முதல் பக்க செய்திகள் 

எங்கள் பணிகளை ஸ்டாலின் தொடர வேண்டும் : கருணாநிதி வேண்டுகோள்
ஜனவரி 16,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : ""நாங்கள் விட்டுச் செல்கிற பணிகளை, துணை முதல்வர் தொடர வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. திருவள்ளுவர் விருது - ஐராவதம் மகாதேவன், பெரியார் விருது - நக்கீரன் கோபால், அம்பேத்கர் விருது- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அண்ணா விருது - அவ்வைநடராஜன், காமராஜர் விருது - சொக்கர், பாரதியார் விருது - ராமச்சந்திரன், பாரதிதாசன் விருது- தமிழ்தாசன், திரு.வி.க.விருது - அண்ணாமலை என்ற இமையம், கி.ஆ.பெ.விசுவநாதர் விருது - தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி விருது வழங்கி பேசியதாவது: திருவள்ளுவர் விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், கல்வெட்டுகளில் தமிழக வரலாறையும், முன்னோடிகளின் வரலாறையும் பதித்தவர். பரமசிவனை எதிர்த்து வாதாடியவர் நக்கீரன். பெரியார் விருது பெறும் நக்கீரன் கோபால் என்னை எதிர்த்தும் கொடி உயர்த்துவார். அது நியாயமான காரியம் என்றால் ஏற்றுக் கொள்வேன். அண்ணா விருதும் பெறும் அவ்வை நடராஜன் தமிழுக்காக அரும்பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ் மீது அளவற்ற அன்பும், பற்றும் கொண்டவர். காமராஜர் விருது பெறும் சொக்கர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுபவர். பாரதிதாசன் விருது பெறும் தமிழ்தாசன் பேசும் போது, "நெல்சன் மண்டேலா, ஜோதிபாசு, பெரியார் போன்றவர்கள் அரசியலில் இல்லாவிட்டாலும் சமுதாய பணிகளில் ஈடுபட்டனர்' என்ற உவமையை கூறினார்.

நான் அரசியலிலிருந்து விலகி விடுவேனோ என்ற அச்சம் தமிழ்தாசனை அப்படி பேச வைத்துள்ளது. ஜோதிபாசு உடல்நலம் பெற்று மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் வழியில் நடக்க விரும்புகிறேன். கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன் பேசும் போது, "தனது கணவர் அறவாணன் எனது தமிழ் தொண்டுக்கு உதவியாக இருந்தார்' என, கூறினார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் உண்டு என்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருந்துள்ளார் என்பது எனக்கு கிடைத்த உண்மை. நானும் அன்பழகனும் முக்கியமானவர்களுக்கு கொடுத்த விருதுகளை தொடர்ந்து மற்றவர் களுக்கு, துணை முதல்வர் விருதுகளை வழங்குவார். எனக்கு துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர். நானும் அன்பழகனும் விட்டுச் செல்கிற பணிகளை துணை முதல்வர் ஆற்ற வேண்டும், தொடர வேணடும். இவ்வாறு பேசினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 பரமசிவனை எதிர்த்து வாதாடியவர் நக்கீரன். பெரியார் விருது பெறும் நக்கீரன் கோபால் என்னை எதிர்த்தும் கொடி உயர்த்துவார். அது நியாயமான காரியம் என்றால் ஏற்றுக் கொள்வேன். அதை தான் நாங்க பார்த்தோமே சந்தன கடத்தல் வீரப்பன்&கன்னட நடிகர் ராஜ்குமார் visayathila. அப்படின்னா நீங்க பரமசிவனு நேனைச்சிக்கிரத பார்த்தா மஞ்சள் துண்டுக்கும் ஒரு தொடர்புன்னு நினைக்க தோணுது,சரி பகுத்தறிவு வாதியின் கடைசி தொண்டனாகிய ஒங்கள ஒன்னு கேக்கேன் பெரியார் பகுத்தறிவுக்கு சொந்தக்காரர் ஆனா அவர் விருதைஆவது ஒரு பகுத்தறிவு வாதிக்கு கொடுத்திருக்கலாமே?நக்கீரன் கையில் மந்திரிச்ச கயிறு கட்டியிருப்பாரே,நெத்தியில திருநீறு வச்சிருப்பாரே,இதளையும் சேரலையே,அவரு ஒங்களை பத்தி ஏதாவது பேசிடக்கூடாது இங்கரதுக்காக கூட இருக்கலாமில்லையா? 
by k thiru,chennai,India    16-01-2010 16:25:11 IST
 நேரு குடும்பம் லாலு குடும்பம் சரத் பவார் குடும்பம் என்டிஆர் குடும்பம் முலாயம் குடும்பம் ஒய்எஸ்ஆர் குடும்பம் சிந்தியா குடும்பம் கௌடா குடும்பம் மூப்பனார் குடும்பம் ராமதாஸ் குடும்பம் விஜயகாந்த் குடும்பம் மன்னார்குடி குடும்பம் பட்நாயக் குடும்பம் தாக்கேரே குடும்பம் ரெட்டிசகோதரர்கள் குடும்பம் காஷ்மீர் அப்துல்லாக்கள் குடும்பம் ஆக மொத்தம் எனக்கு மட்டும் தெரிந்த இவ்வளவு குடும்பங்கள் அரசியலில் உள்ளன. இவற்றில் கலைஞர் குடும்பம் பரவாயில்லை. ஏன் கலைஞர் குடும்பம் பற்றி மட்டும் இவ்வளவு அதிக விமர்சனங்கள். அவர்கள் தப்பு செய்தார்கள் என்றால் தேர்தலில் கண்டிப்பாக மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். ஜெவை கடந்த முறை வீட்டுக்கு அனுப்பியது போல. ஸ்டாலின் திடீர் என்று அரசியலுக்கு திணிக்கப்பட்டவர் அல்ல. அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணி புரிந்துள்ளார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். பொறுப்பை ஒப்படைப்பதற்கு முன்னரே விமர்சனம் செய்தல் சரியல்ல. பொறுப்பிற்கு வந்த பிறகு அவரது செயலை விமர்சனம் செய்தால் சரியென தோன்றுகிறது. 
by s சஞ்சய் ,CHENNAI,India    16-01-2010 16:24:59 IST
 அவர் விட்டு சென்ற பனி என்றால் என்ன என்று பார்ப்போம், எப்படி தனக்கு பிறகு தன மகனை முதல்வரக்குகிராரோ அதே போல், ஸ்டாலின் மகனை முதல்வரக்கவேண்டும். . தனக்கு தானே கேள்வி பதில் எழுதி அதை தொண்டனுக்கு என்று சமர்பிக்கவேண்டும். உலக பணக்காரர்களில் வெகு சீக்கிரம் முதல் இடத்தை பிடிக்கவேண்டும். தமிழகத்தை அதிகம் இலவச பொருள் கொடுத்து அவர்களை ஊளைக்காமல், சிந்திக்காமல் வைத்து இருந்து ஓட்டை பெறவேண்டும், தேசிய உணவாக மட்டன் பிரியாணியை நிலை நிறுத்தவேண்டும். இது தான் அவர் விட்ட பனி. 
by பொன்குமார்,London,United Kingdom    16-01-2010 15:53:05 IST
 ஐயா முக அவர்களே ஜோதிபாசு பெரியார் மண்டேலா ஏன் அண்ணா யாருமே தம் வாரிசுகளை நியமிக்கவில்லை அவர்களை உதாரணம் சொல்ல வெட்கமாகைல்லையா 
by s ajay,kkdistrict,India    16-01-2010 15:46:38 IST
 அரசின் கஜானா காலியாகிவிட்டது,முன்னேற்ற பாதையில் பயணிப்பதை விட்டுவிட்டு இலவசங்களில் வரிப்பணம் செலவழிகபடுவது வருதமளிகிறது.நல்ல நிர்வாகத்திறன் உள்ள கருணாநிதி ஒட்டு அரசியலை நம்பும் அளவிற்கு எதிர்கால சந்ததியினரை பற்றி யோசிக்கவில்லை.இன்று வறுமையில் இருப்பவர் நாளை இலவச வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு வறுமையில் இருக்கபோகிறார்கள்..இவர் விதைதிருபதில் இருந்து ஓட்டை அறுவடை செய்யலாம்,வளமான தமிழகத்தை உருவாக்க முடியாது. 
by பாவேந்தன் ,brisbane,Australia    16-01-2010 15:30:51 IST
 r Tamilanban,Jeddah,Saudi Arabia 1/16/2010 10:50:33 AM IST
இந்தியாவிலேயே தலை சிறந்த ஜனநாயக கட்சி ஒன்றுதான் அதுதான் தி,மு.க.

Comedy of the Year - 2010 
by S Harikrishnan,Pune,India    16-01-2010 15:03:45 IST
 GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia அவர்கள் அதிமு க காரராக இருபாற்போல் தெரிகிறது தொடரந்து அவர் கடிதத்தை படித்து கொண்டுதான் வருகிறேன் நிறையாக சொனதில்லை அப்பாக்கள் செய்கின்ற சில தவறுகளை மகன்கள் செய்வதில்லை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்  
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India    16-01-2010 14:39:33 IST
 r Tamilanban,Jeddah,Saudi Arabia ,
பிரியாணி பொட்டலத்துக்கும்,குவாட்டர் பாட்டிலுக்கும் மயங்கி ஒட்டு போடும் இந்த தமிழ் வாக்காளர்களை முட்டாள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல வேண்டும்? 
by A Jeeva,Maldives,India    16-01-2010 14:38:41 IST
 சரியா போச்சி ,,,,, கடலில் தப்பித்து ஆற்றில் விழுந்த கதையா போச்சே ?

என்னமோ போகட ........

 
by M Riyas,Al-khobar,Saudi Arabia    16-01-2010 14:13:42 IST
 தயவு செய்து கோபப்படாதீர்கள் திரு. தமிழன்பன். தமிழ் நாட்டில் நடக்கும் நல்ல ஆட்சியை பொறுக்க முடியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் காட்டு மிராண்டி தனமாக எதிர்க்கும் இவர்களை பற்றி கவலை படாதீர்கள். இவர்களுக்கு புரிய வைக்க முடியாது அல்லது திருத்தவும் முடியாது. எதிர்க்கும் அவர்களுக்கே நன்றாக தெரியும் இந்த ஆட்சி எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்று, பொருது கொள்ள முடியாமல் புலம்புகிறார்கள். நாம் இதை விட்டுவிட்டு இந்த ஆட்சி தொடர வாழ்த்துவோம்.
 
by T Vijay,Lagos,Nigeria    16-01-2010 14:06:05 IST
 I think like other state people are saying the polictcian doing the same. why they only want to be the important positions or some one else can''t be there or what.

like P சேகர்,SINGAPORE,Singapore and S Adi,Chennai,India told the same i would say here.

people should think about it here , if they can;t clear between tamil nadu karanataka kaviri problem, they got all permissions to open new chennel with next day after got some problem between his grand sons . if they are using the polical power in the chennel matter why they can''t use in ths kaviri matter?
they can say after we ask like this. that is other state to state. you have idea to improve party thuroghu your chennal the same time they can think that TAMILAN also to come up.they can say we are tamilan if they are thinking that TAMILAN should come up they can do any thing in kavir matter.
 
by G Rajendran,Thanjauvr,India    16-01-2010 13:33:16 IST
 dear friends,
i felt very bad after read all your comments!
any body understand what is politics! dont just grudge politicians! its not a easy job to satisfy all our state people so that they can say these politicians are good! after all your comments i forced to come to decision that whoever dont involve politics and dont care about whats happening at next door are much better than you people write all grudging words without knownledge of anything.
Try to understand politics in their terms! These people atleast release funds in some manner!
Jayalalitha time only show there are no work done from all admk period! even MGR period we can say he just survived in his politics but no development in any manner. same thing happened when jayalalitha was in power!

but karunanidhi and stalins periods are not same we got some powerful ministers in central because of DMK!

I can say a lot! 
by s sathish,beijing,India    16-01-2010 13:08:17 IST
 stalin advance congratulations 
by mkr thanana,dubai,United Arab Emirates    16-01-2010 12:41:09 IST
 eluthum podu ellam...nallathaan eluthureenga...aana ootu mattum...pottu aatchiyila utkara vaikireenga...apparam ipadithaan nadakkum.... 
by G Senthil,madurai,India    16-01-2010 12:33:39 IST
 Dear all
Compliment is the sick for entire community, I hereby request the T N Govt Please Please stop you compliments, advice to people to do hard work to get their rights, Give them job not to give anything free. Our debit rate is very very high, due to free distribution. Please stop immediatly all the free schemes. make awarness of abovt hard works & Productivities. O'' My god give your mercy to TN & People.  
by A Rahamathulla,Abu Dhabi - U A E .,India    16-01-2010 12:05:42 IST
 நாற்பது ஆண்டுகாலம் தமிழ்நாட்டை பிடித்த தரித்ரம் நீங்கடும்! ஒரு ஆரோகியமான அரசியல் தமிழ்நாடில் துவங்கட்டும், ''''மாபெரும் பொறுப்பை ஏற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்''''  
by T பாபு ,Madurai ,India    16-01-2010 11:32:21 IST
 மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

கட்டாயம் தெய்வப்புலவரின் குறள் படி தன் தந்தைக்கு முக முத்து செய்யாததை ஸ்டாலின் செய்வார் என்று நம்புவோமாக.  
by K JEEVITHAN,villupuram,India    16-01-2010 11:21:08 IST
 ரொம்ப சந்தோசம்  
by Rober Malar,Kampala,Uganda    16-01-2010 11:18:58 IST
 ஆஹா....ருபாய் 75,000 கோடி கடனை தமிழ் மக்களுக்கு வாரி வழங்கி உள்ளீர்கள் ...நன்றி. மகன் கட்டயாம் இதை பன்மடங்கு பெருக்குவார் ...
இவர் அல்லவா தலைவர் !!! இவருக்கு நோபல் பரிசு கொடுங்கோ!  
by M கார்த்திக், ,MO,United States    16-01-2010 11:13:44 IST
 இதன் மூலம் கட்சியும் குடும்பமும் வெவ்வேறல்ல என்று அனைவர்க்கும்
தெளிவுபடுத்திவிட்டார் மு.க

வாழ்க வாழ்க தமிழ் நாடுமன்னர்


 
by ரவி r,China,India    16-01-2010 10:52:31 IST
 தமிழ் மக்களை முட்டாள்கள் என்று எழுதுபவன் எபபடித்தமிழனுக்கு பிறந்தவனாக இருக்க முடியும்.குடும்ப அரசியல் வாரிசு பதவி என்று எழுதும்
மற்றனுக்கு எனது வேண்டுகோள்,தி.மு.க என்பதின் பொருள் தெரிந்துகொண்டு அப்புறம் தான் பேசவேண்டும். இந்தியாவிலேயே தலை சிறந்த ஜனநாயக கட்சி ஒன்றுதான் அதுதான் தி,மு.க. . கட்சியின் அடிப்படை தெரியாத அறிவில்லாதவனுக்கு எப்படி நம் புத்தி கொடுக்கமுடியும். விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடும் எனவே அறிவிளிகளிடமிருந்து தூரமாக வேண்டும்.
தமிழனுக்கு தரம் தாழ்ந்த எண்ணம் வராது அவன் தமிழனாக இருக்கும்வரை.
 
by r Tamilanban,Jeddah,Saudi Arabia    16-01-2010 10:50:33 IST
 தமிழ் தாய் மகனின் முடிவிற்கு மிக்க நன்றி......  
by D ராஜேஷ் & மகி,Male,Maldives    16-01-2010 10:40:05 IST
 வா.....வா.....என்ன ஒரு அற்புதம் பட்டது ராஜா தனது மகனுக்கு பட்டம் கொடுத்து விட்டார் நட்டரோ நல்லரோ அவருக்கு ஆதரவு கொடுங்கள் அப்போதுதான் நீங்கள் நடுதெருவுக்கு வரும் காலம் வெகு சீக்கரமே வந்து சேரும். என்ன ஒரு கூத்து பாருங்கள் தனது மூத்த மகன் மந்தய மந்திரி அடுத்தவர் தமிழக முதல்வர் தனது மகள் மேலவை உறுப்பினர் ஆகா என்ன ஒரு பொது நலம். திரு கலைஞர் அவர்களே தொடர்க உங்கள் பொது நல சேவை மேலும் உங்கள் பேரன்களும் கொள்ளு பேரன்களும் கூட எம்பீகலகவும் மந்திரிகளாகவும் தொடர்ந்து வேறு எவரும் அரசியலில் வந்து விடாமல் காப்பதற்கான வழிமுறைகளையும் செய்துவிட்டு ஓய்வுபெருங்கள்.  
by R. Chandrasekaran,Hofuf,Saudi Arabia    16-01-2010 10:37:18 IST
 Hi,
Atlast, the rabbit came out of his lap. The systematic implementation of planting his son besides very eligible candidates of his own party to the post.
People aware of our Dy CM''s history may easily identify the change.
Tomorrow CM may tell, his son might not be selected to rule the state over night. He may refer his past life carefully from his Mayorship of Chennai Corporation. ( Modern history can not be hidden by means of power and money ).
The chapter will not be so easy as what our CM declares, though he understand there will be a heavy competition from his own family and party as well.
We have waited so far to hear this and have to little bit more to hear that also.
One thing is defintely possible, though we get good governance or not we will get money for votes and a lot of freebies to keep the people in coma.
Thanks,  
by S Adi,Chennai,India    16-01-2010 10:30:14 IST
 அன்றே முஹம்மது நபி அவர்கள் சொல்லிருக்கின்றார்கள். சிறையில் இருப்பவனெல்லாம் தலைவனாக இருக்கும் காலத்தில் உலகம் அழியும் என்று. அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கின்றது. பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தந்தையும் மகனும் இப்போது தமிழகத்திற்கே தலைவனாக இருப்பது வேட்கக்கேடான் செயல். 
by m shaikfareeth,tirupur,India    16-01-2010 10:17:33 IST
 தமிழக மக்களுக்கு இதுவும் வேணும் இன்ன்னமும் வேணும். மக்கள் ஆட்சி மகனின் ஆட்சியாக மாற உள்ளது. வெட்கபட வேண்டிய தினம்.  
by sr முரளிதரன்,kolkata,India    16-01-2010 09:26:56 IST
  நடப்பது என்னமோ மன்னர் ஆட்சிபோல கூறுகிறார் முதல்வரரே இது மக்கள் ஆட்சி
கூடவே அன்பழகனையும் இழுத்து கொள்கிறார் ஆமாம் தன மகனுக்கு அவரால் ஆபத்து என்று நினைத்தார் போல மகனை தள்ளி விட்டு அன்பழகனும் முதல்வர் ஆகிவிட்டால்? 
by nila mdu,madurai,India    16-01-2010 08:52:39 IST
 அப்போ சீக்கிரமா ஓய்வெடுக்க போறீங்க.. சந்தோசம்..விட்டது தொல்லை..
டாக்டர் பட்டம் எடுத்த விதம் பற்றி சொல்லீட்டீங்களா..
துரோக பட்டம் எப்படி கொடுப்பதுன்னு டிரைனிங் கொடுத்திட்டீங்களா?
வசை பாடும் விதம் பற்றியும், இரட்டை அர்த்தத்தில் கவிதை பாடுவது பற்றியும் சொல்லி தந்து விட்டீர்களா..
டெல்லி செல்வதும் அங்கே எப்படி கோவிச்சுட்டு வருவது பற்றியும் கத்து கொடுத்துவிட்டீர்களா.
யாருக்கு என்ன பதவி எப்படி எந்த துறைய கேட்டு வாங்குவது என்று சொல்லி தந்து விட்டீர்களா.?
அண்டை மாநிலத்துடன் காவிரி நீர் பிரச்சினை பற்றி எப்படி பேசுவதுன்னு சொல்லி தந்து விட்டீர்களா.
பெரிய பிரச்சினை வரும்போது சினிமாகாரங்களுடன் விழா எடுப்பது பற்றி சூட்சுமம் சொல்லி தந்தீர்களா?
தினம் ஒரு அறிக்கை விட்டு யார் யாரை தாக்குவதுன்னு சொல்லி தந்தீர்களா?
சும்மா அள்ளி வழங்கணும் நம்மை திட்ட நினைப்பவர்களுக்கு என்கிற வழி பற்றி கிளாஸ் ஏதும் நடத்த மறக்கலையே?
குடும்ப பிரச்னையை பெங்களூர் பொய் பஞ்சாயத்து நடத்த சொல்லி தந்தீர்களா..
அடுத்த துணை முதல்வருக்கான தகுதியை அவரோட வாரிசுக்கு தரனும் என்கிற வித்தைய சொல்லிதந்தீர்களா..
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளைக்கு உங்க பேரையும் புகழையும் அவர் மறந்தும் கலங்கப்படுத்திவிடக்கூடாது பாருங்க..

வாசகர்களே தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த யோசனைகளை முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நினைவூட்டுங்களேன்

முதல்வரே இதற்காக எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ..
 
by P சேகர்,SINGAPORE,Singapore    16-01-2010 08:45:53 IST
 உங்கள் பணியை கண்டிப்பாக ஸ்டாலின் அவர்கல் செய்வார்கள் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை. உங்களை போலவே உங்கள் குடும்பத்க்க்காக அயராது பாடுபடுவர் நாட்டு மக்களுக்கா அரை சதவிகித அளவே செலவிடுவார். அதுவும் தேர்தல் சமயத்தில்.  
by m தியாகராஜன்,mumbai,India    16-01-2010 08:35:56 IST
 தன்னால் முதல்வராக நீடிக்க இயலவில்லை என்றால் பேராசிரியரை ஏன் இதில் சேர்க்க வேண்டும்? எப்பொழுதும் இரண்டாவதாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரு வேளை நிதியமைச்சரும் தன் உட் கிடக்கையைப் புரிந்துகொண்டு வராமல் இருந்து விடுவார்; அப்பொழுது துணைமுதல்வருக்கு விருதுகளை வழங்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எண்ணியிருந்து ஆனால், நிதியமைச்சர் வந்து ஏமாற்றிவிட்டதால் தான் வந்து விட்டாரா? ஓயாத உழைப்பாளியும் படைப்பாளியுமான முத்தமிழறிஞர் கட்சி வேறுபாடற்ற தமிழ் நலத் தவைராக இருந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதியாக இருந்த இன்றைய இந்தியா தமிழ் இந்தியா என அழைக்கும் நிலை வரவேண்டும். இந்தியாவின் ஆட்சி மொழியாக அலுவல் மொழியாகத் தமிழ் திகழல் வேண்டும். பன்னாட்டு அவைகளின் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குதல் வேண்டும். அவ்வவைகளில் தமிழ் ஈழக் கொடியும் பறக்க வேண்டும். மாண்புமிகு இனமானப் பேராசிரியர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று கலைஞரின் பணிகளைத் தொடருவதுடன் பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்க வேண்டும். கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் உட்சணடையின்றி அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எண்ணற்றோர் எண்ணம் நிறைவேற கலைஞர் வழிவிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
by I Thiruvalluvan,chennai,India    16-01-2010 08:02:25 IST
 Stalin will no doubt deliver goods as wished by CM Karunanithi 
by R. Rajamanickam,Hong Kong,India    16-01-2010 07:25:27 IST
 ரொம்ப நன்றி,
கடிதம் எழுத்துவதை நிறுத்தவும்.
தாங்க முடியலை.
அன்பழகன் க்கு அல்வா கொடுக்கப்பட்டது
ஸ்ரிதூண்டு நம்பிக்கை யோடு இர்ருந்தார்
ஸ்டாலின் மகனுக்கு பொறுப்பு கொடுக்கவும்
வாழ்க உமது குடும்பம்
முட்டாள்கள் தமிழ்நாடு ஒழிக்க.
தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவ கிடையாதா
நல்ல வேலை ஜெயலலிதாவுக்கு மகன்கள் இல்லை .  
by OOO தமிழன்,USA,India    16-01-2010 06:42:23 IST
 என் பணிகளை ஸ்டாலின் தொடர வேண்டும். அதன் பிறகு அவர் மகன் தொடர வேண்டும். அதன் பிறகு அவர் மகன் தொடர வேண்டும். இன்னும் அயெரம் வருடங்கள் என் குடும்பத்தால் தமிழ் நாடு ஏமாற வேண்டும். 
by L லிங்கசாமி,Atlanta,United States    16-01-2010 04:02:03 IST
 here comes first announcing for promoting Stalin as next cm.. good timing and approach.. 
by R ஸ்ரீனிவாசன்,NC,United States    16-01-2010 02:51:35 IST
  தனக்குப் பின்னர், தனது வாரிசு என்றும், இதன் மூலம் கட்சியும் குடும்பமும் வெவ்வேறல்ல, ஒன்றே என்று கட்சியின் பிற தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தெளிவுபடுத்திவிட்டார் தமிழீனத்தலைவர். 
by Mr ஏழுமலை,New York,United States    16-01-2010 02:13:28 IST
 தினம் ஒரு விழா..தினம் ஒரு கடிதம்... தினம் விருதுகள்..தினம் ஒரு இலவசம்..தினம் ஒரு அறிக்கை.. காலை,மாலை.என விழாக்கள்..விழா இல்லாத நாளில் கோடம்பாக்கம் சென்று சூட்டிங் நடக்கும் இடத்தில் நடிக நடிகைகளின் மத்தியில் அமர்ந்து கதை வசனம் எழதுவது. தொடரனும் ...

அண்டை நாடுகளில் தமிழர்கள் கொன்றால்..அரை மணி நேரம் உண்ணாவிரதம்..மத்தியல் தன் குடும்பத்திற்கு ஏதேனும் தேவையெனில் வீல் சேரில் அமர்ந்து தனி விமானம் பிடித்து டெல்லி போகணும்..

தமிழக மக்களுக்கு ஏதேனும் தேவையெனில் மகாபலிபுரத்தில் அமர்ந்து கடிதம் எழுதணும்..இப்படி நான் விட்டு போகும் இந்த ஸ்டைலை ஸ்டாலின் கடைபிடிக்கணும்..

கூட இருந்த அன்பழகன்,,நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு..முதல்வர் பதவி எட்டாக்கனியாக இருக்கனும்..மந்திரிகள் கொள்ளை அடித்து குடும்பத்திற்கு கப்பம் கட்டவில்லைஎன்றால் அந்த மந்திரி பதவியை உடனே முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு ஆகா மாற்றி விடனும் துரைமுருகன் போல..ரொம்பா அப்படியே நேரம் இருக்கும் சமயம் கட்சி பதவி மேல் கவனம் செலுத்தனும்..இப்படி எல்லாம் நான் வீடு போன பிறகு நீ இந்த பணிகளை தொடரவேண்டும்.கட்சி காரர்கள் வாலாட்டினால் துரோகி என பட்டம் கொடுத்து வெளிஎற்றனும் என து.முதல்வரை நான் சொல்ல கடமை பட்டுளேன்..வாழ்க திமுக வாழ்க குடும்பம்..  
by GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia    16-01-2010 01:47:49 IST
 நீங்கள் விட்டுச்சென்ற பணியை இனிதே ஸ்டாலின் அவர்கள் தொடர வாழ்த்துவதோடு இனிவரும் ஆட்சி இலவசத்திட்டமில்லா நல்லாட்சியாக அமைய வாழ்த்துகிறேன். 
by bestman,Riyadh,Saudi Arabia    16-01-2010 01:28:21 IST
 வருங்கால முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழர் திருநாளில் முதல்வர் அறிவித்துவிட்டார். விட்டு சென்ற பணிகள் மட்டும் அல்ல இன்னும் செய்ய நினைக்காத பணிகளையும் வருங்கால முதல்வர் ஸ்டாலின் செய்வார் என நம்புகிறேன்.  
by பா விஜயகுமார்,Qatar,India    16-01-2010 01:03:47 IST
 பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு பெரியார் பெயரில் விருது கொடுக்கப்பட்டுள்ளதே ...அது பற்றி வீரமணியின் கருத்து என்ன?.  
by M Amanullah,Dubai,United Arab Emirates    16-01-2010 00:22:01 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்