முதல் பக்க செய்திகள் 

விசா காணோம் : பயங்கரவாதி ஹெட்லி விஷயத்தில் குழப்பம்
டிசம்பர் 18,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : "அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகள் டேவிட் ஹெட்லி மற்றும் தகாவுர் ராணாவின் விசா ஆவணங்கள் காணாமல் போயின. இதில், ராணா தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஹெட்லி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், "இந்த பயங்கரவாதிகள் இருவர் தொடர்பான விசா ஆவணங்கள் எதுவும் காணாமல் போகவில்லை' என, சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி என்பவனையும், அவனது கூட்டாளி தகாவுர் ராணா என்பவனையும், அந்நாட்டின் பெடரல் புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாதிகள் இருவரும் அடிக்கடி இந்தியா வந்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம், இந்த பயங்கரவாதிகள் இருவருக்கும் விதிமுறைகளை மீறி விசா வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், ""டேவிட் ஹெட்லி தொடர்பான விசா ஆவணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; ராணாவுடையது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஹெட்லி தொடர்பான விசா ஆவணங்களைத் தேடி வருகிறோம்,'' என்றார். இதற்கிடையில், சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம், "ஹெட்லி மற்றும் ராணா ஆகிய இருவரும் விசா பெற சமர்ப்பித்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நாங்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் விசா வழங்கியது தொடர்பான சம்பந்தப்பட்ட விவரங்கள் இந்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. எந்த ஆவணங்களும் காணாமல் போகவில்லை. இந்திய அரசு இதை நன்கு அறியும்' என தெரிவித்துள்ளது.

மறுப்பு: அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மறுத்து விட்டார். இது பற்றி அவர் கூறுகையில், ""சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இருந்து உண்மை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. தற்போது இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. எதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. இந்தப் பிரச்னை தொடர்பான எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க முடியாது,'' என்றார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் இது பற்றி கேட்ட போது, ""சிகாகோவில் உள்ள துணை தூதர் அசோக் அட்ரியிடம் இருந்து அரசு அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன், இந்தப் பிரச்னையை எப்படி கையாள்வது என்பது முடிவு செய்யப்படும். மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், நான் இப்போதைக்கு எதையும் தெரிவிக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசின் பொறுப்பு என்ன என்பது தெரியும்; அதை கட்டாயம் நிறைவேற்றுவோம்,'' என்றார்.

இதற்கிடையில், சிகாகோ கோர்ட்டில், ராணா மற்றும் ஹெட்லிக்கு எதிராக அமெரிக்க புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, அவர்கள் இருவரின் இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ராணாவின் மனைவி சாம்ராஸ் ராணா அக்தர் மற்றும் அவரின் வர்த்தக கூட்டாளி ரேமாண்ட் சான்டர்ஸ் ஆகியோரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று, அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஹெட்லிக்கு பல முறை இந்தியா வந்து செல்லும் வகையிலும், ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில், 2007ம் ஆண்டில் வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது. ராணாவுக்கு 2011 மார்ச் மாதம் வரை செல்லத்தக்க வகையில், ஒரு ஆண்டுக்கான வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும் போது, 180க்கும் குறைவான நாட்கள் தங்கியிருந்தால், போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அரசு அறிக்கை எங்கே? எம்.பி.,க்கள் கோரிக்கை: அமெரிக்காவில் கைதான ஹெட்லி மற்றும் ராணாவிடம் விசாரணை நடத்த, இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தினர் அனுமதி வழங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், இந்த பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணையில், இந்தியாவுக்கு அமெரிக்கா எப்படிப்பட்ட ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென, ராஜ்யசபாவில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பூஜ்ய நேரத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூறியதாவது: ஹெட்லி மற்றும் ராணா தொடர்பான அனைத்து விவரங்களையும், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை விவரங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா தருகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். மும்பை தாக்குதலுக்கு முன்னரே ஹெட்லி தொடர்பான விவரங்களை எப்.பி.ஐ., சேகரித்துள்ளது. இருந்தாலும், சமீபத்தில் அவன் கைதான பின்னரே பல முக்கிய விவரங்கள் வெளிவந்துள்ளன. ஹெட்லி தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ள விசாரணையில், தெரியவந்த விவரங்களையும் விவரிக்க வேண்டும். எப்.பி.ஐ., அதிகாரிகள், ஹெட்லியை பிடித்த பின்னரே அவனுக்கு மும்பை தாக்குதலில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னர், அவன் பெயர் சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் இடம் பெறாதது ஏன்? யாரின் தூண்டுதலில் ஹெட்லி செயல்பட்டான். இந்த விவரங்களை எல்லாம் அரசு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு எம்.பி.,க்கள் கோரினர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஹெட்லியின் விசா ஆவணங்கள் காணவில்லை. இல்லை இருக்கிறது. ஹெட்லி CIA ஏஜென்ட் தான். இல்லை, இல்லவே இல்லை. ஒரே குழப்பம். போதுமடா சாமி. 
by k jeevithan,villupuram,India    18-12-2009 15:33:41 IST
 We suspect Indian consulate officials in America having an understanding with the Terrorists, otherwise how they can issue Visa to them and now they cannot find. Nowadays, even Primary school kid also know that Visa in electronic file, which is not at all possible to lose by embassy. Central govt. should suspend those idiots in the particular embassy till the clear verdict on terrorists. 
by K R ரமேஷ்,Chennai,India    18-12-2009 10:41:09 IST
 This incident really shows how we lack in technology on the Government Information systems.Though we and Other Countries say India and the Indians are best in IT sector im feeling ashamed to say that our Govt. do not have integrated systems on Interiror or Foreign affairs system. Can the NIC team look to bring all our Govt systems into a integrated one.  
by Mr சார்லஸ்,Dubai, UAE,United Arab Emirates    18-12-2009 10:36:43 IST
 இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பதவியை எப்படி தங்கள் சுய நலத்திற்கும் சுய லாபத்திற்கும் சுற்றத்தாரிடம் பெருமை பேசுவதற்கும் பயன்படுத்துவது மட்டுமே. இவர்கள் செய்யும் வேலை அரசியல்வாதிகளுக்கு ரூட் போட்டு எப்படி திருடுவது என்பதும் மற்றும் பல திருட்டு தனங்களை சொல்லி தருவதும். இதற்கு ஊழியமாக தங்களை வளர்த்து நாட்டையும் பாவப்பட்ட இந்திய குடிமகன்களையும் எல்லா வகையிலும் தாழ்த்துகிறார்கள்.  
by N Jiang,wuxi,China    18-12-2009 10:19:35 IST
 I thought the officials of Indian consulates abroad were only careless and indifferent in serving their own fellow citizens, but now I sadly and strongly suspect that there might be a strong link between them and terror organisations because in countries like UK, they simply lose the passports of Indian citizens when they are given for renewal or like services and they simply say that ''''it is missing''''. They don''''t care for those afterwards. How can the passports be simply missed in a consulate? I suspect that they steal these passports and pass them on to the terrorists for misuse, maybe at hectic price. I am very sad to say this, but I strongly suspect so because the reported cases are not just one or two but many. There should be a thorough enquiry into these ''''missed passports'''' cases and serious actions should be taken against the culprits in Indian consulates. It is a shame on India. 
by Mr. Yila,Nellai,India    18-12-2009 00:39:38 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்