முதல் பக்க செய்திகள் 

லாலு, முலாயம் தொடர்ந்து பிடிவாதம் : பெண்கள் மசோதாவை எதிர்க்க முடிவு
மார்ச் 06,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்டில் நாளை மறுதினம் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக இருந்தாலும், லாலு, முலாயம் போன்றவர்கள், அதை கடுமையாக எதிர்க்க தீர்மானித்துள்ளனர். தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என, முரண்டு பிடிக்கின்றனர்.பெண்கள் தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாடப்படுவது 100வது சர்வதேச பெண்கள் தினம் என்பதால், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, அன்றைய தினம் அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுதொடர்பான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த பெண்கள் மசோதா ஏற்கனவே ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு, அது பின்னர் பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப் பட்டது. பரிசீலித்த நிலைக்குழுவும், மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தது. அதனால், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவுச் சட்டமான, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, நாளை மறுதினம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. பெண்கள் தினத்தன்று தாக்கல் செய்யப்படும் இந்த மசோதா, பெண்களுக்கான பரிசு என்பதால், அதை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி.,க்களை காங்., தலைவர் சோனியா கேட்டுக் கொண்டு உள்ளார். எனவே, அனைத்து எம்.பி.,க்களும் வரும் திங்களன்று, தவறாமல் சபைக்கு வர வேண்டும் என, காங்., கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்து ள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.,வும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவிப்பதால், அதுவும் தங்களின் எம்.பி.,க்களுக்கு கொறடா உத்தரவிட்டுள்ளது. அதே நேரத் தில், பெண்களுக்கான இந்த ஒதுக்கீட்டில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கு உள் ஒதுக்கீடுவழங்க வேண்டும் என, லாலு, முலாயம் சிங் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அப்படி உள்ஒதுக்கீடு வழங்காமல் சட்ட மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர். வேறு சில கட்சிகளும் முரண்டு பிடிப்பதால், மசோதா தற்போதைய நிலையில் நிறைவேறுமா என்பது சந்தேகமே. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா, அரசியல் சட்டத் திருத்த மசோதா என்பதால், மொத்தமுள்ள எம்.பி.,க்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. லோக்சபாவில் மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 545. இதில், காங்., பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 348. ஆனால், 363 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. மீதமுள்ள எம்.பி.,க்களின் ஆதரவை பெறுவது அரசுக்கு எளிதாகவே இருக்கலாம். இருந்தாலும், அதற்கு முன்னதாக ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றுவதுதான் பிரச்னையே. இந்த மசோதாவால் திங்களன்று பார்லிமென்ட் அமளி துமளியாகும் என்பதில் சந்தேகமில்லை.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 useless bill. ethu penkali kevalppadduthum sayel. ethila reservation ennum pengalai perivini padithum seyal. enga ponathu mather sangam. arasialvathiyedam kaiuttu petriveterkala 
by M swaminathan,chennai,India    06-03-2010 23:31:27 IST
 i agree with some writers stating that such reservations are likely to be mis-used by the present major parties top leaders families! this reservation point has been mooted 12 years before and all leaders have cleverly planted thier daughters etc,,, into the political\social field hoping for better prospects for power in future! as dr kalam talked a day before in a college fresh graduates\qualified people with a social cause should be elected and the power mafias among politicians should be tought a lesson if the purpose is to be fulfilled!no political party fielded even 10% women candidates in the last election tells the true story!! natarajan 
by s natarajan,chennai,India    06-03-2010 22:54:30 IST
 எல்லோரும் நினைப்பது போல் இந்த மசோதா பெண்களுக்கு உதவ போவதில்லை. குறைந்த பட்ச நன்மையே உண்டு. இததற்கு பதில், ராஜ்ய சபாவில் எல்லா விதமான ரிசெர்வேஷனையும் கொண்டு வரலாம். 
by rajan,chennai,India    06-03-2010 21:33:13 IST
 இந்த பெண்கள் ஒதுக்கீடு மசோதா வின் பின்பு அரசியல் சார்பற்ற பெண்களுக்கு சந்தர்பம் கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்? அரசியல்வாதிகளை சர்தொர்க்கு மட்டும் சந்தர்பம் கிடைக்கும். உண்மைய்லேயே எவர்கள் பெண்களை மதிபவர்கள் என்றால் இட ஒதுக்கேடு இல்லாமல்கூட பெண்கள் பிரதிநித்துவத்தை அதிகரிக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அரசியல் கட்சிகள் தங்களை தாங்களே முறைபடுத்த ஒரு சட்டம் தேவையா? 
by jay கே,india,India    06-03-2010 20:53:54 IST
 பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வரவேற்கப் பட வேண்டியது தான் என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயலும் லாலு, முலாயம் போன்ற ஒரு சில பிற்போக்கு அரசியல்வாதிகள் தவிர மற்றவர்கள் யாரும் இதனை எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்குவதன் மூலம் வியக்கத்தக்க எந்த மாற்றமும் கிடைத்து விடாது என்பதையும் நாம் உணர வேண்டும். மீண்டும் அரசியல்வாதிகளின் குடும்பப் பெண்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள். பணபலமும் அதிகார பலமும் உள்ளவர்களும் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்ற நிலை மாறி, அதிகாரப் பகிர்வு சாதாரண மனிதர்களைச் சென்றடையும் போது மட்டுமே இதன் உண்மையான பலனை உணர முடியும்.  
by r சுந்தரசோழன்,chennai,India    06-03-2010 20:10:16 IST
 LALLU PROVED ONCE AGAIN HE IS A MAN . PAAL THAKARAE SHOULD SUPPORT WITH LALLU. 
by d raja,trichy,India    06-03-2010 19:24:42 IST
 good lalu is man one mane aramey 
by saje saje,dubai,UnitedArabEmirates    06-03-2010 18:23:40 IST
 பெண்ணினத்தை அடிமைபடுத்தி கொண்டிருக்கும் ஆணாதிக்கத்தை எதிர்ப்பவன் என்ற முறையில் இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.பெண்ணிற்கு 33 %சதவீத அடிப்படை சட்டம் என்பது எதோ பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் பல சட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்க கூடாது,அந்த சட்டத்தில் ஓட்டைகள்,பொந்துகள் இல்லாமல் தனி பெண் அதிகாரம் என்ற வகையில் (ஆண்களின்,கணவர்,சகோதரர்கள்,உறவினர்கள்)கலப்பு இல்லாமல் இருந்தால் அதன் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்,இல்லை என்றால் ஒப்புக்கு சப்பாணியாக நாங்களும் ஒரு சட்டத்தை எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம் நிறைவேற்றினோம் என்று பெருமை பட்டுக்கொள்ள தான் உதவும்,அரசியல் வாதிகள்,ஆட்சியாளர்கள் கவனிப்பார்களா? 
by k thiru,chennai,India    06-03-2010 16:55:43 IST
 பெண்களுக்கு இட ஒதிக்கீடு நிறைவேற்றபடுமேயானால் ஆண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்ப்டும். வேலை இல்லா நிலை ஏற்படுமேயானால் ஆண்கள் மோசமான பழக்கங்களுக்கும் தீய செய்கைகளுக்கும் அடிமை ஆவார்கள். தகுதி அடிப்படையில் தேர்வு செய்வது நல்லது.  
by SU Govindaraj,CHENNAI600014,India    06-03-2010 15:36:45 IST
 reservation in any form will corrupt the country and it should not be encouraged anymore. What is the benefit with this amendment? Nothing.. it leads to corruption from the female candidates. Already, India is facing lot of Cultural deformity in the form of Women. You see their dresses nowadays. If somebody against this, they will be arrested and prosecuted. What is the need for World's Women day first? Is there any International Men Day?. Readers please clarify if anything. 
by RS பாலாஜி,Bangalore,India    06-03-2010 13:34:58 IST
 It is a fundamental right for any citizen to contect in a constituency. Supposing if they earmark a constituency for ladies, an eligible male candidate in spite of his desire will be precluded from contesting in that election.. It is against the fundamental right. If these parties who ever support this bill give even 100% of the contesting opportunities to women. who prevents them. But forcing this by means of enacting a law is nonsensical and a gimmick. 
by m sivakumar,chennai,India    06-03-2010 12:57:22 IST
 ஆஹா, singapore சேகர் அம்மா புராணம் pada ஆரம்பித்து விட்டார்.  
by p santhosh,Panyu,China    06-03-2010 12:24:20 IST
 பாரத நாடு சுதந்தர நாடு. ஒதுக்கீடில்லாமலே எல்லா இனத்தவர்களும் முன்னேருகிரார்கள். அதிலும் மகளீர் ரொம்ப ஜாச்தியாகவும் மிக வேகமாகவும் முன்னேர்கிகார்கள். எந்த துறையிலும் அவர்கள் ஆங்கிலே விட அதிகமா செயல் படுகிகார்கள். நம்ம ஜனாதியானாலும், ராணுவம் அனாலும், கப்பல் படை அனாலும், விமான படை அனாலும், மளிகை கடை இன்னும் பல பெரியதும் சிறியதும் ஆன எல்லா விவசாயத்திலும் அவர்கள் ஆண்களை விட அதிகமாகவே செயல் பெடுகிரார்கள். ஏன் நம்ம சட்டசபயிலேயும் நடாளுமன்றதிலேயும் அவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே வந்து கொண்டிருக்கறது. இன்னம் சில வருடத்திலே அவர்கள் முப்பதிமூனு சதவிகிதத்துக்கு பதிலா அறுபத்தியாறு சதவிகதமா உயர்வார்கள். பின்னே எதுக்காக இந்த முப்பத்திமூனு சதவிகித ஒதுக்கீடு? தேவை இல்லாத ஒதுக்கீடு. இதைவிட நாட்டுக்கு நலம் தரும் மசோதாவை அமல் படுத்தினால் எவ்வளவு நல்லது. வர திங்களன்று மகளீர் தின நூறாவது விழைவது விழாவில் எவ்வளவு ஆண்கள் அவதிப்பேடபோகிறார்களோ அந்த கடவளுக்கு கூடி தெரியாது. என்னப்பா உலகம் இது. 
by R SAHASRANAMAYYAR,KANPUR(UTTARPRADESH)OFPARAVUR,KERALA,India    06-03-2010 12:17:30 IST
 பிற்ப்பட்ட வகுப்பினருக்கான உள்ஒதுக்கீடு இல்லாத மகளிர் மசோதா தேவையில்லை. இந்த விசயத்தில் லாலுபிரசாத்யாதவ், முலாயாம்சிங்யாதவ் ஆகியோர் செல்லும் பாதை சரியானதே. அவர்களது நடவடிக்கை மசோதாவிற்கு எதிரானது போல சித்தரிக்கப்படுவது கண்டனத்திற்கு உரியது.  
by N பாலகிருஷ்ணன்,Ramnad,India    06-03-2010 11:59:06 IST
 பெண்களுக்கு நாம் முப்பத்து மூன்று % கொடுத்தால் மட்டும் pothathu nam 50 % kodukavendu,m  
by X Felix,Konamkadu,India    06-03-2010 11:44:55 IST
 I agree with Mr. Amanulla and Mr. Samy, 
by உண்மை விரும்பி ,chennai,India    06-03-2010 11:29:05 IST
 ஆஹா! நான் எழுத நினைத்ததை திரு அமானுல்லா எழுதி விட்டார்கள். பெண்களுக்கு இந்த இட ஒதுக்கீடு மூலம் எந்த பிரயோசனமும் இல்லை. நூறு சதவீதம் அரசியல்வாதிகளின் குடும்ப பெண்கள் மட்டுமே பலன் அடைய போகிறார்கள். அதற்கு சம்பந்தமே இல்லாத பெரும்பான்மையான பெண்களுக்கு ஒன்றுமே இல்லை. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களினால் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் பெரும்பாலும் நடிகைகளும், முதலவர் மற்றும் மந்திரி வாரிசுகளுமே இவர்கள். அங்கே தூங்கிவிட்டு, ஷாப்பிங் செய்துவிட்டு வந்தவர்கள் தான் இவர்கள். 
by c சாமி ,bangkok,Thailand    06-03-2010 09:30:41 IST
 intha sattame thevaiyillai. 
by J Leo,paramakudi,India    06-03-2010 09:21:51 IST
 லல்லு இதுபோன்று சில நல்லதுதும் செய்வார். இந்த மசோதா நிறைவேறாமல் இருபது நல்லது. நாடு தாங்காது சாமி..... 
by R பிரவீன்,Chennai,India    06-03-2010 08:54:44 IST
  இந்த மசோதா சமுதாய சீரழிவை ஏற்படுத்தும்.15% சதவீதமாக இருக்கும் பெண்கள் 33% ஆனால் 18% ஆண்கள் வேலை இழப்பார்கள்.இந்த ஆண்கள் ஒழுக்ககேட்டில் செல்வார்கள். தீவிரவாதம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகும்.தாயின் அரவணைப்பு கிடைக்காத பிள்ளைகள் மோசமான விஷயங்களில் ஈடு படுவார்கள். பெண்கள் சரியான முடிவை எடுக்க முடியாதவர்கள். அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. இந்தியா எங்கே போகிறது.நம்பாதீர்கள் 
by m சீரழிவு ,chennai,India    06-03-2010 08:38:11 IST
 மக்கள் பிரதிநிதியாக வருபவர்களிடம் நேர்மை, ஒழுக்கம், சுறுசுறுப்பு, கல்வி போன்ற தகுதிகளை தான் நாம் எதிர்பார்க்க வேண்டும். இவைகள் தான் உண்மையான பலன்களை நாட்டிற்க்கும், சமுதாயத்திற்க்கும் தரும். ஆனால் ஜாதி, மதம், பால் போன்றவைகளை பார்த்து நாம் அவர்களை தேர்வு செய்வோமானால் அது வெறும் அரசியலுக்குதான். தாழ்த்தப்பட்டவர்களும் பெண்களும் பதவிக்கு வர வேண்டும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவை கட்டாயமாக திணிக்கப் படும்பொழுது அங்கு அரசியல் தான் புகுந்து விளையாடுகின்றது. உதாரணமாக நமது மாநில உள்ளாட்சி அமைப்புகளில் 33% பெண்கள் இட ஒதுக்கீடு உள்ளது. அந்த 33% பெண்களில் 90% மேலானோர் அவர்கள் குடும்ப பின்னணியில் உள்ள ஆண் அரசியல்வாதிகள் மூலமாகத் தான் பதவிக்கு வந்தவர்கள். அவர்களை இயக்குவது எல்லாம் அந்த ஆண்கள் கையில் வைத்திருக்கும் ரிமோட் கண்ட்ரோல்கள் தான். 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு பெண் கிராமத்து பஞ்சாயத்து தலைவியாக வெற்றி பெற்றார். அப்பொழுது தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் இருந்த எனது ஆசிரியர் அவரிடம் வாழ்த்து தெரிவித்து உங்களை எதிர்த்து எத்தணை பேர் அம்மா போட்டியிட்டார்கள் என வினவ அவரோ எனக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரியாது என் கணவரிடம் கேளுங்கள் என கூலாக பதில் தெரிவித்தாராம். இது போல ஏன் இதனை விட மோசமான உதாரணங்களை நாம் மாநிலமெங்கும் காணலாம். ஒரு வேளை இந்த மகளிர் மசோதா வெற்றி பெற்றாலும் அதனால் பயனடையப்போவது அரசியல்வாதிகளின் வீட்டு பெண்கள் தான். எனவே லாலுவுக்கும் முலாயமும் இந்த விஷயத்தில் நாம் ஆதரவினை தெரிவிக்க வேண்டும்.  
by M Amanullah,Dubai,UnitedArabEmirates    06-03-2010 00:43:36 IST
 லாலு மீது ஆயிரம் கோடி ஊழல் வழக்கை தூசி தட்டி எடுத்தாலே போதும் ''கப் சிப் '' என்று அடங்குவார்..குதிக்கும் இவர் போன்ற அரசியல் சாக்கடைகளுக்கு அதுதான் சரியான தீர்வை இருக்கும். பெண்களை அரசியலில் இருந்து விரட்டவே சில யோக்கிய சிகாமணிகள் எவ்வளவோ முயன்றும்..அது முடியாமல்..''ஆணாதிக்கத்தை'' விரட்டியடித்த ''அம்மா'' போன்ற வீர பெண்மணிகளின் ''ஆதரவுடன்'' இந்த மசோதா நிச்சயம் வெற்றி பெறவேண்டும். ஆணுக்கு பெண் நிகர் என்பது வெறும் வாய் பேச்சாய் இல்லாது அது சட்ட வடிவில் அரங்கேற வேண்டும் என்பதே ''பெண்மையை'' மதிப்போரின் ஆசையும் கூட. வாழ்த்துக்கள்!! 
by P சேகர்,SINGAPORE,Singapore    06-03-2010 00:10:11 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்