முதல் பக்க செய்திகள் 

பிற்பட்ட வகுப்பினர் வீட்டில் பூரி, குருமா சாப்பிட்டார் ராகுல்
டிசம்பர் 23,2009,00:00  IST

Front page news and headlines today

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டார்.



இது தொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ராகுல், அங்குள்ள கிராமம் ஒன்றில் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பாபினா தாலுக்காவில் உள்ள கோவாலி கிராமத்திற்கு சென்ற ராகுல், அங்கு பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த துவாரிகா பிரசாத் ரெய்க்வார் மற்றும் ரேகா தேவி கேவத் என்ற தம்பதியரின் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். தொழிலாளியான ரெய்க்வாரின் மனைவி, சுய உதவிக் குழுவில் தீவிரமாக பங்காற்றி வருகிறார். அவர் ராகுலுக்கு பருப்பு, பட்டாணி, உருளைக்கிழங்கு குருமா, பூரி மற்றும் சாதம் போன்றவற்றை பரிமாறினார். அந்த குடும்பத்தினருடன் ஒரு மணி நேரத்தை செலவிட்டார் ராகுல். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.



ராகுல் தங்களின் வீட்டிற்கு வந்தது பற்றி ரெய்க்வார் கூறுகையில், "ராகுல் எங்கள் வீட்டில் பருப்புடன் பூரி சாப்பிட்டார். நாட்டில் நடக்கும் ஊழல், சமூகத்தில் நிலவும் சாதி முறை போன்றவை பற்றி அவரிடம் தெரிவித்தோம். "இந்த சாதி முறை மற்றும் ஊழலால், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறினோம். பின்னர் எங்களின் குடும்ப பிரச்னைகளை தெரிவித்தோம். நாங்கள் பேசியதை எல்லாம் ராகுலுடன் வந்தவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர்' என்றார்.



உட்கட்சி சண்டை வேண்டாம்: ""காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். வரக்கூடிய உ.பி., மாநில சட்ட மேலவை தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற உழைக்க வேண்டும்,'' என, ராகுல் கேட்டுக் கொண்டார். அமேதி, ரேபரேலி மற்றும் சுல்தான்பூர் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "உட்கட்சி பூசல் கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடாது. கீழ்மட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மேலவை தேர்தலில் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இதில், எந்த வகையிலும் மெத்தனம் கூடாது' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்தியாவில் எப்படி ஓட்டு வாங்குவது என்று வித்தை தெரிந்த ஆசாமி  
by Sri சுவாமிஜி ,erode,India    26-12-2009 14:49:01 IST
 சும்மா ஒரு விளம்பரம். ராகுல் என்ன கடவுளின் அவதாரமா.  
by siva sankar,kalayarkovil (singapore),India    26-12-2009 08:45:01 IST
 ''ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்'', இதை பாடிய பாரதி பிறந்த என் நாட்டில் இப்படி ஒரு தலைப்பு கொண்ட செய்தி உண்மையில் நாணுகிறேன்.  
by sree sree,Thanjavur.,India    23-12-2009 22:19:06 IST
 மகேஷ்,

நீங்க ஏன் பக்கத்தை திருப்பனும், இது ஒன்னும் newspaper கிடையாது. If you dont like to read it, dont click. Dont blame dinamalar. If u like or not news is a news. It is really irritating to few people''s comments.

Premanand

 
by T Premanand,Franklin Lakes,United States    23-12-2009 16:37:27 IST
 எல்லாமே டூப்பு  
by s செந்தில்,Bangalore,India    23-12-2009 16:30:22 IST
 when are we going to come out of this narrow mentality of religion and caste? Even the animals which do not have the sixth sense, do not discriminate. But the human being who is supposed to use the sixth sense for elevation is still under the clutches of religion and caste. A young influential political leader is taking advantage of this. 
by h ravishanker,Chennai,India    23-12-2009 16:27:41 IST
 வேறு செய்தி ஏதும் இல்லையா? பூரி குருமா - சாப்பிட்டது ஒரு பெரிய விஷயமா? வாழ்க இந்திய ஜாதி அரசியல் 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    23-12-2009 15:26:16 IST
 Ragul is very good actor !  
by S. Bhagrudeen,Riyadh., Saudi Arabia,Saudi Arabia    23-12-2009 15:21:51 IST
 this is poor stunt india need very strong personality not like rahul 
by d babu,pollachi,India    23-12-2009 15:20:35 IST
 மதுரை விருமாண்டியின் கேள்வி சரியானது. இவர் மாதா மாதம் இப்படி ஸ்டன்ட் அடிப்பதை செய்தியாக்காமல் அவர் ஏழைகளுக்கு தன் வீட்டில் சாப்பாடு போடும்போது அதை வெளியிடவும்.  
by N.S. Sankaran,Chennai,India    23-12-2009 15:03:26 IST
 ராகுல் தாழ்த்தப்பட்டவர்கள் ஓட்டை வாங்க எது வேண்டுமானாலும் செய்வார்.  
by m பெடோ thajudheen,trichy,India    23-12-2009 14:56:56 IST
 Good show by Rahul. This is merely for publicity.

1) An hour, before he ate,before the food (poori & Kuruma) might''ve bought from some star hotels.
2) The security guard might have told the owner of the house to give this poori and kuruma to Rahul.

Mr Rahul, We people are not idiots. We know you are going for cheap publicity.

 
by N Velmurugan,Chennai,India    23-12-2009 14:56:00 IST
 What a great publicity stunt. first the media should stop highlighting these stunts of politicians.
There are lot more news which can be published and awiats attention of media 
by Indian,Chennai,India    23-12-2009 14:52:39 IST
 விருமாண்டியின் கருத்து படித்து சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது. மிக நல்ல உதாரணம். சரியான கேள்வி ராகுலின் வீட்டில் அனைவரும் சாப்பிடும் நாள் எப்போது வரும். மிக மிக நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் விருமாண்டி. 
by S லக்ஷ்மிநரசிம்கன்,Manama,Bahrain    23-12-2009 14:28:04 IST
 இதே ராகுல் இந்தியாவின் கடைகோடியில் இருக்கும் தமிழன் இல்லத்தில் கருவாட்டு குழம்பு சாப்பிடுவாரா?
If you think my question is foolish you will be treated as fool by (y)our fellow tamiliyans.
If you really think my question is correct then sorry to say this. ''you are a real fool''.  
by NH PRASAD,chennai,India    23-12-2009 14:26:40 IST
 இது ஒரு பொலிடிகல் ஸ்டான்ட். உங்கள் பொன் போன்ற பக்கங்களை இது போன்ற மூன்றாம்தர செய்திகளை வெளியிட்டு வீணாக்காதீர்கள் . 
by m gsnthi,Chennai,India    23-12-2009 14:17:44 IST
 மதம் என்ற ஒன்றை காரணம் காட்டி இந்தியாவில் இந்துமதத்தை ஒருவழி செய் தாக்கி விட்டார்கள். இப்போது ஜாதி என்ற அஸ்திரமா !!! போதும் எங்களால் முடியலப்பா !!!!!!  
by Raja ராஜதுரைபாண்டி,safwa , saudiArabia,Saudi Arabia    23-12-2009 14:12:49 IST
 மனிதர்கள் தயாரித்த உணவை சாபிடுவது என்ன அவ்வளவு கஷ்டமா? ராகுல் வின்சி என்ற இந்த 40 வயது (YOUTH) க்கு மாதம் ஒரு விளம்பரம் தேவை. இதுவரை விளம்பரம் தேடும் செயல்கள் தவிர இவர் வேறு ஏதும் செய்ததில்லை. ஆனால் இவர் பெரிய தலைவர் என்று நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள். இதுக்கு ஒரு விளம்பரம் வேறு தினமலர் பேப்பரில்.
இவரை நல்லவர் என்று சொல்பவர்கள் 27 Sep 2001 இல் Boston Airport இல் ஏன் கைது செய்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா. இவர் இன்னும் இத்தாலி பாஸ்போர்ட் தான் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். 
by S செல்வா,Bangalore,India    23-12-2009 14:02:10 IST
 ஜெயலலிதாவும் அத்வானியும் இதை செய்தால் வானுயர இந்த வாசகர்கள் வாழ்த்துவார்கள். செய்வார்களா ? முடியாது. வர்னாசிரமம் தடுக்கும். ராகுல் செய்தால் மட்டும் சாதாரணம் ! மனசாட்சி உடன் எழுத பழகவும்.  
by a அரசன்,chennai,India    23-12-2009 13:57:55 IST
 வரவேற்கத்தக்க செயல். ராகுல் பல தலைவர்களுக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும். ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் இது போன்ற செய்திகளை கொண்டு செல்வது தினமலரின் தலையாய கடமை. 
by pv vadivel,coimbatore,India    23-12-2009 13:32:46 IST
 நம் நாட்டு மக்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளை தான் ரொம்ப பிடிக்கும். மது கோடா மற்றும் கருணாநிதி போன்றவர்களுக்கு ஓட்டு போடுவார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என் திருநாடு வல்லரசு நாடு என்று அழைக்கப்பட. அந்த நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு சராசரி இந்தியன் நான் . பஹ்ரைன் என்ற வளைகுடா நாட்டிலிருது சோககனவூர் சுவமிநாதன். ஜெய் இந்தியா 
by A சுவாமிநாதன் ,MANAMA,Bahrain    23-12-2009 13:29:55 IST
 வெரி குட் திரு. ராகுல். கீப் இட் அப். 
by pv vadivel,coimbatore,India    23-12-2009 13:29:30 IST
 தினமலர் இதழ் நல்ல செய்திகளை அளித்தாலே போதுமானது... ஏன் இது ஒரு செய்தியா?

ராகுல் என்ன சாப்பிட்டா என்ன ? நாட்ல நிறைய பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருகாங்க. அதை ஒழிச்சார்னா ஒத்துக்கலாம்... இவர் ஏதோ ஒரு வீட்ல சாப்டுட்டுவர இதெல்லாம் பெருமைய பேசிகிட்டே நமக்குதா அசிங்கம்...  
by naras kamalakannan,chennai,India    23-12-2009 12:45:57 IST
 பூரி சாப்பிட்ட அவர் பழைய கஞ்சி சாப்பிட்டிருந்தால் அது பாராட்ட வேண்டியது தான். எல்லா ஏழைகள் வீட்டிலும் எல்லா நாளும் பூரி செய்வதில்லை. ஆனால் எல்லா நாளும் பழயை சோறு இருக்கும். எதற்கு இந்த விளம்பரம்  
by r கணேஷ்,chennai,India    23-12-2009 12:40:47 IST
 தமிழ்நாட்டில் இந்த மாதிரி அரசியலை ஒருவர் எப்போதோ செய்து பேர் வாங்கி விட்டார், அதைத்தான் இப்போது மற்றவர்கள் செய்கிறார்கள். 
by T கருமான் ,india,India    23-12-2009 12:29:01 IST
 ரொம்ப முக்கியம். வேலைய பாருங்கடா வெங்காயங்களா... 
by r arunkumaar,doha,India    23-12-2009 12:09:31 IST
 திரு விஜயகுமார் அவர்கள் கூறியதை வரவேற்கிறேன் ''''அது ஏன் நாளிதழ் மற்றும் தொலைகாட்சிகளில் இது போன்ற செய்திகளில் பிற்படுத்தபட்டோர் தாழ்த்தப்பட்டோர் என்று குறிப்பிடுகிறார்கள்? இதை நான் தினமலர் வாசகர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன். ஜாதி மதம் மொழி இனம் என ஆயிரம் வேறுபாடுகளை வைத்துகொண்டு எங்களுடைய கலாச்சாரம் உலகின் தலை சிறந்த கலாச்சாரம் என்று கூறிக்கொள்வது அவமானம்.  
by R Sabu,kerala,India    23-12-2009 11:37:38 IST
 எங்க வீட்டிலும் இன்று பூரி குருமா தான். வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.  
by kj ஜெயக்குமார்,madurai,India    23-12-2009 10:58:19 IST
 பல கோடிகளுக்கு அதிபதியான திரு கலைஞ்சர் அவர்களும், செல்வி மாயாவதி அவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர்கள் தான். திரு ராகுல் வின்சி அவர்கள் வறுமைகோட்டுக்கு கிழே உள்ளவர் வீட்டில் உணவு அருந்தினார் என்றால் அது பாரட்டுக்குரியது.
பாதுகாப்பு காரணங்கள்ளுக்காக அவர் உணவர்ந்தும் முன்பே பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அதை உண்டு சுவைத்து பின்னரே அவருண்ண அனுமதிப்பர். இதில் எங்கே வந்தது ஜாதி.
 
by திரு ஜெய், கனடா,Canada    23-12-2009 10:17:26 IST
 Hii when this film will be released, soon? 
by G Venki,ajman,United Arab Emirates    23-12-2009 09:52:35 IST
 He is the good man in this country (political) if we give the P.M post to him he is doing big and great job, think people. This is not political.  
by V durai,chennai,India    23-12-2009 09:39:45 IST
 திரு வெங்கட் சொன்னது மிகவும் சரி. நமது நாட்டில் சாதியை ஒழிக்க மீடியாக்கள் உதவ வேண்டும். சாதியை முன்னிலை படுத்த கூடாது. மத்திய அரசும் மாநில அரசுகளும் ஏழைக்கான திட்டம் பணக்கரர்களுக்கான திட்டம் என்று அமல் படுத்த வேண்டும். இந்த ஜாதி அந்த ஜாதி என்று முன்னிலை படுத்த கூடாது. அணைத்து ஜாதியிலும் பணக்காரர்களும் ஏழைகளும் இருக்கிறார்கள். ராகுலின் வழி போற்ற தக்கது. அதே நேரத்தில் அவர் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். அவர்கள் வீட்டில் எப்போதும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டு வரக்கூடாது.  
by c samy,bangkok,Thailand    23-12-2009 09:32:18 IST
 ராகுல் காந்தி செய்வது உண்மையில் நல்ல காரியங்கள்தான். அவரை போன்ற தலைவர்கள் நம் நாட்டுக்கு மிக தேவை. அவர் இந்தியாவின் பிரதமர் ஆகும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். 
by N Hari,Chennai,India    23-12-2009 09:25:08 IST
 Would he go and eat the same Poori & Kuruma after either he won or lost elections. This is purely for gathering vote banks.
Rahul is not a great leader. Sonia and Rahul are enjoying the sophisticated life in the peoples money. 
by N Velmurugan,Chennai,India    23-12-2009 08:51:07 IST
 எளியவர் வீட்டில் ராகுல் பிரியாணி சாப்பிட்டார், பூரி சாப்பிட்டார். இதெல்லாம் ஒரு செய்தி. இப்படி செய்வதால் ஒருவன் பெரும் தலைவன் - GREAT LEADER !! - ஆகி விட முடியுமா?

அப்படி பார்த்தால், எங்கள் ஏரியா பிச்சைக்காரர் கூட, சாதி, மதம், ஏற்றத் தாழ்வு பார்க்காமல், எல்லார் வீட்டிலும் சாப்பாடு கேட்டு சாப்பிடுகிறார். ராகுல் தலைவர் என்றால், அப்ப இவரையும் ராகுல் ''ரேஞ்சு''க்கு தலைவர் என்று சொல்லலாமா?

அது சரி, ராகுலின் வீட்டில் எளியவர் சாப்பிடும் காலம் எப்போது வரும்?

மதுரை விருமாண்டி 
by M VIRUMAANDI ,Madurai,India    23-12-2009 08:50:16 IST
 ''ராகுல் நல்ல அரசியல் வாதி''  
by S. மகேந்திரன்,Bangkok,Thailand    23-12-2009 08:37:38 IST
 THE MEDIA SHOULD BE CONDEMNED FOR PUBLISIHING SUCH CHEAP PUBLICITY IT GIVES TO POLITICIANS. IS DALIT IS NOT HUMAN WHY DEHUMAN HUMANITY? 
by R VEDALAI,CHENNAI,India    23-12-2009 08:28:09 IST
 அய்யா வணக்கம்.
நான் ஒரு தினமலர் வாசகன்.
இது போன்ற சப்பை செய்திகளை போட்டு பக்கத்தை நிரப்பி எங்களுக்கு ஏன் தொல்லை தருகிறீர்கள்.  
by s மகேஷ் ,abudhabi,United Arab Emirates    23-12-2009 08:02:12 IST
 இலங்கை தமிழர் அழிவிற்கு இவரது குடும்பம்தான் கரணம்.....இந்திரா , ராஜீவ் போன்றோர் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளின் விளைவு.... 
by s டம்ளர்,singapore,Singapore    23-12-2009 07:43:42 IST
 Guys can u please stop ur meaning less comments!!!!!! Rahul is great leader 
by V sahadevan,Chennai,India    23-12-2009 06:31:41 IST
 correctya sonanga 
by M Venkat,CA, USA,India    23-12-2009 05:27:44 IST
 ராகுல் எளிய குடும்பத்தினருடன் சாப்பிட்டார் என்று சொன்னால் போதும். பிற்படுத்தப்பட்ட குடும்பத்தினருடன் சாப்பிட்டார் என சொல்ல தேவையில்லை. ராஜீவ் சோனியா தம்பதியினருக்கு பிறந்தவர் ராகுல். சோனியா உயர்ந்த ஜாதி என இத்தாலியினர் சொன்னார்களா. ராகுல் ஜாதிகளில் விழாமல் இருந்தால் நல்லது.இன்று வந்த செய்தி இங்கிலாந்து இளவரசர் தெருவில் சாதரணமாக இரவில் சுற்றுகிறார் தெருவில் உறங்குபவர்களை சந்திக்கிறார். நம்ம ராகுல் உழைக்கும் வர்க்கத்தினருடன் சாப்பிட்டார்.உண்மையில் பெரிய அதிசயம். வாழ்க இந்திய அரசியல் வளர்க இந்திய சமுதாயம்.  
by பா விஜயகுமார்,Qatar,India    23-12-2009 01:09:21 IST
 நம் நாட்டில் ஜனநாயகம் எந்த அளவிற்கு கேவலமாகிவிட்டது என குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் மூலமாக நாம் கண்கூடாக காண்கின்றோம். இவற்றையெல்லாம் நம் நாட்டின் இளைய தலைமுறையினரின் வழிகாட்டி நவீன இந்தியாவின் தலைவர் வருங்கால பிரதமர் என காங்கிரஸாரால் புகழப்படும் ராகுல் கண்டித்திருக்கின்றாரா? குறைந்த பட்சம் கருத்தாவது கூறினாரா?.
தலித் வீட்டில் ஒரு இரவு தங்குதல் அவர்கள் வீட்டில் சாப்பிடுதல் குழந்தைகளோடு விளையாடுதல் போன்ற சாகசங்களை செய்யும் ராகுல் உலகமே கண்டிக்கும் கண்டித்து கொண்டிருக்கும் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மிறல்களை போக்க ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த முயற்சியாவது எடுத்தாரா?. குறைந்தபட்சம் அதனை கண்டித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டாரா?.
சிக்கன நடவடிக்கை மேற்கொள்கின்றேன் என கூறி ரயிலில் பணம் செய்தாரே. ஆனால் நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடிகளை விழுங்கிய ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டுபிடிக்க எந்த ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டாரா? சம்பந்தபட்ட அமைச்சர் பதவியினை பறிக்க பிரதமரை வலியுறுத்தினாரா? குறைந்தபட்சம் அதனை கண்டித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டாரா?.
கடைசியாக பத்திரிக்கைகளுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இது போன்ற செய்திகளுக்கு முக்கியதத்தும் கொடுப்பதினை தாங்கள் தவிர்க்க வேண்டும்.
 
by M Amanullah,Dubai,United Arab Emirates    23-12-2009 01:07:34 IST
 rahul அவர்கள்
பூரி குர்மா சாப்டறது ஒரு பெரிய விஷயமா இருக்குது நாட்டுல.இந்த நிலை மாறனும்
 
by s mohamed ibrahim,saudi arabiya,India    23-12-2009 00:43:57 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்