முதல் பக்க செய்திகள் 

பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடி :கேரள நிபுணர் குழு பரிந்துரை
நவம்பர் 19,2009,00:00  IST

Front page news and headlines today

கூடலூர் : பெரியாறு அணையில் நீர்க்கசிவு அதிகம் இருப்பதாகக்கூறி நீர்மட்டத்தை 130 அடியாக நிலை நிறுத்த வேண்டும், என அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கேரளநிபுணர் குழு புதிய பரிந்துரையை முன்வைத்துள்ளது.பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் அண்மையில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் 135 அடியை எட்டியது. நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்த போது கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல் அணைப்பகுதியை பார்வையிட்டு நீர்க்கசிவு அதிகம் உள்ளதாக கேரள அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று கூறுகையில், ""113 ஆண்டு பழமைவாய்ந்த பெரியாறு அணையின் 18வது மதகில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நீர் கசிவு குறித்து, ஆய்வு செய்வதற்காக முன்னாள் தலைமை பொறியாளர் என்.கே.பரமேஸ்வரன் நாயர் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது. நீர் கசிவு குறித்து ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கை அளிக்கும்படி இந்த குழுவிடம் அறிவுறுத்தப் பட்டுள்ளது,'' என்றார்.

இந்நிலையில், பரமேஸ் வரன் நாயர் தலைமையிலான கேரள நிபுணர் குழு நேற்று மாலை திடீரென அணைப்பகுதிக்கு சென்றது. படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் வல்லக்கடவு வழியாக ஜீப் மூலம் அணைப்பகுதிக்கு வந்தனர். மெயின் அணை, பேபி அணை, ஷட்டர்பகுதிகளை பார்வையிட்டனர். மெயின் அணையின் 130வது அடியில் 17, 18 பிளாக்குகளில் நீர்க்கசிவு அதிகம் இருப்பதாக இக்குழு தெரிவித்துள்ளது. இதனால், அணையில் தற்போது 135 அடியாக உள்ள நீர்மட்டத்தை 130 அடியாக்க வேண்டும் என கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இக்குழுவில் முன்னாள் கேரள தலைமை பொறியாளர் சசீதரன், நீர்ப்பாசன தலைமை பொறியாளர் லத்திகா, கண்காணிப்பு பொறியாளர் ராதாமணி இடம்பெற்றிருந்தனர்.

சுப்ரீம் கோர்டில் பெரியாறு அணை பிரச்னை குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து திடீரென நிபுணர் குழு, அணைக்கு ஆய்வு செய்ய சென்றது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் அடுத்த மீறலும் அரங்கேறியுள்ளது.பெரியாறு அணை நீர்மட்டத்தை 130 அடியாக நிலை நிறுத்த வேண்டும் என்ற நிபுணர் குழுவின் அறிக்கை தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரத்திடம் கேட்ட போது, ""அணையில் நீர் கசிவு ஏதும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக, இவ்வாறு தகவல் பரப்பப் படுகிறது,'' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 குடும்ப அரசியல் பார்க்கவே நேரம் பத்தல. பின்ன எங்க தமிழ் நாடு மக்கள பத்தி யோசிக்க போரானங்க. தலை எழுத்து என்னவோ அதுதான் நடக்கும்...தமிழன்தான் எப்பவுமே இளிச்ச்சவாயான் ஆச்சே.. 
by S லக்ஷ்மணன் ,Tiruppur,India    20-11-2009 09:21:50 IST
 இவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்களா அல்லது வேறு நட்டவரா எத்தனை மலையாளி தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். யோசி இண்டியா. எனது தாய் நாடு என்றால் மனிதனை மதிக்க கற்றுக்கொள்ள பிடிவாதம் செய்யாதே  
by god கோட்ஸ் ஓவன் country,salem,India    19-11-2009 21:57:07 IST
 அச்சுவின் நிபுணர் குழு அச்சி சொன்னபடி கேட்கும். அதற்க்கு சொந்தமா அறிவு இருக்குமா என்பது சந்தேகமே. நிபுணர் குழு வில் தமிழ்நாட்டு காரங்களும் இருக்க வேண்டும். இந்திய உலகத்தை பற்றி கவலை படுவது போலே மாநிலங்களை பற்றியும் கவலிப்பட வேண்டும்
 
by mo பெடோசி thajudheen,trichy,India    19-11-2009 13:45:35 IST
 கேரளா அரசு தமிழனை ஒன்றும் அறியாத கோமாளிகள் என்று நினைதுக்கொண்டிருக்கிறது அதை மத்திய அரசு வேடிக்கைபார்துகொண்டிருக்கிறது
 
by k. கண்ணதாசன்.,jordan.ammaan.,India    19-11-2009 13:02:12 IST
 உண்மையான அரசியல் தமிழன் எங்கே? எங்கு தேடினாலும் சுயநலம் மிகுந்தவர்களே தமிழ்நாட்டில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும். 
by B Balamugan,Al Hassa,Saudi Arabia    19-11-2009 12:30:21 IST
 what kerala is doing is a calculated move to nullify supreme court order regarding dam ht,, most trecherous people. no sympathy should be shown to malayalees in tamilnadu!!!
natarajan 
by gk nnn,chennai,India    19-11-2009 10:45:03 IST
 கேரள அரசு யாரையும் மதிப்பதாகத் தெரியவில்லை. எப்போதும் அணை மீது கண்கொத்தி பாம்பாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது.மத்தியில் உள்ள அரசு வேடிக்கை பார்க்கிறது.சரியான நீதி கிடைக்கும் வரை இந்த மாதிரியான செயல்களை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா? 
by ப சங்கர்,தேனி,India    19-11-2009 09:22:13 IST
 how they enter into the dam without permissin tn the case in sc . how kerala dare to do ?mallus are more selfish /mostcunning /nomantheneyam we tamials very soft /emotionally attached that is why we are suffering pity for tamils what tngovt is doing wt thangabalu is doing ? 
by s venugoapal,guarat,India    19-11-2009 07:55:47 IST
 this cunning malayalee is not going to sleep until distroying this dam.they want Tamils to suffer. This jealouse malayalees r enemy for Indian unity
 
by g ஜாய்,chennai,India    19-11-2009 07:17:38 IST
 KERALA AND CHINA ARE THE ONE AND SAME. CHINA IS THREAT TO INDIAN UNION FROM OUTSIDE AND KERALA FROM INSIDE 
by MR RAMESH RAYEN,ABU DHABI,United Arab Emirates    19-11-2009 00:40:31 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்