முதல் பக்க செய்திகள் 

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பன்றிக்காய்ச்சல் !
டிசம்பர் 12,2009,15:59  IST

Front page news and headlines today

மொகாலி : இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பன்றிக்காய்ச்சல் அறிகுறி காரணமாக ஸ்ரீசாந்த் மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்ற தாக்கம் இருந்து வருகிறது.  இவரது ரத்தம் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில் பன்றிக்காய்ச்சல் தானா என்பது தெரிய வரும். இன்றைய போட்டியில் ஸ்ரீசாந்த் தவிர ரோகித் சர்மாவும் இடம் பெறமாட்டார்.





இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,'' ஸ்ரீசாந்த், உடல் நிலை இன்னும் தேறவில்லை. கடந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு தோளில் காயம் ஏற்பட்டது. இவர் பயிற்சியில் கலந்து கொண்டாலும் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்,'' என்றார். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.





இதன் காரணமாக இவர் இலங்கைக்கு எதிராக டிசம்பர் 15ம் தேதி துவங்கும் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இடம்பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





அணி மானேஜருக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி : இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜர் மாயக் பரிஹ்கிற்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அணியின் மற்ற உறுப்பினர்கள் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை என்பதால் டிவென்டி-20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் திட்டமிட்டபடி ‌நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 கவுதம் காம்பிர் மற்றும் விராத் கொஹ்லி: இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் மற்றும் விராத் கொஹ்லி ஆகிய இருவருக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும், பன்றிக்காய்ச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டதாக செய்திகள் வெளியாகின.





பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகவே மருந்துகள் எடுத்துக் கொண்டதாக இருவரும்  தெரிவித்துள்ளனர். இருப்பினும் அணியில் மற்ற உறுப்பினர்களுக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருக்குமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்