முதல் பக்க செய்திகள் 

மராத்தி கோஷம் மற்றவர்களுக்கு தான் : அவங்க பிள்ளைகளோ இங்கிலீஷ் மீடியம்
நவம்பர் 17,2009,00:00  IST

Front page news and headlines today

மும்பை : "மராத்தி மொழி தான் எங்களது உயிர் மூச்சு' என்று மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) தலைவர் ராஜ் தாக்கரே முழங்கினாலும், அவர் கட்சி தலைவர்கள் தங்கள் குடும் பத்தில் உள்ள குழந்தைகளை ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தான் சேர்த்துள்ளனர்.மகாராஷ்டிராவில், மராத்தியர்கள் தான் இருக்க வேண்டும்; மற்ற மொழியினர் வெளியேற வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே பல ஆண்டுக்கு முன்பே கர்ஜித்தார்; அவர் கட்சி இன்னமும் அதில் இருந்து மாறவில்லை.அவரிடம் இருந்து பிரிந்த அவர் சகோதரி மகன் ராஜ் தாக் கரே, எம்.என்.எஸ்., கட்சியை ஆரம்பித்ததில் இருந்து மராத்தியர் கோஷத்தை வைத்து தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 13 இடங் களை அவர் கட்சி கைப் பற்றியது. "சட்டசபையில் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்; இல்லாவிட் டால்...' என்று எச்சரித்திருந்தார். ஆனால், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி , இந்தியில் பிரமாணம் எடுத்தபோது சபையில் பெரும் ரகளை செய்தது எம்.என்.எஸ்., இப்படி மராத்தி கோஷத்தை ராஜ் தாக்கரே கட்சி போட்டாலும், அவரின் கட்சியை சேர்ந்த புள்ளிகள் என்னவோ, தங்கள் குடும்பத்தினரை ஆங்கில பயிற்று மொழி பள்ளிகளில் தான் படிக்க வைத்து வருகின்றனர்.எம்.என்.எஸ்.,சின் சட்டசபை கட்சித் தலைவர் பால நந்தோன் கர், தனது மகளை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துள்ளார். அவரை கேட்டால்," மராத்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்; பிற மொழிகளுக்கு நாங்கள் எதிரி அல்ல' என்று விளக்கம் சொன் னார். இதே போன்று மாகீம் தொகுதியின் கட்சி எம்.எல்.ஏ., தனது மகனை பி.காம்., பட்டப்படிப் பில் சேர்த்துள்ளார். இவரது மகன் பள்ளிக்கல்வியை அங் குள்ள கான்வென்டில் ஆங்கிலம் வாயிலாக முடித்தவர். கல்யான் புறநகர் எம்.எல்.ஏ., ரமேஷ் பாட்டீல் மூத்த மகன் துபாயில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இளைய மகன் மும்பையில் கிறிஸ்தவ பள்ளியில் ஆங்கில மொழி வாயிலாக 6ம் வகுப்பு படித்து வருகிறான். விக்கிரோலி தொகுதி எம்.எல்.ஏ., மங்கீஸ் சாங்கீல் உடைய மூன்றரை வயது மகன் ஆங்கில விளையாட்டு பள்ளியில் படித்து வருகிறான்.கான்னாட் தொகுதி எம்.எல்.ஏ., ஹர்ஷவர்தன் மகன் அவுரங்காபாத்தில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் படித்து வருகிறார். இவர்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.,க்களான பிரவீன் தாரேக்கர், வசந்த் கீதே, சிஷீர் ஷிண்டே, உத்தம் ராவ் தங்களது குழந்தைகளை மராத்தி மொழி வாயிலான கல்வியில் சேர்த் துள்ளனர். "கட்சியினுடைய மராத்தி மொழி கொள்கைக்கும், தலைவர்களின் ஆங்கில மோகத் துக்கும் எவ்வித முரண்பாடும் கிடையாது' என்று கட்சியின் தலைவர்கள் சிலர் கூறினர்.கட்சி பிரமுகர் யஷ்வந்த் கில்லடார் கூறுகையில், "மராத்தி மொழி வழி கல்வியை பயின்று விட்டு எவராலும் உயர்கல்வியில், குறிப்பாக மருத்துவம், பொறியியல் தொழில்நுட்ப படிப்பில் சிறந்த தேர்ச்சி அடைய முடியாது; அதனால், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 In india each state is a independent country we call our self one nation because of british people. In each state we have our own language custom and culture .Now only we think hindi is our national language because of globalisation.We can learn our mother tongue automatically but learning other language is individual''s choice nobody can force it but giving opportunity is government''s duty. But unfortunately our bastard politicans make everthing political. India still needs to civilise ,India won''t be a super power until we stop dividing ourself in the name of race, religion, cast, state, language. Politicans using this differecne to favour them.god only knows when this will change, god please help us indians. 
by D B IRUDAYAM,UK,United Kingdom    21-11-2009 00:30:56 IST
 இவ்வளவு பேசுறிங்க ஏன் ஒட்டு போடும் போது தெரியல ?.

நம்முடைய எல்லா பிரச்னைக்கும் நாமலே தான் காரணம். நம்ம்பகிட்ட இருக்கிற பெரிய சக்தி ஓட்டு, ஆனா அதோட பலம் தெரியாம, அவன் பண்ணிட்டான், இவன் பண்ணிடனு புலம்பறதே வேலைய போச்சு.

பாவம் மக்கள், தங்களோட முழு சக்தி என்னனு தெரியாம போராடிக்கிட்டு இருக்குறாங்க, இத நல்ல தெரிஞ்ச அரசியல்வாதிங்க மக்கள் தலையில் மொளகா அரைக்கிறாங்க.

பத்திரிக்கையும் மத்த ஊடகங்களும் தான் மக்களுக்கு விழிப்புனர்யு ஏற்படுத்த வேண்டும். 
by p பிரபா ,Bahrain,India    18-11-2009 00:45:52 IST
 இறைவன் திருக்குரானில் ''இன்னும் வானங்கள் ,பூமிகள் ,வுங்களுக்கு மத்தியில் வுள்ள பல மொழிகள்.இன்னும் பல நிறங்கள் இவை அனைத்தும் எனது அத்தாட்சிகள்.இதனை செவி மடுத்து கேட்போருக்கு இதில் பல ஆதாரங்கள் இருக்கிறது '' என கூறி வுள்ளான். இந்த போதனை எல்லோருக்கும் பொதுவானதாகும். எனவே தாய்பாசையில் திறைமையாக இருப்பதோடு ஆங்கிலம் , ஹிந்தி ,போன்ற பாசைகளையும் அவசியம் படிப்பது இன்றைய வுலக சூழலில் மிகவும் அவசியமானதாகும்,நாட்டை நேசிக்கும் நாம் எல்லோரும் நாட்டில் வுள்ள எல்லா மொழிகளையும் நேசிக்கவே வேண்டும். ஹிந்தி நம் நாட்டு பாசைதான்.வெளி நாட்டு பாசை அல்ல. ஆனால் இன்று வுலகில் ஆங்கிலட்டிர்க்கு அடுத்து ஹிந்தி பாசை நிகராக வண்டு கொண்டு இருப்பதை அனுபவத்தில் பார்தவர்கள் விளங்கி கொள்வார்கள். அரபு நாடுகளில் அரபிகள் இன்று ஹிந்தி பாசையை ஆங்கிலத்தை விட மிகவும் திறமையாக பேசுகிறார்கள். எனவே மொழிகளை வைத்து விளையாடுபவர்கள் அதனை தங்களின் சுய,அரசியல்,கட்சி, குடும்பம் ,ஆட்சி,போன்ற விசயங்களுக்கு தானே தவிர வுன்மையில் இவர்கள் தமிழ் நாட்டை விட்டு வெளிமாநில,வெளி நாடுகளுக்கு செல்லும் போது தான் அதன் அவசியத்தை விளங்கி கொள்வார்கள். மராட்டிய மொழி வெறியர்கள் இந்திய ரூபாயில் ஏனைய அந்நிய மொழிகளும் இருக்கிறது என்பதற்காக இந்திய ரூபாய்களை பகிஸ்கரிக்க தயாராக இருக்கிறார்களா ? என்பதை அறிவிக்க வேண்டும். எனவே எல்லா மொழிகளும் இறைவன் மக்களுக்க வுருவாக்கிய மொழி தான் . இதில் நாம் பிரச்சனைகளை வுருவாக்கி கொள்வதால் நமக்கு ஒரு பயனும் ஏற்பட போவதில்லை. 
by ibnusalih,Abudhabi.u.a.e.,India    18-11-2009 00:20:52 IST
 ஹிந்தி மட்டுமே தெரிந்த பீகாரிகள் உத்தரபிரதேஷிகள் இங்கு நம் தமிழ் நாட்டில் கூலி வேலை செய்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் இங்கு எத்தனையோபேர் நன்றாக வாழ்கிறார்கள். மும்பையில் ஹிந்திவாலாக்களால் தான் பிரச்சினையே. இங்கிலீஷ் படிச்சவன் வெளிநாடு போய் சம்பாதித்து இந்தியாவையே வளமாக்கியிருக்கிரன். ஹிந்தி மட்டுமே படித்தவன் பல மாநிலங்களுக்கு கூலிக்காரனாக படையெடுக்கிறான். நாளைக்கே நான் ஹிந்தி படிக்கிறேன். எனக்கு யார் வேலை கொடுப்பார் கூறுங்கள். ஹிந்தி,பெங்காலி குஜராத்தி அல்லது எந்த மொழியையும் ஏன் சீன ஜப்பான் மொழி கூட படியுங்கள். ஆனால் ஹிந்திக்கு மட்டும் சிலர் வால் பிடிப்பது ஏன்? 
by Pazha Selvaraaju,Coimbatore,India    17-11-2009 23:46:08 IST
 we dont need Hindhi. English can help you to reach heights and for academics and business. What you do with hindhi ? They want to force Hindhi on us by telling patriotism and national integarity. Knowing hindhi is not a measure of patriotism. There are jawans who go to army and learn hindhi overthere. Likewise, if there is any need we can learn hindhi. There is no need to encourage other languages other than ones mothertongue. My point is clear mother tongue and one language which can feed you througout your life that is English will be more than enough. If there is any need that time one can learn hindhi. Dont encourage hindhi!  
by SL Dinesh,Dublin,Ireland    17-11-2009 23:38:56 IST
 அந்நிய மொழியை கற்கும் ஆர்வத்தில் பாதியையாவது இந்தியாவில் பெருவாரியான மக்களால் பேசப்படும் ஹிந்தியை கற்க காட்ட கூடாதா தமிழர்களே? ஹிந்தி நம் அண்டை மொழி அந்நிய மொழி அல்ல. 
by S Satha,TN,India    17-11-2009 23:03:58 IST
 Dear All
after your comment D.M.K & P.M.K leader and his grand childern will join in local govt school.

Thackrey and family party people also will join their child''s in govt.school tommorow.

happy ????  
by gladstone,chennai,India    17-11-2009 22:38:21 IST
 ஏன் அவங்க எல்லாரையும் குறை சொல்றீங்க அப்படி பட்ட ஆளுக்கு வோட்டு போடவேண்டிய்து பிறகு புலம்ப வேண்டியது.அவங்க தொழில் அது. 
by r jagadish,dubai,United Arab Emirates    17-11-2009 21:20:48 IST
 எத்தனை பேர் தமிழில் கருத்துக்களை பதித்திருக்கிறீர்கள்?
 
by N செல்வா,mumbai,India    17-11-2009 21:06:35 IST
 Can SSLC person speak English properly? ஹிந்தி பேச்சு 3 மாதங்களில் கற்றுகொள்ளலாம்... வாழ்க்கைக்கு உதவும் கல்வியை முதலில் கற்று கொடுங்கள்.. 
by km viswanathan,Bhubaneswar,India    17-11-2009 21:00:36 IST
 ங்கொய்யாலே.. நம்மை கிணற்று தவளைகளா மாத்தி.. பிறர் முன்னாடி படிப்பறிவற்றவர்கள் மாதிரி தலை குனிய வச்சிட்டார் இந்த கலைஞர். அவர் வூட்டாண்ட எல்லாரும் நல்லா ஹிந்தி இங்கிலீஷ் பேசுவாங்க.  
by R சாமீ,Wash., DC ,United States    17-11-2009 20:59:10 IST
 நம்ம அரசியல் வாதிகளும் சரி மராத்திய அரசியல் வாதிகளும் சரி தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டும் அல்லது மராத்தி மட்டும் தான் படிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் உடனே ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.. தமிழ் மற்றும் மராத்தி மொழியில் படித்து ஐம்பது சதிவீதம் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு மாநில அரசு வேலை கட்டாயம் என்று... அப்புறம் பேசட்டும் மக்களை கட்டுபடுத்துவது பற்றி. 
by மகாதேவன்,chennai,India    17-11-2009 20:57:57 IST
 ஒவ்வாரு நாளும் வெளிநாடுகளில் நாம் படும் கஷ்டம், இந்த அரசியல் சாக்கடைகளுக்கு புரியாது. தயவுசெய்து அனைவர் குழந்தைகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்று தாருங்கள். முக்கியமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி.  
by பாமரன்,Madurai,India    17-11-2009 20:20:33 IST
 நாம் பிறந்தவுடன் தாய் மொழி தான் கற்க ஆரம்பிக்கிறோம். இடையில் எந்த மொழி கற்றல்தான் என்ன தாய் மொழி மறந்தாபோயவிடும். படிப்பது எந்த மொழியில் இருந்தாலும் சிந்தனை நம் தாய் மொழியில் தான் இருக்கும். ஆங்கிலம் கட்டாயம் வேலைக்கு போக தேவை, ஹிந்தி இந்தியாவில் வேறு மாநிலத்துக்கு போக தேவை, தமிழ் கட்டாயம் நாம் பிறந்த மண்ணை காக்க தேவை. இப்போ பிரச்னை என்ன அரசியல் வாதிகள் பேய்சுதானே. அட அதெல்லாம் மேடைபேச்சப்ப.... அனால் என்னை பொறுத்தவரை அந்த அந்த மாநிலத்தில் அந்த அந்த மொழியில்தான் உறுதிமொழி எடுக்கவேண்டும். தாய்மொழியை காப்போம் தாயையும் மற்றும் தந்தையையும் காப்போம் நலமுடன் வாழ்வோம்.

இப்படிக்கு
ராஜாமணி ருவாண்டவிளிருந்து.  
by N Rajamani,kiglai,Rwanda    17-11-2009 19:40:02 IST
 Actually, in Mumbai, the people from all over India coming to work there, particularly north Indians. But the problem is the local have been denied jobs fearing that it may lead to unions. you are taking land from locals, telling that we will give you job, etc. like that. Finally they are cheated. Also if you are working in Mumbai, learning marathi is become difficult because of the presence of Hindi. If any body comes to tamil nadu, he must have to learn Tamil to survive there. The hindi language kills other languages. So give respect to local languages.English is a better language for all purposes.No body going to study,any type higher studies in Hindi.
Raj thackeray is correct. What is your problem taking oath in Marathi, in state legistative assembly. Is it possible to take oath in any other language other than Englsih in Tamil Nadu assembly. So whereever you go and live, try to respect the local culture , try to learn the local language. 
by mani,Qatar,Qatar    17-11-2009 19:33:45 IST
 இவங்கெல்லாம் திருந்தவே மாட்டங்க டோய்.... எவன் என்ன சொன்ன என்ன? ... நம்மளுக்கு புத்தி எங்க போச்சி? நிறைய மொழி தெரிஞ்சா என்ன குடியா முழுகிடும் ...
 
by K சரவணன்,chennai ,India    17-11-2009 19:33:42 IST
 நிறைய திறமை இருந்தும் சில தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதற்கு பிற மொழி அறிவு இல்லாததும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலைக்கு காரணம் நமது அரசியல்வாதிகள்தான். அதற்கு நமது மக்களும் ஆதரவு கொடுத்தார்கள்.இன்று அது மராட்டியத்தில் தொடர்வதில் ஆச்சரியமில்லை.  
by M ஆரிப் ,alkhobar,Saudi Arabia    17-11-2009 19:06:36 IST
 In Europe every kids needs to learn atleast 3 different european language in the European community. For a state like India we have to atleast 3 - 4 languages compulsory till 8th or 9th standard. It is very easier to learn more than 3 - 4 languages while they are young, to keep the pace of the world competition.

 
by A Khan,London,United Kingdom    17-11-2009 18:54:39 IST
 ஹிந்தியும்,ஆங்கிலமும் தெரியாமல் வெறும் தமிழை மட்டும் வைத்துக்கொண்டு நம் தமிழ் மக்கள் வளைகுடா போன்ற நாடுகளில் படும் பாடு,இந்த கருணாநிதி,தாக்கரே போன்றவர்கள் எப்படி அறிவார்கள்? 
by A tamizan,Dubai,United Arab Emirates    17-11-2009 18:21:43 IST
 தமிழ் நாட்டுக்கு ராமதாஸ் என்றால் மும்பைக்கு ராஜ் தாக்ரே ரெண்டு பேரையும் ஒரு ஏர் பூட்டி ஓட்டலாம் இந்த மாதிரி அரசியல் வாதிங்க இருக்கும் வரை நமது தேசம் முன்னேறாது  
by g mugilan,pondicherry,India    17-11-2009 18:08:30 IST
 நான் வேலை செய்யும் நாட்டில் நிறைய தமிழர்கள் கூலி வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு ஹிந்தி தெரியாது இதனால் அவர்கள் படும் கஷ்டம் அதிகம். தமிழன் அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு உருப்படாமல் போய் விட்டான். ஒன்றுக்கு மேற்பட்ட மொழி கற்பதில் தவறு இல்லை. தாய் மொழி தவிர பிற மொழி எழுத, படிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் பேச தெரிந்தால் மிக நல்லது. நம் குழந்தைகளுக்கு நாம் இதை செய்வோம் அதனால் அவர்கள் அறிவு வளரட்டும். 
by கோ க ,Qatar,Qatar    17-11-2009 16:11:50 IST
 மற்ற மொழிகளை கற்பதனால் எதுவம் குறைந்து விடாது, ஹிந்தியை கற்பதனால் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

கணேஷ். க, அகமதாபாத்திலிருந்து.
 
by G கணேஷ் ,Ahmedabad,India    17-11-2009 16:11:04 IST
 if you learn English,you become a world citizen,if you learn Hindi you are an indian citizen,if you learn Tamil only then you become narrow minded and fit to be a loud politician only.our students should become indians first and then world leaders 
by s ponnappa,london,United Kingdom    17-11-2009 15:23:22 IST
 எவன் என்ன சொன்னாலும், என் பசங்களை கட்டாயம் HINDI & English, படிக்க வைப்பேன்.

எனக்கு ஒரு சந்தேகம்

ஹிந்தி தெரியாட்டா ஒன்னும் குடி முழுகி போகாது. அதுக்கு பதிலா எதாச்சும் பிரெஞ்சு ஜேர்மன் மாதிரி படிச்சா வேல வெட்டி கெடைக்கும். சும்மா ஹிந்தி கட்டாயம் ஆக்கணும்னு சொல்லாதிங்க அப்புரம் நம்மளும் பீகார் மாதிரி ஆக வேண்டியது தான்
by S சுந்தர்,Pune,India

சுந்தர் என்ன, PUNE யில் இருக்கும் மக்கள்கிட்ட இட்டாலியன் ல பேசறாரா .. 
by E A DHANASEKARAN,palermo,Italy    17-11-2009 15:22:37 IST
 நண்பர்களே,

ஹிந்தி நமது தேசிய மொழி அதனால் நமக்கு தாய் மொழியும் முக்கியம், ஹிந்தியும் முக்கியம். நான் வெளி நாட்டில் வேலை பார்க்கிறேன். எனக்கு இங்கு நிறைய இந்திய நண்பர்கள் இருகிறார்கள். அவர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் எனக்கு மட்டும் ஹிந்தி தெரியாது. காரணம் கருணாநிதியும் அவருடைய கேவலமான அரசியலும். என் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக ஹிந்தி கற்பிக்க பாடு படுவேன். நண்பர்களே, நீங்களும் அதை செய்ய வேண்டும். தாய் மொழியும் முக்கியம், ஹிந்தியும் முக்கியம், ஆங்கிலமும் முக்கியம். அரசியல் வாதியின் பேச்சை நம்ப வேண்டாம்...

இப்படிக்கு இந்தியன்.
 
by S சுரேஷ்,Spain,India    17-11-2009 14:52:59 IST
 Mother tongue is must, compulsory ..With that u can learn other languages. That is the stand.. 
by S S,chennai,India    17-11-2009 13:40:32 IST
 ஹாய், ராஜ் தாக்கரே உன்னுடைய பெயரை சின்ன கருணாநிதி என்று மற்றி வைத்துக்கொள்ளவும், அவனும் இப்படித்தான் எங்களை சுமார் நாற்ப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு ஏமாற்றினான்
 
by c குருசங்கர்,india,India    17-11-2009 13:00:15 IST
  இந்தபடம் தமிழ்நாட்டுல ரெம்பநாட்களா ஓடுது  
by கா.உமாமணி ,புலியூரான்,wenzhou,China    17-11-2009 12:58:19 IST
 They are too late. Our Tamil nadu politician started these things 35 years back. They should visit Karunanidhi to learn more on this. They will reach our current status after 30 years. I wishing them all success. 
by DR Bashkaran,Bangalore,India    17-11-2009 12:50:22 IST
 இவ்வளவு தெளிவா இருக்கின்றோம் இந்த விஷயத்தில். அதெப்படி எலக்சன்ல மாத்தி போட்டுடறோம். 
by S Ravi,Chennai,India    17-11-2009 12:38:22 IST
 எந்த மொழியும் விஷம் அல்ல, அணைத்து மொழி அறிந்து கொள்வதில் தவறில்லை, ஹிந்தி நமது தேசிய மொழி அதனை அறிந்து கொள்வதில் தவறில்லை, தமிழகத்திலும் தேவை ஹிந்தி 
by J ஜெகதீசன்,cochin,India    17-11-2009 12:21:36 IST
 ஓய்யலே அங்கேயும் ஒரு கலைஞர் ஒரு ராமதாஸ் இருக்காங்க டோய் 
by t.s manikandan,madurai,India    17-11-2009 12:09:08 IST
 இந்தியாவிற்கு பொது மொழி ஹிந்தி தான் இருக்க வேண்டுமா? ஏன் தமிழ் இருந்தால் என்ன ? இந்திய அழிந்து விடுமா. இந்தியா பல மொழி கொண்ட நாடு. எல்லோருக்கும் அவர்கள் தாய் மொழி தான் சிறந்தது. பிற மொழி மீது ஆர்வம் இருந்தால் கற்றுக்கொள்ளலாம். அதில் தவறு இல்லை.  
by r raju,chennai,India    17-11-2009 11:35:24 IST
 தாய் மொழியை பேசுவது அரசியலுக்கு உதவும் . ஆங்கிலம் படிப்பது வேலைக்கு உதவும். ஹிந்தி படிப்பது மத்திய ஆட்சிக்கு உதவும்..... நம் அரசியல் வாதிகளுக்கு இது மட்டும் நன்றாய் தெரியும்
 
by g ganapathy,bangalore,India    17-11-2009 11:22:19 IST
 ஹிந்தி தெரியாட்டா ஒன்னும் குடி முழுகி போகாது. அதுக்கு பதிலா எதாச்சும் பிரெஞ்சு ஜேர்மன் மாதிரி படிச்சா வேல வெட்டி கெடைக்கும். சும்மா ஹிந்தி கட்டாயம் ஆக்கணும்னு சொல்லாதிங்க அப்புரம் நம்மளும் பீகார் மாதிரி ஆக வேண்டியது தான்  
by S சுந்தர்,Pune,India    17-11-2009 11:15:29 IST
 இது பொது மக்களுக்குத்தான் தவிர அரசிவாதிக்களுக்கு இல்லை. மொழி எனபது பொதுவான ஒன்று. அது திணிக்கும்போது தான் தவறே தவிர கற்பது தவறு இல்லை. இந்தி தெரியாமல் நம் மாநில சகோதர்கள் எத்தனை பேர் கஷ்டபடுகிறார்கள் ‌தெரியுமா . ...எல்லாம் போலி வேஷம்  
by கலை ராஜா ,திருச்சி ,India    17-11-2009 10:47:01 IST
 வெளங்கின மாதிரி தான். நம்ம மக்களை எப்ப எப்படி திருத்தறது? அவங்க பொழப்ப அவங்க கரெக்டா பாக்கறாங்க. நம்மதான் இப்படி பொழப்பு இல்லாம மெயில் அனுப்பிகிட்டு இருக்கிறோம். வாழ்க இந்திய ஜனநாயகம். வாழ்க இந்தியன்ஸ்  
by சேகர்,salem,India    17-11-2009 10:44:53 IST
 நம் தமிழ் அரசியல் வாதிகள், தமிழ் மட்டும் தான் கற்க வேண்டும் ஹிந்தியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு திரிவதால், தமிழன் தமிழ்நாட்டை விட்டு வேறு எந்த மாநிலம் சென்றாலும் அவன் படும் இன்னல்களுக்கு அளவில்லை. இவர்களால் மற்றவர்கள் படும்பாட்டை பற்றி இவ்வரசியல்வாதிகளுக்கு கவலையில்லை. ஹிந்தி தேசிய மொழி என்பதை ஏன் தமிழ் மக்கள் உணரமாட்டேன்கிறார்கள்...? தாய் மொழியை எவரும் வெறுக்க மாட்டார்கள் அதே நேரத்தில் மற்ற மொழியை கற்றால் தாய் மொழிக்கு ஆபத்தும் வராது. 
by A அப்துல்லாஹ்,KUWAIT,Kuwait    17-11-2009 10:44:21 IST
 இந்தியர்கள் அனைவரும் இங்கிலீஷ்,ஹிந்தி,இது இரண்டும் உங்கள் தாய் மொழியுடன் சேர்த்து கற்றுக்கொள்ளுங்கள். 
by A SARBUDEEN,DELHI,India    17-11-2009 10:40:39 IST
 அட விடுங்கப்பா,,
நாம தமிழ் நாட்டுல தான் இத எப்போதே ஆரம்பிசிட்டோமே,,, பாவம் பால்தாக்கரே இப்பதான் ஆரம்பிச்சிருக்கார்,,, வாழ்க பாரதம்,,
என்னை பொறுத்த வரை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தனி நாடு தான்,,, ஒவ்வொன்றிற்கும் தனி மொழி தான்,,, ஹிந்தியை இந்தியாவின் பொதுவான மொழி, அரசு சார்ந்த அனைத்து அலுவல்களிலும் ஹிந்தி தான் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு சட்டம் வந்தால் தான் இதற்கெல்லாம் ஒரு விடை கிடைக்கும்,,, இன்றைக்கு சட்ட மன்றத்தில் ஹிந்தி பேசக்கூடாது என்று சொல்பவர்கள் நாளை பாராளுமன்றத்திலும் சொல்ல மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்? பாராளுமன்றத்தில் உள்ள அதனை உறுப்பினர்களும் அவனவன் மாநில மொழியில் பேசிக்கொண்டிருந்தால்,, ஒருத்தன் பேசுவது ஒருத்தனுக்கு புரியாமல் ,பாராளுமன்றத்தை இழுத்து மூடிட்டு வீட்டுக்கு போக வேண்டி தான்,,
ஜெஹிந்த்  
by m nethaji,dubai,India    17-11-2009 10:39:41 IST
 The Nation is much more important than any individual. Just throw the persons who are against the Nation''s unity. He might be politicain or any one else, for us the Nation is more important than any individual. Let us play Developement politics. Think about how to improve the living condition of every individual of this country. Youth of this nation has very big responsibilty. I already took my responsibility on my shoulders. are you ? 
by S தம்பிதுரை,madurai,India    17-11-2009 10:34:47 IST
 நீங்கள் அனைவரும் கருணாநிதிக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்கள் ஆனால், ஒட்டு போடும்போது மட்டும் காசு வாங்கிட்டு கருணாநிதி குடும்ப கட்சிக்கு ஒட்டு போடுறீங்க, உபதேசம் ஊருக்கு மட்டும்தான் என்பது கருணாநிதி குடும்பத்துக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும்தான் . 
by p velmurugan,madurai,India    17-11-2009 10:33:52 IST
 நல்லா சொன்னிங்க திரு. சுந்தரம்..  
by E நண்பன்,Makati,Philippines    17-11-2009 10:33:45 IST
 நமது ராமதாஸ் மற்றும் கருணாநிதி குடும்பமே இதற்கு நல்ல உதாரணம் .தமிழ்நாட்டில் ஹிந்தி ஒரு பாடமாக ஆக்க வேண்டும் . 
by T ராம்ப்ரசாத்,madhyapradeh,India    17-11-2009 10:17:57 IST
 இந்த பிரிவினைவாதிகளை நடு முச்சந்தியில் கழு மரம் ஏற்றும் சட்டம் வரவேண்டும்
 
by b VELMURUGAN,MADURAI,India    17-11-2009 10:06:00 IST
 தமிழோ, ஹிந்தியோ, ஆங்கிலமோ எது தெரியா விட்டாலும் நமது அரசியல்வாதிகளுக்கு பணம் பண்ணுவது மட்டும் பொது மொழி. 
by S கணேசன்,Hosur,India    17-11-2009 10:03:54 IST
 Any politician, who vouches for mother tongue is a hypocrite. In tamilnadu, Dr. Ramadoss says that only Tamil everywhere. His son Dr. Anbumani, during an interview in Zee Tamil, spoke 80% English. Dr. Ramdoss''s grandchildren study in English medium and well versed in Hindi.

Karunanidhi''s daughter Kanimozhi was educated in Church Park convent. She worked in THE HINDU. Karunanidhi''s grandchildren studied in English Medium and are well versed in Hindi. Stalin''s son, addressed him as dad in one of the interviews.

All the wards of Anti Hindi agitation people study in Hindi and continue to get the scholarship from Government.

As a first step, Govt. of India, should impose Hindi as compulsory throughout India. In Germany, every German citizen knows German, In France, every French citizen, in Russia, every Russian citizen knows Russian. In India, everyone has got his own language.

First, let us all unite with a common language. There should be a legislation, that, in Parliament, no debate in English shall be allowed and only Hindi should be used.

The MPs from Tamilnadu, after getting elected to Parliament, the first job they do is learn Hindi. This was done by Shanmugam of PMK, Thirumavalavan of VCK, etc,.

Bloody hypocrite politicians.

If the TN govt. has got guts, let it conduct a referendum, whether, to accept Hindi or not.

 
by AR RAHMAN,TINDIVANAM,India    17-11-2009 09:55:50 IST
 இந்த கூத்து ஏதோ மகாராஷ்டிரத்துல மட்டும் தான் நடக்குற மாதிரி செய்தி வெளியிடுவது பத்திரிகைகளுக்கு நல்லதல்ல. தமிழ் எங்கள் உயிர், ஹிந்தி எங்கள் மயிர் என்று சூளுரைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் மறைமுகமாக ஹிந்தி படிக்க வைத்தது பத்திரிகைகளுக்கு தெரியாத செய்தியுமல்ல. நல்லதல்ல. 
by v sundaram,jeddah,Saudi Arabia    17-11-2009 09:43:11 IST
 ஒரு மொழி, பேசுவதேற்கே தவிர அரசியல் செய்ய அல்ல. தமிழ் மொழியை தமிழ்நாட்டில் உள்ள எல்லாரும் படிக்க வேண்டும் என்று கட்டாயம் ஆகலாம். ஆனால் தமிழ் வழி கல்வி நிச்சயம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். இந்தியாவுக்கு என்று ஒரு பொதுவான மொழி இருக்க வேண்டும். அது ஹிந்தியாக தான் இருக்க முடியும். தயசெயய்து யாரும் அரசியல் வாதிகளை நம்பாதீர்கள் ! 
by V கணேஷ் பாபு,chennai,India    17-11-2009 09:42:58 IST
 இங்க தமிழ்நாட்டில் மட்டும் என்னவாம் ??? எல்லா அரசியல் வியாதிகளும் தன் பிள்ளைகளுக்கு HINDI ENGLISH மற்றும் வெளிநாடு கல்வி!!!! இதுக்கு பேருதான் ''சாத்தானின் வேதம்'' ... உருப்பட்ட மாதிரி தான் ...  
by m குமார்,kovai,India    17-11-2009 09:39:11 IST
 Thackrey and family = Karunanidhi and Family
 
by k sri,Chenn,India    17-11-2009 09:18:32 IST
 எல்லாம் நம்ம கலைஞர் காட்டிய வழி.........
வாழ்க பாரதமணித்திருநாடு ..........
 
by sp ராஜேஷ்,CHENNAI,India    17-11-2009 09:18:30 IST
 கருணாநிதி குடும்பம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு  
by m karthik,kerala,India    17-11-2009 09:17:34 IST
 தமிழகத்திலும் ஹீந்தி ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே இந்த இந்தியனின் வேண்டுகோள்!! 
by வா செல்லப்பாண்டி,அரபு நாடு,India    17-11-2009 08:58:07 IST
 தமிழ்நாட்டுல ஆரம்பிச்ச கதை இப்போ மகாராஷ்டிராவுல தொடருது, இதுல புதுசு ஒண்ணுமில்ல பாசு.  
by CSK shanawaskhan ,Mumbai,India    17-11-2009 08:41:41 IST
 ஹிந்தி வேறு இங்கிலீஷ் வேறு . ஹிந்தி ஒரு விஷம் . ஆனால் இங்கிலீஷ் நம் வளர்ச்சிக்கே உதவும் . தமிழ்நாட்டிலும் இதைத்தான் சொல்கிறார்கள், மஹாராஷ்ட்ராவிலும் இதைத்தான் சொல்கிறார்கள். ஹிந்தி ஒழிக , தமிழ் வாழ்க ... 
by m mathiyazhagan,chennai,India    17-11-2009 08:35:52 IST
 வாழ்க மராத்திய மொழி, வளர்க இவர்களது தொண்டு. தமிழ் நாடு 35 ஆண்டுகளுக்கு முன்பே இதை ஆரம்பித்து இப்பொழுது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவர்கள் கலைஞரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. இவர்கள் எங்கள் நிலையை அடைய இன்னும் 35 ஆண்டுகள் ஆகும். 
by DR பாஸ்கரன்,Bangalore,India    17-11-2009 07:23:11 IST
 தப்பே இல்ல. அவர்கள் ஹிந்தியை படிக்கவில்லை, மாறாக இங்கிலீஷ்தான் படிக்கிறார்கள்.  
by A கோவிந்தா,Hyderabad,India    17-11-2009 05:44:45 IST
 MNS seem to be against Hindi rather than English. They seem to start following Tamilnadu. I welcome this move. Soon the imposed language Hindi will lose its importance further!!! 
by C சுரேஷ்,Charlotte,United States    17-11-2009 04:51:39 IST
 தமிழகத்தில் மட்டும் என்ன வாழ்கிறது? ஹிந்தியை எதிர்த்த குடும்ப கட்சி தலைவரும் தமிழுக்கு ஆதரவாக கோஷம் போடும் ஜாதி கட்சி தலைவரும் என்ன செய்தார்கள்? தங்கள் பிள்ளைகளை தரமான காண்வென்டில் படிக்க வைத்து ஹிந்தி, ஆங்கிலம் பேச வைத்து அழகு பார்த்தார்கள். ஏழை, நடுத்தர மக்கள் தான் தமிழும் முழுமையாக தெரியாமல், ஆங்கிலமும் கடினமாகி தமிங்கிலீசால் அவதிப் படுகிறார்கள்.
 
by வெங்கி,திருவாரூர்,India    17-11-2009 04:46:12 IST
 ஊருக்கு சொல்வார்களாம் உபதேசம்,ஆனா வீட்டுக்கு சொல்ல முடியுமா,ஏமாற்றி சம்பாரித்த சொத்து என்னாவாகிறது,இதுவெல்லாம் ஆட்டத்தில் சகஜாம்மா வர்ட்டா.இது எப்படி இருக்கு. 
by m.y முஹம்மத் அமின் ,paris,France    17-11-2009 04:42:36 IST
 அட போங்கப்பா இதெல்லாம் ஒரு விஷயமா? நம்ம தமிழ்நாட்டுல இது காலம் காலமா நடந்துட்டு இருக்கு. மகாராஷ்டிரா ல இப்போ தான் ஆரம்பிச்சிருக்காங்க.

தனி தமிழ்நாடு கேட்டு போரடினவங்க தான் இப்போ சத்தமில்லாம காங்கிரஸ் கூட கூட்டணி வச்சிக்கிட்டு இருக்காங்க.  
by M பாலமுருகன்,Plano TX,United States    17-11-2009 03:05:17 IST
 ஏன் கருணாநிதி குடம்பத்த பத்தி எழுதலே ? 
by குமார்,chennai,India    17-11-2009 01:55:35 IST
 ஊருக்குத்தான் உபதேசம்...நம்ப தானைத் தலைவர் கலைஞர் மட்டும் என்னத்த கிழிச்சாராம்...அவருடைய குடும்பம் என்ன பஞ்சாயத்து போர்டு பள்ளிகூடத்துலய படிச்சது?  
by k vidhya,mumbai,India    17-11-2009 01:54:14 IST
 எல்லாம் மக்களை ஏமாத்துற வேல. நம்ப ராமதாஸ், நம்ப முதல்வர், பசங்க, பேரங்க எல்லாம் ஆங்கில மீடியம் தான் படிச்சாங்க. நம்ல மாதிரி மக்கள் மட்டும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வேல இல்லாம சுதனும். நூறுக்கு ஓட்டு மட்டும் போடணும்.

இவன்
இந்தியன்
வெங்கட்
 
by N வெங்கடேசன்,Chennai,India    17-11-2009 00:59:29 IST
 I know someone from Maharashtra. He is my mentor. He studied in Marathi medium, scored state first, came within top 10 university rank, then passed chemical engineering in IIT with top rank, did his PhD in Texas, USA and works for a leading oil company in the USA. Politicians are same whether it is Maharashtra or our TN. They preach one thing for the people and do exactly opposite for their own family. 
by vk kalyan,nj,United States    17-11-2009 00:53:56 IST
 அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் உபதேசம் எல்லாம் ஊருக்குதான். தனக்கு இல்லை என்பது காலம் காலமாக நடந்து வரும் விஷயம் தானே. ராஜ்தாக்கரே மற்றும் பால்தாக்கரேயிடம் இந்த விஷயம் தொடர்பாக கேட்பதற்கு மக்களிடம் பல நூறு கேள்விகள் உள்ளன. ஆனால் ஒரு கேள்விக்குக் கூட உருப்படியான பதிலை அவர்களிடம் இருந்து நாம் பெற முடியாது. அரசியல்வாதிகளின் மொழி எதிர்ப்பு போரட்டத்தின் காரணமாக இந்தியாவிலே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் தான். வெளிமாநிலங்கள் மற்றும் அரபு நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தான் அந்த வலி தெரியும். மற்ற மொழியை கற்பதால் தாய் மொழி அழிந்துவிடும் என்று நினைப்பது பெரும் முட்டாள்தனம். அது அவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்களுக்கு மக்கள் நலனா முக்கியம். நம் அண்டை மாநிலங்களில் 3 மொழிகள் பாட மொழிகளாக உள்ளன. ஆனால் நம்மை விட அதிகம் அவர்களிடம் தான் தாய் மொழி பற்று உள்ளது. அவர்களிடம் பிற மொழிகலக்காமல் பேசும் திறன் அதிகம் உள்ளது. ஆனால் நம்மிடம் உள்ளதா என்றால் இல்லை.  
by M Amanullah ,Dubai,United Arab Emirates    17-11-2009 00:35:27 IST
 நம்ம ராமதாஸ் ஐயா குடும்ப கத மாதிரி இருக்கு... 
by அந்நியன்,Atlanta, GA,United States    17-11-2009 00:33:38 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்