முதல் பக்க செய்திகள் 

இன்னும் 5 ஆண்டுகளில் இவர் கனவு நனவாகுமா ? இவர், இப்படி...
அக்டோபர் 27,2009,00:00  IST

டைம் பத்திரிகை 2009ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் துறையில் சாதித்த ஹீரோக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுலப் சர்வதேச சமூக சேவை கழகத்தின் நிறுவனர் பிந்தேஸ்வர் பதக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது. மிக குறைந்த செலவில், சுகாதாரமான கழிப்பறைகளை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் இவர்.மேலும், போதிய சுகாதார வசதிகள் இல்லாத கிராமங்கள், குடிசைப் பகுதிகளிலும் இந்த கழிப்பறைகளை, தனது சுலப் அறக்கட்டளை அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொடுத்து வருகிறார். இவரது தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கழிப்பறைகளை நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் வசிக்கும் கழிப்பறை வசதி இல்லாத மக்கள் மற்றும் வீடுகள் இல்லாத மக்களின் வசதிக்காக முக்கிய நகரங்களில் 5,500 பொதுக் கழிப்பறை வளாகங்கள், இவர் உருவாக்கி கொடுத்த தொழில் நுட்பத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து மக்களும் சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாவதற்கு, இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட அனுபவமே காரணம்.பதக் ஆறு வயது சிறுவனாக இருக்கும் போது, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளியை தொட்டு விட்டார். இதைக் கவனித்த அவரது பாட்டி, புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி, கங்கை நீரால் அவரை குளிப் பாட்டினார். பாட்டியின் இந்த செயல், பதக்கின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனால், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என, உறுதி கொண்டார். இந்த உறுதி தான், பின்னால் செயல்வடிவம் எடுத்தது. சுகாதாரமற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதக், அந்த பகுதிகளில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "சமூகத்தில் யாருக்காவது பாடுபட வேண்டும் என, நினைத்தால், அவர்கள் பிரச்னைகளை முதலில் அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும்' என்றார்.தற்போது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் கூட, 11 கோடி வீடுகளில் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை. அதேபோல், பயன்படுத்தப்படும் தண்ணீரில், 75 சதவீதம் சுகாதாரமற்றதாகவும் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் குழந்தைகள் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால், நோய்கள் ஏற்பட்டு பரிதாபமாக மரணம் அடைகின்றன. கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சட்ட விரோதம் என, கடந்த 1993ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அந்த தொழிலை இன்னும் செய்து வருகின்றனர். இதுபோன்ற அவலங்களை தடுக்க வேண்டும் என்ற உறுதி கொண்டவர் பதக். இதுகுறித்து, அவர்,"இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அரசு நினைத்தால், ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்'என கூறியுள்ளார்.                                                                                                - நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 எனது ஊரில் கழிப்பறைகளை அமைக்க விரும்புகிறேன்  
by u karuppaiyan,chennai,India    27-10-2009 16:16:20 IST
 I accept Mr.Vengis Suggestion. I add costwise design also.
Mr.Pathaks works are really great. 
by m senthil,tricy,India    27-10-2009 11:51:59 IST
 Great Man, Keep Going...... 
by S Dhana,pune,India    27-10-2009 11:50:06 IST
 the idea mooted by mr pathak is laudable and many have been benifited,.i solute him!
regarding mr sundar''s,point of maintenance, it is a localised problem! at the same time, people who use the facility especialy in the mofusil also to be blamed?they do not flush[even if water is there]. spit evrywhere and make it dirty unusable!one man sitting to collect fee, can not monitor so many users!let us develop self discipline and higene ourselves before blaming anybody!
natarajan
by gk natarajan,chennai,India    27-10-2009 11:08:01 IST
 Congrats Sir..!!!! All the best for your future plans..!!!

But this government wont take any step... Like you still lot people have to come..!!!!

God has to save us..!!!! 
by M Chandru,Chennai,India    27-10-2009 10:53:50 IST
 Mr. Pathak''s intention may be good. But if you see the toilets maintained by the sulabh international in Trichy central bus stand, it is just horrible. They are charging abnormally to the users for such a poor service. I am not sure about the other cities.

Now Sulabh international is maintining these toilets in business motive that too with worst service. Let him first fix the service problem for the same usage cost. 
by K Sundar,Chennai,India    27-10-2009 09:09:46 IST
 இலவச தொலைக்கட்சி கொடுத்து மக்களை சோம்பேறியாக்கும் தமிழக அரசு கழிப்பறை வசதி இல்லாத ஏழை எளிய மக்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து கொடுத்து தமிழகத்தை ஒரு சுகதரமான மாநிலம் ஆக்கிட வேண்டும். 
by R Parthi,Hyderabad,India    27-10-2009 07:32:56 IST
  ur the great man !!
And great news also...
by,raja/from usa. 
by T.K raja kumar,pharma..,United States    27-10-2009 07:31:43 IST
 சுகாதாரமான கழிப்பறை அமைப்பது பற்றிய தொழில்நுட்பம் குறித்த விளக்கமான கட்டுரையை வெளியிட்டால் அதைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம். சுத்தமில்லாததுதான் தீண்டாமையில் முக்கிய காரணமாக இருக்கிறது. 
by வெங்கி,Thiruvarur,India    27-10-2009 05:41:53 IST
 Sulabh interational efforts is very much appreciatable. I have seen this running public toilets/amenities successfully in places like Mumbai. 
by C Suresh,Pennsylvania,United States    27-10-2009 05:26:47 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்