முதல் பக்க செய்திகள் 

கல்லூரி பிரின்சிபாலை கைப்பிடித்தார் மாயமான துறவி
நவம்பர் 12,2009,00:00  IST

Front page news and headlines today

ஷிமோகா : மடத்தின் அதிபதியாக இருந்த துறவி மீது காதல் வதந்தி பரப்பப்பட்டது; வெறுத்துப்போய், மூன்றாண்டுக்கு முன் "மாயமான' துறவி, இப்போது துறவறத்தை துறந்து, விவசாயியாகி விட்டார். எந்த பெண்ணுடன் தொடர்பு என்று வதந்தி கிளப்பப்பட்டதோ, அந்த பெண்ணை மணந்தார்; இப்போது இவர்களுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது.



கர்நாடக மாநிலம், தவங்கரே மாவட்டத்தில் இருக்கிறது வீரசைவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த நந்திகுடி மடம். இதன் மடாதிபதியாக இருந்தவர் நந்தீஸ்வர சிவாச்சார்ய சுவாமி. மடத்தின் சார்பில் உக்கடகாத்ரி என்ற இடத்தில் "காரிபஸவேஸ்ரா டி.எட்., கல்லூரி' இயங்கி வருகிறது. கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் மடாதிபதிதான். ஓய்வுபெற்ற ஆசிரியரான நிங்கப்பா கரதர் என்பவரின் மகள் கீதா கரதர். இவர் கர்நாடக பல்கலையில் முதுகலை முடித்து விட்டு, மடத்துக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். சமூகப் பணியில் விருப்பமிருந்ததால், தனது ஆசிரியப் பணியை சம்பளம் வாங்காமல் செய்துவந்தார். இவரது உழைப்பைக் கண்டு, கல்லூரியின் பிரின்சிபாலாக நிர்வாகம் நியமித்தது.



மடாதிபதி சிவாச்சார்யரும் எம்.ஏ., பட்டம் பெற்றவர். கல்வியில் திறமை கொண்டவர். அதனால், கல்லூரி பணிகள் குறித்து அவ்வப்போது, கீதாவை அழைத்துப் பேசுவதுண்டு. ஆனால், மடத்தில் செல்வாக்கு உள்ள ஒரு கும்பல், இவர்கள் சந்திப்பை தவறான கண்ணோட் டத்துடன் வதந்தி பரப்ப ஆரம்பித்தது. "இதன் பின்னணியில் சுவாமிக்கும் கீதாவுக்கும் தொடர்பிருக்கிறது' என்ற புரளி கிளப்பியது. இதனால் மனம் நொந்த கீதா, தனது வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, சொந்த கிராமமான சுடாம்பிக்குத் திரும்பி விட்டார்.



வதந்தியால் பக்தர்களிடம் அன்பை இழந்து பாதிக்கப்பட்ட சுவாமியும் தனது சந்நியாச வாழ்வைத் துறப்பது என்ற முடிவு எடுத்தார். மடத்து பக்தர்களில் ஒரு பிரிவினர், மடத்து நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு குழுவை அமைத்துவிட்டுச் செல்லும்படி கூறினர். அப்படி அமைத்தால் அது மடத்து சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வசதியாக அமைந்து விடும் என்று சுவாமி மறுத்துவிட்டார். மடத்தை கைப்பற்றி, பணத்தை "லபக்'குவது என்று பக்தர்களில் வலுவான சிலர் திட்டமிட்டனர். ஆனால், அதற்கு துறவி வழி விட தயாரில்லை. பணிந்து செல்லவும் விரும்பவில்லை. அதனால், மடத்தை விட்டு வெளியேறி விடுவது என்று இறுதி முடிவெடுத்தார்.



இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுவாமிக்கு ஆறுதலாக இருந்தவர் கீதா தான். ஒரு கட்டத்தில் மடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார் துறவி. கீதாவிடம் ஆலோசித்தார். "மடத்தில் இருந்து வெளியே வந்து விடுகிறேன்; இப்படிப் பட்ட பக்தர்களுடன் சேர்ந்து மடத்தை நடத்த முடியாது; எல்லாரும் பணத்துக் காக வீண் பழி சொல்லி, என்னையே அவமதிக்கின்றனர்' என்று நொந்து கூறினார். எங்காவது சென்று, இருவரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தனர். திட்டப்படி, அவர்கள் ஹரித்வார் சென்றனர். அங்கு சந்நியாசத்தைத் துறப்பதற்கான சடங்குகளைச் செய்து, கீதாவை சிவாச்சார்யா மணம் புரிந்து கொண்டார். பின் சுவாமி ஏற் கனவே தங்கியிருந்த படடாபைலு என்ற கிராமத்தில் குடியேறினர்.



இதற்கிடையில், மடாதிபதியைக் காணவில்லை என்று பக்தர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், சுவாமியின் சிம் கார்டு மூலம் அவரது இருப்பிடத் தைக் கண்டறிந்தனர். ஆனால், அவர் மடத்துக்குத் திரும்ப மறுத்துவிட்டார். இதன் பின் அவரை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கி புதிய மடாதிபதியை பக்தர்கள் தேர்ந்தெடுத்தனர். இப்போது சிவாச்சார்யா எளிமையான விவசாயியாக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் குருபிரசாத் என்ற மகன் இருக்கிறான்.



இது குறித்து சுவாமி கூறுகையில்,"ஒரு மத நிறுவனத்தில் பணம் சேரும் போது, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பக்தர்கள் அதில் நுழைகின்றனர். சீர்கேடு ஆரம்பிக்கிறது. என் மனசாட்சிப்படி, மடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், அதன் கணக்குகளை மக்கள் முன் வெளியிட தீர்மானித்தேன். துறவு வாழ்வில் கிடைக்காத அமைதி, நிம்மதி இல்லறத்தில் எனக்குக் கிட்டியது. இனி மடத் துக்குத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. சுவாமி பஸவேஸ்வரரின் "காயகதர்ம'த்தை கடைப்பிடிப்பதன் மூலம் இப் போது தான் அவரது உண்மையான சீடனாக நான் வாழ்கிறேன்' என்று மனம் திறந்து பேசினார். அவர் மனைவி கீதா,"நான் இனி வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை. இல்லத்தரசியாகவே இருக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் எதிர்கொண்ட பிரச்னைகளே இந்த உலகுக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி' என்று கூறுகிறார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 நீங்கள் சரியான முடிவு எடுத்து இருக்கிறீர்கள். போலி சாதுவாக இருந்துகொண்டு செல்வதில் திளைக்காமல் உண்மை வாழ்க்கை வாழ்வதற்கு எங்கள் வாழ்த்துக்கள். தங்கள் குழந்தை நல்ல முறையில் வளர என்னுடியாய ஆசிகள்
 
by R Bala,Tamilnadu,India    12-11-2009 15:01:04 IST
 எங்கள் தமிழ் சமுதாயத்தின் சார்பாக உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். ஒவ்வருவரும் அவரவர் மனசாச்சி படி நடந்தாலே நம்மை காக்க கடவுளின் உதவி தேவை இல்லை, நாம் அவருக்கு ஓய்வு கொடுத்து அவரையும் வாழ வைக்கலாம்.... 
by suki,chennai,India    12-11-2009 14:50:39 IST
 SUPER SAMY...NEENGA UNMAIYANA ( NALLA ) MANITHARTHAN. ILLARATHIL IRUNTHUKONDE NALLARAM SEIVEER..NANRI SAMY.. 
by A RAISUDEEN,DAMMAM,Saudi Arabia    12-11-2009 13:59:44 IST
 A wise decision by the lady principal and temple administrator to marry and lead a simple life. This is a practical example to show the world how education helps in solving societal problems. 
by v cs,Mumbai,India    12-11-2009 13:45:06 IST
 கீதை வழியும் அதுதான் இல்லறத்தில் சன்யாச வாழ்க்கை  
by கணேஷ் நடராஜன் ,tamilnadu,India    12-11-2009 12:55:13 IST
 மற்றவர்கள் போல் மடத்தின் பாரம்பரியத்தையும் புனிததையும் கெடுக்காமல் துணிவுடன் முடிவு எடுத்து உள்ளார், துணிவுக்கு பாராட்டுகள்  
by முகமத் ,india,India    12-11-2009 11:50:34 IST
 ALL THE BEST FOR YOUR BRIGHT FUTURE
AND ALSO FOR UR LUCKY CHILD
GO...........AHEAD.............................................. 
by r karthikeyan,dindigul,India    12-11-2009 11:34:00 IST
 புதுசா இருக்கே  
by naras கமலகண்ணன்,india,India    12-11-2009 10:28:53 IST
 வாழ்த்துக்கள்.  
by G கிங்க்ஸ்லி சேவியர்,Sharjah,United Arab Emirates    12-11-2009 10:28:27 IST
 நல்ல முடிவு , வாழ்த்துக்கள்
 
by R kingslin,chennai,India    12-11-2009 10:27:52 IST
 இல்லறத்தில் இருந்த படியே துறவறத்தில் ஈடுபட முடியாது என யார் சொன்னது ,இல்லறத்தில் இருந்த படியே முக்தி அடைவது சாத்தியமே ...
 
by N தனபால்,ARIYALUR,India    12-11-2009 10:27:48 IST
 This is really nice.I appreciate you 
by k முகமத் Raja,Chennai,India    12-11-2009 10:14:47 IST
 இல்லறத்தில் இருந்த படியே, துறவறத்தில் ஈடுபட முடியாதா என்ன? 
by km விஸ்வநாதன்,Bhubaneswar,India    12-11-2009 09:52:32 IST
 எப்போது அவர் உண்மையான வாழ்கையை அறிந்து கொண்டார்.  
by A shahab,abudhabi,United Arab Emirates    12-11-2009 09:29:44 IST
 நல்ல முடிவு. நல்வாழ்த்துக்கள் !!! 
by S Raju,KL,Malaysia    12-11-2009 09:12:17 IST
 துறவறம் நீங்கி இல்லறம் சிறப்பித்து இறைவனை அடைய வாழ்த்துக்கள். 
by R. ஸ்ரீதரன்,Bangalore,India    12-11-2009 09:07:24 IST
 நேர்மையாக வாழ முடிவெடுத்து திருமண பந்தத்தில் இணைந்த உங்களுக்கு என்றும் இறைவன் துணை உண்டு. வாழ்க வாழ்க


 
by துரை செல்வராஜு,Thanjavur,India    12-11-2009 08:44:49 IST
 நீங்கள் இப்போது துறவியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள துறவிகளை விட பன்மடங்கு மேலானவர்.  
by K Jeeva,Bangalore,India    12-11-2009 08:27:56 IST
 சுபம்............... 
by அரசு,chennai,India    12-11-2009 07:55:40 IST
 முகமூடி அணிந்து வாழாமல் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தீர்களே அது போதும்.  
by வெங்கி ,Thiruvarur,India    12-11-2009 05:17:39 IST
 Really Great.... His words about the ppl joining mutt for its property is really true...... 
by T சங்கர்,Singapore,Singapore    12-11-2009 04:30:25 IST
 உங்கள் இருவரையும் வாழ்த்துகிறோம் . மற்ற சாமியார்கள் போல் இரண்டு வாழ்க்கை வாழாமல் மன சாட்சிபடி நடந்த நீங்கள் சிறந்த பக்தர்கள் ஆவீர்கள்.
நன்றி
 
by s karthi,aruvai ,India    12-11-2009 02:46:28 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்