
 அய்யா கடவ்வுலே பாவம் இந்த பிள்ளைகள் என்ன பாவம் செய்தன. அரசு நிர்வாகம் மோசம் ஆகிவிட்டது. லஞ்சம் பெருச்சாளி அதிகம் ஆகிவிட்டது. தமிழக அரசு ஒரு குடும்ப அரசு ஆகிவிட்டது.  
by கனபதி முருகேசன்,SINGAPORE,India    04-12-2009 14:01:29 IST
 I want to convay my message to our CM, Government giving Rs.100,000/- or 50,000/- per children, is not a solution please make sure should not hapend again. I know sum places well also near the road please close the well or make necessary wall or sum type of gate. 
by A ramesh,Dubai,India    04-12-2009 13:31:45 IST
 நெஞ்சு வலிக்குது சார் !  
by s சந்தோஷ்,bangalore,India    04-12-2009 13:30:51 IST
 Punish severely who involved indirectly on this (RTO Official - Who give eligibility certificate for the van
School Management - for hiring the guy who plough the land without license. Cancel the school license
Local Politicans - Punish them also
Policemen - For negligence
).

Punish all the above 4 under non-bailable warrant. Minimum 10 yrs let their carreer should spoil.

I sincerely pray for the kids and teacher who lost their lives. May their souls rest in peace.

 
by N Velmurugan,Chennai,India    04-12-2009 13:26:28 IST
 TN Govt Take necessary action for the School Managing board. To cancelled them Lic. our deepest condolence.  
by G மேஹலிங்கம்,Virudhunagar,India    04-12-2009 13:11:45 IST
 Private school are paying less salary to appoint a driver and They never bother about the childrens life. Goverment has to inspect immideately to all the school and take immediate action  
by mr anwar,trichy,India    04-12-2009 13:02:17 IST
 ஒரு உயிரின் மதிப்பு தெரியாமல் ஏன் இப்படி பணத்துக்காக ஆசைப்பட்டு இந்த பிஞ்சு குழந்தைகளை அழிக்கின்றீர் ..... கடவுளுக்கு யாரும் பயபடுவதில்லை ....இந்த உலகத்தில் அரசியல்வாதிகள் தான் கடவுள் என்று இத்தனை பாவங்களை செய்து வருகின்றனர்.... ஆனால் ஒன்று இந்த உலகம் அழிய போவோது உண்மை .. கடவுளுக்கும் பொறுமை உண்டு... தமிழ் நட்டு மக்களே விழிப்புடன் இருப்போம்.... atleast save four self and your childrens from this kind of stupid things....  
by M Suresh Kumar,Bangalore,India    04-12-2009 13:02:00 IST
 Nobody couldn''''t recover that killed little children s.this is also like murder.please,The Tamilnadu government should take strict action against that responsible school and that driver.i want to say one thing to tamilnadu government,peoples don''''t need this free tv, free gas etc., like this.we want only protection against like this unfortunate incident.Nowadays we will see like theft, murder, rape in our state.please keep safe to our tamilnadu peoples. 
by U VINOTH,kuttalam, tamil nnadu,India    04-12-2009 12:58:52 IST
 பள்ளி குழந்தைகள் இறந்த செய்தியை கேட்டவுடன் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.கண்ணீர் விட்டு அழுதேன்.இது போன்ற செயல்கள் இனிமேல் நடக்காமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அந்த டிரைவரை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும்.குழந்தைகளின் பெற்றோருக்கு கண்ணீர் மரியாதை.குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.  
by S SURESHKUMAR,THIRUMAYAM,PUDUKKOTTAI(DIST)-DOHA,QATAR,,India    04-12-2009 12:56:50 IST
 Honourable Prime minister of India and
Honourable Chief Minister of Tamilnadu
Please take some Stringent actions on the school Management,the Idiot driver ,The owner of the Van
and all the concerned authorities.Even after 62 years since we got our Freedom this kind of cruel and negligience things are continuously happening.Unless the punishment is severe these things will be continuing.I still feel better India would have been under British rule .Atleast We will have better Roads,Buildings,Safety measures,Severe Punishment against defaulters etc.  
by M Sankaranarayanan,Doha - Qatar,Qatar    04-12-2009 12:39:19 IST
 அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், நிர்வாகத்தையும் குற்றம் சொல்லாதீர்கள். இதற்கு எல்லாம் காரணம் நாம்தான். தவறான அரசியல் வாதிகளுக்கு வோட்டு போடுகிறோம்,அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறோம், நல்ல நிர்வாகத்தை நாம் தேர்ந்துடுப்பது இல்லை. பாவம் குழந்தைகளும் அதன் பெற்றோரும்,
மரண தண்டனை விட கொடூரமான தண்டனை இருந்தால் அதை அந்த டிரைவருக்கும் நிர்வாகத்திற்கும் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்களே , தயவுசெய்து இனியாவது பாதுகாப்பான ஸ்கூலில் நம் செல்வங்களை சேருங்கள். இப்படிப்பட்ட நிர்வாகத்தை நம் ஊரை விட்டே விரட்டி அடியுங்கள். தமிழக அரசுவின் கவன குறைவால் நடந்த இந்த விபத்துக்கு எத்தனை லட்சம் இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது. 
by A Jeeva,Maldives,India    04-12-2009 12:27:11 IST
 பெற்றோருக்கு
தயவு செய்து உங்கள் குழந்தை பாதுகாப்பு பொறுப்பு உங்களுக்கு மட்டும்தான் உள்ளது. ஒரு சின்ன விசயத்திலயும் காசு சம்பாரிக்கிற பள்ளிகள் இருக்கும்போது நீங்க மட்டும் தான் உங்க குழந்தைய பாதுகாக்கணும், குறைந்தது அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனத்துல அனுப்பாதிங்க  
by s சுஜா,karur,India    04-12-2009 12:26:02 IST
 THAYAU SAITHU GOVT ITHARKU NADAVADIKAI EDUKAOOM 
by A AMEENUDEEN,DUBAI,India    04-12-2009 12:24:34 IST
 வழக்கம்போல் அரசு அதிகாரிகளின் விசாரணை நாடகம் கொஞ்ச நாட்கள் நடக்கும்... 
by M ASOK,singapore,India    04-12-2009 12:24:05 IST
 மிகவும் வருத்தம் அடைகிறேன். ட்ரைவிங் லைசென்ஸ் இல்லாதவங்கள ட்ரைவிங் பண்ண சொல்லாதிங்க  
by l பிரியா ,pondicherry,India    04-12-2009 12:23:59 IST
 ''லஞ்சம் காரணம்''  
by P Kaliyappan,Salem,India    04-12-2009 12:13:51 IST
 Very simple, go and put a notice around the school saying that the HM, Principal and their family those who are bothered about only money are cowards. Let the notice have the pictures of the them as well. We should insult them then may be(!?!) their family and relatives will question them when they meet. Even distribute the same notice throughout the city. 
by concerned Indian,CBE,India    04-12-2009 11:58:11 IST
 If the govt is going to inspect all the private schools in over the tamilnadu.. I''m sure govt will found so many institutions has unexperienced drivers and unconditional transportation facilities...rather imposing new rules ...they can take serious action against this type of incident.... may prevent the accident in future...
By., S.NIZAM..,AL-KHOBAR., SAUDI ARABIA 
by s. nizam,Tirukoilur, Villupuram Dist,India    04-12-2009 11:57:37 IST
 மனது வலிக்கிறது ,இதயம் கனத்து விட்டது. நம் நாட்டில் தொடர்ந்து நடக்கும் இச்சம்பவங்களைப் படிக்கும் போதெல்லாம். இப்படியே சென்றால் இந்தியனுக்கு நாட்டை ஆளத் தெரியாது என்ற வெள்ளைக்காரனின் கூற்று உண்மை ஆகிவிடும் போல் தெரிகிறது. லைசென்ஸ் இல்லாத டிரைவர் , பராமரிப்பு இல்லாத வேன், நிர்வாகத் திறமையற்றவர்கள் நடத்திய பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருக்கிறது என்றால்.... ச்சே , வெட்கக்கேடு. இன்னும் இப்படி எத்தனை பள்ளிக்கூடங்கள் இருக்கின்றனவோ .கடவுளே என் நாட்டையும், நாட்டு மக்களையும் நிர்வாகச் சீர்கேட்டிலிருந்து கப்பற்றமட்டயா .....!?.
vigneshdurai 
by v maridurai,tenkasi thirikoodapuram,India    04-12-2009 11:55:47 IST
 பணத்தாசை பிடித்த பேய்களின் பேராசையால் குழந்தைகளை பறி கொடுத்தோம்.. இதற்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட வேண்டும்....தோழர்களே  
by T.S ESWAR,MADURAI ,India    04-12-2009 11:53:08 IST
 severe punishment should be given to the authorities. 
by R கார்த்திகேயன்,Mannargudi,India    04-12-2009 11:50:23 IST
 deepest condolence to their family members  
by C அமிர்தராஜ் ,Bangalore,India    04-12-2009 11:44:57 IST
 லஞ்சம் தான் காரணம், RTO வை தூக்கில் போடனும்  
by N சிங்கர்,doha,Qatar    04-12-2009 11:35:27 IST
 இது முழுக்க முழுக்க டிரைவிங் பண்ணும் பொது மொபைல் போன் யூஸ் பண்ணுவதால் வரும் விபத்து ஆகும். ஆதலாம் ட்ரைவிங் பண்ணும் பொது மொபைல் போன் பேசும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். பாரபட்சமின்றி அவர்களை தண்டிக்க வேண்டும். முக்கியமாக ஸ்கூல் வேன் மற்றும் பஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு. இறைவனடி சேர்ந்த அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி. இனி இதுபோல் விபத்து நடக்காமல் இருப்பதுக்கு நான் முயற்சி எடுப்போம்.  
by s பீர் மொதமேது,nagercoil,India    04-12-2009 11:31:21 IST
 இறைவா! ஏன் எங்களை படைத்தாய்...
ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை காணவா...?
போதும் இனி தாங்க முடியாது...
உனக்கு உன் மக்களை பிடிக்கவில்லை என்றால் அழித்துவிடு முழுவதுமாய்... இப்படி கொஞ்ச கொஞ்சமா அழிப்பதுக்கு....!
எத்தனை ஆசைகள்.. எத்தனை கனவுகள்.. எல்லாம் போய் இறுக்கும் அந்த பெற்றவங்களுக்கு என சொல்லி ஆறுதல் சொல்ல....  
by ஷேக் அலாவுதீன் ,Male',Maldives    04-12-2009 11:30:44 IST
 jananayaga natill yellarukkumea porupu undu.mealum antha kariyapatinathu makkal pavamthan. padipinaitharum sayalgal yeathanai nadanthalum nam thirunthapovathu yeapo  
by rahma rahmathulla,doha qatar,India    04-12-2009 11:26:31 IST
 இந்தியன் படத்தில் இது போல் ஒரு காட்சி வரும். கமல் லஞ்சம் குடுப்பார் போலீஸ்க்கு. எத்தனை இந்தியன் தாத்தா வந்தாலும் நம்மவங்களை திருத்தவே முடியாது. பாவம் இந்த குழந்தைகள்.  
by k ஸ்ரீராம்,singapore,Singapore    04-12-2009 11:25:44 IST
 லைசன்ஸ் இல்லாமல் வேன் ஒட்டிய டிரைவர் மற்றும் அந்த வேனுக்கு உரிமம் வழங்கிய அதிகாரியை கழுதை மேல் ஏற்றி கல்லால் அடித்து உணவு தண்ணீர் கொடுக்காமல் சித்ரவதை செய்ய இந்த நாட்டு மக்களுக்கு உத்தரவிடுகிறேன்  
by om shahi,dubai,United Arab Emirates    04-12-2009 11:24:48 IST
 இன்றைய கால கட்டத்தில் கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது. நிர்வாகம் வருமானத்தை மட்டும் பார்க்கிறது. எதைபற்றியும் கவலைபடுவதில்லை. அரசு உத்தரவுகள் போட்டாலும் அதை பின்பற்றுகிறதா என கவனிக்க வேண்டிய வட்டார போக்குவரத்து துறை பணம் பார்ப்பதையே கடமையாக பார்த்தால் மற்றதெல்லாம் கண்ணுக்கு தெரியாது. ஒருவரை ஒருவர் குற்றம் கூறியே, அவரவர்களின் கடமையை மறந்து விடுவார்கள். எல்லாம் நேரம். நம்ம தலை விதி. அவர்களுக்கும் இதே போல் ஒரு நாள் நடக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
BY RAMANI.B , TRICHY. 
by B RAMANI,Trichy,India    04-12-2009 11:23:31 IST
 Dec 2, 2009, இதே தின மலர்ல ''இந்தியாவின் நிர்வாகத்தை யாரும் மிஞ்ச முடியாதுனு'' செய்தி வந்துச்சி... நல்ல இருக்குய்யா உங்க நிர்வாகம்...  
by K K கார்த்திகேயன்,Chennai,India    04-12-2009 11:21:10 IST
 ஐயோ பாவம்!....
ஐயோ பாவம்!....
மனது கஷ்டமாக இருக்கிறது இந்த பூ உலகம  
by P ரகுராமன்,துவரன்குருசி ,India    04-12-2009 11:16:46 IST
 ஏ பள்ளிகூட நிர்வாகியே... உனக்கும் பிள்ளைகள் இருக்குடா.. அதுக்கு இப்படி ஒரு துர்சம்பவம் நடந்தா உனக்கு எப்படிடா இருக்கும்.. பன்னாட... பணபிசாசே... நீ கட்டயில போகும்போது ஒத்த ரூபா கூட உன் கூட வராதுடா... பிஞ்சு குழந்தைகள கொன்னுட்டியே.. உனக்கெல்லாம் நல்ல சாவே வராது... 
by K K கார்த்திகேயன்,Chennai,India    04-12-2009 11:16:14 IST
 நெஞ்சு பொறுக்குதில்லையே
பச்சிளம் பாலகர்களின் உயிர் துடித்த கொடுமை கேட்டு  
by S velu,india,India    04-12-2009 11:15:14 IST
 The management of Kalaivani Maha Nursery School is solely responsible for this tragic incident.The entire school management should be punished immediately by not allowing them to run the school anymore, giving a clear signal to others who are at the same level.  
by R Ruskin,Sharjah,United Arab Emirates    04-12-2009 11:09:51 IST
 c.m. sir, please take stern action against school authorities and related govt. officials 
by K.A. THANGARAJAH,Guindy, Chennai32,India    04-12-2009 11:09:13 IST
 govt should take severe action against management, are they people or devils, இதே போல் சம்பவம் நடப்பதும் ,பின்பு மறந்து விடுவதும் இயல்பாக இருக்குது. மேலும் இது போல் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  
by a anand,chennai,India    04-12-2009 11:08:57 IST
 எத்தனை கும்பகோணம் இந்த தமிழ் நாட்டில். கல்வி இயக்ககமே காவல் துறையே இன்னும் எத்தனை கும்பகோனங்கள் உருவாகபோகிறது ? பொறுப்பில் இருப்பவர்களே, மனசாட்சி இருந்தால் பதவி விலகுங்கள். இது கல்வி மற்றும் போக்குவரத்து துறை மந்திரிகளுக்கும் சேர்த்து சொல்லபடுவதுதான் !  
by S விஜயன்,Chennai,India    04-12-2009 11:03:31 IST
 மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி வர வேண்டும்.  
by V.A கிரி,sivakasi,India    04-12-2009 11:01:56 IST
 பொறுப்பு இல்லாத அரசுகள் கடந்த 40 வருடங்கள் நம்மை அடிமையாக வைத்துள்ளது. அடுத்து ஓரு பள்ளி கூட தீ விபத்தும் நடக்கும் , நாம் அடிமையாக '' வாழ்க கோஷம் போட்டு'' வாழ்வோம்.  
by K ராஜேஷ்,UAE,India    04-12-2009 11:00:24 IST
 First thing I have to tell is what the school Administration is doing without even taking care for the proper arrangement of driver.If they did the work properly nothing might have happened.Herethen dont do this mistakes. My tears to all the children. 
by T Siva,Dindukal,India    04-12-2009 10:58:49 IST
 தயவு செய்து , அணைத்து பள்ளியில் பணிபுரியும் ஓட்டுனர்கள் கவனமாக பள்ளி வாகனங்களை ஒட்டிச்செல்ல வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .
பள்ளி நிர்வாகம் தங்களுடைய வாகன ஓட்டுனர்களை அழைத்து பேச வேண்டும்.வேதாரனியத்தில் போல சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பள்ளி நிர்வாகம் செயல் பட வேண்டி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் .
இப்படிக்கு ஆவணதன்கொட்டை இளைஞர்கள்  
by N சிவராமன்,Aranthangi,India    04-12-2009 10:55:40 IST
 பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க vendum 
by s பாஸ்கர்,karur,India    04-12-2009 10:53:21 IST
 கடவுளே குழந்தைகள் இப்படி ஆகி விட்டதே  
by K அருண்,Pudupalayam,India    04-12-2009 10:44:35 IST
 என்ன கொடுமையான சம்பவம் இது. போன வாரம் ஒரு தனியார் TV இது தொடர்பான நிகச்சியை ஒளிபரப்பியது. இன்னும் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக இருப்பது கவலை அளிக்கும் விஷயம். அது போன்ற பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
by M கணேசன்,Chennai,India    04-12-2009 10:43:08 IST
 i pray for all the children....definetly punish the van driver, school management peoples, and also government staffs. Very sad news for all.... 
by V பிரியா,Trichy,India    04-12-2009 10:42:37 IST
 பெருகி வரும் சாலை விபத்துக்களால், பள்ளிகுழந்தைகள், பெண்கள், குடும்பத் தலைவர்கள், பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள்,பட்டதாரி இளைஞர்கள் என பலரும் பலி ஆகின்றனர் ,இவர்களை சார்ந்தோர்களும் நிர்கதி ஆகின்றனர்,
மக்களின் பொறுப்பு - தனது & பிறர் உயிர் நாட்டுக்கும்,வீட்டுக்கும் தேவை என்பதை உணர்ந்து சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். அரசின் கடமை -டிவி போன்ற இலவசங்களை நிறுத்திவிட்டு சாலைகளை மேபடுத்துங்கள், சாலை விதிகளை கடுமையாக்குங்கள் ,ஊழலை ஒழியுங்கள்(அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்)  
by M ariff,alkhobar,Saudi Arabia    04-12-2009 10:40:49 IST
 உரிமம் இல்லாத ஓட்டுனரை வைத்த பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கைu எடுத்தால் மற்றவ்ர்கள் திருந்துவார்கள்  
by mahrufulkarki,thondi ramnad dt,India    04-12-2009 10:36:44 IST
 பெத்தவங்களுக்குதான் தெரியும் பிள்ளையோட அருமை!  
by K முருகேசன்,Thiruvarur, Tamil Nadu, S.India,India    04-12-2009 10:35:00 IST
 i am not understand how the school management appoint inexperience driver. they only concentrate about fees and donation. not care about the children''s life. government immediately take action and shoot the principal and corespondent. then only this people understand  
by M balasubramanian,chennai,India    04-12-2009 10:32:52 IST
 சின்ன குழந்தங்க என்ன தப்பு பண்ணினாக. இந்த சம்பவம் எல்லா ஸ்கூல் வேன் டிரைவருக்கும் ஒரு படமா இருக்கட்டும். இன்னியவது டிரைவ் பண்ணும் போது மொபைல் யூஸ் பண்ணாதிங்க  
by A மதுமதி,cumbum,India    04-12-2009 10:24:29 IST
 நெஞ்சே வலிக்கிறது ???
பாழாய் போன பணத்திறக்காக சாதிக்க பிறந்த உன்னை சகதியில் மிதக்க விட்டார்களே ...
பூவாய் பறந்து வந்து கைகளில் அமர்ந்து என் தோலில் முகம் புதைத்து கொஞ்சி பேசும் உன் மழழை சொல் கேட்க இனி நான் என்ன செய்தால் திரும்பி வருவாய்.... 
by P. Balachandar,Tirupur,India    04-12-2009 10:23:32 IST
 போன மாதத்தில் இது போன்ற ஒரு விபத்தை தினமலர் வெளி இட்டிருந்தது!!
அப்படினா, பெயர் வாங்குவதக்கே சாலை போடுகிறார்கள் !! பாதுகாபிற்க்கு அல்ல!! என்பது தெள்ள தெளிவாகி விட்டது!!!!
வாழ்க!சாலைத்துறை அமைச்சர்கள்ளும், அதன் அதிகாரிகளளும்!!!
ராஜா/அமெரிக்கா  
by tk ராஜா குமார் ,pharma..,United States    04-12-2009 10:23:14 IST
 கல்வி வியாபாரமாக்கப்பட்டுள்ளது...இனியாவது அரசு உரிய நவடிக்கை எடுக்குமா ?????  
by R santhosh,paramathy velur,NAMAKKAL,India    04-12-2009 10:22:19 IST
 அதிகமான பள்ளிகள் இதேபோல்தான் இயங்குகிறது. ஆனால் கல்வித்துறை இதை கண்டுகொள்வதில்லை. எங்களால் இறந்த பிள்ளைகளின் குடும்பத்திற்கு ஆறுதல்தான் சொல்லமுடியும். கல்வி துறையோ இந்தமாதிரி கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு ஓட்டுனர் உரிமம் இருக்கும் ஓட்டுனரை நியமிக்க வேண்டும் என்ற அறிவு இல்லாதவர்கள் எல்லாம் கல்வி நிறுவனம் நடத்தினால் இவர்களிடம் கற்பவர்களை எப்படி நாளைய பாரதங்களை நல்ல பாரதமாக உருவாக்குவார்கள். இப்படி கல்வி நிறுவனம் நடத்துவதற்கு பதிலாக எங்கேயாவது பிச்சை எடுக்கலாம். கல்வி & போக்குவரத்து அதிகாரிகளே இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை இப்படிப்பட்ட நிறுவனகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்  
by S தம்பிராஜன்,munnar . kerala,India    04-12-2009 10:21:53 IST
 மனது வலிக்கிறது, இதயம் கனத்துவிட்டது. நம் நாட்டில் தொடர்ந்து நடக்கும் இச்சம்பவங்களைப் படிக்கும் போதெல்லாம் .இப்படியே சென்றால் இந்தியனுக்கு நாட்டை ஆளத் தெரியாது என்ற வெள்ளைக்காரனின் கூற்று உண்மை ஆகிவிடும் போல் தெரிகிறது.லைசென்ஸ் இல்லாத டிரைவர் , பராமரிப்பு இல்லாத வேன்,நிர்வாகத் திறமையற்றவர்கள் நடத்திய பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருக்கிறது என்றால்.... ச்சே , வெட்கக்கேடு. இன்னும் இப்படி எத்தனை பள்ளிக்கூடங்கள் இருக்கின்றனவோ .கடவுளே என் நாட்டையும், நாட்டு மக்களையும் நிர்வாகச் சீர்கேட்டிலிருந்து கப்பற்றமட்டயா my டியர் காட்.... 
by d thangam,tamilnadu,India    04-12-2009 10:21:48 IST
  ஊருக்கு ஒரு பள்ளி இருந்தால் இந்த பிரச்சனை இருக்காது. இந்த சம்பவத்தை இப்படியே விட்டு விடாமல், ஊர் மக்கள் தகுந்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்று விட்டு விடாதீர்கள். 
by S சந்திரமௌலி,Delhi,India    04-12-2009 10:14:03 IST
 மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்கும் அரசு உழியர்கள் மக்களை காப்பற்ற வேண்டும்
உயிர்களை பறிக்க அல்ல
மீண்டும் இப்படி ஒரு சம்வம் நடக்காமல் இருக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் எங்களை வாழ விடுங்கள்  
by S prabakar,Chennai,India    04-12-2009 10:07:15 IST
 Pls kill this driver 
by r manoj,Nagapattinam (Sikkal),India    04-12-2009 10:06:36 IST
 கேட்கவே கொடுமையான இந்த சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மாதா, பிதாவுக்கு பின்னே குரு தான் என்பதை , தனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் உயிர் தந்தாவது தன் மாணவர்களை காப்பேன் என்று நினைத்து செயல்பட்ட அந்த ஆசிரியையின் வீரம் செறிந்த தியாகம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. இரண்டாம் முறையாக அந்த குழந்தைகளுக்கு உயிர் தந்த அந்த ஆசிரியையின் ஆன்மா நிம்மதி பெறட்டும். பள்ளிகளில் நீச்சல் கற்று கொடுப்பதை கட்டாயம் ஆக்கவேண்டுமா, சாலைகளின் , வாகனங்களின் ,வாகன ஓட்டிகளின் தரம் உயர்த்தப்படவேண்டுமா , பள்ளி ஓட்டுனர்கள் கைபேசி உபயோகம் செய்தால் தண்டனைக்குரியது போன்ற இதில் எது போன்ற முன்னெச்சரிக்கை தேவை என்பதை அரசு ஆராய்ந்து அமல் படுத்த வேண்டும். அரசை இதில் குறை சொல்வதில் முகாந்திரம் இல்லை , இந்த விபத்தே கடைசி விபத்தாக இருக்கும் பட்சத்தில்.  
by D தேவன் ,chennai,India    04-12-2009 09:58:53 IST
 தகுதியில்லாதவங்கல்லாம் ஆளவந்தால் இப்படிதான் ஆகும் நாடு  
by r ரத்தினகுமார்,Cochin,India    04-12-2009 09:55:34 IST
 please take action and in future it should not happend. 
by G Anand,chennai,India    04-12-2009 09:53:47 IST
 சரியாக வாழத்தெரியாதவர்கள் தான் சரியாக ஆளத்தெரியாதவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்
நல்ல அரசியல் தலைவர்களை ஆட்சியில் அமர்த்தினால் மக்கள் வாழ்க்கை தரம் உயரும்
இதுபோன்ற உயிர் இழப்புகளும் குறையும். போக்குவரத்து துறை அமைச்சர் என்ன சொல்ல போகிறார் ? இந்த பெற்றோர்களின் வலி உணரச்செய்யும்
லஞ்சம் மட்டுமே இவர்கள் குறிக்கோள்.
வாகன போக்குவரத்து துறையின் கேவலமான செயல்பாட்டை இவரால் கண்காணிக்க இயலவில்லை.
பல அகால மரணங்கள் தான் மிச்சம்.
இந்த துறைக்கு இவர் மந்திரி என சொல்ல எந்த ஒரு தகுதியும் இல்லை.
தமிழ் நெஞ்சங்களே கலைஞர் அவர்கள் இந்த மந்திரி மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
அவரே முன் வந்து ராஜினாமா செய்தால் நிச்சயம் மக்கள் மன்னிப்பர். ஆனால் பணம் மக்களை விட இவர்களுக்கு பெரியது,
தமிழ் நெஞ்சங்களே நாம் கலைஞர் அவர்களின் முடிவினை எதிர்பார்ப்போம்.  
by ungalil oruvan,vedaaranyam,India    04-12-2009 09:51:18 IST
 tamilaka arase thoongiyathu poothum pongi ezhu.
kalaimakalai karka pona chinna chiru kulanthaikal karukippona sampavangal innum thotaraamal irukka sariyana nadavatikkai edu. 
by M LAKSHMANAN,Doha,Qatar    04-12-2009 09:39:44 IST
 Police shd check such overloading rash driving etc 
by Siva rajamohan,Chennai,India    04-12-2009 09:38:10 IST
 my Heart feel condolence to the family members.  
by V suppiah,malaysia,India    04-12-2009 09:27:52 IST
 Sorry for the kids. 
by shalini,India,India    04-12-2009 09:18:18 IST
 My deep condolence to the parents, those who suffered by lost their children.
I remember the ''''INDIAN'''' flim. & INDIA need ''''INDIAN THATHA'''' to eradicate the corruption in all fields( mainly in RTO/Police)
If this continue respect of the High/Supreme is court reduced , so High/Supreme court come volunterly & proposed new law to eradicate the corruption in all level.

Public already lose the confident on Govt officials & politicians. So its a High/Supreme court duty to get the confident from public. 
by k எபி,chennai,India    04-12-2009 08:45:19 IST
 இந்தஅரசு அதிகாரிகளுக்கு சம்பளத்தை கூட்டி கூட்டி கொடுத்து வேலை செயவிடாமல் கெடுத்துவிட்டார்கள். பயம் இல்லாமல் போய்விட்டது. லஞ்சம் இல்லாமல் எந்த வேளையும் நடப்பதில்லை. லஞ்சம் வாங்கிக்கொண்டு எதற்கும் உதவாத பொருளுக்கு உத்தரவாதம் கொடுத்து விடுகிறார்கள். பிரகு என்ன... உயிர் பலி, இதை தடுக்க அரசால் முடியுமா முடியாதா ?, முடியாது என்றால் ஆட்சியை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே, இந்த விபத்து நடந்துவிட்டது. இதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று நன்கு யோசித்து முடிவு எடுங்கள். இனியாவது இதுமாதிரி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே பதவி நீக்கம் செய்து மற்றவர்களுக்கு பயத்தை உண்டு பண்ண வேண்டும். இல்லை என்றால் இதுபோல் எங்குமே நடந்து கொண்டுதானிருக்கும். அரசு அறிக்கை விட்டுக்கொண்டுதானிருக்கும். மக்களே நீங்கள் முதலில் செய்யவேண்டியது அது நல்ல பள்ளியா அங்கு இருக்கும் வாகனங்கள் தகுதியானவையா என்பதையும் பார்க்கவேண்டும். எதோ காசை கட்டுகிறோம் பிள்ளைகள் படிக்கிறது என்று இருக்கக்கூடது. நாமும் விழிப்புடன் இருக்கவேண்டும். இல்லை என்றால் நம் இளப்பை சரிகட்ட யாராலும்முடியது. பிள்ளைகள் என்பது மதிப்பற்றசெல்வம். அதற்க்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடுகட்ட முடியது.அரசாங்கம் இதற்கு முழு பொறுப்பு ஏற்று ஆவண செய்யவும் நன்றி.  
by K GUNASEKARAN,singapore,India    04-12-2009 08:29:01 IST
 லைசென்ஸ் இல்லாத அறிவு கெட்ட டிரைவர் , பராமரிப்பு இல்லாத வேன், நிர்வாகத் திறமையற்றவர்கள் நடத்திய பள்ளிக்கூடம், பெற்றவர்களுக்கு தானடா தெரியும் இழப்பு. ஒருவரை ஒருவர் குறை கூறி கொள்ள அதிகாரிகளே வெட்கமாக இல்லையா ? 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    04-12-2009 08:10:21 IST
 அரசாங்கம் சட்டம் மற்றும் இயற்றிவிட்டால் போதாது. அதனை முறைப்படி கடைப்பிடிகிரார்களா என்று கண்கானிப்பதும் ஒரு அரசாங்கத்தின் கடமை.பொது மக்களும் பொறுப்பை உணர்த்து நடந்துகொண்டால் இந்த மாதிரி விபத்துகளை தடுக்கலாம் . விபத்தக்குள்ளானவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . 
by G Athinarayanan,Dubai,United Arab Emirates    04-12-2009 08:07:21 IST
 எல்லா குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் .....
பள்ளி முதல்வர், van driver கண்டிப்காக, கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் .....  
by R கோவின்,singapore,India    04-12-2009 08:06:23 IST
 உடனே பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். 
by M Ajmal khan,Jaipur,India    04-12-2009 08:05:08 IST
 so i''''am not happy, becuse of all childrean,
i'''' pray for all 
by SAM SHANMUGAM,singapore,India    04-12-2009 07:43:24 IST
 அதிகாரிகளோ அல்லது அரசாங்கமோ ஒன்னும் செய்யாது , ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்துக்கும் தம் பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. வாங்கும் காசுக்கு ஒரு புது வேனை வாங்கி அனுபவம் மிகுந்த ஓட்டுனரை நியமிப்பது என்ன மிகவும் கஷ்டமான காரியமா. இப்படி பணத்தை மிச்சம் பண்றேன்னு அந்த பிஞ்சுகளை கொன்று விட்டீர்களே பாவிகளா.
கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு அரசாங்கம் எந்த ஒரு கட்டுபாட்டையும் கொண்டுவரவில்லை இந்த முறையும் அதே கதை தான் நடக்கும் . 
by S Easwaran,Australia,India    04-12-2009 07:41:57 IST
 Sambantha patta athigaringa ellarum தூக்கு மாட்டிகிட்டு saavunkadaa  
by N Narayanan,Bangalore,India    04-12-2009 07:39:12 IST
 எந்த ஆட்சி வந்தாலும் திருத்த முடியாத உலக நாடுகளுக்கு இணையான சட்ட நடைமுறைகள் நிரந்தரமாக, கண்டிப்புடன் ஐந்து ஆண்டு கோமாளிகள் தலையீடு இல்லாமல் செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் வேதனைப்பட வேண்டியிருகிறது . அந்த கோமாளிகளை வெளிநாடுகளுக்கு சல்சாவுக்காக போகாமல் சம்பந்தப்பட்ட துறையில் முன்னேற்றங்களை பார்த்து செயல்படுத்தலாம். துறை சார்ந்து படித்தவர்களை பதவியில் அமர்த்துங்கள். சாவு நிச்சயம், குழந்தையில் வேண்டாமே. தயவு செய்து அனைவரும் அவரவர் குழந்தைகளாக நினையுங்கள். தேவையான கட்டுபாடுகளால் மாற்றங்களை கொண்டுவாருங்கள், அல்லது செய்ய துடிபவர்களுக்கு வழிவிடுங்கள். நன்றி. 
by C Ganesan,Singai,Singapore    04-12-2009 07:30:22 IST
 it is purely school management''''s mistake. they are fully responsible for this. they are collecting huge amount from students and spending very very less amount for students welfare.
running school has become a business. who should control this ? thangam thennarasu should answer for these incidents? without improving the safety of students how u can implement samacheer kalvi and what is the use ? 
by v amutha,pondicherry,India    04-12-2009 07:15:55 IST
 இதயம் எடைக்கல்லாய் ஆனதோ...
கல்வி, வியாபார சந்தையாகி போனதோ...

கல்வி கூடங்களா
கொல்லி வைக்கும் சுடுகாடா???
துள்ளி வந்த மீனையெல்லாம்
அள்ளி வந்தோம் கருவாடா!!!
மம்மி டாடி டாட்டானு
சொல்லிய சொல் ஆரலடா...
அள்ளி தரும் பணமெல்லாம்
ஆறுதல தருமாடா???

புளுதியில் புரண்டலும்
பூவ பெத்த மகராசி...
போன உயிர் போட்டிடுமா
அவளுக்கு கடிதாசி...
யார இனி சொல்லி அழ
தலையில இடிஎன...
கட்டி தங்கம் வைரமெல்லாம்
மண்ணோடு போனதுக்கு!!!

My deepest condolence to their family members and relatives...
It seems to be like, another kumbakonam incident..
Please... We have to be aware of it...
The govt should take immediate steps to overcome this...  
by M. Vaanmathy,Madurai,India    04-12-2009 07:07:16 IST
 மிகவும் varutham ataikiren  
by S சுந்தரம் பிரியா ,(kallal),Singapore    04-12-2009 06:56:00 IST
 If u born in India you are punished to die like this .No other go . No one can change the corrupted india. Jai Hind 
by Mohoo,sINGAPORE,India    04-12-2009 06:47:52 IST
 அட கடவுள'''''''' இது மாதிறி பள்ளிக்கூடங்களை அரசு கண்டறிந்து , உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்......  
by subu shanmugam, subramanian ,tamilnadu,thajjavure-dist ,pattukkottai-tk karungulam.,India    04-12-2009 06:32:44 IST
 பள்ளி குழந்தைகள் இறந்தது ஈடுஇணை அற்றது. சம்பந்த பட்ட அதிகாரிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இனி வேறு எங்கும் நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் . 
by P ராஜேஷ்(மதுரை),SINGAPORE,India    04-12-2009 06:24:12 IST
 ஆட்சியாளர்கள் உத்தரவு, சட்டங்கள் போடுவதுடன் நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் அதனை செயல் படுத்ததான் இங்கு ஆள் இல்லை... ஏனென்றால் அவர்களது கடமை சட்டங்கள் இயற்றுவது மட்டும்தான், அதனை நடைமுறைப்படுத்துவது - கடவுள் இனி நேரில் இந்தியாவுக்கு சென்றால்தான் முடியும்...
ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்க்கமும் அதன் குடும்பமும் சொகுசு காரில் பவனி வரும்... இது ஒரு கும்பகோணம் சம்பவம்போல் இன்னும் ஒரு மாதத்தில் நாம் நம் வேலையை பார்க்க சென்றுவிடுவோம்... தேர்தல் வந்தால் இலவசங்களை வாங்கிக்கொண்டு... கேடுகெட்ட மானிடரே....  
by d chandra,singapore,India    04-12-2009 06:05:22 IST
 போய் வேற வேலை இருந்தா பாருங்கப்பா. இதெல்லாம் யாராலையும் மாத்த முடியாது...  
by mr சசி,malaysia,India    04-12-2009 06:04:39 IST
 தமிழ் நாடு அரசே, உயிர் எல்லாம் சமம். மந்திரி எல்லாம் வரும் போது சாலை மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் அரசு பொது மக்கள் நலனை மட்டும் மறப்பது ஏன் ?

My ''''Deep Condolence'''' to the parents & the money cann''''t compensate. Pls stop just giving money to the family, take IMMEDIATE ACTION AGAINST THE MONEY MAKING SCHOOL. WHOS WANTS UR MONEY?? 
by N முரளி கிருஷ்ணன் ,Kuala Lumpur ,Malaysia    04-12-2009 06:03:53 IST
 Govt should hold the management responsible for this and the van driver should be punised severely. My hearty condolences to the parents of the children. 
by j sankaran,chennai,India    04-12-2009 05:59:59 IST
 குழந்தைகள் தெய்வம் போன்றவர்கள். அறிவு கெட்ட டிரைவர் உதவி செய்யமால் ஓடிவிட்டான். வெட்ககேடு. தமிழனுக்கு உலகில் தனி மரியாதை உண்டு. தயவு செய்து மற்ற பள்ளி வாகன டிரைவர் மிக மிக கவனம் தேவை. பெற்றோருக்கு எனது கண்ணீர் மரியாதை. நான் கடவுள் ஆக இருந்தால் குழந்தைகளுக்கு உயிர் கொடுப்பேன். மனிதனாக இருப்பதால் மன வேதனை அடைகிறேன்......,  
by M,S வேலுசாமி,denmark,India    04-12-2009 05:45:54 IST
 தகுதியில்லாதவங்கல்லாம் ஆளவந்தால் இப்படிதான் ஆகும் நாடு  
by u a,chennai,India    04-12-2009 05:26:10 IST
 அறிவுகெட்ட இரண்டு துறை அதிகாரிகளே பெற்றவர்களுக்கு தானடா தெரியும் இழப்பு, இப்படி ஒருவரை ஒருவர் குறை கூறி கொள்ள வெட்கமா இல்லையா ?  
by G Kalaichelvan,Kallakkudi , Trichy,India    04-12-2009 04:23:25 IST
 பள்ளிகளின் அசட்டுத்தனம், விலை மதிப்பில்லா குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கிவுள்ளது. மேலும்,பள்ளிகளில் இதுபோல் நடக்காமல் கவனிக்க அரசு மிகவும் முக்கியமான சட்டங்களை உடனடியாக அமல்படுத்தவேண்டும்.அந்த சட்டங்கள் இதுபோல், மேலும் நடக்காமல் தடுப்பதற்கு, சவுக்கடிபோல் அமையவேண்டும். 
by n easwaran,subang jaya,Malaysia    04-12-2009 04:11:23 IST
 Deep Condolence,
Let the Sweet Hearts, Soul rest in Peace.
TN Govt, Please wake up. Be proactive.Dont be reactive in passing laws.  
by P. RAMSARAN,ABU DHABI,United Arab Emirates    04-12-2009 02:51:03 IST
 I want to list the following for all these accidents and playing with not only kids life but our lives as well.
1. Very poor roads
2. No road signs and no marks on roads
3. No road bumps near to school zones
4. Over speed almost in all places and no speed limit
5. Corrupted police officers/ govt officers/ RTO''''s
6. Uneducated drivers and even they dont know the traffic rules and riding school vans and buses
7. Drunk and drive drviers
8. No concept od dimming and always on high beam and moreover no proper street lights
9. No accident barrier on the side of the roads
10. Corrupted politicians
11. People does not know where to complain and they dont know their rights
12. People wants their kids to be educated at any cost. Do any of us remember 25 kids burt alive in Tamilnadu?

So people, until we come together and fight there will be no solution and every year we have to loose our loved ones like this.
Most of the Tamilnadu roads are in worst conditions and can you imagine other states
Srenivasan
Boston 
by A ஸ்ரீநிவாசன்,Boston,United States    04-12-2009 02:37:54 IST
 மனது வலிக்கிறது ,இதயம் கனத்துவிட்டது. நம் நாட்டில் தொடர்ந்து நடக்கும் இச்சம்பவங்களைப் படிக்கும் போதெல்லாம் .இப்படியே சென்றால் இந்தியனுக்கு நாட்டை ஆளத் தெரியாது என்ற வெள்ளைக்காரனின் கூற்று உண்மை ஆகிவிடும் போல் தெரிகிறது.லைசென்ஸ் இல்லாத டிரைவர் , பராமரிப்பு இல்லாத வேன்,நிர்வாகத் திறமையற்றவர்கள் நடத்திய பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருக்கிறது என்றால்.... ச்சே , வெட்கக்கேடு. இன்னும் இப்படி எத்தனை பள்ளிக்கூடங்கள் இருக்கின்றனவோ .கடவுளே என் நாட்டையும், நாட்டு மக்களையும் நிர்வாகச் சீர்கேட்டிலிருந்து கப்பற்றமட்டயா .....!?.  
by J Rajamohamed,Riyadh,India    04-12-2009 01:03:24 IST
 Government should take action against school management, Funish the Driver once then only the others Driver is not made mistake.I am realy very sorry for the Parence, I feel the parence suitiation. I pray for the Lovely angels. 
by V KUMARAVELU,Dubai,India    04-12-2009 00:30:25 IST
 please kill this stupit driver  
by E Prabu,Doha - Qatar,India    04-12-2009 00:16:34 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்