முதல் பக்க செய்திகள் 

நியாயம் கிடைக்க போர் தொடுப்பதில் தவறில்லை : நோபல் பரிசு பெற்ற ஒபாமா பேச்சு
டிசம்பர் 11,2009,00:00  IST

ஆஸ்லோ : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு நேற்று வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற அவர், "நியாயத்திற்காக, நெறிகளுடன் போர் தொடுப்பதில் தவ றில்லை' என்று பேசினார்.நடப்பு 2009ம் ஆண்டுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்படும் என, கடந்த அக்டோபர் மாதம் நோபல் பரிசு கமிட்டி அறிவித்தது. "சர்வதேச அளவிலான உறவுகளை பலப்படுத்தவும், மக்களிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அவர் மேற்கொண்ட சிறப்பான பணிகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது' என, நோபல் கமிட்டி தெரிவித்தது.நார்வேயின் ஆஸ்லோ நகரில் நேற்று நடைபெற்ற வண்ணமிகு விழாவில், தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை பெற்றுக் கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது: மகாத்மா காந்தி மற்றும் சிவில் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரே எனது ஹீரோக்கள். அவர்களின் கொள்கை மற்றும் வாழ்க்கையில், பலவீனம் என்ற பொருள் எதுவும் இல்லை, அடங்கிப் போதல் மற்றும் அசட்டை என்று எதுவும் இல்லை. ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில், அமெரிக்காவை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. காந்தி, மார்ட்டின் லூதர் கிங் காட்டிய வழிகளை மட்டும் நான் பின்பற்ற முடியாது.ஒரு நாடோ அல்லது மற்ற நாடுகளின் உதவியுடனோ, சில நேரங்களில் நியாயத்தை நிலைநிறுத்த போரிட வேண்டும். உலகம் எப்படி உள்ளதோ, அந்த அடிப்படையிலேயே நான் அதை சந்திக்க வேண்டும். அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தல் வரும் போது, அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. வன்முறையை ஒழிக்க முடியாது என்ற கடினமான உண்மையை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள் அல்லது மோசமானவர்களின் ஆதிக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற நாடுகள் சில நேரங்களில் போர் நடத்த வேண்டியது அவசியமான ஒன்று. ஹிட்லரின் ராணுவத்தை அகிம்சை போராட் டத்தின் மூலம் நிறுத்தி இருக்க முடியாது. அதேபோல், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் அல்-குவைதா தலைவரை ஆயுதங்களை கீழே போடச் செய்ய முடியாது.அமைதியான உலகம் உருவாக போரும் சில நேரங்களில் அவசியமே. அதற்காக கெட்ட நோக்கத்துடன் போரிடும் சுபாவம் கொண்டதல்ல அமெரிக்கா. எனக்கு முன் இந்த அமைதி விருதைப் பெற்றவர்கள் வரலாற்றில் பெரியவர்கள். அந்த அளவுக்கு நான் பெரியவன் அல்ல என்றார். விழா மண்டபம் வெளியே, போர் எதிர்ப்பாளர்கள் என்று கூறி சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் ஒருவர், "ஒபாமா அமைதி விரும்பி அல்ல' என்பதால், ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரிவித்தார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஒபாமா சொன்ன கருத்து மற்றும் வார்த்தைகள் முற்றிலும் தவறு. பிரச்சினைகளின் மூலம் கண்டு அதை நிவர்த்தி செய்வதே நல்ல தலைவனின் செயலாக இருக்கும். 
by P ஜெயகுமார் ,Kuwait,Kuwait    12-12-2009 19:15:52 IST
 அமெரிக்கா மட்டும் சொல்லலாம் நியாயத்தை நிலைநிருத்த போரிடலாம் என்று விடுதலை புலிகள் போரிட்டால் பயங்கரவாதமா ? 
by செ செல்வகுமார்,doha,Qatar    11-12-2009 20:27:36 IST
 ஒபாமா சொல்வது சரிதான். வடிவேலுவை மற்றும் இந்தியாவை போல் எப்போதும் அடி வாங்கிகொண்டு இருக்க முடியாது.

நோபெல் கமிட்டி, பரிசு கொடுத்து அமரிக்காவின் கையை கட்டிபோட எண்ணியது அனால் எங்கள் ஜனதிபதி ஐரோப்பியர்கள்ளுக்கு நல்ல ஆப்பு வைத்தான்.
கோ ஒபாமா...

 
by ஜகன் எஸ்,Chicago, USA,United States    11-12-2009 19:24:46 IST
 OIL கிடைக்க போர் தொடுப்பதில் தவறில்லை என்று சொல்லி இருக்கலாம்! உண்மையாக இருந்திருக்கும்! 
by m இந்தியன்,india,India    11-12-2009 19:20:02 IST
 நோபல் பரிசே உனக்கும் வந்த கெதியை நினைத்து எனக்கும் வேதனை, அவமானம், வெக்கம்... ....

அடப் போகட நீகலு உகட நோபல் பரிசும்............. 
by M riyas,Al-Kohbar,Saudi Arabia    11-12-2009 16:51:15 IST
 தெரிந்து கொள்ளூங்க‌ள் நோபிள் ப‌ரிசைத்ருப‌வ‌ர்க‌ள் யார் தெரியுமா, இவ‌ர்க்ள் தான் உல‌கின் ஆயுத‌ம் விற்ப‌னை செய்யும் பெரிய‌ க‌ம்பேனி ஒப‌ம‌வின் மூல‌ம் இறானில் போரை ஏற்ப‌டுதி அத‌ன் மூல‌ம் லாப‌ம் அடைய‌வெ இந்த‌ நோப‌ல் பரிசு, யார் இருந்த‌ல் என்ன இல்ல‌விடால் என்ன‌ இவ‌ர்க்ளுக்கு தேவை ப‌ண‌ம் இவர்க்ள் ந‌ன்றாகிருக்க‌ வேன்டும் ந‌ய‌த்தை பேச‌ இவ‌ர்க‌ளூக்கு அருக‌தை இல்லை மக்க‌ளை கொன்டொலிக்க‌ த‌ர‌ப்ப‌டும் ப‌ரிசு இது.  
by M Malim,Dubai,United Arab Emirates    11-12-2009 16:50:14 IST
 Let us not under-estimate Obama''s Personality. Mahatma did not live or fight against Terrorism or nuclear world. In this complex generation, Obama is the least hope that a civilised person can expect. All ravana''s does not have the luxury of a Rama to fight against.

Let us wish the wonderful leader all the very best in his endeavour.
 
by S Madhavan,SINGAPORE,India    11-12-2009 16:37:53 IST
 you know why gandhi was not given noble?
he never gets 
by a sekar,chennai,India    11-12-2009 16:00:31 IST
 அருமையான ஆழ்ந்த கருத்துக்கள். வாழ்க வளர்க அமெரிக்காவின் புகழ். 
by A செல்வராஜ்,Mumbai,India    11-12-2009 15:50:53 IST
 ''shame - shame - puppy shame''
No value for Nobel prize.
Now a days Nobel price has become like
'' Dr. certificates'' which our politicians and actors getting in India. 
by Ramu,Kinshasa,India    11-12-2009 15:41:57 IST
 How he(Obama) can refer MAHATMA as his GURU. Now NOBLE as Great Joke and He is now JEWS hand. 
by M Jahabar Sadiq,Abu Dhabi, UAE,India    11-12-2009 15:26:01 IST
 அட கொக்க மங்கா....அப்போ நோபல் பரிசு எனக்கு.....  
by m bakru,shenzhen,China    11-12-2009 15:21:12 IST
 உங்கள் [ அமெரிக்க ] நியாயம் ! ! ! எது ???
ஆயில் கொள்ளை அடிப்பது .
உங்கள் வழிக்கு வராத வேறு நாட்டு தலைவர்களை கொல்வது.
இரண்டு நாடுகளுக்குள் சண்டை இழுத்து விடுவது .
அடுத்த நாட்டில் பிரச்சனை உண்டாக்குவது.
பிற நாடுகள் முன்னேற முடியாமல் கவனமா பார்த்து கொள்ளுவது.
என்ன நியாயம் ??? இதுதான் அமெரிக்காவின் நோபெல் பாலிசி.

 
by s oli,chennai,India    11-12-2009 15:16:32 IST
 உலக தாதாவாக செயல்படுபவகள்கு சமாதிற்கான நோபல் பரிசு கொடுத்தால் சண்டையே வராது என்பதாக நீங்க நினைக்க கூடாது. நியாயம் கிடைக்க போர் தொடுப்பதில் தவறில்லை ஒபாமா சொலுவதில் தவறாக தெரியவில்லை  
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India    11-12-2009 14:50:33 IST
 ''அகிம்சையே அமைதி தத்துவம்'' என்று உலகிற்கே போதனை செய்து அதைத் தன் வாழ்நாளில் நிரூபித்தும் காட்டிய அண்ணல் காந்தியடிகள் நோபல் பரிசுக்குத் தகுதியற்றவராகி விட்டார்!. ஆனால் (அமெரிக்க) மக்களைக் காப்பாற்ற சில சமயங்களில் போர் அவசியம் என்ற கொள்கையுடன் இருக்கும் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல்பரிசு!
ஐ.நா மற்றும் உலகவங்கி மட்டுமல்ல! நாங்களும் அமெரிக்காவின் அடிமைகளே! என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள். 
by பெ சக்திவேல்,தாராபுரம்,India    11-12-2009 13:24:40 IST
 There is no wonder that obama got nobel prize. In future they may award osama also. very funnyyyyyy....... 
by A.S. abufirdhouse,chennai,India    11-12-2009 13:17:01 IST
 முதல்ல பலஸ்தீன பிரச்சனைய தீர்த்தால் உலகம் தானாக amaythiyaagividum , ஒருபோதும் அமெரிக்க அமைதிய virumbadu 
by y raja,muscat,Oman    11-12-2009 13:14:39 IST
 அப்படியானால், விடுதலைப் புலிகளின் போரும் நியாமானது தான்! தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒடுக்கி அமைதி, உரிமை ஐ பெற்றுத் தர போராடியது!
 
by J Vignesh,Madurai,India    11-12-2009 12:56:37 IST
 Now we know that Nobel peace prize is a joke. as like as the doctorate got by vijay 
by saravanan,chennai,India    11-12-2009 11:30:23 IST
 தீவிரவாதத்திற்கு மூல காரணம் என்ன என்று கண்டு அதற்கு உள்ள தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும். போரினால் அது முடியாது என்பதே என் கருத்து. ஒபாமா இன்னும் அமைதி பரிசுக்குத் தகுதி ஆகவில்லை.  
by sa கிருஷ்ணா,Bengalooru ,India    11-12-2009 11:26:04 IST
 நீங்கள் போர் தொடுத்த இடங்களில் எங்கே நியாயம் கிடைத்ததாகச் சொல்கிறீர்கள்..?சுய நலத்திற்காக போர் புரியும் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் உள் நாட்டுப்போர் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாவதை கண்டு கொள்ளாமலிருப்பது எந்த வகையில் நியாயம்? 
by va.me salahdeen,dubai,United Arab Emirates    11-12-2009 11:18:22 IST
 அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பதன் நோக்கமே ஆதிக்க வர்க்கம் என்ன செய்தாலும் பார்த்துக்கொண்டு அமைதியாக இரு என்பதற்குத்தானே  
by C அபூஇப்ராஹிம்,தோஹா,India    11-12-2009 10:59:38 IST
 no comments.....ithellam oru pozhappa!!! 
by S Shankar ganesh,aiht ,chennai,India    11-12-2009 10:59:30 IST
 நோபல் பரிசுக்கென இருந்த மரியாதை கானாம போனதுதான் மிச்சம்... 
by S Maha,NJ,United States    11-12-2009 10:55:48 IST
 திரு ரகுநாத் இந்த மாதிரி விருது எல்லாம் நம்ம காந்திக்கு வேண்டாம், ஏனெனில் அவர் மகாத்மா  
by A BALA,SA,India    11-12-2009 10:11:15 IST
 இது எப்படி இருக்கு, கலக்கிட்டீங்க............
அமைதிக்கான நோபல்--------------
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்  
by A BALA,SA,India    11-12-2009 10:04:43 IST
 உனக்கு ஒரு நியாயம், என் தமிழனுக்கு ஒரு நியாயமா. எம் மக்களுக்கும் அச்சுறுத்தல் வரும் போது, அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தான் புலிகள் இந்த போராட்டத்தை நடத்தினர். ஆனால் அது மட்டும் தவறு .வாய்மையே வெல்லும் .  
by தமிழன் ,தமிழ்நாடு ,India    11-12-2009 09:57:00 IST
 பெட்ரோலுக்காக ஈராக்ல இரசாயன வெடிபொருள் இருக்குனு இலட்சகணக்கான அப்பாவி மக்களை கொன்னவன் நீ தான். கடைசி வரை ஒன்னத்தையும் கண்டுபுடிக்கல. ஆப்கான்ல பின்லாடனை புடிக்கிறேன்னு இலட்சகணக்கான அப்பாவி மக்களை கொன்னவனும் நீ தான். இது உனக்கு நியாயமா படுதா? இல்லேன்னா இந்த போரை செய்தவன் மீது போர் புரிய வேண்டியதுதானே! அத செய்யலன்ன இந்த நோபல் பரிச திருப்பி கொடுத்திடு. இந்த அமைதிக்கான நோபல் பரிசு உனக்கு உகந்ததல்ல. 
by A சுல்தான்,Chennai,India    11-12-2009 09:51:03 IST
 அப்போ ஈழத்தில் நடப்பது! என்ன?
வல்லரசான நீங்கள், அவர்கள் நிலைமையை சரி செய்யலாமே!
அல்லது இலங்கை மீது பொருளாதார தடை சட்டம் போடலாமே!!
ஏழு வருடம் முன்னால்,இந்தியா அணுகுண்டு சோதனை நடதியப்போ, பொருளாதார தடை போட்டீர்களே!! இப்போது அதைவிட மோசமான,விஷவாயுக்களால் அல்லவா தாக்கப்பட்டிருக்கிறார்கள் !!!!
{எல்லாம் சுயநலம் }
ராஜா/அமெரிக்கா  
by T.K ராஜா குமார் ,pharma..,United States    11-12-2009 09:32:21 IST
 you cannot have the cake and eat it too. Either bid adieu to arms or stick to war. what an iorny to say war is neccessary on the occassion of receiving noble prize for peace. 
by p bharathi,madurai,India    11-12-2009 09:30:07 IST
 பாம்களும், மூளை சலவையும் பாமர மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த காலத்தில் ஒபாமா சொல்வது முற்றிலும் சரி.
தலைக்கு மேல் வாள் இருக்கும் பொது அஹிம்சை பேசி உயிரிழப்பது முட்டாள் தனம்.  
by J Jagan,Trichy,India    11-12-2009 09:13:46 IST
 அதாவது இவர் அடுத்து ஈரான் மேல் போர் தொடுப்பதில் தவறில்லை என்று சூசகமாக சொல்கிறார் புரியவில்லையா, அதற்குத்தான் நோபல் பரிசு. first of all try to solve the palestine issue than the world will be in peace, than you are eligible to get it!........  
by S.M. haleem ,Kuala Lumpur,Malaysia    11-12-2009 05:58:37 IST
 Mahatma Gandhi was nominated 5 times !!! for nobel peace prize but he never received the award .  
by KR Ragunathan,Boston MA,United States    11-12-2009 03:09:35 IST
 ''''நியாயத்திற்காக, நெறிகளுடன் போர் தொடுப்பதில் தவறில்லை'''' என்று சொல்லும் ஓபமாவுக்கு நோபல் பரிசு, இதைப்பொலத்தான் முன்னாள் அதிபர் ''''புஷ்''''இராக்கை பாடாய் படுத்தினார். இன்று அவர்களின் நிலை ஐயோபாவம். கடைசில் இராக் மக்கள் அன்னியானை நம்பியது மோசம் என்று உணர்ந்து உள்ளார்கள் உண்மை.  
by amy முஹம்மத் அமின் ,paris,France    11-12-2009 01:47:52 IST
 Now we know that Nobel peace prize is a joke. 
by K Sathya,Texas,United States    11-12-2009 01:02:47 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்