முதல் பக்க செய்திகள் 

சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் பல கோடி மோசடி : சி.பி.ஐ., சோதனை தொடர்கிறது
நவம்பர் 27,2009,00:00  IST

Front page news and headlines today

சென்னை விமான நிலைய கார்கோ (சரக்கு) பிரிவில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடந்த ஆண்டில் அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் கஸ்டம்ஸ் வரி தொகையை, அதிகாரிகள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், கார்கோ பிரிவில் தங்கள் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர்.சென்னை விமான நிலையத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் நடத் திய விசாரணையின் அடிப்படையில் ஏர் கார்கோ காம்ப்ளக்சில் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். இந்த வழக்கில், மேலும் நான்கு கஸ்டம்ஸ் அதிகாரிகளும், நான்கு ஏஜன்டுகளும் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணை நேற்று துவங்கியது. அந்த பார்சல்கள் எந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை; அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதியில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள் ளன; யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர்; எவ்வளவு லஞ்ச தொகை பேரம் பேசப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சென்னை விமான நிலைய கார்கோ மூலம், 22 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கையாளப்பட் டுள்ளன. இந்த பொருட்களுக்கு உண்மையான வரி விதிப்பு விதிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், பத்தில் ஒரு பங்கு கூட வரியாக வசூலிக்கப்படவில்லை. இது தான் தற்போதைய விசாரணை தீவிரத்திற்கு காரணம்.வழக்கமாக, ஏர் கார்கோவில் இருந்து பொருட்களை டெலிவரி எடுப்பது, இரவு 7 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரை நடக்கும். வெளியாட்கள் தங்களை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு ஏர் கார்கோ பிரிவிற்குள் சோதனை தொடங்கிய போது, 30 பார்சல்கள் டெலிவரி செய்யப்படாமல் கிடந்தன. அதில், உபயோகப்படுத்தப்பட்ட பழைய துணி என்று குறிப்பிடப்பட்டிருந்த பார்சல் ஒன்றில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் இருந்தன. மேலும், சில பார்சல்களில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் காணப்பட்டன. இந்த வகையில், பெரும்பாலான பார்சல்கள் உரிய மதிப்பு குறிப்பிடாமல், குறைந்த மதிப்பிட்டு, கேட்பாஸ் தயார் செய்யப்பட்டுள்ளதையும், இதன் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் கஸ்டம்ஸ் வரி மோசடி செய்யப்பட்டிருப்பதையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பார்சல்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் தங்கள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது, முடக்கி வைக்கப்பட்ட பார்சல்களின் உரிமையாளர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, உரிய வரியைச் செலுத்திவிட்டு டெலிவரி எடுக்கும்படி உத்தரவிட்டனர். முதற்கட்டமாக, மூன்று பார்சலுக்கு சொந்தமான நிறுவனங்கள் நேரடியாக வந்து, உண்மையான மதிப்பிற்கு வரி கட்டிவிட்டு பார்சல்களை டெலிவரி எடுத்துச் சென்றன. இதேபோல், மற்ற பார்சல் உரிமையாளர்களையும் வரவழைத்து, முடக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணையில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சி.பி.ஐ., சோதனையைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் நடந்து வரும் லஞ்ச, லாவண் யம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பல புகார் மனுக்கள் பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கஸ்டம்ஸ் பிரிவில் சி.பி.ஐ., தொடர்ந்து சோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தலைக்கு இரண்டு "புல்' லஞ்சம்: சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சென்னைக்கு பொருட்களை கடத்தும் ஏராளமான, "குருவி'கள் உள்ளனர். இவர்கள், பெரிய வியாபாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். தினசரி 100 பேர், "குருவி'களாக சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இவர்களிடம் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் லஞ்சமாக பணத்தை பெறுவதில்லை. மாறாக, ஒவ்வொரு, "குருவி'யும் தலா இரண்டு "ஜானிவாக்கர்' பிராண்டு மது பாட்டில்களை கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு பாட்டிலும் 1,200 ரூபாய் மதிப்புடையது. இவ்வாறு தினசரி சேகரிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்பதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கிறது. இந்த பாட்டில்களை வாங்குவதற்காகவே சென்னை நகரில் பல ஏஜன்டுகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களும் சி.பி.ஐ.,யின் பார்வையில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.கோடிகளில் புரண்டனர்: சென்னை விமான நிலைய கார்கோவில், முறைகேடாக வரும் சரக்குகளை வெளியே எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்தனர். இது குறித்து சி.பி.ஐ., நடத்திய சோதனையில், ஒன்பது கஸ்டம்ஸ் அதிகாரிகள், இரண்டு ஏஜன்டுகள் உட்பட 11 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். இதில், மற்ற அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ., பார்வையில் விழுந்துள்ள அந்த நான்கு அதிகாரிகளில், இரண்டு அதிகாரிகளுக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளும், வெவ்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.                                                                                                   - நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 myself and my husband had very bad experience with these officers.they treated us like animals.we are really wondered whether they are really educated are not.they were dying for money to deliver our delayed baggages from Ireland.is is not awful.what tha superiors are doing there? 
by christina,Dublin,Ireland    27-11-2009 23:31:01 IST
 officers in Trivandrum airport the most currupt in the country  
by G Dave,london,United Kingdom    27-11-2009 22:00:32 IST
 In Trivandrum air cargo, even if you are prepared to pay the customs duty, you would be threatened with 100% duty, if you don''t pay up bribe. There must be detailed info on the rate of customs duty when you book the air cargo. Camera survilence on the air cargo pemises will help too. 
by N Nanjil,Dubai,United Arab Emirates    27-11-2009 17:04:27 IST
 if you corrupt you home, then every one at the family has to come to the street. same way example applicable for country also. 
by M ராம்,Coimbatore,India    27-11-2009 16:32:59 IST
 ஜெயக்குமார் தாங்கள் சொல்லுவது சரி. அரசின் நடவடிக்கை மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் படம் பிடிக்கிற காமெரா கண்காணிப்பு, அழகான மேஜைகள், சுகாதாரமான அலுவலகம், இருக்கையில் உட்கார்ந்தாலே வேலை செய்யும் எண்ணம், சூழ்நிலை உருவாக வேண்டும்  
by a எ,tamilnadu,India    27-11-2009 16:18:52 IST
 Recdently customs the Chennai Sea Port Customs had busted a multi-crore smuggling racket which involved exporting fertilizer brought into the country by government for sale at concessional rates to farmers. Muriate of Potash (MOP) was exported to various countries in the name of industrial salt.... This was a multi crore scandal which some good officers in the Customs Dept unearthed. Now there is this group of thugs also within the same department. Customs officers visiting ships in various ports in India also have a bad reputation with the foreigh sailors. They are harrassed and the Captains are required to shell out a big booty of Cigarettes, Alcohol etc. This should also be stopped. The seafarers are helping in the import/export of the country and should be treated like this. 
by R Magesh,Bremen, Germany,India    27-11-2009 16:09:40 IST
 சரியாய் சொன்னார் ஜெயகுமார்! எங்க ஆபீஸ்ல என்ன ரூல்ஸ் தெரியுமா ! நாங்க, கஸ்டம்ஸ் ஆபீசிக்கு போகும் போது, நீட் டிரஸ் மற்றும் சூ கண்டிப்பாக போட வேண்டும். ஆனா, கஸ்டம்ஸ் ஆபீஸ்ல எல்லாரும் ஷர்ட் கூட இன் பண்ணாம & சப்பல் போட்டுண்டு வர்ற ! These people should work on the time given by Govt. ! But coming at 11 or 12 and working upto midnight just to show they are working over time but they are robbing not begging from the people !  
by R பாலாஜி,Chennai,India    27-11-2009 15:10:51 IST
 Kudos to CBI .It is very pity to know that the corruption has deep rooted in majority of the GOI & GOTN departments where the mass public participation is involved . The Kuruvi Racket operated by the Hawala Businessmen to be eradicated totally . Even Reliance iNdustries also evaded the Customs Duty for their Patalaganga Project in mid 80''s . CBI should raid all the airport terminals to bring the erring Officials in to task . GOI & CBI should take a no off initiative to eradicate corruption & for revenue to the Govt.
M Duraivel , Tiruchi. 
by M Duraivel,Tiruchirapalli.,India    27-11-2009 12:19:42 IST
 Thanks CBI 
by M Jaikumar,Dubai,India    27-11-2009 12:03:25 IST
 பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால்தான் கீழ்மட்டத்தில் இருப்பவர்களை கட்டுபடுத்த முடிவதில்லை. அதே சமயம் அதிகாரிகளின் இந்த போக்கிற்கு அரசியல்வதிகல்தான்
காரணம் என்பதை மறுக்க முடியாது. அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதை நிறுதினல்தான் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை கட்டுப்படுத்த முடியும். நடக்குமா?  
by r mgr,karur,India    27-11-2009 11:25:19 IST
 ஒரு ஏர்போர்ட்-ல் இவ்வளவு என்றால், நாட்டில் உள்ள மற்ற எயர்போர்ட்-ல் எவ்வளவு என்று மதிப்பிட்டால், நண்பர் ஒருவர் சொன்னது போல், நாட்டின் பஜ்ஜெட் -ல் மூன்று மடங்குக்கும் மேல் வரும். இதில் சிபிஐ நாடு தழுவிய முறையில் சோதனை செய்து பணத்தையும், பொருளையும் பறிமுதல் செய்வார்களா?
 
by T நரசிம்ஹன்,NEW DELHI,India    27-11-2009 10:34:35 IST
 please try to do same practice in sea customs as they have been doing this 100 times more than air customs...anyway it is good beginning do not let it go and keep up the good work cbi 
by s ஷரப்சம்,chennai,India    27-11-2009 10:20:58 IST
 இந்த மாதிரி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யும் அதிகாரிகளை உடனடியாக வேளையில் டிஸ்மிஸ் செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கும் இதை யார் செய்வார்கள்? சட்டம் தன் கடமையை செய்யுமா?  
by B யுவராஜ்,Komarapalayam,India    27-11-2009 10:08:56 IST
 நாட்டில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சோதனை செய்து அவர்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்தாலே போதும் நம் நாட்டுக்கு இனி மூன்று வருடங்களுக்கு பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லை. இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணி புரிவோர்க்களுக்கு நான் சொல்வது எத்தனை உண்மை என்பது தெரியும். அந்த அளவுக்கு சக்கையாக பிழிந்து விடுவார்கள் இந்த கஸ்டம்ஸ் அதிகரிகள். 
by a பசுபதி,doha,Qatar    27-11-2009 10:04:17 IST
 GOOD CBI.PLEASE CHECK IN TUTICORIN customs ALSO .... 
by L ANTONY,bangalore,India    27-11-2009 10:04:12 IST
 I take this opportunity to thank our Dinamalar editor for giving such a detailed information obout this unpresedented corruption gang,it remainds me the news about the leading countries in corruption India stands tall in 84th place, no one dispute that Statistics,if we want to bring down to less 10th place or near, all those who involved in this mass corruption should be punished not in private but in public,that will be very honest way to hold indian reputation in the twenty first century,we know there is loot of puplicity about this CBI action but no single CBI officers can eradicate years of corruption,unless those who are responsible must be punished, i am a hindu ,my father also worked for government but he was honest,and he never ever breach govt law,i am proud of my Dad, 
by Baskar Reddy,Auckland,New Zealand    27-11-2009 09:00:31 IST
 good job CBI. i would say that they have got on 10% of the guys in customs. Still there are more.... better to get involved deeply and investigate neck to neck. lot of wealth would have been registered in their relative names . 
by I rambo,madras,India    27-11-2009 08:26:45 IST
 திருச்சி கஸ்டம்ஸ் இதை வீட ரொம்ப மோசம், சென்னை கஸ்டம்ஸ் ஆபீசர்ஸ் அனைவரும் நன்றாக லஞ்சம் வாங்கி மிகவும் வசதியாக வாழ்கை நடத்துகிறார்கள், நடவடிக்கை தொடரட்டும்  
by k viswanathan,taiwan,India    27-11-2009 07:38:47 IST
 இது மட்டும் இல்லை இன்னும் தோண்டுங்கள் பல உழல்கள் வெளிவரும் . இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்கிறேன் . சிங்கப்பூர் .  
by s sivakumar,peravurani,neelakandapuram,Singapore    27-11-2009 06:29:07 IST
 CBI is doing good Work. Now a days govt services (Custom, Revenue...etc) are much more corrupted. Corruption in politics and Govt services is killing so many helpless people’s life.  
by s shankar,Chennai,India    27-11-2009 05:00:19 IST
 தோண்ட தோண்ட பூதம் கிளம்பும் போலிருக்கே? ஆனால் இப்போ நாலு நாளைக்கு சோதனை போட்டா போதுமா? அவங்க வாசல் பக்கம் ஒதுங்கி போனதும் இவங்க கொல்லைப் பக்கம் வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. மொத்தத்துல மக்கள் பாடுதான் திண்டாட்டம். 
by ஜெமினி,திருவாரூர்,India    27-11-2009 04:23:44 IST
 realy i thanks to CBI.because of catch them.yes they are licensed beggers.they must punish.do you,how much they are earning per day?how many passengers are going coming.they are getting begging in all the passengers.so please take action immediately.and one more idea.please arrange the vigilence officers in the airport.Thats why we can avoid the like the problems. 
by s ravivarma,abudhabi,United Arab Emirates    27-11-2009 02:40:28 IST
 இது போல் மக்களுக்கு எதிரான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடு படுபவர்களை பற்றிய செய்தி வெளியிடும் பொது அவர்களின் புகைப்படம் மற்றும் பெயருடன் வெளியிட வேண்டும்.

அது மக்களுக்கு அவர்களை அடையலாம் காட்ட உதவும். மேலும் அத்தகைய செயலில் ஈடுபடும் மற்றவர்களும் கொஞ்சம் திருந்த உதவும். 
by S ஸ்ரீராம்,Kumbakonam,India    27-11-2009 02:03:36 IST
 This Central Ministry & dept,is under DMK & DMK supported Ministers,for past 11 years.Pl calculate ,how much loss to govt,how much money for posting,not only in Chennai but throughout India.PM WILL NOT TAKE ANY SUITABLE & REMEDIAL ACTION. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    27-11-2009 01:46:13 IST
 நம்ம ஊர் அதிகாரிகளை சில வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள சம்பத்தப்பட்ட அலுவலகங்களில் வேலை செய்வோரைக்காட்டி ''Professionalism'' என்றால் என்ன என்பதைக்காட்டவேண்டும். அதிக சம்பளம் போக லஞ்சங்களை வாங்கிக்குவிக்கும் இவர்கள் பஞ்ச பரதேசிகளைப்போல உடயணிந்து அலுவலகம் வருவதும் , வேலையே செய்யாமல் ஊர்க்கதை பேசுவதும், செய்யும் வேலைகளையும் மிக மெதுவாக கவனமின்றி செய்வதும் , அதற்கு கையூட்டு பெறுவதும் பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது.
என்று தான் திருந்துவார்களோ, தெரியவில்லை. 
by M ஜெயக்குமார்,Chennai,India    27-11-2009 01:43:19 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்