முதல் பக்க செய்திகள் 

யாராவது தாக்கினால், திருப்பித் தாக்குங்கள்: பெண்களுக்கு போலீஸ் கமிஷனர் 'அட்வைஸ்'
டிசம்பர் 31,2009,00:00  IST

Front page news and headlines today

சென்னை : பெண்களுக்கான தற்காப்பு பயிற்சியை வழங்க சென்னை போலீசார் முடிவு செய்துள் ளனர்.வீடு, வேலை செய்யும் இடம், பயணம் செய்யும்நேரம் ஆகிய சந்தர்ப்பங்களில், பெண்கள் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர் பான கலந்தாய்வுக் கூட்டம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பேசியதாவது:மற்ற ஊர்களில் பஸ்சில் பெண்கள் முன்பகுதியிலும், ஆண்கள் பின்பகுதியிலும் ஏறி, இறங்குகின்றனர். அதே முறையை, சென்னையில் கொண்டு வர வேண்டும். சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளபடி, விசாகா கமிட்டி அமைப்பது குறித்து அனைத்து அலுவலகங்களிலும் விழிப்புணர்வு போஸ்டர் வைக்க வேண்டும்.கமிட்டியில் நியமிக்கப் பட்ட உறுப்பினர்களில், பலர் ஓய்வுபெற்று, வேறு இடங் களுக்கும் சென்று விட்டனர்.இதனால், கமிட்டி முழுமையாக செயல்படாமல் உள்ளது. கமிட்டியை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான தற்காப்புப் பயிற்சிகளை போலீசார் அளிக்க வேண்டும்.இவ்வாறு, பெண்கள் பேசினர்.சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பேசியதாவது:வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை தாக்கி கொள்ளையடிப்பது தொடர்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.வியூ பைண்டர், கதவு செயின், கிரில் கேட் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.நகை பாலீஷ், தெருவில் கலவரம் எனக் கூறி பெண் களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றனர். வீட்டில் உள்ள தந்தை, கணவர்களுக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 30 சதவீதம் வீட்டில் தான் நடக்கிறது.ஆபாச படங்களை காட்டுவது, ஆபாச ஜோக் சொல்வது, ஆபாச புத்தகங்களை கொடுப்பது, தவறான எண்ணத்துடன் தொட்டு பழகுவது என அலுவலகத்தில் பெண்களுக்கு பல செக்ஸ் தொந்தரவுகள் வரலாம்.இது குறித்து, முதலில் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட்டின் 1998ம் ஆண்டு தீர்ப்புப்படி, ஒவ் வொரு அலுவலகத்திலும் பெண் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.இதில் வக்கீல், போலீஸ், பெண்கள் சங்க பிரதிநிதி இடம்பெற வேண்டும். விசாகா கமிட்டி முழுமையாக செயல் படாதது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல் வோம்.யாராவது உங்களைத் தாக்க வந்தால், குடை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் திருப்பித் தாக்குங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உங்களுக்கு உரிமை உண்டு. பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான தற்காப்பு பயிற்சியை போலீசார் வழங்குவர். குற்ற ஆவணங்கள் பிரிவு உதவிக் கமிஷனர் முத்தரசி தலைமையில் இப்பயிற்சி வழங்கப் படும்.ஆட்டோவில் ஏறும்முன், அதன் எண்ணை குறித்து கொள்ளுங்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் பகலிலும் செக்யூரிட்டி பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு, ராஜேந்திரன் பேசினார்.தென்சென்னை இணை கமிஷனர் சக்திவேல் பேசும் போது, ""நடந்து செல்லும் போது மொபைல்போன் பேசாதீர்கள். உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என கவனியுங்கள்,'' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இது போன்ற எண்ணக்களை துண்டும் அதிகாரிகள் முன் யோசனை இன்றி செயும் தவறுகள் ஆகும் ,இதனால் தனது பணியை குறைதுகொள்ளும் நோக்கத்துடன் செயல்படுகிர்றார் இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் . 
by mr dharmaraj,hounslow,United Kingdom    31-12-2009 15:31:08 IST
 including police also. 
by s JOHNCHRISTOPHER,L,India    31-12-2009 14:07:07 IST
 வெரி குட் ஐடியா இப்போ வரும் தமிழ்
சினிமா படங்கள்
எல்லாமே வயது வந்தவர்கள்
மட்டுமே பார்க்ககுடியதவே உள்ளது. சிறுவர்கடகும் 18 வயசு நிரம்பாத
பிள்ளைகள்
பார்ப்பதை தவிகவேண்டும் தமிழ் சினிமா படங்கள் கிரிமினல் வேலை செய்ய தூண்டுகின்றது
அமெரிக்காவில் போல
தில் சினிமா ரெண்டு
பகுதியா அடலஸ்
ஒன்லி சாதாரண சினிமா எனபிரிகவேன்டும் தமிழ் சினிமா படங்கள் எல்லாமே கிரிமினல்
செய்ய தூண்டும் போல இருக்கு

௧௦௦

 
by T Sivanathan,Chennai,India    31-12-2009 13:31:37 IST
 பெண்கள் தற்காப்பு கலை தெரிந்திருப்பது மிகவும் அவசியம்தான்.
தன்னை துன்புறுத்துவோரை தாக்கி (உயிருக்கு பாதிப்பு இல்லாமல்) தன் உய்ரையும் மானத்தையும் காத்துகொண்டு தப்பிபதற்கு பெயர்தான் தற்காப்பு. ஆனால் இந்த தற்காப்பையும் பெண்கள் தவறாக பயன்படுத்தி நல்ல ஆடவருக்கு களங்கம் உண்டாக்கிவிடகூடது.
காவல்துறை மட்டும், தனது கடமையே பாரபட்சம் பார்க்காமல் அரசியல்வாதி செல்வந்தர்களுக்கு பயப்படாமல் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தினால் , பெண்களுக்கு எதிரான வன்முறை மட்டும் இல்லை,நிறைய குற்றங்கள் குறைந்துவிடும்.
அதற்க்கு, ஆரோக்கியமான அரசியல் அமைப்பு தமிழகத்தை ஆளவேண்டும். இந்த திராவிட கழகங்களும், சினிமா அரசியல்வாதிகளும் ஒழியும் வரை இந்த நாடு இப்படிதான் இருக்கும். 
by A ஜீவா ,Maldives,India    31-12-2009 12:57:39 IST
 Chain snatching attempt happened to me when I was returning to my home lastweek and I was riding two wheeler. it was 7:45 PM and the crowd was also high in the road. What is the awareness/Precautions to be given to woman using two wheeler?  
by a anuradha,Chennai,India    31-12-2009 12:38:04 IST
 good joke 
by munees,tirupur,India    31-12-2009 11:28:47 IST
 பல இடங்களில் இது போன்ற தவறுகள் நடப்பதற்கு பெண்களே காரணம். உதாரணத்திற்கு அரைகுறை ஆடையினால், கணவருக்கு மட்டுமே காட்ட வேண்டிய தனது உடல் அழகை கடைவீதிகளில் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் சற்று யோசியுங்கள்
சகோதரிகளே அன்புடன் சிவகங்கை சீமை முருக்கப்பட்டி ந.பெரியசாமி  
by na பெரியசாமி,thendralnagar.trichy.21,India    31-12-2009 11:21:54 IST
 பெண்களுக்கு மட்டும்தானா இந்த அறிவுரை ? மற்றவர்களும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள கூடாதா?  
by K JEEVITHAN,villupuram,India    31-12-2009 11:19:01 IST
 திரு ராஜா முகம்மது அவர்களின் கருத்து மிகவும் அற்புதமானது. இது போன்ற ஒரு கண்டுபிடிப்பு உலக மக்கள் அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும். லேசர் கருவியாக குறிப்பிட்ட தூரத்தில் இருந்து செலுத்தி தற்காத்துக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வீட்டில் உள்ள பெண்களுக்கு உதவும்.  
by M தங்கவேல்,Chennai,India    31-12-2009 11:03:52 IST
 இந்த திட்டம் தேவை இல்லாதது. இதை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். 
by J லியோ,paramakudi,India    31-12-2009 10:18:10 IST
 Damn f****** news. Is this the manner of city comissioner. Has the state follows gandhiji''s principle or gangsters policy. What''s this comissioner sir....? 
by p dineshkumar,chennai,India    31-12-2009 10:11:14 IST
 யாராவது எதையாவது செய்ய முயற்சிக்கும் போது நாம் தாக்கினால், இதே போலீஸ் நம் மீது கேஸ் போடாது என்பதற்கு உத்தரவாதம் என்ன. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என பிறகு சொல்லகூடாது.  
by p shiva,chennai,India    31-12-2009 09:51:00 IST
 ஐயோ இப்போதெல்லாம் பெண்கள் பஸ்சின் பின்படியில் தான் ஏறுவேன் என்கின்றனர் .. நாம் சரியாக இருந்தால் எந்த ஒரு அசம்பாவிதமும் நம்மிடம் நடக்காது. சில அசம்பாவிதத்திற்கு பெண்களே வழி வகுக்கின்றனர் . 
by A samy,singapore,India    31-12-2009 09:14:38 IST
 ஆணையர் சொல்றது நல்லாத்தான் இருக்கு..ஏற்கனவே வீட்டில ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கு..தற்காப்பு கலைகளை பெண்களுக்கு கற்றுக்கொடுத்தால் கணவர்மார்களை யார் காப்பாற்றுவது..
சா.முகம்மது அபுபக்கர்,துபாய் 
by S Mohamed Abubucker,Dubai,United Arab Emirates    31-12-2009 09:01:28 IST
 எத்தனை பாதுகப்பு உபகரணகங்கள் வந்தாலும் பெண்களை, மன வலிமையும் தைரியமும் தான் காபாற்றும் பெண்களுக்கு வேலி அவர்கள் முந்தானை தான் 
by nila mdu,madurai,India    31-12-2009 08:25:27 IST
 நல்ல ஜோக் பண்றீங்க சார். தங்கள காப்பாதிக்க பெண்களுக்கு தெரியாதா ? kutravalinga யாருன்னு நினைக்கிரீங்க ? 
by s prakash,vellore,India    31-12-2009 04:49:09 IST
 ஒரு வேளை ஆணையர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஈடுபாடு உள்ளவரோ! தமிழ் இனம் சிங்கள இனத்தவரால் கொடூரமாகத் தாக்கப்படும் போது எதிர்க்கும் தமிழின மக்களை மட்டும் அடிமையாக இருந்து சாகுமாறு இந்திய அரசு வலியுறுத்துகிறதே ஏன்? அயலகத்துறை அமைச்சருக்கும் செயலர் முதலான பணியாளர்களுக்கும் இவர் பாடம் நடத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
by I Thiruvalluvan,Chennai,India    31-12-2009 03:37:20 IST
 மிகவும் நல்ல முயற்சி. டார்ச்லைட் வடிவத்தில் electric shock raad என்ற கருவி கிடைத்தால் பெண்கள் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இதை எதிராளியின் மீது வைத்தால் 100 volt அளவிற்க்கான அதிர்ச்சியை ஏற்படுத்தும்.இதனால் எதிராளி குழப்ப நிலை அடைந்து, விரைவில் அவனை மடக்கிவிடலாம்.இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது.அலுவலகங்களில் சக அலுவலர்கலாலோ, உயர் அதிகரிகலாலோ சாதாரண சிறிய தொந்தரவு ஏற்பட்டால் கூட உடனே அதை கணவனிடமோ ,தகப்பனிடமோ தெரிவித்துவிடுவது நல்லது.  
by J Rajamohamed,Riyadh,Saudi Arabia    31-12-2009 01:33:28 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்