முதல் பக்க செய்திகள் 

டில்லி, ஆமதாபாத் நகரில் குண்டு வைத்தவர்கள் சுட்டுக் கொலை! : அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்ட போது சிக்கினர்
செப்டம்பர் 20,2008,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : ஆமதாபாத் மற்றும் டில்லி தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான இருவர், டில்லியில் போலீசாருடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். ஒருவன் துப்பாக்கிக் குண்டுகாயத்துடன் பிடிபட்டான்; இருவர் தப்பி விட்டனர். ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் 77 பேரும், டில்லி தொடர் குண்டு வெடிப்பில் 24 பேரும் கொல்லப்பட்டனர். ஆமதாபாத் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி அபு பஷாரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. டில்லி தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைக்காக அபு பஷார், டில்லிக்கு கொண்டு வரப்பட்டான்.



"ஹுஜி' என்று அழைக்கப்படும் ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமியா என்ற அமைப்பு மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பயங்கரவாதிகள் இணைந்து, ஆமதாபாத் மற்றும் டில்லியில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள், தென்டில்லியில் உள்ள ஜமியா நகரில் ஒளிந்திருப்பதை அபு பஷார் தெரிவித்தான்.



போலீஸ் குவிப்பு: இந்த வீட்டில் முகமது உஸ்மான் குரேஷி என்ற தவுகீருடன் தங்கியிருந்ததாக அபு பஷார் தெரிவித்து இருந்தான். அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட வாய்ப்பு உள்ளது என்ற தகவலும், பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கடந்த வியாழக்கிழமை முதலே அப்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. குண்டு வெடிப்பு கும்பலின் மூளையாகச் செயல்பட்ட அடிக், ஜமியா நகரில் இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். பயங்கரவாதிகளைப் பிடிக்க, போலீஸ் சிறப்பு பிரிவுக் குழுவினர் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா தலைமையில் நேற்று காலை 9 மணிக்குச் சென்றனர். தேசிய பாதுகாப்புப் படையினரும் அவர்களுக்கு உதவியாகச் சென்றனர். வீட்டை அடையாளம் காட்டுவதற்காக அபு பஷாரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டான். பாதுகாப்புக்காக அப்பகுதியில் 150 சாதாரண உடை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.



துப்பாக்கிச் சண்டை: மசூதி அருகே, பாட்டியா அவுஸ், எண். எல்-18 என்ற முகவரியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க வீட்டை உடைத்து உள்ளே புக, போலீசார் முடிவு செய்தனர். இதை அறிந்த பயங்கரவாதிகள், போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்பகுதியில் மக்கள் கூடிவிட்டனர். பயமும் பீதியும் காணப்பட்டது. அந்த வீட்டுக்குள், ஐந்து பேர் இருந்தனர். துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த ஒருவன் தப்பி ஓடும்போது பிடிபட்டான். இரண்டு பேர் தப்பிவிட்டனர். அந்த வீட்டில் ஏ.கே. 47 துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள், சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்ட டைரிகள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் ஒருவன், அடிக் என்ற பஷீர் என்றும், அவனுக்கு தடை செய்யப்பட்ட "சிமி' இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததுள்ளது. கொல்லப்பட்ட இன்னொருவன் பக்ருதீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பிடிபட்டவன் அடையாளம் தெரியாத இடத்துக்கு, விசாரணைக்காக போலீசாரால் கொண்டு செல்லப்பட்டான். துப்பாக்கிச் சண்டையில், இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவுக்கு வயிற்றில் குண்டு துளைத்தது. கவலைக்கிடமான நிலையில் அவருக்கு ஹோலி பேமிலி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சண்டையில் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவரும் காயமடைந்தார். இவர் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த போது, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், போலீஸ் தலைமையகத்தில் இருந்தார். அவரிடம் அனைத்தும் விளக்கப்பட்டது. சிறப்பு போலீஸ் பிரிவினரை சிவராஜ் பாட்டீல் பாராட்டினார். "சிறப்பான காரியத்தை செய்து முடித்துள்ளனர்' என்று குறிப்பிட்டார்.



ஜமியா நகர் மக்கள் ஆவேசம் : ஜமியா நகரில் போலீசார் நடத்திய ஆபரேஷன் போது, மசூதி சேதப்படுத்தப்பட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியதை அடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. குண்டு வைத்திருந்தவர்கள் ஒளிந்திருந்த வீடு, ஒரு மசூதிக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச் சண்டை துவங்கியதும், அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். மத கோஷங்கள் எழுப்பினர். "நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள். அப்படிப்பட்ட நிலையில், எங்கள் மதவழிபாட்டு தலத்தை குறிவைத்தது ஏன்?' என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பதிலாக துணைக் கமிஷனர் தாலிவால், "மதவழிபாட்டு இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தான் தாக்குதல் நடத்தப்பட்டது' என்று விளக்கினார். திடீரென்று பரவிய வதந்தி தான் மக்களின் கோபத்துக்கு காரணம் என்று பின்னர் தெரியவந்ததது. கோபத்தில் இருந்த அப்பகுதி மக்கள், பத்திரிகையாளர்களையும் ஆவேசமாக திட்டினர்.



ஐந்து பேர் கைது : ஜமியா நகரை சேர்ந்த சந்தேகத்துக்குரிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களில் தப்பி ஓடியதாக கருதப்பட்ட பயங்கரவாதிகள் இல்லை. குண்டு வைத்தவர்கள் தங்குவதற்காக வீடு கொடுத்த, அதன் உரிமையாளர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வீட்டில் ஒரு மாதத்துக்கு அதிகமாக பலர் தங்கி இருந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தும் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் பற்றி குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்