முதல் பக்க செய்திகள் 

கோவை குண்டுவெடிப்பு : ஐகோர்ட் தீர்ப்பு விவரம்
டிசம்பர் 19,2009,00:00  IST

Front page news and headlines today

சென்னை : கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தாக் கல் செய்த அப்பீல் மனுக் களை விசாரித்த, நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்தியநாராயணன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை எட்டு கட்டங்களாக போலீசார் புலன்விசாரணை செய்துள்ளனர். சதி, குண்டு தயாரிக்க பொருட்கள் திரட்டியது, அவற்றை கொண்டு சென்றது, குண்டு தயாரித்தது, அதை வினியோகித்தது, குண்டு வைத்தது, கைது, பறிமுதல் என, எட்டு கட்டங்களாக புலன் விசாரணை நடந்துள்ளது.கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, பாஷாவின் வீட்டில் சதி திட்டம் நடந்துள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. இந்த சதியில் பாஷா, அன்சாரி, தாஜுதீன் தொடர்ந்து பங்கு கொண்டுள்ளனர். சதி, ரகசியம் இரண்டையும் பிரிக்க முடியாது. இந்த சதியின் விளைவாக, பிப்ரவரி 14ம் தேதி சம்பவம் நடந்துள்ளது. அரசியல் கட்சியின் தலைவரான அத்வானிக்கு அதிக பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். மேடையின் அருகில் செல்ல யாரையும் போலீசார் அனுமதித்திருக்கக் கூடாது. அந்தப் பகுதியையே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், மேடை அருகில் ஒரு டீ கடை இருந்ததாக ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். அந்த வகையில் தான் பாதுகாப்பு இருந்துள்ளது.விசாரணை நடக்கும் போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயல் குறித்து, சிறப்பு கோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். சிறுபான்மை குழுவின் மனது எளிதில் காயப்பட்டு விடும். சட்ட நடைமுறைக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் பலன் கிடைக்கும் என அவர்களுக்கு புரிய வைப்பதில் விசாரணை கோர்ட் நீதிபதி பெரும் முயற்சி எடுத்துள்ளார். விசாரணையின் போது, அவர்கள் தொழுகை செய்யவும், நோன்பு திறக்கவும் வழி வகை செய்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதன் தேவையை அவர்கள் மெல்ல உணர்ந்துள்ளனர். பிப்ரவரி 14ம் தேதி இரவு, முஸ்லிம் இளைஞர்கள் பலரை போலீசார் கைது செய்ததாக ஒருவர் சாட்சி அளித்துள்ளார். இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தது குறித்து நாங்களும் வீடியோவில் பார்த்தோம். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் அவ்வாறு செய்யப் பட்டது என தெரிவிக்கப் பட்டது. அப்பாவிகளை இது பாதித்திருக்கும். ஆனாலும், நடந்த செயலை எதுவும் நியாயப்படுத்த முடியாது. வன்முறையை எண்ணி துன்புறுகிறோம்.அப்பாவிகள் பலியாவதன் மூலம், சதிகாரர்கள் என்ன சாதிக்கப் போகின்றனர்? கிரிக்கெட் பந்தை தேடிச் சென்ற இளைஞர்கள் அப்துல் ரகுமான், முகமது சுன்னத், முகமது சுபைர், சம்சுதீனை கொன்றதன் மூலம் என்ன வெற்றி கிடைத்தது? இது யாருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்காது. சம்பவத்துக்குப் பின், சதிகாரர்கள் கூட மகிழ்ச்சி அடைந்திருப்பர் என நாங்கள் நினைக்கவில்லை. அநீதி, வறுமை, படிப்பறிவின்மைக்கு எதிராக யுத்தம் நடத்தினால், அதனால் அதிகம் சாதிக்கலாம். 18 இளைஞர்கள் இறந்தது, இந்தச் சம்பவத்துக்கு ஒரு காரணம். இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் காயப் பட்டு, கோபமடைந்துள்ளனர். அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களை இழந்துள்ளனர். சொத்துக்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு இது பெரிய அடியாகும். தாங்கள் அடைந்த துன்பம் போல், சம்பவத் துக்கு காரணமானவர்களும் துன்பப்பட வேண்டும் என அவர்கள் கருதுவது இயற்கையானது தான். குற்றம் நடப்பதை ஒரு குடிமகன் பார்த்தால், அதுகுறித்து போலீசில் தெரிவிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால், பொதுவாக மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சாட்சிகளுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, சாட்சியம் அளிக்க பலர் முன்வந்தது ஆச்சரியமானது.மும்பையில் தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி, கட்டுரை எழுதியிருந்தார். அதில், உள்ளூர்வாசிகளின் துணையில்லாமல் எந்த குற்றமும் நடக்காது என குறிப்பிட்டிருந்தார். எனவே, உள்ளூர் மக்களுக்கு தெரியும். இந்த விஷயத்தில் போலீசார் தங்கள் நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையிலான ஆபத்து, நிர்பந்தம், குறைவான நேரம் இருந்தும் புலன் விசாரணை மற்றும் வழக்கு விசாரணையின் போது, போலீசார் தங்கள் கடமையை செய்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் சாட்சியம் அளிக்கும் போது, தங்கள் மதம், ஜாதி ஆகியவற்றை "இந்தியன்' என குறிப்பிட்டுள்ளனர். போலீசார் சில குறைகளை செய்யும் போது அதை கண்டிக்கிறோம். அதே நேரத்தில், போலீஸ் அதிகாரிகளின் உணர்வையும் பாராட்ட வேண்டியது நமது கடமை. இந்த உணர்வு நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மத்தியிலும் பரவும் என நாம் நம்புவோம். அப் போது இதுபோன்ற ரத்தக் கறை படிந்த சம்பவங்கள் ஒருபோதும் நடக் காது. 18 பேர் மீதான குற்றச்சாட்டுக் களை அரசு தரப்பு நிரூபித் துள்ளது. 22 பேர் மீது அரசு தரப்பு கூறிய குற்றச்சாட்டு களை நிராகரிக்கிறோம். இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்த செந்தமிழ் காவலர்கள் 22 பேரையும், உலக செம்மொழி விழாவில் அரசு சிறப்பிக்கலாம். தவறுதலாக இவ்வளவு நாட்கள் சிறையில் அடைத்ததற்கு அரசே பொருப்பெற்றுக்கொள்ளலாம்.  
by sdfds dfsdf,dfdsf,India    19-12-2009 22:03:37 IST
 First of all thank to indian Govt.(The judgment is Correct even if it is late).
we have to punish the Police officers who had arrested the innocent people to the jail from 2010 to 2021. If these type of jedgement will given to them the crime will be decreased in the nation. 
by A raja,singapore,India    19-12-2009 20:41:06 IST
 If we maintain the harmony between differant communties we will avoid these type of incidents. What type of actions these coutrs going to take against a politicians they play with the lifes of the innocents 
by Mr Priyan,Kuwait,India    19-12-2009 17:21:45 IST
 who ever done crimes against innocent perople, it is not excuseable at any cause.
The must be punished. It is applicable to Every Indian. If you feel and pround to be Indian. Deinitely yevery one will accept the Indian constitution and respect the laws.

If you are an narrow minded people, by religion, caste, community, you are not an Indian,.The police should act honestly, and rfriendly with public not with and iron hand against Anti social activitist. Atleast our politicians permits the police people should act on law.  
by C subramaniam,Sharjah, UAE,India    19-12-2009 13:08:01 IST
 19.அப்பாவிகலை நாயைபோல் சுட்டுகொன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த அரசும் கோர்ட்டும் என்ன தண்டனை கொடுத்தது. எல்லாம் வெறும் நாடகம். குற்றம் செயவதற்கு தூண்டிய அந்த அதிகாரிகள் தண்டிக்க பட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. 
by m siraj,jeddah ksa,Saudi Arabia    19-12-2009 11:23:06 IST
 நீதிபதிகள் கருத்து மிகவும் அருமை.. நண்பர் அமனுல்லா கூறுவதுபோல் அரசு முறையாக நடந்திருந்தால் இந்த தவறுகள் மன்னிக்கவும் தப்புகள் நடந்திருக்காது.. மனதின் கருத்துக்களை நியாயமாக கூறும் அமானுல்லாவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.  
by M குமார்,Chennai,India    19-12-2009 10:58:37 IST
 Late judgment. 22 person were released as innocent.
These people were in jail from 1998 without involved in any criminal activities. What compensation will be given to these innocent people by Tamil nadu Govt. to rehabiliate their life. Govt. 
by A அப்துல் AZIZ,Dammam,Saudi Arabia    19-12-2009 10:49:58 IST
 லேட் ஜட்ஜ்மென்ட் ஆனாலும் நீதிபதிகள் கருத்து மிகவும் அருமை.. நண்பர் அமனுல்லா கூறுவதுபோல் அரசு முறையாக நடந்திருந்தால் இந்த தவறுகள் மன்னிக்கவும் தப்புகள் நடந்திருக்காது.. மனதின் கருத்துக்களை நியாயமாக கூறும் அமானுல்லாவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 
by R ரகு ,singapore ,Singapore    19-12-2009 06:48:16 IST
 1998 பாராளுமன்ற தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் மிக அதிக அளவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளது என கணிக்கப்பட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உளவு பிரிவினரால் அரசுக்கு அடையாளம் காணப்பட்ட தொகுதி கோவை தொகுதி. சர்ச்சைக்குரிய நபர்கள் யார் என்று அரசுக்கு நன்கு தெரியும். அரசு அவர்கள் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து தேவைப்பட்டால் அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து இருந்தாலே இந்த கொடிய சம்பவம் நடக்காமல் முன் கூட்டியே தடுத்திருக்க முடியும்.
மேலும் இந்த வழக்கில் 20 முதல் 30 வயதை உடைய பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் இருந்து குற்றம் நிரூபிக்கப் படாமல் விடுதலை செய்யப்பட்டனர். சிலர் இன்னும் சிறையில் தான் உள்ளனர். 20 - 30 வயது என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தருணமான வேலையில் சேருவது திருமணம் செய்வது போன்றவை உள்ளடக்கியதாகும். அந்த சமயத்தில் அவர்கள் இருந்ததோ சிறைகளில். 100 குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்று தான் நம் சட்டம் கூறுகின்றது. ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகளை விட அதிக எண்ணிக்கையில் நிரபராதிகள் தான் கைது செய்யப்பட்டனர்.  
by M Amanullah,Dubai,United Arab Emirates    19-12-2009 01:16:45 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்