முதல் பக்க செய்திகள் 

'அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா' : ஐகோர்ட் நீதிபதி வேதனை
ஜனவரி 23,2010,00:00  IST

Front page news and headlines today

மதுரை : ""அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா,'' என, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார்.முசிறியை சேர்ந்தவர் ராஜ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். தீபாவளியன்று பள்ளி வளாகத்தில் நண்பருடன் மது அருந்தியதாக, ராஜை வகுப்பில் அனுமதிக்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார். இதை எதிர்த்து ராஜின் தந்தை ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். மனுவில், ""மாணவனை பள்ளியில் அனுமதித்து செய்முறை தேர்வில் பங்கேற்க உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். இம்மனு நேற்று, நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. மாணவன், அவரது தந்தை ஆஜராயினர். தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி,""மாணவர் செய்த தவறை இன்னும் உணர்ந்ததாக இல்லை. அவருடைய எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இன்னும் அவரை பள்ளியை விட்டு நீக்கவில்லை,'' என்றார்.அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.தனபாலன் கூறியதாவது: மாணவன் பிளஸ் 1 வரை நல்ல முறையில் படித்துள்ளார். வருகை பதிவேடு நன்றாக உள்ளது. தற்போது இத்தகைய குற்றங்களுக்கு காரணம் அவருடைய வயது. இதற்கு முழு காரணம் சினிமா தான். சில நல்ல சினிமாக்களும் வருகின்றன. சில சினிமாக்களில், கதாநாயகர்கள் செயல்படுவது போல இளைஞர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா ஒழிந்தால் இத்தகைய பிரச்னைகள் ஒழிந்து விடும். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா. இது என் தனிப்பட்ட கருத்து. பழைய சினிமா பாடல்களை குழந்தைகள் அமைதியாக கேட்டு ரசிக்கின்றனர். இன்றைய சில சினிமா பாடல்களை கேட்டு அலறி அடித்து ஓடுகின்றனர். இதை என் வீட்டிலேயே பார்க்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக சினிமாவில் இந்த நிலை நிலவுகிறது.சில மாதங்களுக்கு முன், தலைமை நீதிபதி, "தாரே ஜமீன்' என்ற இந்தி சினிமாவை பார்க்கும்படி கேட்டு கொண்டார். அனைத்து நீதிபதிகளும் அந்த சினிமா பார்த்தோம். அத்தகைய நல்ல சினிமாக்களும் வருகின்றன. குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கினால் நாட்டை உருவாக்க முடியும். இதற்கு யாரையும் குற்றம் சாட்ட முடியாது. மொபைல் போன் நல்ல தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. அதை ஆபாசத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதை சட்டத்தை அமல்படுத்துவோரும், பெற்றோர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும் சுற்றுப்புற சூழல் காரணங்கள் இதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. மாணவருக்கு தண்டனை வழங்குவது நோக்கம் கிடையாது. தண்டனை வழங்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். பிற்காலத்தில் அவர் முக்கியமானவராக வரலாம். பதினேழு வயதில் பருவ கோளாறுகள் ஏற்படும். மாணவரது முந்தைய நடத்தைகள் நன்றாக உள்ளது. எனவே பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட கல்விஅதிகாரிகளுடன் அரசு வக்கீல் ஆலோசித்து, முடிவை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார். விசாரணையை ஜன., 27க்கு தள்ளிவைத்தார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு..ஆனால்,இந்த கால மாணவ,மாணவிகள் அதையே ஒரு கவசமா எடுத்துவிட்டார்கள். ஆபாசம், கொடுமை, பலாத்காரம், ஒருவருக்கு ஒருவர் பழி வாங்கும் எண்ணம்,இவை எல்லாத்தையும் சினிமாவில கொண்டு வந்து ஆண்,பெண் இரு பகுதியரையும் பலியாக்கிக் கொண்டு இருக்கார்கள்.களவு,பொய்,தீவிரவாதம் எல்லாம் சினிமாவலேயே தூண்டப்படுகிறது.நாடகம்!!!!!சில வீட்டுப் பெண்களுக்கு,வேலையால் வீடு திரும்பும் கணவனை,பசியால் அழும் பிள்ளையை கவனிக்க நேரமில்லாத வண்ணம் நாடக வெறி.இப்படிபட்ட,நாடகப் பயித்தியம் பிடித்த பெண்கள் ,இளைய சமுதாயம் கெட்டுப்போக காரணங்கள் :::::
1....சினிமா.........
2.....பழி உணர்ச்சி உள்ள நாடகங்கள்...
3....பெற்றோரின் வாழ்க்கை நடை முறைகள். 
by G AMMIYA,DENHELDER,Netherlands    27-01-2010 01:46:10 IST
 Flim is only for entertainment. If pepole take reel life in real life like this will happen.Pepole should know reel life is different & real life is different.Flim they making for money.Pepole for what you are doing like this......... what you will get.Befor doing any think think think.....!!!!  
by K RIYAZ AHMED,Bharine,United Arab Emirates    26-01-2010 14:53:30 IST
 நிதிபதி அவர்கள் சொல்வது மிக சரி
இன்றய cinema மற்றும் tholaikatchi நாடகங்கள் migvum மோசம் intha irandaium thadai செய்தல் செய்தல் nadu ஒருபுடும் . 
by c அசோக் குமார் ,uae ,India    26-01-2010 13:27:52 IST
 பேரா.சரஸ்வதி போன்ற பல பெண்வாசகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆண் வாசகர்களது விமர்சனங்கள் மட்டும்தான் இங்கே வருகின்றன.
பெண்களுக்கு அரசியல் அறிவு இருந்தால் கட்டாயம் இந்தியா முன்னேறிவிடும் என்பதில் சிறிதளவு கூட சந்தேகமில்லை.
 
by K JEEVITHAN,villupuram,India    24-01-2010 20:06:03 IST
 சினிமாக்காரர்களைக் கேட்டால் சமுதாயத்தில் நடப்பதைத்தானே நாங்கள் பிரதிபலிக்கிறோம் என்பார்கள்.
ஒருவருக்கொருவர் குறை சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
நாமாக திருந்த வேண்டியதுதான்.
வேறு வழியில்லை.  
by K JEEVITHAN,villupuram,India    24-01-2010 08:07:57 IST
 சினிமா காரர்களை அரசியலில் அமர்த்துங்கள், பாரதரத்னா விருதுகள் கொடுங்கள், கோடி கணக்கில் சம்பளம் கொடுங்கள், பெண்களின் ஆபாசத்தை பாருங்கள்! ஆண்மையும் ஆன்மீகத்தையும் இழந்து சொந்த வீடு நாடு இழந்து அடுத்தவரிடம் அடிமை அகுகள்.  
by mr dharmaraj,isaleworth,United Kingdom    24-01-2010 00:28:43 IST
 தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தி சினிமாவில் கூட இது ரொம்பவே அதிகம். இவர்கள் அவர்களை பார்த்து போட்டி போட்டுக்கொண்டு poருக்கியையும் மோசமானவனையும் ஹீரோவாக்கி படம் எடுக்கிறார்கள், என்னைப்பொறுத்தவரை இந்த சினிமாக்களை நாம் பார்க்காமல் ஒதுக்குவதால் ''''டப்பா'''' வாகும் படங்களால் மட்டுமே இந்த மாதிரியான சினிமாக்களை இனி தவிர்க்க முடியும். கர்மம் கர்மம். டிவி சினிமா இதெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியல.  
by Mr DSP,jamnagar, gujarat,India    24-01-2010 00:03:33 IST
 நண்பர்களே, நான் முன்பே அரசியல் கூறியது போல் நம் நாட்டை (குழந்தைகள், இளைஞர்கள், இளம் குடும்பப்பெண்கள், பெரிசுகள்...) பிடித்து நசுக்கிக்கொண்டு, நாசமாக்கிக்கொண்டும் இருப்பது இந்த மூன்றும் தான்!
1.சினிமா
2.தொலைகாட்சி
3.அரசியல்
நான் ஒரு College Professor என்ற முறையில் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், முக்கியமாக பெற்றோர்கள் கவனத்திற்கு!!!
 
by D சரஸ்வதி ,Manalappaadi,India    23-01-2010 22:57:53 IST
 முன்பெல்லாம் பையன் சினிமாவுக்குப் போய் விட்டு வந்தால் அவனை ஒதுக்கப் பட்டவரைப் போல நடத்தும் இஸ்லாமியத்தாய் தந்தைகள் இருந்தது நினைவுக்கு வருகிறது.
இப்போது நிலைமை தலை கீழாக உள்ளது.காரணம் அவர்கள் எதை ஒதுக்கினார்களோ அதே சினிமாவை நடு வீட்டில் தொலைக் காட்சிப்பெட்டியை வைத்து குடும்பத்தோடு காண்பதை வேதனையோடு காண முடிகிறது.
விஞ்ஞானம் வளர்வதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.அதே சமயம் அதை மனிதனின் தன்னிலை மறந்து விடும் அளவுக்கு ஏற்றுக் கொள்வது முட்டாள்த்தனம்.
பிள்ளைகளை நல் வழிப்படுத்துவது பெற்றோர்களின் சீரிய கடமையாகும். 
by va.me salahdeen,dubai,United Arab Emirates    23-01-2010 22:32:57 IST
  (சமுதாய) பொறுப்புள்ள நீதிபதி. புத்திசாலியான தலைமை ஆசிரியர்( இன்னும் மாணவனை நீக்கவில்லை). கருணையான் தந்தை ( காக்கைக்கும்...தவறு என தெரிந்தும் மகனுக்காய் வாதிடும் ) இப்படி பட்ட நல்ல மனிதர்களின் பிச்சையில் வாழ்ந்தும் கெட்டுபோக துடிக்கும் விட்டில் பூச்சியே உனக்கு திருந்த ஒரு வாய்ப்பு.... 
by A John,Roma,India    23-01-2010 21:14:29 IST
 ஒழிக்கவேண்டும் சினிமாவை  
by e rafiq,london,Uganda    23-01-2010 20:34:45 IST
 சினிமாகரனை நம்பித்தான் நம் இளய சமுதாயம் கேட்டுபோபோகிறது . அவன் காசுக்காக செய்கிறான் .அவன் செய்வதெல்லாம் உண்மை என நாம் நம்பிவிடுகிறோம் என்றைய அரசியலும் சினிமக்காரனை தான் நம்புகிறது .சினிமாக்காரன் இல்லாத அரசியல் இருந்தால் தான் நம் நாடு உருப்படும்
 
by M PEEKAY,madurai,India    23-01-2010 19:45:58 IST
 sh mangalam,NELLAI,India அவர்களுக்கு சினிமாவுக்கு அதரவான கருத்தாக எடுத்துகொள்ள வேண்டாம் ஒரு காட்ச்யையோ பாடலையோ நாம் ஆபாசமாக இருக்கிறது என்றால்தான் அதில் என்ன இருக்கிறது என்று ஆரயைச்சிகள் தொடங்குவார்கள்  
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India    23-01-2010 19:35:22 IST
 நமக்கு ஆண்டவன் ஆறறிவு கொடுத்ததே, நாம் நல்லதையும், கேட்டதையும், புரிந்து செயல்படுவதர்குத்தான்..இதில் யாரையும் குறை சொல்ல கூடாது...  
by அம்முகுட்டி ,malaysia,India    23-01-2010 19:33:18 IST
 நீதியரசர் அவர்களின் கருத்து முற்றிலும் உண்மை,இன்றைய சினிமா பல வகையான குற்றங்களுக்கும் மூல காரணமாக அமைகின்றது, எல்லா படங்களிலும் எவ்வளவு வன்முறை?ஆபாசம்?இதனால் எத்தனை தவறான பழக்கவழக்கங்கள்?எத்தனை தவறான உறவு முறைகள்? ஏன் இந்த நிலை? மாற்றி அமைத்தல் வேண்டும். M.Raja, singapore. 
by M Raja,singapore,India    23-01-2010 19:26:02 IST
 எந்த குழந்தையும் நல்ல குழந்தை தன மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் பார்க்கும் பார்வையிலே, சேரும் சேர்க்கையிலே.

பெரியோர்களே! அப்பாவி குழந்தைகளின் (இளைஞர்களின்) வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கி விடாதீர்கள்.  
by n ஜெகன்,Madurai,India    23-01-2010 19:09:27 IST
 May I beg the honorable court to order an investigation how the minor got the Liquor, what is the age limit to buy and use liquor.
Since the case is in High court, May I plead to dictate or reiterate (if any such law exists) the rulings and restrictions on selling the liquor to minors to all liquor outlets and government machinary.
I understand the local Musiri liquor vendors would claim that the liquor was sold to a major but the minor got the same and consumed.
Punishment is the best way for such crimes.

The minor boy may be warned and let out free if he comes out with the truth in the court of law on how he got the liquor. 
by R SARAVANAN,KIEV,Ukraine    23-01-2010 17:46:39 IST
 anna nan ninaitha neenga karacta soliteenga
karikalan

jayaprakash 
by S jayaprakash,DUBAI,United Arab Emirates    23-01-2010 16:54:44 IST
 Well said your honour. Most of the films are the root cause of all anti-social activities.And this is the industry where some people like heroes and heroines and directors earn millions and millions without any effort whereas a labour toils and toils to earn just 100 rupees a day. This is a gambling in country where millions are struggling under poverty.
It is shameful that we are still after heroes and heroines. We should stop praising them and stop attending to them.
Media should not focus on them (they do it to generate more revenue)
Why not the media focus and give much publicity for scientists, social workers who really bring something useful to the common man. 
by king,Chennai,India    23-01-2010 16:23:38 IST
 முதலில் தனபாலன் அய்யா அவர்களுக்கு எனது நன்றி
இயக்குனர்களையும், தயாரிப்பளர்களையும் முதலில் தண்டிக்கவேண்டும் ஏனெனில் ''நடிகை குடிகாரனையும், ரவுடியையும் மற்றும் படிக்கதவனையும் காதலிப்பதுபோல் கதையை சித்தரிக்கின்றனர்'' இந்த நிலை மாறவேண்டும்.
''நன்றாக படித்து மாநிலத்திலோ, மாவட்டத்திலோ அல்லது பள்ளியிலோ நீ முதலிடம் வந்தால்தான் உன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வேன் என நடிகை ஹீரோவிடம் சவால்விடுவது போன்ற காட்சிகள் இருப்பின், எதிர்கால சமுதாயம் நன்றாக அமையும்.

சமுதாய நலம் விரும்பி.............
இராம.ஜீவா  
by r புதியவன்,singapore,Qatar    23-01-2010 16:11:36 IST
 தணிக்கை குழு என்ன செய்கிறது? எல்லாம் பணம் பண்ணும் பாடு! மக்களுக்கு என்று பணத்தை விட ஒழுக்கம் முக்கியமாக படுகிறதோ அன்று தான் இது போன்ற எல்லா அவல நிலை மாறும். இன்று முக்கியமாக மாற வேண்டியது
அ. அரசியல்
ஆ. சினிமா
இ. தொலைகாட்சி

இது மூன்றுக்கும் சரியான கடிவாளம் இருந்தால் எல்லாம் மாறி விடும். நம்புவோம்! நடக்கும்!!!! 
by M சுந்தரம்,Bangalore,India    23-01-2010 15:11:12 IST
 பொறுப்புள்ள நீதிபதி. புத்திசாலியான தலைமை ஆசிரியர். கருணையான் தந்தை ( காக்கைக்கும்...) இப்படி பட்ட நல்ல மனிதர்களின் பிச்சையில் வாழ்ந்தும் கெட்டுபோக துடிக்கும் விட்டில் பூச்சியே உனக்கு திருந்த ஒரு வாய்ப்பு....  
by A John,Roma,India    23-01-2010 15:08:11 IST
 judge is very good & excluntly man,, we need many judge corrected this country.. i proud & shulet sir.. 
by B சிவகுமார்,punjai puliampatti,India    23-01-2010 14:53:38 IST
 It is the failiure of our Govt. & Censor Board. Our political leaders are very careful in telecasting their views in Media without loosing their votes . But they fails to give attention to Cinema, which send bad signal to public. Very Sad ! 
by v christopher,sana'a,Yemen    23-01-2010 13:55:44 IST
 மாணவனை கவனிக்காத வளர்த்த அந்த பெற்றோர் மேல வழக்கு தொடரலாம். தோல்வியை ஏற்காத மாணவன் நிலைமை மோசமாக விடவேண்டாம் .பாவம் விட்டுவிடுங்கள் ஐயா .... 
by g ரவிச்சந்திரன்,chennai,India    23-01-2010 13:14:44 IST
 வல்லோரும் திருட்டு VCD வாங்கி பாருங்க, தியேட்டர் போகாதீங்க 
by ss sadiq,sharjah UAE,United Arab Emirates    23-01-2010 13:10:12 IST
 Dear Sir,
There are around 200 countries in the world. Geographically they have different climatic conditions. People adopted life styles to suit their climatic conditions. Traditional styles adopted by majority of people become customs. This information is available in the genes of everyone. Hence whenever we have chance we try to behave accordingly. To be very honest we can classify people into 2 broad categories namely people with opportunities and without opportunities. Our mind will say who we are.

We are given with opportunities to practice so called bad habits. The bad and good habits themselves have very weak definitions.

Anyhow if we look at the present scenarios definitely each one of us are disturbed. Cinema plays about 80%, while internet, TV, news papers etc share the rest.

Definitely common remedies are required. Till then we have to save our own family members.

Thank you.
K.Kannan
 
by K Kannan,Trichy,India    23-01-2010 12:50:00 IST
 திரு காளை அவர்கள் சொல்லுவது மிக சரி. அதுவும் தற்பொழுது டிஸ்கவரி சேனல் தமிழிலேயே நாள் முழுவதும் வருகிறது. ஆனால் அந்த வசதியை கொடுக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் ஒரு சிலரே. எத்தனை பேர் தங்களது கேபிள் ஆபரேட்டர்களிடம் இந்த வசதியை தருமாறு கேட்கின்றனர்? குத்தாட்டங்களில் தான் நமக்கெல்லாம் விருப்பம். என்ன சொல்லி என்ன?  
by s வாசகன்,delhi,India    23-01-2010 12:33:00 IST
 Without doubt Cinema plays a negative role in many a people''s lives. However, parents have a responsibility in bringing up good citizens 
by M Seeni Mohamed,Dubai,United Arab Emirates    23-01-2010 12:15:45 IST
  well said. unfortunately the honourable justice failed to criticise on third class TV programmes. 
by a syed abuthahir,u a e,India    23-01-2010 12:15:12 IST
 பாவம்! ஒரு பெரும் பகுதி மக்கள் இந்த சினிமா/டிவி தீய விளைவுகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று குழம்பியுள்ளர்கள். சரியான வழி ஒன்று தான். டிவி/சினிமாவின் நல்ல விஷயம் என்ற ஒரு மாயையை மறந்து விடுங்கள். முழுமையாக பார்த்தால் அப்படி ஒன்றுமே இல்லை. தகவல், விழிப்பு உணர்வு இதை பெற நல்ல புத்தகங்கள், பத்திரிகைகள் பெற்று கொள்ளவும். இவற்றை நாம் கட்டுபடுத்த முடியம்.ஆனால், டிவியை கட்டுபடுத்த முடியாது. குடும்பம்/குழந்தைகள் பாதிக்க பட்ட பின்பு அழுது பயனில்லை.  
by I ஜாகிர் உசைன் ,kuwait,India    23-01-2010 11:54:52 IST
 k காளை,miami,United States - இங்கே யாரும் ஒப்பாரி வைக்கவில்லை. இங்கே எழுதுகிறவர்கள் யாரும் ஆபாச காட்சி தான் வேண்டும் என்று கேட்க வில்லை.சினிமாவின் ஆபத்தான பக்கங்களை உணர்த்துகிறார்கள். நடப்பதை காட்டுகிறான் என்றால் காட்டுகிறதால் நடக்கிறேன் என்கிறான். எது சரி என்று யார் உணர்வது. யார் உணர்த்துவது? வீட்டுக்கு வந்த விருந்தாளி திடீரென வேட்டியை அவிழ்த்துவிட்டு நின்றால் அடிக்க வேண்டியதால் அடிப்பதா வேண்டாமா? அதுதான் பிரச்சனை. விளக்குமாறை வெளியில் வையுங்கள். குத்துவிளக்கை நடுவீட்டில் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.  
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    23-01-2010 11:37:35 IST
 உங்களுடய கருத்துகள் எல்லாம் சூப்பர். உங்களையும் உங்கள் குடும்பதார்ஹளையும் எப்படி பாதுகாக்க போறீர். முதலில் உங்கள் வீட்டில் உள்ள டிவி yei எடுத்து வீசுங்கள். எங்கள் வீட்டில் டிவி கிடையாது. எங்களுக்கு நிறைய நேரம் மிச்சம். நாங்கள் கல்வியில் பின்தங்கியும் கிடையாது. We are employed in central government of india and india gives more salary to us. Who shown this path to us? who thought us not to watch cinema and tv progarams? The real islam which is not teaching terrorisem to us. In Tv and cinima 95% are worest and 5% are good. If in the drinking water tap water is comming with 1% of drainage. did you take it? No. but cinima and Tv are 99% worst. Dont watch it please! and save our our new generation for building better india and world. 
by Mohamed ilias.,TRICHY.,India    23-01-2010 11:28:50 IST
 திரு விஜய ஷங்கர் போன்ற சினிமாவுக்கு ஆதரவு தெரிவிப்போர் தன பெற்ற ஆண் பெண் பிள்ளைகளுடன் ''டாடி மம்மி வீட்டிலில்லை ''போன்ற எண்ணிலடங்கா தரம் கெட்ட பாடல்களையும் அருவெறுப்பான ,ஆபாசமான காட்சிகளையும் பார்த்து ரசிப்பீர்களா.சிந்தியுங்கள் சகோதரர்களே!
நன்றி. மங்களம். 
by sh mangalam,NELLAI,India    23-01-2010 11:14:28 IST
 மக்களே சும்மா எதற்கெடுத்தாலும் அடுத்தவனை குறை சொல்லும் பழக்கத்தை நிறுத்துங்கள். 
by k காளை,miami,United States    23-01-2010 11:12:30 IST
 சினிமா மாறவேண்டியது உண்மைதான் அதற்க்கு முன் இப்படிப்பட்ட அப்பாக்கள் அல்லவா மாற வேண்டும்.மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களின் கருத்து அதிகமான மக்களின் கருத்து என்பதை தினமலரின் வாசகர் கருத்து பகுதியை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்  
by kkc razi,dammam,Saudi Arabia    23-01-2010 11:07:31 IST
 கனம் நீதிபதி அய்யா..நல்லாச்சொன்னீங்க..மக்கள் திருந்தாதவரைக்கும் நாடு உருப்புடாது.. 
by பொதுஜனம் ,male',Maldives    23-01-2010 10:59:05 IST
 மக்களே சும்மா எதற்கெடுத்தாலும் அடுத்தவனை குறை சொல்லும் பழக்கத்தை நிறுத்துங்கள். அவனுக அப்படி படம் எடுத்து விட்டாலும் உங்களுக்கு புத்தி எங்க போச்சு? அந்த அளவுக்கு புத்தி மழுங்கி பொய் நீ டி.வி. முன்னாடியும் , சினிமா தியேடர்லையும் விழுந்து கிடந்துவிட்டு சும்மா இங்க வந்து புறம் பேசுவதை நிறுத்துங்கள். உன்னால அந்த கருமம் புடிச்ச டி.வி-யும் சினிமாவும் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றால் பொத்தி கொண்டு இருங்கள். தப்பை நம்ம மேல வெச்சுகிட்டு சும்மா அடுத்தவனை குறை சொல்லிக்கிட்டு. எவனாச்சும் ஒருத்தன் நாள் முழுதும் அனிமல் பிளானெட் பார்த்தது உண்ட? கண்ட கண்ட கருமத்துக்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான் இதற்கெல்லாம் காரணம். முதலில் நீங்களும் ஒரு காரணம் என்பதை ஒப்பு கொள்ளுங்கள் . பிறகு இங்கு வந்து ஒப்பாரி வெய்யுங்கள் .  
by k காளை,miami,United States    23-01-2010 10:58:41 IST
 திருட்டு VCD இல் படம்பார்த்தல் சினிமாவை ஒழிகலம்  
by கருப்பயாஹ் சிவகுமார் ,Jalan Bukit Merah,Singapore    23-01-2010 10:51:25 IST
 சினிமா மட்டும் காரணம் அல்ல....விளம்பரம் என்ற பெயரில் நிறைய நிறைய ஆபாசமான காட்சிகள்..(பெண் சமுதாயத்தயே அவமதிப்பது போல) ..டிவி யில் வருகின்றன...அதற்கும்....சென்சார் போர்டு இருந்தால் ரொம்ப நல்லது..என்பது என்னுடைய கருத்து... 
by s ஜைனுல் ,Jubail,Saudi Arabia    23-01-2010 10:35:33 IST
 Film industry very worst industry.....  
by A Mansoor,Dubai,United Arab Emirates    23-01-2010 10:33:57 IST
 What the Judge told is totally correct. One can learn easily how to rape, steal, murder, eve teasing just by watching our Tamil Cinema. The Cine Actors act like Gentlemen but in real life the trend is entirely different. They fight for removing black money, etc., from rich people but they themselves have huge block money. Then who will fight for that? Unless we change nothing will happen. We cannot expect the present Government will remove such eveil as they are the closely associate with Cine People. In addition so many TV channels also contribute their best in spoiling our community. Unless and otherwise we cannot change we have to bear all these. Fortunately or unfortunately we have no TV in Trains. Thanks to Railways. 
by G SUNDARARAMAN,Trichy,India    23-01-2010 10:26:31 IST
 thejudgementiscorrectnowdaysallthemoviesareworstandspoiledthehumanculture 
by g ganesan,chennai,India    23-01-2010 10:19:13 IST
 கணம் நீதிபதி அவர்களே உங்கள் கருத்தை நான் வழிமொழிகிரேன் நீங்கள் சொல்வது ரொம்ப நல்ல கருத்து.சினிமா இன்றைய சமுதாயத்தை சீரழிக்கின்றன என்பது உண்மை மட்டுமல்லாமல் நமது கலாசாரத்தை கேவலப்படுத்துவதும் சினிமாக்காரர்கள் தான். 
by J லியோ,paramakudi,India    23-01-2010 09:56:27 IST
 அருவருப்பான பாடல்கள், காது கிழியும் படி வெறி பிடித்த தகர டப்பா சத்தம், அதிலும் பழைய இனிய பாடல்களை குதறும் வக்கிரம் , ஆபாச நடனங்கள், ரத்தக் களறியாய் காட்சி தரும் கதாநாயகன் ? முக்கால் நிர்வாணமாக கதாநாயகி? - இத்தகைய திரைப்படத்தை தாய்குலம் போற்றும் படம் என்று விளம்பரம் செய்கிறான். பாடல்களை வானொலியில் அடுத்தவனுக்கு டெடிகேட் செய்பவன் நல்லவனா? பட்டுக் குஞ்சத்தை எதற்கு கட்டுவது? 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    23-01-2010 09:38:59 IST
 பார்க்கிறவர்கள் கண்ணோட்டத்தை பொருத்துதான் சினிமா பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களில் ஒரு மாணவனின் குற்றத்திற்காக சினிமா ஒன்றுதான் நமது சமுதாயத்தை கெடுகிறது என்று சொன்னால் சினமாவை பிடிக்காதவர்கள் வாதமாகத்தான் இருக்கும் சமுதாயத்தில் உண்மையாக நடக்கின்ற சம்பவங்களை வைத்து திரைப்படங்களும் வந்து இருக்கிறது இதற்கு யார் காரணம். (நீதிபதியின் வார்த்தையில் சினிமாவை பற்றி குறிப்பிடும் போது என் தனிப்பட்ட கருத்து.என்கிறார் )  
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India    23-01-2010 09:06:17 IST
 '''' Generally teen-age students are ready to grasp the bad things from the things were happening around them ''''. Though the films are thought to tell the both good & bad things to society , Our teen-age guy''''s were easily neglecting the good things grasping the bad one. ( They thought in their mind as hero, what we are doing are right ). It will be better, if the parents are taking care little more their children’s during this teen-age to till some matured level. 
by K சுரேந்தர்,Chennai,India    23-01-2010 09:02:50 IST
 வல்லோரும் திருட்டு VCD வாங்கி பாருங்க, தியேட்டர் போகாதீங்க
இந்த பாலபோன சினிமா
வ சீக்கிரம் ஒளிசிறலாம்
 
by k guna,chennai,India    23-01-2010 08:59:51 IST
 ஹி இஸ் தி ரியல் ஜட்ஜ்  
by H முஹமது சிஹாபுதீன் ,USA,United States    23-01-2010 08:45:29 IST
 நல்ல தீர்ப்பு. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தந்தை கோர்ட்க்கு வந்திருக்கிறார். என்னே ஒரு நம்பிக்கை மகன் மீது. கெட்ட அப்பா. 
by P மூர்த்தி,Kualalambur,Malaysia    23-01-2010 08:39:22 IST
 hon judge opi about cinema and pvt channels is correct ,..family ladies in the home get spoiled by the tamiz serial ,.full of vulgar and nudisam or sadist stories or murder,.. divorce ,..death ,..imoral activities kasu kooduthu nammaku ,...idhu venuma ???
comedy time or kamasutra time full of vulgar double meaning dialoques ,,one small incident happend at my friends place couple of weeks back .......we meet often, our close friends family also visited same place for sis wedding in india (about to inform wedding) SAME TIME in one SERIAL ... DEATH SCENE ..nearely 15 min detailed death oppaari .we all upset ....... finally we switched off.... point is most of the ladies where ever they go they want to see the serial ,. they never want to miss
it is happening most of the homes in gulf ( hindhi or tamil , malayalam or telugu ) no barriers ,.. this addiction must go ,.. family issues discussed only during ad time or cooking time rest of the time devoted to pvt tv or cienma issues ,.. me not critisizing all ladies ,...it is like drinking or smoking addiction or worse than that ...
 
by vs athreiya,dubai,United Arab Emirates    23-01-2010 08:35:13 IST
 தமிழக அரசுக்கு மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் மக்கள் வரிப்பணத்தில் சினிமாவிற்கு நீங்கள் கொடுக்கும் சலுகைகளை நிறுத்துங்கள் (தமிழில் பெயர் மட்டும் வைத்தல் போதும் என்பது). ஒரு கமிட்டி அமைத்து தரமான மற்றும் சமுகத்திற்கு தேவையான கருத்துக்கள் உடைய படங்களை மட்டும் தேய்வு செய்து அதற்க்கு மட்டும் சலுகைகளை கொடுத்தால் ஓரளவிற்கு நல்ல படங்கள் வருவதற்க்கான வாய்ப்பு உள்ளது. கவனிக்குமா தமிழக அரசு. 
by sekar,dubai,United Arab Emirates    23-01-2010 08:25:19 IST
 படங்களில் சண்டையா செய்கிறாங்க கொமேடிஎல்ல செய்கிறாங்க. நாங்களும் பாடுபட்டு உழைத்த காசை கொடுத்து அந்த படங்களை பார்த்து அசத்திறாங்கப்பா என்று முட்டாள் ஆகின்றோம். ஆனால் அந்த மாணவரின் தகப்பன் தன் மகனை தீர விசாரித்து நல்ல புத்திமதி சொல்லி இருந்தால். அவருக்கும் பெருமை மாணவருக்கும் பெருமை ஆசிரியருக்கும் பெருமை. அந்த மாணவருக்கு நல்ல எதிர் காலமே வரும். ஆனால் கோட்டுக்கு போய் நீதிபதி, ஆசிரியர், தகப்பன் மாணவன்,என்று ஒவோருவருடைய பொன்னான நேரத்தை வீண்அடிகிரங்க. 
by R INDIRAN,NJ,United States    23-01-2010 07:59:58 IST
 இது போல் நிறைய தீர்ப்புகள் வர வேண்டும். சினிமா மக்களை மிருகங்களாகவும், பேடிகளாகவும், கயவர்களாகவும் மாற்றிவிட்டது , மறுக்க முடியாத உண்மை.  
by N.S Sankaran,Chennai,India    23-01-2010 07:50:51 IST
 நீதிபதியின் கவலை நியாமானதே.சினிமா இன்றைய இளம் தலைமுறையினரை கெடுத்துக்கொண்டு இருக்கின்றது.
பாடல்களுக்கு நடிகைகள் காட்டும் கவர்ச்சி ஒரு ஆபாச படத்தையும் மிஞ்சி விடுகின்றது.சண்டை காட்சி இல்லாத படங்களே வெளிவருவது இல்லை.விஞ்ஞான பூர்வமான படங்கள் வருவதே இல்லை.இது போதாதென்று தமிழில் தனியார் தொலைகாட்சிகளோ நாளுக்கு நாள் ஒன்று புதிதாக முளைத்து கொண்டிருகின்றது.இது மாணவர்களின் நேரத்தை வீனடிகின்றது.மக்களும் வித்தியாசமான படம் எடுத்தால் அதை விரும்பி பார்பதில்லை.போததகொரைக்கு மொபைல் போன்கள் கேட்கவே வேண்டாம்.
ஆக மொத்தத்தில் இந்த டிவியும்,சினிமாவும் நம் கலாசாரதேயே சீரழிகின்றது. 
by s ஜெகத்,chennai,India    23-01-2010 07:26:33 IST
 சினிமா என்பது வணிகம் தான், எல்லா விசயங்களிலும் நல்லது கேட்டது இரண்டுமே உண்டு, அதை நாம் எடுத்து கொள்வதை பொருத்து அதன் விளைவுகள் அமைகிறது. தற்பொழுது தரம் குறைந்த சினமாக்கள் அதிகம் என்பதும் உண்மையையே.  
by S.M ஷேய்க் Maideen,Bangkok,,Thailand    23-01-2010 07:24:29 IST
 நல்ல ஜட்ஜ் மண்ட் அய்யா 
by s chinnaiah,aruppukottai,India    23-01-2010 07:15:12 IST
 ஏன் சினிமா சீரியல் குடும்பத்தின் நிம்மதியை கெடுகின்றன. மாணவர்கள், பெண்கள் சீரியல் பார்த்துகொண்டு படிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மாலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரை குடும்பங்கள் அனனவரும் குடும்பம் பற்றி கவலை இல்லை.  
by v chandra,USA,India    23-01-2010 06:49:43 IST
 இன்றைய தமிழ் சினிமாக்கள் இளைஞர்களை சீரழிக்கின்றன என்பது முற்றிலும் உண்மையான கருத்து தான்.  
by P. karikalan,rasiruram,India    23-01-2010 06:35:58 IST
 Yes the Judge is right! Cinema has major part in affecting the young mind. There are good cinemas coming in all languages but majority are very vulgar and poisoning the young minds.
For eg. the movie aayirathil oruvan has good storyline but the screenplay/dialogues have lots of vulgarity in it. There are many obscene scenes which could have been avoided. The A certificate movies age bar should be rised to above 25. Youngsters age group school kids till 25 are the most affected and their minds are getting corrupted.
These cine people earn crores of rupees, and the industry is full of black money but they show themselves and good persons. Please dont spoil the youngsters of tamilnadu please give majority movies with very less/low vulgarity. 
by Mr Ravi,India Tamilnadu,India    23-01-2010 04:42:42 IST
 good 
by k senthil,trichy,India    23-01-2010 04:12:31 IST
 உயர்திரு நீதியரசர் அவர்களுக்கு வணக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.உங்கள் கவலை தான் சாதரண பொதுஜனதுக்கும்..எனது அனுபவதில் சொல்கிறேன்.என் மகன் வீட்டில் இருந்து அவன் பள்ளிகூடம் சுமார் மூன்று கிலோமீட்டர் துரத்தில் உள்ளது அவன் பள்ளிகூடம். இந்த துரத்தில் வழியில் தென்படும் டாஸ்மாக் கடைகள் மொத்தம் 17 tasmac உள்ளது.

எனது மனைவியின் நச்சரிப்பால் வேற பள்ளிக்கு அதாவது வீட்டு பக்கத்தில் உள்ள பள்ளியில் சேர்த்தோம் அப்போது அங்கே டாஸ்மாக் கடைகள் பள்ளிக்கு பக்கத்தில் இல்லை .சேர்த்த இரண்டு மாதத்திற்குள் அங்கேயும் டாஸ்மாக் மது கடைகள் வந்து விட்டன
போததகுறைக்கு அவன் பள்ளிவகுப்பறையில் இருந்து ஜன்னல் திறந்து பார்த்தல் ..பார்... இருக்கு..அங்கே குடிமகன்கள் அட்டகாசம்..இதுக்கு என்ன சொல்றது? மகன் தன் அம்மாவை பார்க்க
அவள் என்னை பார்க்க..நான் சொல்லிவிட்டேன்..தமிழகத்தில் எங்கே நீ போனாலும் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இல்லை..இப்படி தான் இருக்கும்..பெற்றோர்கள் தான் மதுவின் தீமைகளை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லணும்..ஒரு விழிப்புணர்வு யேர்பாடுதணும்..ரொம்பவும் வேதனை .

வீட்டில் அமர்ந்து குடும்பத்துடன் ஒரு டிவி பார்க்க முடியலை..ஆபாச காட்சிகள் வன்முறை படங்கள் மூட நம்பிக்கை தொடர்கள்..என..எங்கே போக...உங்களை போன்ற நீதிபதிகள் தான் ஏதேனும் செய்யணும்..

அவனை  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    23-01-2010 02:32:30 IST
 சினிமா மற்றும் டிவி ஒழிந்தால்தான் மாணவர்களின் இத்தகைய பிரச்னைகள் ஒழிந்து விடும். சமூகத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கும் காரணம் சினிமாவும் டிவியும் தான்!! தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்!!! சினிமாவால் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை!
சில வீடுகளில் முழு நேரமும் டிவி ஓடிக்கொண்டு இருக்கிறது; குழந்தைகள் முதல் கிழடுகள் வரை, கண்ட கண்றாவிகளையும் ஒன்றாக உட்கார்ந்து பார்த்து நாசமாகிறார்கள்!!!!!!!!!!!! அது சரி, இது யார் மண்டையிலேயாவது ஏறுகிறதா!!!!!!!!!!!!!!! 
by D சரஸ்வதி,Manalappaadi,India    23-01-2010 02:10:30 IST
 சினிமாக்கள் மட்டும் அல்ல. மொபைல் போன்களும் தொலைக்காட்சிகளும் அளவுக்கு மீறின வகையில் இளம் சமுதாயத்தினரையும் குடும்ப அமைப்புகளையும் சீரழித்து வருகிறது.பள்ளி கூடத்தில் மது அருந்திய அந்த மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி தரவே கூடாது.அப்படி தரப்பட்டால் எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் பள்ளி வளாகத்தில் மது அருந்தி விட்டோ அல்லது வேறு ஏதோ தீய வழியில் சென்று கொண்டோ தந்தை உதவியுடன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்வு எழுதி விடலாம் என நினைக்க தோன்றும்.பெரியவர்கள் தத்தம் குழந்தைகளை வளர்க்க வேண்டிய முறையில் வளர்த்து இருந்தால் இதை போன்ற ஒரு நிலை வந்திருக்காது.இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.அந்த மாணவனுக்கு ஒரு வருடம் தேர்வு எழுத தடை விதிக்க வேண்டும்.இந்த வருடமே அவன் தேர்வு எழுதி ஒன்றும் இந்த நாட்டுக்காக கிழித்து விட போவதில்லை.அவனுக்கு தேவையான அறிவுரைகளை VAZHANGI NALVAZHIPADUTHTHA AVANADHU PETRORGAL MUYARCHIKKA வேண்டும்.இது MATRA PETRORGALUKKUM ஒரு MUNNUDHARANAMAAGA அமையும். 
by R RAGAVAN,SALEM,India    23-01-2010 01:06:02 IST
 மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் பொது நமது நாட்டு மக்களுக்கு சினிமாவையும் நிஜ வாழ்க்கைக்கும் பிரித்து பார்க்கும் அறிவு கொஞ்சம் கம்மி தான். அந்த பலவீனத்தை சினிமாகாரன் நன்றாக பயன் படுத்திகொள்கிறான். என்று மக்களுக்கு இந்த பகுத்தறியும் புத்தி வளர்கிறதோ அன்று தான் இந்த தீமை குறையும். சினிமா ஒழியாது, ஒழியவும் கூடாது. ஆனால் சினிமா மாற வேண்டும். அதற்க்கு மக்களும் மாற வேண்டும். அது வரை நீங்களும் நானும் காட்டு கத்து கத்தினாலும் ஒன்னும் நடக்காது.
இந்த சமூக அமைப்பில் உள்ள பலவீனங்களை சினிமாக்காரன் நன்கு அறிந்து வைத்து இருக்கிறான். அதனால் தான் மீண்டும் மீண்டும் அவனால் ஏமாற்ற முடிகிறது.  
by k காளை,miami,United States    23-01-2010 00:39:11 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்