முதல் பக்க செய்திகள் 

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் : முதல்வர் கருணாநிதி விருப்பம்
ஜனவரி 26,2010,00:00  IST

சென்னை : ""இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழும் வரவேண்டும்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம், சென்னை பெரவல்லூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 1938 ம் ஆண்டு முதல், இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து 30 க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த மொழிப்போரில் ஈடுபட்டவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இக்கூட்டம் நடக்கிறது. இதை, கொண்டாட்டம் என கூறக்கூடாது. மொழிப்போர் தியாகிகளை நினைவூட்டும் நாள். எதிர்காலத்தில் தமிழுக்கு எந்தவித எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்கான அடையாளம்.இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல. அதை, நம்மீது திணிக்கும்போது, மறுக்கிறோம்; எதிர்க்கிறோம். கடந்த 1938 ல், ராஜாஜி இந்தியை கட்டாயம் என அறிவித்தார். பின்னர் அவரே, 1965 ல் இந்தியை எதிர்த்தார். இந்தி வந்தால், நாம் இரண்டாவது குடிமகனாக ஆகிவிடுவோம் என்றும் கூறினார். தி.மு.க., 1967 ல் உதயமானபோது, முதல்வர் அண்ணாதுரை மொழிப்போர் தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய தீர்மானம் கொண்டு வந்தார். மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆறுதல் தொடர வேண்டும். இந்தியை, தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, குஜராத் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், ஆட்சிமொழியாக இந்தி, அதையடுத்து ஆங்கிலம் உள்ளது. தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.1986 ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது நானும் அன்பழகனும், அரசியல் சட்டத்தின் ஒருபகுதியை எழுதி கொளுத்தினோம். அதற்காக அன்பழகன் உள்ளிட்ட பத்து எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்பட்டது. நாங்கள் சிங்கத்தமிழர் கூட்டம். நாங்கள் ஆட்சியில் இருப்பது பெரிதல்ல; தமிழ்த் தாயின் சிம்மாசனத்தை பறித்தால், விடமாட்டோம். இந்தியாவில் ஆட்சிமொழியாக, தமிழும் வரவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இவ்வாறு முதல்வர் பேசினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 கலைஞர் DONT OPEN YOUR MOUTH FOR ANYTHING HEREAFTER IN TAMILNADU.WE ARE FEDUP BCAS OF YOU ALREADY..YOU DID SO MANY THINGS FOR TAMILNADU..THAT IS FAR MORE ENOUGH FOR US...TILL YOU DIE, PLS KEEP QUIET...EVERYTHING WILL HAPPEN GOOD IF YOU DONT OPEN YOUR MOUTH.. 
by r shakthi,chennai,India    29-01-2010 20:59:20 IST
 இன்னும் இந்த ஒரு உன்னைய நம்புது ... 
by M பாலா,Singapore,Singapore    29-01-2010 06:30:29 IST
 Everybody must learn hindi to atleast travel within india 
by J Paulraj,chennai,India    29-01-2010 00:52:15 IST
 அனைவருக்கும் வணக்கம். சில பேரின் ஆதங்கம் எனக்கு புரிகிறது . ஒன்றை மட்டும் சொல்ல ஆசைபடுகிறேன் . இந்தியா என்பது சுதந்திரத்திற்கு முன்பு பல நாடுகளாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். சுதந்திரத்திற்கு பிறகு அவற்ற்றை எல்லாம் இணைத்து இந்தியாவை உருவாக்கினார் படேல். இன்னும் கூட பல மாநிலங்கள்( அப்போதைய நாடுகள்) தங்களை தனி நாடு போல நினைத்து கொண்டு ஆறு , ஆணை , கால்வாய் பிரச்சனைகளை எழுப்புகின்றன. சட்டங்கள் இயற்டுகின்றன. உதாரணம் ..கேரளா , கர்நாடகா , மும்பை(தாக்கரே) .
பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் உள்ளபொழுது , சில நூறு ஆண்டுகள் வயதுடைய ஹிந்தியை திணிப்பது எந்த வகையில் நியாயம். தமிழை போல சில பழமை வாய்ந்த மொழிகளும் இந்தியாவில் உள்ளன.
இந்தியை அனுமதிததினால் மகாராஷ்ட்ராவில் நடப்பதை பாருங்கள் . மும்பையின் அடையாளம் எங்கே ? மராட்டி மொழியின் அடையாளம் எங்கே ? அது மாதிரியான ஒரு அவலம் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. இந்திய ஒருமை பாட்டை காக்க இந்தியை விருப்ப படுகிறவர்கள் கற்கலாம். ஆனால் திணிப்பதை ஏற்கமுடியாது.
நன்றி  
by Mike,Muscat,Oman    27-01-2010 15:58:29 IST
 மிகுந்த வசதி படைத்தவர்கள், லஞ்ச ஊழல் பணத்தில் நித்தம் பிணம் தின்னும் கழுகளைப்போல சுற்றிவரும் அரசு அலுவலர்கள் (நேர்மையாக செயல்படுபவர்கள் நீங்கலாக) இவர்களுடைய பிள்ளைகளுக்குத் தான் ஹிந்தி போன்ற மாற்று மொழிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஹிந்தியை அரசு பள்ளிகளில் ஒரு பாடமாக மாற்றும் வரை ஏழை எளியவர்களுக்கு ''''ஹிந்தி'''' என்பது கானல் நீர்தான்.

தமிழக மக்களின் சாபக் கேடு திமுக ஆட்சி. 
by V பாபு வெங்கடராமன்,Atlanta,United States    27-01-2010 12:37:44 IST
 எந்த மொழியை படிப்பது என்பது அவர் அவர் விருப்பம். கற்பது ஒன்றும் குற்றம் அல்ல. அதே சமயம் தமிழ் மொழியை மறவாதீர்கள். உலகம் இப்போது மிக சுருங்கிவிட்டது... தமிழ் மக்கள் மட்டும் இவ்வுலகில் வாழவில்லை.. தமிழி போற்றுவோம் ... அதே சமயம் மற்ற மொழிகளையும் மதிப்போம்.. தமிழை மட்டும் தெரிந்திறுந்தால் , தமிழ் வளராது... இன்று தமிழன் உலகில் எல்லா இடமும் பரவிஉள்ளான்... மற்ற மொழியும் தெரிந்ததனால் தான்,.. இன்று தமிழன் தமிழை உலகிலுள்ள அனைவரும் நோக்க செய்துள்ளான்.. ஆஸ்கார் பெற்றதன் மூலமாக...
நம் மொழி வளர நாம் நம் மொழியை முழுவதும் கற்று,... பிற மொழியையும் கற்று, அதன் மூலம் பிற மொழி மக்களிடமும் கற்பிப்போம்... ஒரு பந்தை சுவரில் எறிந்தால், அது திரும்ப நம்மிடம் எந்த வேகத்தில் நாம் எறிந்தொமோ,... அடே வேகத்தில் திரும்ப வரும். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தான் பிள்ளை தானே வளரும்... இப்பொன்மொழி தமிழில் தான் உள்ளது.... 
by T Arulneethithevan,Birmingham,United Kingdom    27-01-2010 09:14:30 IST
 ஹிந்தி தேசிய் மொழி அல்ல குஜராத் உயர்நீதி மன்ற தீர்ப்பு
மொழிக்கு எதிரி அல்ல
உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீனா
உலகில்
வாழ சீனா மொழி வேண்டுமா அதை போலத்தான் ஹிந்தியும்
ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும் அந்நிய மொழிகளே விருப்பபடுபவர்கள் மற்றும் தேவைபடுபவர்கள் கற்றுக்கொள்ளட்டும். ஹிந்தி திணிப்பையும் ஹிந்தி படிப்பத்யும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்  
by balu,vellore,India    27-01-2010 06:53:44 IST
 மகாகவி பாரதி, கவிஞர் கண்ணதாசன் இவர்களை விட சிறந்த தமிழ் புலமை பெற்றவர்கள் தமிழ் நாட்டில் எவரும் இல்லை. இவர்கள் இருவர்க்குமே ஹிந்தி நன்றாக தெரியும். அதனால் தான், ''''யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதனதேங்கும் காணோம்'''' என்று பாரதி பாடினார். ''''மொழி வெறுப்பு, விழி இழப்பு'''' என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார். இந்தியாவில், தமிழனுக்கு மட்டும் தான் இந்தி தெரியாது. இந்த சூழல் இந்த தலைமுறையிலாவது மாற வேண்டும். தமிழை செம்மொழியாக்க வேண்டும், ஆக்கி விட்டோம் என்று பெருமை பீத்திக்கொல்கிரர்கள். தமிழ் செம்மொழியான அடுத்த வாரமே தெலுங்கும், கன்னடவும் செம்மொழி என்று அறிவித்து விட்டார்கள். தமிழுக்கு என்ன
தனிப்பெருமை கிடைத்துவிட்டது. தமிழ் மொழி பெயரை சொல்லி, தமிழனை அடக்கி வைக்கும் முயற்ச்சியை தான் அரசியல்வாதிகள் செய்கிறார்கள். மொழிப்பெருமையை நிலை நாட்ட, இதே அரசியல் வாதிகள் அவர்களின் குடும்ப தொலைக்கட்சிகள் மூலம் நல்ல தமிழை உலகம் முழுக்க பரப்பலாமே. செய்வார்களா ? ஊருக்குத்தான் உபதேசம்.
மத்திய அரசில் உள்ள உயர் அரசுப் பதவிகளில் முக்கால் வாசிபேர் கேரளக்காரர்கள் தான். யோசித்துப்பாருங்கள் காரணம் புரியும். 
by M Krish,WA, USA,India    27-01-2010 00:39:53 IST
 இங்கு பல பேர் ஹிந்திக்கு ஆதரவாகவும் சில பேர் தேவைபட்டால் படித்துக்கொள்ளலாம் என்றும் கருத்து பதிவு செய்துள்ளீர்கள்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அல்லது சீனா போவோமோ என்று யாரும் பிரெஞ்சு அல்லது சீனா மொழி படிப்பது கிடையாது. அப்படியே படித்தாலும் அவர்களில் எத்தனை பேருக்கு பிரான்ஸ் அல்லது சீனாவில் வேலை கிடைக்கிறது? மிகவும் கம்மி தான். ஆனால் தமிழை மட்டும் கற்றால், இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் வேலை தேடுவது கடினம்(முடியாது என்பது கிடையாது). அதுவே பல தமிழனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்து விடுகிறது. ஹிந்தி தேசிய மொழி கிடையாது தான். ஆனாலும் அதை பள்ளியில் கற்றுக்கொடுத்தால் தவறில்லையே?

இங்கே (அமெரிக்காவில்) தமிழர்களை மற்ற மாநிலத்துகாரர்கள் சாதாரண GET-TOGETHER-க்கு அழைப்பு அனுப்ப மாட்டார்கள் (பெரிய பார்ட்டிகளுக்கு அழைப்பு இருக்கும்). காரணம் நாம் அங்கு சென்றால் அவர்கள் English-லேயே பேசவேண்டுமே என்று. இதனால் தமிழன் நாடு கடந்து வந்த பிறகும் தனிமை படுத்தப்பட்டு கிடக்கிறான். இந்த வேதனையை எங்கு போய் சொல்ல? 
by Mr ஸ்ரீராம்,Atlanta,United States    27-01-2010 00:11:36 IST
 Hindi is central government''''s official language, but not national language. Few fellow citizens here are refering hindi as national language, which it totally wrong. People pls., correct yourself, before you comment in public. I normally don''''t advice, but this is very important to ignore. Because repeating false statement will get into the mind of new generation and they may start believe that hindi is our national language. 
by A லூயி,Riverside,United States    27-01-2010 00:01:45 IST
 மலேசியாவிலே ஒரு நேபால்காரன் ஒரு இந்தியனை ( தமிழன்) கேட்கிறான், எனக்கு ஹிந்தி தெரியுது..இந்தியாவில் இருக்குற உனக்கு ஏன் தெரியலைன்னு? நம்ம தமிழ் நாட்டுல த்மிழ் முக்கியம்தான். ஆனா எங்களை போல வெளிநாட்டுல வேலை செய்யுற ஏழைகளுக்கு ?  
by அம்முகுட்டி ,malaysia,India    26-01-2010 23:18:30 IST
 கல் தோன்றி மண் தோன்றா காலத்தே கனத்த புகழோடு தோன்றியது எம்மொழி .....

ஹிந்தியில் இன்ஜினியரிங் பயில வாய்ப்புள்ளது ஆனால் இது வரை எந்த கண்டுபிடிப்பும் வந்ததாக தெரியவில்லை ...
இன்ஜினியரிங் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் ... இது நடந்தால் ௧௨ வரை தமிழில் புரிந்து படித்து நல்ல மதிப்பெண் வங்கி அண்ணா பல்கலைக் கழகம் போன்ற தலை சிறந்த கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம் கண்டு அஞ்சி நசுக்கப்படும் மாணவர்களே பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருப்பார்கள் ....

தமிழில் இன்ஜினியரிங் மற்றும் பட்ட மேற்படிப்புகள் வரும் பட்சத்தில் நமது சாதனைகளை கண்டு தமிழ் நிச்சயம் ஆட்சி மொழியாக்கப்படும் ....


 
by R Kannan,chennai,India    26-01-2010 22:42:29 IST
 ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்... இன்று தெலுங்கான பிரச்சனை காரணமாகவும் கர்நாடகா வின் அரசியல் வன்முறைகள் காரணமாகவும், புனே, பாம்பே இல் ஏற்படுகின்ற பிரிவினை வாத பிரச்சினைகளினாலும், கொல்கத்தாவின் நக்சல் பிரச்சினைகளினாலும் அனைத்து தொழில் வளர்ச்சிகளும் தமிழகத்துக்கு வருகிறது...

இங்கே ஹிந்தி வந்து இருந்தால் அனைவரும் இங்கே வேலை தேடி படை எடுப்பார்கள்.... அவர்கள் ஆளுமை ஓங்கி இருக்கும்..

இன்றோ நிலைமை நம் பக்கம்... நம் வேலை பறிபோகாது... 
by பிரபு இராமசாமி ,New Jersy,United States    26-01-2010 22:11:44 IST
 Hindi is not a national language. There is no such language called ''''National Language'''' in India. Hindi is spoken in state of UP, which is a state in Union India. How does one state language will become National language for rest of the country? Please understand this before you put your comments 
by N Srinivasan,Madurai,India    26-01-2010 21:42:59 IST
 முதலில் தமிழனை முன்னேற வழிவிடு பிறகு தமிழை முன்னேற்றலாம்

நன்றி
 
by Nallappan,singapore,India    26-01-2010 19:54:26 IST
 ஆட்சியை கவிலப்போவதின் அறிகுறி தான் இந்த பேச்சு.

இல்லையென்றால் கருணாநிதிக்கு இப்படிப் பேச தைரியம் வராது.

இப்பொழுது ஆட்சி கவிழ்ந்துவிட்டால், தமிழுக்காக தமிழ் மக்களுக்காக ஆட்சியை இழப்பதில் நான் கவலைப்படவில்லை என்று சொல்லிவிடுவார்.
 
by DR Bashkaran,Bangalore,India    26-01-2010 19:34:14 IST
 தலைவா நீங்க நம்ம நாட்டு தேசிய மொழியை தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பாடுபடுகிறீர்கள் . ஆனால் வேற நாட்டு மொழி இங்கிலீஷ் பேசாமல் ஹோட்டல் பீல்டில் எங்க பொழப்பே ஓடாது . என்ன பண்ணுவது ? 
by D SREETHAR,SURANDAI. TIRUNELVELI,India    26-01-2010 19:27:40 IST
 இந்தியன பிறந்து ஹிந்தி பேச தெரியாமல் இருப்பது மிஹவும் கேவலமா உள்ளது. தமிழ் நாட்டில் எல்லாரும் ஹிந்தி பேச வேண்டும்.  
by KAVITHA,como,Italy    26-01-2010 19:21:46 IST
 தமிள்ளுக்கு நீ இதத்ஹனை வருடமா என்ன கிழிச்ச .போஒய் கவிதை எழுதற வேலையை பாரு  
by anniyan,kammankudi,India    26-01-2010 19:06:53 IST
 என் இனிய தமிழ் மக்களே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் ஹிந்தியை ''''படிக்காதே'''' என்று அண்ணாவும் சொல்லவில்லை கலைஞரும் சொல்லவில்லை ''''திணிக்காதே'''' என்றுதான் சொல்கிறார்கள் இதற்கு உண்மையான அர்த்தம் புரிந்தவர்கள் இப்படி புலம்ப மாட்டார்கள். சரி உங்கள் புலம்பலுக்கே வருகிறேன் மொழியை கற்றுக்கொள்வது உங்கள் கையில் உள்ளது. மனது வைத்தால் ஒரு மாதத்தில் எந்த மொழியையும் உங்களால் கற்க முடியும். அதனால் இந்த ஒரு மாத பிரச்சனைக்காக ஈராயிரம் ஆண்டு பழமையான மொழிக்காக குரல் கொடுக்கும் தமிழனை விமர்சித்தால் தமிழ் அன்னை உங்களை மன்னிக்க மாட்டாள். உங்களுடைய கூற்றுபடியே ஹிந்தி படிக்காத மாநிலமான தமிழ் நாடு மற்ற மற்ற இந்திய மாநிலங்களை விட எந்த வகையிலும் குறைந்து போகவில்லை மாறாக முன்மாதிரியான மாநிலமாக உள்ளதே எல்லா துறையிலும் எப்படி நண்பர்களே?? இது உணர்த்துமே நம் பெருமையை........அதனால் உங்களுக்கு தேவை என்றால் எதையும் கற்றுக்கொள்ளுங்கள் யாரும் உங்களை தடுக்கவில்லை  
by S SURESHKUMAR,LONDON,United Kingdom    26-01-2010 18:59:02 IST
 Simple concept . All over other part of india ( except Tamilnadu) people know Hindi. Another thing is each states (except hindi is their mother tongue) has their own mother tongue like us Tamil. They also speak with them in their mother tongue and talk to other parts of india in Hindi. This Hindi is using as linking other parts of people in india. If we are not able to talk some common language with in india then how we can show our feeling with others even though you talk in english. This is the practical problem. If you want to show your mother tongue you talk and write so many literature or doing phd in it and talk with our regional people like other states. If you argue that One of the state language is argued to be there as national level then every states has feeling that their language is also superior than other language. this question will come into picture. Even for our computer we need some interpreter that links different language to machine undertandable language. Its also same in this case. Some A person knows ''''X'''' Langauge and B Person knows ''''Y'''' langauage. C Person Knows ''''Z'''' Language. Take one language is to be common to talk each of them. Let us take Z is the common language then every of them can talk and convey their feelings. Here also the same situation.  
by Krishnan,Chennai,India    26-01-2010 18:22:32 IST
 திரு பழனிவேல் நாகர்கோயில் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
நன்றி திரு பழனிவேல் அவர்களே.
எத்தனை முறை இது சம்பந்தமான கட்டுரைகள் வந்தாலும் இந்த பிரச்சினக்கு நீங்கள் சொல்வது ஒன்றே சரியான பதில்.
சரியான கருத்தை தெரிவித்த உங்களுக்கு நன்றி.
செந்தில். 
by S செந்தில் ,India,India    26-01-2010 18:11:39 IST
 காங்கிரசை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட அப்போது ஹிந்தி எதிர்ப்பு உதவியது.
பேரனுக்கு மந்திரி பதவி கிடைக்க ஹிந்தி உதவுகிறது என்று பெருமையாக தம்பட்டம் அடித்துகொள்ளும் தாத்தா.
இவர்கள் கொள்கைதான் என்ன? 
by K JEEVITHAN,villupuram,India    26-01-2010 17:30:21 IST
 Riswan is 100% correct.....
 
by EP Yasothan,Duabi,United Arab Emirates    26-01-2010 17:04:33 IST
 தமிழனே...தூங்கியது போதும் எழுந்திடு,வெறும் கவிதையும்,வசனதயும் வைத்து இத்தனை வருடங்கள் ஏமாற்றவும் ,ஏமாறவும் தமிழனால் மட்டுமே முடியும்.நம் தாய்நாட்டின் மற்ற மாநிலங்கள் நாடோடு ஒத்து வாழ்ந்து ,முன்னேறி கொண்டுயிருகொம்போது ,நாம் மட்டும் ஏன் இப்படி ? tamizhai மனதுக்குள் வைத்து போற்று ,மற்ற மொழிகளையும் கற்று ( முக்கியமாக ஹிந்தி,இங்கிலீஷ் ) உன்னையும் , உன்னை நம்பி யிருபோரையும் காப்பாற்றினால் ,தமிழ்நாடும் தாய்நாடும் தானாக முன்னரும் .(அப்படித்தானே திரு. Karunanadhiyum ,அவருது குடும்பமும் வளர்ந்தது ...........வளர்ந்து கொண்டே இருகிறது) ...
விழித்திடு தமிழனே ....ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்று போழைத்திடு . 
by Jag,Sydney,Australia    26-01-2010 16:01:27 IST
 சும்மா எதனா பேசுனம் ன்னு பேசாத தலிவரே! இன்னா பெசுனுமோ அத்த வெவரமா பேசு.
ஹிந்தி படிப்பதால தேசிய ஒருமை பாடு கெடைக்கும்னு நான் நெனைக்கிறேன், ஹிந்தி தெரிஞ்சுகிரதால தமிழ் ஒன்னும் அழிஞ்சு போயிடாது.
மேதெள்ள உன் ஊட்ல உள்ள ஆளுங்கள தமிழ் படிக்க சொல்லு. ஊன் ஊட்ல உள்ளவங்க மட்டும் ஹிந்தி படிக்கலாம் நாங்க படிக்க கூடாதா?
நன்றி - தில்லாலங்கடி (தமிழ் பற்று அதிகம் உள்ளவன்)  
by தில்லாலங்கடி ,தில்லையாடி,India    26-01-2010 14:45:45 IST
 முதலில் ஹிந்தியை தேசிய மொழி என்று சொல்பவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து தூக்கில் மாட்ட வேண்டும். அட அறிவிலிகளா! ஒரு வக்கீலிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நமக்கு தேசிய மொழி என்று ஒன்று உண்டா என்று. ஹிந்தி ஒரு ஆட்சி மொழி - அவ்வளவே! முதலில் இங்கிலீஷ் கற்று நீங்கள் என்ன கிழித்தீர்கள்? வாடா நாட்டிலிருந்து தமிழ் நாடு வரும் ர்வாடிகள் என்ன தமிழ் கற்று கற்று கொண்ட இங்கு சென்னையில் வட்டி கடை நடத்துகிறார்கள்? தேவை எருபடும் பொது மட்டும் ஒரு மொழியை கற்றால் போதும் இல்லை என்றல் தேவை இல்லை. ஹிந்தி கற்க சொல்லும் மடையர்களே, ஒரு வேலை நீங்கள் பிரான்ஸ் செல்ல வேண்டி வந்தால் என்று யோசித்து சிறு வயதிலேயே பிரெஞ்சு கற்று கொள்வீர்களா? இல்லை சீனா போக வேண்டும் என்று சீனா மொழி கற்று கொள்வீர்களா? நான் சொல்லும் இந்த இரண்டு நாடுகளிலும் இங்கிலீஷ் அந்த அளவிற்கு செல்லாது. கொஞ்சம் மூளை என்று ஒன்று இருந்தால் யோசியுங்கள். தேவை ஏற்படும் பொது மட்டும் தேவை ஏற்படும் மொழி கற்றால் போதும். தாய் மொழி எப்போதும் எழுத படிக்க கற்று கொள்ள வேண்டும். அதை புறக்கணித்தால் நம் தாயை நாமே வீதியில் தூக்கி வீசியதற்கு சமம். முட்டாள்கள் சிந்திக்கட்டும்.  
by பழனிவேல்,nagarcoil,India    26-01-2010 14:07:52 IST
 ரிஸ்வான் ஒரு உண்மையான முட்டாள் என்பது தெரிகிறது. உனக்கு ஹிந்தி தெரிஞ்சா அங்க இருக்க.  
by G paul,Norway,Norway    26-01-2010 13:38:27 IST
 அன்றைய மதிய அரசு எப்படி ஹிந்தி யை தமிழர் மீது திணித்து என்று இன்று பல பேர்களுக்கு theriyave இல்லை.ஹிந்தி மொழி மட்டும் இல்லை எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் தமிழர்களே..உங்கள் வருமானத்துக்கு எந்த மொழி அவசியமோ அந்த மொழியை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அரசாங்கத்தை குறை கூற கூடாது muthalil இதை உணருங்கள்.அண்ணா மற்றும் கருணாநிதி ஹிந்தி யை எதிர்த்த காரணம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி vaalntha makkal மீது அரசியல் காரனுதுக்காக வேறு மொழியை திணிக்க முற்பட்டது தான்.இயற்கையாக ஒரு மொழி பேசும் மக்கள் மீது செயற்கையாக வேறு மொழிய thinipatharkku யாருக்கு அதிகாரம் இருக்கு? 
by s karthik,doha,Qatar    26-01-2010 13:38:17 IST
 நண்பர்களே,

இன்று குடியரசு தின விழாவில், நாம் எல்லோரும் ஒரு சபதம் ஏற்போம். நம் பிள்ளைகளையாவது ஹிந்தி படிக்க வைப்போம்..

கருணா மாதிரி கேடுகெட்ட அரசியல் வாதியை நம்ப வேண்டாம்...

இப்படிக்கு,

ஹிந்தி பேச தெரியாமல் திணறும் இந்தியன். 
by s சுரேஷ்,spain,India    26-01-2010 13:36:40 IST
 விஜய்,சிங்கப்பூர்

அவர்களே எனக்கு உண்மையிலே Hindhi கத்துகிட்ட அப்புறம் தான் நல்ல வேலை கெடைச்சிது, Engineering முடிச்சிட்டு தங்க தமிழ் பேசி திரிந்ததால DTP, BOP, Call center இங்கதான் வேல கெடைக்குது , நான் வடநாடு போய்தான் Engineer ஆக வேலை பார்த்தேன் இப்போ அயல் நாடுல நல்ல வேலைல இருக்கேன்,
இதுதான் நிஜம்.

Electrical Engineering, படிச்சிட்டு எத்தன பேரு அதே துறையில வேலே செய்றாங்க தெரியுமா 95 % software Engineer - நம்ம சென்னைல---- தெரியுமா உங்களுக்கு?
மீதி 5% என்னை மாதிரி வெளில போனாதான் படிச்ச துறைல வேலை கெடைக்கும்.  
by E A தனசேகரன்,palermo,Italy    26-01-2010 13:32:24 IST
 ஹிந்தி உள்ள மாநிலங்களை விட தமிழ்நாடு நல்லதான் முன்னேறி இருக்கிறது, அய்யா உங்கள்ளுக்கு வேணும்ன்னா ஹிந்தி இல்ல உருது, மைதிலி, நேபாளி னு எந்த மொழி வேனும்னல்லும் கத்துக்கூங்க,ஆனா ''''கல்தோன்றி முன்தொன்ற மொழி ஆனா நம் தாய் மொழியை மட்டும் மறந்திடாதிங்க''''  
by R Nathan,Tirunelveli,Saudi Arabia    26-01-2010 13:15:41 IST
 போதும் இந்த தமிழ் மக்களை ஏமாற்றுவது ...ஹிந்தி தெரியாமல் வட மாநிலங்களுக்கு ரயில் பயணம் செய்து பாருங்கள் ..அப்புறம் தெரியும் எவ்வளவு அவமானம் என்று ...அரசியல்வாதிகள் எப்பொழுதும் அரசியல்வியாதிகள் ...தமிழா நீ நன்றாக தூங்கும் வரை நிறைய வசனங்கள் வந்து கொண்டிருக்கும்...தமிழனை முன்னேறவிடாமல் காப்பாற்றும் மிக பெரிய அரசியல்வாதி ..தமிழினதலைவருக்கு எப்படித்தான் நன்றி சொல்வதென்று தெரியவில்லை..அடுத்த தலைமுறை குழந்தைகளாவது நல வழி வளர வழி விடுங்கள் ........ 
by N VM,Uganda,India    26-01-2010 13:06:34 IST
 அ.வே. செந்தில்குமார்,ஜெட்டாஹ், சவுதிஅரேபியா

ஹிந்தி தேசிய மொழி இல்லை.இந்தியாவுக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. 
by வே.முத்து ராமன் ,manama,Bahrain    26-01-2010 12:43:35 IST
 annatha senthil inna karekeeta sonnaba

jayaprakash  
by s jayaprakash,DUBAI,United Arab Emirates    26-01-2010 12:40:31 IST
 இந்தியை ஆதரிக்கும் கனவான்களே!
அந்த வெறியர்கள் 1965 ஜன 1 முதல். இந்தி மட்டுமே எல்லா அரசு வேலைத் தேர்வுகள், அரசாங்க கோப்புகள் கோர்ட் நடைமுறைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழோ ஆங்கிலமோ பயன்படுத்தக்கூடாது என சட்டம் கொண்டுவந்தனர்.
நாம் போராடியிருககாவிட்டால், தமிழக அரசு வேலைகளிலும் உ பி, பீகார்க் காரர்களே இருந்திருப்பார்.
நீங்களும் நாங்களும் பாட்னா, லக்னௌ, காசியில் பிச்சை எடுத்திருப்போம் அல்லது கூலி வேலை செய்துகொண்டிருப்போம். ஏன் இந்த கணினியையே கண்ணால் பார்த்திருக்க மாட்டோம்.
எவ்வளவு விளக்கினாலும் நம் மக்களுக்கு புரிய வில்லையே.
இந்திக் காரர்களின் அடிமைகளாக இருப்பதில் அத்தனை சந்தோசம் போலும்.
(பின் குறிப்பு. நான் தமிழ் வெறியனல்ல. எனக்கு இந்தி நன்றாகப் பேசத் தெரியும்) 
by V மணி ,Chennai,India    26-01-2010 12:39:05 IST
 by m shaikfareeth,tirupur,
இன்றைக்கு இந்தியா முழுவதும் ஹிந்தி தெரிந்தவர்கள் மட்டும் நன்றாக வாழ்கிறார்களே என்று எழுதியிருக்கிறீர்களே.
இந்தி நன்றாகத் தெரிந்த பீகார், ஜார்கண்ட், சட்டிஸ்கார், உ பி மாநிலத்தவர்தான் ,நம் சென்னை மாநகரத்தில் கட்டிடக்கூலிகளாக, சாக்கடைப் பணியாளர்களாக ஏன் பிச்சை எடுப்பவர்களாக உள்ளனர்.இந்தி தெரியாத கூலிகளையே காணோம்!
100 க்கும் 200 க்கும் மாநிலம் விட்டு மாநிலம் ஓடி வருகின்றனர்!
அங்கு இந்தி மட்டுமே படித்தால் போதும். பட்டதாரி ஆகிவிடலாம்!
ஆனால் இந்தியால் அவர்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை?
ஆனால் ஏன் பெரும் சம்பளம் தரும் கம்பியூட்டர் , தொழில்நுட்ப நிறுவனங்களில் தென்னிந்தியரே 90 % வேலை செய்கின்றனர் !
infosys, TCS, HCL,மற்றும் Cognizant போன்ற நாட்டின் மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்களில் தமிழரே தலைவர்களாக / உரிமையாளர்களாக உள்ளனர்!
நல்ல வேளை , கட்டாய இந்தி திணிக்கப் பட்டிருந்தால் நமது நிலையும் மேற்சொன்ன கூலி ஆட்களைப் போலவே ஆயிருக்குமோ என்னவோ! 
by V மணி,Chennai,India    26-01-2010 12:28:40 IST
 if all the [dozens] of languages become
official language, what will the country achive except choas\confusion!official work will have to be done in so many languages!is
it practical!instead of these vote catching stunts, please concentrate in developing tamil in our state and let children including these politicians children learn ''''KURAL'''',ATHICHUDI'''',
''''KONDRAI VENTHAN'''' and moral tamil stories instead of ''''TWINKLE TWINKLE LITTLE STAR'''' in LKG''''
ippadi pesi pesiye tamilnadu have remained ''''backward'''' !moral standard in public life has become verylow!
s.natarajan 
by s natarajan,chennai,India    26-01-2010 12:15:33 IST
 சில உண்மைகள் :-
1 . ஹிந்தி இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழி . ஆனால் பெரும்பலனவேர்களின் மொழி அல்ல 2 . நான்கு மாநிலங்களில் மட்டுமே தாய் மொழி ஹிந்தி .
3 . மற்ற மாநிலங்களில் அவர்களுக்கென்று தனி தாய் மொழி உள்ளது. பஞ்சாபி, குஜராத்தி, மார்வார்,
பிஹாரி,ஓடியா( ஒரிசா) , பெங்காலி, மராத்தி மற்றும் பிற .
4 . தென் மாநிலகளில் திராவிட மொழிகளான தெலுகு, கன்னட, மலையாளம் மற்றும் தமிழ்.
5 . ஆனால் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் ஹிந்தியை எற்றுக்கொண்டு மூன்றாவது மொழியாக
கற்பிக்கபடுகிறது.
6 . இதனால் அவர்கள் தத்தமது அடையாளங்களை இழந்து விட்டார்கள் கேரளாவை தவிர.
7 . ஆனால் ஹிந்தியை ஏற்றுகொல்லாமலே தமிழகம் தனது அடையாளத்தை இழந்து விட்டது.
பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்து பேசி.......???!!!@@@###
8 . ஹிந்தி கற்றுக்கொண்டால் தேசிய நீரோட்டத்தில் கலந்துகொள்ளலாம் .
9 . மேலும் ஒரு மொழியை கற்றுகொள்வது தவறில்லை , ஆனால் உங்கள் அடையாளங்களை
இழந்துவிடாதீர்கள் . பொங்கலை மறந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறோம்.
10 அரசியலை கண்டுகொள்ளாமல் செயல்பட பாருங்கள்.அரசியல் வேறு நடைமுறை வேறு.

 
by p nanbhan,Bahrain,India    26-01-2010 12:13:38 IST
 இதெல்லாம் ஊமை கனா கண்டது போலதான் . 
by m shaikfareeth,tirupur,India    26-01-2010 10:24:49 IST
 இன்றைக்கு இந்தியா முழுவதும் ஹிந்தி தெரிந்தவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலங்களிலும் ஹிந்தி பேசுவதால் அவர்களின் மொழி அழிந்துவிட்டதா தமிழனை மட்டும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் விட்ட துரோகி திமுகதான் ஹிந்தி மட்டும் தெரிந்திருந்தால் தமிழ்நாடு எப்போதோ முன்னேறியிருக்கும். இதே கருணாநிதியின் குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி கற்றுக்கொண்டு தொழிலில் கொடிகட்டி பறப்பதை பார்த்தாவது நாம் அனைவரும் கட்டாயம் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். 
by m shaikfareeth,tirupur,India    26-01-2010 10:18:08 IST
 ரொம்ப தான் ஆசை!!!! முதல்ல தமிழ் நாட்டுல எல்லோரையும் தமிழ் பேச வையுங்க. அது போதும்.  
by j rajaguru,Doha,Qatar    26-01-2010 09:53:21 IST
 அண்ணா எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட ''''சோபா செட்டையே: வேண்டாமென்று மறுத்தவர்.  
by a ஸ்டான்லி ,cbe,India    26-01-2010 09:48:59 IST
 மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும் பன்னாட்டு அவைகளின் அலுவல் மொழியாகவும் தமிழ் விளங்கத் தமிழக அரசு முனைப்புடன் முயல வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் தமிழ் உணமையான ஆட்சிமொழியாக விளங்கவும் கல்வி மொழி, சமய மொழி,என்பன போன்று தமிழ் நாட்டில் தமிழே தலைமையாக விளங்கவும் தமிழர்களுக்கு முதன்மை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி பெரிதல்ல என்று பேசினால் நம்பகத் தன்மை போய்விடும். மயிலை மாங்கொல்லையில் இது போல் பேசிய பின்புதான் பதவி நாற்காலிகளில் பசையுடன் ஒட்டிக் கொண்டதால் ஈழத் தமிழர்களின் பேரவலப் படுகொலைகள் நடந்தேறியதை யாரும் மறக்க மாட்டார்கள்.எனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு உரிய தலைமையிடம் உடனடியாக அளித்து விட்டு மத்திய அரசிலும் தமிழுக்குச் சமஉரிமை பெற்றுத் தர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
 
by I. Thiruvalluvan,Chennai,India    26-01-2010 09:48:47 IST
 ஆட்சியில் பங்கு கேட்க இத்தனை நேரம் எடுத்து கொள்ளவில்லை அனால் ஆட்சி மொழியில் பங்கு கேட்க????????? இன்னும் எத்தனை நாட்கள் இந்த நாடகம் தொடரமோ????? தமிழர்களை ஏமாற்றாதீர்!!!!!!!!!!!!!!!1 
by S Sankar,Singapore,India    26-01-2010 08:58:38 IST
 போதாதற்கு இனிமேல் வீடு கட்ட தனி தொகை வேறு. நல்லவர்களை மட்டும்
காலன் விரைவில் எடுத்துக்கொள்கிறான்.
 
by C Kuppusamy,Chennai,India    26-01-2010 08:49:43 IST
 ஆமாம் தமிழ் செம்மொழி ஆகி விட்டால் தமிழ் நாடு முழுவதும் தேனாறும் பாலாறும் ஓடும். முதலில் மக்களை இலவசம் என்ற மாயையிலிருந்து விடுவித்து உழைத்து வாழ கற்று கொடுப்பது என்று? கேட்டால் மக்களின் கண்ணீரை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தேன் அல்லது கவிதை எழுதினேன் என்பது விடிவு காலம் வர வைக்கும் வழி அல்ல. முதிர்ந்த தலைவர் ஆக உள்ள கலைஞர் அவர்கள் மீனை கையில் koduppathai விட்டு விட்டு மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் இந்த அப்பாவி ஜனங்களுக்கு  
by b karthik,RJPM,India    26-01-2010 08:34:55 IST
 ஆங்கிலம் மட்டும் ஆட்சிமொழியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனை கிடையாது.. இந்தி வரப்ப மற்ற மொழிகளுக்கும் கேட்பதில் தவறில்லையே...
தமிழ் அட்சிமொழியா இருந்தா சோறு கிடைக்குமான்னு கேக்குறாங்க, இந்தி ஆட்சி மொழியா இருக்குறப்ப கிடைக்குதா ? இல்லல்ல அப்பறம் தமிழும் இருந்துட்டு போகட்டுமே.

தமிழ் நாட்டு தமிழனும் இந்தியன்தான் தமிழும் எந்த விதத்திலும் இந்திக்கு குறைந்ததல்ல. ஒரு சாரார் மொழிக்கு மட்டும் ஆட்சியில் அதிகாரம் கொடுத்துவிட்டு மற்றவன் மொழிகளை மதிக்கவில்லை என்றால் இதுக்கு பேர் சனநாயகமா ? 
by t விஜய்,singapore,Singapore    26-01-2010 08:32:50 IST
 மக்களே!, தமிழ் ஆட்சி மொழி ஆனால் எல்லா மக்களுக்கும் உண்ண சோறு, உடுத்த உடை, இருக்க இடம் கிடைக்குமா??? கர்நாடகாவில் மாநில வெறியர்கள் உண்டு. கேரளாவிலும் உண்டு. அவர்கள் மொழியை வைத்து அரசியல் செய்வதில்லை. அவர்கள் தன் மாநில மக்களுக்காக போராட விதிக்கு வருகிறார்கள். உண்மையான உண்ண விரதம் இருக்கிறார்கள்.
இங்கே எல்லாம் நடிப்பு. நல்லு கோடி மக்களிடம் இருந்து புடுங்கி ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு கொடுத்து ஆட்சி நடத்துகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு மாதம் மாதம் நல்ல வருமானம் அதாவது உதியம் பெறுகின்ற திட்டங்கள். சாதாரண மக்களுக்கு ஒரு தடவை டிவி , அடுப்பு கொடுத்து (?) வா யை அடைத்து விடுகிறார்கள்.  
by M ஸ்ரீதர்,Erode,India    26-01-2010 07:19:37 IST
 The unwanted multi-party rule (coalition) came into existence because of Rajaji.Due to personal anger on congress/kamaraj he joined with divisive forces and created the so called ''''Koottani'''' which we are not able to reverse now. Being brahmin DMK was personally attacking Rajaji. When the ''''Koottani'''' came to power they started praising him. NOw they are quoting Rajaji for HIndi. If tamil should be the official language then all languages should become. In India amil nadu is not the only state and Tamilians only are not indians. Atleast now congress/BJP/Communist should try for single party rule 
by t veera,india,India    26-01-2010 05:44:30 IST
  உங்கமாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு கிடையாது.  
by E ஸ்ரீகாந்த்,singapore,Singapore    26-01-2010 05:34:59 IST
 நல்ல ஜோக்  
by R இரா. இராகவன் ,Kingston ,Jamaica    26-01-2010 04:18:46 IST
 DMK central Ministers are not telling these in cabinet meetings but MK crying outside. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire)    26-01-2010 03:41:16 IST
 மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல் தமிழ் நாட்டில் தமிழ் உண்மையிலேயே ஆட்சி மொழியாகச் செயற்படுத்தப்பட வேண்டும். அவரவர் சிமமாசனம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் தமிழ்த்தாயின் சிம்மாசனத்தை நாமே பறிப்பதை நிறுத்த வேண்டும். உதட்டில் தமிழ் ஆட்சியும் உள்ளத்தில் குடும்ப ஆட்சியும் பண ஆட்சியும் இல்லாமல் என்றும் எங்கும் தமிழே ஆட்சிபுரிய வேண்டும். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வெற்றி காணா விட்டால் வேறுயார்தான் வெற்றி காண்பர் என்பதை உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
by I. Thiruvalluvan,chennai,India    26-01-2010 02:48:57 IST
 அய்யா, நீங்கள் என்னதான் நினைவில் இருகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. நம் தேசிய மொழியை எதிர்த்தான் மூலம் என்ன சாதித்தோம். பலரும் இன்று அவமானபடுகிறோம், காரணம் தேசிய மொழி தெரியாமல். பலரும் நம் நாட்டின் பல பகுதிக்கும் செல்லமுடிவதில்லை. இந்தியானோடு இந்தியன் ஆங்கிலத்தில் பேசும் துர்பாக்கியநிலைக்கு கொண்டுவந்தது யார்? அனைவரும் தேசிய மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்ற சட்டம் வேண்டும்.

எங்களை போன்று வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு இது புரியும், நம் நாட்டில் வாழும் தினமலர் வாசகர்களும், மக்களும் வரும் சந்ததியை கட்டாயம் தேசிய மொழி கற்பிப்போம் என்று எந்த நன்னாளில் உறுதியேற்போம்.......! 
by அ.வே. செந்தில்குமார்,ஜெட்டாஹ், சவுதிஅரேபியா ,Saudi Arabia    26-01-2010 01:43:49 IST
 ஆமாம் ஆமாம்..தமிழ் ஆட்சி மொழியாக வரட்டும் வாழ்த்துக்கள்..

உங்களால் ஒரு இந்திய தமிழன் வெளி நாட்டில் ஹிந்தி தெரியாமல் படும் அவஸ்தை உங்களுக்கு எங்கே தெரியபோகிறது..தமிழகத்தை விட்டு எல்லாஇந்திய மாநிலகாரனும்,ஹிந்தி பேசறான் ஒரு தமிழனிடம் மற்ற இந்திய மாநிலத்தவன் ஆங்கிலத்தில் பேசறான்..மற்ற இந்திய மொழிகளில் பேசபடுவதை..கேட்டு தமிழனிடம் ஆங்கிலத்தில் மொழி பெயர்பதும் ஒரு இந்தியன் தான்.அதை வருத்ததுடன் கேட்பதும் ஒரு இந்திய தமிழன் தான்.

உங்கள் குடும்பம் மகன்,மகள்,பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் ஹிந்தி பேசலாம் ஹிந்தி படிக்கலாம்..தமிழ்நாட்டில் உள்ள மற்றவன் பேசகூடாது..இப்படி உசுபேற்றி இந்திய தமிழனை சாகடித்து மொழிபோர் தியாகிகள் விழா எடுகிரிர்.

ஆமாம் நீங்கள் சிங்க கூட்டம் தான் இலங்கையில் தமிழர்கள் கொன்ற போது வேடிக்கை பார்த்த சிங்க கூட்டம் தான் உங்கள் கூட்டம்.
சிங்களன் தமிழனை தேடி தேடி கொன்ற போது அரைமணி நேரம் உண்ணாவிரதம்
இருந்ததும் இந்த சிங்க(?)கூட்டம் தான்.

நீங்கள் ஆட்சியில் இருப்பது பெரிதல்ல என சொல்கிறிர்கள் அப்படி இருக்கும் போது இடை தேர்தலில் ஜனநாயகத்தை நம்பாமல் பணத்தை தருவது ஏன்? உங்கள் ஆட்சியில் நடந்த இந்த அவலங்களை,மனதில் வைத்து தான் நேற்று நடந்த தேர்தல் கமிசன் விழாவில் பல தலைவர்கள் பேசி உள்ளார்கள்..என்பதை மறந்திட வேணாம்...  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    26-01-2010 01:41:10 IST
 புண்ணாக்கு ! இப்படி தமிழ் தமிழ்னு பேசியே போங்கு அடிங்கப்பா ! உங்க வூட்டாண்டை எருமை கன்னுக்குட்டி கூட ஹிந்தி / இங்கிலீஷ் படிச்சு நல்லா கீதுங்க ! குஜராட்டை காட்டுறியே இன்னா? கட்சி கிட்சி மாரிகீனு கிரியா? நீ நல்லா பாவ்லா காட்றியே வாத்யாரே!  
by cv கூலி ,world,India    26-01-2010 01:34:48 IST
 இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி யாரையும் எந்த மொழியையும் படிக்க சந்தர்பம் தராம..தமிழன் மட்டும்தான்(உம்ம மகன் மகள் பேரன் பேத்தி இவுகள தவிர) எந்த மாநிலத்துக்கோ வெளிநாட்டுக்கோ போய் படர கஷ்டத்த என்னான்னு சொல்ல?
உன் தமிழ் பற்று போதும்யா..உம்மோட பதவி ''''பெரிதல்ல'''' என்கிற ''''நகைச்சுவை'''' காமெடி வசனமும் போதும்யா...
தமிழுக்காக முப்பது பேர்வரை உயிர் நீத்தாங்க... சரிதான்.. நீர் என்னதான் செய்தீர்?
ஒரே வசனம் அதே வசனம் ''''போர்'''' அடிக்குதையா..கொஞ்சம் அப்பாவி தமிழனையும் வாழ விடுயா.. பாவம் தமிழன். மத்த மாநிலத்தவர்கள் குறைந்தது மூன்று மொழியாவதும் பேச..நம்ம தமிழ் மக்கள் மட்டும் ஒரே மொழியாம் உம்மால் ''''கிர்'''' ஏத்திவிடும் தமிழைமட்டும் படித்துவிட்டு படும் அவஸ்த்தையும் போதும்யா.. போதும்.. தாங்கமுடியல..போய் வேறு மேடை கிடைக்கும் போய் வேறு வசனம் பேசி உம்ம குடும்பத்த மட்டும் முன்னேத்தர வழிய பாருமா.. ரொம்ப ''''சந்தோசம்''''..யப்பா இன்னும் எத்தன நாளைக்குதான் கண்ண கட்டுமோ.. 
by P சேகர்,SINGAPORE,Singapore    26-01-2010 00:53:43 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்