முதல் பக்க செய்திகள் 

போலீசார் ஒத்துழைப்புடன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் ஜோர்!
அக்டோபர் 28,2009,00:00  IST

Front page news and headlines today

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து, கோவை வழியே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது மீண்டும் அதிகரித் துள்ளது. கடத்தல்காரர்களுடன் கைகோர்த்திருக் கும் ரேஷன் கடை ஊழியர்கள், கடத்தலுக்கு ஆசி வழங்கும் மாமூல் போலீசாரை களையெடுத்தால் மட்டுமே, அரிசி கடத் தலை கட்டுப்படுத்த முடியும்.கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்கள் உள்ளன. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், உணவுப்பொருள் கடத் தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வழங்கல் துறையின் பறக்கும் படையினர் அவ்வப்போது ரெய்டு நடத்தி அரிசி மூட்டைகளுடன் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர். இதனால், ரேஷன் அரிசி கடத் தல், ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. தற்போது, மீண் டும் அதிகரிக்க துவங்கியுள் ளது; இதற்கு, ரேஷன் கடை ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் துணை போவதே காரணம். கார்டுகளுக்கு வழங்கப்படாமல் கடையில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கிலோ ஒரு ரூபாய் ரேஷன் அரிசியை, கிலோ மூன்று ரூபாய்க்கு ஏஜன்ட்களுக்கு கள்ளத்தனமாக விற்கின்றனர். இதனால், கார்டுதாரர்களுக்கு மாதம் தோறும் முறையாக அரிசி கிடைப்பதில்லை.ரேஷன் கடைகளில் சட்டவிரோதமாக வாங் கும் அரிசி மூட்டைகளை, ஏஜன்ட்கள், ஏதாவது ஒரு இடத்தில் பதுக்கி வைக் கின்றனர். இப்படியாக 100, 200 மூட்டைகள் சேர்ந்ததும், அவற்றை 50 கிலோ மூட்டைகளாக மாற்றி வாகனங்களில் ஏற்றி, கேரளாவுக்கு கடத்துகின்றனர். போலீசாரின் கெடுபிடி அதிகரிக்கும் போது, பஸ் மற்றும் ரயில்கள் மூலமாக கடத்தல் வழிமுறைகளை தொடர்கின்றனர். கோவையில் இருந்து வாளையார், வேலந்தாவளம் செல்லும் பஸ்களில் அதிகளவில் அரிசி கடத்தல் நடக்கிறது. "மூட்டையில் என்ன கொண்டு செல்லப்படுகிறது'என்பதை அறியாத கண் டக்டர்கள், " லக்கேஜ்' கட் டணம் வசூலித்துக் கொள் கின்றனர். இந்த மூட்டைகள், கேரளா மாநில எல் லைக்குள் நுழைந்தவுடன், எவ்வித பிரச்னையும் இல் லாமல், அங்குள்ள புரோக் கர்கள் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். சில பஸ் கண்டக்டர்களுக்கு, ரேஷன் அரிசி கடத் தப்படுவது தெரிந்தாலும், கேள்வி எழுப்புவதில்லை. அவர்களில் சிலருக்கு "கமிஷன்' போய்ச் சேருவதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. பஸ்சில் ரேஷன் அரிசி கடத்துவோரில் பலரும் பெண்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.ரேஷன் அரிசியை பஸ் சில் கடத்துவது ஒரு புறம் நடந்தாலும், கோவை நகரில் வசிக்கும் வியாபாரிகள் சிலர், ரேஷன் கடை ஊழியர்களோடு தொடர்பு வைத்து, அரிசியை தங்க ளது வாகனங்களில் கடத்துகின்றனர். ரேஷன் கடைகளில் இருந்து கள்ளத்தனமாக வாங்கப்பட்ட அரிசி மூட்டைகளை, தமிழக எல்லையில் உள்ள கிராமங்கள் வரை டெம்போ, ஆம்னி வேன்களில் கடத் திச் சென்று, அங்குள்ள வாடகை வீடுகளில் பதுக்கி வைக்கின்றனர். பின்னர், சிறு சிறு மூட்டைகளாக "பேக்கிங்' செய்து, இரு சக்கர வாகனங்களில் வைத்து கேரளாவுக்குள் கடத்துகின்றனர். இவர்கள் நாள்தோறும் செல்வதால், ரெகுலராக கேரளா செல்பவர்கள் தானே' என நினைத்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் விட்டுவிடுகின்றனர். பெரிய அளவிலான வாகனங்களை குறி வைத்து காத்திருக்கும் அதிகாரிகள், சிறிய அளவில் டூ வீலரில் நடக்கும் அரிசி கடத்தலை விட்டுவிடுகின்றனர் அல் லது மாமூல் பெற்று ஆசி வழங்குகின்றனர். தவிர, வாகனத்தில் அரிசி கடத்தும் கும்பலுடன் உள்ளூர் போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் ரகசிய தொடர்பு வைத்து மாமூல் பெறுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரே, கடத்தல் குற்றத்துக்கு துணைபோகின்றனர். இவர்களை போன்ற கறுப்பு ஆடுகளை களையெடுத்தால் மட்டுமே, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியும்.                                                                                                                    - நமது நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 மலையாளத்தான் தண்ணி தரமாட்டேங்குறான்? புதுசா அணைய கட்டி கொஞ்சம் நஞ்சம் வருகிற தண்ணிய நிறுத்தப்போறான். இப்ப பணத்துக்காக, சொத்துக்காகவும் ஆசைப்பட்டால் பிறகு நாம சோத்துக்கு எங்கே போவோம் யாராவது யோசிச்சிங்களா? மண்ணையும், அரிசியையும் கடத்துரத முழுசா தடுத்தாலே இந்த மல்லு பசங்க கதறிக்கிட்டு தண்ணிய தருவான். மிளகு, ஏலக்காய் இல்லாம நாம சாப்பிடலாம். அவனால அத தின்னுட்டு வாழ முடியாது. போலீஸ்காரங்களை சொல்லி புரியோஜனம் இல்லை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. வாழ்க கடத்தல். வளர்க கேரளா. தேய்க / ஒழிக தமிழகம். 40 ஆண்டுகால திராவிட அரசியலால் தமிழன் சுரணை இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டான்.
 
by Moorthy,Pollachi,India    31-10-2009 12:35:36 IST
 This is well known to all the police and also to all the politicians at TN.But who is ready to fight against this issue??NOBODY. 
by B Senthil Kumar,India,India    28-10-2009 14:07:38 IST
 am agree with Mr.Visakha.....

velmurugan madurai 
by p velmurugan,madurai,India    28-10-2009 12:24:21 IST
 Tamil nadu has to be saved from its government
If this continues tamilians will face scrcity of rice very soon 
by sivagami,abudhabi,United Arab Emirates    28-10-2009 11:15:38 IST
 அட மானம்கெட்ட தமிழா ... மலையாளத்தான் தண்ணி தரமாட்டேங்குறான் ? புதுசா அணைய கட்டி கொஞ்சம் நஞ்சம் வருகிற தண்ணிய நிறுத்தப்போறான் . இப்ப பணத்துக்காக, சொத்துக்காகவும் ஆசைப்பட்டால் பிறகு நாம சோத்துக்கு எங்கே போவோம் யாராவது யோசிச்சிங்களா? மண்ணையும் , அரிசியையும் கடத்த்துரத முழுசா தடுத்தாலே இந்த மல்லு பசங்க கதறிக்கிட்டு தண்ணிய தருவான் . மிளகு, ஏலக்காய் இல்லாம நாம சாப்பிடலாம் . அவனால அத தின்னுட்டு வாழ முடியாது . போலீஸ்காரங்களை சொல்லி புரியோஜனம் இல்லை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி . இந்தியாவில் மட்டுமல்ல , உலக நாடுகளே என் தமிழ்நாடே , தமிழன இளிச்சவாயனா தானே நினைக்குது . வாழ்க கடத்தல் . வளர்க கேரளா . தேய்க / ஒழிக தமிழகம் . 40 ஆண்டுகால திராவிட அரசியலால் தமிழன் சுரணை இல்லாமல் காயடிச்ச மாடுபோல ஆகிட்டான் ஆக்கப்பட்டுவிட்டான். 
by vp visakha,doha,Qatar    28-10-2009 10:18:17 IST
 Hi Folks, these rice must throw away....no use the quality of rice...???? even Dogs won''t eat....only people using for preparing for Cow feeds....better don''t stop. must throught this PULUTHA Rice.... 
by sr ram,singapore,India    28-10-2009 08:37:27 IST
 The rice smuggling first offender ration shop staffs only. Their are earning very excellent through the rice smuggling and 1kg rice 5/- Sugar 30/- Dall 30/- in respectively daily earning minimum Rs. 1000/-. So the government strict action taken only ration staffs or Change of Sales method to public consumers (like to through A.T.M. Card) on line rice sales immediately. Please Strict action the Tamil Nadu Government to the Ration staffs and 2nd offenders Police staffs. 
by s munisamy,chennai,India    28-10-2009 06:59:54 IST
 In DMK rule,Rice,Sand and many things are smuggled,with the blessing of rulers. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    28-10-2009 03:19:55 IST
 கறுப்பு ஆடுகளை கண்டு பிடிக்க மஞ்சல் துண்டுக்காரர் நடவடிக்கை எடுப்பாரா?  
by ibnusalaih,,abudhabi,uae.,India    28-10-2009 01:29:53 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்