முதல் பக்க செய்திகள் 

சர்வதேச கடத்தல் தளமாக மாறும் தமிழக கடல் பகுதி
டிசம்பர் 28,2009,00:00  IST

Front page news and headlines today

ராமேஸ்வரம் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, கடல் வாழ் உயிரினமான, கடல் அட்டை கடத்தலில், சர்வதேச கடத்தல் தளமாக, தமிழக கடல்பகுதிகள் மாறுவதை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசால் தடை செய் யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் மருந்து, உணவாக பலநாடுகளில் பயன்படுவதால், இங்கிருந்து பல்வேறு வகையில் கடத்தி செல்லப்படுகிறது. இதுபோல் தடை செய்யப்பட்ட கடல் சிப்பி, சங்கு வகைகளும் வெளிநாடுகளில் இருந்து, இங்கு கடத்தி வரப்படுகிறது. கடல் குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை போன்றவை, இவ்வகை கடத்தலில் முதலிடம் வகிக்கிறது.கடல் அட்டைகள், ஆண்மை விருத்திக்கு மருந் தாக கருதப்படுவதால், மலேசியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில், இதை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். கடல் அட்டைகளுக்கு, இலங்கையில் தடையும் இல்லை என்பதால், இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதனால், தமிழக கடலோர பகுதிகளில், தடையின்றி டன் கணக்கில் கடத்தி செல் லப்படுகின்றன.மீனவர்களால் பிடித்து வரப்படும் கடல் அட்டைகள், கிலோ 500 ரூபாய்க்கு வியாபாரிகளால் வாங் கப்படுகிறது. இதை வியாபாரிகள், ஏஜன்டுகளிடம் கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் அட்டைகள், ராமேஸ்வரம், கீழக்கரை, தூத்துக் குடி, கோடியக்கரை, காரைக்கால், புதுச்சேரி போன்ற பகுதிகளில் ரகசியமாக பதப்படுத்தப் பட்டு, படகில் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுகின்றன. இலங்கையில், இந்திய மதிப்பில், கிலோ 5,000 ரூபாய்க்கு விலை போகிறது. வெளிநாடுகளில், இதன் விலை பன்மடங்கு என்பதால், சத்தமில்லாமல் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் கடல் அட்டை கடத்தலில் பலரும் ஈடுபடுகின்றனர்.இதன் கடத்தலில் ஈடுபட்ட, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 30 க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தும், முறையான நடவடிக்கை இல்லை. இதனால், கடத்தலில் பலரும் முனைப்புடன் ஈடுபடுவதாக, புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும், "நெட் ஒர்க்' அமைத்து சர்வதேச அளவில், கடத்தல் தொழிலை விரிவுபடுத்தியும் வருகின்றனர். இந்திய கடற்படை உட்பட அனைத்து ஏஜன்சிகளும், 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டாலும், கடல் அட்டை கடத்தலும் தொடர்கிறது.தமிழக கடல் பகுதிகள், சர்வதேச கடல்அட்டை கடத்தல் சந்தையாக மாறுவதை தடுக்க, கடலோர பாதுகாப்பில், "ஹோமிங் ஆபரேஷன்' நடத்தினால் மட்டும் போதாது, தீவிர நடவடிக்கை தேவை என்பதையும் அரசு உணர வேண்டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 if india is not permitting its fisherman to live with this attai..srilankan will take advantage..they will attack tamil poor fishman and allow thier fishman to collect this attai and export...foolish india. 
by m chena,dubai,United Arab Emirates    30-12-2009 11:08:27 IST
 மீனவர்கள் தாக்கப்டுவதின் மர்மம் இதுவோ?  
by RVK Indian,London,United Kingdom    28-12-2009 21:04:38 IST
 Instead of seeing it as a smugling, why can''''t the Indian government can see it as an opportunity to attract more foreign currency. So that the fishermen''''s life style will also improve. We should learn a lot to convert all our negatives into positives. 
by Mahendran,Chennai,India    28-12-2009 13:38:14 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்