முதல் பக்க செய்திகள் 

லஞ்ச ஒழிப்புத்துறை சுறுசுறுப்பால் மக்கள் திருப்தி
அக்டோபர் 18,2009,00:00  IST

Front page news and headlines today

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய வேட்டையில் இதுவரை 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயர் பொறுப்பில் இருந்து ஊழல், முறைகேடு செய்த பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்."லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற வாசகம், அரசுத்துறைகள் இயங்கிய காலம் முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், "காசு இல்லையென்றால் காரியம் நடக்காது' என்ற நிலைதான் அரசுத்துறைகளில் தொடரும் அவலம். போலீஸ் துறை, மின் வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, செய்தி மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளன. அரசை சார்ந்தே மக்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தங்களது தேவைகளுக்கு அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.சாதாரண ரேஷன் கார்டு முதல், பெரிய அளவிலான தொழிற்சாலை அனுமதி வரை அனைத்து பைல்களும் தடையின்றி செல்ல லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசில அதிகாரிகளால், அத்துறை சார்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. லஞ்சத்தைத் தடுப்பதற்கு என்றே லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இந்த துறை நடத்திய வேட்டையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவை தவிர, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல், முறைகேடு செய்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.மத்திய, மாநில அரசுகள் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி உள்ளன. அவை தவிர ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப் படுகிறது. "அரசு ஊழியர்கள் காட்டில் மழை' என்று பொதுமக்கள் மூக்கு மீது விரல் வைத்தாலும், இது போதாது எனக் கூறி அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சிலர் மறைமுக லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, லஞ்சம் கேட்கும் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிவிடும் பக்குவத்தை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம், பதவி உயர்வுக்காக மேல் அதிகாரிக்கு கொடுத்த லஞ்சத்தை, மக்களிடம் இருந்து வசூல் செய்து விடலாம் என்ற நோக்கில் கையை நீட்டி மாட்டிக் கொள்வதும், அரசுக்கு வரும் வருவாயை தன் வங்கிக் கணக்கில் சேர்ப்பதாலும் போலீசாரால் கைவிலங்கு பூட்டும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆரம்பத்தில் இருந்ததை விட, லஞ்சம் வாங்குவது தற்போது குறைந்துள்ளது. எங்கள் துறையை பொறுத்தமட்டில் லஞ்சம் வாங்கக்கூடாது என அனைத்து ஊழியர்களிடமும் கூறி வருகிறோம். புரோக்கர்கள் சிலர் வாங்கிக் கொண்டு அதிகாரிகளை சிக்கலில் மாட்டி வைக்கின்றனர். அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சப் புகார் தொடர்பான அறிவிப்பு பலகைகளை வைக்குமாறும் வலியுறுத்தி உள்ளோம். அதிகாரிகள் கேட்டாலும், மக்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும், அவ்வாறு இருந்தால் லஞ்சம் வாங்குவது விரைவில் நின்று விடும். இவ்வாறு அவர் கூறினார்.லஞ்ச ஒழிப்பு வேட்டையில் அரசு தீவிரமாக உள்ளதால், அரசு அலுவலகங்களில் சமீப நாட்களாக லஞ்சம் ஓரளவு குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலை தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.-நமது சிறப்பு நிருபர்-

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 நாம் லஞ்சத்தை ஒழிக்க, அதிக விலைவாசி ஏற்றத்தை தடுக்க வேண்டும்.முதலில் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் எத்தனை பேர் தண்டனை அடைந்தனர் என்ற விபரம் வெளியானால் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தும். அரசு அலுவலகத்தில் எந்த ஒரு வேலையையும் இரண்டு தினங்கல்ளுக்கு மேல் <நிறுத்தினால் அது லஞ்சத்தின் முதல் படிக்கட்டு ஆகும்  
by s செந்தில் குமார்,mettupalayam,India    19-10-2009 00:08:45 IST
 Besides formally displaying the procedure and necessary enclosures to be submitted by public for any govt. work in the notice boards of govt.offices, such office should be made to issue an ACKNOWLEDGEMENT preferably generated by Computer to the Public immediately on receipt of an Application with due information about the D.R. No ,seat ref like A1 . A2 who is likely to deal., likely time by which the Enquiry by govt official eg. between 2-4 on such and such date , the likely time by which govt. certificate is likely to be issued ie. how many days ; the official whom to contact in case of non receipt of certificate whom to complain in case of harrasement should be printed. Even if it takes some time, It should be done. One may not be able to get such information if he sends thro REGD. POST. By this Acknowledgement system one is sure that the application is prima faci in order and find it easy to follow it up.
 
by s vijayagopal,chennai,India    18-10-2009 21:05:46 IST
 அதிகாரிகள் மட்டும்தான் லஞ்சம் வாங்குகிறார்களா? அமைச்சர்கள் (பெரிய மீன்கள்) வாங்கவில்லையா? அவர்களை யார் கைது செய்வது? பாவம்! பலிக்கடாவாகும் அதிகாரிகள் (சின்ன மீன்கள்).
 
by Mr yila,Nellai,India    18-10-2009 20:01:49 IST
 இப்படி மாட்டுகிற இவனுங்களுக்கும் இவளுகளுக்கும் எல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என மக்கள் தெரிய வேண்டியது ரொம்ப முக்கியம்! They will go scot-free perhaps, ironically, greasing the palms of the law enforcement. But honestly I believe we see light shimmering at the end of the tunnel. How long the tunnel is going to be a question! 
by s Mathew,Toronto,Canada    18-10-2009 18:08:28 IST
 Haven''t you heard of the old saying in Indian Customs. If they nab a person with a thousand rupees haul, they let go a crore some other side to satisfy the money needs of politcian to the last rung employee of the govt.

வெறும் கண் துடைபோ. Dont cheat yourself citizens.

God Bless India. 
by s ரவி,chennai,India    18-10-2009 17:25:39 IST
 We cant avoid corruption until Each and Every Government EMPLOYEES not realized their mistake Hope this stiuation force them to realize - I really proud or Vigilance Department work.. Please Keep it Up ''Vigilance Department '' - Kill the Corruption then we are the Number One state in India and we are the Number One Country in the World. 
by J ஞானமுருகன்,Madurai,India    18-10-2009 15:44:19 IST
 We cant avoid corruption until Each and Every Government EMPLOYEES not realized their mistake Hope this stiuation force them to realize - I really proud or Vigilance Department work.. Please Keep it Up ''Vigilance Department '' - Kill the Corruption then we are the Number One state in India and we are the Number One Country in the World. 
by J ஞானமுருகன்,Madurai,India    18-10-2009 15:24:44 IST
 Everyday news come about one or two govt. officials are being booked by Anti corruption police. But still new and newer cases are booked. So the news about booking the case is not detterent. The news about the stage of the cases in the court as well as the sentence in the court whether charges proved / sentenced with dismissals also should be promotly reported. Then only it woud prove to be detterent. A minister who pleaded the case of an EB engineer got her minister post again. The Engineer would also have been let off. There is also suspicion againt the booking police who first weigh the weight of the complainant as also the culprits. There was also a news in Dinamalar some times back about police not taking any action for months despite filing of complaints. There is also a rumour that the recently booked Passport official is being tipped for a dif and higher post in some other dept thanks to her political clout. Would the Police specially chosen to be non partisan on any consideration be given full freedom in dealing with the case ? Only then people could be really happy ! 
by s vijayagopal,chennai,India    18-10-2009 15:09:31 IST
 யாராவது நேர்மையுடன் வேலை செய்தால் அவர்களை தட்டி வைப்பதில் திமுக அரசு பொறுப்புடன் உடனே செயல் படும். கூடுதல் டி ஜி பி ராமனுஜத்தை போலோநாத் கொண்டு தட்டி வித்தகி விட்டது. இனி அவரால் சுதந்திரமாக செயல் பட முடியாது, மதுரை எஸ் பி அம்மா எஸ்கேப் ஆகியாச்சு, அப்புறம் எவன் உண்மையாக வேலை பார்ப்பான்?  
by MR Bala,India,India    18-10-2009 13:20:25 IST
 ''லஞ்சம் வாங்கும் இந்த அரசு அதிகாரிகளை ஒடனே வேலைய விட்டு துக்கவேண்டும் ''.அப்பொழுதுதான் இந்த லஞ்சம் வாங்கும் கயவர்கள் திருந்துவார்கள் .இப்படி லஞ்சம் வாங்குவதை விட பிச்சை எடுப்பது மேல் . 
by h akbar,united arab emirates,India    18-10-2009 12:17:59 IST
 ஒரு முறை(1998-99) நான் வருமான சான்று வாங்க சென்ற பொழுது R.I அவர் ஒரு பெண்மணி , என்னிடம் 20 RS (லாஞ்சமாக) கேட்டார், நான் எதற்காக பணம் என்றேன் அவர் ஸ்டாம்ப் ஓட்டனும் என்றார் நான் எல்லாவற்றையும் சரியாக செய்த பின்னரும் அவர் என்னிடம் சொன்னது இது தான் . ''பணத்தை கொடு, CERTIFICATE ஐ எடு. அன்று எனக்கு லஞ்ச ஒழிப்பு தொலைபேசி என் தெரியாததால் விட்டு விட்டேன். ஆகவே ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையின் தொலைபேசி என் இருப்பது அவசியம்  
by KITTU MAMA,IND,India    18-10-2009 11:30:33 IST
 லஞ்சம் வாங்குபவனை கைது செய்து அவன் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.  
by shafi ஷபிய் அஹ்மத் கான்,chennai,India    18-10-2009 11:19:26 IST
 அரசாங்க அலுவலகம் ஒவ்வொன்றிலும் தேவையான aavanangal matrum fees vibarangal vilambarap palagaiyil therivikka vendum.
Lancham kettal therivikka vendiya telephone numbers, complaints box irukka vendum.
 
by V மோகன்,Dubai,India    18-10-2009 10:27:14 IST
 Corruption cannot be eliminated completely, only it can be reduced, until every people is honest. Moral discipline shall start from home, school, college, etc. Political and Business systems need to change. More transparent procedures with the honest judicial system is a must in any country to implement and punish the culprints. Public in general shall not elect corrupt and immoral people to public offices. Only God can help India and everybody. 
by T RAMADOSS,Fremont, California,United States    18-10-2009 10:14:29 IST
 The main reason behind bribery is we common people. b''coz we people are lazy , dont want to waste time in doing our own job,we dont want to follow the proper procedure , this is taken as advantage by the brokers and govt officials. 
by g ஜாய்,chennai,India    18-10-2009 07:49:00 IST
 முதலாவதாக அரசாங்க அலுவலகத்தில் ஆரம்பம் முதல் முடுவுவரை என்ன என்ன செய்யவேண்டும் யார் அதற்க்கு பொறுப்பான நபர்கள் அந்த வேலைக்கான அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பதை ஓர் விளம்பர பலகையில் வெளியே தெரியும்படி வைத்தால் அனைவரும் அதை பின்பற்றினால் மற்றதை எல்லாம் தானாகவே நடக்கும்
மேலும் அந்த வேலைக்கு என்ன என்ன இணைக்கப்படவேண்டும் என்பதயும் தெளிவாகா குறிப்பிட்டால் மேலும் வேலை சுலபம் ஆக முடியுமே. சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வார்ர்களா...?  
by V.L Kanthan,Chennai,India    18-10-2009 07:30:53 IST
 அரசு ஊழியர்களின் சம்பளம் விண்ணை முட்டுதிறது. இருந்தபோதும் வாங்கி வாங்கி பழகிய கை சும்மா இருக்குமா. மாட்டியவர்கலேல்லாம் ஜாதி மதம் அடிப்படையில் ஒதுங்க பார்ப்பது தான் வேதனை.  
by m ravi,madurai,India    18-10-2009 07:17:57 IST
 Grasing the palms of government employees (smaller acdre or higher) is almsot an accepted official process in India - not just in Tamilnadu alone. In this process India has attained the infamous recognition of being very cl;ose to the top, in the world. The officials can claim that they are cleaning up or it has already been cleaned up and so on. But the facts of the situation is known to all living there.
If the efforts to clean up this disgraceful attitude and process is not accelerated and continued further, the disease of the Indian community will kill the whole spirit and lives of Indian people 
by R.G. Smith,Madurai,India    18-10-2009 04:38:25 IST
 லஞ்சம் வாங்குவது, கொடுப்பது குற்றம். அப்படி கொடுக்கவில்லை என்றால் தான் செய்யவேண்டிய வேலையை செய்ய முடியாது என்று நம்மை திருப்பி அனுப்பும் அதிகாரி பன்றியை என்ன செய்ய?  
by H சையது ,London,United Kingdom    18-10-2009 01:52:20 IST
 the efficient way to avoid bribery is to do the following in all govt offices.
compulsarily put boards ( from a to z )from where to start , to whom to ask, how many days to finish the work, current status of our file ( via internet - in which section,who is responsibility ) what is the exact fees? if there is any doubts ? or any complaints - to whom to complain or clarify ?
in additional to this, action against these corrupted employees must be severe.
such as complete dismissal from his service, total recovery of his/her assets/ also from their close relatives, no pension / graduities , or any other beneficiaries from govt through any ways ( no reservations for their sons and daughters) etc.., should make them to think before they get bribes 
by s ஆகாய புத்திரன்,pondicherry,India    18-10-2009 00:53:27 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்