முதல் பக்க செய்திகள் 

அமெரிக்க உளவுத் துறைக்கு உளவு சொன்ன ஹெட்லி
டிசம்பர் 17,2009,00:00  IST

Front page news and headlines today

வாஷிங்டன் : இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இருமுறை கைதாகியுள்ளான்.ஆனால், பெரிய போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றைப் பிடிக்க அவன் உதவியாக இருந்ததால், விரைவில் விடுதலை செய்யப் பட்டுள்ளான்.லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய, டேவிட் ஹெட்லி என்ற அமெரிக்கனை, கடந்த அக்., 3ம் தேதி அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன (எப்.பி.ஐ.,) அதிகாரிகள் கைது செய்தனர்.அவனைப் பற்றி அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.ஹெட்லி மீது எப்.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:சிகாகோவில் கைதான 49 வயதான ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு முறை கைதானவன்.ஆனால், போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றை பிடிக்க, நம்பகமான சில தகவல்களை அப்போது தெரிவித்ததால், அவனின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலையானான். அதேபோன்று இப்போதும் அவன் போலீஸ் இன்பார்மர் ஆகியுள்ளான்.இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பை தாக்குதல் தொடர்பாக ஹெட்லி மீது பலமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவன் சிறையை விட்டு வெளியே வர முடியாது, மரண தண்டனையை சந்திக்க நேரிடும் என, எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், இம்முறையும் அவன் போலீசுக்கு தகவல் சொல்லும் நபராக மாறி விட்டதால், மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என, அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.ஹெட்லி மீது தற்போது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அப்படின்னா எல்லாமே சும்மா டிராமாதானா? 
by va.me salahdeen,dubai,United Arab Emirates    17-12-2009 22:09:06 IST
 I think Hetli is agent of America. America says we have all voice records of Hetli. That means America knows before, bloody attack in Mumbai. But,they are wait to happen. Because America Sent him to make Attack in Mumbai. AMERICA''''S ONE MORE DRAMA IS PLAYING NOW. MAIN ACTOR IS HETLI , THAHAVOOR & Co. 
by tp Tamilpriyan,uae,India    17-12-2009 15:39:00 IST
 நம்ம அரசியல்வாதி எல்லாம் கொள்ளை அடிப்பதை மட்டும் தான் யோசியாப்பர்கள் நாட்டிலே நல்ல கடுமையான சட்டம் இல்லையே என்பதை பற்றி கவலைபடமாட்டார்கள்  
by g raja,bangalore,India    17-12-2009 15:26:35 IST
 Our Ex. President had been checked in US airport like a crinminal. Removing his shoes & etc by the authority according to their rule of law.
What is the role of our authorities here...Indian Embassy US, Custom Authorities, Immigration Authorities Delhi & CBI....How dare they allowed him to enter & leave India without foot prints....????? VERY SAD about our system !!!! 
by v christopher,sanaa,Yemen    17-12-2009 12:42:38 IST
 பெரிய தில்லாலங்கடி இவன்  
by s Narban,Singapore,Singapore    17-12-2009 09:01:08 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்