முதல் பக்க செய்திகள் 

வாடிகன் பிரார்த்தனை கூட்டத்தில் பாய்ந்த பெண்: நிலை குலைந்து விழுந்தார் போப்
டிசம்பர் 26,2009,00:00  IST

Front page news and headlines today

வாடிகன் சிட்டி : வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப் பெனடிக்ட் மீது, ஒரு பெண் பாய்ந்து தள்ளியதால், அவர் கீழே விழுந்தார். போப்புடன் வந்த கார்டினலுக்கு கால் முறிவு ஏற்பட்டது.கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில், பங்கேற்க வந்த போப் பெனடிக்ட்டை(82) பார்த்து ஏராளமானவர்கள் கையசைத்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்களை பார்த்து கையசைத்த படியே வந்த போப் பெனடிக்ட்டை நோக்கி ஒரு பெண், தடுப்பை தாண்டி பாய்ந்து வந்து மோதினார். இதனால், போப் பெனடிக்ட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்கள் உதவியுடன் எழுந்து, மீண்டும் நடந்து சென்றார்.இந்த சம்பவத்தில் போப்புடன் வந்த பிரான்ஸ் நாட்டு கார்டினல் ரோஜருக்கு (87) காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். வாடிகன் நகர பாதுகாவலர்கள் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர். அவரிடம் விசாரித்ததில், அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. வாடிகன் அதிகாரி பெர்ட்ரிக்கோ குறிப்பிடுகையில், ""பெனடிக்ட் மீது மோதிய பெண் பெயர், சுசானா மயோலோ(25). சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாட்டு குடியுரிமை பெற்றவர். கடந்த ஆண்டே இவர் இதே போல போப் மீது மோத முயற்சி செய்துள்ளார். ஆனால், பாதுகாப்பு கெடுபிடியால் இவரது முயற்சி நிறைவேறவில்லை. தற்போது நடந்த நிகழ்ச்சி தாக்குதல் தான்; இருப்பினும் ஆபத்தானதல்ல. ஏனென்றால் சுசானா, ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை,'' என்றார்.இந்த சம்பவத்தால், வாடிகனில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டு விட்டதாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் தெரிவித்தனர். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட பெனடிக்ட், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிடுகையில், ""நம்முடைய சுயநலத்தாலும், பேராசையாலும், உண்மைக்கு எதிராக செயல்படுகிறோம். இதனால், மற்றவர்களிடமிருந்து நாம் தனிமைபடுத்தப்படுகிறோம். முரண்பாடுகளாலும், ஏற்றதாழ்வுகளாலும் நம்மை நாமே சிறைபடுத்தி கொள்கிறோம்,'' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 வாடிக்கான் நகரில்.வாழ்ந்து வரும் புனித.போப்பு. ஆண்டவர்.அவர்கள்.நீன்ட
ஆயுலுடன்.வாழ்ந்து ௨லகஅமைதிக்கும்-
மக்களின்.நன்மைக்கும்.பிரர்த்திக்காவும்.
'''''''' ஏசுவுக்கு. நன்றி.''''''''
 
by மு.வைரக்கண்ணு.,Doha Qatar,India    26-12-2009 23:28:48 IST
 பெருமைக்குரிய போப் அவர்களுக்கு நடந்தது ஒரு மன நோயாளி செய்ததாக தெரியல்ல,ஏனெனில்,சென்ற வருஷமும் இதே பெண் முயற்சி செய்துள்ளாள்.அப்போ இவளுக்கு மன வியாதியா?இப்போ எல்லாத்துக்கும் மன வியாதி என்று ஒரு பொய் சான்றிதழ்.ஆனால் போப் அவர்கள் சொன்னது எல்லாம் பெருமைக்குரியது.அதற்கு நன்றிகள். 
by G AMMIYA,DENHELDER,Netherlands    26-12-2009 22:44:50 IST
 This is very bad incident. We should respect to POPPANDAVER. Dont release bad comments, my brothers!............ 
by S R George Fernandaz,Dubai,United Arab Emirates    26-12-2009 20:56:22 IST
 The girl mental affacet mentain the enquary so no seveier action  
by k.t karthi,karur,India    26-12-2009 15:41:01 IST
 Good message, but he also should remember his words while talking about converting hindus in india. 
by A Devraventh,delhi,India    26-12-2009 15:06:17 IST
 Exactly true ! May God Bless Him More & More ! 
by v christopher,sanaa,Yemen    26-12-2009 13:13:05 IST
 Excellent Christmas message form Pop Andaver, We should think about his word and especially USA / UK should think before start war. Whether it is necessary or not? 
by S Murali,RAselaffan,Qatar    26-12-2009 12:25:04 IST
 போப்பா கிறிஸ்துமஸ் மெசேஜ் முற்றிலும் உண்மை. உலக மக்களுக்கு தேவையானது.  
by SK கதிரவன்.ச,Silvassa ,India    26-12-2009 10:46:10 IST
 Excellent words. and very good message. 
by S Karthik,Bangkok,India    26-12-2009 06:43:30 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்