முதல் பக்க செய்திகள் 

ஆவின் பால் விலை இன்று முதல் உயர்கிறது
செப்டம்பர் 01,2009,00:00  IST

சென்னை : ஆவின் பால் இன்று முதல் விலை உயர்கிறது. இதையடுத்து, தனியார் பால் விலையும், லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, பால் விற்பனை விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஆவின் பால் விலை, இன்று முதல் உயர்த்தப்படுகிறது.தானியங்கி பால் வழங்கும் நிலையத்தில் ஸ்டாண்டர்டைஸ்டு பால் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இங்கு அரை லிட்டர் பாலின் சில்லரை விலை 12 ரூபாயாகவும், கார்டு விலை 10.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனை விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர், தாங்கள் ஏற்கனவே ஆகஸ்ட் - செப்டம்பர் மாத பால் அட்டைக்கு செலுத்திய தொகை போக, வித்தியாசத் தொகையை செலுத்த வேண்டும்.இந்த வித்தியாசத் தொகையை, செப்டம்பர்-அக்டோபர் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்கும்போது சேர்ந்து செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்களது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திற்கான பால் அட்டையை கட்டாயமாக எடுத்து வர வேண்டும்."பொதுமக்கள் எவ்விதமான சிரமமுமின்றி பால் அட்டையை புதுப்பிக்கும்பொழுது, வித்தியாசத்தொகையை செலுத்த சிறப்பு ஏற்பாடுகளை ஆவின் வட்டார அலுவலகங்களிலும் மற்றும் நுகர்வோர் பால் கூட்டுறவு சங்கங்களிலும் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க 24 மணி நேர சேவை பிரிவை 1800-425-3300 (இலவச சேவை) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். aavincomplaints@gmail.com  என்ற இ-மெயில் முகவரியிலும் தெரிவிக்கலாம்' என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனியார் பால் விலையும் உயர்ந்தது: பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் கொள்முதல் விலையைக் கூட்டிக் கொடுத்துள்ளதோடு, விற்பனை விலையையும் உயர்த்தியுள்ளது. இதனால், தனியார் பால் உற்பத்தியாளர்களும் விலையை உயர்த்தி உள்ளனர்.இதன்படி, திருமலா, ஹெரிட்டேஜ், ஜெர்சி உள்ளிட்ட தனியார் பால் உற்பத்தியாளர்கள், லிட்டருக்கு இரண்டு ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தான் தனியார் பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி இருந்தனர்.

ஆவின் பாலுக்கு கிராக்கி: தனியாரும் பால் விலையை உயர்த்திய நிலையில், விற்பனை விலையைப் பொறுத்தவரை ஆவின் பால் தான் குறைவாக உள்ளது. குறிப்பாக பால் கார்டு வாங்குவோருக்கான விலை குறைவாக உள்ளது. இதனால் ஆவின் பாலுக்கான, "கிராக்கி' தொடர்கிறது.

சில்லரை விவகாரம் : ஆவின் பால் வாங்குபவர்களில் மாதந்தோறும் பணம் செலுத்தி, கார்டு மூலமாக பெறுவதில் 60 சதவீத பால் விற்பனையாகிறது; 40 சதவீதம் பால், சில்லரை விற்பனையாகிறது. தற்போதைய பால் விலை உயர்வால் சில்லரை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆவின் பால் வகைகளில் டோன்டு மில்க் தான் அதிகம் விற்பனையாகிறது.  இந்த பாலின் சில்லரை விற்பனை விலை, லிட்டருக்கு 20.50 ஆகவும், அரை லிட்டருக்கு 10.25ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 காசு நாணயம் அதிகமாக புழக்கத்தில் இல்லாத நிலையில், 10.25 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சில்லரை கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆவின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கொள்முதல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்தித் தந்துள்ளதால், அதே அளவு விலையை மட்டும் சில்லரை விற்பனையில் உயர்த்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது' என்றார்.சில்லரை குழப்பத்தை போக்க, அரை லிட்டர் விலையை 25 பைசா குறைத்து 10 ரூபாய் என ஆவின் நிர்வாகம் அறிவித்தால் தேவையற்ற குழப்பமும், சர்ச்சையும் தீரும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்