முதல் பக்க செய்திகள் 

கிராமப்புறத்தில் பணியாற்றினால் மேற்படிப்பு படிக்க முன்னுரிமை
ஜனவரி 02,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : கிராமப்புறங்களில் மூன்றாண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவ படிப்பு படிக்க முன்னுரிமை வழங்கும்படி, மருத்துவ கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய் கூறியதாவது: கிராமப்புறங்களில் மருத்துவசேவையை விரிவு படுத்த, மத்திய அரசு ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறது. ஆனால், இதற்கு ஏற்ப போதுமான மருத்துவர்கள் இல்லை. இதன் காரணமாக, பெரும்பாலான ஆரம்ப சுகாதார மையங்களும், சமூக நலக் கூடங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. கிராமப்புறங்களில் பணியாற்ற, நகர்ப் புற டாக்டர்கள் பலர் முன்வராத காரணத்தால், முதுகலை படிக்க விரும்பும் டாக்டர்கள், கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் படி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்குரிய பட்டப் படிப்புகளையும் உருவாக்க உள்ளோம். கிராமப்புற மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த பட்டப் படிப்பை உருவாக்க உள்ளோம். கிராமப் புறங்களிலேயே பிறந்து வளர்ந்து, பிளஸ் 2 வரை படித்த மாணவ, மாணவியருக்கு இந்த பட்டப் படிப்பில் சேர, முக்கியத்துவம் அளிக்கப்படும். இது குறித்து விவாதிப்பதற்காக, வரும் பிப்ரவரி மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில், 300 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர்கள், மருத்துவத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு கேதன் தேசாய் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 If the P.G.Course is straight away offered as a package with village service, it would attract many aspiring young doctors as they are seeing the benefit for village medical service on the hand at the same time. Offering benefit after three years might cast doubt with the doctors, as any new GO after three years from the same or new govt. would nullify the current GO and the doctors would remain betrayed. Idea of part day for PG study and part day for village service at nearby PHC sounds good and serve both the doctors and govt.objective. 
by M ஷாகுல் ஹமீது ,Dammam,Saudi Arabia    02-01-2010 15:48:03 IST
 How the public will know this Doctor is a real Doctor & other is having a fake certificate????? First instead of Registration No. they have to put the weblink, where their certificate is given with photoe.( University & Ministry of Health website) 
by v christopher,sana'a,Yemen    02-01-2010 11:54:48 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்