முதல் பக்க செய்திகள் 

பக்தர்களின் சரண கோஷத்திற்கிடையே பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி
ஜனவரி 14,2010,18:40  IST

சபரிமலை : சன்னிதானத்தில் பகவான் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்ற சிறிது நேரத்தில் பொன்னம் பலமேட்டில் பிரகாசித்த மகர ஜோதியை கண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். சபரிமலையில் இன்று மகர ஜோதி பெருவிழா நடைபெற்றது. இந்த நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்க, பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண பவனி, நேற்றிரவு வந்தடைந்தது. இன்று காலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும், 3.15 மணிக்கு நெய்யபிஷேகம் துவங்கி, பகல் 11.30க்கு நிறைவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மகர சங்கரம பூஜைக்காக ஏற்பாடுகள் துவங்கியது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தமான 12.39 மணிக்கு இந்த பூஜை நடந்தது. திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, அந்த நெய் நேரடியாக ஐயப்பனின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், உச்ச பூஜை முடிந்து பகல் 2 மணிக்கு நடை மூடப்பட்டது.மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவாபரண பவனியை வரவேற்க செல்லும் அதிகாரிகளுக்கு தந்திரி மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தார். மாலை 5.45 மணிக்கு திருவாபரணபவனி சரங்குத்தி வந்தடைந்தது. அதிகாரிகள் வரவேற்புக்கு பின்னர் திருவாபரணங்கள் பெரியநடைப்பந்தல் வழியாக மாலை 6.20 மணிக்கு சன்னிதானம்வந்தது. ஸ்ரீகோயிலில் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரண பெட்டிகளை பெற்று நடை அடைத்தனர். திருவாபரணங்கள் பகவானின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு 6.35மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.அதை தொடர்ந்து சபரிமலையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டில் பதிந்திருந்தது. 6.40 மணிக்கு முதன் முறை ஜோதி காட்சி தந்தது. அதை தொடர்ந்து 30 வினாடி இடைவெளியில் இரண்டு முறை காட்சி தந்தது. ஜோதி தரிசனம் நடத்திய ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். இனி சபரிமலை நடை வரும் 20-ம் தேதி காலை ஏழு மணி வரை திறந்திருக்கும். எனினும் 19-ம் தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் நடத்த முடியும். 18-ம் தேதி காலை பத்து மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று விடும். அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. 20-ம் தேதி காலை ஏழு மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்பட்ட பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்.,12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா  
by c பிரேமா,toronto,Canada    14-01-2010 23:06:30 IST
 saranam saranam ayyappa 
by m thanika,abudhabi,United Arab Emirates    14-01-2010 22:06:23 IST
 எங்கள் அய்யன் அய்யப்பா சுவாமியே சரணம்  
by G உமேஷ்,Chennai,India    14-01-2010 22:03:31 IST
 ''''சுவாமியே சரணம் ஐயப்பா ''''
''''சுவாமியே சரணம் ஐயப்பா ''''
''''சுவாமியே சரணம் ஐயப்பா ''''

இனிய தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.., “மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கி பெருகட்டும்” ''''பொங்கலோ பொங்கல்'''' 
by A.K பிரபு,saudi arabia,Saudi Arabia    14-01-2010 21:46:16 IST
 மனிதர்கள் வாழ்வதே டூபுதான் .. நம்பிக்கை உள்ளவன் நன்றாக இருப்பான். நம்பிக்கை இலாதவர்கள் மனிதர்கள் அல்ல. மிருகங்கள்..AMMAVUM தந்தையும் கடவுள்னு நம்பர்வங்கள் ayyapanaiyum நம்பனும்.. . சாமியே சரணம் iyyappa.. சாமியே சரணம் iyappa... 
by N SATHISH,TIRUPUR,India    14-01-2010 21:28:57 IST
 எப்போதோ படித்த நினைவு. மகர ஜோதியை மனிதர்கள் தானே ஏற்றுகிறார்கள். பின்னர் ஏன் இவ்வளவு புளகாங்கிதம்?  
by K Niththilan,Jaffna,Sri Lanka    14-01-2010 20:30:30 IST
 சுவாமியே சரணம் ஐயப்பா....  
by TN POTHIGAN,tirunelveli,India    14-01-2010 20:18:58 IST
 சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
 
by தாஸ் ,Brussels,Belgium    14-01-2010 19:45:41 IST
 இதெலாம் doopupa............. 
by n rajeswari,tamilnadu,India    14-01-2010 19:39:06 IST
 MAKARAJYOTHIYE SARANAM AYYAPPAA
KARPOORA JYOTHIYE SARANAM AYYAPPA
SWAMIYE SARANAM AYYAPPAA

 
by MR KANNAN,Manama,Bahrain    14-01-2010 18:51:04 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்