முதல் பக்க செய்திகள் 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்?
நவம்பர் 18,2009,00:00  IST

Front page news and headlines today

வளமான நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் இரண்டரை லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இந்திய சமூகத்தினர் அங்கு நல்ல பணிகளில் இருந்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், படித்து முடித்த பிறகு, அங்கேயே நல்ல வேலைகளைப் பெற்று நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அண்மையில் இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவங்களை வைத்து, அந்த நாட்டை மதிப்பிட்டு விடக்கூடாது.இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வருகிறார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்கும் மாணவர்களை, உயர்கல்விக்காகப் படிக்க வருபவர்கள், தொழிற் கல்விக்காக படிக்க வருபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். உயர்கல்விக்காகப் படிக்க வரும் மாணவர்கள் தாக்கப்படுவது என்பது மிகவும் குறைவு. தொழிற் கல்விக்காக படிக்க வரும் மாணவர்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.இந்திய மாணவர்களில் ஒருபிரிவினர், இளநிலைப் பட்டங்களைப் படித்து விட்டு, உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா வருகிறார்கள். மற்றொரு பிரிவினர் பிளஸ் 2 படிப்பை முடித்து விட்டு, கேட்டரிங் டெக்னாலஜி, ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட், ஹேர் டிரஸ்ஸிங் போன்ற தொழிற் கல்வி படிக்க வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். பிளஸ் 2 முடித்து விட்டு, ஆங்கிலம் நன்கு பேச முடியாத மாணவர்களுக்கு தகுந்த பகுதி நேர வேலை கிடைப்பது மிக அரிதாக உள்ளது. வட மாநிலங்களில் இருக்கும் சில ஏஜண்டுகளும் அந்த மாணவர்களுக்கு சரியான தகவல்களைக் கூறுவதில்லை.நீங்கள் ஆஸ்திரேலியா போய்விட்டால், படித்துக் கொண்டே அங்கு வேலை செய்து கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு அவர்கள் நம்பிக்கையூட்டி விடுகிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வந்துவிட்டு அந்த மாணவர்கள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். கட்டாயமாக வேலைக்குச் சென்றால்தான் படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு உரிய பகுதி நேர வேலை கிடைப்பதில்லை. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே, பகல் நேரங்களில் வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும்.ஆங்கில அறிவு போதுமான அளவுக்கு இல்லாத நிலையில், மணிக்கு 2 டாலர்கள், 3 டாலர்கள் என்ற சம்பளத்தில், தங்கியிருக்கும் இடத்திற்கு வெகுதொலைவில் இரவு நேரத்தில் பணி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் தனியாகச் செல்வது உகந்தது அல்ல என்ற பகுதிகளின் வழியாக, இந்த மாணவர்கள் பணி முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் போதைப் பொருட்களை உட்கொள்பவர்கள், அதிகமாக மது அருந்தியவர்களினால் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளின் வழியாக நடந்து செல்லும்போது, போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் இவர்களை மிரட்டி பணம் கேட்கிறார்கள்.பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்கிறார்கள். போதையில் இருக்கிற அவர்கள், எதிரே வருபவர்கள் யார், எந்த நாட்டினர் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருப்பதில்லை. அடித்து அவர்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் நடப்பதில்லை.இரவு நேரங்களில் மட்டுமே நடக்கின்றன. எனவே, தொழிற் கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கச் செல்லும் மாணவர்கள், முன்னதாகவே முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேருவது நல்லது.ஆஸ்திரேலிய கல்வித்துறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அண்மையில், நான்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், 300 இந்திய மாணவர்கள் உட்பட, இரண்டு ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. விளம்பரங்களைப் பார்த்தும் ஏஜண்டுகள் மூலமும், அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சில நேரங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகிறார்கள். அதுபோன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டு விடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டு, அந்த மாணவர்களை வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்றுகிறார்கள்.இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இயங்கும் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து தணிக்கை செய்யும் பணியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வருகிறது.இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கான விதிமுறைகளை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது .hcindia-au.org/students_guidelines.html ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள், ஏதாவது பிரச்சினைகளை எதிர் கொண்டால், இந்திய தூதரக அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சிட்னி, மெல்போர்ன், கான்பெரா, பெர்க் ஆகிய நகரங்களில் 24 மணி நேர தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருப்பவர்கள் கான்பெராவில் உள்ள அலுவலகத்துடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்திய மாணவர்கள் செய்யும் புகார்களின் அடிப்படையில், ஆஸ்திரேலிய அரசும் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டுப் படிப்புக்கு ஏற்ற வகையில், ஆங்கில மொழி அறிவு தேவை. தொழில் படிப்புகளில் சேரும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களது படிப்பின் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களில் செய்யும் பயிற்சிப் பணிக் காலம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த காலகட்டப் பணிகளுக்கு ஊதியம் இல்லாமலும் இருக்கலாம். அங்கு படிக்க வரும் மாணவர்கள், வாரத்திற்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் நாம் எவ்வளவு வருவாய் ஈட்ட முயலும் என்பதையும், எந்த அளவுக்கு பொருளாதார வசதி இருக்கிறது என்பதையும், மாணவர்கள் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.பொதுவாக ஒரு செமஸ்டருக்கு மூன்று ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் வரை படிப்புக் கட்டணம் இருக்கும். அங்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு மாதம் ஆயிரம் டாலர் அளவுக்கு பணம் தேவைப்படும். பகுதி நேர வேலையின் மூலம் இந்தப் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நல்ல ஆங்கில அறிவு இல்லாவிட்டால், பகுதி நேர வேலைக்கு நல்ல பணிகள் கிடைக்காது. எனவே, ஊதியமும் அந்த அளவுக்கு ஈட்டமுடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் நமக்கான உரிமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சேரும் கல்வி நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளை ஆஸ்திரேலிய தூதரகங்கள் மூலம், முன்னதாகவே தெரிந்து கொண்டால் பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.                                  - தினமலர் ஆஸ்திரேலிய சிறப்பு நிருபர் சி. கோவிந்த் ராஜ்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 truth alone triumphs.... this cover story is 100% true,,I am living here in melbourne for more than 3 years and never ever felt racism...
even in India there are brawls between communal groups,you cant say that as racism.
 
by தரணி ஜனதத்தன் ,melbourne,Australia    18-11-2009 21:06:24 IST
 இந்தியாவில் இல்லாத படிப்பு பட்டம் வேறு எங்கு உள்ளது?இதை ஏன் பல பணம் படைத்தவர்கள் மறந்து விடுகிறார்கள். SO,
அனுபவி ராஜா அனுபவி.... 
by G KRIS,DENHELDER,Netherlands    18-11-2009 20:54:06 IST
 இந்த செய்தி நகைபிற்குரியாது, ஆஸ்திரேலியாவில், சீனர்களும், பிளிபினே நடினரும் பெருமளவில் மலிவான வாடகையில் ஒதுக்குப்புர நகர் பகுதிகளில் தங்கி இருக்கிறார்கள், இரவு நேரத்தில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு சுட்டு போட்டாலும் அங்கிலம் வராது.

எந்த காலத்திலும் சீனர்களும், பிளிபோநோக்களும், முசல்மான்களும் ( வட ஆப்பிரிக்கா ) ஆஸ்திரலியாவில் அடி வாங்கியது கிடையாது,

இது எல்லாம் இந்தியர்களின் தலை எழுத்து, இது பிஜி, பர்மா, உகாண்டாவில் நடந்தது, லங்காவில் நடக்கிறது ( லங்கா தமிழர்கள் இந்திர்கல்தனே ), இன்னும் எல்லா நாட்டிலும் நடக்கும்  
by SK Srini,chennai,India    18-11-2009 20:35:42 IST
 Thanks to Dinamalar, Each & every country there is certain rules & restrictions , we want to opey , so ''weal & woe in our hands ''
 
by P. Sivakumar,abidjan,Cote dIvoire    18-11-2009 20:21:37 IST
 i think, moham sahu statement is correct. நானும் இங்க நிரந்தரவாசி தான் .  
by mr senthil,brisbane,Australia    18-11-2009 18:34:06 IST
 i love my india 
by s ராஜா,chennai,India    18-11-2009 18:22:15 IST
 This article totally diverting the issue. It is not confirmed that all the students are attacked by drug addicts. So many students are attacked in day time as well. Our embassy weak in all over the world not only in Australia. In middle east the situation is for worst than Australia. There are so many companies in Saudi not paying the wages properly and you cannot get any help from emabssy.  
by Mr Priyan,kuwait,India    18-11-2009 18:01:08 IST
 இந்திய மக்கள் பல நாடுகளில் உள்ளனர், மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை தேடுகின்றனர், அவர்களுக்கு நாள் தோறும் ஓர் வெளிநாடு பற்றிய செய்திக் கட்டுரைகளை வெளியட வேண்டுகின்றேன்  
by கணேஷ்,maldives,Maldives    18-11-2009 17:58:27 IST
 yes this 110% true dinamalar.. i have been here for last 10 years i the PR with happy family... Australia knows more about india .even when our cricketers visit here the whole media ballon any problem which is very very ordinary thing in india .. i have worked 20 years in india mumbai delhi and calcutta.. every north and western part our country has racisim problem .. how many times me and brother and sister in mumbai humiliated by mumbains just because we are from south.. even at tea shops .. here there is no such things.. we indians has heroism and talk very loud in public places.. doesn''t understand the manners while travlling in train and bus and even when walk on the road... we have to learn the kindness and tolerance from aussies...they are very friendly.. at my work place i am the only indian in my company they treat me like king .. they love indians.. they love our culture and food..the list go on.. learn the good thing/not the bad one.. even in mumbai it is not advisable to travel in night times.. same in calcutta.. even in chennai we cannot walk on the road after 10.p.m let us forget what others do to you.. be normal ... we indians (north indians) shouldn''t over react for this.... hindi and hindi speaking people are alone indians.. india has many diversity and culture... even we don''t celebrate dewali festival on same day thoughout india.. once a souther film hero quoted hindi films are not the only movie makers in india... many many talented others people also excel in india from other parts of india.. let us keep this and live like human thanks  
by r ramamurthy,melbourne,India    18-11-2009 17:01:01 IST
 படிக்க போனோமா வந்தோமா இந்தியாவில் வேலை செய்தோமா என்றில்லாமல் அங்கேயே தங்கிவிட்டு இப்போது குய்யோ முறையோ என்று கத்துவது இந்தியா நம் தாய் இங்கேயே உழையுங்கள்  
by s ராமலிங்கம்,mysore,India    18-11-2009 16:27:01 IST
 100 சதவிகிதம் உண்மையான தகவல் இது. தினமலர்க்கு பாராட்டுக்கள் .... 
by b amjath,warrawong,Australia    18-11-2009 15:57:51 IST
 Is that 100%true. samy,Australia 
by N SAMY,S.A,Australia    18-11-2009 15:48:07 IST
 thanks for the advice to the future indian students 
by m saranya,sydney,India    18-11-2009 15:44:02 IST
 actually it''s true article, those people attacked in australia they were not good in habbits, they lot of time went night club and make lot of ladies relationship, in foreign culture the ladies is equal how here we friends with male, so they will just make you friend and leave and find another friend, but our guys try to chase the ladies, so it''s first reason, saturaday night they must stay in their home, but 20-25 % students usually go to pub, it''s not wrong but any thing will happen in their it make issue, first we must behave good ourself, actaully 3 month before, they guy attacked in sydney he went club at night and come back so he was drunk, but media in india hide this thing. so we first accept our mistakes then blame other people 
by k viswanathan,thiruvarur,India    18-11-2009 15:42:49 IST
 கேட்பதற்கு ஆளில்லை என்ற ஒரே காரணம் தவிற வேறு எதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது அவர்கள் தேசப்பற்றாகக்கூட இருக்கலாம் .  
by TR JOTHIMURUGAN,SANKARI,SALEM.,India    18-11-2009 15:20:29 IST
 Good and Useful Article. We expect more articles like this. 
by Mr Shankar,Chennai,India    18-11-2009 14:46:54 IST
 whoever writing stupid comments, whom does n''t understand sitution, please this country, go back to india. why tamil don''t get robbed in mumbai or delhi any other state in india (except TN). Don''t feel sorry for the north indian, even here they called us bloody madrasi. I am very happy when i saw the news about north indian curry bashing. Tamilian always in top and also not get kicked out. Tamilian only getting kicked out in tamil nadu and tamil eelam. Australia , especially melbourne is good place live without a fear and bribe. This a good report. congrats reporter and dinamalar. 
by S விஜயகுமார்,melbourne, victoria,Australia    18-11-2009 14:37:58 IST
 mostly true.
Nobody works for $2 or $3 ph. The lowest illegal wage is about $10 ph.
The legal government approved wage is about $18ph ($25 ph on sunday).
I was a student in 1995 and my par time wage was $10 (un approved) in an Indian restaurant.
80% of the employees pay government approved wages for part time work.

Indian students tend to stay in bad areas to save on rent.
 
by k Swami,Sydeny,Australia    18-11-2009 13:00:40 IST
 அப்படி போய் அங்கே என்னத்த தா படிச்சு கிழிக்க போறாங்களோ ??? 
by ப ரமணி,Heaven city, near the hell, The God.,India    18-11-2009 12:49:21 IST
 நல்ல கட்டுரை. நாம் அங்கு சென்று அவர்களுடன் ஒன்றி வாழவேண்டும். அதை விடுத்து, நான் இந்தியன், இப்படித்தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததன் விளைவுதான் இவ்வளவு பிரச்னைகள். என்னுடைய உறவினர் ஒருவர் ரஜினி பித்து. ஆஸ்திரேலியா சென்ற பிறகு சிவாஜி திரைப்படம் வெளியான போது கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் நடத்தி உள்ளார். நிறைய பிரச்னைகளை சமாளித்து பிறகு தன் வேலைய பார்க்க தொடங்கி உள்ளர். So, know rules of that country and respect their feelings. you will never have problem 
by CA Sreeram,Chennai,India    18-11-2009 12:37:21 IST
 என்னமோ இது ஆஸ்திரேலியா வில் மட்டும் நடப்பது மாதிரி வட இந்திய ஊடகங்கள் இதை பெரிது படுத்துகின்றன . இதை விட அதிகமான சம்பவங்கள் வளைகுடா நாடுகளில் முக்கியமாக சவுதி அரேபியாவில் நடக்கிறது.
இங்கு வட மாநிலத்தவர் குறைவு என்பதால் ஊடகங்கள் முக்கியத்துவம் தருவதில்லையோ என்னவோ .

தமிழ்காதர்
சவுதி  
by m tamilkader,dammam,Saudi Arabia    18-11-2009 12:23:28 IST
 It looks like true news. Please think about our ordinary people/pupils'' status/environment in India. If there is a will, there is a way. Try to understand others and adjust us to achieve goals.  
by AA Moorthy,Parramatta,Sydney,Australia    18-11-2009 11:42:07 IST
 THANKS FOR YOUR ADVISE GOVIND. 
by M.KARTHICK,tamilnadu,India    18-11-2009 11:35:32 IST
 this mater is useful.thank you.
valga valamudan,
S''Amar 
by s'ama ச'amarnath,oman,India    18-11-2009 11:28:30 IST
 மலையாளிகள் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறார்கள். குறுக்கு புத்தியில் வல்லவர்கள். ஆனால் செல்லுமிடத்துக்கு ஏற்ப வளைந்து கொடுத்து எந்த பிரச்ச்சினையும் இல்லாமல் காசு பார்க்கும் திறனை அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். 
by KK காமராஜ்,Trichy,India    18-11-2009 11:21:29 IST
 ஆஸ்திரேலியாவில் ஒரு இந்தியன் தாக்கப் படுகிறான் அதுவும் இங்கிருந்து அங்கு சென்றவன் .. (குறிப்பாக தாக்கப்படுகிறவர்கள் வட இந்தியர்கள்) இதற்கு அரசாங்கமும் உடனடியாக தன் கண்டனத்தை அந்த நாட்டிற்கு தெரிவிக்கிறது. ஆனால் இங்கு என் மீனவ சகோதரர்கள் அந்நிய படையினரால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகிறார்கள் நம் எல்லைக்குள்ளேயே, இதற்கு அரசாங்க சக்ரவர்திகளின் வாய் திறப்பதே இல்லை, ஏன்? தமிழர்களும் இந்தியர்கள் தானே? இல்லை யென்றால் அரசாங்கமே சொல்லிவிடு தமிழர்கள் நிவாரண நிதி திரட்டவும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஓட்டுப்போடவும் மட்டும் தான் என்று....... 
by T Vickram,oman,India    18-11-2009 10:37:35 IST
 It is a True Report. Big cities in the world face these type of incidents even in Bombay, Delhi some areas some people attacked every day.
Last 6 Years good number of students came to Australia for higher studies and setteled well in Australia. Good Place for Indians compared other countries like USA or UK. 
by R Swamy,Sydney,Australia    18-11-2009 10:34:55 IST
 I agree with the reporter Mr. Govindaraj and this is the true fact . Students ( North) who come to study here should have some human manners and respect for other people while talking and travelling in Public places.Once they come from India over here, these people think that they are in heaven and the behaviour is so bad when we see our countryman acting like it. Thanks Dinamalar for this truthfull report  
by MRS செந்தமிழ் செல்வி Pradish,Brisbane, Australia,Australia    18-11-2009 10:15:01 IST
 We would try to make our next generation. no one can brain train, we hope god will mercy! 
by ansari uae,AbuDhabi,India    18-11-2009 09:55:00 IST
 It looks like true news. Please think about our ordinary people/pupils'' status/environment in India. If there is a will, there is a way. Try to understand others and adjust us to achieve goals.  
by AA Moorthy,Parramatta,Sydney,Australia    18-11-2009 09:39:54 IST
 இது போன்ற உண்மையான கட்டுரைகள் தேவைப்படுகிறது. ஒரு பேப்பர் அதில் ஒரே ஒரு கரும் புள்ளி யாரை இந்த பேப்பரில் என்ன இருக்கிறது என்று கேட்டால் கரும்புள்ளி என்றுதான் சொல்லுவார். அதை சுற்றி உள்ள முழு வெண்மையான பேப்பரை சொல்லுவது இல்லை. அனைவரும் குற்றங்களை பெரிது படுத்தி பார்க்கிறோம். we have to change the attitude alot.  
by TJ MUTHU,Srirangam, Trichy,India    18-11-2009 09:38:09 IST
 It looks like true news. Please think about our ordinary people/pupils'' status/environment in India. If there is a will, there is a way. Try to understand others and adjust us to achieve goals.  
by AA Moorthy,Parramatta,Sydney,Australia    18-11-2009 09:27:34 IST
 now you are in correct position. investigation wonderful. correct news.வாழ்க தினமலர். 
by Mr biju R,Iran,India    18-11-2009 09:24:57 IST
 100% true statement. I live in Melbourne since 2003. I never faced any racism issue till now. Also have you ever heard of any Indian girl attacked anytime/anywhere in Australia, because they never go out alone in midnight carrying valuables?

I recommend Australia is best country to live, especially Melbourne city.  
by A ராம்,Melbourne,Australia    18-11-2009 09:07:51 IST
 Everything is not true.... Indian students are good in english.... But those who came in spouse visa mainly punjabi''s and Andra people have been attacked... This is only due to lack of communication...they cant even understand what they are speaking, that must be the main reason.
Some Australians are really good... But dont believe these f....ing politicians...!!! 
by G Karthick,Melbourne,Australia    18-11-2009 08:59:54 IST
 நம் நாட்டிலேயே மராத்தி மண்டயனுங்க, பீகார் ஆளுங்க அவங்க ஊர்ல வேல செய்ய கூடாதுன்னு அடிக்கறாங்க! அதே கதைதான் அங்கயும்!
செந்தில்,பொள்ளாச்சி.  
by S செந்தில். ,பொள்ளாச்சி. ,India    18-11-2009 08:56:07 IST
 இந்தியன் is a unlucky men
 
by jrd rajadurai,dubai,India    18-11-2009 08:47:16 IST
 உண்மையில் நம் ஆட்கள் நிறைய பேர் ஆஸ்திரேலியர்களின் வேலை வாய்ப்பினை தட்டி பறிக்கின்றனர்.
அதாவது படித்துக்கொண்டே செய்யும் பகுதி நேர வேலைகள்:-இதற்கு அவர்கள் கோபப்பட காரணம்,படிக்கச் செல்லும் மாணவர்கள் அந்த நாட்டின் ஸ்காலர்ஷிப் போன்ற சலுகைகளுடன் குறைவான செலவில் படிப்பதுடன் வேலை செய்தும் சம்பாதிகின்றனர்.
மேலும் மாணவர்கள், போலியான திருமண சான்றிதழுடன் படித்த பெண்ணை கூட்டி சென்று அவருக்கு கிடைக்கும் நல்ல வேலையால் கிடைக்கும் வருமானத்தை பங்கிட்டு கொள்கின்றனர்.
இப்படி அங்குள்ள சட்டத்தின் அணைத்து ஓட்டைகளையும் பயன்படுத்தி செய்யும் தில்லாலங்கிடி வேலைகளை கண்ட அந்த ஊர் வேலை இல்லா வாலிபர்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் விளைவுகள்தான் இது.
(இன்னும் நிறைய உண்மைகள் உண்டு)
கோபி,பிரிஸ்பேன்,ஆஸ்திரேலியா  
by T கோபி,பிரிஸ்பேன்,ஆஸ்திரேலியா,India    18-11-2009 08:38:33 IST
 பயனுள்ள கட்டுரை, நன்றி தினமலர். பொதுவாக வெளி நாடு செல்லும் (எந்த நாடாக இருந்தாலும்) அனைவரும் தாங்கள் செல்லும் நாட்டை பற்றி, முக்கியமாக அவர்கள் சேரும் வேலை, அல்லது கல்வி நிறுவனம் பற்றி விசாரித்து செல்வது நல்லது.  
by d siva,kualalumpur,Malaysia    18-11-2009 07:52:22 IST
 This news is 100% right . The students / people from North should learn about politeness and how to talk to others. They should realize that they have come to australia only for studies by spending their parents'' hard earned money. Australia is not your Bollywood to show your heroism !! 
by Mr X,Aus,India    18-11-2009 07:11:49 IST
 Hi,
The repoter has got kickback from Aussies to write these kind of message. Long live Indian tradition 
by moham sahul,melbourne,Australia    18-11-2009 06:53:14 IST
 I want respond to the ex student of australia in his comment ''Swimming pool attack'' in Melbourne. This happend on Saturday night at the Epping Pub they were inside the premises of the pub. Saturday night till morning they drink a lot like all cities.
Dear Friend think the positive side how many students got PR and living in Australia with good life and inviting ther parents to live in Australia. There are one or two incidents happend like all other countried including India. 
by R Swamy,Sydney,Australia    18-11-2009 06:41:39 IST
 The news published is true. I want to respond the Ex Australian student comment - ''he said ''the swimming pool attck''. This happend in Melbourne on Saturday night at outside the Epping pub where the bashing occurred.
There are one two attacks happend like all other countries including India. Friend look for big picture not small things. How many Indians students getting PR and work having good life in Australia. 
by R Swamy,Sydney,Australia    18-11-2009 06:26:20 IST
 i dont understand how come people going to study in Australia for degree after +2 and work for 2$ ,3$ per hour for survival. For this type of survival people would have continue their study in india itself.

Beggers, drug gangs, racists gang are everywhere in the US, London. They will harm people for money or create fun for themselfs when they see Asians.

Moreover indians are getting hit by so many places like Malasyia, Dubai when they left india for work as skilled labours. No politicians raised their voices why now ???

 
by k குமார்,Singapore,Singapore    18-11-2009 06:24:02 IST
 இந்த செய்தி மிகவும் தேவையானதாக இருக்கிறது. குறிப்பாக இந்திய ஹை கமிஷன் இனையதளம் எல்லோருக்கும் பயனுள்ளது. 
by R Venkat,Chennai,India    18-11-2009 06:06:54 IST
 Hi,
The report is 100% true. The students face lots of problem here. Working and studying and living by their own without any support is very difficult. As a lecturer in a college, I hav seen so many struggling very hard to get settled.  
by B ஆஸ்திரேலியன் REsident,Sydney,India    18-11-2009 05:25:29 IST
 நம்மவர்கள் 2, 3 டாலர்களுக்கு கூட வேலை பார்ப்பதால் அங்கு வேலை இழந்தவர்கள் செய்த செயல் இது..... மூடி மறைக்க ஒன்றும் இல்லை..... cheap labor concept அங்கு எடுபடாது.... இது எப்போதும் தீராது.... இப்படி தான் இருக்கும்.... நாம் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 
by Saravanan,Madurai,India    18-11-2009 05:16:47 IST
 I want to tell this truth to every one i my family, but they find it difficult to understand. My family in india are regular dinamalar reader, So they will understand, on reading this article. Thank you dinamalar, Thank you so much. Atleast bring some peace to the parents mind. 
by Mr அருண் தேவ்,Meblourne,India    18-11-2009 05:05:37 IST
 ரெம்ப நாளைக்கு அப்புறம் ஒரு உண்மையான கட்டுரை. 
by R ராஜா,USA,India    18-11-2009 04:20:39 IST
 half true , half false, i agree with rules and regualtion and visa conditions etc,.
But students getting hurt is not only due to drug addicts in street, If this is true why one of the student is attacked in his home (i read this one in Dinamalar last week or so), and another students got attacked in swimming pool arena (I read the same thing in dinamalar).

So the thing is Australian Govt is not taking any good action same like India, SM Krishna came to AUs for visit (May be luxurious Tour) and left a statement ''we will take action'' , same happens with Kevin Rudd PM Aus , left a statement ''we will take action''

But What the #***@! is the action?
can dinamalar explains us what it is ????? 
by ஆஸ்திரேலியா எக்ஸ் ஸ்டுடென்ட்,Australia,Australia    18-11-2009 04:08:39 IST
 govindaraj annan sonna thagavalkku nanrie 
by anand,saudi arabia,Ireland    18-11-2009 02:41:58 IST
 At last your reporter writing something true. Keep follow the same analysis to other news 
by M Rajesh,Coimbatore,India    18-11-2009 01:15:11 IST
 execelent brief news, welldone. 
by R Saravanan,Sudan,India    18-11-2009 01:08:01 IST
 this is 100% true. thanks dinamalar.

Regards,

G.RAGHUPATHY 
by G RAGHUPATHY,sydney-west,Australia    18-11-2009 00:40:19 IST
 எனக்கு சரியாகபடவில்லை ,இந்த காரணங்கள் மட்டுமாக இருக்க முடியாது ,வேறு காரணங்களும் இருக்கலாம்  
by p pp,aus,India    18-11-2009 00:30:54 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்