சென்னை : ""ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது, '' என முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கூட்டமைப்பு சங்கங்களின் மாநிலத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் சிம்மச்சந்திரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் தீபக், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கனிமொழி எம்.பி., சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி பங்கேற்றனர்.
முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து என்னை பாராட்டுவதற்காக இங்கு கூடிய ஊனமுற்றவர்கள் எதையும் எதிர்பார்த்து வரவில்லை. அவர்கள் எனக்கு நன்றியும், பாராட்டையும் விழாவாக எடுத்துள்ளனர். அவர்களது கால் ஊனம் குணமாகி நடந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு கண் பார்வை கிடைத்தால், அதுவே எனக்கு காணக் கிடைக்காத காட்சியாகும். ஊனமுற்றோர் என உங்களை அழைப்பதில் நான் வருத்தம் அடைகிறேன். உங்களுக்கு ஏதாவது சலுகை கிடைக்கத்தான் அப்படி பிரிவுபடுத்தி அழைக்கின்றனர். ரோஜா பூவின் காம்பை கிள்ளி விட்டால் அதற்கு மனம் இல்லாமல் போய் விடுமா? அதே போல் தான் கால் இல்லாதவர்கள் வாழ்க்கையிலும் மனம் இல்லாமல் போய் விடாது.
நான் கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு கண்ணொளி பெறுவதற்காக அதிகளவில் கண் சிகிச்சை முகாம்களை நடத்துகின்றனர். சென்னை வந்த நான், அப்போதைய சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அன்பழகனிடம் அது குறித்து பேசி, கிராமங்கள் தோறும் கண் சிகிச்சை மையங்கள் நடத்த உத்தரவிட்டேன். அன்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் கண்ணொளி திட்டம். அத்திட்டத்தை அரசு மட்டும் முழுமையான அளவில் செய்து விட முடியாது. மாவட்டந்தோறும் உள்ள பெருமக்கள், பணக்காரர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள் அரசின் அத்திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கண்ணொளி சிகிச்சை மையமும், அதற்கான அறுவை சிகிச்சை மையமும், சிறப்பு டாக்டர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஊனமுற்றவர்களின் சிகிச்சைக்காகவும், அவர்களது வாழ்வை மேம்படுத்தவும் இந்த அரசு 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை ஒதுக்கியுள்ளது. நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பீர்கள் என்றால், அத்தொகையை 1,000 கோடி ரூபாயாக உயர்த்தவும் தயாராக இருக்கிறேன்.
ஊனமுற்றவர்கள் இன்னும் நிறைய கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்னர். அவர்களது கோரிக்கைகள், புதிய சட்டசபை கட்டடத்தில், புதிய பட்ஜெட்டில் இடம் பெறும். ஊனமுற்றவர்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் உள்ளது. அதனால் 2,000 பேர் பயனடைந்துள்ளனர். இலவச பஸ் பயணம், விரைவு பேருந்துகளில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் போன்ற பல சலுகைகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் ஊனமுற்றவர்களின் மேல்படிப்புக்கு செலவு இலவசமாக இந்த அரசு அளிக்கிறது. இந்த வசதியின் மூலம் 206 பேர் பயனடைந்துள்னர். எட்டு லட்சத்து 72 ஆயிரத்து 450 ரூபாய் கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 12 மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்வதற்கென விடுதிகளுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊனமுற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறை இருந்தாலும், அவர்களுக்கென சிறப்பு தேர்வாணையம் அமைக்கப்படும். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும். ஊனமுற்றவர்களின் 400 பேருக்கு இலவச திருமண திட்டத்தின் எண்ணிக்கையை, ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். கை, கால் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் 400 ரூபாய் உதவித்தொகை பட்டியலில் செவிதிறன் குறைவு, வாய் பேச முடியாதவர்களும் சேர்க்கப்படுவர். ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர இலவச மோட்டார் சைக்கிள் 600 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். ஊனமுற்றவர்கள் 47 பேருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் வழங்கினார். பட்டதாரிகள் ஊனமுற்றோர் சங்க மாநிலத் தலைவர் தங்கம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து |
![]() இது வரைக்கும் எத்தனை ஊனமுற்றவர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் ஊனமுற்றவர் வாழ்க்கை கேள்விக்குறிதான் ??? ![]() |
by K chinna,salem,India 01-02-2010 10:32:53 IST |
![]() ![]() |
by k காளை,miami,United States 22-01-2010 23:51:35 IST |
![]() ![]() |
by B.H shajitha,madurai,India 22-01-2010 23:38:54 IST |
![]() ![]() |
by R கோபிநாத்,JW,Singapore 22-01-2010 22:44:53 IST |
![]() ![]() |
by L Raghavan,Bahrain,Bahrain 22-01-2010 22:17:01 IST |
![]() ![]() |
by S Mathew,Toronto,Canada 22-01-2010 21:20:17 IST |
![]() ![]() |
by king,Dubai,United Arab Emirates 22-01-2010 21:18:48 IST |
![]() வாழ்க இந்தியா! ![]() |
by அ.வே. செந்தில் குமார் ,ஜெட்டாஹ் - சவுதி அரேபியா ,India 22-01-2010 21:18:42 IST |
![]() இவரேதான் சட்டசபையில் தன்னை யாரும் புகழ வேண்டாம்னு சொன்னாராம், adhaiyum நம்ம பத்திரிகைகள் (தினமலர் utpada) வெட்கமில்லாமல் பிரசுரித்துள்ளனவாம். ஏழைகளுக்கும், ஊனமுற்றோருக்கும், விதவைகளுக்கும், முதியோருக்கும் செய்வதுதான் நாடாளுபவரின் தலையாய கடமை. ஒருக்கால் இவர் குடும்பமே கழகம், கழகமே குடும்பம் என்று முழங்கியதற்கு ஏற்றவாறு தனது மகன், மகள், பெறக் குழந்தைகள் இவர்களுக்கு செய்வதே முதலமைச்சரின் கடமை என்று முடிவு பண்ணி, மற்றவருக்கு செய்வது பாராட்டு வாங்க என்று வெட்கமே இல்லாமல் நினைத்துள்ளாரோ .. என்னவோ... ![]() |
by H நாராயணன்,Hyderabad,India 22-01-2010 21:09:04 IST |
![]() ![]() |
by R ஏமாற்ற பட்ட தமிழன் ,tt,Sri Lanka 22-01-2010 20:46:30 IST |
![]() ![]() |
by k ஷ்யாமளா,chennai,India 22-01-2010 20:28:04 IST |
![]() ![]() |
by t.g. kavara,valasiramani.tamilnadu.,India 22-01-2010 17:39:43 IST |
![]() ![]() |
by t kallidas,russia,India 22-01-2010 17:18:12 IST |
![]() ![]() |
by O saravanan,salem,India 22-01-2010 16:53:46 IST |
![]() ![]() |
by krish das,madurai,India 22-01-2010 16:48:39 IST |
![]() ![]() |
by O SARAVANAN,salem,India 22-01-2010 16:46:53 IST |
![]() ![]() |
by v செல்வா ,Chennai,India 22-01-2010 16:11:46 IST |
![]() மக்களுடைய வரி பணத்தில் எத்தனை காலம் தான் தன் பெயருக்கு விளம்பரம் சேர்கின்றனர் வெட்ககேடு கின்னஸ் ரிகார்ட் தான்.உதயகுமார் புகழ் டாக்டர்க்கு ஆசை எப்போது தான் தீரும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டினை ![]() |
by k venkat,chennai,India 22-01-2010 16:01:57 IST |
![]() ![]() |
by R Venkat,Bangalore,India 22-01-2010 15:30:58 IST |
![]() ![]() |
by mr கோபி,Chennai,India 22-01-2010 14:39:12 IST |
![]() ![]() |
by V இராமச்சந்திரன்,Dharmapuri,India 22-01-2010 13:54:09 IST |
![]() தனக்கு ஒரு வழி மற்றவர்களுக்கு ஒரு வழியா? நீரும் இங்கேயா சிகிச்சை செய்து கொள்வதுதானே? உமிடம் பணம் பதவி இருப்பதால் நீங்கள் அயல் நாட்டுக்கு போவீர்கள் நாங்கள் எங்கே போவது? போதுமையா உம நலத்திட்டங்கள் எல்லாம் கண் துடைப்பு சமாசாரங்கள் ![]() |
by nila mdu,madurai,India 22-01-2010 13:52:11 IST |
![]() ![]() |
by m சிவா,puducherry,India 22-01-2010 13:06:44 IST |
![]() ![]() |
by GR கோவிந்தராஜன்s,CHENNAI,India 22-01-2010 12:45:05 IST |
![]() We want to move every where without any struggle. Can physically challenged people visit bus stand , railway station or shopping , cinema theatre , any functions without help of others? IT companies only taking physically challenged people very carefully.I wish to say thanks for them. Government offices, other offices, shops, bus stand, Theaters ,tourist places and even hospitals are not have any special arrangements for physically challenged people visiting their places. And aged people also facing problem to step on big steps. I request CM provide permanent schemes and setup for their life . We are not beggers and dont want any sympathy from any body. we want also live as normal man. ![]() |
by S Saravanan,Chennai,India 22-01-2010 11:50:43 IST |
![]() ![]() |
by tamilselvi,madurai,India 22-01-2010 11:31:21 IST |
![]() ![]() |
by D Ilangovan,dubai,United Arab Emirates 22-01-2010 11:23:30 IST |
![]() எண்பத்து ஐந்து வயதில் இந்த பாராட்டு தேவையில்லை. சாராயம் தமிழகத்தில் ஓடி எதனை குடும்பம் ஊனம் ஆனது என்று yosiyungal ![]() |
by gs ganapathy,khartoum,Sudan 22-01-2010 10:58:01 IST |
![]() ''''''''ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது, '''''''' நமக்கு நாமே திட்டமா? அட ராம!!!! ![]() |
by V manickam,Singapore,India 22-01-2010 10:45:30 IST |
![]() people get iron box/3 wheel cycle only for advertisement. there is no usefull aid/employment /education and there is no monetering cell which funds has been utilize in usefull or not ![]() |
by mr பாலா,coimbatore,India 22-01-2010 09:30:03 IST |
![]() ![]() |
by B பாலமுருகன்,Bangalore,India 22-01-2010 09:18:25 IST |
![]() ![]() |
by K பெரியசாமி ,peravurani,India 22-01-2010 09:08:22 IST |
![]() அல்லது மனதில் தான் ![]() |
by t கலைஅரசன் ,Chennai,India 22-01-2010 08:53:30 IST |
![]() எல்லா மதத்திற்கும் பொதுவான கடவுள் பெயரை தாங்கி இருக்கும் தங்களைத் தவிர வேறு யாருக்கு பெரிய மனது இருக்க முடியும்? நன்றி. நானும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ![]() |
by K JEEVITHAN,villupuram,India 22-01-2010 08:12:21 IST |
![]() என்னதான் இருந்தாலும் உங்களை நீங்களே புகழ்ந்து கொள்வது ரொம்ப ஓவர்.ஏன் பாராட்டு விழாவில் யாரும் சரியாக உங்களை பாராட்டவில்லையா? ![]() |
by S ஜெகத்,chennai,India 22-01-2010 07:13:47 IST |
![]() ![]() |
by mv bala,ch-33,India 22-01-2010 06:46:48 IST |
![]() ஏன் உங்களுக்கு இங்க இருக்ற மர்துவதுல நம்பிக்கை இல்லையா.. இங்க தமிழ்நாடே உங்களால ஊனம் ஆயிருக்கு நீங்க வேற எதோ பெரிய மனம் நு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. இன்னும் கொஞ்ச நாள் தன போங்க... ![]() |
by g சாட்,Chennai,India 22-01-2010 03:19:20 IST |
![]() ![]() |
by ரவி,TORONTO,Canada 22-01-2010 03:18:38 IST |
![]() ![]() |
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 22-01-2010 03:00:19 IST |
![]() ஊனமுற்றவர்கள் வாழ்க்கை தரம் இன்னும் உயர்தபடனும்.இப்படி பட்ட செயல்களுக்கு பணம் செலவிடுவது நன்று.நன்றி உங்களுக்கு. உங்கள் சொந்த பணத்தில் ஊனமுற்றவர்கள் நலனுக்கு பல திட்டங்கள் செயல் படுத்தனும் என நினைத்தால் உங்களின் பெரிய மனதை காட்டும். இப்போ நீங்கள் தமிழக முதல்வர் இவர்களுக்கு நீங்கள் செய்வது உங்கள் கடமை.இவர்களுக்காக மட்டும் இல்லை எந்த தமிழ்நாடு தமிழனுக்கும் நல்லது செய்ய தான் நீங்கள். ஒரு கேள்வி; அதிமுகவும்,,திமுகவும்..அரசுகளில் இருக்கும் போது எந்த மக்கள் நல திட்டங்கள் செய்தாலும் மக்கள்வரி பணத்தில் தானே செய்கிறிர்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்கள் முதல்வர்.அப்படி இருக்கும் போது தன் படத்தை எதுக்கு போடனும்? தமிழ்நாடு அரசு சின்னம் மட்டும் போடலாமே. பள்ளி போகும் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும்.பஸ் பாசிலும் முதல்வர் படம். எங்கே திரும்பினாலும் முதல்வர் படங்கள் தான் இந்த இரு ஆட்சிகளில். ![]() |
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 22-01-2010 02:36:22 IST |
![]() ![]() |
by MKM மன்னார்சாமி,Chennai.,India 22-01-2010 00:38:44 IST |
![]() நீர் கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம், தமிழக ஏழை மக்கள் எங்கு செல்வார்? பணக்காரர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள் அரசின் கண்ணொளி திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கூறுகிறிர்கள், உங்களுடைய குடும்பம் பணக்கார குடும்பம் இல்லையா? அவர்கள் அரசின் கண்ணொளி திட்டத்திற்கு கொடுத்த தொகை எவ்வளவு? இலவச திட்டங்களை நிறுத்தி அப்பணத்தை அரசின் கண்ணொளி திட்டத்திற்கு பயன்படுத்த கூடாதா? ![]() |
by M அறிவுமதி ,Chennai.,India 22-01-2010 00:27:37 IST |