முதல் பக்க செய்திகள் 

செம்மொழி மாநாட்டுக்காக ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதி : ஸ்டாலின்
டிசம்பர் 11,2009,00:00  IST

Front page news and headlines today

கோவை : ""செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



கோவையில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வரங்கங்கள் நடக்கவுள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகம் உள்ளிட்ட பல இடங்களை நேற்று ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மாநாட்டு பேரணி துவங்கும் இடம், செல்லும் பாதை, முடியும் இடம், முதல்வர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், தமிழறிஞர்கள் பார்வையிடுவதற்கான மேடை ஆகியவற்றை எங்கே அமைப்பது என்பதற்காக சில இடங்களை இன்று ஆய்வு செய்தோம். "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் தான் ஆய்வரங்கம், கருத்தரங்கம், முகப்பு அரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கவுள்ளது. மொத்தம் 20 அரங்கங்கள் அங்கே அமைக்கப்பட உள்ளன. தமிழ் இணையதளத்துக்காக மட் டும் மூன்று அரங்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



மாநாடு தொடர்பாக கடந்த 25ம் தேதி, தலைமைச் செயலர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கோவை மாநகராட்சி மட்டுமின்றி, அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து, அப்போது ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்துக் கொடுக்குமாறு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளிடம் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 300 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு பெறப் பட்டுள்ளது. அது பற்றியும் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கான உத்தரவுகளை முதல்வரிடம் பெற்று, அந்த பணிகளும் விரைவில் துவக்கப்படும்.



இதே காலகட்டத்தில், கோவை மாநகராட்சியில் நடந்து வரும் ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டப் பணிகளும் துரிதப்படுத்தப்படும். செம்மொழி மாநாட்டுக்காக தற்போது பூங்கா அமைக்கும் பணி முதலில் துவங்கவுள்ளது. அப்போதே அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். செம்மொழி மாநாட்டுக்கு மத்திய அரசிடம் நிதி கோரும் அவசியமில்லை; எல்லா செலவையும் தமிழக அரசே ஏற்கும். இவ்வாறு, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 oh my god...!!! Please spend that money in a field that brings sustainable development to the state and the country. I don''''t understand how the government manage to get no opposition for such kind of lavish spending. As a tamizhan, I strongly oppose this project...!! Its just a total waste of money..!! 
by RN நவநீதன்,Bryan,United States    13-12-2009 09:35:10 IST
 சூப்பர் திட்டம் ஐயா  
by d MGR,chennai,India    12-12-2009 20:50:33 IST
 தயவு செய்து பணத்தை நல்ல பல வளர்ச்சி திட்டங்களில் செலவு செய்யுங்கள். தமிழகத்தின் ஆட்சி மொழி தமிழ் (மக்களை ஏமாற்றுவதற்காக). தமிழக அரசின் இணையதளங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது, அதனை தமிழிலும் வழங்கலாம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்ற மென்பொருள்கள் தயாரிக்க நிதி வழங்கலாம் (கூகிள் இணையதளங்களில் இருப்பது போன்று).  
by N subramanian,dubai,United Arab Emirates    11-12-2009 20:30:52 IST
 Entire world is going thru recession and all Govt entities are cutting down unncessary expenses. TN Govt has to think that they are spending people money. Let MK spend money from party''s or maran''s family money.  
by M Ramanathan,Dubai,India    11-12-2009 19:58:54 IST
 மாநாடு முக்கியம்தான் ஆனால் சிக்கனத்துடன் நடத்துவது நல்லது  
by P Rajarajan,Madurai,India    11-12-2009 17:39:24 IST
 Oh my god!! Can someone stop this atrocities. 300 crore for doing nothing. what is the use of doing this conference. this is nothing but big robbery by politicians. we can not wait to see these DMK, ADMK nonsenses like this. when are we going to think about the developmental projects. i am from south tamilnadu, so many people live in poverty and no drinking water and electricity available for thousands of people... these people spent crores to have fun in their life. definitely these people will pay their price one day..look at saddam......what happened.... 
by bp பாரதி,raleigh,India    11-12-2009 16:41:47 IST
 அன்பு நண்பர்களே, அரசியல் சார்ந்தவர்கள் மாநாடு நடத்துவதே வீண் செலவுதான். அதுவும் ருபாய் முன்னூறு கோடி என்பது மிகப் பெரிய தொகை. பல நல்ல வளர்ச்சிப் பணிகளைச் செய்ய உதவக் கூடிய தொகை. முதலில் மாநாடு என்பது, பல கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்கு கொண்டு அவரவர் ஆராய்ச்சி மற்றும் மொழியறிவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். ஆனால் இங்கோ, எந்த மொழி மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சிகளும் இல்லாமல், முதல்வர் புகழ் பாட ஒரு நிகழ்ச்சி நடாத்தி விட்டு, தமிழ் மாநாடு என்றால், அது மிகவும் மோசமான ஒரு விஷயம். தமிழ்நாடு இன்னும் எத்தனையோ விடயங்களில் முன்னேற வேண்டியுள்ளது. மின்சார வாரியம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை போன்ற இன்னும் எத்தனையோ அரசுத் துறைகள், கணிணி மயமாக்கப் பட்டு, வலைமனைகள் மூலமாக முன்பதிவு போன்ற வசதிகள் இன்னமும் செய்யப்படாமல் இருக்கையில், இப்படி பண விரையம் செய்கிறார்களே! மற்ற மாநிலங்கள் எல்லாம் வேகமாக முன்னேறிச் செல்கிறார்கள். நன்றி. 
by C ராம்ப்ரசாத்,Mumbai,India    11-12-2009 14:48:39 IST
 என்ன கொடுமடா சாமி !!!! முன்னூறு கோடி எங்கடா செலவு செய்றீங்க ! எதுக்குடா என்ன தமிழ் மக்கள் முட்ட பயலுங்க எத சொனாலும் நம்புவனுக் !!!! கலைஞர் அவர்க்கு இந்த மாநாடு நடத்தி உங்கள் பெருமிதம் செய்து என்ன சாதித்தீர் !!!!கோடி பணத்தில் எத்தனை நல்லது செய்யலாம் தமிழ் நாட்டில் வேலை இல்லாமல் செய்துகொண்டு இளைஞர்கள் !!!!! வீடு இல்லாமல் இருக்கும் மக்கள் இருக்கிரார்கள் உங்கள்கு ஒட்டு போடாமல் இருந்த தமிழ் நாடும் மக்களும் என்ன.........?  
by poo kumar,singapore,India    11-12-2009 14:35:03 IST
 நெல்லுக்கு செல்லும் நீர் ஆங்கே புல்லுக்கும் சென்று பொசியுமாம் .................அது இதுதானோ?
அல்லது, புல்லுக்காகவே செல்லும் (ஒதுக்கப்பட்ட) நீரோ? வாழ்க தமிழ்.........  
by Mr. Yila,Nellai,India    11-12-2009 13:56:20 IST
 பயனற்ற செலவு. ரூபாய் முன்னூறு கோடி. எத்தனையோ நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். கொஞ்சம் யோசிங்க மக்களே. ஊரு இருக்குற நிலமையில இது தேவையா?
ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, என்ன கஷ்டம் வந்தாலும் கேள்வி மட்டும் கேக்க மாட்டோம் என்ற மக்கள் நிலை.  
by R சாமி,Tirupur,India    11-12-2009 13:47:55 IST
 ஐயா ஸ்டாலின் அவர்களே.....செம்மொழி மாநாடு நடத்துவதால் உங்களுக்கும் உங்களை சேர்ந்தவர்களுக்கும் தான் பலனே ஒழியே தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒன்றும் நன்மை ஏற்படப்போவதில்லை. ஏற்கனவே ஒன்றுக்கும் உதவாத சேது சமுத்திர திட்டத்திற்காக பல ஆயிரம் கோடிகளை கடலில் கரைத்து ஆகிவிட்டது. பின்னர் இலவச தொலைக்காட்சிக்கும் பல நூறு கோடிகளை வீணடித்தாகிவிட்டது. இப்பொழுது இதற்கு 300 கோடிகள்.
உங்களுக்கு ஒன்று தெரியமா? நம் மாநிலத்தில் எத்தணையோ பள்ளிகள் சரியான கட்டிட வசதிகள் இல்லாமலும் கூறை கொட்டகைகளிலும் இயங்குகின்றன. அவற்றை சரி செய்வதற்கு இந்த 300 கோடிகளை ஒதுக்கலாமே. 
by M Amanullah,Dubai,United Arab Emirates    11-12-2009 13:26:01 IST
 ஓவ்வொரு ஆண்டும் இம் மாநாடு நடக்க வேண்டும். ஓவ்வொரு முறையும் வெவ்வேறு நகரம் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ் நாடு உட்கட்டமைப்பு வசதி பெருகும், மாநில அரசிடம் இருந்து நிதி பெற வேறு வழியே இல்லை! தமிழ் வளராவிட்டாலும் தமிழகம் வளரும் !  
by J Vignesh,madurai,India    11-12-2009 13:21:50 IST
 LET THE GOVT SPEND THE AMOUNT TO BRING DAILY WATER SUPPLY, GOOD DECENT ROADS.INSTEAD OF PROVIDING FREE TV SETS LET THEM SUPPLY ESSENTIAL FOOD ITEMS TO PEOPLE UNDER B.P.L. ON FREE OF COST BASIS. 
by K.N, GOPALAN,Coimbatore,India    11-12-2009 13:19:55 IST
 this unwanted useless expenditure.This sense less expenditure (Nirvaana selavugal)  
by e raja,hyderabad,India    11-12-2009 12:42:02 IST
 மிஸ்டர் ஸ்டாலின் உங்க vittu பாங்கு எவ்வளவு.  
by v.s Ramesh,India,India    11-12-2009 11:09:14 IST
 முன்னூறு கோடி யா? என்ன கொடுமை இது சரவணன்
சென்னையில் இப்போ எங்கு பார்த்தாலும் குப்பை
ரோடு எல்லாம் மிக மிக மோசம்
சுகாதார கேடு
இதற்காக செலவு செய்யலாமே... ஏன் தமிழ் மாநாட்டுக்காவா இப்படி...

இது நம்முடைய தலைவிதி  
by s suresh,chennai,India    11-12-2009 10:48:24 IST
 yarudia moneyil yaru kulir kaieradu ? 
by ameed yousuf,Bangkok,Thailand    11-12-2009 10:21:52 IST
 He doesn''t know what he actually needs to do. He is a real time ARUNACHALAM. One small difference, in that film, Super Star is a hero, but here is a ......... (hope u all understand) 
by S கோவிந்தராஜன்,Chennai,India    11-12-2009 10:05:59 IST
 தயவு செய்து இந்த பணத்தை மக்கள் நல பணிகளில் செலவிடுங்கள். இந்த மாநாட்டினால் தமிழ் ஒன்றும் வளர்ந்து விடாது. மக்கள் மனதில் எப்பொழுதுமே அது நீங்கா இடம் பெற்றுள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு இது அவசியம் இல்லாத ஒன்று.
மக்களே சிந்திப்பீர்.
வறுமையும் பசியும் வாட்ட
மொழி மாநாடு தேவையா?? 
by R சாமி,Tirupur,India    11-12-2009 09:23:16 IST
 நண்பர் திரு.நல்லசிவம் சொல்வது மிக சரியே. தேவை இல்லாமல் செலவு செய்வதை தமிழக அரசு இனியாவது குறைத்து கொள்ள வேண்டும். அந்த பணத்தில் தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் அல்லது மின் திட்டம் போன்றவற்றில் முதலிடு செய்யலாம். இன்றும் படிக்ககூட வசதி இல்லாமல் படிக்க ஏங்கும் சிறு பிள்ளைகளின் படிப்பிற்காக உதவலாம். இல்லவசங்களை தவிர்த்து பயன்னுள்ள பணிகளில் இடுபட வேண்டும். ஓய்வு பெற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் சமுதாய நோக்கமுள்ளவர்களை கிராம புறங்களுக்கு அனுப்பி அங்குள்ள மாணவர்களின் கல்வியறிவை ஊக்குவிக்கலாம். 
by P மணிகண்டன்,Salem,India    11-12-2009 09:20:50 IST
 மாநாடுகள் நடத்துகிறேன் என்று இப்படி கோடிக் கணக்கில் ''''பட்ஜெட்'''' போடுவது கொள்ளையடிப்பதற்க்குதான். இதைவிட தமிழை உண்மையாக வளர்க்க, ஆராய்ச்சி செய்ய, பாதுகாக்க பல முறைகள் உள்ளன. உள்ள பல ஓலைச்சுவடிகளை அரிய நூல்களை மறுபதிப்பு செய்யலாம்; மேனாட்டவர் எடுத்துச் சென்ற அரிய-பல ஓலைச்சுவடி நூல்களைத் திரும்பக் கேட்கலாம், பதிப்பிக்கலாம்; கோவில் குளங்களைச் சீர் படுத்தலாம், மொழிவெறி இல்லாமல், மத துவேஷம் இல்லாமல் கலைகள், விஞ்ஞானம் முதலியவற்றை ஆராயலாம், மக்களுக்கு இன்றை நிலையிலும் அவற்றை உபயோகிக்க பரிந்துரைக்கலாம் (ஏனெனில் அத்தகையவை இந்நாட்டில் உருவானவைதாம்) 
by Vedam Vedaprakash,Chennai,India    11-12-2009 07:20:00 IST
 தயவு செய்து பணத்தை வீண் செலவு செய்ய வேண்டாம். தமிழுக்காக நிரந்தரமான முதலீடு செய்வது நல்லது. முக்கியமாக தமிழ் இலக்கியங்களை பாதுகாக்க இணைய தளங்களை உருவாக்கி எல்லா இலக்கிய நூல்களும் இடம்பெற செய்யவேண்டும். 
by NP Nallasivam,USA,United States    11-12-2009 05:01:19 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்