முதல் பக்க செய்திகள் 

ஆபீஸ் திறந்தனர், புரோக்கர்கள்:அதிரடி விளம்பரத்தால் அதிர்ச்சி
அக்டோபர் 31,2009,00:00  IST

Front page news and headlines today

அரசு துறை அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறுகிறது அரசு. ஆனால், கோவையில் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட வேலைகளை செய்து தர, புரோக்கர்கள் ஆபீஸ் திறந்து, தடாலடியாக விளம்பரமும் செய்துள்ளனர்.மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் பணிகளை, மாவட்ட வழங்கல் அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் "உதவி பங்கீட்டு அலுவலர்' அலுவலகங்கள், கோவை வடக்கு மற்றும் தெற்கு தாசில்தார் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வருகின்றன. புதிய ரேஷன் கார்டுக்கு விண் ணப்பம் அளித்தல், முகவரி மாற் றம், பெயர் சேர்ப்பு உள்ளிட்ட ரேஷன் தொடர்பான பல்வேறு பணிகளை, உதவி பங்கீட்டு அலுவலர் அலுவலகங்கள் கவனிக் கின்றன. இதற்காக, தினமும் ஏராளமான மக்கள், இந்த அலுவலக பணியாளர்களை அணுகி வருகின்றனர். போதிய கல்வியறிவு இல்லாதோர், தங்களது கோரிக்கை தொடர் பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும், ஆபீசில் யாரை அணுகுவது, என்ற விபரம் தெரியாமல் தவிக்கின்றனர்.இவர்களின் தவிப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றும் புரோக் கர்கள், தாலுகா அலுவலக வளாகத் தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், தங்களிடம் உள்ள விண்ணப் பத்தை விலைக்கு விற்று, பூர்த்தி செய்து தருகின்றனர்; இதற்கு, விண்ணப்பத்துக்கு இவ்வளவு என "ரேட்' நிர்ணயித்து கறந்து விடுகின்றனர். ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு தொடர்பான விண்ணப்பத் துக்கு 25 ரூபாயும், புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பத்துக்கு 30 ரூபாயும் வசூலித்துக் கொள்கின்றனர். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், "ஒரு விண்ணப்பத்துக்கு 10 ரூபாய் வரை செலவிட்டு வாங்குகிறோம்; அதை பூர்த்தி செய்து கொடுக்க, கொஞ்சம் சேர்த்து வசூல் செய்கிறோம்' என சர்வசாதாரணமாக கூறுகின்றனர்.ரேஷன் பெயரில் இவ்வாறான வசூல் வேட்டை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறமோ புரோக்கர்கள் சிலர் "ஹைடெக்காக' தொழிலை மாற்றி ஆபீஸ் திறந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்."ரேஷன் கார்டு வேண்டுமா, எங்களை அணுகுங்க!' என்று நகரில் பல இடங்களில் சுவர் விளம்பரம் எழுதி, நோட்டீஸ் வழங்கி வெளிப்படையாகவே விளம்பரம் செய்துள்ளனர். தவிர, தெருவிலுள்ள மரங்கள், மின் கம்பங்களில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அவற்றில் சில மொபைல் போன் எண்கள், புரோக்கர் அலுவலக முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோட்டீஸ் விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:ரேஷன் கார்டில் என்ன பிரச்னை? முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், கார்டு மிஸ்ஸிங், கார்டு கேன்சல், புதிய கார்டு பெற எங்களை அணுகலாம். மேலும், சாதிச் சான்று, வாரிசுச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, திருமணம் பதிவு செய்தல் போன்ற அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு நாட்களாக திரைமறைவில் மட்டுமே செயல்பட்டு வந்த புரோக்கர்கள், தற்போது வெளிப்படையாகவே ஆபீஸ் திறந்து, அப்பாவி மக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளதை, அரசுத் துறை அதிகாரிகளும் பார்த்தபடி செல்கின்றனர்; இவர்களுக்கு இப்படியொரு தொழிலை நடத்த லைசென்ஸ் யார் கொடுத்தது? இது சட்டவிதிகளை மீறிய செயல் ஆகாதா? என்ற கேள்விகள் எதுவும் அதிகாரிகளின் மனதில் எழாதது வியப்பாக உள்ளது.இப்படி பகிரங்கமாக நோட் டீஸ் அச்சடித்து, "பிசினஸாகவே' தொழில் செய்யும் அளவுக்கு இவர்களுக்கு ஊக்கமளித்தது சம் மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந் துள்ளது. இது போன்ற முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிடில், அரசுத் துறைகளின் அனைத்து விதமான வேலைகளுக்கும் "ஆபீஸ் போட்டு' புரோக்கர்கள் களமிறங்கிவிடும் அபாயம் நிலவுகிறது.- நமது நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 
நானும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது.., புதியதாக திருமணம் ஆனதிற்கு உண்டான சான்றிதழ்கள் அனைத்தும் கொடுத்து ஆகி விட்டது..,
பழைய குடும்ப அட்டையில் இருந்து நீக்குதல் மற்றும் புதிய அட்டைக்கு உண்டான ஆவணங்கள் அனைத்தும் கொடுத்து விட்டேன்.....,
இன்னும் எனக்கு புதிய குடும்ப அட்டை கொடுப்பதற்கு எந்த உத்தரவும வர வில்லை...,

மாண்புமிகு அமைச்சர் எ வ வேலு வவுக்கு தான் தெரியும்.., புதிய் குடும்ப அட்டை எப்போது மக்களுக்கு சென்றடையும் என்று..,  
by jk keerthi,india,India    01-11-2009 00:08:51 IST
 விண்ணப்பம் 25 ரூபாய்கு விற்பதைக் குற்றமாகச் சொல்கிறீர்கள். கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் 2 பக்க விண்ணப்பங்கள் 250ல் இருந்து 500 வரை விற்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் தேர்வுக்கட்டணமாக ஒரு பேப்பருக்கு 100 ரூபாய் வசூல் செய்கிறார்கள். தேர்வில் பெயில் என்று வந்தால் ஒரு பேப்பருக்கு 400 ரூபாய் கட்டவேண்டும். மறு மதிப்பீட்டில் பாஸ் ஆனால் அப்போது முன்பு திருத்தியவரின் தவறுதானே? வாங்கிய 400 ரூபாயைத்திருப்பித் தருகிறார்களா? அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், வரும் மக்களையும் மனிதர்களாக மதித்து வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்று செயல்படும் காலம் வரை இது போன்ற புரோக்கர்களின் சேவை அவசியம் தேவை 
by R Ramesh,salem,India    31-10-2009 18:41:17 IST
 Let me think this way. Appoint one unemployed person, i mean who is seeking job for this broker position to earn money. But once he get his wanted job , it should be handed over to another guy. one more condition, every 1 year the employee , i mean the broker job should be given to another unemployed person. So it will solve the problem. make things legal and use unemployed people to earn money with strict conditions. that is it 
by V அசோக் Kumar,HoChiMinh,Vietnam    31-10-2009 17:59:19 IST
 This will save lot of time and energy for the common people , what is wrong in letting the Brokers to do all the jobs. The Question we can ask is Why are they here on the first place?? it is coz of the red Tap ism and No one is having time to do all these jobs ( even thought they are necessary evils). It is better we can have someone who can do your job by charging a little extra which is affordable is always to be welcomed, These kind of acts are common in most of the developed countries. But let the govt regularize the same to avoid any manipulation. 
by r rajesh,South Africa,South Africa    31-10-2009 17:02:15 IST
 அரசு அலுவளர்களுக்கு போனஸ் அதிகமானால் அவர் வேலைகளை செய்ய இந்த ப்ரோக்கர்கள் தேவை. so government way is private way.... 
by K.H. JAILANI,sharjah,United Arab Emirates    31-10-2009 16:41:41 IST
 அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா இல்லையா என்று கவனிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் வக்கற்ற அரசுக்கும், அதனால் கஷ்டப்படுகிற மக்களுக்கும் இடையே இவர்கள் நல்லதொரு பாலமாக செயல்படுகிறார்கள். அவர்களை வாழ்த்துவோம்.
ஓம்னி பஸ்கள் எப்படி இயங்க வேண்டும், எப்படி இயங்குகிறது என்றெல்லாம் அரசுக்கு தெரியாமலா அவர்கள் ''தினசரி சர்வீசுகள்'' என்று எழுதி வைத்து புக்கிங் செய்து பஸ்களை இயக்குகிறார்கள்? இது அநியாயமில்லையா? விதிமுறைகளுக்கு முரணானது இல்லையா?
இப்படி எத்தனையோ சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள் நாட்டில் சகஜம். இதுவும் அதில் ஒன்றுதான். மக்களுக்கும் வசதி. அரசுக்கும் அதிகாரிகளுக்கும் வருமானம். உங்களுக்கு ஏன் கவலை? 
by Mr Yila,Nellai,India    31-10-2009 15:36:48 IST
 சந்தோசம். அலைச்சல் மிச்சம் நடுத்தர வர்கத்துக்கு..

பாவம் சாமானியன் ...
 
by Prabu,sg,Singapore    31-10-2009 15:22:53 IST
 அரசு துறைகளில் வேலை செய்வது யாரு அவரும் தமிழன் தான்.அவருடைய செயல் நடவடிக்கை
சரில்லை இதனால் தான் இப்படி
அரசு துறை அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம். முதலில் அரசு அதிகாரி துணை இல்லாமல் பங்கு இல்லாம் இதுபோல செய்ய முடியமா? இதில் என்ன கொடுமை என்றால் போலி கார்டுகளுக்கு தான் பரிசோதனை. ஆனா இப்போ புரோக்கர்களின் ஆதிக்கம் இருப்பதால் மீண்டும் போலிகார்டுகள் கிடைக்கத் தான் போகிறது.ஏன் தேவை இல்லாத வேலை.இந்த அரசுக்கு போலி கார்டுகள் பரிசோதனை என போலி நாடகம்............ 
by kalai raja,trichy,India    31-10-2009 15:08:00 IST
 THE NET OF THE SLEEPER CATCHES FISH 
by N ulaganathan,THOOTHUKUDI,India    31-10-2009 14:59:50 IST
 getting ration card is really very difficult.They can have like thakkal system to get ration card quickly,so that we can pay more & get fast.I am trying to get ration card,unable to get.I am paying income tax.Pl give me the solution. 
by v parthipan,chennai,India    31-10-2009 14:41:57 IST
 பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்.  
by Bharathi,Tamilnadu,India    31-10-2009 13:48:37 IST
 ஆளாளுக்கு அவங்க வேலைய பாருங்க. பொழச்சுட்டு போகட்டும்  
by P mativathanan,chennai,India    31-10-2009 13:22:32 IST
 இந்த லட்சனத்துல உலக தமிழ் மாநாடு, கெடப்பது கெடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வை என்கிற கதை, உன் குற்றமா என் குற்றமா இப்படி ஒரு ஆட்சி  
by Mr Bala,India,India    31-10-2009 13:14:56 IST
 இதுல யாரை குற்றம் சொல்றது?
லீவ் போட்டு அலையுறவங்களுக்குதான் சார் ஒரு சான்று வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு புரியும். அரசு அலுவலகங்கள்ல ஒரு பணியை தாமதமாக்கினா எதனாலன்னு காரணம் சொல்லணும்னு சட்டம் போட்டாதான் இது போன்ற நிலைகளை கொஞ்சமாவது தவிர்க்கலாம்.
 
by வெங்கி,Thiruvarur,India    31-10-2009 12:57:02 IST
 Brilliant Government Servants. So, you like to involve in the corruption indirectly through reliable sources.You are transforming into politicians way of corruption. Good transition. 
by Selvaraju Kanagarajan,Kalmar,Sweden    31-10-2009 12:50:42 IST
 We should welcome them. Government should reduce its employees and save money. Atleast these brokers do the service sincerely and earn a living. But if you approach government office they will make you to run around. 
by MP Vijayakumar,Bangalore,India    31-10-2009 12:35:52 IST
 கலி காலம் சார் இது.... இனிமேல் கவர்மென்ட் ஆபீஸ் - க்கு யாரும் போக தேவை இல்லை. வீட்டில் இருந்தே எல்லாம் பார்த்துக்கலாம். பாவம் ஏழைகள்.  
by M Akilan,Salem,India    31-10-2009 12:03:02 IST
 government should explain about how to get rasen card and name change and all the government realted process how to do access. otherwise government better release the yearly malar. in that book must be in tamil and english. 
by b jeganathan,dindigul,India    31-10-2009 11:53:42 IST
 அரசு அலுவலகத்தை மூடிவிட்டு பொறுப்பை புரோக்கர்களிடம் ஒப்படைக்கலாம். வேலையாவது எளிதில், விரைவில் நடக்கும். சம்பளம் இல்லை, சம்பள உயர்வு இல்லை, பஞ்சப்படி இல்லை, போனஸ் இல்லை, ஸ்டிரைக் இல்லை, விடுமுறை இல்லை, பேரை மட்டும் தாசில்தார் ஆபீஸ் பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிவிடலாம். அரசுக்கு நிறைய பணம் மிச்சமாகும். இதுதான் சிக்கனம்.

அரசு ஆவண செய்யுமா??????  
by D மணிகண்டன்,Tamilnadu ,India    31-10-2009 11:50:39 IST
 முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், கார்டு மிஸ்ஸிங், கார்டு கேன்சல், புதிய கார்டு பெற முதலில் விண்ணப்பங்கள் எளிதாக்க வேண்டும். படித்தவர்களே முகவர்களை அணுகவேண்டி இருக்கு. பாமர மக்கள் வேறு வழியன்று பணம் கொடுத்து அவதிப்படுகிறார்கள். ஓட்டுக்கு மக்களை தேடி போகும் அரசியல் வாதிகள் ஏன் இது போன்ற மக்கள் பிரச்சனைக்கு மக்களை தேடி போக கூடாது?  
by A DENNIS,Coimbatore,India    31-10-2009 11:41:27 IST
 பொது துறைகளில் ஊழல் நடப்பது, அதுவும் அரசாங்க ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஊதியம் போதாமல் லஞ்சம் வாங்குவது இதெல்லாம் சகஜம் தானே. ஒன்றும் தெரியாத பாலகர்களை கவுன்சிலர்.MLA ,MP சீட்டுக்கெல்லாம் 100ரூபாய் லஞ்சம் நாம எல்லம் வாங்கிகிட்டு ஓட்டு போடும்போது இது தெரியாம போச்சே,இப்ப வருத்தபடுபவர் இனியாவது உங்கள் கண்பார்வையில் நல்லவர்களை ஆதரியுங்கள்  
by n murugan,COIMBATORE,India    31-10-2009 11:08:19 IST
 Whole hearted welcome this service. Let them display the charges for their services. ( Hope Dinamalar would not expected whole hearted support from public for their servies.)- Chand P 
by p chand,Chennai,India    31-10-2009 10:23:06 IST
 இது வரவேற்க வேண்டிய சேவை தான். ரேஷன் அலுவலகங்களுக்கு அலைந்தவர் , அலைபவர்களுக்கு தான் தெரியும் எத்தனை நாட்கள் லீவ் போட்டு இந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று ...
RTO office லும் இதே பிரச்னை தான் . இரண்டு நாட்களில் ஒரு வேலை முடியும் என போர்டு மாட்டி வைத்திருப்பார்கள் . ஆனால் பேப்பர் எல்லாம் கொடுத்து பத்து முறை அலைந்தால் தான் வேலை நடக்கும்.........  
by T பேச்சிமுத்து,chennai,India    31-10-2009 10:13:20 IST
 mr.suppen,coment is good,and that true also!
raja/usa. 
by T.K raja kumar,pharma..,United States    31-10-2009 10:06:08 IST
 என்ன கொடுமை சார் இது. இந்த தமிழ்நாட்டுலதான் இப்பிடியா இல்ல இந்தியா முழுவதும் இப்பிடித்தானா ? நம்ம திருந்தனும் சார்.... 
by A சந்தானம்,karur,India    31-10-2009 10:06:00 IST
 Let Govt give them license to do these jobs and audit them every year,

1) Profit for Govt
2) Time saved for public
 
by Jeyapandian Balakrishnan,Singapore,Singapore    31-10-2009 09:56:55 IST
 I think these services are similar to the way we use auditors for filing income return, or tuition centers outside schools etc. There could be many more examples. We should encourage and allow such services as long as they are watched over. These people help save time and money for others. Alternative for this is to work on the root issue of making govt. staff feel that they should work a bit more sincere for the salary they are taking. Here in USA, everyone sincerely works for the salary they receive even for govt. staff. Even in post office here in USA, the staff greets us when our turn comes and they answer all our queries patiently during our transaction with them. I am not trying to blame the govt. staff back home in India. It just that we have set the mind of ''some how manage a govt. job and be feel safe life long''. We need to work on our root issues.

~ nag 
by C nagarjuna,Wheeling,United States    31-10-2009 08:57:40 IST
 எப்படியும் பணம் கொடுக்கத்தான் போகிறோம். யாருக்கு கொடுத்தால் என்ன? காரியம் நடந்தால் சரி.  
by S சுப்பன் ,Chennai,India    31-10-2009 08:46:25 IST
 காசு வாங்காம பண்றதுக்கு அவங்க சோசியல் சர்வீசெஸ் பண்ணல. அது வியாபாரம். அதாவது தொழில். நீ பணம் கொடுக்கிற. நான் அதுக்கு வேல செய்றேன். அத தான் தொழில் தர்மம் நு சொல்றாங்க. engilish la sonna professional ethics. அதே இடத்துல government side ல இருந்து டாகுமென்ட் வராமலா அவங்க விப்பாங்க ???? குடுகிறவன் கைய ஒடச்சா ??? தான நிற்கும். இது போல வியாபாரம்.. எங்க லாபம் வருதோ அதுல வியாபாரம் பண்றவன் தான் வியாபாரி.. கண்டிப்பா ஒடைக்கணும் சீக்கிரம் நடக்கும் ... 
by T சஞ்சய் தமிழ்,bangalore,India    31-10-2009 08:34:57 IST
 They have a deal between agents & government officers to cheat the public.They are doing openly and making compel to the public. unless their services must be legalized and should monitor closely.so that the public would not affect. 
by P Sundar,singapore,India    31-10-2009 08:34:34 IST
 தினமலர் ஏன் தவறாக பார்க்கிறது? Like us persons not afford to take leave for such works frequently and approach the govt office with out result can use this kind of service. This kind of service providers are always welcome, This is common around the world. 
by R Suresh,CBE,India    31-10-2009 08:02:09 IST
 This is Good. B''coz, if people going to appy like passport, ration card, gas connection, even opening bank a/c in State bank of India, need to wait 4 to 5 days. These kind things helping peoples to do there things. But there is possibility of doing forgery also. 
by P Santhosh,Pan Yu, Guangzhou,China    31-10-2009 06:53:38 IST
 தபால் நிலையத்தில் உள்ளது போன்று இவர்களையும் ரேஷன் கடை வாசலிலே உட்கார வைத்தால் நன்றாக இருக்கும். இவர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனால் கட்டுகோப்பில் வைத்து இருக்க வேண்டும்.  
by ராம் எஸ் அய்யர் ,Sinagpore ,Singapore    31-10-2009 05:39:23 IST
 இதே மாதிரி ப்ரோக்கர்கள் வாழ வேண்டும் என்றுதானே அரசு அலுவலகம் தொடர்பான நடைமுறைகளில் இவ்வளவு சிக்கல்களை வைத்திருக்கிறார்கள். இந்தியா சுதந்திர நாடு. இதுக்கு கூடவா அனுமதி இல்லை.... என்று ப்ரோக்கர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வார்களாம். என்ன இதுக்கு போய் சப்போர்ட் பண்றன்னு கேட்குறீங்களா? பின்ன என்ன சார்? எங்க போய் முட்டிக்குறது?  
by வெங்கி,Thiruvarur,India    31-10-2009 05:23:20 IST
 எல்லா செயல்களிலும் தொழில்களிலும் தரகர். அரசு, மக்கள் செய்யவேண்டிய செயல்களை விளக்கமக பெரிய அறிவிப்புகளை இட்டிருந்‌தால் மற்றும் நேர்மையாக விண்ணப்பங்களை பெற்று செயல்பட்டால், அல்லாமல் படிப்பு மற்றும் நடைமுறை இல்லாதவர்கள் செய்வதென்ன. யார் விளக்குவார்கள். தேவையான விண்ணப்பமே கிடைப்பதில்லை. முதலில் அரசு மற்றும் மீடியா இதற்கு உதவட்டும். அல்லது இவர்களை முறையாக செயல்பட வைக்கட்டும். அதுதான் முதலில் செய்ய வேன்டிய செயல்.  
by V சுப்ப ராவ் ,Singapore,India    31-10-2009 05:09:57 IST
 அரசு ஊழியர்களிடம் கால்கடுக்க நின்றும் அலுவலகத்திற்கு அடிக்கடி அலைந்தும் கையூட்டு கொடுத்தும் காலம் கடந்து உணவுப் பொருள் பங்கீட்டு அட்டையை வாங்க நேர்வதால் இத்தகைய பணியைக் குறை சொல்லத் தேவையில்லை. குறைவான கட்டணத்தில் சேவை தருவதால் பொது மக்களுக்கு ஆதாயம்தான். இதை ஒரு பணியாக (சர்வீஸ்) எடுத்துக் கொண்டால் தவறு ஏதும் இல்லை. இவ்வாறு அரசையே நம்பி நலத் திட்ட உதவிகள் பெறாமல் தவிக்கும் பொது மக்களுக்கு இது போன்ற பணி மையங்கள் ஊர் தோறும் இருந்தால் நல்லதுதான். நான் கிண்டலுக்குக் கூறவில்லை. நலத் திட்ட உதவிகள் பெறுவதில் பொதுமக்கள் பணத்தைச் செலவழித்தும் உரிய பயன் கிட்டாததால் கூறுகின்றேன். வாழ்க இவர்களின் பொதுநலத் தொண்டு. 
by I Thiruvalluvan,chennai,India    31-10-2009 03:17:33 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்