முதல் பக்க செய்திகள் 

வருமானவரித்துறை திடீர் கிடுக்கிப்பிடி: சிக்குகின்றன ஐ.பி.எல்., அணிகள்
ஏப்ரல் 17,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : கொச்சி கிரிக்கெட் அணி ஏலம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சசி தரூர் மீது ஊழல் புகார் கூறப்பட்டதால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தலைமையகம் மற்றும் லலித் மோடியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி, ஐ.பி.எல்.,லின் மற்ற கிரிக்கெட் அணிகள் ஏலம் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. இதனால், பல புதிய தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஐ.பி.எல்., கொச்சி அணியை, 'ரெண்டவூ ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு' என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை தனது தோழியும், எதிர்கால மனைவியுமான சுனந்தா புஷ்கருக்கு மத்திய இணை அமைச்சர் சசி தரூர் இலவசமாக வாங்கிக் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், அணியின் பங்குதாரர்கள் விவரத்தை வெளியிடக் கூடாது என, ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடியை, அமைச்சர் தரூர் மிரட்டியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, ஐ.பி.எல்., அணிகள் பல நூறு கோடிக்கு ஏலம் போவது பற்றியும், அவற்றுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பது பற்றியும் அறியும் வேலையில் வருமான வரித்துறையினர் இறங்கியுள்ளனர். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள ஐ.பி. எல்., தலைமையகம் மற்றும் வோர்லியில் உள்ள லலித் மோடியின் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை சோதனையிட்டனர்.


சோதனை பற்றி நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கொச்சி அணி ஏல பிரச்னை எழும் முன்னரே, ஐ.பி.எல்., அமைப்பு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில், ஐ.பி.எல்., அணிகளின் ஏலம், அவற்றை எடுத்தவர்கள், அதன்மூலம் கிடைக்கும் வருவாய், ஐ.பி.எல்., மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இடையே வருவாயை பகிர்ந்து கொள்ளும் முறை உட்பட பல விவரங்களை தெரிவிக்கும்படி கூறப்பட்டது. அதை செய்ய ஐ.பி.எல்., அமைப்பும், லலித் மோடியும் தவறி விட்டதால், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் கிரிக்கெட் அணிகள் தொடர்பான பல ரகசிய தகவல்கள் அம்பலமாகும்.இவ்வாறு நிதி அமைச்சக அதிகாரிகள் கூறினர்.


மேலும், ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் நிதி விவகாரங்கள் மற்றும் பங்கு முறைகள் குறித்து, ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன் ஏல நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை கண்டறிய மும்பையில் பல இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.இதுமட்டுமின்றி, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களிடமும் விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது அவர்கள் செய்துள்ள முதலீடு, அவை கிடைத்ததற்கான நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்கப்படும். இந்த விசாரணை இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதற்கிடையில், நேற்று தர்மஸ்தலா வந்த லலித் மோடி, நிருபர்களிடம், 'ஐ.பி.எல்., போட்டிகள் தொடரும். இங்கு கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டு மீட்டிங் ஏதும் இல்லை' என்றார். அதே சமயம் கொச்சி விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.


வரித்துறையினர் கேள்விக்கு பதிலளித்தோம்: லலித் மோடி : வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பின், நிருபர்களிடம்பேசிய லலித் மோடி கூறியதாவது: ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகள் தொடர்பான ஆவண விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஏல நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அவர்கள் கேட்ட விவரங்களை அளித்தோம். கேள்விகள் சில நிமிடங்களில் முடிந்து விட்டாலும், அதுதொடர்பான ஆவணங்களை பரிசீலிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.ஆவணங்களை பரிசீலித்ததிலும், விசாரணை நடத்தியதிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர். எங்கள் அமைப்பு ஒரு பொது அமைப்பு. அவர்கள் மேலும் ஏதாவது கேள்விகள் கேட்டாலும், அதற்கும் நாங்கள் பதில் அளிப்போம். என்னுடைய லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், என் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியான செய்திகள் தவறு. ஐ.பி.எல்., அணிகள் தொடர்பாக நகரில் உள்ள பல அலுவலகங்களுக்கு வருமான வரித்துறையினர் விஜயம் செய்ததும், எனது அலுவலகத்திற்கும் வரும்படி அழைப்பு விடுத்தேன்.இவ்வாறு லலித் மோடி கூறினார்.மேலும், லலித் மோடிக்கு மத்திய உணவு அமைச்சர் சரத் பவார் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 பணம்,மட்டுமே முக்கியமாகிபோன காலத்துலே, நேர்மை, நாணயம் , உண்மை எல்லாமே வெறும், தாளில் மட்டுமே காணமுடியும். இது எல்லாத்துக்கும் பொருந்தும். விளையாட்டு மட்டும் இதில் விதிவிலக்கு இல்லை. 
by S subramanian,coimbatore,India    20-04-2010 12:18:26 IST
 ஐ பி எல் இந்திய டீம்குள்ளே பிரிவினை ஏற்ப்படுத்தும் ஓர் இயக்கமாகவும் நட்சத்திரங்கல் விளையாட்டு என்பதை மறந்து இது ஒரு வணிகமாக நினைத்து விளையாடும் அளவுக்கு ஆக்கிவிட்டது ஐ பி எல்லை நிறுத்த வேண்டும் அதை இந்த காங்கிரஸ் அரசு செய்யுமா?  
by p gurusamy,riyadh,SaudiArabia    17-04-2010 23:42:42 IST
 இந்த ஐபிஎல் உருவானது கபில்தேவின் வயிற்றெரிச்சலின் மேல்தான். அவர் தன்னந்தனியாக கொண்டு வந்த அந்த முயற்சியை பிசிசிஐ- இந்த கழிசடை காங்கிரஸ் ஆகியோர் அழித்தனர். இன்று அதன் விகாரம் தெரிகிறது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். தேர்தல் மோசடி செய்து ஆட்சிக்கு வந்து ஆட்சி செய்யப்படும் நாடு நாட்டு மக்கள் கடும் அவதிபடுவார்கள். அடுத்தவன் வயிற்றை அடித்து யாரும் வாழ்ந்திடமுடியாது.  
by mr கோபி,chennai,India    17-04-2010 23:25:08 IST
 2010 சூப்பர் drama 
by regee regee .kariyapattinam,madina,SaudiArabia    17-04-2010 23:21:09 IST
 அடைங்கப்பா... ஒருத்தரை பாதுகாக்க ... காங்கிரஸ் அரசு என்ன என்ன செய்கிறது... ஆனால் சாதாரண தமிழ் மீனவர்களே சிங்கலர்கள்ளிடம் இருந்து பாதுகாக்க ஒரு நடவடிக்கை செய்யவில்லை... காலம் தான் பதில் சொல்லும்.  
by தமிழன்,madurai,India    17-04-2010 19:26:31 IST
 எல்லா காமன்டுசும் waste 
by S சிராஜ் deen,riyadh,SaudiArabia    17-04-2010 19:24:48 IST
 என்னாங்கையா பேசும்போது கோடி டாலர்ல ஏலம் விடும்போது எங்கையா போனீங்க? இப்பவந்து இன்கம் டாக்ஸ் அது இதுன்னு வெள்ளாட்டு காட்ரீங்களா? நறிய தேன் குடிக்க விட்டுட்டு கூட்ட கொடயரீங்களா? தேனீக்கள் குட்டி சாவணுமா? ஏன்யா இந்த வேலையத்த வேல? சும்மா இபீஎள்ள கான்சல் பண்ணுங்கய்யா. அதான் நல்லது. ஏழைங்களுக்கு காசு மிச்சம் கவர்மேன்ட்டுக்கு வேலை மிச்சம்.  
by V Desikan,Abudhabi,India    17-04-2010 19:19:53 IST
 First from where they are bringing the money...is it black or white money? then cricket income should be shared to all sports in India. 
by v christopher,sanaa,Yemen    17-04-2010 18:51:10 IST
 பணம் இன்வோல்வேத இன் கிரிக்கெட் , சுவிஸ் பேங்க் பணம், வரி ஏய்ப்பவர்கள் பணம் இவற்றைக் கொண்டே அரசு ரன் பண்ணி விடலாம். ஆனால் தற்போதைய காங்கிறேச்சிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது .தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் சொரணை கெட்டவர்கள் 
by NR Govind,Coimbatore,India    17-04-2010 18:51:05 IST
 இ டோன்ட் LIKE IPL 
by M.S. KHAZHUDAIKOODI,INDIA,India    17-04-2010 18:33:06 IST
 இது மக்கள் பணம் !, இந்த மோடி, பொவார், போன்ற அரசியல் பண நரிகள் , மக்களின் ரத்தத்தை ருசிக விட கூடாது !. உண்மையை வலிய கொண்டுவரவண்டும். ! 
by R கணேஷ்,Jeddah,SaudiArabia    17-04-2010 18:27:24 IST
 எந்த நாட்டிலாவது விளையாட்டில் அரசியல் தலையிடை பார்த்தது உண்டா? உண்டு என்றால் அது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்? விளையாடுபவன் எல்லோருக்கும் அரசியல் பின்னணி உண்டு, மாமா, மச்சான், சின்ன வீடு தம்பி....இப்படி பட்டவர்களுக்கு தான் முதல் உரிமை, திறமை உள்ளவன்???? விளையாட்டை விளையாட பார்ப்பது இல்லை, அதுவும் கிரிக்கெட்டில் வெறி பிடித்து அலைகிறார்கள், அதுவும் இந்தியா பாகிஸ்தான் விளையாண்டால் போதும் ஏதோ உலக யத்தம் வந்ததுபோல்.. ஒரு வெறி, இந்தியா தோற்றால் இந்திய வீரர்களுக்கு செருப்படி, முட்டை வீசுவது.. ஜெய்ச்சா ஊர்ல தலைகாட்டலாம் இலேன்னா அவ்வளுதான்.. கேவலம்.. ஆகையால் இப்படி பட்ட கேவலமான கிரிக்கெட்டை தடை செய்யலாம்..  
by A ஷிஹாப்,Kuwait,India    17-04-2010 16:36:39 IST
 தமிழ் நாட்டில் நான் தெரு கோடியில் ..நான் ஆயீரதுக்கும் .. நுறுக்கும் நானும் என் மக்களும் அல்லல் படுகீன்றோம் ... அங்க பல ஆயிரம் கோடி சம்பாதீகீறாங்க.... அரசாங்கமே கொஞ்சம் கவனி ...  
by r கவலையுடன் இந்தியன் ,tamilnadu,India    17-04-2010 16:34:41 IST
 இந்த இப்ல் போட்டிகளில் இருண்டு கிடைக்கும் லாபம் பொது மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லை. பணக்கர்ரல்களே மேலும் பணம் கோடி கோடியாக சேர்த்து கொல்ஹின்றனர். இதில் முதலீடு செய்துள்ள அணைத்து ஜாம்பவான்களும் ஒன்று சேர்ந்து பெரிய பெரிய தொல்ழிர்ச்சளைஹளை தொடங்கி இருந்தால், பல ஏழை எளிய மக்களும் பயன் பெற்றிருப்பர்ஹல், நாட்டின் பொருளாதாரmum வளர்ச்சி அடைந்திருக்கும்.  
by ksv pathy,erode,India    17-04-2010 16:01:26 IST
 உண்மையான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஐசில் அமைப்பை மோடி போன்ற வியாபாரிகள் அதை முடக்கி தங்கள் வியாபார நோக்கத்துடன் அதை காப்பி அடித்து ஐபில் அமைப்பை உருவாக்கி தங்கள் வியாபார நோக்கத்தை செயல்படுதிவிட்டனர். அதற்கு இந்தியன் கிரிக்கெட் அமைப்பு உறுதுனையாக உள்ளது. முதலில் இந்தியன் கிரிக்கெட் அமைப்பில் களை எடுக்கவேண்டும். கபில்தேவ் போன்ற உண்மையனவர்களுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்  
by v சரவணன்,chennai,India    17-04-2010 15:57:53 IST
 ஐ பி எல் அய் கலைக்கவேண்டும் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு கையாள வேண்டும். எது என்னுடைய கருத்து. 
by R Muthukumar,Nairobi,Kenya    17-04-2010 15:56:54 IST
 sick and tired to see all this..bcaz of all your peoples we still developing country.i dont know when mr.kalam dream come true..god bless my country. 
by T saravanan,london,UnitedKingdom    17-04-2010 15:46:55 IST
 இதுவும் கடந்து போகும்  
by S ராமநாதன்,Tirupur,India    17-04-2010 15:03:08 IST
 நம்ம சச்சின் ஓடி ஒடி விளையாடுறாரு ,ஆன இவுங்க உக்காந்து விளையாடுரங்க,நடவடிக்கை எடுகனுமுனா ஆணிவேற புடுகனுமுகோ ! 
by g sudhaharan,madurai,India    17-04-2010 14:27:46 IST
 இது காமெடி போலீஸ் மாதிரி காமெடி வருமான வரி ரைய்டு... உங்களுக்குத்தான் அவங்கள ஒரு ...கூட புடுங்க முடியாதுன்னு நல்லா தெரியும்..அவனவன் ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடின்னு பேசறான், ஒப்புக்கு சப்பாணி ரைய்டு.... எங்க தலைமை தேர்தல் கமிசனர் வோட்டுக்கு பணம் தராங்க ஆனா தரலைன்னு சொல்றாரு..நீங்க வரி ஏய்ப்பு செய்றாங்க ஆனா செய்யலை அப்படின்னு சொல்லுங்க.. கேசு இன்னும் ஆறு மாததில முடிஞ்சுடும்..எந்த அரசியல்வாதியாவது எந்த தவருக்ககாவாவது ஜெயிலுக்கு போயிருக்கானா??? நீங்களும் உங்க தேங்கா மூடி ரைய்டும்!! வாழ்க தேங்கா மூடி அரசாங்க அதிகாரிகள்..  
by Aarif Raj,Birmingham,UnitedKingdom    17-04-2010 14:06:17 IST
 finally income tax has waken up..... 
by E THANGARAJAN,madurai,India    17-04-2010 14:03:13 IST
 லீவுனாட்க்ளில் நமக்கு எதாவது செய்தி வேணுமுல்ல. அதுதான் இது. நிஜமாவே விளையுடரான்கப்பா. நல்லா இருக்கட்டும். 
by G Venkataramani,Madurai,India    17-04-2010 13:56:21 IST
 HAHAHA.. CONGRESSSS HAHAHA... THAROOORR HAHAHAHA.. IPL U CANNOT ESCAPE BCOS GOVERNMENT IS IN THEIR HAND ... THIS IS WORST GIOVERNMENT HAHA 
by k murugan ,velore,India    17-04-2010 13:34:23 IST
 எல்லா வாசகர்களும் சரியாகவே சொல்லிவிட்டார்கள். இந்த income tax ஆசாமிகள் சாதாரண ஆட்களை வறுத்து எடுப்பார்கள் முதலைகளை பிடித்து விட்டோம் என்று பாவ்லா காண்பிப்பார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில்  
by M ஜோவலன் வாஸ்,Chennai,India    17-04-2010 13:30:11 IST
 what a shame?. This IPL money extravaganza happening for last 3 years , only now Income tax department woundering how this much money get into place. Indian are bloody idiots. When people are living and sleeping on roadside and place for them to shelter particular group of people are able to generate this money. Is this essential for India. Please who say job creation are funny people. How much are they place for ground man extra. For rich morans it is another way of converting black into white. Like Reliance mobile 502 plan in late 90''s.  
by ks சிவா,Chennai,India    17-04-2010 13:05:31 IST
 என்ன இவளவு நாளா உறக்கமா?  
by A சுவாமிநாதன் சொக்கனவூர் ,MANAMA,Bahrain    17-04-2010 12:20:18 IST
 எல்லா வளையட்டும் அப்படிதா அதுக்கு நம்ம என்ன பண்ணுறது எல்லாம்ஹ சுடாட்டம்  
by gouse பாஷா ,uae,UnitedArabEmirates    17-04-2010 11:50:11 IST
 இப்பதான் என்னமோ ipl ஊழல கண்டுபுடிச்ச மாதிரி பெரிய படம் காமிகிறாங்க ! காங்கிரஸ் சசிதருற காபதுரதுக்கு என்னலாம் திட்டம் போடுறாங்க  
by n kamshan,chennai,India    17-04-2010 11:45:00 IST
 லலித் மோடிக்கு மத்திய உணவு அமைச்சர் சரத் பவார் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இவனை நீக்க வேண்டும்.  
by a அரசன்,chennai,India    17-04-2010 11:44:52 IST
 ithu makkalai cheat seivathu 
by G GOBINATH,tnagar,India    17-04-2010 11:20:45 IST
 Hai dea all, I think we are all forgot about one matter. Do you know what it is? Before Seven months our central government has gave a oath for election ''All our indians black money will be retake from the SWIZZ BANK'' Where is the black money? அங்கே இருக்கும் அணைத்து பணமும் உண்மையாக உழைத்து சம்பாதித்த பணமா ? அல்லது அந்த விசாரணையை முடிக்க இன்னும் 50 ஆண்டுகள் தேவையா? அதை விட்டுவிட்டு IPL க்கு வந்துவிட்டார்கள். அது ஒரு election வாக்குறுதி என்பதால் அவற்ற்றை அப்படியே விட்டுவிட்டர்கள? The frauds are only ruling India so they will not do anything for Low Level & Middle Level peoples. All our indian politicians are deposited theirs all black moneys in SWIZZ BANK including Congress parties President. Where they got these monies? The central government wants to take a step for to retake the Indian''s black money from SWIZZ BANK. Now leave the IPL. Lacks of crores are in SWIZZ BANK. But in IPL only thousands of crores are there. So the central government wants to take the action against all peoples who have black monies in bank or anywhere. Dear Mrs. Soniagandhi(Congress President), Pls do something for poor peoples in India. They are believing you. They dont know that u are a fraud. But they are thinking u as a God.... Pls do something for them. This is my kind request... Dear publisher, pls convey this new to Mrs. Soniagandhi(Congress President)..... 
by Raja Sekar,Chennai,India    17-04-2010 11:18:58 IST
 மாணவர்களின் படிப்பை கெடுக்கும், தேர்வு நேரத்தில் நடக்கும், ஒரு சில கோடீஸ்வரர்களை மேலும் பல கோடிகள் சம்பாதிக்க உதவும் ஐ பி எல் 20 - 20 உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்  
by S. VISWANATHAN,Coimbatore,India    17-04-2010 11:15:31 IST
 IPL third edition is drawing to the Semis and fans are excited to watch the grand finale.But the Modi vs Tahroor Indian Political League IPL robbed the sensation and we are witness the T20 match which has become the pitched battle of sorts.Parliament has become the venue of the same. In reality the tie is now between the ruling Congress and the BJP in disguise.Sonia the main coach of the Congress is angry since Sashi bowls too many wides and no balls.Advani seems to be smiling at the turn of events and as usual BJP is threatening to STOP the proceedings of the House as if they have all along been allowing the smooth conduct of Parliament.An average Indian Cricket fan is confused in a very big way since he is forced into a sort of dilemma in which he finds the Parliament more exciting and entertaining than the actual action at the Chepauk Statidum!Perhaps the Bollywood and other woods artists can perform the Cheer Girls role in the house lie in the IPL extravaganza!Modi vs Tharoor has now forced even the Price Rise to the back benches! In a way this is also a FIXED match between the UPA and NDA to divert the public agony!  
by வேணு,Chennai,India    17-04-2010 11:12:43 IST
 சசிதரூர்கு தாவுத்திடம் இருந்து மிரட்டல் வந்ததை வைத்து பார்க்கும் பொழுது லலித்மோடிக்கும் மாபியா கும்பலுக்கும் உள்ள தொடர்பை முதலில் விசாரணை நடத்த வேண்டும் ,அதன்முலம் I PL க்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியும்  
by C sivakumar,KARUPPAGOUNDANPALAYAM,India    17-04-2010 11:11:32 IST
 deccan Chargers played very well,mainly rohit done a great job for team,totally it is a good team work.  
by P ஜெகன்,Chennai,India    17-04-2010 11:09:37 IST
 கிரிக்கெட் ஒரு சூதாட்டம் இதில் ரைட் ஒரு நாடகம்  
by R விஜயகுமார்,KUWAIT,India    17-04-2010 10:56:17 IST
 உண்மை சம்பவம் தெரியா அரம்பம் பார்போம் என்ன வென்ற 
by I கமல்பாஷா,ABUDHABI,India    17-04-2010 10:42:38 IST
 சரி தாவூத் சசி தரூரை மிரட்டியதாக செய்தி வந்ததே. என்னாச்சு. இந்த நடிகைகள் எத்தனை படத்தில் நடித்து இவ்வளவு பணத்தை சம்பாதித்தார்கள் ? தாவூதுக்கும் IPL க்கும் என்ன தொடர்பு.  
by L SUBRAMANIAN,JAIPUR,India    17-04-2010 10:40:35 IST
 இதெல்லாம் சரி. ஸ்விஸ் பேங்க் பண விவகாரம் என்ன ஆச்சு? இது சும்மா கண் துடைப்பு. மக்களை திசை திருப்பும் வழிகள்.  
by S கணேசன்,Hosur,India    17-04-2010 10:37:05 IST
 போங்கடா போகத்த பசங்கள .......நீங்களும் எத்தன ரைடு டா போவங்க ஒரு பிரச்சணை விசுரூபம் எடுக்கும் பொழுது அதனை திசை திருப்பும் ஒரு கருவியாகத்தான் இது போன்ற ரெய்டு நாடகங்களை நம் அரசுகள் காலகாலமாக அரங்கேற்றி வருகின்றது.  
by P Murugan,Thiruvannamalai,India    17-04-2010 10:13:31 IST
 நான் முன்னரே இது பற்றி எழுதியிருக்கிறேன். இப்போதும் எழுதுகிறேன். ஒட்டு மொத்த தேச நலன் முக்கியம் என்று கருதினால், இந்த ஐபிஎல் ஐ முழுமையாக தடை செய்ய வேண்டும் அல்லது மிக மிக பெரிய அளவில் வரி விதிக்கவேண்டும். தோனிக்கும், பாலிவூட் நடிகைகளுக்கும் கோடிகளில் அள்ளிக்கொடுப்பது, முறையற்ற வகையில் அதிக விலை கொடுத்து நாம் வாங்கும் பொருட்கள் மூலம்தான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த கொள்ளையால் தனி மனிதர்கள் சிலர்தான் கோடிகளில் புரள்கிறார்களே தவிர, அடிப்படை கட்டமைப்புகளில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. இவை எல்லாவற்றையும் விட பயமுறுத்தும் விஷயம், மாணவர்களின் படிப்பு, அவர்களின் ஆரோக்கியம், மற்றும் பந்தயப்பிடிப்பு சம்மந்தப்பட்ட சூதாட்டம் ஆகியவை. ஒரு சாராரின் அழிவில் மற்ற சிலர் வாழ்வதை ஏற்கமுடியாது. ஐபிஎல் முழுக்க முழுக்க ஒரு வியாபாரமே. அதனிடம் வரி வசூலிக்க அரசாங்கத்திற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. 
by Michael,Singapore,Singapore    17-04-2010 10:10:05 IST
 விளையாட்டு வியாபாரமாகி பலநாட்களாகி விட்டது.இந்நிலையில் நாம் நம் வேலைகளை விட்டுவிட்டு அதற்கு ஆதரவு தந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம். வியாபாரம் என்று வந்தபின் ஊழல்,கருப்புப்பணம்,ஆள்கடத்தல் ,மிரட்டல் எல்லாம் தான் இருக்கும். ஒரு பொழுது போக்கான விஷயம் கடும் விஷமாகிகொண்டிருக்கிறது.தவறு நம் கையில் தான் உள்ளது,தீர்வும் நம் கையில்தான் உள்ளது.  
by v saravanakumaar,singapore,Singapore    17-04-2010 10:05:44 IST
 Dear Sir, Al ready our country is affected/infected like a cancer decease, by our politicians, cinestars, and communal caste etc. These cricket stars are spoiling the present and next generation, it is also an another incurreable cancer decease. At the time of examinations only for few people to earn money, millions of people parents, teachers and childrens are the victims. The parents and teachers know the pain and price of this decease immediately, presnet generation and future geneartion will realise after 10 to 15 years, how they were spoiled their lives. I am considering only the poor people of the society, not the rich glass. Lalith Modi, cine star Saarook, Reliance Ambani, and Shilppa sheety, Vijay Malliya does not have a proplem for their liveli hood, and their future generation also. But they are spoiling millions of childrens life,.and millions of future ' Dr. A.P.J. ABDHUL KALAMS'. and his dreams. How we can proud to be Indian in future.?????????????. WITHOUT AN ABDHUL KALAM.... WILL YOU PROOUD..........TO BE AN INDIAN .................?????????? These CRICKET guys are not having vision about India. I rembember a POETRY which was written by MAHAKAVI BHARATHI , 'NANJU PORRUKUTHILLIAA, ENTHA NILAI KETTA MANITHARKALI NINITHUVITTAL'.. IN Criket who is fool means only the spectators are fool. rest of them are paid.Spectatros are only not paid and wasted their money and life. Time is iirrecoverable. ;TIME IS GOLD AIM IS EYE. ONCE LOST OF TIME YOU AND ME NEVER GET BACK. IT SHOULD BE STOPPED, STOPPED, AT ANY COST. BECAUSE IT IS A CANCER IN THE SOCIETY. NO DIFFERENCE IN AGE, SEX CASTE, RELIGION. GOVT, MEDIA , AND VISIONARY LEADERS SHOULD STOP THIS DECEASE, STOP STOP. Jai Hindh.  
by C subramaniam,coimbatore,India,India    17-04-2010 10:00:59 IST
 போங்கடா போகத்த பசங்கள .......நீங்களும் எத்தன ரைடு டா போவங்க .......எதையாவது நீங்க மக்களுக்கு சொல்லிருகீங்களா ........நீங்களும் உங்க ரைடும ........கொண்டு போய் குப்பைல போடுங்கப்பா  
by S புஷ்பாராகவன்,chennai,India    17-04-2010 09:55:56 IST
 மக்களே இந்த பசங்க நம்மள வைச்சு காமெடி கிமெடி பண்ணலையே? இதை என்னனு சொல்ல, எப்படி சொல்ல யார் கிட்ட சொல்ல. நாளைக்கு நம்மள லூசு பசங்க பண்ணிடுவாங்க. அதனால் எல்லாரும் வெட்டியா எழுதமா வேலையா பார்போம் okva ????? 
by P பேச்சு சிங்கம்,Sharjah,UnitedArabEmirates    17-04-2010 09:30:42 IST
 சும்மா இந்த ஐ டி தேபர்த்மேன்ட் சீன் போடுது . உண்மையில் ஐ டி தேபர்த்ய்மென்ட் பணம் கேட்டு பேரம் பேசியிருக்கும் .அதற்கு அவர்கள் தர மாட்டேன் நு சொல்லி இருப்பார்கள் . உடனே அவர்கள் பிரஸ் மீட் போட்டு சும்மா சீன் போடு கிறார் கள் .உண்மையில் லே ஐ டி தேபர்த்மேன்ட் வொர்க் பண்ணுனா முதல் வருடம் ஐ பீ ல் நடக்கும் போதே நடவடிக்கை எடுத்து இருக்கணும் . பிராடு ஐ டி தேபர்த்மேன்ட்  
by prabhu,chennai,India    17-04-2010 09:25:20 IST
 டோனி,யுவராஜ்,செஹ்வாக், யூசுப் பதான் ,தினேஷ் கார்த்திக்....சோபிக்கவில்லை வெஸ்ட் இண்டீஸ் நடக்கவிருக்கும் உலககோப்பை இந்திய கதி என்னவாகும். அதை யூசிபதை விட்டுவிட்டு வருமானவரி அது இது என்று புரியதவர்தைகளை சொன்னால் நாங்கள் இப்ல் பார்ப்பதை நிறுத்திவிடுவோம என்ன. 
by mvk பசுபதி,muscat,Oman    17-04-2010 09:18:44 IST
 இதெல்லாம் ஒரு கண்துடைப்பு வாழ்க பாரதம் வளர்க லஞ்சம்  
by p mokkasamy,sivaganga,India    17-04-2010 09:18:38 IST
 கோடிகள் புரளும் I .P.L. போட்டிகளை தடை செய்ய வேண்டும் . 
by A.M. SALIH,Dubai,UnitedArabEmirates    17-04-2010 08:56:08 IST
 எல்லா விஷயத்திலும் ஏமாத்து வேலை இதில கேக்கவா வேணும். இந்திய கிரிக்கெட் போர்டு பவார் கையில. அவர் மத்திய அமைச்சர். இ.பி.எல். அணிகள் எல்லாவற்றிலும் முக்கியப் புள்ளிகள்தான் உள்ளனர். இவர்களை தொடவா முடியும். சென்னை அணி மஞ்சள் துண்டாரின் பினாமி. மூச். பேசப்படாது. இந்திய மக்களே நீங்க எப்போதான் திருந்த்போறிங்க. 
by GK SIVRAMKRISHNAN,DUBAI,UnitedArabEmirates    17-04-2010 08:36:53 IST
 This is a good move by the central government for whatever be the reason. We people don''t care about IPL is running for 5000Cr or 5 lakh crores.. As long as IPL and their players file their taxes correctly, we don''t care for anything.. It''ll be a very good income. Try to put everything under taxable and collect money from everyone. Right now, BCCI and IPL not coming under IT in many areas as per the news. Highly appreciate if they put huge money as tax as well as make sure that terrorists or under-ground goondas not invest money in IPL.  
by R தமிழ்செல்வன்,NewYork,UnitedStates    17-04-2010 08:20:33 IST
 இந்தியாவில் போலிஸ், சிபிஐ, மற்றும் அரசாங்க அங்கங்கள் ஆட்சியாளர்களின் வேட்டை நாய்கள். இவைகள் எல்லாம் தனது விரோதிகளுக்கு எதிராக ஏவப்படும் அஸ்திரங்கள். இவர்களுக்கு ஒரு லட்சம் கோடி சுவிஸ்க்கு போவது தெரியாது; ஆனால் ஒன்னரை அனா தன் அரசியல் அல்லது தொழில் எதிரிகலால் ஆட்டையை போட பார்த்தால் பாய்ந்து எழுவார்கள். மொத்தத்தில் எவனுக்கு அதிகாரம் இருக்கோ அவன் டான்ஸ் ஆடறான். நீதியோ நேர்மையோ இல்லை இங்கு. இப்படி இருந்தால் எப்படி உருப்படும் நாடு. வெளி நாட்டில் தங்கி இருக்கும் இந்தியர்களுக்கு நம் நாட்டில் நடக்கும் நிகழ்சிகள் எல்லாம் அருவருப்பை தருகிறது; ஏன் என்றால் இது போன்ற வரம்பு மீறல், ஊழல், போலிஸ் அத்து மீறல், பொது மக்களின் சொத்துக்கும் உயிருக்கும் பாதுகாப்பின்மை போன்ற காலித்தனங்கள் இங்கு இல்லை.  
by N ஜியாங் ,wuxi,China    17-04-2010 08:09:06 IST
 IPL is grosly abused. In a country where an ordinary citizen earns less than $2 per day, these showy players are paid millions for a few hour job. This needs o be condemned.MS Dhoni was paid a huge sum but his performance is dismal. Better he returns the money. IPL is day light robbery.  
by S Md,Kayalpatnam,India    17-04-2010 07:14:22 IST
 இதெல்லாம் கண் துடைய்ப்பு. ஒரு மிடில் கிளாஸ் மனிதன் ஒரு பத்தாயிரம் வருமான வரி கட்டவில்லை என்றல் போலீஸ் ,கோர்ட் ,ஜெயில் என்று நாறடித்து விடுவார்கள் .சசிதரூர் அல்லது IPL பக்கம் வருமான வரி அதிகாரிகள் நெருங்க கூட முடியாது.வாழ்க பாரதம் .வளர்க லஞ்சம் .......  
by s sundar,namakkal,India    17-04-2010 07:10:54 IST
 இதெல்லாம் கண் துடைய்ப்புங்க! பெரிய பெட்டி மாரினா விஷயம் முடிஞ்சு விடும். இதெல்லாம் இந்தியாவின் முத்திரைகள்! நாய் வாலை நிமிர்த்த முடியுமா!  
by Murugan,NewYork,UnitedStates    17-04-2010 04:17:03 IST
 வருமான வரி துறையினர் இப்பவாது நடவடிக்கை எடுக்கிறார்களே என்று திருப்தி பட்டுகொள்ள வேண்டியதுதான். எவளோ பணம் புழங்குகின்றது இந்த I. P. L போட்டிகளில். 
by M சந்திரன்,Thanjavur,India    17-04-2010 03:49:57 IST
 At last Income Tax dept has woken up. How about the other 8 teams. What are the investments on the 8 teams and what is the income they get out of it. Where did they get the money for investing. Is proper tax been paid for investment money and income ?. Its a shame cricket is a fools game and millions are foolled. Even BCCI should be investigated by CBI. All should players should be monitored for prompt income tax. Last but not least but again our cine personnals also dont show proper accounts for Income tax. 
by J மோசேஸ்,London,UnitedKingdom    17-04-2010 03:14:33 IST
 நான் அன்னிக்கே சொன்னேன். இவனுகள் புடிச்சு ரூம்க்குள்ள போட்டு நொங்கு நொங்குன்னு நொங்கி எடுங்கடா. ரொம்ப சந்தேகமா இருக்கு. ஆரம்பிச்சு ஒரே வருசத்தில ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடின்னு பேசுறானுக. பணம் ரொம்ப புழங்குது. சந்தேகம் வருதுன்னு. இப்போ கூட எனக்கு நம்பிக்கை இல்ல. நம்ம அரசாங்கம் இது மாறி பல கிடுக்கப்பிடி போட்டு இருக்காங்க. ஒரே மாசத்தில குற்றவாளிங்க எல்லாம் ஏதோ சிலுக்கு பிடி போட்ட மாறி பல்லை இளிச்சுகிட்டே வெளிய வராத பாத்தாச்சு. நிஜமாவே உருபடர நாடா இருந்தா ஸ்விஸ் பேங்க்-ல இவளோ பணம் சேரும் போதே எதாச்சும் பண்ணி இந்நேரம் உருப்பட்டு இருப்போம். 5000 கோடி அடிச்ச சத்யம் ராஜுவே நல்லா இருக்கிறப்போ, 18000 கோடி பேசுற இவனுக எல்லாம் நல்லாவே இருப்பானுக.  
by k கைப்புள்ள,nj,India    17-04-2010 02:57:20 IST
 முதலில் இந்த அபாயகரமான சூதாட்டத்தை தடை செய்யவேண்டும். முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும். பெரும்பாலான கிரிக்கெட் பைத்தியங்கள் இதை எதிர்க்கலாம். ஆனால் குதிரைப் பந்தையங்களை தடை செய்த நம்முடைய அரசு இது போன்ற சூதாட்டங்களை அனுமதித்தது வேதனையளிப்பதாக உள்ளது. 
by m பாலமுருகன்,plano,UnitedStates    17-04-2010 02:42:40 IST
 இது போன்ற பல ரெய்டுகளை நம் கண்டாகிவிட்டது. ஒரு பிரச்சணை விசுரூபம் எடுக்கும் பொழுது அதனை திசை திருப்பும் ஒரு கருவியாகத்தான் இது போன்ற ரெய்டு நாடகங்களை நம் அரசுகள் காலகாலமாக அரங்கேற்றி வருகின்றது. அன்று திமுகவை மிரட்ட ராசா அலுவலகத்திலும் இன்று சசிதரூர் பிரச்சணையினை திசை திருப்ப ஐபிஎல் அலுவலகத்திலும் இந்த ரெய்டு நாடகங்களை மத்திய அரசு நடத்திக்காட்டியுள்ளது.  
by M Amanullah,Dubai,UnitedArabEmirates    17-04-2010 00:09:52 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்