முதல் பக்க செய்திகள் 

செம்மொழி மாநாடு நிதியில் 'கை வைக்க' திட்டம் :உஷாராகுமா, தமிழக அரசு?
ஜனவரி 20,2010,00:00  IST

Front page news and headlines today

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவையில் 300 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவசர கதியில் அமல்படுத்தப்படும் பணிகளில் "கமிஷன் ஆதாயம்' தேட, சில அரசுத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் ஜூனில் நடக்கிறது. இதையொட்டி, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம் உள்பட பல்வேறு அரசு துறைகளிடம் தனித்தனியாக மேம்பாட்டு திட்ட மதிப்பீடுகள் பெறப்பட்டு, அதற்கான ஒப்புதல் மற்றும் நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது; சில பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. செம்மொழி மாநாடு முன்னிட்டு, மாநகராட்சி வ.உ.சி., பூங்கா உள்பட 47 பூங்காக்களை மேம்படுத்தவுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்ட"ரிசர்வ் சைட்' களிலும் பூங்கா அமைக்கப்படும், என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவியது.ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ள பட்டியலில், ஏற்கனவே இருக்கும் சாலையோர பூங்காக்கள் மற்றும் பராமரிப்பில் இல்லாத பூங்காக்களை சேர்த்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.ஒவ்வொரு பூங்கா சீரமைப்பு பணிக்கும் 30 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகைக்கு, என்னமாதிரியான பணிகளை செய்து பூங்காவை மேம்படுத்தப்போகிறார்கள் என்பது, மாநகராட்சி நிர்வாகத்துக்கே வெளிச்சம். மாநாட்டையொட்டி அவசர நிலையை புரிந்து கொண்டு, ஒன்றுக்கு மூன்று மடங்காக மதிப்பீட்டை உயர்த்தி, நிதி பெற்றிருப்பதாகவும் சந்தேகம் வலுக்கிறது. இதற்கேற்ப, ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள பல ரோடுகளை மேம்படுத்த, பல லட்சம் ரூபாயை கடந்து கோடி ரூபாய் அளவுகளில் மதிப்பீடுகள் தரப்பட்டுள்ளன. "எவ்வளவுக்கு மதிப்பீடுகளை போட்டாலும், "மாநாட்டுப் பணி' என்பதற்காக, எதையும் கேட்காமல் அரசு நிதியளிக்கும்' என்ற நம்பிக்கை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளில் "கமிஷன்' பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும், இதற்கேற்ப திட்ட மதிப்பீடுகள் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளதாவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க, செம்மொழி மாநாட்டையொட்டிய நகரின் மேம்பாட்டு பணிகளிலும் மதிப்பீடுகள் எகிறுவதாக கூறப்படுகிறது.மாநாட்டுக்கு முன் மிக குறுகிய காலத்தில் மேம்பாட்டு பணிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் "கான்ட்ராக்டர்கள் பணி செய்ய முன் வர மாட்டார்கள்' என, அரசுத் துறை அதிகாரிகள் சிலர், அரசுக்கு தவறான தகவல் அளித்து, "ஆதாய' முயற்சிக்கு பலன் தேட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில், மேம்பாட்டு திட்ட பணிகளுக்கான மதிப்பீட்டை உயர்த்தி, கமிஷன் அள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உட்பட முக்கியத்துறைகளில், இந்த மாநாட்டு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பலரும், இதே நகரில் பல ஆண்டுகளாக இருந்து, அந்தந்த துறை "கான்ட்ராக்டர்களுடன்' மிகுந்த நெருக்கம் கொண்டிருப்பவர்கள்.தவிர, செம்மொழி மாநாடு குழுக்களில் இடம் பெற்றுள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் பலரும், மேம்பாட்டு பணிகளில் தங்களுக்குரிய "பங்கை' எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால், 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை கமிஷனாக கைமாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இதனால், பணிகளின் தரம் எப்படியிருக்குமோ, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரையிலும், ஆய்வு, ஆய்வுக் கூட்டம் நடத்துவதிலேயே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் காலத்தை கடத்தி வருகின்றனர். பணி துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.மாநகர மேம்பாட்டு பணிகளுக்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை, ஒப்புதல், நிதி ஒதுக்கீடு, அரசாணை, டெண்டர் என பல நடைமுறைகளை கடந்து பணிகள் எந்த மாதத்தில் துவங்கும், என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பணிகள் தாமதமாக துவங்கி, அவசர கதியில் அந்த வேலை நடக்கும்போது, தரமிருக்குமா, என்பதும் சந்தேகமே. கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டால் தமிழுக்கும், கோவைக்கும் வளர்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, அரசியல் வாதிகள், அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்கள் கூட்டணி "வளமாகி' விடும் என்பது நிஜம்.பரிசா? தண்டனையா?கோவை மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்தபணிகளிலும் கூடுதல் "பொறுப்பு' வகிக்கும் சில அதிகாரிகள் சம்பாதித்து சொத்து சேர்த்துள்ளனர். இவர்களில், முதல் தர வரிசையில் உள்ள இரு அதிகாரிகளை தேர்வு செய்து, அவர்கள் வகித்திருந்த "பொறுப்பு' பதவிகளில் இருந்து கழற்றிவிடப்பட்டு, மாநாட்டு பணி அதிகாரிகளாக நியமித்துள்ளது, மாநகராட்சி நிர்வாகம். இவர்கள்தான் 113 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை "திறம்பட' செய்து முடிக்கப்போகின்றனராம். இது, இவர்களுக்கு கிடைத்த தண்டனையா அல்லது பரிசா என்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கே வெளிச்சம்.- நமது நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 கோயம்பத்தூர் லஞ்சம் மற்றும் அரசு அதிகாரிகள் அரசாங்க பணத்தில் கையாடுவது, திருட்டு,, கொள்ளை போன்ற வழிப்பறிகள் முதலியவற்றில் சென்னைக்கு முதல் இடத்தை விட்டுகொடுத்துவிட்டு இரண்டாம் இடத்தை விரைவில் தக்கவைத்துக்கொள்ளும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.  
by R Murali,Singapore,India    23-01-2010 17:33:39 IST
 தமிழ் நாட்டுல இருக்கிற எல்லா கிராமத்துக்கும் விவசாயம் பண்ணறதுக்காக தண்ணீர் வசதி செஞ்சு குடுக்கவேண்டும்.குறிப்பா கோவை மாவட்டம் தண்ணீர் பிரச்சனையால் அதிகமா பதிக்கபட்டிஇருக்கு,வடக்கே பவனிசெகர் டேம், மேற்கே சிறுவஅணி dam ,தெற்கே ஆழியாறு டேம் இருக்கு,அனால் பொள்ளாச்சியிலிருந்து வடக்கேயும், கோவையிலிருந்து தெற்கேயும்,திருப்புர்லிருந்து மேற்கேயும், மிகுந்த வரட்சியான நிலையில் இருக்கிறது.இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனை மிக அதிகமாக இருக்கின்றது. கோவையில் நொய்யல் ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலக்கின்றது.இந்த பகுதியில் ஒரு பெரிய நீர்பிடிப்பு பகுதியை ஏற்படுத்தி அதன் மூலம் கோவை மாவட்டம் முழுவதும் வாய்கால் மூலம் நீர்பாசன வசதியை கட்டாயமாக ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.இதைஎல்லாம் செய்யாமல் மக்களுடைய வரிப்பணம் தேவை இல்லாமல் செலவாகிறது. முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் இதை செய்துகொடுத்தால் கோவை மாவட்ட மக்கள் அவருக்கு காலமெல்லாம் நன்றிகடன் படுவார்கள். 
by r.s ரவிச்சந்திரன்,,coimbatore,India    23-01-2010 15:26:33 IST
 முதலில் , கணினிக்கு பொதுவான ஒரு தமிழ் விசை பலகை தயார் பண்ணிட்டு பிறகு செம்மொழியோ கருமொழியோ கொண்டாடுங்கள் ..
விழாக்கள் மட்டுமே தமிழை செம்மொழி ஆக்கி விடாது ..  
by ak gopal,chennai,India    20-01-2010 22:05:58 IST
 It isw only a publicity show to show their personality clout from the ruling party in viw of the next year election. No basic requirement of the rural mass is going to be met from this event. It is only wastage of public money by the ruling party. White paper must be released by the govt about the expenditure .  
by m sundaram,Thoothukudi-628 008,India    20-01-2010 21:52:38 IST
 waste of paying tax, some people in govt are enjoying all the benifits unlimited because no one is there to ask any questions. 
by IND Alex,Chennai,India    20-01-2010 20:27:20 IST
  செம்மொழி மாநாடு ஒன்லி போர் த ம கே பார்ட்டி மெம்பெர்ஸ் நாட் போர் தமிழ் ........கொள்ளை கொள்ளை ........ நாடு நசபோக  
by n avudaiappan,ELATHUR 627803,India    20-01-2010 19:51:22 IST
 oro vaasagar udanadiyaga varumanavari raidu panna vendumendru kettirukirar, matthiya inai amaicharum DMK vai serndhavardhan IT dept officers nalla irukiradhu pudikkalaya 
by N ayyanarsamy,coimbatore,India    20-01-2010 15:18:18 IST
 Wat is the Use of this TAMIL MANADU?
Any benefit are we(public) going to get?

only the traffic and during the function public will get more problem from the POLITICIANS.

Parties they will start the collection of money form the public ..

Ayya , TAMILNADU CM.. pls try to avoid this..
-----
May be in this function , He will get more benefit like .. money and extra NAMEs etc

---------
Ramesh P
 
by P RAMESH,BANGALORE,India    20-01-2010 14:59:27 IST
 என்னது இது . ஒரு விழா நடக்க போகுது அதுவும் தமிழக அரசு சம்பந்தப்பட்ட விழா நடக்க போகுது.அதுவும் pala 1000 கோடி ரூவா செலவு பண்ணி நடக்க போகுது.இப்ப போயி கொள்ள நடக்க போகுது அது இதுன்னு.உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டத்துக்கு அதுவும் ஒரு குறிப்பிட்ட வருஷத்துக்கு மட்டும் பல ஆயிரம் கோடி தானம்மா ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அள்ளி வீசிடிருக்காங்க.அந்த பணத்துல நாடு முழுக்க பல மருத்துவ மனைகள் கட்டி இருக்கலாம்.அது எத்தனை வருஷத்துக்கு வேணும்னாலும் வுபயோகமா இருந்திருக்கும்.அதெல்லாம் விடுங்க. இப்ப வுக்காந்திருக்கற சட்ட சபைல thinnu peruththu போய்ட்டதால உள்ள உட்கார முடியலயாம்.அதனால வெறும் ஐநூறு கோடி மட்டும் செலவு பண்ணி
ஒரு கட்டடம் கட்டி வுட்கார போறாங்களாம்.முல்லை பெரியாறு அணை மட்டத்தை உயர்த்த கேரளா அனுமதி கொடுக்கலையாம்.வேற எங்கயும் ஆணை கட்டணும்னு தேவை ஏதும் illa pola .நாட்டுல ஏழை மக்கள்லாம் பாவம் ஏதோ அவங்க அளவுக்கு பூங்கா அது இதுன்னு கெடைக்கரத வெச்சி பொழப்ப நடத்த பாக்குறாங்க.வுங்களுக்கும் வேணும்னா மாநாட்ட பாராட்டி நாலு கட்டுரை எழுதுங்க தம்பி.நாளைக்கே அதிர்ஷ்டம் கூரைய பிச்சிகிட்டு கொட்டும்.இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு .இவங்க இப்படி ஏதாவது சம்பதிச்சாதானே பிச்ச எடுக்கற எங்களுக்கு ஏதாவது kidaikkum. 
by R RAMESHBABU,new york,United States    20-01-2010 14:52:55 IST
 எல்லா திட்டங்களும் கை வைக்கும் திட்டங்கள் தான். அதற்காகத்தான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 
by K JEEVITHAN,villupuram,India    20-01-2010 14:14:56 IST
 மிக்க நன்றி நண்பர் திரு ஜெய் ,கனடா,Canada உங்களின் இந்த கருத்து மிக சரியானது..ஆனால் கொஞ்சம் வருத்தம் தெரிகிறது.உங்களை அம்மையார் அபிமானி சொல்லி விடுவார்கள் என.சொல்லட்டும்.உங்கள் மனதில் சரி என படும் எந்த கருத்தையும் சொல்லுங்கள் அது மக்களின் குரலாகவும் இருக்கணும்.

நண்பர் திரு M Amanullah,Dubai,United Arab Emirates
பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரையிலும் பாயும் என்பது தான் தற்போது இவர்களுடைய தாரக மந்திரம். 1977ல் இந்திராவிற்க்கு ஏற்பட்ட நிலையினையையும் 1996ல் ஜெ.க்கு ஏற்பட்ட நிலையினையையும் இவர்கள் நினைவு படுத்தி பார்க்க வேண்டும். நூற்றுக்கு நூறு சரியான கருத்து இது அமானுல்லாஹ் அவர்களே.

நண்பர் R சூர்யா ,CHENNAI,அவர்களின் கருத்தை வாசிக்கும் பொது எப்படி பட்ட வேதனையில் இவர் உள்ளார் என பாருங்கள்..இவர் யாரையும் நம்ப தயாரில்லை..இவர் யோசித்து யோசித்து..
கடைசியில் நடுநிலை பத்திரிகைகளை நாடி இருக்கார்..

நண்பர் திரு s munisamy,சென்னை அவர்கள் வரிபணத்தை மிச்சம் செய்ய ஆலோசனை வழங்கி உள்ளார்..அருமை.

உங்கள் அனைவரின் கருத்துகளின் கலவை தான் எனது கருத்தும்.

இந்த செம்மொழி மாநாடு யாருக்கும் ஒரு எள் அளவு கூட பிரயோஜனம் இல்லை.இலங்கை தமிழர்கள் சுடப்படும் போது வேடிக்கை பார்த்தவர்.மௌனியாக இருந்தவர் வரலாறில் தமிழுக்கு செம்மொழி வாங்கி தந்தவர் என பெயர் பெற்றிட மக்கள் பணத்தை வீணடித்து கொண்டு இருக்கார் இவர்..
இது தான் இவர் கடைசி ஆட்சி..என்பது நிதர்சன உண்மை.
 
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    20-01-2010 13:47:40 IST
 interesting article!ore kallil rendu mangai!!!
one side commissions galore another side party propaganda and as only saviour of tamil language!
some 150 commitee members and kujas, enjoy perks like freeride[car]\bata\sappadu etc,
great mahanadu!
natarajan 
by s natarajan,chennai,India    20-01-2010 13:43:11 IST
 இதற்கு தானேயா மாநாடே ஏற்பாடு செஞ்சிருக்கோம். அப்புறம் இப்படி லபோ-திபோன்னு கத்தினா எப்புடி.  
by R Prabhu,Gurgaon,India    20-01-2010 13:32:21 IST
 கூவத்தைத் தூய்மைப்படுத்த காசில்லை. சாய்பாபாவிடம் கையேந்தல்!
குப்பை கூளத்தை பெருகவிட்டதால், சாக்கடைகளை சரியாக கட்டாததால் மர்மக் காய்ச்சல் சாவுகள்!
மோசமான நிர்வாகத்தால் மின்திருட்டு. உருப்படாத, வேலையே செய்யாத ஊழியர் சம்பள உயர்வுக்காக பொதுமக்கள் தலையில் கட்டண உயர்வு!
விபத்து நஷ்ட ஈடு கொடுக்கமுடியாமல் பஸ்கள் ஜப்தி! ஊழியருக்கு பணிக்கொடை, பென்ஷன் கொடுக்க வழியில்லை. ஓட்டை ஒழுகல் பஸ்களே கதி!
தமிழ் பல்கலைக் கழகமே மோசமான நிதி நிலைமையால் தள்ளாட்டம். ஆராயச்சி பாதிப்ப்பு!
இந்த அடிப்படை கடமைகளுக்கே பணமில்லாதபோது மாநாடு எதற்கு? இந்த 300 கோடியில் வேலையற்ற பத்தாயிரம் தமிழ் பட்டதாரிகளுக்கு உதவலாமே!
ஊழலே முழு நேரக் கடமையா?
 
by V Mani,Chennai,India    20-01-2010 11:12:40 IST
 செம்மொழி மாநாடு நடத்தாமல் இந்த 300 கோட்டியை சேமித்திருந்தால், அடுத்த மாதம் முதல் நடுத்தர வர்கத்தினரை மட்டும் பாதிக்க போகும் மின்சார கட்டண உயர்வையாவது தடுத்து இருக்கலாம். இதை சொன்னால் அம்மையார் அபிமானி என்று பட்டம். திரு ரிஸ்வான் அவர்கள் விமர்சனகளை கண்டு கலங்காதிர்கள். தொடர்ந்து தங்கள் நடுநிலையான கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.  
by திரு ஜெய் ,கனடா,Canada    20-01-2010 06:51:02 IST
 கோவையில் வருமனவரிதுரையினர் உடனடியாக ஒரு ரெய்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.  
by S. Nagarajan,Chennai,India    20-01-2010 06:46:08 IST
 உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்த அனைத்து செலவுகளுக்கும் மக்கள் வரிப்பணம் கவனமில்லாத தமிழக அரசின் மூலம் பல வழிகளில் இந்த ஊழல் அரசு அதிகாரிகளால் கொல்லையடிக்கபடுகிறது செலவு செய்ய போகும் மற்றும் செய்த தொகை மக்கள் கவனத்திற்கு அரசு அறிக்கைகள் பத்திரிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும் அதன் பின் செய்த செலவுகள் சரியா அல்லது பணிகள் செய்யபடாமல் அதில் ஊழல் உள்ளதா என்ற வாய்ப்பு மக்களுக்கு கிடைத்து மக்கள் மூலம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மாதம் தோறும் மாவட்ட பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பல லட்சங்கள் பொது செலவினங்கள் கணக்கில் மற்றும் ரகசிய கணக்கில் அரசு ஆணையின்படி ஒதுக்க படுகிறது. அனைத்தும் தனக்காக மட்டுமே. எனவே அரசு இதனையும் கவனம் வைத்தால் மாதம் பல கோடிகள் மக்கள் வரிப்பணம் மிச்சமாகும்  
by s munisamy,chennai,India    20-01-2010 06:35:27 IST
 திட்டம் போட்டு கொள்ளை அடிங்கடா..படுபாவி பயல்களா...உருபடவே மாட்டிர்கள்..நீங்கள் எல்லாம்..உங்களுக்கு நல்ல சாவே..வராதுடா..நாசமாபோவிர்கள்..மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவன் அந்த மக்களின் மலத்தை தின்பவன் போல ஆவான்..தான் தின்பதும் இல்லாமால் தன் குடும்பத்துக்கும் தின்னகொடுகிறார்கள். எல்லோரையும் கொள்ளை அடிக்க வைத்த இந்த திமுக அரசு ஒழிந்தால் தான் நாட்டுக்கு ஒரு விடிவு..வேற எந்த யார் ஆட்சி வந்தால் நல்லது? எல்லோருமே அயோக்கிய பயல்கள்..தான் எவனும் நல்லவன் இல்லை...ஆனால் வேற எந்த ஆட்சி வந்தாலும்..திமுக போல இலவச ஆட்சிய இருக்காது..குடும்ப ஆட்சி போல இருக்காது..வேற யாருக்கேனும் இந்த முறை மாற்றி ஒட்டு..போட்டு ஆட்சி அதிகாரத்தை கொடுங்கள்..

தினமலர் ஆசிரியரே நீங்கள் ஒரு கட்சி தொடங்குங்கள் பத்திரிகையாளர்கள் ஆட்சி நடக்கட்டும்..உங்களின் சின்னம் பேனா வாக இருக்கட்டும்..

தமிழகத்தை இந்த படுபாவிகள் வசம் இருந்து காபதுங்க..நாடு நிலை பத்திரிகைகளே !!!!!!.  
by R சூர்யா ,CHENNAI,India    20-01-2010 03:41:52 IST
 போச்சிடா.. மொத்த திட்ட்களும் அம்பேல்.......
''''''''வவ்வாலுக்கு வாக்கப்பட்டாள்,, தொக்கிதனே அகனம்''''''''''''  
by M Riyas,Al-Khobar,Saudi Arabia    20-01-2010 01:35:35 IST
 மக்கள் வரிப்பணம் தமிழக வரலாற்றில் இது வரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்க்கு இந்த ஆட்சியில் தான் அதிகம் விரயம் செய்யப்படுகின்றது.இதனை நிதிதுறை செயலாளர் நாராயணனும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் நாட்டில் விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்க்கு உயர்ந்த விட்ட காரணத்தினால் மக்கள் துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்க அதனை ஒடுக்க அரசிடம் எந்த ஒரு உருப்படியான திட்டமும் இல்லை. ஒரு பக்கம் அரசு ஊழியர்களுக்கு 272 கோடி ரூபாயை பொங்கல் போனஸாக அள்ளி வழங்கிய நம் அரசு மறுபக்கம் ஏனைய மற்ற மக்களுக்கு அளித்த பொங்கல் போனஸ் தான் மின் கட்டண உயர்வு செய்தி.
பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரையிலும் பாயும் என்பது தான் தற்போது இவர்களுடைய தாரக மந்திரம். 1977ல் இந்திராவிற்க்கு ஏற்பட்ட நிலையினையையும் 1996ல் ஜெ.க்கு ஏற்பட்ட நிலையினையையும் இவர்கள் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.
 
by M Amanullah,Dubai,United Arab Emirates    20-01-2010 00:53:34 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்