முதல் பக்க செய்திகள் 

தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்கான நிதி கலர் 'டிவி' திட்டத்திற்கு ஒதுக்கீடு
ஜனவரி 13,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : ""தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது. பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதற்கு, சுகாதார ஆய்வாளர்கள் போதிய அளவில் இல்லை.இப்பிரச்னையால், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் கவனிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சுகாதார மையங்களில் உயிர் காக்கும் மருந்துகளான "பென்சிலின், பாரசிட்டமால்' போன்ற மருந்துகளின் இருப்பு போதிய அளவு இல்லை.உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால், கலப்பட உணவு மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரின் மாதிரிகளை சோதனை செய்ய முடிவதில்லை.இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 எங்கள் ஊருக்கு வர வேண்டிய ரயில்வே திட்டங்கள் எல்லாம் இதினால் வராமல் போயி விட்டது ,எய்தற்கு என்னால் என்ன செய்ய முடியும் ?  
by pl. palam,mannargudi,India    16-01-2010 16:57:47 IST
 அன்புள்ள சகோதராகளுக்கு
நீங்கள் குறிப்பிடும் இலவசங்கள் வருட வருமானம் 72000த்தை தாண்டாத உழவர் அட்டை வைத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கானதிட்டம்.உங்களைப்போல மேல்த்தட்டு மக்களுக்கான திட்டமில்லை என்பதை மறந்து விடவேண்டாம்.
நீங்கள் டிவி பார்த்தால் அது தேவையானது.ஏழைகள் பார்த்தால் அது தேவையற்றதாகி விடுகிறதா?
by va.me salahdeen,dubai,United Arab Emirates நண்பரே முதலில் நீங்கள் ஒன்றை சொல்லவேண்டும் சென்னை அதன் சுற்று புறங்களில் விவசாயிகளுக்கு என்ன வேலை,சென்னையில் விவசாய நிலம் எங்கு பயிரிடப்படுகிறது,அப்படியே எழுபத்தி இரண்டாயிரம் வருட வருமானம் உள்ளவர்களுக்கு என்று கூறி அநியாயத்துக்கு பொய் சொல்றீங்களே?சென்னையில் இன்று சாதாரண கூலி தொழிலாளியின் சம்பளம் அதாவது இருநூற்று ஐம்பது,அவரது மனைவி வீடு வேலை செய்து அது அதற்க்கு ஒரு கூலி அதாவது சமைத்து கொடுக்க ஒரு வீட்டுக்கு ஆயிரம் ,துணி துவைக்க எழுநூறு,பாத்திரம் கழுவ ஏழு நூறு இதுமாதிரி நான்கு வீட்லே செய்யறாங்க வருமானம் 9600 வண்டி ஓட்டுபவர் எழுநூறு வரை ஒரு நாளைக்கு சம்பாதிக்றார், பதினைந்தாயிரம் மாதத்தில்.
இப்பொழுது சொல்லுங்கள்.......கிராமங்களில் நிலம் வைத்திருப்பவர்கள் கூடவா கொடுக்க வேண்டும்? 
by k thiru,chennai,India    16-01-2010 15:55:53 IST
 அன்புள்ள சகோதராகளுக்கு
நீங்கள் குறிப்பிடும் இலவசங்கள் வருட வருமானம் 72000த்தை தாண்டாத உழவர் அட்டை வைத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கான திட்டம்.உங்களைப்போல மேல்த்தட்டு மக்களுக்கான திட்டமில்லை என்பதை மறந்து விடவேண்டாம்.
நீங்கள் டிவி பார்த்தால் அது தேவையானது.ஏழைகள் பார்த்தால் அது தேவையற்றதாகி விடுகிறதா?சங்கர் சொல்வது போல் மருந்து மாத்திரை சோதனை அது இதுன்னு சொல்பவர் அரசிடம் தான் கேட்க வேண்டும்.அதை விட்டுவிட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் நல்ல திட்டங்களை குறைகூறக்கூடாது.
வெளி நாட்டு நண்பர்கள் அடிக்கடி பிச்சை என்ற வார்த்தைகளை உபயோகிப்பது தவறு.இதற்குப்பெயர் சலுகை.
வெளி நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் நம் நாட்டிலும் கிடைக்கிறது.எதற்காக நீங்கள் தலைச்சுமையாக இங்கிருந்து எடுத்து வருகிறீர்கள்?காரணம் விலை வித்தியாசம்.இது அரசு உங்களுக்குக் கொடுத்துள்ள வரிச் சலுகை தானே!
இப்பச்சொல்லுங்க உங்களுக்குக்கிடைத்தது பிச்சையா?இல்லை லாடு லபக்கு பிச்சையா?
 
by va.me salahdeen,dubai,United Arab Emirates    13-01-2010 21:46:11 IST
  பகுத்தறிவை, சுய கௌரவத்தை வளர்த்த பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று சொல்லி கொள்பவர்கள் இன்று மக்களின் சுய கௌரவத்தை, இலவசம் என்ற பெயரால் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்
 
by Nallappan,singapore,India    13-01-2010 20:45:29 IST
 தமிழன் ஒரு மடையன் - என்று எப்பொழுதோ நிரிபிக்கப்பட்டுவிட்டது.
தமிழன் ஒரு கேனையன் -என்று இப்பொழுது நிரிபிக்கப்பட்டுவிட்டது
 
by dmk mallu,Gopalapuram ,Guyana    13-01-2010 19:58:45 IST
 In a ''''freq''''economics point of view - potentially free TV is a way of controlling the birth rate and population. Woman are so engaged in serials and have no time for non-sense. 
by V Mani,memphis,United States    13-01-2010 19:16:03 IST
 who needs this TV, now a days people prefer to buy LCD plasmas, who needs this box. All the TVs provided by the govt is going to be thrown out in garbage. Its our money. Will people think before casting their vote in next assembly. THINK OF IT. Educated people should try to explain it to their neighbours. 
by A ம.எ.ந.,india,India    13-01-2010 19:12:01 IST
 தி மு க எந்த வரைமுறையும் இல்லாம இலவச சலுகைகளை வாரி இறைச்சிக்கிட்டு இருந்தா, படிச்சவர்கள் எல்லாம் தி மு க வை மூட்டை கட்டிடுவாங்க.

படிக்காத ஜனங்க வோட்டை நம்பி முட்டாள் தனமா காரியம் பன்னிக்குட்டு இருந்தா, படிச்சவங்க அலை வீச ஆரம்பிச்சா தி மு க விட்டுக்கு போக வேண்டியது தான், தி மு க அடுத்த பாத்து வருசத்துக்கு அரசியல் பக்கமே வர முடியாது.

ஏற்கனவே அ தி மு க விற்கு விழும் வோட்டு எண்ணிக்கை சதவீதம் இன்னும் குறையாம இருக்கு என்பது தெரிந்ததே. படிச்சவங்க அலை வீசுனா அ தி மு கா நிச்சயமா வெற்ற்றி பெறலாம் என்பதை ஒரு எசாரிகையாக தி மு க விற்கு தெரிவிதுக்கொல்லுகிறோம்.

 
by R Murali,singapore,India    13-01-2010 18:50:41 IST
 Dear Readers,

How many of you excercise your rights in the last general election; Stop this blame game. Do your duty first. Then come and talk about others.

 
by s. ராமசந்திரன்,Bahrain,Bahrain    13-01-2010 18:50:15 IST
 இது உண்மையாக இருந்தால் கலைன்ஜெர் பதில் சொல்லவேண்டும் இல்லையென்றல் மக்கள் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள்  
by ABDUL kassim,dubai,United Arab Emirates    13-01-2010 18:18:22 IST
 மக்கள் விழிக்க வேண்டும் 
by www itsbengaluru.com,Bangalore,India    13-01-2010 17:40:49 IST
 எங்கள் ரத்தமும் வேர்வையும் சிந்தி , குடும்பத்தை பிரிந்து சொல்லனா கொடுமையை அனுபவித்து நாங்கள் கொடுக்கும் வரிப்பணம் இப்படியெல்லாம் வீணடிக்கும் அரசாங்கம் ''ஐயோன்னு போகும்!'' சனியன் பெட்டியை விட்டு தமிழ்நாடு எப்போதுதான் வெளிவருமோ!! 
by parad esinai,indian,India    13-01-2010 17:32:04 IST
 தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், ''டிவி'', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'''' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
அய்யா ஒங்களுக்கு பல நூறு கோடி புண்ணியம்.எண்ணு கேக்கிறீங்களா இரண்டு நாளுக்கு முன்னாடி தான் தினமலர் வெப் சைட் இல் ஒரு விமர்சனத்தில் நான் கேட்டிருந்தேன் நிதி நெலம பற்றி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தால் நன்றாக இருக்குமே,என்றும் அரசின் லட்சணம் தெரியும் என்றும்.கூறியிருந்தேன் நல்ல கண்ணாடியில முகம் தெரிஞ்சு போச்சு,துணை என்ன சொல்ல போகிறார்,அடுத்து தமிழ் நாட்டை யாரிடம் அடகு வைக்க போறாரோ?  
by k thiru,chennai,India    13-01-2010 17:15:03 IST
 கலர் டிவி யப்பா நாட்டுக்கு ரொம்ப தேவையான திட்டம் , என் இனிய தமிழ் மக்களே இனிமேல் வீட்லிருண்தபடியே கலைஞரின் வாககுரிதிகளை நம்பி ஏமாந்து கொண்டே இருக்கலாம்  
by B.H shajitha,madurai,India    13-01-2010 16:59:43 IST
 டிவி பார்த்து பொது அறிவை எந்த பொண்ணுகளும் வளர்க்கிற மாதிரி இல்ல ,மெகா சீரியல் பார்த்து அழுதுகிட்டு இருகாங்க .

Stupid Government,as some intelligents said here we dont want TV,GAS and Fund.
People should aware of this that all these are their money only.
DMK is giving rice for 1 rupee but increase money for other things. They are making lazy people by this rice,TV and Gas.

This should end.

 
by k meenakshi,chennai,India    13-01-2010 16:42:24 IST
 ok miss kavitha,u come and start a party and we will join with you,,
its not finished after we comment on this,lets talk practically,everyone have there own problem,so dnt get emotion just save your energy for the future,,this is the fact 
by d doma,abudhabi,United Arab Emirates    13-01-2010 16:25:10 IST
 DMK ஒழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும். மக்களே எப்போ திருந்த போரிங்கே ? 
by TN உண்மை தமிழன்,Amsterdam,Netherlands    13-01-2010 16:01:37 IST
 எப்படியோ கலர் டி.வி கனவு சில ஏழை குடும்பங்களையாவது சந்தோஷப்படுத்தட்டும்! வேறு என்ன செய்ய முடியும்! நல்ல அரசியலே நம் நாட்டில் கனவாக போய்விட்டது. 
by p பிரேம்குமார்,singagpore,Singapore    13-01-2010 16:01:04 IST
 These kind of freebies wont help our people to improve their social status, most of the TV programmes are cinema oriented and spoiling our people rather than driving towards development. Politicians never care about development of our country. india will never be as clean as europe and US. 
by j sherwin,chennai,India    13-01-2010 16:00:37 IST
 Dear Fellow Dinamalar Readers, Why do you blame the Auditing Officer? He is just doing his duty. Please look at the detailed auditing report on the working of TN Government at www.agtn.cag.gov.in/audit1. In this report please also take note of the number of road accidents at Chennai Metropolitan Area. 
by S Ravichandran,New Delhi,India    13-01-2010 15:40:13 IST
 என்னப்பா எல்லாரும் புரியாம பேசறிங்க? கலர் டிவி இலவசமா குடுத்தால் தானே கலைஞர் டிவியில் வருகிற '' மானட மயிலாட'' வை (ரொம்ப முக்கியம் ) எல்லாரும் பார்க்க முடியும்.

அதை போல கேவலமான நிகழ்ச்சியை நீங்கள் வேறு எங்கேயும் பார்த்து இருக்க முடியாது.  
by Gowri,Abudhabi,United Arab Emirates    13-01-2010 15:34:08 IST
 idharkum melaga enna adharam vendum.. makkal vari panam.. eppadi veenaga pogiradhu endru..
Indru vendumanal ella ''ilavasangalum'' maghizchi tharalam... anan adhu.. namadu manam, soodu, soranai, thannambikkar ivai ellavatrirkum aapu vaithuvidum..
adhu sari.. indha TV repari aana vera tharuvangala alladhu repair seidu kodupargala?

adhutha electionla indha madhri ilavasangala allividalam.

daily breakfast
lunch
dinner free
varathuku oru naal chicken/ mutton...

vayasanavanga/ kuzhandaigaulukku arasangale ''aaya'' vadaikaiku amarthi.. vooti vidum endru arivippu seyyalam
 
by a narayanan,Delhi,India    13-01-2010 15:25:11 IST
 அரசியல் என்பது ஒரு புனிதமான மக்கள் சேவை என்கிற நிலையிலிருந்து பணம், பொருள் சேர்க்க ஒரு பக்காவான வியாபார ஸ்தலம் என்று ஆகிவிட்டதன் விளைவு தான் இது.
பொதுநலம் குறைந்து சுயநலம் அதிகமாகி விட்டதின் பலன் இது. நாட்டுக்காக தன் சொந்த சொத்துக்களை கொடுத்த காலம் போய் இன்று தன் சுய நலத்திற்க்காக மக்களுடைய பணத்தை, நாட்டின் சொத்தை கொள்ளையடிக்கும் சீசன் இது.
இதற்கு நாம் எல்லோருமே உடந்தையாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை.பணமும் பொருளும் இருந்தால்தான் மதிப்பு என்கிற உணர்வு தான் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பணம் சம்பாதிக்க தூண்டுகிறது.அது எல்லை மீறும் போது போது நலம் குறைகிறது.
மழை வளம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படிருக்கும் நிலையில் அதைப்பற்றி கவலைபடாமல், தண்ணீர் வளமிருக்கும் பகுதிகளைகூட சைட் போட்டு கட்சி பேதமில்லாமல் கொள்ளையடித்துக்கொண்டு வருகிறார்கள். மிகப்பெரும் உணவுப்பஞ்சத்தை நாம் எதிர்நோக்கப்போகிறோம் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்?.
இலவச டிவி கொடுப்பதினால் மக்களுக்கு பைசா பலனில்லை.எத்தனை டிவி உபயோகபடுத்தாமல் சும்மா கிடக்குது என்பதை கொடுத்தவர்களுக்கே தெரியும்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் நம் மன நிலை மாறாதவரைக்கும்.
நம் மக்களின் மீது அக்கறைகொண்ட,
நாட்டுப்பற்றும்,பொதுநலமும் உள்ள மனிதர்களால் மட்டுமே நல்ல ஆட்சியை தரமுடியும்.அதற்கு நம் அனைவரின் முழு ஒத்துழைப்பும் வேண்டும்.
நாம் எத்தனைபேர் அதற்கு தயார்?  
by S DEVARAJAN,TIRUPUR,India    13-01-2010 15:06:18 IST
 விவசாய கடன் தள்ளுபடி பெற்ற எத்தனை விவசாயிகள் இன்றும் தமது சொந்த நிலங்களில் தொடர்ந்து விவசாயத்தை செய்து வருகின்றனர்?? நிச்சயமாக இருக்காது. இந்நேரம் தங்களது நிலங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்திருப்பார்கள். இதுபோன்ற விவசாயிகளை பட்டியலிட்டு, இவர்களுக்கு தள்ளுபடி செய்த கடனில் ஒரு பகுதியை பெறவேண்டும். செய்வார்களா இந்த அரசியல்வாதிகள்???

இதுமட்டுமல்ல, இதேபோல பல்வேறு அரசு நலத் திட்டங்கள் தவறான முறைகளில் வீணடிக்கப்பட்டுள்ளன. 
by V பாபு வெங்கடராமன் ,Atlanta,United States    13-01-2010 15:06:12 IST
 இந்த பரிந்துரைகள் எல்லாம் வெட்டி வேலை. திமுக அரசு உங்களது ஆலோசனைகளை நிச்சயம் கசக்கி எரிந்து விட்டிருப்பார்கள், இல்லையேல், தங்களது பெறப் பிள்ளைகளுக்குப் ''பட்டம்'' செய்ய கொடுத்திருப்பார்கள். 
by V பாபு வெங்கடராமன் ,Atlanta,United States    13-01-2010 14:42:36 IST
 திமுக அரசின் மிகக் கேவலமான இலவச திட்டங்களில் ஒன்று இந்த இலவச கலர் டிவி. மக்களின் வரிப்பணத்தை மிகவும் அத்தியாவசிய திட்டங்களுக்கு செலவு செய்யாமல், வெளிநாடுகளிலிருந்து உபரியாக கடன் பெற்று, நாட்டின் நிதிச் சுமையை உயர்த்தியது மட்டுமல்லாமல், தனிமனித நிதிச் சுமையையும் உயர்த்திய பெருமை திரு முக அவர்களயே சாரும்.

இந்த இலவச திட்டத்தில் எந்த அளவிற்கு விஞஞானப்பூர்வ ஊழல் நடந்துள்ளது என்பது அந்த ''தலைவனுக்குத்'' தான் வெளிச்சம். 
by V பாபு வெங்கடராமன் ,Atlanta,United States    13-01-2010 14:32:34 IST
 அரசு பணத்தை எடுத்து நன்ற கட்சியை வளர்க்கிறார்கள் !!!

தமிழ் செம்மொழி மட்டு என்பது கடன் வாங்கியதில் மீதி இருக்கும் காசை கொண்டு தனக்கு தானே ''தானாய தலைவன்'' பட்டமும் பெயர் அறியப்பட்ட அணைத்து பட்டங்களும் முதல்வருக்கு வழங்கப்படும் அனைவரும் வந்து சிரபிக்குமாறு கேட்டு கொல்லபடுகிறார்கள்  
by D Ramesh,Chettikurichi , Tamilnadu,India    13-01-2010 14:29:05 IST
 விவசாயிகளே விவசாயம் பண்ணாமல் நிலங்களை விற்று விடுகிறார்கள்.குளம் ஆறு அணை பற்றி அரசுக்கு கவலை இல்லை.அவர் குடும்பத்து டி வி விமானம் சினிமா கம்பனி ஒரு பாதிப்பிலாத போது அவர் கவலைப்படுவது எப்படி.காமராஜர் இறந்த போது அவர் கையில் இருந்த பணம் என்ன.இந்த பெரியவர் குடும்பத்து சொத்தென்ன.?குடிக்கும் சீரியலுக்கும் சினிமா போதைககும் மக்களை அடிமையாக்கி ஹிந்தி படிப்பதை தடுத்ததை விட இவர் சாதனை என்ன? எல்லாம் சென்னைக்கே கொடுத்து எதுக்கும்சென்னை வரும்படி செய்த பெரியவர்.எதனை பேருக்கு நிஜமாகவே டி வி தேவை .இலவசம் எதனை பேருக்கு கிடைத்தது என்பதுக்கு கணக்கு நிச்சயம் இல்லை. 
by v veliah,hyderabad,India    13-01-2010 14:13:14 IST
 பகுத்தறிவை, சுய கௌரவத்தை வளர்த்த பெரியாரின் வழித்தோன்றல்கள் இன்று மக்களின் சுய கௌரவத்தை, இலவசம் என்ற பெயரால் சாகடித்துக் கொண்டிருகிரஎர்கள்.  
by நீதி மாறன் ,salem,India    13-01-2010 14:12:45 IST
 கட்டாய மழை நீர் சேகரிப்பு கடந்த ஆட்சியில் கொண்டுவந்த பிறகு சென்னையின் தண்ணீர் பஞ்சம் கட்டுபடுதப்பட்டது, ஆனால் இன்று!
காமராஜர், எம் ஜி ஆர், போன்ற மகான்கள் கல்வியை இலவசமாக கொடுத்து மக்களின் இருளை நீக்கினார்கள்,
ஆனால் இன்று கல்வி மையங்களை தனியார் இடம் கொடுத்து, ஏழைகலக்கு
கல்வியை எட்டா கனியாக்கி இருக்கிறார்கள்.
மக்களிடம் டிவியை கொடுத்து
நடனம் என்னும் பெயரில் கலசரசீர்கேட்டை ஏற்படுத்தும் நிகழ்சிகளை ஒளிபரப்பி மக்களை அறிவுக்குருடர்கலக்குகின்றனர்.
 
by dmu mahesh,chennai,India    13-01-2010 13:17:43 IST
 மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் இலவசங்களை ஒழிக்க முடியாது !!! இலவசங்களின் பாதிப்பு இப்பொழுது தெரியாது !!! 
by A Ibrahim,yanbu saudi arabia,India    13-01-2010 12:57:01 IST
  வீர கணபதி,chennai,India blind fool people suffered a lot 
by s kumar,delhi,India    13-01-2010 12:35:17 IST
 இலவச திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவைதான் அதற்காக அவர்களை நடுத்தெருவில் கொண்டுவரும் அளவுக்கு அல்லவே இப்போதைய இலவச திட்டங்கள் இருக்குது டிவி பார்பதனால் பெண்களுக்கு பொது அறிவு வருவதாக ஒரு நண்பர் சொல்கிறார் ஆனால் எத்துனை பெண்கள் டிவி பார்த்துக்கொண்டு தன் குழந்தைகளையும் வயதனவர்களியும் கவனிக்காமல் இருக்கிறார்கள் தெரியுமா. ஒரு குழந்தை படிக்கவில்லை என்றால் அவர்களை படிக்க வைக்க முயற்சி செய்யவேண்டும் அதை விட்டு அவர்களுக்காக நானே போய் பரீட்சை எழுதுகிறேன் என்பது போல் உள்ளது இந்த இலவச திட்டங்கள். மக்களின் வாங்கும் திறனை வளர்ப்பதை விட்டு விட்டு அவர்களுக்கு போகாத ஊருக்கு வழி கட்டி கொண்டிருக்கிறார்கள்  
by R. Chandrasekaran,Salwa,Saudi Arabia    13-01-2010 12:17:00 IST
 இது போல் கலர் டிவி கொடுப்பதற்கு காசு செலவிடுவதை விட அரசு பள்ளிகூடங்களை மேம்படுத்துவது, அரசாங்க மருத்துவமனையை மேலும் விஸ்தரிப்பது, நகரை சுத்தமாக வைப்பது, ஏறி, குளம் போன்றவற்றை தூர் வாறுவது, ஊனமுற்றவர்க்கு இலவச கல்வி, மேற்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு உதுவுவது போன்ற எண்ணற்ற வழிகளில் இந்த நிதியை நம் முதல்வர் கருணா நிதி உபயோகபடுத்தலாம். நம் தமிழ் நாடாவது கொஞ்சும் உருப்படும். 
by S காசி,Chennai,India    13-01-2010 11:57:25 IST
 நீங்கள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் நாட்டை பற்றி கவலை படுவது ஆச்சரியமாக இருக்கிறது...........!!!!!!!!!!!
நீங்கள் அனைவரும் ஓட்டு போடாமல் உங்கள் குடும்ப சுய லாபத்திற்காக வெளிநாடுகளில் கும்மி அடித்துக்கொண்டு தமிழ் நாட்டைப்பற்றி கவலை பட வேண்டாம். கவலை படுபவர்கள் உடனே கிளம்பி இந்தியா வாருங்கள். இல்லையென்றல் மூடிக்கொண்டு சும்மா இருங்கள்...
 
by A ராஜா,Chennai,India    13-01-2010 11:54:38 IST
 வீர கணபதி,சென்னை மற்றும் G ஜாய்,சென்னை அவர்களின் கருத்துக்கள் இன்றைய தமிழகத்தின் ஜாதி மதம் அற்ற சமத்துவமான பரந்த மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..

எது நடந்தால் நமக்கு என்ன ? நாமும் , நம் குடும்பத்தினரும் பயன் அடைந்தால் போதாது என்ற மனப்பான்மை மக்களிடம் மேலோங்கி உள்ளது ..

ஒரு அதிகாரியின் செயலில் கூட ஜாதி அடிபடையில் நோக்குவது தமிழக அரசியலின் பரிணாம வளர்ச்சி!!! 
by K வெங்கட்,HYderabad,India    13-01-2010 11:36:30 IST
 When CM does not know to use the funds for development of our state, we should note he is unfit to be CM. Especially when the funds are allotted for improving water facility for which we struggle every year, as Ms Jayalitha said to lookafter his family alone, he is misusing the government funds. Does he/they not have any sense by misusing the funds provided by Central Government and how long both the parties swindle the funds and take care of only their families. Prices are going up like anything I would like ask the politicians, do they have concious to do like this.
Let God save all states including Tamilnadu.

L Swaminathan 
by L Swaminathan,Madurai,India    13-01-2010 11:32:46 IST
 ஜெயலலிதா சட்டசபையில் சொன்னதைப்போல இந்த DMK அரசிற்கு
தொலை நோக்கு பார்வை கொண்ட
திட்டம் எதுவும் இல்லை. மாறாக மக்களை தற்காலிகமாக திருப்தி படுத்தி அதன் மூலம் பெயர் வாங்க
நினைகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் நல்ல பல வரவேண்டிய
திட்டங்கள், நமக்கு கிடைக்காமலே போய்விடும் என்பது மறுக்க முடியாத
உண்மை. ஏழைகளுக்கு அரசு உதவுவதை மறுக்கவில்லை, அதே
சமயம் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த
நம்மோட நிலைமை தான் இப்போ
கேள்விக்குறி. எவன் அப்பன் வீட்டு பணத்துல இத செய்றானுங்க??? ஸ்ரீதர்
கலிபோர்னிய மாதிரியான வாசகர்கள்
இந்த நாட்டுக்கு கிடைத்த சாபக்கேடுகள். பேசாமல்
அவர் திமுக வின் கொள்கை பரப்பு
செயலாளர் ஆகி விடலாம்.
நன்றியுடன்
ராஜா
திருச்சி  
by y raja,maldives,India    13-01-2010 11:06:08 IST
 ''''''''கழுத கெட்டால் குட்டிச் சோறு'''''''' ஆனால் அரசியல் கெட்டால் கலர் டிவியோ,,,,,,,,,,,,'''''''''''' என்னால முடியல் சின்ன புள்ள தனமா இருக்கே.... ......
நன்றி ...
ரியாஸ்
''''சவுதி அரேபியா'''' 
by M Riyas,Al-khobar,Saudi Arabia    13-01-2010 11:05:00 IST
 திரு வீர கணபதி அவர்களே நீங்கள் பட்டினி கிடப்பவனுக்கு பாதி தோசை போதும் என்ற எண்ணம் உங்களிடம் உண்டு, அனால் மக்களின் எதிர் பார்போ பட்டினி இல்லாத தமிழகம்.
இவன்
விஜயகுமார்  
by D Vijaykumar,FUJAIRAH,United Arab Emirates    13-01-2010 10:57:53 IST
 சென்னையில் இருந்து எழுதிய வீர கணபதிக்கு, தாங்கள் சொல்ல்வது தவறு. டிவி, காஸ் அடுப்பு மற்றும் அனைத்து இலவசங்களும் கொடுக்கட்டும். ஆனால், அதற்க்கு பயன்படும் நிதியை, ஏன் இயற்க்கை அதரங்களுக்கு தேவைப்படும் நிதியில் இருந்து எடுக்க வேண்டும். இதனால் எதிர் காலம் பாதிக்கபடுகிறது. இன்னும் 50 முதல் 100 வருடத்தில் வெப்பமயமாதல் அதிகமாக இருக்கும். இப்பொழுதே நாம் நீரதரத்தை அதிகரிக்க வேண்ண்டும். இல்லைஎன்றல், எல்லோரும் இல்லவசமாக மேலே செல்ல வேண்டும். தயவு செய்து இலவசதிற்க்க இருக்க வேண்டாம்.  
by S Mayavi,Kolkata,India    13-01-2010 10:56:49 IST
 என்ன ஐயா இது. இதுவெல்லாம் ஒரு விஷயமே இல்ல. வர்ற இடை தேர்தல்ல நாங்க ஒரு வீட்டுக்கு ஒரு குளம் இல்ல கால்வாய் இல்ல குட்டை இலவசமா தந்தா போச்சு  
by R அருண்குமார்,Bangalore,India    13-01-2010 10:23:48 IST
 பெண்களின் பொது அறிவை வளர்க்கத்தான் இந்த இலவச டிவி திட்டம். இதை குறை சொல்லுபவர்கள் மகளிர் முன்னேற்றத்தை எதிர்பவர்கள். விட்டுவிடுங்கள் அவர்களை.  
by k JEEVITHAN,villupuram,India    13-01-2010 10:17:09 IST
 நம்ம தமிழ்நாடு அரசாங்கம் ரொம்ப்ப மோசம். 
by M பாலாஜி,Chennai,India    13-01-2010 10:03:40 IST
 நம் நாடு உருபடவேன்றுமேன்றல் எல்லா மாநிலங்களிலும் குடியரசு ஆட்சி வரவேண்டும் இந்த எம்பி எம் எல் எ எல்லாம் வேண்டாம் இவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை இவர்கள் சுரண்டியே நாடு பாழாகிவிட்டது முதலில் எல்லா இலவசங்களும் நிறுத்தபடவேண்டும் மக்களை சொஎம்பரியக்கும் வேலை வாய்ப்புக்கள் ஒருவக்கபடவேண்டும் நம் அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணம் எல்லாம் வெளியே வரவேண்டும் நம் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் இல்லையேல் ஆண்டவனாலும் நம் நாட்டை காப்பாற்றமுடியாது
 
by n venkat,BANGALORE,India    13-01-2010 09:55:04 IST
 கடந்த 2006 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த கடன் தொகை 56 ஆயிரத்து 74 கோடி ரூபாயாக இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், மாநிலத்தின் மொத்த கடன் தொகை, தற்போதைய நிலவரப்படி 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிகிறது. தினமும் 20 கோடி ரூபாய் வட்டி செலுத்துவதாக கூறப்படுகிறது. தமிழக மக்கள் தொகை ஆறு கோடி என்றாலும், ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் கடன் சுமை விழுந்துள்ளது. பிறக்கும் குழந்தையும், 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. இலவச கலர் ''''டிவி'''' போன்ற தேவையற்ற திட்டங்களால், கடனாக பெற்ற பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இலவசப் பொருள்களை கொடுத்து, கொடுத்து இந்த அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. . 
by M Amanullah,Dubai,United Arab Emirates    13-01-2010 09:35:54 IST
 Are people happy getting the benifit? that shd also be looked. People shd stop looking for free items. If this govt not giving next govt is going to give something free. Even in election people see what amt is going to be given. nowadays oridinary person cannot stand in elections, Money has to be spent. People openly ask for money. All see their benefit. Only there is change we think in otherway. 
by S S,chennai,India    13-01-2010 09:28:30 IST
 மக்கள் தகுதியானவர்களை தேர்ந்து எடுக்காமல் காசு வாங்கி கொண்டு ஒட்டு போட்டால் இப்படித்தான் இருக்கும் . இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது . 
by G Divaharan,Tirunelveli,India    13-01-2010 09:14:38 IST
 Teach a man how to fish instead of feeding him a fish. So that he will feed himself. These freebies will make them lazy and will be a blow to the hard working nature of Tamil people. A government with real intention of serving the people will always spend more money for Health care, Food production and Education. If that happens, people will buy TV by themselves. But if the current scenario continues then in another decade, TN will be like uttar pradesh or Bihar.  
by V மதன்ராஜ்,Pune,India    13-01-2010 09:02:49 IST
 குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் கவனிக்கப்படவில்லை என்பது இல்லை மக்கள் நலன் என்று கூறுங்கள்  
by G Saravanakumar,Rajapalayam,India    13-01-2010 08:57:48 IST
 பகுத்தறிவு என்றால் என்ன!
மஞ்சள் துண்டு போட காரணம் !!! 
by rmk,nellai,India    13-01-2010 08:50:06 IST
 வாழ்த்துகள். மாநில தலைமை தணிக்கை அலுவலற்கு. உமது பணி தொடரட்டும்!!!. அனைத்து முற்போக்குடைய மக்கள் அனைவர்க்கும் இது நன்கு தெரிந்த விஷயம்.

அரசியல் கொள்ளை!
அமெரிக்க அடிமைத்தனம் !!
சீனாவின் நரி தந்திரம் !!!!

இவற்றை எல்லாம் கடந்து நம் நாடு முன்னறி கொண்டிருக்கிறது என்றால் அது அதியசயம் தான்.  
by rmk,chennai,India    13-01-2010 08:47:27 IST
 குடி, கூத்து, கொள்ளை, லஞ்சம்,ரவுடித்தனம், பொய் புனை சுருட்டு, ஏமாற்று - இவை தான் தற்போதைய தமிழக அரசு.

 
by I Indian,dubai,United Arab Emirates    13-01-2010 08:46:38 IST
 இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

என் தமிழ்நாடே ! உன் மனம் நிம்மதி அடைந்ததோ !
எஞ்சி இருந்த மானமும்,இனமும் மண்ணாகி போனதே !  
by C திரு,Bangalore,India    13-01-2010 08:43:57 IST
 only people from outside India seem very much concerned with the so called ''''problem''''. We cannot completely ignore the ''''free'''' schemes. These schemes are started as free but indirect income like tax from cable, electricity, interest from loans are to follow for sure. It should be seen from a poor man''''s point of view. Care should be taken that it reaches the needy ( red card only ) and not all. I am sure priority will also be given to infrastructure and health. Freebies are not given every year, it is for those who are left out. Probably those left out are in a minority. Auditors (AG) are only watchdogs. They only guide and give advisories to govt. We can only take it as guidelines. No need to draw any conclusion on the veracity of their caste or creed. The govt. itself can handle.  
by A Premkumar,Puducherry,India    13-01-2010 08:27:41 IST
 இந்த பகுத்தறிவு ஆட்சியாளர்கள் புதிய குளம் வெட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, உள்ள குளங்களுக்கு தடுப்பு சுவர் கட்டியிருந்தாலே , எம் தமிழ் பிஞ்சுகள் பத்தும் கடந்த மாதம் குளத்தில் விழுந்து இறந்திருக்காது. மறந்துவிட்டோமா அதற்குள்ளாக.

திரு விர கணபதியும், திரு சாயும் பகுதரிவுபாதையில் செல்பவர்கள், அதனால் தான் மாற்று கருத்து கூறுவோரை உடன் அவர் தம் ஜாதியை பழிகிறார்கள். இதுதான் பகுத்தறிவு.

இலவசத்துக்கு வாய் பிளக்கும் வரை தமிழன் தலையில் மிளகைதான்.

 
by திரு ஜெய் ,கனடா ,Canada    13-01-2010 08:03:52 IST
 பதவி நாற்காலியில் குரங்காய் பிடித்துக்கொள்ள மற்றும் முட்டாள் ஜனங்களை ஏமாற்ற இன்னும் சில அருமையான இலவச ஐடியாக்கள்.

குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலவச தங்க நாணயம், வாகனம், கட்டில், மெத்தை, எவர்சில்வர் சாமான்கள் (கல்யாண சீரைப்போல).
 
by J Suman,Trichy,India    13-01-2010 07:59:58 IST
 WHAT MR VEERA GANAPATHY (CHENNAI) TOLD IS 100% CORRECT.
THE OFFICIAL SHOWN HIS COLOUR. 
by G ஜாய்,chennai,India    13-01-2010 07:41:00 IST
 குளம் வெட்டினார்கள், ஆறு கரை போட்டார்கள் என்று கணக்கு எழுதி காசு விரயமாதற்குப் பதில் இம்மாதிரியான இலவசத்திட்டங்கள் வழி அடித்தட்டு மக்கள் நேரடியாக பலன் அனுபவிக்கிறார்கள். இங்கு குறை கூறி எழுதும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு ஏழைகளை கண்டால் எரிச்சல். அதுதான் குடல் கும்பி காய்ந்து எழுதுகிறார்கள். குறை சொல்லும் அதிகாரி பெயரைப் பார்த்தாலே தெரிகிறது ''சங்கர நாராயணா'' புரிந்து கொள்பவர்கள் புரிந்துகொண்டால் சரி! இலவச கலர் ''டிவி'', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன். கலைஞர் மருத்துவக்காப்பீடு திட்டம் இவையெல்லாம் மக்களுக்கு பயன் அளிக்கிறதா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட மக்கள்தான் சொல்ல வேண்டுமே ஒழிய, ஏசி ரூம் உட்கார்ந்துகொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் அதிகாரிகள் சொல்லக்கூடாது. மக்களே சிந்தியுங்கள்! அதிகார வர்க்கமும் ''அந்த'' கூட்டமும் மீண்டும் தமிழின் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறார்கள். கவனமாக இருக்கவும்.  
by வீர கணபதி,chennai,India    13-01-2010 06:56:33 IST
 நாடு நாசமா போயிகிட்டு இருக்கு.  
by L லிங்கசாமி,Atlanta,United States    13-01-2010 06:49:44 IST
 Giving color TV for even those who can afford can be the worst scheme any Government in India and World would have done. It should have used for developing infrastructure, developing business, export oriented activities (like China) etc would have helped the money to come back to the Government with more value to serve the people further. 
by C சுரேஷ்,Charlotte,United States    13-01-2010 05:28:47 IST
 என்ன அனியாயம் சார் ...........  
by சலீம் ஜான் ,london,India    13-01-2010 05:00:22 IST
 தினமலர் வாசக அன்பர்களே வணக்கம்...நன்றாக இந்த செய்தியை படியுங்கள்...மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாக போய்கிட்டு இருக்கு பாருங்கள்..

மேற்கொண்டும் இந்த இலவசங்கள் தேவையா? தன் மேலும் தன் குடும்ப மக்கள் மேலும் தமிழக மக்களின் கவனம் திரும்ப கூடாது..என டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் வருமானத்தில் தேர்தல் செலவுகளுக்கும் நல்ல நல்ல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை இலவசங்களுக்கும் அள்ளி கொடுத்துகொண்டுள்ளனர்..

மக்களை குடி மூலமும்,,இலவசங்கள் மூலமும்..தன் குடும்ப தொலைகாட்சிகளின் மூலமும் ஒரு விதமான போதையில் தமிழக மக்களை வைத்துள்ளார் இந்த முதல்வர்..

என்று தமிழக மக்கள் விளிப்பார்கள் ?என்று இந்த அரசு போகும்.?

இறைவா தமிழகத்தை காப்பாற்று இந்த குடுமதினர்களிடம் இருந்து . .

திமுக ஆதரவாளர்களே இதற்கு என்ன சொல்கிறீர்? உடனே..அதிமுக ஆட்சியில்...என ஆரம்பிக்கவேணாம்....உண்மையை ஏற்றுகொள்ள தான் வேணும்..

தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன்
உங்களுக்கு இன்று மாற்றல் உத்தரவு வர போகுது பெட்டி படுக்கையுடன் தயராக இருங்கள்..நேர்மையான அதிகாரிகளை கண்டால் திமுககு ஆகாது. அலர்ஜி
 
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    13-01-2010 02:35:50 IST
 Dear Tamil Friends,
at least now peoples have to know some awareness the tamil nadu (M.Karunanithi) government are not provide medicine , hospital facilities, they are not giving drinking water or proper power,
this govt is planning to make foolish this people after few years our tamil nadu will go as a Bihar.
All tamil people please awarness need
We dont want TV (all house available mostly)
We dont want Gas stove (almost available)
we dont want womens fund

We need suficiant water, power , proper medicine,theft protection, employment we can buy more than above things

Ganesan 
by A Ganesan,Mangaf,Kuwait    13-01-2010 02:26:03 IST
 யாரிந்த சங்கர நாராயணன்..''ஜெ''வின் ஆலோசகரா? எப்படி இவர் இப்படி ஒரு சிபாரிசு செய்யலாம்? இலவச டிவி இல்லாமல் போனால் மக்கள் படும் பாடு பற்றி இவருக்கென்ன தெரியும்? கேபிள் இணைப்புக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை இவர் சிந்தித்திருந்தால் இப்படி ஒரு தேச துரோக செயலை செய்திருக்க மாட்டார்.
யாரங்கே.... கலிபோர்னியா ஸ்ரீதரை கூப்பிட்டு இவர்மீது வசை பாட சொல்லுங்கள். 
by P சேகர்,JURONG,Singapore    13-01-2010 01:43:53 IST
 This is an eye opener,how TAX-PAYERS MONEY is wasted,without proper approval.Chidambaram was FM,for peroid under review.Supreme court has already ruled,in UP Statue case,that Court has a duty to audit,proper use of Govt funds,even though,Govt determines,on welfare schemes. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire)    13-01-2010 01:29:21 IST
 அபொழுது குளங்கள் தூர்வார நிதி எங்கே ?? ......எடத்க்குதூர்வாரவேண்டும் அதுதான் அணைத்து மனல்களையும் கடதிவிடோமே கடை தேங்காய் எடுதுவழி பிள்ளையாருக்கு உடைத்த கணக்குதான் .  
by ps mayo,london,United Kingdom    13-01-2010 01:16:04 IST
 மக்கள் விழிக்க வேண்டும். ..
திறமையானவர்கள் அரசியலில் இறங்க வேண்டும். ...
திறமையனர்வர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்....
மக்கள் வரி பணத்தை வீனடிபவர்களை விடிற்கு அனுபவேண்டும்.... 
by B கவிதா,Virginia,,United States    13-01-2010 00:16:30 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்