முதல் பக்க செய்திகள் 

கற்பழிப்பு வழக்கில் ரூ. 1 லட்சம் நஷ்டஈடு; இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடிக்க உத்தரவு
ஜனவரி 08,2010,09:00  IST

Front page news and headlines today

மதுரை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், அதை இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வள்ளியூரைச் சேர்ந்தவர் பூங்கோதை(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருமணம் செய்வதாகக் கூறி அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார். ஒரு லட்சம் ரூபாய், 100 சவரன் நகைகள் கொண்டு வந்தால் திருமணம் செய்வதாகவும் அந்த நபர் மிரட்டினார்.
பூங்கோதையின் தந்தை மகேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வள்ளியூர் இன்ஸ்பெக்டர் கந்தசாமியிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர், அதை அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார். அங்கு இன்ஸ்பெக்டர் மரியகிரேஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பத்து நாட்கள் கழித்து புகார் மீது வழக்கு பதிவு செய்தார். இதனால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரி பூங்கோதை ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி ரகுபதி, சுப்பையா அடங்கிய பெஞ்ச், ""பாலியல் தொந்தரவும், கற்பழிப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. இரண்டுமே பெண்கள் மீது ஆண்கள், தங்கள் சுதந்திரத்தை திணிப்பதாகும். இக்குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது.
""கண்ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தால் உடனடியாக வழக்கு பதிய வேண்டும். தனியாக புகார் கொடுக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். ""அத்தொகையை வள்ளியூர் இன்ஸ்பெக்டர், அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டது

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 மைனர்குஞ்ச போலீஸ் பிடிக்கவில்லை. அதனால் அவன் தப்பி விட்டான். போலீஸ் மாட்டிகிட்டான். இதுதான் கரெக்ட்.  
by ரவி,TORONTO,Canada    08-01-2010 23:10:19 IST
 இந்த தீர்ப்போடு, மைனர் குஞ்ச சுட்டுட்டேன் என்றும் தீர்ப்பை திருத்தி எழுதுங்கள்.அந்த பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என சொல்லி கொடுங்கள்.உன் கவன குறைவால் உன் பெற்றோர் உறவினர் மனம் படும் பாட்டை கொஞ்சம் நினைத்து பார். ஒரு லட்சம் இதற்கு ஈடாகாது. இனியாவது பெற்றோர் பார்த்து சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து நல்ல வாழ்க்கையை தொடரவும். 
by பா விஜயகுமார்,Qatar,India    08-01-2010 22:07:02 IST
 தமிழினத் தலைவர் கலைஞரின் கொடையின் கீழ் எல்லா செல்வங்களும் பெற்று அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு நிகழ்ச்சியா. இப்பொழுது தான் புரிகிறது. இதற்குத் தான் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் போலும்.  
by DR Bashkaran,Bangalore,India    08-01-2010 18:47:14 IST
 காவல்துறை மீது தவறு இருந்தாலும் கல்யாணத்துக்கு முன் இதுமாதிரி செயல்களில் ஈடுபடுவதும் தவறுதானே  
by G Divaharan,Tirunelveli,India    08-01-2010 16:23:32 IST
 அப்போ கற்பழித்தவனுக்கு என்ன தண்டனை ?????????? 
by M.R சத்தியேந்திரன்,chennai,India    08-01-2010 14:52:01 IST
 பெண்களிடம் எப்போது விழிப்புணர்வு ஏற்படுகிறதோ அப்போது தான் இது போன்ற பிரச்சனைகள் குறையும். ஆனால் தீராது.......சபலம் எனும் காம நோய் இரு பாலாருக்கும் இருக்கும் வரை....ஒரு லக்ஷம் தான் சரியான தீர்வா................கற்பு என்ன ஆச்சி அம்மிணி......
தீர விசாரிப்பதே மெய்........
 
by M jothi,Abudhabi,United Arab Emirates    08-01-2010 11:50:58 IST
 மைனர் குஞ்சுக்கு ஒரு தண்டனையும் இல்லையா  
by R Bala,Pune,India    08-01-2010 11:49:47 IST
 karpalzithavanuku ? 
by rahmathulla,qatar,India    08-01-2010 11:16:46 IST
 உருபடியான நீதி --போலீசுக்கும் பயம் வரும்  
by s shanmugs,banaglore,India    08-01-2010 10:45:57 IST
 இது சரிபடாது ..

கற்பழிச்சவனை காவு கொடுக்குறத உட்டுபுட்டு சே சே ...

வரதராஜன்  
by M வரதராஜன் ,Chennai,India    08-01-2010 10:32:21 IST
 சபாஷ்... சரியான தீர்ப்பு...

அரசு அலுவலகமானாலும், காவல்துறையானாலும் இதுபோன்ற ஒரு சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களால் ஒரு சில நல்ல அதிகாரிகளுக்கும் கெட்டபெயர்.

இனியாவது இதுபோன்ற புல்லுருவிகள் திருந்துவார்களா....!!!!???...சந்தேகம்தான்.காலம்(கடவுள்)தான் இவர்களை தண்டிக்க(திருத்த)ணும்.  
by A SIRAJUDEEN,DUBAI,India    08-01-2010 09:50:39 IST
 நம்ம ஊரில ஒன்னாம் நம்பர் அயோக்கியப்பயங்க இந்த போலீஸ் காரனுங்கத்தான். முறையா நடவடிக்கை எடுக்காத இந்தமாதிரி திருட்டுப் பயலுங்களுக்கு இதேப்போல அபராதம் விதிச்சாத்தான் கொஞ்சமாவது திருந்துவானுங்க.  
by S அருள்,chennai,India    08-01-2010 09:22:23 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்