முதல் பக்க செய்திகள் 

மகாராஷ்டிர சட்டசபையில் முதல் நாளிலேயே அடிதடி : இந்தியில் பதவி ஏற்ற எம்.எல்.ஏ., மீது திடீர் தாக்கு
நவம்பர் 10,2009,00:00  IST

புதுடில்லி : மகாராஷ்டிர சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளிலேயே பெரிய அளவில் அடிதடி நிகழ்வுகள் அரங்கேறின. இந்தியில் பதவியேற்ற சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி மீது, ராஜ் தாக்கரே கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக தாக்கினர். தாக்குதல் நடத்திய நான்கு எம்.எல்.ஏ.,க்களும் நான்கு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மகாராஷ்டிராவில் முதல்வர் அசோக் சவான் தலைமையிலான புதிய அரசு, இரண்டு நாட்களுக்கு முன் பதவியேற்றது. சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நேற்று மும்பையில் துவங்கியது. முன்னதாக, "எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மராத்தி மொழியில் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தியிருந்தார்.சபை துவங்குவதற்கு முன், இதுகுறித்து பேட்டி அளித்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி, "இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்; தேசிய மொழியான இந்தியில் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வேன்' என்றார்.சபை துவங்கியதும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அபு ஆஸ்மியின் முறை வந்தது. பதவியேற்பு மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் முன் வந்து, பதவிப் பிரமாணம் எடுத்தார். அப்போது அவர், இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்தார். இதனால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏ.,க்கள் 13 பேரும் எழுந்து நின்று, ஆஸ்மிக்கு எதிராகக் கோஷமிட்டனர்.அடிதடி: மராத்தியில் பதவிப் பிரமாணம் எடுக்கும்படி வலியுறுத்தினர். இதை ஏற்க, ஆஸ்மி மறுத்து விட்டார். தொடர்ந்து, இந்தியில் தனது பதவிப் பிரமாணத்தை படித்தார்.ஆவேசமடைந்த நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏ.,க்கள், வேகமாக பதவியேற்கும் இடத்துக்குச் சென்றனர். அதில் ஒருவர், ஆஸ்மிக்கு முன் இருந்த மைக்கை பெயர்த்து, கீழே சாய்த்தார்.ஆஸ்மியை, நவ நிர்மாண் சேனா உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டனர். வாக்குவாதம் முற்றியது. ராம் கதம் என்ற நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏ., ஆஸ்மியை தள்ளிவிட்டார். பின்னர் அவர் மீது சரமாரியாக அடி விழுந்தது. ஆஸ்மியின் மார்பு மற்றும் தோள் பகுதிகளில் அடி விழுந்தது.சபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் இந்த நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ந்து போயினர். அமைச்சர்கள் அஜித் பவார், ஹர்ஷவர்த்தன் பாட்டீல் மற்றும் சில பா.ஜ., உறுப்பினர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். அதையும் மீறி, ஆஸ்மி மீது தாக்குதல் நடந்தது.அஜித் பவார், மீனாட்சி பாட்டீல் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஆஸ்மியை சுற்றி பாதுகாப்பாக நின்று கொண்டனர். நவ நிர்மாண் சேனா உறுப்பினர்களைத் தடுத்தனர்.சபை முழுவதும் ஒரே அமளி நிலவியது. இதையடுத்து, தற்காலிக சபாநாயகர் கண்ப்தராவ் தேஷ்முக், சபையை அரை மணி நேரத்துக்கு ஒத்தி வைத்தார். ஆனால், நவ நிர்மாண் சேனா உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடியும், பேனர்களை தூக்கி காண்பித்தபடியும் அமளியில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் நடந்த போது, சபையில் முதல்வர் அசோக் சவான் அமர்ந்திருந்தார்.இதுகுறித்து பின்னர் அவர் கூறுகையில், "சட்டசபையில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது வருந்தத்தக்கது. ரகளையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.சஸ்பெண்ட்:இதற்கிடையே, நேற்று மதியம் மகாராஷ்டிர சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது, அபு ஆஸ்மியை தாக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில், ராஜ் தாக்கரே கட்சி உறுப்பினர்கள், ஆஸ்மியை தாக்கியதோடு, உழவர், உழைப்பாளர் கட்சி பெண் எம்.எல்.ஏ., மீனாட்சியையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ராம் கதம், வசந்த் கீதே, ரமேஷ் வன்சாலே, சிஷிர் ஷிண்டே ஆகிய நான்கு பேரும் நான்கு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபை துவங்கிய முதல் நாளிலேயே அடிதடி நடந்ததும், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முலாயம் கண்டனம்:சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், "மகாராஷ்டிர சட்டசபையில் அபு ஆஸ்மி தாக்கப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலுக்கு ராஜ் தாக்கரே தான் பொறுப்பேற்க வேண்டும். தேசிய மொழியான இந்திக்கு மரியாதை அளிக்கும் வகையில், அந்த மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்த ஆஸ்மியின் தைரியத்தைப் பாராட்டுகிறேன்' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 
எந்த ஒரு கொள்கையும் இல்லாத அரசியல்வாதிகள் தான்
மொழி - மதம் போன்ற -
மனித முன்னேற்றத்துக்கு தடையான - கருத்துகளை சொல்லி - மக்களிடம் பிளவு உண்டாக்கி ஆதயம் அடைகிறார்கள் . 
by s oli,chennai,India    11-11-2009 02:18:07 IST
 ஈ.வே. ரா. ஒரு பெரிய தலைவர் என்பது உண்மைதான். ஆனால் மூடப் பழக்கங்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி அவர் அடித்த லூட்டி கொஞ்சமா நஞ்சமா. சென்னை ரகுமான் ஈ.வே.ராவைப் புகழ்கிறார். அந்த தலைவர் ஹிந்துக்களால் தெய்வமாக வணங்கப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தியது எந்த நாகரிகம். அன்றே காட்டுமிரண்டிதன அரசியல் ஆரம்பம் ஆகிவிட்டது. இனிமேல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரந்தான். அந்தந்த மாநிலத தலைவர்களும் தங்கள் மாநிலத்தை ஒழுங்காக வளர்ச்சி பாதையில் கொண்டு போய் இருந்தால் ஏன் அடுத்த மாநிலத்துக்கு போக போகிறான்? எல்லா அரசியல்வாதிகளும் இந்த விஷயத்தில் ஒன்னுதான். என்ன நாம்தான் கேனையன்கள் ஆகிவிட்டோம். 
by K V சிவராமன் IYER,MUMBAI,India    11-11-2009 00:49:29 IST
 அன்று பெரியார், இன்று ராஜ் தக்கரே - ஒரே விதமான போராட்டம்....
மேடை வேறு நடிகர்கள் வேறு ..... கடைசியில் மாட்டிக்கொண்டு முழிப்பது சாமானிய மக்களே...

என்ன கொடுமைங்க இது சரவணன்  
by ram ராம்,bulsi,Ukraine    10-11-2009 23:47:32 IST
 தாய் மொழியிலே பேச வெக்கப்படுரவன அடிச்சா தப்பே இல்லே  
by Mr காந்தி,Chennai,India    10-11-2009 23:35:05 IST
 There is no doubt that violence that too in the State Assembly should be condemned. But Indian politicians behave in such a way that they do not listen if people protest in peaceful ways. India is a Union consisting of several nations and national races. Each national race is entitled to its survival. The fact of the matter is that the survival of every other national race and its culture is threatened by the hegemony of Hindi. Every language in India is unique and great in its own right. But, policy of the Indian government that Hindi alone is the national language threatens other languages and threatens their existence. No language can survive through ages if it does not get state protection. In India Hindi alone enjoys state protection at the cost of other languages. The choice is at the hands of Hindi zealots. If you want a unified India, give equal status to all Indian languages and make all Indian languages national languages. If you want Hindi alone as national and official language, India should be restricted within the boundaries of Hindi speaking states and independence should be granted to other national races. I am from Tamil Nadu. I salute Raj Thackeray''s spirit and I wish him all success in preserving the great Marathi language and culture. 
by J benikanth,Chennai,India    10-11-2009 23:12:25 IST
 இந்தியில் படித்தது வம்பு.
அவரை அடித்தது தப்பு . 
by A.P அருள் மாணிக்கம் ,Kancheepuram,India    10-11-2009 20:19:45 IST
 தாய்மொழி தான் முதல்மொழி அவர்கள் அடித்தது சரியே. 
by ராம் ராம் பரவை,மன்னை,India    10-11-2009 20:15:57 IST
 ஹிந்தி எனக்கு பிடிக்காத வார்த்தை ... என் பாஸ்போர்ட்டை பார்த்தாலே எனக்கு கோபமாக வருகிறது ... என் தாய் மொழியை அங்கே காணவில்லை .... காரனம் கிருமிகள் ... செம்மொழி என்று கலைஞர் மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் .... எங்கும் எதிலும் எம்மொழி வரப்போவது எப்போது தெரியவில்லை ... ஹிந்தி நம் மொழியுடன் எந்த வகையிலும் சிறந்தது இல்லை.... வெளிநாட்டு இந்திய விளம்பரங்களில் ஹிந்தியை முன்னிருத்தியே விளம்பரம் செய்கின்றனர் ... மற்ற மொழிகளை பத்தி அவர்களுக்கு கவலை இல்லை .... இந்திய தமிழர் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் தெரியாதவர்களே தூதர்களாக உள்ளனர் ... இதை எங்கே போய் சொல்வது ... நான் இந்திய நாட்டை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை .... இந்திய அரசே தமிழ் தெரிந்தவர்களை தூதர்களாக போடுங்கள் ... மராட்டியில் இருந்து கொண்டு மராட்டி பேச முடியாது என்று சொன்ன எம் எல் ஏ சரியானவர் அல்ல .... அவனவன் மொழி அவனவனுக்கு முக்கியம் .... ஜெய்ஹிந்த் ..... 
by m பக்ருதீன் லண்டன் ,london,United States Virgin Islands    10-11-2009 19:20:08 IST
 இவங்க எல்லாம் காட்டு மிராண்டிகள். சொல்லப்போனால் சொந்த நாட்டுக்குள்ளேயே குழப்பத்தை விளைவிக்கும் இவர்கள் தீவிரவாதிகளை விட கெட்டவர்கள். இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். 
by m aburar,chennai,India    10-11-2009 19:06:30 IST
 raj thackrey is right.......we have to give respect to our mother tongue............ 
by Sri,pune,India    10-11-2009 18:20:12 IST
 HINDI STILL NOT A NATIONAL LANGUAGE (OFFICIAL LANGUAGE). IN INDIA ALL THE LANGUAGE IS VERY IMPORTANT. LET ALLOW THE PEOPLE TO TALK THEIR OWN LANGUAGE. COMPUTER AGE LOT OF SOFTWARE IS THEIR TO TRANSLATE. TAMILAN RESPECT ALL THE LANGUAGES. LONG LIVE INDIA. PROUD TO BE A INDIAN 
by ADI DRAVIDAN,chennai,India    10-11-2009 18:14:14 IST
 மொழி பற்று என்பது வேறு. மொழி வெறி என்பது வேறு . நாம் அனைவரும் முதலில் இந்தியர். அதன் பிறகுதான் அந்தந்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். அவரவர் தாய் மொழியில் பேசுவது அவரவர் விருப்பம். நீ கண்டிப்பாக தாய் மொழியில் தான் பேச வேண்டும் இல்லையென்றால் உன்னை உதைப்பேன், அடிப்பேன் என்று வன்முறைகளில் இறங்குவது காட்டுமிராண்டித்தனம். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கப்பட வேண்டியவர்கள்.  
by S VENKATRAMAN,chennai,India    10-11-2009 18:05:02 IST
  I appreciate Mr.Pall Thakery, What he done is correct. Hindi speaking people doesnt want to learn other reginal languages. Why we should learn Hindi ? Hindi is one of the language of India. that is all.  
by D John ,United arab Emirates ,India    10-11-2009 17:47:57 IST
 MNS MLAs can express their protest in a peaceful manner. Violence, that too inside the Assembly, and more so by the elected representatives who are expected to be a model, cannot be supported and deserves to be condemned. 
by S. Narasimhan,Bangalore,India    10-11-2009 17:36:27 IST
 இங்க அனைவரும் அவர்கள் கருத்தை சொன்னார்கள். சிலர் அதை ஆதரித்தார்கள். சிலர் அதிர்தார்கள். என் கருத்து அவர்கள் செய்தது தவறு. பேச்சுரிமை உள்ள ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவர் அவருக்கு தெரிந்த மொழில் பேச உரிமை இல்லையா ? அதற்கு அவரை அடித்து தவறு என்பது என் கருத்து 
by p.m. sudharsan,perungalathur,chennai,India    10-11-2009 16:41:44 IST
 அட பாவிகளா... நாம்ம இந்தியாவுக்கு தேசிய மொழின்னு ஒன்னு கெடையதுப்பா

ஒரு முதல்வருக்கே இது தெரியல..
ஆண்டவா இந்தியாவ காப்பாத்து

ரமேஷ்
 
by m selvam,kanchipuram,India    10-11-2009 16:40:00 IST
 It is the duty of all to safeguard their mother language. One thing is to be taken in to account. Hindi is not the national language it is only an official language. Before Aug.15,1947 there is no India. Therefore Hindi cannot be considered as national language. Let us unite together and remove Hindi from the country. If a Dog comes from other street,the mother street dogs will fight and kick off the stranger dogs Likewise let us kick away the other state fellows who swallow our economy and there by our brothers and sisters stand in the street without job and food.  
by A Palaniswami,Salem,India    10-11-2009 16:33:48 IST
 அவரவர் மொழி என்று பற்று இருக்கலாம் , ஆனால் வெறி இருக்க கூடாது .
by -M.Shan Tirupur 
by M Shan,Tirupur,India    10-11-2009 16:29:14 IST
 Still abroad two Indians one from south and another from north speeks together in English and local (அரபிக்) language, while all other country people speaks with their own national langage. We sometimes ashame to be an Indian. 
by M. S. Sayeed,Riyadh,Saudi Arabia    10-11-2009 16:20:49 IST
 

Sir,

Taking law into their hands, the act of the newly elected MLAs of the Maharastra Navanirman Sena in having assulted the Samajwadi Party MLA Mr. Abu Azmi for not taking the oath in hindi instead of marathi is condemnable. It is outrageous and an assult on our democracy. It is a shame on our constitution. It is a shame for the nation. Our constitution has recognised some languages as the official languages of he Union. Hindi is one among them. As such taking oath in hindi is not a violation. The rampage ove the ''marathi masoos is unfortunate and lacks morality. They deserve the suspension ordered which may be an eye opener for others who indulge in violnace in the House.

Secondly the representation of the peoples act should be amended. A minimum degree qualification should be prescribed for a candidate to contest the elections so as to become eligible for an MLA or MP and also he should undego a training course for at least six months. This will bar rowdy elements to become member of the ஹவுஸ். 
by Sravana Ramachandran,Ooty,India    10-11-2009 16:18:17 IST
 இந்தி, மராத்தி மொழி வெறியர்களின் அட்டகாசம் இந்தியாவுக்கு தலைகுனிவு தான், ரஷியா மாதிரி ஆகாமல் இருக்க வீர சிங்கம் மராட்டிய மன்னன் சிவாஜி ஆண்ட மராட்டிய சகோதரர்கள் மனித நேயத்தை பேண வேண்டும், செய்வார்களா மக்களின் பிரதிநிதிகள்... 
by t sugu,chennai,India    10-11-2009 15:44:34 IST
 ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ஒரு எம் எல் ஏ தெலுங்கில் சட்டசபையில் பேச, ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஜெயலலிதா யாருக்கு எந்த மொழி நன்றாக தெரியுமோ அதில் பேசலாம் என்றார். இப்பொழுதும் பதர் சயீத் சில சமயங்களில் ஆங்கிலத்தில் பேசுவது உண்டு.

Javahar,குவைத் சொன்னது மிகவும் சரியான விஷயம். அண்ணாதுரை அவர்கள் காலத்தில் தமிழர்களுக்கு ஹிந்தி ஒரு புது மொழி... அது தேவை இல்லை என்று அனைவரும் நினைத்ததனால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது.

ஈ வே ரா, அண்ணாதுரை போன்றோர்கள் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்ததால் தான் நாம் இன்று ஓரளவேனும் மூட நம்பிக்கைகளுக்கு இடம் தராமல், வட நாட்டைப் போல் மத சண்டைகள் இல்லாமல் இருக்கிறோம்.  
by M PRABAHARAN,Chennai,India    10-11-2009 14:17:40 IST
 நான் இதை என்ன வென்று சொல்ல .........
 
by K சுவாமிநாதன்,chennai,India    10-11-2009 13:52:18 IST
 அய்யா வரலாற்றுப் பேராசிரியர்களே , நம்ம தலைவர்கள் தமிழை வளர்க்கத்தான் போராடினாங்க .
மற்ற மொழிகளை ஒழிக்கவோ, அழிக்கவோ அல்ல.
நல்ல தலைவர்களை பழிக்காதீங்க . 
by M Jumma Sait,Tamilnadu- Sivakasi,Maldives    10-11-2009 13:45:30 IST
 பாலா சொல்வதை நான் ஆதரிக்கிறேன்

தமிழ்நாட்டில் ஒரு எம் எல் எ இந்தியில் பதவி பிரமாணம் எடுக்க முடியுமா?

 
by K Venkat,Hyderabad,India    10-11-2009 13:13:20 IST
 ஹிந்தி மொழி இந்தியாவின் மத்தியில் உள்ள மக்களால் பேசப்படுகின்ற மொழி என்பதால் தேசிய மொழி என்பதா ?. தாய் மொழிக்கு மரியாதையை அளிக்கும் ராஜ் தாக்‌கரே போன்றோக்கு ஒரு தமிழனின் வணக்கம்.  
by Paza. ரவிச்வாமி.,Raipur,India    10-11-2009 12:55:57 IST
 Please remove those MLA''s from the party once for all.They are sending the bad signals to public & international community about India. 
by v christopher,sanaa,Yemen    10-11-2009 12:42:08 IST
 இன்னொருவரை எதன் காரணம் கொண்டும் அடிப்பதை நியாயம் செய்ய முடியாது. எனக்கும் என் தாய் , தாய் நாடு , தாய் மொழி மிகவும் முக்கியம் , மிகவும் பிடிக்கும். அதற்காக வேறு எவரும் என் தாய் நல்லவள் , என் தாய் நாடு நல்லது என்று சொல்லும்போது அடிக்க மாட்டேன். இங்கே பிறந்த எத்தனயோ பேர் தமிழ் பேச வாய்ப்பில்லாத நாடுகளில் , ஊர்களில் இருந்து பிழைக்கிறார்கள். உணர்வுக்கு , உணவுக்கு என்று சில மொழிகளில் புழங்க வேண்டிய கட்டாயம் உள்ள இன்றைய சூழலில் இன்னமும் பயனற்று , பொருளற்று இப்படி நடப்பது வேடிக்கை. வாழ்க்கை , உயிர் இதை முன் வைக்காமல் எந்த புரட்சியும் இனி இந்த இந்தியாவில் நடத்த முடியாது . இதே தமிழகத்திலும் கூட மொழியை மையமாக வைத்து இனி எந்த புரட்சியும் நடக்க முடியாது. 
by D தேவன் ,Chennai,India    10-11-2009 12:25:19 IST
 முதலில் தமிழில் (செம்மொழி) பார்லிமென்டில் பேச அனுமதியுங்கள் ... மற்ற மொழிகளை மதிக்க தவறிய வட மக்களுக்கு சரியான மரண அடி. 
by m மது,singapore,Singapore    10-11-2009 11:50:11 IST
 T.K ராஜா குமார்,parma ,United States ,அவர்களே ..
அமெரிக்காவில் இன படுகொலை நடந்து விட்டதா? எப்போ ? 
by Sundaram,chennai,India    10-11-2009 11:33:24 IST
  தேசிய மொழியான இந்தி - First of all India dont have any National Language.(The official language of the Republic of India is Hindi with English as a secondary official language;[1] states in India can legislate their own official languages.[1] Neither the Constitution of India, nor any Indian law defines any national language.) India cannot be integrated by single language and culture.. This kind of propagada stating ''Hindi as National language'' is mainly used to sell Hindi products like Bollywood movies and make Hindi speaking community the first class citizen...
Citizen have the right to speak any language in India..
But these dirty regional politicians are using language as a tool for their own cause and not in a constructive way...Everyone should learn to respect other language & culture in Republic India....

 
by Parthi,Dubai,United Arab Emirates    10-11-2009 11:31:23 IST
 Nothing wrong in Bala’s comments. It’s a replica of what so called “Dravidian movements” did during their anti-Hindi agitation. In fact, in those times Hindi was only a third language (in TN state-board syllabi) and you need not pass to get SSLC certificate. I know persons who failed in Hindi but managed to get higher studies. Later their own kids learned Hindi and now occupying higher posts (obviously it is Dayanidhi) and getting close proximity to PM and Congress president. As Mr. S.Anand from Bangalore said, try to browse some Mumbai based newspaper. Every Indian language should be given due recognition, so their concern for the cause of Marathi is agreeable, but the approach is highly condemnable.  
by S Anand,Mumbai,India    10-11-2009 11:27:54 IST
 பால்தாகரே கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் அநியாயம். அந்தக்கட்சி உறுப்பினர்களுக்கு கொடுத்த தண்டனை மிகவும் சரியான.தே நியாயமானதே. காட்டுமிராண்டிகளான அவர்கள் இனியாவது திருந்தி வாழட்டும்  
by S. பனைக்குளம் Jawahar Ali ,Kuwait,India    10-11-2009 11:21:09 IST
  நண்பர் பாலா ஸ்ரீனிவாசன் அவர்களே,
இ .வெ ரா மற்றும் அவருடைய சிஷ்யர்கள் இலையென்றால் தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியாது.உங்களை தவிர...
உங்களுக்கு ஆதரவு அளிப்பபவர்கள் கண்டிப்பாக உங்கள் உறவினர்களாக மட்டுமே இருக்க முடியும்.. 
by Ram,chennai,India    10-11-2009 10:39:50 IST
 ஹிந்தி எதிர்ப்பு ன்னு சொல்லி தன்னோட குடும்பத்த வளர்த்தவங்க தான் இவங்க. சுய நலத்திற்காக எ‌த வேண்டுமானாலும் பண்ணுவாங்க  
by KM சுதாகரன்,Dharmapuri,India    10-11-2009 10:34:22 IST
 இந்த சம்பவம் சரியென்று சான்றளிக்கும் சகோதரர்களே. அவர் மராட்டியில் எடுத்தால் என்ன ஹிந்தியில் எடுத்தால் நமக்கென்ன. ஆனால் ஒரு சபை மரியாதையை தெரியாத பொருக்கிகளுக்கு ஆதரவாக போகாதீர்கள். அன்புடன் இந்தியன். 
by Mr. இந்தியன்,Kumbakonam,India    10-11-2009 10:31:51 IST
  மொழிக்காக ''எம் ல் ஏ'' இக்கே உதை!
இங்கே ஓர் இனஅழிப்பே நடந்து முடிந்துவிட்டது!
இதை போய் எங்கே போய் அழ ????
ராஜா/அமிரிக்கா  
by T.K ராஜா குமார் ,parma ,United States    10-11-2009 10:05:42 IST
 அரசியலில் இது சாதாரணம்பா

 
by t. mani,madurai,India    10-11-2009 10:03:20 IST
 ரொம்ப மோசம்  
by ச.PALANIVEL,CHENNAI,India    10-11-2009 09:57:39 IST
 ''This is ridiculous..such a shameless act ! They should be instant punishments for all this. There should be some strict standards and qualities to get people into such roles. Its high time the government really thinks about all this and get the right people in right place. This event is a disgrace to all of us - Indians !!! 
by S விமலன்,chennai,India    10-11-2009 09:39:22 IST
 பாலா ஸ்ரீனிவாசன் அவர்களே, நாமும் ஹிந்தியை எதிர்த்தோம். அனால் போராட்டங்களை நடத்தி எதிர்த்தோம். தமிழ்நாட்டில் தமிழைத்தவிர வேறுமொழி புழக்கத்தில் இல்லாத காலகட்டத்தில் நம்மீது ஹிந்தி திணிக்கப்பட்டது. அனால் மகாராஷ்ட்ராவில் அனைத்து மொழி மக்களும் வாழ்கின்றனர். மகாராஷ்ட்ராவில் வாழும் மராத்தி பேசாத மக்களும் அங்கு மண்ணின் மைந்தர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர்கள் தன்மானம் மிக்க தலைவர்கள். ஆனால் மகாராஷ்ட்ராவில்.... ரத்தம் குடிக்கும் காட்டேறிகள்.ராஜ்தாக்ரே வகையாரா வீட்டு பிள்ளைகள் எந்த ஸ்கூலில் படிக்கின்றது என்று விசாரியுங்கள் 
by Javahar,Kuwait,Latvia    10-11-2009 09:35:35 IST
 பாலா சொல்வதை நான் ஓரளவிற்கு ஆதரிக்கிறேன். இதற்கு வரலாற்றை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஓர் ஆண்டு பத்திரிக்கை செய்திகளை நீங்கள் பார்த்தால் அதில் ராஜ் தாக்கரே பண்டைய தமிழக அரசியலை முன்னிறுத்தி பேசி இருக்கிறார். தமிழகத்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமை மராட்டிய மாநிலத்திலேயே கொண்டு வருவேன் என்றும் கூறி இருக்கிறார். 
by S ஆனந்த்,Bangalore,India    10-11-2009 09:33:09 IST
 ஹலோ வரலாற்று பேராசிரியர் திரு ராஜ்/ ஹுஸ்டன்,அமெரிக்கா அவர்களே, திரு பாலா சொல்வது நூறு சதவிதிதம் மட்டுமே உண்மை. இதில் உங்களுக்கு என்ன சந்தேகம். நான் தீர்த்து வைக்கிறேன். ''கண்டு கொள்வோம் கழகங்களை'' என்ற புத்தகத்தை படிக்கவும். எழுதியவர், முதுபெரும் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள். இது தவிர இன்னும் எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உண்மை சுடும், வாய்மை வெல்லும். 
by v sundaram,jeddah,Saudi Arabia    10-11-2009 09:31:53 IST
 The way is wrong but motive is correct. 
by km viswanathan,Bhubaneswar,India    10-11-2009 09:02:54 IST
 சட்ட சபையில் அந்த மாநிலத்தின் மொழியில் உறுதி மொழி எடுப்பதில் என்ன தவறு. இதுதான் சரியான அடி .பாராளுமன்றத்தில் ஹிந்தியில் உறுதி மொழி சரி. சட்டசபையில் அந்த மொழிதான் சரி  
by K தமிழரசு,coimbatore,India    10-11-2009 08:53:24 IST
 அய்யா பாலா ஸ்ரீனிவாசன் அவர்களே வரலாறை படித்து பார்த்து கருத்தை பதிவு செயுங்கள். ராஜ் தாக்கரே போன்ற ரவுடிகளை ஈ. வெ.ரா . போன்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். இந்த அரசியல் ரவடிகளை நாட்டை விட்டு அகற்ற வேண்டும். மக்கள் அகற்றுவார்கள்  
by s ரகுமான்,chennai,India    10-11-2009 08:45:54 IST
 மக்கள் வரி பணத்தில் அராஜகம் செய்கின்ற ரவடிகளை சட்ட சபை உறுப்பினர் பதிவிலிருந்து விளக்கனும்.சட்ட படி தண்டிக்க வேண்டும் இது ஒரு பாடமாக இருக்கும்.அடுத்து இதுபோல திரும்ப போட்டிடவே முடியாத அளவுக்கு சட்டம் வரணும் ... 
by கலை ராஜா ,trichy,India    10-11-2009 08:35:39 IST
 ரஜினி ஒரு படத்துல சொல்லுவார், ஒவ்வொரு நாட்டுக்காறன பத்தியும் சொல்லிட்டு ''இந்தியன் பேசலேன்னா செத்து போயிடுவான்னு'' அதுவே அந்த படம் இப்போ எடுத்தா இந்தியன் assembly ல சண்ட போடலின்னா செத்து போயிடுவான்னு மாத்தி இருப்பார்.

இவங்களுக்கு ஓட்டு போட்ட ஒவ்வொருத்தனும் வெக்கப்படனும், இதுவரைக்கும் ஓட்டே போடாதவங்களும் தான்.

பெருசா மொழி வளக்கறதா பீத்திக்கறவங்களுக்கு ஒன்னு சொல்லறேன் மொழி வளர நீங்க சும்மா இருந்தாலே போதும். தன தாய் மொழியை மதிக்கற மக்கள் மற்ற மொழிகளையும் மதிப்பாங்க வளர்ப்பாங்க  
by S வாசுதேவ் ,chennai,India    10-11-2009 08:25:20 IST
 ஹூஸ்டன் ராஜ் அவர்களே, பாலா ஸ்ரீனிவாசின் கூற்று சரித்திர உண்மை. நீர் மு க ஆதரவாளர் என்பதால் சரித்திரம் மாறிவிடாது. தமிழ், தமிழ் என்று சொல்லியே தமிழ் நாட்டை சுடுகாடாக்கி தமிழனை மொட்டையடித்து வருவதும் கண் கூடு.  
by N.S Sankaran,Chennai,India    10-11-2009 08:21:57 IST
 வெரி குட் மிஸ்டர்.Amanullah . எவன் தனது சுயநலத்திற்காக மட்டும் அரசியல் நடத்துகிறானோ அதுவரை எந்த ஒரு நாடும் முன்னேறப்போவதில்லை. இது மட்டும் நிச்சயம். அதிலும் இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டிற்கு அவ்ளோ தான். 
by s மகேஷ் ,abu dhabi,India    10-11-2009 08:12:05 IST
 பால ஸ்ரீநிவாஸ் சொல்வது சரிதான். பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பும் தற்பொழுது M.N.S. நடத்தும் போராட்டமும் ஒன்றுதான். தமிழன் நடத்தினால் அது பகுத்தறிவுவாதம். மராத்தியன் நடத்தினால் அது தேசத்துரோகமா?  
by இரா சுரேஷ்,Melbourne,Australia    10-11-2009 07:56:09 IST
 India is a country with many languages and it is not correct to compel to follow one language, whether it is Maharashtra or Tamil Nadu, etc.. It is the individual`s wish and will. Importance may be given to the local language but not compulsion.  
by M.S. Chandramouli,Chitlapakkam, Tamil Nadu,India    10-11-2009 07:53:55 IST
 மொழியால் நாடு துண்டாடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்  
by P MAHESH,KUMBAKONAM,India    10-11-2009 07:42:31 IST
 அரசியல் சட்டப்படி அங்கிகரிக்கப்பட்டுள்ள பதினாறு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஆக்காதவரை இந்த நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கும். மராட்டியர்களின் உணர்வு நியாயமானதே. அன்று தமிழ்நாட்டில் தோன்றிய மொழி மான உணர்வு இன்று மராட்டியத்தில் .


 
by manimagan,chennai,India    10-11-2009 07:23:32 IST
 மராட்டியர் இந்தியாவை இந்தியில் ஆளவில்லை. மராத்தியில் தான் ஆண்டார்கள். சுதந்திர இந்தியாவில் அவர்கள் இந்திக்கு அடிமையாகிவிட்டார்கள்.ஆனால் தாக்கரேக்கு இன்னும் சுயமரியாதையும் கௌரவமும் உண்டு என்பதை நிரூபித்துள்ளார் 
by க இளங்கோ,jaffna,India    10-11-2009 07:06:48 IST
 ஹலோ பாலா ஸ்ரீநிவாஸ், <விஷயம் தெரியாம பேசாதிங்க. முதல்ல ஒழுங்கா வரலாறு படிங்க. < 
by ராஜ்,Houston, TX,United States    10-11-2009 06:30:47 IST
 திருவாளர் அமீன் அவர்களே, சரித்திரம் தெரிந்துகொண்டு பிறகு கருத்தை பதிவு செய்யுங்கள். 
by S Rajendran,Singapore,Singapore    10-11-2009 06:24:22 IST
 இதை எல்லாம் பார்து கொண்டு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் நாடு பல துண்டாக ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று பொருள் . மொழி, இனம் ,வர்ணம் என்று இந்தியாவை பிரித்தால் இந்தியா ஆயுரம் நாடகிவிடும் . மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எப்படி என்றால் அடுத்தவர் இதனை நினைத்தாள் பயப்படும் அளவுக்கு , பாவம் மத்திய அரசு, இதனை ஊக்குவித்தாள் தான் அதற்கு மத்தியுள் அரசு அமைக்க முடயும். பாவம் இந்திய குடிமகன் .  
by A A ஹாஜா மைதீன் ,Bandar seri Begawan,Brunei    10-11-2009 06:19:53 IST
 அட பாவிகளா... நாம்ம இந்தியாவுக்கு தேசிய மொழின்னு ஒன்னு கேடையதுப்பா

ஒரு முதர்வருக்கே இது தெரியல..
ஆண்டவா இந்தியாவ காப்பாத்து

ரமேஷ்


 
by S ரமேஷ் சுப்புராஜ்,Waltham,MA,United States    10-11-2009 06:16:38 IST
 ராஜ்டக்ரே இஸ் வெரி bad man 
by ஆடம் நூற்,qatar,India    10-11-2009 05:34:28 IST
 பரவாயில்லை மராட்டியர்கள் இப்போதாவது விழித்துகொன்டணரே...
பாராட்டுக்கள் 
by M மராட்டிMath,singapore,Saint Kitts and Nevis    10-11-2009 05:17:47 IST
 பொம்பளை சிரித்தாள் போட்ச்சி,புகயலை விரிச்சால் ஆச்சி,என்பதைப்போல படித்தவன் எல்லாம் தெருவிலே,படிகாதவனோ ஆட்சியிலே,இப்போ புரிந்ததா ''ரௌவ்டி''ஏங்கே இருந்து வருகிறான் என்று,மக்களே ''கை''ஏந்துவதை தயாவு செய்து நிறுத்துங்கள் நீங்கள் எல்லோரும் ஒன்று கூடி வாழுங்கள் ப்ளிஸ் ,இப்பௌழுது காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாம் நாட்டுக்கு வந்துக்கொண்டு இருக்கிறாது அறியவும். 
by A.M.Y முஹம்மத் அமின் ,paris,France    10-11-2009 04:54:44 IST
 ராஜ் தாக்கரேக்கு எதிரா சவுண்ட் குடுக்கிற அண்ணாச்சிகளுக்கு ஒரு தகவல்- கிட்ட தட்ட இதே மாதிரி அரசியலைத்தான் ஈ.வீ..ஆர் கூட அவருடைய சிஷ்ய புள்ளை களோட ஒரு காலத்துல்லே நடத்திக்கிட்டு இருந்தாருங்கோ; அப்ப நம்ம எல்லாருக்குமே ''''தமிழ் நாடு தமிழருக்கே'''' , ''''வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது'''' என்ற கோஷம் ரொம்ப புடிச்சு இருந்துதுங்கோ; நடிகர்கள் மாறி இருக்காங்க ஆனா . காட்சி அதே தாங்கோ; எல்லாமே இங்க முன்னாடியே பாத்துதாங்கோ! அப்போ தி.க./தி.மு.க. இப்போ எம்.என். எஸ் அவ்வ்ளோதாங்கோ!  
by பாலா ஸ்ரீனிவாசன் ,Chennai,India    10-11-2009 04:41:00 IST
 cheapest act, This is what happens when rowdy''s become MLA,

In future they may become cheif minister , PM and presidents too..

I''am ashamed to be an indian now. 
by subramani marimuthu,chennai,India    10-11-2009 03:41:47 IST
 ஓர் இந்திய மொழியில் பேசியதற்கே இவ்வளவு எதிர்ப்பு, அடிதடி. தமிழ் இனமே படு கொலை செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்கள் தமிழக மக்கள் தான்.  
by நா ஜெயராமன் ,Suva,Fiji    10-11-2009 02:18:43 IST
 ''வெட்ககேடான விஷயம். ராஜ் தாக்கரே மற்றும் அவரது நவ நிர்மான் கட்சியை தடை செய்ய வேண்டும். நான்கு வருடம் தடை செய்வது ஒன்றும் பயனளிக்க போவது இல்லை, இவர்களை தேர்வு செய்த மக்கள் யோசிக்க வெட்கப்படவேண்டும்'' 
by தாஸ்,Brussels,Belgium    10-11-2009 01:09:03 IST
 இது நமது நாட்டின் மற்றுமொரு அரசியல் கேவலம். ராஜ்தாக்கரே தனது சுயநலத்திற்காக பல முறை வன்முறை என்ற கத்தியை பயன்படுத்தியுள்ளார். இன்று தனது எம். எல். ஏக்களையும் ஏவிவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். அந்த கத்தியாலே அவர் அழியப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவர்கள் மீது 4 ஆண்டுகள் பத்தாது. பதவியை பிடுங்கி ஆயுள் தடை விதிக்க வேண்டும். மராட்டிய மக்கள் இந்த சம்பவத்தை நினைத்து நிச்சயமாக வெட்கப்படுவார்கள் வேதனைபடுவார்கள். இந்த நேரத்தில் ஒன்றை நாம் நினைவு கொள்ள வேண்டும்.கடந்த ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஏன் உயிரையும் இழந்து தீவிரவாதிகளோடு போரிட்டு அம்மக்களை காப்பாற்றியது வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் தான். அந்த சமயத்தில் ராஜ்தாக்கரே எங்கு இருந்தார் என்று கடவுளுக்கும் அவருக்கும் தான் வெளிச்சம். அவ்வளவு ஏன் தன் உயிருக்கு பயந்து பாதிக்கப்பட்ட மக்களை கூட அவர் சந்திக்கவில்லை என்பது தான் வரலாறு. இவரை போன்ற வன்முறை அரசியல்வாதிகளை மராட்டிய மக்கள் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டு.  
by M Amanullah,Dubai,United Arab Emirates    10-11-2009 00:42:37 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்