முதல் பக்க செய்திகள் 

கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு
டிசம்பர் 23,2009,00:00  IST

Front page news and headlines today

கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவை அடியோடு அறுத் துக்கொள்ள 1,225 தம்பதிகள் வழக்கு தொடுத்து "டைவர்ஸ்' பெற காத்திருக்கின்றனர்.பொருளாதார வேட்கையும், நாகரீக மோகமும் நகர வாசிகளின் வாழ்க் கையை ஏறத்தாழ இயந்திர மயமாகவே மாற்றி விட்டன. முன்னோர் களால் காலங்காலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. குடும்பத்தை கடந்து, மனித உறவுகளை உறுதிப்படுத்துவதாக தற்போதைய நாகரீக வாசிகளின் வாழ்க்கை முறை இல்லை. சமூகம் சார்ந்த வாழ்க்கை தடம் புரண்டு, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை தலைதூக்கி உள்ளது. "அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை' என, வெறும் வரவு - செலவு கணக்காக மட்டுமே உறவு முறைகள் பார்க்கப்படுகின்றன. விளைவு, தனிக்குடும்ப வாழ்க்கை; அதனால், தலைதூக்கும் பிரச்னைகள். தகராறுகளை தங்களுக்குள் பேசி தீர்த்து கணவன் - மனைவி உறவை தொடர முடியாமல் கோர்ட் படியேறும் அவலம். பெற்றோர், அக்காள், தங்கைகளின் உறவை அறுத்து தனிக்குடித்தன முறைக்கு பலரும் மாறிவிட்டதால், சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டவும், அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் அருகில் பெரியவர்கள் இல்லை.உடையும் உறவுகள்: கூட்டுக்குடும்ப முறையில் இருக்கும் சுய கட்டுப்பாடுகள், தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினரிடம் குறைந்து வருவதை, கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் உறுதிப்படுத்து கின்றன. வேலைக்கு செல்லும் கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ, தமது துணை தவிர்த்து பிறருடனான கள்ள உறவு, நடத்தையில் சந்தேகம், பாலியல் உறவில் நிலவும் மனக்குறைகள் என, பல விதமான காரணங்களுடன் அதிக வழக்குகள் கோர்ட் டுக்கு வருகின்றன. கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். கோவையில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் உள்ள போதிலும், மேலும் ஒரு நீதிமன்றம் தேவை, என்ற அளவுக்கு வழக்குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விவாகரத்து தவிர, ஜீவனாம்சம் கேட்பு, குழந்தை பராமரிப்பு குறித்த வழக்குகளும் அதிகம் தாக்கலாகின்றன. கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மற்ற எல்லா கோர்ட்களையும் விட, குடும்ப நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகளே அதிகம். கடந்த 2008ல் இக்கோர்ட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை விவாகரத்து கோரி 1,139 வழக்குகள் பதிவாகின. ஆனால், இந்த ஆண்டு, இது வரை 1,225 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதமும் 100 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட் டுக்கு வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர்.கணவரின் கள்ளத்தொடர்பு, மாமனார் - மாமியார் "டார்ச்சர்', தனிக்குடித்தனம் நடத்த வராதது, போன்ற காரணங்கள் விவாகரத்து கோரும் பெண்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதேபோல், மனைவி நடத்தை மீது சந்தேகம், கள்ள உறவு, ஈகோ உள்ளிட்ட காரணங்களை ஆண்கள் முன் வைக்கின்றனர். இளம்தம்பதிகள் பெரும்பாலும், விவாகரத்து தீர்மானத்துடன்தான் கோர்ட் படியேறுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கும் முன், கணவன் - மனைவிக்கு தனித்தனியே "கவுன்சிலிங்' நடத்தி, "முடிவை மாற்ற' அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனாலும், முடிவில் மாற்றமின்றி "டைவர்ஸ் ஒன்றே குறி' என்ற ரீதியில் உறுதியாக உள்ளனர். இதனால், வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படுகின்றன.மற்ற துறைகளில் பணியாற்றுவோரை காட்டிலும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் விவகாரத்து மனு தாக்கல் செய்கின்றனர். சிலர் திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இறங்கிவிடுகின்றனர். மேற்கண்ட காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கோவையில் மட்டுமல்லாது, பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, திருப்பூர் பகுதியிலுள்ள சப்-கோர்ட்களிலும் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் கோவையில் மேலும் ஒரு குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது: நாகரீக உலகில் மாறி வரும் குடும்ப கலாசார போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்கு துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்னை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற "ஈகோ' வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம். விவகாரத்து பெறுவோர், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. இதனால், சமூகச் சூழலும் மாறும் அபாயமிருக்கிறது. இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.                                                                                                                  - நமது நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Dear Young Guys and Girls
Marriage is only once and there should be no more marriages for second time ( of the LAW is there will they ask for DIVORCE) and the Detail explanation should be done before award the divorce. All the working women are seeking Freedom as well free from other duties (except....) There is no such (male Pro...tion).. If there any then there may be no DIVORCE or MARRIAGE For those working women.
It is happening every place...Words like LOVE, LIFE, MARRIAGE, DIVORCE,ILLEGAL RELATIONSHIPS ...etc.., are growing day by day. Only St rick political identifications and getting DIVORCE is not an easy task..hence we can think about the real life....MEN are seriously thinking about live alone ....
LAW can make them to feel and delay DIVORCE with some more conditions to make the divorce very hard....may the fool irresponsible couple may protect the child ( on both the cases).
IS my curse to WOMEN WHO asked for DIVORCE without any valid reason ..... 
by N வெங்கட்,Trivandrum,India    27-12-2009 23:04:36 IST
 I am advice is simply one words boys are girls maximum two years best friendship relation maintaning next one year lovers so all pblm easy solved and corect timing marriage better than life. 
by k manivel,dindivanam,India    25-12-2009 14:00:35 IST
 DEAR guys & girls pls take care this is not your life. this is your children life. so pls take care. avoid emotion & egho
tks
anand your well wisher 
by VR ANAND,CHENNAI,India    25-12-2009 12:43:59 IST
 Not only money and culture, for each and every problem, the food what we in take, takes a major part in change of human beings mind and everything, previously, we had nature foods, cooked in pot, and firewood, without any chemicals and minerals, now in each and everything, chemicals and minerals are all mixed, of which we human beings are turning to beast, see the daily news, (especially in India), the news we read are new to us. the paper is filled with murders (all handled in different ways), raping, illegal affairs, (in this our people have crossed the foreigners). see even our people have started to go to temple to hide their mischiefs and wrong things they do. In this period coimbatore is now fully developed in IT field, and other sources, thereis nothing to get surprise. The only solution is, we should go little back to see our old faces and learn to live like them. 
by S VENKATESAN,erode,India    25-12-2009 11:41:05 IST
 Search in Facebook for தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம்.And join.Make revolution.

அசால்ட்டா இருக்காதீங்க சார் !

 
by W Rahuman,Abudhabi,India    25-12-2009 04:21:38 IST
 விவாகரத்து அகரத்துக்கு முக்கிய கரணாம் கள்ள உறவு விட்டு கொடுது போகாதது இப்போ எல்லாம் திருமணம் பணம் பாத்துதா பண்றாங்க குழந்தைக்கு இவுங்க சரியான்வஙகலன்னு பாக்கறது இல்ல பையன் பத்தி விசரிக்ர்து இல்ல பையன் விசர்த்து பொண்ண குடங்க  
by M ரேணுகா தேவி,coimbatore,India    24-12-2009 17:32:52 IST
 பெண்கள் முதலில் சந்தேகபடுவதை நிறுத்த வேண்டும். கணவன் அனாவசியமாக செலவழிக்க மட்டன் என்று நம்ப வேண்டும். என் மனைவி
தான் தான் அவசியமாக செலவழிபதகவும் நான் அனாவசிஎமாஹா செலவழிபதகவும் நினைப்பதால் தினமும நரகமாஹ லைப் இருக்கு. அதனால் யாராவது ஒருவர் சண்டை வரும் போல் இருக்கும் என்று தோன்றினால், வீட்டை விட்டு வெளிய சென்று விட்டு இரண்டு அல்லது நான்கு மணி நேரம் கழித்து வாந்தால் சண்டை போடுவதிஇல் இருந்து தப்பலாம். எது எனது தனிப்பட்ட அனுபவம்,
 
by v ஆனந்த்,Chenan,India    24-12-2009 17:01:24 IST
 Dear all couples: Please avoid misunderstanding, communication gap, and cultural change 
by M SURESH,Mumbai,India    24-12-2009 14:52:24 IST
 how to live without likings.it is better to seperate rather than staytogether with fightings 
by s Sankar,Dubai,United Arab Emirates    24-12-2009 10:19:48 IST
 மனைவி கணவனுக்கோ :கணவன் மனைவிக்கோ அடிமையில்லை.ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்தால் பிரச்சனை என்பதே இல்லை.நீ இழு ,நான் இழு என்று நூலை இருபக்கமும் இழுத்தால், அது நடுவில் அறுந்து போயிடும்.அதேபோல தான் தாம்பத்தியமும்.பெண் அடிமைதனே அவள் விட்டுக்கொடுத்தால் என்ன ?என்று கணவனோ,நானும் சம்பாதிக்கிறேன்,நான் என்ன குறைந்தவளா என்று மனைவியோ விதண்டாவாதம் செய்தால்,அது குடும்பமே அல்ல.இரு சக்கரமும் ஒரே அமைப்பில் இருந்தால் தான் வண்டி சீராக ஓடும்......அதுபோலதான் தாம்பத்தியமும்.இதை இரு சாராரும் புரிந்து கொண்டால் நன்மையே.இல்லையெனில் ???????இதுதான் விடை. 
by G AMMIYA,DENHELDER,Netherlands    24-12-2009 02:31:46 IST
 இன்றைக்கு திருமணம் என்பது பெற்றோர் கடமைக்காக செய்து வைக்கிற ஒன்றாக மாறிவிட்டது. தங்கள் பிள்ளைக்கு திருமணம் தேவையா இல்லை பிள்ளை வேறு யாரையாவது விரும்புகிறதா என்று பார்க்கிறது இல்லை. பெற்றோரது விருப்பதிற்க்கு பணித்து செய்யும் திருமணமே விவாகரத்து வரை போகிறது. பெற்றோர் மாறினால் அன்றி விவாகரத்து அழியாது. நானும் விவாகரத்து ஆனவன் தான். என் மனைவி இன்னொருவனை 5 வருடம் காதலித்து அவருடன் அணைத்து வித இன்பமும் அனுபவித்து பெற்றோர் பிடிவாதத்தால் என்னை கட்டிக்கொண்டாள். ஆனால் எங்களுக்கு முதலிரவு கூட நடக்காமல் இரண்டு மாதங்களில் விவாகரத்து வாங்கி அவளுடைய பழைய காதலுடன் சேர்ந்து வாழ்கிறாள். எனவே பெற்றோர் பிடிவாதம் செய்யாமல் இருந்தால் திருமணம் நிலைக்கும். 
by s சிவா Kumar,Florida,United States    24-12-2009 00:59:27 IST
 நான் திரு.சித்தார்த்தன் அவர்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
கிருஷ்ணா, தோஹா-கத்தார் 
by krishna,doha,Qatar    24-12-2009 00:55:44 IST
 DIVORCE IS MUCH BETTER I HAVE A RESTAURANT I WANT MY LIFE I AM A DOCTOR TOO HUSBAND NOT EARNING LIKE ME
VIDYA 
by V VIDYA,USA,United States    24-12-2009 00:16:56 IST
 ஆண்கள் விட்டு கொடுத்துகொண்டேதான் இருக்கிறோம். ஆனால் பெண்கள் விட்டு கொடுக்கவும் தயராகஇல்லை. கணவன் என்பவன் காசு கொடுத்து வாங்கப்பட்டவன் என நினைகிறார்கள். எனவே கணவன் எனக்கும் என் குடும்பத்துக்கும் அடிமை என்பதே அவர்களின் எண்ணம்.  
by k Samy,USA.,India    24-12-2009 00:06:59 IST
 Modern working women are worst in this world they dont know the value of love value of tradiation value of marriage, i got married in the year 2008 didnt live with my wife for a single day,it was a forced marriage for her , i tried my best but nothing worked out and stil i am waiting for her because i respect the tradiation,indian culture ,but modern girls r not haveing any feeling as long as girls go for work they would be like this my sincere advice to guys dont get married be single and be happy 
by பிரபு,NJ,United States    23-12-2009 23:33:24 IST
 திரு. நாகப்பன் அவர்களின் கருத்தே உண்மை. தம்பதியரே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 
by sree sree ,Thanjavur.,India    23-12-2009 22:06:50 IST
 அட ராமா இப்போ பெண் அடிமை இல்லை
ஆண் அடிமை தான் இருக்கு ... ஆம்பிள்ளை இத வெளியில சொல்றது இல்ல..
கல்யாணம் முடுஞ்ச மறு நிமிஷம் ஆஹா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் டி தான் இருகாங்க ....
பல விவாகரத்து கேஸ் கல அலசி பாத்தா இது தெரியும் ....
இந்த காலத்து பொண்ணுகளுக்கு என்ன ஒரு வில்லத்தனம் ...???
பல பிரசனை மாமியார் மருமக சண்டை தான் இதுல ஆம்பிள்ளக்கு என்ன சம்பந்தம் ....
இப்படிக்கு
வருத்தபடுற வாலிபர் சங்கம்  
by s raja,chennai,India    23-12-2009 21:42:31 IST
 வரதட்சனையும் சாதி வெறியும் ஒழிந்தால் மட்டும் இது குறையலாம். கூட்டுகுடும்பம் மற்றொரு தீர்வாகும்.  
by a அரசன்,chennai,India    23-12-2009 21:16:20 IST
 இதற்க்கு ஒரே வழி...
காதலியுங்கள்...
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலியுங்கள்...கடைசி மூச்சு வரை காதலியுங்கள்.
கணவன் மனைவி என்ற ஈகோவை முதலில் விடுங்கள். நல்ல நண்பராக எல்லாவற்றிலும் இருங்கள்.
கூட்டு குடும்பமாக இருந்தாலும்,தனி குடித்தனமாக இருந்தாலும் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுகொடுத்து அன்போடும் அரவணைப்போடும் இருந்தால் .....
பிரிவு என்ற ஒரு வார்த்தை வாழ்வில் வராது. 
by A ஜீவா ,Madurai,India    23-12-2009 20:18:04 IST
 திரு குமரன், சென்னை அவர்களின் கருத்து மிக அருமை. என் நண்பன் மனைவி டாக்டர் ஆக இருந்தாலும், அவள் கர்வமும் முன்கோவமும் கொண்டவள் அவளிடம் எப்படி குடும்பம் நடத்த. எவளவு முயன்றும் கோர்ட் படி ஏறி விட்டால். என்ன பண்ண. நண்பன் டாக்டர் பட்டம் பெற்று முதுநிலை டாக்டர் ஆகிநாலும் பயன் இல்லை. தெருவில் திரித்தால் தான் புத்தி வரும். டாக்டர். வசந்த்., கோவை.  
by M Vasanth,Kovai,India    23-12-2009 20:05:08 IST
 Most of the girls get married ...then they get divorce ....then the lead the happy life with other married mens....that to working womens are very expert in that.....westren countires enjoy this fun...why not from india.......goood luck 
by s சூர்யா,usa,India    23-12-2009 19:33:16 IST
 It may sound good to divorce, and have the presumed independence of women. In the long run independent, and single women will suffer the worst. What is happening in INdia is what is followed in the European countries including USA. Single women are the orphans of the society uncared for by anybody. Now, after divorce, and living single for a long time, they may do anything to get a man in their lives. Let it happen in India. These radical women are spoiling the society, and their personal lives. I want this to continue so they pay an irrepairable price. Unless the marriage, and subsequent life goes in conformity with the family principle, women will be the sufferers. Once a woman is 45, she is done away with. Be careful. 
by an observer,USA,United States    23-12-2009 19:32:54 IST
 எல்லோரும் நன்றாகதான் சொன்னிர்கள், இதற்கு ஒரே வழி பெண்னிற்கு 21 வயதில் கல்யாணம் செய்வதுதான். ஆணிற்கு 30 வயது வரும்போது கல்யாணம் செய்துபார். குறைந்தது 10 வயது வித்தியாசம் வேண்டும், கண்டிப்பாக பிரிவு வராது. 
by ENG RUPRA,Qatar,Qatar    23-12-2009 19:07:53 IST
 In Coimbatore is divorce rate is high. Because the way guy family treat the girl’s family. My friend got married to Coimbatore guy. From the day one , that guy and his mother threaten my friend they will give divorce for everything. Also that guy is telling that ''''Son-in-low is like lord “Perumal” and her parents have to carry him. I can’t believe this and he is talking like this even though he is a IT guy in Bangalore. You won’t see a lady like his mom. She is a whore. My friend gave birth recently. They didnt allow her to her parents house and that guy''''s mom is beating her and torturing her. So that she will go herself. What you all expect my friend to do... Its not that gals are the reason for divorce... these kind of bastards are reason for divorce 
by Anita V,Bangalore,India    23-12-2009 17:59:16 IST
 now a days guys wants working , smart and pretty gal . Sametime they expect her to be as his mom and he wants to be his father. Its not possible. Our mom generations was not edcated much and not independent and they were forced to be with husband whatever he and his family do. But its not the case now. Incase of working gal , she would have been independent . All of sudden , if her husbnd ans his family contoll her and domintae her.. she will try to comout from that. Even love marraige also break this kind of issues. Guys should undersntand this truth and should treat her as equal partner. otherwise divorce rate will increase .Its too late to talk that gal has to adjust..she should save family..she should bare all and etc . Though its bitter ,thats the truth.  
by K Kumari,UK,United Kingdom    23-12-2009 17:36:50 IST
 இதை பார்க்கும் போது ஆங்கிலயர்களும் வியந்து பார்த்த நமது திருமண கலாச்சாரம் எங்கே? என்று கேட்க தோன்றுகிறது
நம்மை விற்று அவர்களின் கலாச்சாரத்துக்கு மாரிகொண்டிரிக்கிறோம்.  
by A செல்வஸௌந்டரி ,Chennai,India    23-12-2009 17:21:06 IST
 குடும்ப வாழ்கை என்பது விட்டு குடுத்து போவதே, 
by s.s Raja,ABQQ,Saudi Arabia    23-12-2009 17:03:33 IST
 To avoid this, people should understand themselves before marriage. Love & arrange marriage is better. 
by M லிங்கசாமி,Chennai,India    23-12-2009 17:02:24 IST
 எந்த ஒரு அமைப்பிலும் ஒருவர் தலைமை வேண்டும், ஆனால் மற்றவர்களுடன் ஆலோசனை பெற வேண்டும் . இதையொத்த ஒரு அமைப்புதான் முன்னாளில் கூட்டு குடும்பமாக செயல் பட்டது. குடும்பத்தில் ஆணும் , பெண்ணும் சரி சமம் . ஆனால் நான் அடிமையில்லை , நாகரீகமான உலகம் என்று , பெண்கள் புகை பிடிபதிலிருந்து பார்களில் ஆட்டத்துடன் மதுபானம் உள்ளிட்ட வழிகளில் செல்வதை அமோதிப்பதகா சிலர் இங்கே கருத்து சொல்லியிருகிறார்கள். பொதுவாக ஆண்கள் தலைமையில் பெண்கள் தங்களின் கருத்துகளை ஆலோசனைகளாக வழங்கி குடும்பத்தை நடத்தினால் ஒரு பிரச்சனையும் கோர்ட் ஏறாது. அப்படிதான் நல்ல குடும்பம் வாழ்கிறது. 
by P Siddharthan,Doha,Qatar    23-12-2009 17:00:29 IST
 nothing wrong in divorce, its individual human rights.. 
by e thinakaran,mumbai,India    23-12-2009 16:25:07 IST
 இங்கு பெண்ணடிமை பற்றி எந்த ஒரு கட்டுரையும் இல்லை மற்றும் எதிர்பவர்கள் யாரும் இல்லை திரு நாகப்பன் சொல்வதில் தவறு உள்ளது. இன்று பெண்கள் பல துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக உள்ளனர் மேலும் திருமணம் ஆகும் முன்னரே அவர்களிடம் எதிர்பார்புகள் அதிகமாக உள்ளன. மற்றும் இன்று பெண் பார்த்த உடனே செல் போன் மூலம் இருப்பதாய் இல்லாமலும் இல்லாததை இருபதாகவும் பல பொய்களையும் வாக்குறிதிகளையும் பகிர்த்து கொள்கின்றனர் மேலும் திருமணத்திற்கு பிறகு நாள்கள் செல்ல செல்ல ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுபதில்லை. மேலும் ஒரு சில தவறான வழி காட்டுதினாலும் இருவரும் பிரிகின்றனர். அவர்களுக்கு தேவையான ஒரு அறிஉரை சரியாக கிடைபதில்லை. கணவன் மனைவி வேலைக்கு சென்றாலும் சரி இல்லை என்றாலும் சரி, இருவரும் விட்டு கொடுத்து சென்றால் விவாகரத்து குறைய வாய்ப்புகள் உள்ளது. சகிப்புதன்மை என்னும் மந்திரத்தால் நம்மால் வெற்றி பெற இயலும் . நான் இன்னும் திருமணம் ஆகாதவன் என்னை சுற்றி நடந்தவைகளை வைத்து தான் சொல்கிறேன்  
by G. அனந்த குமார்,Tiruppur,India    23-12-2009 15:34:47 IST
 மேனாட்டார் நம்மை மரியாதையுடன் நோக்குவது நமது வாழ் நாள் உறவான தாம்பத்தியத்தினால் தான். நம் வாழ்க்கையில் ஒழுங்கும் மகிழ்ச்சியும் நிறைவதற்கு இது முக்கிய காரணம். பிரிந்த தம்பதியர் எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கின்றனர்? பிரிவால் ஏற்படும் மனக்கோளாறுகள் எத்தனை? இணைய தளமும், சினிமாவும் நம் வாழ்கையை சீரழிக்கின்றன. குழந்தைகளின் சிறு வயது முதலே அவர்களின் பெற்றோர் உதாரண கணவன் மனைவியாய் இருப்பதே விவாக ரத்தை குறைக்கும் வழி. 
by N.S. Sankaran,Chennai,India    23-12-2009 15:16:56 IST
 விவாகரத்து , பிரிவினை போன்ற செயல்கள் பெண்கள் வீட்டில் மூலமாகத்தான் அதிகமாக வருகிறது . பெற்றோர்கள் பெண்களை நல்லவிதமாக
அறிவுரை கூறுவதில்லை , மாப்பிள்ளையை எப்படியாவது அவருடைய குடும்பத்திலிருந்து பிரிக்க
பல தவறான வழிகள் போதிக்க படுகின்றுன, இதனால்தான் பெரும்பான்மையான கணவன்
மனைவி உறவுமுறை பிரச்னை ஆகிறது, இதில் சட்டங்கள் பெண்களுக்கு சாதமாக இருப்பதால் தவறான வழிமுறைகள் மூலம் பிரச்சனைகளை வளர்த்து கொள்கிறார்கள், இதனால் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் பெரியோர்களின் வாழ்க்கை நரகமாகி போய்கிறது


 
by L sridharan,Chennai,India    23-12-2009 15:05:00 IST
  முன்னோர்கள் அமைத்து கொடுத்த கலாச்சார அமைப்பு முறையை உடைத்துதான் இதற்கெல்லாம் காரணம். 5000 ஆண்டுகள் வாழ்ந்த நம் முன்னோர்கள் மடையர்கள் அல்ல. குழைந்தை திருமணம் மட்டுமே இதற்கு விமோசனம். பெண்களை அடக்கி வைத்ததும் சரியே. பாரதியார் சொன்னால் சரி என்று ஆகிவிடமுடியாது. சற்றே நினைத்து பாருங்கள் உண்மை புரியும். 
by v ஜனார்த்தனன்,chennai,India    23-12-2009 14:50:53 IST
 மனிதா நீ சொல்லுவது உண்மை  
by ராம்,coimbtore,India    23-12-2009 14:45:25 IST
 முதலில் குடும்பத்தில் சந்தேகம் என்பது வரவே கூடாது. அப்படி சந்தேகம் வந்து விட்டால் அதை கண்டிப்பாக தீர விசாரித்து உண்மைகள் என்ன என்று கணவன் மற்றும் மனைவீடம் எடுத்து சொல்லி புரியவைக்கவேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக விவகரதுதன் ஒரே வழி. கண்டிப்பாக கணவனோ அல்லது மனிவியோ தவறு இர்ருப்பவகர்ல் சரிசெய்து கொண்டு உண்மையாக வாழவேண்டும்
 
by T ஸ்ரீனிவாசன்,pondicherry,India    23-12-2009 14:40:50 IST
 This is as a result of Ladies Liberation!
They are being torture mentally saying'''' You are only female to follow what is directed and male house people are the Leaders and will command. such Old foolish ideals to come to death and respecting girls and ladies with trust and considering them as with better knowledgeable and sharp brained will stop divorce. Also not bringing situations touching the deep feeling or neglect and ridiculing ladies will solve the problem. Gents think that they can get any other girl or ladies atleast illegaly leads to such problem. Once ''''Piranmanai Nokka PeraaNmai'''' is there, such problem will not come. Male chauvaneism to come to an end to bring down divorse. Ladies after being thrust to think ''''no use living with this fellow'''', decide to go for court. Gents are who do not listen to elders compared to girls/ladies who are ready to listen to parents. Only on finding no other go ladies resort to divorce. It is only ladies who think of their offspring. Now a days such gents are neither think of parents or their offspring that life has no meaning with such thinkers! Such males in confrontation, thimk they are everything as they earn and others to follow them. They leave out core of human life ''''love and relationship is prime for peaceful life'''' and they want to combat for silly reasons. For such males faith in God and family system is nil and go for divorce.  
by E Annan,Nagoor,India    23-12-2009 14:39:44 IST
 என்ன சொன்னாலும் ஆண்களை விட பெண்களே தனிக்குடித்தனம் போக ஆசைபடுபவர்கள். இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதேதான் நாளை உங்களுக்கு. எதையும் யோசித்து விட்டுகொடுத்து வாழ்வதே வாழ்க்கை. 
by kj ஜெயக்குமார்,madurai,India    23-12-2009 14:32:40 IST
 இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை. அவர்கள் அப்படி நினைத்துக்கொன்டார்கள். மாமனார் ராட்சசன் மாமியார் அரக்கி என்று புகை போட்டுத்தான் தன்பெண்ணை அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதற்கு உறவுகளை அறுப்பதுதான் தீர்வா? அவரவர் மனதில் என் மனைவி, என் கணவன் என்ற தனி உடைமை உணர்வு உள்ளதா இல்லையா? இதில் கள்ளக் காதல் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு நெறி சமம் இல்லையா? மிருகங்களைப்போல் வாழ விரும்புபவர்கள் தயவு செய்து திருமண பந்தத்துக்குள் வராதீர்கள். இங்கு திருச்சியில் இருந்து அன்று 22.12.09 இரவு 11 மணி அளவில் ஒலி பரப்பாகிய ஒரு கருமாந்திர எப் எம் இல் பெண் ஒருத்தி முக்கிகொண்டும் முனகிக் கொண்டும் ஆண்களும் பெண்களும் எப்படி கட்டி பிடித்துகொள்வது காதல் செய்வது என்று பினாத்திக் கொண்டிருந்தாள். இதே போல் இதே எப் எம் இல் இரவு 10 மணி அளவில் ஆம்பளை ஒருவனும் முனகிக் கொண்டு இருப்பான்.இந்த மாதிரி மிருக சேர்க்கை பயிற்சிக்கு திருமணம் என்ற பெயர் ஒரு கேடா? ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்மையான அன்பிருந்தால் மட்டுமே அழகனோஅழகியோ இல்லறத்தில் திருப்தி உண்டாகும். வறுமையிலும் பிரியாத தம்பதிகளை வையகம் கண்டுள்ளது. இல்லறத்தில் திருப்தி உண்டானால் கடவுளாலும் பிரிக்க முடியாது. இல்லையேல் எதாலும் இணைக்கமுடியாது. 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    23-12-2009 14:17:27 IST
 
please people ...dont avoid joint family... parents should teach benefits of joint family and their relationship to his childrens...and also be live with theirs.. nuclear family is very dangerous to our valuable culture.. we are diffrentiate our country through our culture ... love and live together...
its mu humble request ................................. 
by Anbu P,dharmapuri,India    23-12-2009 13:35:01 IST
 இங்கு ஒரு கலாச்சார மற்றம் நடந்துகொண்டு இருக்கிறது.....
முந்தய காலங்களில் பெற்றோர்களின் வற்புறுத்தல் மற்றும் ஏனைய காரணங்களினால் விருப்பமில்லாமல் திருமணம் செய்து ....கலாச்சாரம் என்ற பெயரினால் அதிலிருந்து வெளிவரமுடியாமல் முன்னேற முடியாமல் மக்கள் இருந்தனர். இதில் பெரும்பாலும் பெண்கள் .......

இன்று அதை விடுத்து வாழ நினைகிறார்கள் ...அதில் தப்பு இல்லை ....
தவறாக பயன் படுத்தாமல் இருந்தால் சரி....

 
by s அசல்,singapore,Singapore    23-12-2009 12:40:49 IST
 before they do this they have to think of their children then they will not do this.
 
by b Lakshmi,chennai,India    23-12-2009 12:34:44 IST
 நண்பர் திரு கணேஷ் கூறியது போல் பெரியவகளை மதிக்க தவறுவது விவாகரத்தில் முடிகின்றன . 
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India    23-12-2009 12:14:21 IST
 Marriages are made for living together and helping for childrens and parents not for only material enjoyment.. This material enjoyment is temporary this will end once our enjoyment is finished so people should be bliss with living together and accepting parents advice ..
Sri Krishna tells in Bhagavat Gita one should be Equiposed allways heat or cold, happy or distress, success or failure than our life will be bliss.
people should engage in the devotional service than only the world become peacefull Our Mahatma Gandhiji used to read and take the advice from Bhagavat gita thats why he could able to rule the india very smoothly... every body should follow this ..


 
by G Ramesh,Bahrain,India    23-12-2009 12:05:24 IST
 நாகப்பன் சார், பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வியை தவறாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்ப காலத்தில் கல்வி இல்லாவிட்டாலும் வீட்டில் பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தார்கள். ஆனால் கல்வி கற்ற பெண்கள் யாரையும் மதிப்பதில்லை. நாம் சொல்லும் கல்வி, சுய உரிமை, புண்ணாக்கு எல்லாம் நாம் சந்தோசமாக வாழ்வதற்கு மட்டுமே. ஆனால் இதை வைத்து நம்மை நாமே ஏமாற்றி சந்தோசத்தை இழந்து வருகிறோம். திரு. சிவா அவர்கள் அருமையாக சொல்லி உள்ளார். இதன் விளைவு விரைவில் உலகத்துக்கு தெரியும்.  
by s செந்தில்குமார்,chennai,India    23-12-2009 11:53:24 IST
 இதற்கு காரணம் திருமணம் லேட் ஆக செய்வதுதான். பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...காலத்தே பயிர் செய் என்பதை. வயது ஆக ஆக ஆண்களுக்கும் பெண்களுக்கும் எண்ணங்கள் வளர்ச்சி அடைந்து நல்லா ஸ்ட்ராங் ஆகி விடுகிறார்கள். விட்டு குடுக்கும் மனப்பான்மை இழந்து விடுகிறார்கள். சுருக்கமா சொன்னா கமல ஹாசன் மாதிரி வாழ ஆசைப்படுகிறார்கள். வெளி நாட்டிலே திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்து கொள்கிறார்கள். அதனால் லேட் ஆக திருமணம் செய்து கொள்கிறார்கள். லிவிங் டுகதர் வாழ்க்கை வாழ்கிறார்கள். நம்ம ஊரு கலாச்சாரத்திற்கு திருமணம் சரியான சமயத்தில் செய்தால் இந்த பிரச்சினை குறையும். 80 சதவிகிதம் சிறப்பாக திருமண வாழ்க்கை அமையும். 
by M Ramasamy Murugan,Bangalore,India    23-12-2009 11:49:40 IST
 பெண்களே காரணம்
 
by j ராஜசேகர்`,chennai,India    23-12-2009 11:16:17 IST
 முன்னோர்கள் பெண்களை அடிமையாக நடத்தினார்கள். அனால் அப்போது நமது நாட்டுக்கு இருந்த கலாச்சாரமும், பெருமையும் இப்போது காணமல் போனது ஏன் என யோசிக்க வேண்டுமே. நன் அடிமை முறை வேண்டும் என்று சொல்லவில்லை. முன்னைவிட இப்பொது பெண்களை மதித்து நடத்தும் பாங்கு அதிகமாகவே உள்ளது. யாரும் கொடுமை எல்லாம் செய்வது கிடையாது. ஆனால் அந்த சுதந்திரம் பெண்களை தவறான முறைக்கு அழைத்து செல்கிறது. விவாகரத்துக்கு சில கரணங்கள்

1) பெண்களின் கோபம் தற்பொழுது பல குடும்பங்களுக்கு வினையாக இருக்கிறது. பெண்களுக்கு சகிப்புத்தன்மை மிக முக்கியம். ஒரு ஆண் எவ்வளவு கோபம் கொண்டாலும் அதனை அணைக்க பெண்ணால் முடியும். ஆனால் ஒரு பெண்ணின் கோபமும், பிடிவாதமும் யாராலும் சமாளிக்க முடியாதது.
2 ) பெண்கள் வேலைக்கு செல்வது நாகரிக மாற்றமாக இருந்தாலும், அவர்களின் வருமானம் அவர்களின் கர்வம் உயர காரணமாக உள்ளது.
3 ) மனைவி வேலைக்கு செல்வதால் குடும்பம் நாசமாவதை, பிள்ளைகள் அநாதை ஆவதை எந்த கணவனும் விரும்ப மாட்டான்.
4 ) வேலைக்கு செல்லும் இடத்தில் இருக்கும் சில ஆண்களால், குடும்ப பெண்களின் நடத்தை கெடுகிறது(நான் அனைத்து பெண்களுக்கும் சொல்லவில்லை). செல்போன் இதற்க்கு முக்கிய காரணமாக கூறலாம்.
5 ) இவற்றையும் மீறி ஒரு முக்கிய கரணம் தனிக்குடும்பம். இன்று திருமண பந்தத்தில் நுழையும் பெண்கள் 95 சதவீதம் தனியாக தனி குடுத்தனத்தில் வளர்ந்தவர்கள். அவர்களால் கணவர் குடும்பத்து உறுவுகளை தமது குடும்பமாக நினைக்ககூட முடியவில்லை. அப்புறம் எப்படி நிம்மதியான குடும்ப வாழ்க்கைகிடைக்கும்.
 
by B குமரன்,Chennai,India    23-12-2009 10:53:31 IST
 ஒரு வருத்தமான செய்தி. குடும்பத்தில் குழப்பம் செய்து மகிழ்ச்சி அடைபவரும் இவ்வுலகில் உள்ளனர். கணவன்-மனைவி மட்டும் விட்டு கொடுத்தால் போதாது. அவர்களை சார்ந்தவர்களும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை வளர வேண்டும்.

பொதுவாக பெரியவர்களை இளையவர்கள் மதிக்க வேண்டும். அப்போது தான் பெரியவர்கள் தான் பார்த்த, பெற்ற கஷ்ட நஷ்டங்களை எடுத்துரைப்பார். விவாகரத்து வழக்குகள் குறைய இறைவனிடம் வேண்டுகிறேன் 
by கணேஷ் ,Maldives,Maldives    23-12-2009 10:03:12 IST
 சேத் கான் ..... நச் அடி ..... சூப்பர் கமென்ட் ..... தொடர்ந்து நச்சுங்கள். 
by N Jiang,wuxi,China    23-12-2009 09:19:35 IST
 குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. தவறு இருப்பின் திருத்த வேண்டும். விலக கூடாது. தனிமையின் துயரம் கொடுமையானது. புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்  
by yasmin,kuching,Malaysia    23-12-2009 09:04:30 IST
 நான் நாகப்பன் சொல்வதை முழுவதுமாய் ஆமோதிக்கிறேன்.
 
by k sk,boston,United States    23-12-2009 08:47:15 IST
 இதெல்லாம் ஒரு பெண் தன்னுடன் கொண்டுவரும் தாய் வீட்டு சீதனம். திருமணம் முடிந்தவுடனேயே, தனது கணவனை அவர்கள் வீட்டிலிருந்து பிரித்து விடுகிறாள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். நாளை என்பது நிச்சயம். கூட்டுக்குடும்பத்தை எதிர்ப்பவர்களே.. ஒரு முதியோர் இல்லத்தில் இப்பொழுதே ஒரு இடத்தை, நாளை, உங்களுக்காக முன் பதிவு செய்து கொள்ளுங்கள். தனது குழந்தையின் காலில் முள் குத்தினால், தன கண்ணில் முள் குத்தியது போல் வேதனை படுபவர்கள் தான் பெற்றோர்கள். அனால் இன்று! தன்னுடைய பெற்றோர்களின் கண்களிலே முள்ளால் குத்துகிறார்கள். கூட்டுக் குடித்தனமாக இருந்தால், குடும்பத்தை நல்ல விதமாக நடத்திக் செல்லவும், வீட்டு வேலைகளையும், குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் பெரியவர்கள் இருந்தார்கள். அனால் இப்போது ??? வழிகாட்டுதல் செய்ய பெரியவர்கள் இல்லாமல் போனார்கள்.
வீட்டின் பின்புரமோ அல்லது முதியோர் இல்லங்களிலோ தான் பெரியவர்கள் கண்ணீருடன் இருக்கின்றார்கள்.  
by சுவாமிமலை சிவா,Thanjavur,India    23-12-2009 08:29:58 IST
 வாசகர் நாகப்பன் அவர்கள் மிக சிறந்த கருத்தை சொல்லி உள்ளார் . மனதார பாராட்டுகிறேன். அவரை போன்ற முதிர்ந்த அறிவு உடையவர்கள் மிக குறைவு.  
by ravi,toronto,Canada    23-12-2009 07:55:53 IST
 Nowadays, Parents are having very less time to spend with children. They grow by surroundings rather than culture and tradition passed from the parents. Whether it is Love marriage or arranged marriage., very thorough background check need to happen with respect to family, education, friendship, habits etc. After marriage., husband and wife should trust each other, be adjustive and patient towards each other. We many time blame western culture., however from what I have seen husband and wife do live very closely till they live and then there is permanent separation. In our case, rather than giving the mind only to spouse., some of them go immoral route and land in trouble. Complex situation and very dificult to find solution for this.  
by C சுரேஷ்,Charlotte,United States    23-12-2009 07:27:58 IST
 மதிப்பிற்குரிய விவாகரத்து செய்யும் தம்பதியர்களே, ஒரு சிறிய வேண்டுகோள் நம்மை போன்றவர்களுக்கு திருமண வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை சரியான முறையில் பயன்படுத்தினால் இனிமை!.இன்பமும் துன்பமும் இல்லையென்றால் அது வாழ்க்கை இல்லை. நாமெல்லாம் சிந்திக்கும் திறன் படைத்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுங்கள். வாழ்க்கையில் சந்தோசமாக இருங்கள். இதுவே எல்லோரின் விருப்பம்.
நன்றி.  
by C ராமகிருஷ்ணன்,Kallal-sivagangai(district),India    23-12-2009 07:27:43 IST
 We are all going towards materilistic word. Oru Maayai.......No sharing, care amoung couple since there is no time to talk,laugh. Many not having openness amoung themself. Hard to understand how they come to court after few week of marriage.
Need to change and social system have to make more eye-opening propaganda via media, getogether.

Family life so wonderful sytem arranged by the civilization growth.Don''t let the ''Tie'' to break to go back to Animal culture.

Everyone need to enjoy the life happily.  
by S Parth,Chennai,India    23-12-2009 07:12:37 IST
 இங்கே சொல்லி உள்ளதை போல் நடக்கவில்லை. சொல்ல போனால் நமது முன்னோர்கள் நமது பெண்களை அடிமைகளை நடத்தினார்கள். அதை தான் இங்கே ''''முன்னோர் களால் காலங்காலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன.'''' என்று சொல்லுகிறோம். இந்த தலைமுறையில் தான் வீட்டை விட்டு பெண்கள் வெள்ளி உலகத்திற்கு வருகிறார்கள், அவர்களுக்கு நல்லது எது கேட்டது எதுவென்று இப்போழுது நன்றாக தெரிகிறது. அதனால் நாம் நமது பண்பாடு நாகரிகம் என்று மக்களை ஏமாத்த வேண்டாம். நமது பண்பாடு பெண்களை அடக்கி ஆள்வதும், பெண்களை உலகம் தெரியாமல் வைதிருததே ஆகும். அதற்காக விவாகரத்து செய்வது நல்லது என்று சொல்ல வர வில்லை, அதற்கு நமது பழைய பண்பாட்டை கூட்டு சேர்க்க வேண்டாம் என்பதே என் கருத்து.
குடும்ப வாழ்கை என்பது விட்டு குடுத்து போவதே, கல்யாணம் படகு போன்றது அதில இருவரும் துடுப்பு போன்றவர்கள், இதில் ஒரு துடுப்பு ஒழுங்காக வேலை செய்ய வில்லை என்றால் படகு என்ற கல்யாண பந்தம் முன்னோக்கி செல்லாது. இது தம்பதியர் புரிந்து விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.  
by M நாகப்பன் ,Chennai ,India    23-12-2009 06:21:06 IST
 நாகரிகம் என்பது நரகம் தான் இதை மனிதன் புரிந்துகோள்ளவேண்டும். திருமணம் என்பது ஒரு நறுமணம் அதை நுகர்ந்த்தான் புரியும்.  
by மனிதன் ara,chennai,India    23-12-2009 01:43:53 IST
 கலி முத்தி போச்சு . 
by s ரகுமான்,chennai,India    23-12-2009 01:22:59 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்