முதல் பக்க செய்திகள் 

நீதிபதி தினகரன் பதவி உயர்வு கிடையாது
டிசம்பர் 19,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை, சுப்ரீம் கோர்ட் விலக்கிக் கொண்டது. இதனால், அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்கும் வாய்ப்பு இனி இல்லை.கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தினகரன். இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் நில அபகரிப்பு ஆகிய புகார்கள் உள்ளன. இவர் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரக் கோரி எம்.பி.,க்கள் கொடுத்த மனுவை, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரை விலக்கிக் கொள்ளப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள், எஸ்.எச்.கபாடியா, தருண் சட்டர்ஜி, அல்டமாஸ் கபீர் மற்றும் ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, நேற்று முன்தினம் மாலை கூடி, நீதிபதி தினகரனுக்கு பதவி உயர்வு வழங்கும் பரிந்துரையை திரும்பப் பெறுவது என தீர்மானித்தனர்.இது குறித்து தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், "சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தினகரனை நியமிக்கும் சிபாரிசு நிறுத்தி வைக்கப்படுகிறது' என்று கூறப்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, நீதிபதி தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை, மறுபரிசீலனை செய்யுமாறு, மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீதிபதி தினகரன் கூறுகையில்," நான் நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது, துரதிருஷ்டவசமானது' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 People & media are debating about a person''s promotion to supreme court judge when he deserves to be removed from the existing post itself and tried before law for improper wealth.  
by b சுரேஷ்பாபு,uk,United Kingdom    19-12-2009 23:32:55 IST
 I think he is the judge who released Jayalalitha from Tansi Case. From that only he acquire more lands,
god only know what is happened behind the screen 
by N RAMAKRISHNAN,Anna Road,India    19-12-2009 22:16:44 IST
 Criminal is a guy who is no different from THE REST except that he got caught. 
by K JEEVITHAN,villupuram,India    19-12-2009 20:24:18 IST
 Dear sir,
The fate of the people is decided by such judges What is the punishment for such corupted judges. apart from Ramaswamy, and another judge of West bengal there are many,.IT IS ONLY A TIP OF THE ICEBERG. A petty thief is sentenced to 7 years imprisonment.there should not be any judge at all .people themself are competent to decide their own case. 
by j. radhakrishnan,madipakkam chennai 600091 tamilnadu.,India    19-12-2009 18:36:16 IST
 இவர் போன்றவர்களால் நல்ல நேர்மையான நீதிபதிகளுக்கும் அவப்பெயர். 
by G Sankaran,Chennai,India    19-12-2009 17:57:38 IST
 எவன்தான் தப்பு பண்ணவில்லை. ஆனால் தண்டனைகள் பத்தாது. இந்த மாதிரி பிராடு நீதி அரசரை எல்லாம் உடனே ........ போடனும்  
by Ee Kay,chennai,India    19-12-2009 10:38:57 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்