முதல் பக்க செய்திகள் 

மத்திய அரசு நடவடிக்கைக்கு நக்சல்கள் சவால் : மூன்று மாநிலங்களில் வெறியாட்டம்
அக்டோபர் 13,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : மத்திய அரசின் நடவடிக்கைக்கு சவால் விடுக்கும் வகையில், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நக்சலைட்டுகள் நேற்று வன்முறை வெறியாட்டம் நடத்தினர். வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, ரயில் தண்டவாளங்களையும், தனியார் தொலைத் தொடர்பு நிறுவன டவரையும் தகர்த்தனர்.உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்டுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால், அவர்களை ஒழித்துக் கட்ட மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக, மூன்று மாநிலங்களில் உள்ள ஆறு மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிராக ஒருமித்த நடவடிக்கையை துவக்க வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,300 கோடி ரூபாயை செலவிடவும் திட்டமிட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தின் மூன்று மாவட்டங்களில் இரண்டு நாள் முழு அடைப்புக்கு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். முதல்நாளான நேற்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில், தான்பத் அருகே ஜராந்தி பகுதியில் ரயில் தண்டவாளங்களை குண்டு வைத்து தகர்த்தனர். இதனால், சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டது. எக்ஸ்பிரஸ் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் உட்பட பல ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ராம்கார்க் என்ற இடத்தில் ரயில்வே மின்ஒயர்களை சேதப்படுத்தியதில், முரி மற்றும் பாரககா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதேநேரத்தில், இம்மாநிலத்தில் உள்ள கிரித் மாவட்டத்தில், ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் 12 பேர், மூன்று லாரிகளை தீ வைத்து கொளுத்தினர். சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு தடுப்புகளை ஏற்படுத்தினர். தும்ரி மற்றும் கிராண்ட் டிரங்க் சாலையை இணைக்கும் பாலம் ஒன்றையும் வெடிகுண்டு வைத்து பாதியளவு சேதமடையச் செய்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர். பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் சலய்யா கிராமத்தில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான டவர் ஒன்றை குண்டு வைத்து தகர்த்தனர். அத்துடன் மாவட்டத்தில் உள்ள சந்தா கிராமத்தில், 15 மீட்டர் நீளத்திற்கு, சாலையை தோண்டி சேதம் ஏற்படுத்தினர். இதனால், தியோ மற்றும் திப்ரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன், "இந்தத் தாக்குதல்களுக்கு தாங்களே காரணம்' என, தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களையும் விட்டுச் சென்றனர். இருப்பினும், பீகார் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் முழு அடைப்பிற்கு பாதியளவே ஆதரவு இருந்தது.மேற்கு வங்கத்தில், மித்னாபூர், பான்குரா மற்றும் புரூலியா மாவட்டங்களில் நக்சலைட்டுகளின், "பந்த்' அழைப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பீகார், ஜார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டையும் துவக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து மே.வங்கம் வரையிலும், பீகாரில் இருந்து ஆந்திரா வரையிலும் வளர்ந்திருக்கும் நக்சலைட்டுகளை மூன்று மாநிலத் தேர்தல்களுக்கு பின் மத்திய அரசு அடக்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.இதற்கிடையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 20 மாநிலங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 46 பேர் பலியாகியுள்ளனர். மற்ற பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், இறந்ததை விட, நக்சலைட் நடவடிக்கையில் போலீசார் அதிகம் பேர் பலியாகியுள்ளனர். என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 தும்பைவிட்டு வாழை பிடப்பதே இந்தியாவின் வேலை
இன்சாட் , அக்கினி, போக்கரன் என்று வாய் கிழிந்தாலும்
சீனா இலங்கை பாக்கிஸ்தான் இன்னமும் வாழ் ஆட்ட காரணம் என்ன?
கேவலமான அரசியல் வாதிகள் தான்  
by Raj Jeremiah,Torono,Canada    14-10-2009 00:09:30 IST
 The terrorist and uncivilized naxalites of India are much worse than the uncivilized Talibans, at least in the case of Talibans and Al-Qaeda they are showing their anger on foreign intervention in Pakistan and Afghanistan, but naxalites of our country kill our own innocent people and the uniformed people in cold blood. India has a huge problem in hand, if our Govt uses about 400,000 troops in Kashmir what is the logic behind not using the armed forces to root out the Naxalite threat. Why the different sort of soft treatment?  
by d. dermarasa,chennai,India    13-10-2009 22:08:38 IST
 while one blames BJP for acts of violence by RSS, Bajrangdal,etc why everyone is keeping mum about the communists links with Maoists, naxalites,etc. These having been going on since sixtees but governments kept sleeping and turned blind eye. they have to be crushed like any other terrorist organisation with iron hand, 
by k hariharan,new delhi,India    13-10-2009 18:31:40 IST
 First,take steps to pull down the economical in equalities. Declare Agricultulture as a Traditional Industry, Stop blind globalization which is no way useful to India.
Education must be provided to all.
Naxal can be controlled only by way of developping socio Economic condition of the Solciety. Relieve the society from the hands of Polititians 
by R Sathyanarayanan,Madras,India    13-10-2009 16:26:01 IST
 I WANT MORE DETAILS  
by r.k. VEERAJI,MADURAI,India    13-10-2009 14:10:29 IST
 இந்தியாவில் உள்ள நக்சல் பற்றி ஒரு கட்டுரை வெளியிடவும் தினமலரே?  
by kall kall,riyadh,India    13-10-2009 11:06:38 IST
 Govt should take strict measures to completely eradicate maoist terrorists.  
by v GANESH,Chennai,India    13-10-2009 09:39:16 IST
 They are don''t thinking about public.This is such as a chilly things. 
by M Kanagaraj,Farwaniya,Kuwait    13-10-2009 01:01:51 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்