முதல் பக்க செய்திகள் 

கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில்
பிப்ரவரி 03,2010,00:00  IST

Front page news and headlines today

செஞ்சி : செஞ்சியில் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ள இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என கோரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.இந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் பேரழிவை சந்தித்தன.இதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது.ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன.ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.சீத்தாராமர் கோவிலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன. 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடக்காமல் இருந்த காலத்திலும், இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும், சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்தது.இந்த கோவிலில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் செய்தனர்.இப்பிரச்னை தொடர்பாக செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இரண்டு முறை சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.இதில் கிறிஸ்தவர்கள் தரப்பில் 1878ல் திண்டிவனம் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆதாரமாக காட்டி உள்ளனர்.இந்த பத்திரத்தில் கோதண்டராமர் கோவில் உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை மயிலம் தேவஸ்தான ஆதினம் பரம்பரை தர்ம கர்த்தா சிவக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு யெப்டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியுள்ளார்.இதே பத்திரத்தில் மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என குறிப்பிட்டிருப்பதாக இந்துக்கள் தரப்பில் கூறுகின்றனர். பத்திரப் பதிவின் போது மடத்தினர் இந்த சொத்தை கிரயம் பெற்றதற்கான மூலப்பத்திரமும், கோவில் நிலத்தை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட டிரஸ்டி பத்திரமும் இணைத்து வழங்கியதாக கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் இந்த இரண்டு பத்திரத்தையும் கிறிஸ்தவர்கள் தரப்பில் சமாதானக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்திற்கு சமீபத்தில் எடுத்த வில்லங்க சான்றிதழில், 1878ல் நடந்த கிரயத்தை தவிர வேறு சொத்து பாரிமாற்றம் நடக்கவில்லை. இதற்கிடையே கோவில் இடத்திற்கான பட்டா காண்டியார் என்பவர் மீது மாற்றப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த நிலையில் இருந்த கோதண்டராமர் கோவிலை மீண்டும் கட்ட 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை உருவாக்கி கோவில் கட்டுவதற்கான வேலைகளை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் நேற்று முன்தினம் கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை நடக்க உள்ள சமாதானக் கூட்டத்தில் எடுக்க உள்ள முடிவிற்காக இரண்டு தரப்பினரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.கோவில் இடத்தை காட்டும் எழுத்துக்களை அழித்துள்ளதாக புகார் : அரசு வரைபடத்தில் கோதண்டராமர் கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆலய அறக்கட்டளை தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை நிறுவி கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ரங்கராமானுஜதாசர் கூறியதாவது:தாலுகா அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்துள்ள கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்தின் மூலப்பத்திரமும், டிரஸ்டி பத்திரமும் கேட்டு தாசில்தாரிடம் மனு செய்தும் இதுவரை சமர்ப்பிக்க வில்லை. இந்த பத்திரங்கள் கிடைத்தால் தான் கோவிலை விற்பனை செய்யும் உரிமை விற்பனை செய்தவருக்கு உள்ளதா என்பது தெளிவாகும். இதில் டிரஸ்டிகளாக இருந்தவர்கள் விவரமும் தெரியவரும்.கிரயத்திற்கு பிறகு இன்றைய நாள் வரை எந்த சொத்து பரிமாற்றமும் நடக்காத நிலையில் எந்த அடிப்படையில் காண்டியார் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என கேட்டு கடந்த மாதம் 4ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால், இதுவரையில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வில்லை.அரசிடம் உள்ள நிலத்தின் வரைபடத்தில், கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் வகையில் இருந்த எழுத்துக்களை சமீபத்தில் வெள்ளை மை கொண்டு அழித்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 மதத்தை காக்க புறப்பட்ட மதிவாணரே, மதம் என்ற போர்வையில் குளிர் காயாமல் மனிதன் என்ற விழிப்புணர்வில் சிந்தயுங்கள், நாளைய உணவுக்கு என்ன வழி என்பதை சிந்தித்து பாருங்கள். இறை வழிபாடு நம் மனதில் மட்டும் இருந்தால் போதும். மற்றவர்களை தூண்டி விடுதலோ, மற்றவர்கள் மனதை புன்படுதுதலோ இறை வழிபாடல்ல. இறைவன் எல்லோருக்கும் சொந்தம். இடத்திற்காக இறைவனை பிரித்து விடாதிர்கள். இறைவன் வருத்தபடுவான். ஒரு வேளை சோற்றுகு கஷ்டப்படும் ஏழை தொழிலாளியை கவனித்து பாருங்கள், அவன் எந்த கடவுளுக்காக அடித்து கொள்கிறான். மதம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? (வெறி) கடவுள் என்றால் நல்வழி. உலகத்தில் நம் நாடு மிகவும் நல்ல நாடு. அதிலும் தமிழ் நாடு மிகவும் நல்ல நாடு. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இடம் முக்கியம் அல்ல, மனிதநேயம் முக்கியம். வாழ்க தமிழ் வளர்க இந்தியா............... 
by DEVA இம்மானுவேல்,saudi arabia riyadh,India    07-02-2010 04:10:29 IST
 One good solution in My mind, Dear Officers, please implemtn this rule immediately.

Demolish all the temples, Mosque, Church like BABRI MASJID in India. Pray in their house. No Protests.  
by a abdul kader ,dubai ,United Arab Emirates    06-02-2010 15:41:29 IST
 இந்த இடத்தை அரசே எடுத்துகொல்லட்டும். எந்த பிரச்னையும் வராது. 
by S John,Mannargudi,India    06-02-2010 13:12:47 IST
 இது போன்ற பிரச்சனை வரும் போது அரசாங்கம் அந்த இடத்தை கையகப்படுத்த வேண்டும் அல்லது தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப் படவேண்டும் .
இது செஞ்சி கோயிலுக்கு மட்டுமல்ல அய்யோதி மாதிரி பிரச்சனைகளுக்கும் இதையே தான் தீர்வாகக வேண்டும்.

ஒரு மசூதி இருந்த இடத்தில் தாஜ்மஹால் இருந்திருந்தால் இடித்திருப்பார்களா? யோசிக்க வேண்டும் .
அது மட்டுமல்ல .வரையறுக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை பின்பற்றும் பட்சத்தில் யாரும், எந்த கோவிலுக்கும் / மசூதிக்கும் / தேவாலயத்திற்கும் அனுமதிக்கப் படுகின்ற நிலை உருவாக வேண்டும்.  
by NH Prasad,Chennai,India    06-02-2010 11:46:33 IST
 அன்று மனிதனுக்காக மதக்கள் உருவாக்கப்பட்டன ஆனால் இன்று மதங்களுக்க மனிதன் உருவகபடுகிரன்.
அன்பான மனிதர்களே சிந்தியுக்கள். தாய் தான் நம் கோவில்......
தந்தை தான் நம் தெய்வம்............
நண்பர்களே.. நாம் அனைவரும் இந்தியர்கள்... உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்காமல்.. ஆக்கபூர்வமாக..முடிவெடுப்போம்... இந்த விஷயத்தில்.. சில மிருகங்கள் நுழைந்து.. நமக்குள் சண்டை மூட்டி.. ஆதாயம் தேடலாம்... நாம் விழிப்புடன்,,இருப்போம் .. இந்தியனாக 
by Tmilan,Batam,Indonesia    04-02-2010 13:17:13 IST
 Where is my comment it is discrimination immediately get rid of
cartoon philip from your concern 
by A Malik,Chennai,India    04-02-2010 10:39:34 IST
 கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஓர் வேண்டுகோள். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்று சொல்லும் நீங்கள் ஒரு மதத்தை சேர்ந்த கடவுளை இன்னொரு மதத்தினர் கடவுளாக ஒத்துக்கொள்வதில்லை. ஏன்? உண்மையில் இது கடவுள் சம்மந்தப்பட்டது அல்ல. அங்கிருக்கும் பெரிய மனிதர்கள் என்று சொல்லுபவர்கள் துண்டிவிடுவதால் வரும் பிரச்சனயேயாகும். அங்கிருக்கும் கோயிலை அந்ததந்த மதத்தினர் அவர்களது கடவுளாக நினைத்து வழிபடலாமே! எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று பேசினால் மட்டும் போதாது அதன்படி நடந்துகொள்ள வேண்டும். எல்லா இடத்திலும் இருக்கும் கடவுள் சக மனிதர்களிடமும் இருக்க மாட்டாரா என்ன? அவர்களை மதியுங்கள். மனமிருந்தால் வணங்கலாம்.  
by r r,trichy,India    04-02-2010 06:25:02 IST
 அன்புள்ள எனது இந்திய சகோதரர்களுக்கு...எந்தவித பிரித்தாளும்,பிரிவினைவாத சூழ்ச்சிகளுக்கு யாரும் பழியாகிவிடவேண்டாம்.ஜாதி மத குப்பைவிசயங்களை எரித்துவிட்டு,நம்மைச்சுற்றியுள்ள உலகநாடுகளையும்,அதன் வளர்ச்சியையும் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்துங்கள் நம் பணம் சுவிட்சர்லாந்தில்,மனம் மதத்தில், குணம் சாதிவெறியில் என்று இப்படியே சென்றோம் என்றால்,நாம் அடுத்த கிரகத்தில்கூட வல்லரசாக முடியாது.அரசியல்வாதிகளுக்கு பொருளாதார ரீதியான வேலை வைக்க வேண்டுமே ஒழிய,சமூக ரீதியான சிந்தனையில் அவர்களை ஆழ்த்திவிடக்கூடாது.மற்ற நாடுகளில் உள்ள ராட்ஷச இயற்க்கை சீற்றங்கள் நம் நாட்டில் இல்லை கடுகு அளவு சுனாமிதான் நம்மை தாக்கியது,அதே நம்மால் தாங்கமுடியவில்லை இதேயல்லாம் மறந்துவிடவேண்டாம்.தமிழனாய் இருப்பதில் சந்தோசம் கொள்வோம்,மாநிலத்தை நேசிப்போம்.இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம்,நம் நாட்டை போற்றுவோம்,காப்போம். மனிதனாய் இருப்பதில், உறுதிகொள்வோம்,மதம் தவிர்த்து, மனம் இணைவோம்.இப்படிக்கு,வளர்ந்த நாடுகளுக்கு இணையாக எனது இந்திய மக்களும் அனைத்து பொருளாதார ரீதியாக வாழ்க்கை வசதியினை பெற்று வாழ்வதினை பார்க்கத்துடிக்கும் ஒரு சராசரி இந்தியன்.  
by J Rajamohamed,Riyadh,Saudi Arabia    04-02-2010 00:12:00 IST
 there is lot of problems 2 commend nd fight,y v r still fighting 4 religions.whn are we going to fight for humanity,,,, 
by d doma,abudhabi,United Arab Emirates    03-02-2010 23:19:09 IST
 Dear Readers

Dont fight each other, verify the documents then give judgements as per docuemtns.

People should unite not divide for Small issue.  
by A ABDUL KADER ,DUBAI ,United Arab Emirates    03-02-2010 23:17:09 IST
 நிலைமை என்ன?ஏதென்று தெரியாமல் வாசகர்கள் மோதிக்கொண்ட நேரத்தில் ''''நல்ல எடுத்துக்காட்டைச் சொல்லி சமரசம் செய்ய வந்துள்ள பேராசிரியை D. சரஸ்வதி அவர்களை'''' வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்...! 
by va.me salahdeen,dubai,United Arab Emirates    03-02-2010 22:12:31 IST
 சகோதர்களே தயவு செய்து இன்னொரு மத போர் நடக்க வழி வகுக்காதீர்கள் .


 
by a caby,doha,India    03-02-2010 21:55:34 IST
 என்ன நண்பர்களே, நானும் செய்தியை, உங்கள் கருத்துக்களை படித்தேன்.
உண்மை நிலை என்ன என்று தெரியாமலே, ஏதோ பேசுவது தவறு! அந்த படத்தை மறுபடியும் கவனியுங்கள்; அந்த கோயில் கேட்பாரற்று இருப்பதாகவே தோன்றுகிறது! அந்த இயற்கைவெளியில் ஜம்மென்று செழித்து வளர்ந்திருக்கும் அந்த இரட்டை பனைமரங்களை கவனித்தீர்களா?! ஜாதி மத பேதமின்றி தன்னிடம் வருவோர்க்கெல்லாம்

தங்கள் ''''ஓலை, நுங்கு, பழம், கிழங்கு... '''' என, வேறு எந்த கைமாறும் எதிர்பார்க்காமல், மனித இனத்திற்கு சேவை செய்யவே காத்திருக்கும் அந்த இயற்கை செல்வங்களை பார்த்தாவது, நாம் அனைவரும் இயற்கை அன்னை பெற்ற ஒரே மனித குலம் என்பதை உணருங்கள்! ஜாதி மதமெல்லாம் சில மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உணருங்கள்!!!
ஒரு கல்லூரி பேராசிரியை இதைதவிர வேறு என்ன கூறமுடியும்?!! 
by D சரஸ்வதி ,Manalappaadi,India    03-02-2010 20:58:08 IST
 மதம் என்ற பெயரால் மனிதன் அழிகிறான். மதம் என்பது நம்மை நல்வழி படுத்தத்தான்.சண்டை போடுவதற்காக அல்ல .தயவு செய்து பழைமையை அழிக்காதிர்கள். உங்களது நிலை இன்று வேறு .ஆனால் இது நமது முன்னோர்களின் நம்பிக்கை

 
by வீ .பார்த்திபன் ,doha,Qatar    03-02-2010 20:43:12 IST
 thennagathil oru ayothiya???? vendam iyya.

eduvum yaarukkum sontham illai enbadai mudallil purindhu kollungal. Naam intha poovulagil, thayin vayitril irundhu varum podhu enna kondu vanthom endru sattru ninaithu parungal. Pogumpodum enna kondu pogapogirom endrum ninaithu parungal. Ondrum illai. Idaiyil en indha adee thadee ellam. Intha prabanjam enpathu, sagala jeevarasigalukkum sontha manadhu. Yaarum adhai pangu poda mudiyathu. Neengal unmayeeleye ethavathu seiyavendum endru ninaithal. Intha poovulagil piranthathin payanaga oru maram nattu vaiyungal. indru illai endralum varungalathil athu ungal perai sollum. athuvey intha pirabanjam puthuyir pera sirantha valiyagum. seiveera?? 
by TR Vijay,chennai,India    03-02-2010 19:53:56 IST
 நண்பர்களே.. நாம் அனைவரும் இந்தியர்கள்... உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்காமல்.. ஆக்கபூர்வமாக..முடிவெடுப்போம்... இந்த விஷயத்தில்.. சில மிருகங்கள் நுழைந்து.. நமக்குள் சண்டை மூட்டி.. ஆதாயம் தேடலாம்... நாம் விழிப்புடன்,,இருப்போம் .. இந்தியனாக...  
by K Abbas,pollachi,India    03-02-2010 19:32:36 IST
 ஹலோ முட்டாள் வாசகர்களே, தினமலரே,

இந்த விளையாட்டு எங்கள் அய்யா ராமதாஸ் விளையாடுவது. இதில் கிறிஸ்தவம் இல்லை இந்துசம் இல்லை வன்னியரிசம் தான் உண்டு.
இரண்டு பட்டக்களுக்கும சொந்தம் வன்னிய இனத்தை கெடுக்கும் இரு கும்பல். இந்த லட்சனதுல வாசகர் கருத்தாம் த்ஹூ.
தினமலர் விளையாட்டும் கூட  
by A Dhasan,Aachen,Germany    03-02-2010 19:22:50 IST
 நண்பர்களே இவ் விசயத்தில் உணர்ச்சிபூர்வமாக யோசிக்காமல் உணர்வுபூர்வமாக யோசிப்பது நல்லது . கிறிஸ்துவ மதமோ அல்லது முஸ்லிம் மதமோ அம்மதத்திற்கு மாறியது நமது சகோதர்களே என்பதை உணர்ந்து செயல்படுங்கள் பேசுங்கள் . நதிகள் பலவவினும் சேரும் கடல் ஒன்றே என்பதை உணருங்கள் இரு மதத்தினரிடையே சிறு பிரச்சனை என்றாலும் அதை தன் சுய லாபத்திற்காக பயன்படுத்தும் சில அரசியல் கழுகுகள் காத்துகொண்டு இருகின்றன  
by A Ismail,Madurai,India    03-02-2010 18:50:58 IST
 இங்கு கருத்து சொல்லும் அனைவருக்கும் ஒரு மதகலவரத்தை தூண்டும் எண்ணம் இருக்கிறது..ஒன்று மட்டும் சொல்கிறேன் ,
இதில் கருத்து சொன்ன எவருக்குமே அங்கெ நடப்பது என்ன என்பது தெரியாது.
சகோதர்களே வார்த்தைகளை வீணாக விட்டு விடாதிர்கள் ,
அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்
இந்திய நலம் காப்போம்  
by s முனுசாமி,chennai,India    03-02-2010 18:37:54 IST
 பண்டைய காலத்தில் கோவில்கள் பக்தி மார்கமாக கட்டினார்கள்
ஆனால் தற்போது மத வெறியோடு சாமி கும்பிட்டாலும் இயற்கை மதத்தை பார்ப்பது இல்லை எனவே உள்ளது உள்ளபட்டி விட்டுவிடுவது உத்தமம்
மிகவும் தொன்மை வாய்ந்தது நம் இந்து மதம் இடை காலத்தில் வரும் சோதனைகள் இவை மதநல்லிணக்கம் தேவை அணைத்து கடவுள்களும் தேவை அந்தந்த இடத்தில அது பெத்லஹெம் ஜெருசலேம் ஆகா கடவுள் எல்லாம் ஒன்றே மனித மனம் தான் தற்காப்புக்காக வெறியோடு திரிகிறது எந்த கடவுளும் இதை விரும்புவதில்லை  
by s ராஜசேகரன்,chennai ,India    03-02-2010 18:21:39 IST
 Neruppu eppathan suduthoooooooo....  
by A Mansoor,Dubai,United Arab Emirates    03-02-2010 18:09:40 IST
 அன்புள்ள சகோதரனே சகோதரியே,நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் தான்,இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, சமாதானமாக இருக்கும் மக்களிடம் பிரச்சனை உண்டு பண்ணுகிறார்கள்..இதன் மூலம் ஆதாயம் அடைய போவது நம்மில் யாரும் இல்லை ஏன் இப்படி நாம் கோப பட வேண்டும்...நாம் யாரும் இப்படி அடித்து கொள்ளாமல் இருப்பது தான் நமக்கு நல்லது!!!எல்லாம் தேர்தல் செய்யும் லீலைகள்..பொறுமையை இருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை ஆரம்பித்தது போலவே அடங்கி விடும்!!! 
by g பாபு,abuhalifa,Kuwait    03-02-2010 18:01:30 IST
 அடப்பாவிகளா! பாபர் மசூதி பிரச்சனையால் நாம் இழந்தது போதாதா!அந்த இழப்பை ஈடு கட்டவே நூறு வருஷம் பத்தாது.
ஏன் இந்த நவீன யுகத்தில் மத வெறி பிடித்து அலைகிறீர்கள்.
வெளிப்பார்வைக்கு மாமா-மச்சான் என்று பழகும் நீங்கள்,உள்ளத்தில் ஏன் இந்த மதவெறி?
மதக்கலவரத்தால் அப்பாவி உயிர் இழப்பான்.
அரசியல்வாதி கடை விரித்து காசு பார்ப்பான்.
தயவுசெய்து இன்னொரு டிசம்பர் 6 நாடு தாங்காது.
மதவெறியை விட்டு,சமாதானமாக,சகோதரர்களாக வாழுங்கள்.
வாழ்க இந்திய ஒருமைப்பாடு!
வளர்க சகோதரத்துவம்-மனிதநேயம்!
 
by M Jumma Sait,Tamilnadu- Sivakasi,Maldives    03-02-2010 17:45:07 IST
 கருணயே உருவான யேசு நாதர் சாந்தசொரூபி ராம பிரான் இருவரும் மிக அமைதியாக அருள் மழை பொழிகின்றார்கள், உண்மையான் கிறிஸ்தவனும் ஹிந்துவும் அதில் திழைத்து ஆனந்தம் அடைகின்றனர்.
விட்டில் பூச்சிகள் தாமாகவே அழிந்து விடுகின்றன. உப்பிட்ட மண்பாண்டமும் உவகையற்ற மனமும் தட்டாமல் முட்டாமல் தாமே கெடும். எத்தனை வாசகர்கள் தமது கருத்துக்களை மணியாக அள்ளி தந்துள்ளார்கள். வாழீ.! மனசு வலிக்கின்றது இறைவன் மீது பக்தி செய்யணும் மனித நேயமுடன் அனைவரையும் அணைத்து மனிதராக இந்தியனாக வாழ்வோம். துன்பம் செய்பவர்களை மறந்து மன்னித்து விடுவோம்.
அனைத்து மத குருக்களின் கருத்து இதுவாக இருக்கும். 
by அந்தோனி ராமன் ,chennai,India    03-02-2010 17:45:06 IST
 இந்து-கோவில், கிறிஸ்து-சர்ச் மற்றும் இஸ்லாம்-பள்ளிவாசல் இப்படி பல வகையான மதங்களும் தோன்றியது மனிதனின் மதத்தை (கோபத்தை) அடக்கி பக்குவப்படுத்தவே தோன்றின. தயவு செய்து மதத்தின் பெயரில் சண்டை போடுவதும் அதை அரசியலாகி அதில் குளிர் காய்வதையும் விட்டொழித்து. நல்ல மனிதனாக நல்ல நண்பர்களாக வாழ பழகிக்கொள்வோமாக என் அருமை இந்தியர்களே!  
by P Sangeethkumar,Lubumbashi,Congo (Zaire)    03-02-2010 17:43:18 IST
 3000 years before there is no religion, there is only humans, fighting for food.
a Million years before there is no human, there was only animals, fighting for food.
Much much earlier, there is no living thing in the earth.
Before that there is no earth even.

But present living thing in the hole prapancham is human; they are more advanced and lucky ones.
you can not live simply like this anywhere in the prapancham, or finding another
earth like one is very difficult, so live happily with full extend without any
religion/country barriers makkalaay.

We are fighting for small peace of land .......?.
In India, with in religion there are lot of divisions(by place, by cast birth etc) .
When living with these many religions very tough, but we are living together, we are able to
manage all these years.

Seeing the earth from space, even osama or obama or kuppan or suppan feel shame about all this.
we have got a beautiful earth, our life spane is very small and short, live happily my fellow makkalaay. 
by M Samy,Kuwait,India    03-02-2010 17:40:39 IST
 இந்துக்களுக்கு அறிவும் இல்லை ஒர்ற்றுமையும் இல்லை .எப்போது ஜாதிய வுணர்வை விட்டு நம்முடைய மதம் என்று நாடு முழுவதும் ஒன்று படுவோமோ அப்போது தான் இதுவெல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.அங்க தட்டினா இங்க வலிக்கணும் என சினிமா டயலாக் மாதிரி எல்லாரும் ஒரு முடிவு எடுங்க.இல்லாட்டி அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து கருத்துக்களை வலியுறுத்துங்கள் .அதுக்கல்லாம் நேரம் ஏது?என நினைபவர்கள் இப்படி கமெண்ட் எழுதி மனசை தேத்திக்க வேண்டியதுதான். 
by ஸ்ரீ ram,chennai,India    03-02-2010 17:38:29 IST
 Non sense .... there are so many issues to write ....guys i am happy that i could see so many moderates in TN . This is the reason we are dying in thousands . Let us keep it that way .. live in peace and prosper and give a good future for our children . Stop these nonsense and tlak about price rise, traffic problem, law and order issues , edication so on and so forth . 
by S இந்தியன்,London,India    03-02-2010 17:37:44 IST
 நமக்கு கிறிஸ்தவரிடம் கல்வி வேண்டும், நாகரிகம் வேண்டும், அறிவியல் கண்டுபிடுப்புகள் வேண்டும், அமெரிக்க வில் படிக்கவேண்டும், அவன் விண்கலத்தில் பயணம் செய்து பெருமை அடைய வேண்டும், நோபெல் பரிசு ஆஸ்கார் பதக்கம் வேண்டும், மேற்கத்திய போர் விமானங்கள் வேண்டும், அன்னை தெரசா வேண்டும் அமெரிக்காவில் கவர்னர் பதவி வேண்டும். ஆனால் அவர்கள் மட்டும் சிறு துரும்பு கேட்டாலும் கொடுக்க மாட்டோம். ஏனென்றால் நாங்கள் இந்துக்கள் இந்திய நமக்கு மட்டும் தான் சொந்தம் - இன verian 
by a இன வெறியன் ,chennai,India    03-02-2010 16:38:43 IST
 ஒரு காலத்தில் 12 - ஆம் நூற்றாண்டில் அணைத்து சமணர் (ஜைனர் ) கோயில்கள் பக்தி movement என்ற பெயரில் ஆக்ரமிக்கப்பட்டு ஹிந்து கோயில்களாக மாற்றப்பட்டது; 8- ஆம் நூற்றாண்டு வரையில் நேமிநாதர் கோயிலாக இருந்த திருப்பதி, பிறகு வெங்கடாசலம் கோயிலாக மாற்றப்பட்டது;  
by Mr ராஜ்,Chennai,India    03-02-2010 16:35:32 IST
 what they are going to do the temple? how dare they to say a hindu temple belongs to them. 
by K நாதன்,chennai,India    03-02-2010 16:34:54 IST
 கிறிஸ்தவர்கள் இப்படி பண்ணுவது என்னால் நம்ம முடியவில்லை. என்ன டாகுமென்ட்ஸ் இருந்தாலும் பரவாயில்லை, கிறிஸ்தவர்கள் விட்டு கொடுத்து விடுங்கள். நான் ஒரு முஸ்லிம் தான் . ஆனால் கிறிஸ்தவங்க மேல நம்பிக்கை இருக்கு அவர்கள் விட்டு கொடுத்து விடுவார்கள்.
 
by A AZIZ,Chennai,India    03-02-2010 15:34:44 IST
 இந்தியாவில் இருக்கிற கோவில்கள் போதாதா? புதிதாய் பிரச்சினைகள் உண்டாக கோவில்கள் காரணமாக இருக்ககூடாது. இரு பக்கமும் பிரச்னை பெரிதாக்காமல் தீர்த்துக்கொள்ள வேண்டும் . 
by G Divaharan,Tirunelveli,India    03-02-2010 15:06:04 IST
 As a christian, I would that christians should give up that land and the temple. Its a simple sensible action to have harmoney in the society.  
by A Jeevan,Norway,Norway    03-02-2010 14:46:23 IST
 if god krishna, jesus meet each other, they can sacrifice everything they have..only us as a brainless human never understand about GOD. 
by A NAndakumar,au,India    03-02-2010 13:45:50 IST
 They are not christian. We don''t fight for any Hindu''s property and we don''t need any of their property. Let it be hindus temple. Pls forgive them. God says that we ourselves are temple of god and He living inside our heart. Please leave that temple issue and try to be a good christian. God bless you all. Thanks. By a christian from nilgiris. 
by d samuel,ooty,India    03-02-2010 13:37:33 IST
 படத்தில் உள்ளது பூஜை புனஸ்காரம் நடக்கிற கோவில் மாதிரி தெரியவில்லையே. எப்படியாவது இந்த கோவிலையும் அதை சார்ந்த இடங்களையும் அபகரிப்பவர்களின் கூப்பாடாகவே உள்ளது.  
by j rajaguru,Doha,Qatar    03-02-2010 13:15:56 IST
 என்னய்யா இது கொடுமை! இந்திய மக்கள் திருந்தவே மாட்டார்களா!
உண்மையில் சில நுற்றண்டுகளுக்குமுன் இந்து மதம், மட்டுமே இந்தியாவில் இருந்தது என்பதும், பிறகு முகலாயர் படையெடுப்பால் முஸ்லிம், ஆங்கிலேயர்கள் படையெடுப்பால், இத்தாலிய, போர்ச்சுகீசிய வணிகத்தால்,
கிறிஸ்தவ மதம் இந்தியாவில் நுழைந்தது என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை!! மத மாற்றத்தை தடுக்க வேண்டும். இந்த கலாட்டாவிற்கெல்லாம் காரணம் யார்? திமுக & கருணாநிதி கோஷ்டிதான்!!
கருணாநிதியை ஒழிக்க வேண்டும்!!!
ஜெயலலிதா அம்மா மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்!!!!!!!  
by T Madhioli,CRETE,Greece    03-02-2010 13:08:02 IST
 நண்பர்களே.. நாம் அனைவரும் இந்தியர்கள்... உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்காமல்.. ஆக்கபூர்வமாக..முடிவெடுப்போம்... இந்த விஷயத்தில்.. சில மிருகங்கள் நுழைந்து.. நமக்குள் சண்டை மூட்டி.. ஆதாயம் தேடலாம்... நாம் விழிப்புடன்,,இருப்போம் .. இந்தியனாக...  
by S Zainul,jubail,Saudi Arabia    03-02-2010 12:54:28 IST
 600 ஆண்டு பழமையான பாபரி மசூதியை எந்த ஆதாரமும் காட்டாமல் துவேசம் மட்டும் நாக்கில் வைத்து இடித்து கோவில் கட்டியபோது எங்கே போனது இந்த நியாய உணர்வுகள். தெய்வம் நின்று கொல்லும். ஆனால் சரியாக இருக்கும்.  
by a அரசன்,chennai,India    03-02-2010 12:43:12 IST
 இந்த சம்பவம் என்னை அதிர்ச்சி அடைய செய்தது. இப்படிப்பட்ட சர்ச்சைகளால் கர்நாடகம், குஜராத், ஒரிசா மாநிலத்தில் இருக்கும் நிலைமை இப்பொழுது தமிழ் நாட்டிலும் வந்துவிடும் அபாயம் தெரிகிறது.
தனக்கு உரியதை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்பதுதான் கிறிஸ்தவம் உணர்த்தும் தலையாய கோட்பாடு. எனவே கிறிஸ்தவ தலைவர்கள் இந்த மனுவை நிராகரித்து ஹிந்து மதத்தவர் பயன்படுத்தும் வகையில் நிலத்தை ஒப்படைக்கவேண்டும்.
10000 மக்கள் மரித்து கலவரம் மூண்டு மதரீதியில் பிரிந்து எதிரிகளாக தேவாலயம் கட்டி கடவுளை புகழ்வதை விட இருக்கும் தேவாலயத்தில் பரந்த உள்ளத்துடன் பிரார்த்தனை செய்வோம். இந்த மனு கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் செயல் எனவே கிறித்தவர்கள் நிலத்தை கைவிடவேண்டும்
 
by B ஜோசப் அண்டினே ,Bangalore ,India    03-02-2010 12:31:13 IST
 ப்ளீஸ் அனைவரும் www.tntj.net பார்த்து, அவங்க மதப்பற்று பற்றி தெரிஞ்சுக்குங்க  
by S சரவணன்,Chennai,India    03-02-2010 12:03:03 IST
 I dont thing this is an major issue. please dont take it as Hindu or Christian. do what is there in documents and act as per law.  
by K Raja Mohamed ,Coimbatore,India    03-02-2010 11:47:18 IST
 இதோ தெரிந்துவிட்டதே நமது இந்தியன் என்ற ஒற்றுமை!!!
ஒரு சிறு துரும்பு கிடைத்தால் போதும் நீயா நானா என்று மதத்தின் பெயரால் அடித்துகொல்கிறோமே?
நமது பலவீனம் எளிதில் உணர்சிவசபடுவது.இது போதும் அரசியல்வாதிகளுக்கு அவர்கள் வியாபாரத்தை வளப்படுத்த.
பாபரி மசூதி இடிக்கப்படும்போது (பாபரி மசூதியும் இந்தியாவின் ஒரு அடையாளம்தான்) எங்கே போனது உங்கள் வீராப்பு? ஆனால் ஒரு தெளிவு இல்லாத செய்திக்காக இப்படி மத வேற்றுமை பார்ப்பது மிருகத்தனம்.
மதம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் சுய விருப்பம்;அதற்க்கும் தேசியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவுசெய்து எந்த மதத்தினரையும் புன்படுத்தவேண்டாம்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும், தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்கும் எந்த செயலையும் உண்மையான கிறிஸ்தவன் செய்யமாட்டான். அதில் வேறு ஏதும் அரசியல் பின்னணி உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நாம் மதத்தால்,இனத்தால்,மொழியால் வேறுபட்டு இருந்தாலும் நமது தாய் இந்தியாதான்.
தயவுசெய்து பிரிவினையே உங்கள் வாக்கியங்களில் கூட பயன்படுத்தாதீர்கள். 
by A ஜீவா,Maldives,Maldives    03-02-2010 11:31:27 IST
 I AM A CHRISTIAN AND I AM AGAINST TAKING OVER THE TEMPLE TO CHRISTIANS ESP AT THIS TIME OF HOUR. FOR ATLEAST 2 CENTURIES HINDUS HAD USED IT AND LET IT BE. NO MORE FIGHT, I REQEUST THE CHURCH TO TAKE A WISE DECISION, AS CHRIST WOULD DO 
by MR ரமேஷ் RAYEN,ABU DHABHI,United Arab Emirates    03-02-2010 11:27:54 IST
 aaha arambichuttingilaa unga velayai..... 
by s ravi,chennai,India    03-02-2010 11:26:21 IST
 JAI HIND 
by bala koravalli balamurugan,Abu dhabi,India    03-02-2010 11:04:50 IST
 எப்படியெல்லாம் நாசாமா போகலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போல இருக்கு  
by mr bala,madurai,India    03-02-2010 11:01:24 IST
 இப்படியே இன்னும் கொஞ்சம் உட்டா தமிழ்நாடே ஏன் இந்தியாவே அவங்களுக்குதான் என்று சொல்வார்கள் ஹிந்துக்கள் நாம் சிறுபான்மையினராக இருக்கவேண்டும். இப்ப தெரியுதா பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் போன்ற காவி படையின் முக்கியத்துவம். இனிமேலாவது புத்தி கொண்டு சிறுபான்மியினருக்கு மட்டும் சேவை செய்யும் காங்கிரெஸ் யும் தீ மு க வையும் விரட்டுவோம்
ஜெய் ஹிந்து
பாரத் மாதா கி ஜெய்  
by S KARTHIKEYAN,TIRUPUR,India    03-02-2010 10:50:41 IST
 கிறிஸ்தவர்கள் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என கோரிக்கை விடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. பொறுமையாக உணர்ச்சியற்ற ஜந்துக்களாக வாய்மூடி மௌனியாக நீண்ட உறக்கத்தில் இருக்கும் இந்துக்களே உங்கள் உறக்கத்தினை தொடருங்கள். ஒருநாள் உங்கள் சொந்த வீட்டினுள்ளும் வந்து இந்த இடம் எனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடும் நாள் வரும், அப்போதும் நீ உன் தூக்கத்தை தொடர்வாயா? விழித்தெழு இனமே! உறக்கியது போதும் விழித்தெழு! 
by R Parthiban,Hyderabad,India    03-02-2010 10:50:19 IST
 மக்களே தயவு செய்து இன்னொரு மத போர் நடக்க வழி வகுக்காதீர்கள். நாம் அனைவரும் ஒன்று அதுதான் இந்தியன் . அதை விடுத்தது மதத்தை கட்டி பிரித்து விடர்தீகள் . இந்திய வல்லரசு நாடாவதை அயல் நாட்டுக்காரன் செய்யும் சதி நடக்க வாய்ப்பு கொடுகதீர்கள் ..உஷார் உஷார் ... 
by g ரவிச்சந்திரன்,melmalayanoor,India    03-02-2010 10:48:28 IST
 அன்புள்ள இந்தியரே ஏன் இன்னும் அவன் இந்து இவன் கிறிஸ்துவன்-நு மத பாகுபாடுகளை வளர்த்து கொண்டிருக்கிரீர்கள். நம் பிள்ளைகள் அனைவரும் ஒரே பள்ளியில் ஒன்றாகத்தானே படிக்கின்றனர் , பின்பு ஏன் இந்த எண்ணம் .
நாம் அனைவரும் இந்தியர் .
தயவுசெய்து மதத்தால் சாதியால் பிரிவை உண்டாக்க வேண்டாம் .
நாம் இந்தியர் . ஜெய் ஹிந்த். 
by V சதிஷ்குமார் ,Coimbatore,India    03-02-2010 10:39:54 IST
 அருமையாக கூறினீர்கள் உங்கள் கருத்துக்கு நன்றி mr சுவாமி நாதன்

கர சேவை என்றால் என்ன ? விளக்கம் தேவை  
by s சீதா,chennai,India    03-02-2010 10:35:16 IST
 This is just a land issue. Please dont make it religious..Atlast we all indians and human beings..love each other..I felt very bad when I saw this on newspaper..... 
by M மர்சலினோ green,valathi..gingee-Taluk,India    03-02-2010 10:31:05 IST
 ஏன் christian எல்லாம் இப்படி இருகேக velankanni chruch போயி பாருக hindus அங்க prayer பண்ணுவாங்க ஆனா நீங்க மட்டும் தான் இப்படி behave பண்ணுரிக எல்லா மதத்துக்கும் மரியாதையை கொடுங்க. இத்தனை வருஷம் போன பிறகு அங்க chruch கட்ட போறிகளா அதனால கோதண்டராமர் பெருமை குறையாது உங்க பெருமை தான் குறையும்.

Mr. Alex Chennai கோதண்டராமர் கோவில் மேல உங்களுக்கு எவ்வளவு பக்தி தாராளமா கோவில எடுத்துகிட்டு பூஜை பண்ணுக பெருமாள் உங்களையும் காப்பாத்துவார் புண்ணியம் கெடைக்கும் 
by K ராஜி,Tirunelveli,India    03-02-2010 10:30:40 IST
 இப்பக்கத்தில் கருத்தை கூறியிருக்கும் பெரும்பாலோர், மதக்கலவர ஆசைகொண்டவர்களாகவே தென்படுகிறார்கள். ஆனால் அதுபோன்று கலவரம் ஏற்பட்டால், இது போன்று வாய்கிழிய பேசும் மதிகெட்டவர்கள், ஒழிந்து நின்று பிணக்குவியல்களை ரசிக்கும் ஜந்துக்கள்.. 
by a அப்துல்லாஹ்,kuwait,India    03-02-2010 10:29:54 IST
 SLOWLY SLOWLY CHRISTIANS WILL TAKE EVERY THING IN TAMILNADU….MADAM JJ COMES QUICK  
by J Prakash,Chennai,India    03-02-2010 10:23:45 IST
 ஐயோ மொழியால் ஓரினமாக வாழும் தமிழகத்திலா இது ? தமிழ்நாட்டில சங்பரிவார், விஹெச்பி , ஆர்எஸ்எஸ் , ஷிவ் சேனா மற்றும் கர சேவகர்களுக்கு அழைப்பு வந்துவிட்டது எனலாம். பாவம் தமிழர்கள். மொழியால் ஒன்றுபட்டவர்கள் மதத்தால் ???????
தமிழ் மைந்தர்களுக்கே வெளிச்சம்! 
by பரமக்குடி கண்ணன்,பரமக்குடி,India    03-02-2010 10:21:00 IST
 see friends,we dont know for what purpose this was purchased,there are officials and government and court is here.Be calm.Surely they will not destroy they temple. 
by s sundar,chennai,India    03-02-2010 10:20:46 IST
 இப்படியே போயி கொண்டு இருந்தால் நாம் எல்லாம் நம் இந்து மதத்தை மறந்து போக வேண்டியது தான். இந்த கருணாநிதி ஆட்சி இருக்கும் வரை இப்படி தான் நடக்கும். ஜெயலலிதா ஆட்சியின் பொது போப் அவர்களையே அவர் கேள்வி கேட்டு இருக்கிறார். அதை போல் துணிந்து முடிவு எடுப்பவர் இருந்தால் தான் இந்துகளுக்கு நல்ல காலம் பிறக்கும்.  
by p குகவேலன்,cuddalore port,India    03-02-2010 10:20:20 IST
 Christians... pls don''t be panic... Why you are fighting for this small temple when minority protector MK is ruling TN. Please fight for Madurai Meenakshi amman temple, Kanchipuram temples or Chidambaram temples.. MK will get those temples for you... even he can make patta on your names 
by S Sarav,Bangalore,India    03-02-2010 10:12:23 IST
 I could not understand about the speach of hindu crazies.. people are changing hindu into christians becoz christianity gives dicipline and peace which hinduism not given.. that''s why people are changing it''s not converting....  
by j ramesh,trichy,India    03-02-2010 10:11:04 IST
 கிறிஸ்துவர்கள் அந்த கோவிலை இந்துக்களுக்கு விட்டுக்கொடுப்பது நல்லது. பிரச்சனை வேண்டாம். கோவில் கிறிஸ்துவர்களுக்கு சொந்தமானதாகவே இருக்கட்டும். ராமர் கோவிலை வைத்து கிறிஸ்துவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?  
by G கணேஷ்,ahmedabad,India    03-02-2010 10:07:14 IST
 இந்துக்கள் அனைவரும் முட்டாள்கள், சோம்பேறிகலாக இருக்கும் வரை முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் மதமாறிய கிருஸ்தவர்களிடம் நாம் அடிமைகளாக இருந்தோம் இருப்போம்
......தமிழன்.....
 
by MU லோகி,chennai,India    03-02-2010 10:05:08 IST
 God does not want any land or property. He likes to live in everyone''s heart. First people must understand that especially christians.

I can remember one thing what i read in story book. God will laugh two times when doctors say ''don''t worry. I will save'' and when two people fight for land, saying this is mine, this is mine. These two times God will laugh. Because God only created everying. Everything is in His hand.

So, Christians please dont fight for that temple. leave it to them.  
by A Christella,Tirukoilur,India    03-02-2010 09:52:35 IST
 Hi Fellow Tamilians,
As per the Bible,Christians should have Love,have tolerance and Seek Peace.Christians who love christ will have these characters and will not fight for a land which have 500 years of antiques values.We should respect others belief and cultural values and Love one another.Whoever made this claim should realize that they are not following the foot steps of Christ.Be a true indian first then comes any religion.Being a christian I am writting this comment neither to impress any one nor scared of any one.I just like to clarify that we should go against any religion or any one''s values. 
by J S D Christopher,Dubai,United Arab Emirates    03-02-2010 09:38:52 IST
 This is not the mistake of Hindus or Christians. India was earlier ruled by Europeans and Muslims, during those times lot of temples has been either demolished or made to demolish.
Lot of hindu rulers have given lands to temples as part of their Bhakthi and devotion to God. Later part, this temple lands are being used for Agricultural purposes. Those who taken on rent for Agriculture has not paid the dues to the temple properly and hence this type of Situation has arised.

The religious leaders of both the communities has to sit across the table and solve this situation mutually or return the lands to the Hindu Endowments and Religious Establishments.
 
by V அனந்தபத்மனபான்,Chennai,India    03-02-2010 09:36:48 IST
 Ethukaka brother prachanai pannikiringo neenga theda vanidya edam idhu ellai paralogam thann adhuku poga vendia vazhiya parunga. Idhu edho real estate assami panra vellai polla thariuthu.
Hindu brothers and christian brothers be alert. 
by JG jigujiga,USA,India    03-02-2010 09:35:00 IST
 How long the Hindus are going to tolerate? Christians (not all but many) have this negative tendency towards Hindus. Some action should be taken from Government and also from Christian Higher priests . Otherwise no one can stop communal violence in India. 
by C செந்தில் குமார்,Chennai,India    03-02-2010 09:22:10 IST
 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் என்பது திருவிவிலியம். தயவுசெய்து அரசியல் ஆக்கிவிடாதீர்கள்.

அருள்திரு. பிரின்ஸ் வேதமாணிக்கம்
by Rev பிரின்ஸ் வேதமாணிக்கம் ,USA,India 2/3/2010 3:24:30 AM இஸ்

இது சரியான கருத்து. இந்துக்கள் பக்தியுடன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். 
by gs கணபதி ,Khartoum,Sudan    03-02-2010 09:13:57 IST
 இன்று கிறித்துவர் முஸ்லிம் என்பவர்கள் முன்பு ஹிந்துக்களே!!!..... ஆங்கில மற்றும் முகலாய ஆட்சியில் கட்டாய மதம் மாற்றம் செயப்பற்றவர்கள். சிறுபான்மைக்கு ஆதரவு செய்யும் அரசு என்று கூறிக்கொன்று ஏமாற்று பேர்வழிகள் உள்ள வரை இந்திய மக்கள் அழிய வாய்புள்ளது.

உலகளவில் ஹிந்துக்கள் than சிறுபான்மை ஆக இருக்கிறார்கள்.

அணைத்து மதத்தினரும் மனிதர்கள்தான். இந்தியாவிற்கு சொந்தமான எதையும் உரிமை கொள்ள முடியாத ஒன்று.

 
by S pandi,India,India    03-02-2010 09:12:19 IST
 christians should stay at their limit for peaceful life of everyone in this village, city & state. do not think Hindus are weak. Hindus are brought up with secular mind. do not take this as granted to spoil hindus & temples. you may get funds from abroad to spoil hinduism in india, but think you are breathing, eating, living & buried in Hindu Land. be thankful to HINDUS & INDIA. 
by s ram,delhi,India    03-02-2010 08:55:43 IST
 இப்போதும் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு தான் இருக்கிறது .புரியுதா  
by p கமலூடின்,canada,India    03-02-2010 08:45:44 IST
 இந்துக்கள், கிருதுவர்களுடைய பணம் எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்று கவனிக்கவேண்டும். பணத்தை கொண்டுதான் ''கவனிக்கிறார்கள் ''  
by p கமலூடின்,chennai,India    03-02-2010 08:37:10 IST
 அங்கு இந்துக்களின் அல்லது இந்தியாவின் பாரம்பரிய நினைவு சின்னங்கள் இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுவதுதான் மனித நேயம்.கிறிஸ்தவன் என்பதன் பொருள் கிறிஸ்து அவன்.
மத நல்லிணக்கம் காக்கபடும் என்று நம்புகிறேன்.
நண்பர்களே..மதத்தின் பெயரால் நம்மை நாமே தாழ்த்திகொள்ளவேண்டாம். நாம் இந்தியர்கள். ஜெய்ஹிந்த். 
by A ஜீவா ,Maldives,Maldives    03-02-2010 08:28:26 IST
 too bad. Do take steps to restore & safeguard historical monuments . 
by JK JK,chennai,India    03-02-2010 08:17:00 IST
 RSS founder Dr.ji says Hindustan belongs to hindus. Other relion followers can live here peacefully and perform their duties. But they interfere with hindus as traitors then they will be cleaned out of this country. REMEMBER this words Christians  
by R Deepak,Singapore ,Singapore    03-02-2010 08:11:36 IST
 நமக்குள் மத பற்று இல்லாத காரணத்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வாழ்க இந்து மதம்  
by P. MUTHUKUMAR,CHENNAI.KODAMBAKKAM,India    03-02-2010 08:08:33 IST
 கரசேவை கேட்கும் நண்பரே, அப்படின்னா அந்த கட்டிடத்தை நிங்களே இடிக்க போறிங்களா? பாபர் மசூதியை இடிச்சப்ப இனிச்சது, இப்போ கசக்குதா? இந்த அறிவுரையை அப்போ சொல்லியிருக்கலாமே?  
by P Amal,Castries,Saint Lucia    03-02-2010 08:06:08 IST
 ஆட்களை தான் போலி பிரச்சாரம் செய்து மதம் மாற்றி கொண்டு இருந்தார்கள். இப்போது போலி பத்திரம் கொண்டு கோவில்களையும் தேவாலயமாக மாற்ற முயற்சி எடுகிறார்கள் போலும்.
 
by P Anandan,Salem,India    03-02-2010 07:36:09 IST
 அரசு மூன்று வருடம் மட்டும் குடியிருந்தால் போதும் என்கிறது. இந்த கோயில் இருக்கும் இடமும் அரசுக்கு சொந்தமானதுதான். ஐநூரு வருடத்துக்கு என்ன சொல்ல போகிறது  
by நல்லப்பன்,singapore,India    03-02-2010 07:34:22 IST
 A.Swaminathan, not all Hindus, but you are real komaaali and kenam  
by JK ஜுனூன்,Singapore,India    03-02-2010 07:24:05 IST
 ஹிந்து மக்களே நீங்க எல்லாம் பூனை மாதிரி, கண்ண மூடி உக்காந்துட்டு உலகம் இருந்துடுச்சுநு நம்பர மூட வாதிகள், நீங்களும் விளித்து கொள்ளும் காலம் விரைவில் வருகிறது. அன்று உணருவீர்கள் உண்மையை. 
by JK ஜுனூன்,Singapore,India    03-02-2010 07:18:25 IST
 மனிதன் எப்படி மகிழ்ச்சியாக சந்தோசமாக தன்னை உணர்ந்து வாழ வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொரு மதமும் சொல்லிகொண்டு வருகிறது. தன்னை உணர்தல், தான் யார் என்பதை உணரகூடிய மனபக்குவம் மனிதனிடம் மட்டும்தான் உள்ளது . மற்ற உயிர்களிடத்தில் அந்த நிலை இல்லை மனிதன் அன்பும் கருணையும் நிறைந்தவன் அந்த நிலைக்கு அவனை கொண்டுவரத்தான் எல்லா மகான்களும் தங்களை அர்ப்பணித்து கொண்டார்கள் கோவில் என்பது மன அமைதியை கொடுபதற்கு உருவாக்கப்பட்டது. அதில் கூட மனிதன் வேற்றுமை கொண்டால் நிம்மதி இல்லாத ஒரு நிலை ஏற்படும். அதனால் கஷ்டம் ஏற்படுவது மனித சமுதாயத்திற்கு மட்டுமே . ஜெசுஸ் இந்த மனித சமுதாயம் மேம்பட அவர் சொன்ன வழிகளை பின்பற்றுவோம் . இந்த உலகில் பிறந்த ,வாழ்ந்துகொண்டிருக்கிற மகான்கள் அனைவரும் மனித சமுதாயம் தன்னை உணர்ந்து வாழ வழிசொல்லி உள்ளார்கள். அந்த மகான்களின் வழி முறைகளை பின்பற்ற ஒரு அமைப்பு ரீதியாக உருவானதுதான் மதங்கள். நாம் அவர்கள் வழிகாட்டிய வழிமுறைகளை பின்பற்ற முடியாமல் அமைப்பை மற்றும் பின்பற்றிகொண்டு இருக்கிறோம். நாம் உண்மையான சிந்தனை உள்ளவர்களாக அந்த மகான்களுக்கு நாம் செய்யும் நன்றி கடன் அவர்கள் சொன்ன வழிமுறைகளி பின்பற்றி இந்த மனித சமுதாயம் மகிழ்ச்சியாக வாழ நாமும் ஒரு படிக்கல்லாக இருப்போம். அதுவே இறைவனாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்களுக்கு செய்யும் நன்றிகடன். 
by a susee,rajapalayam,India    03-02-2010 07:15:11 IST
 கோவில் நிலத்தைக் கேட்கும் கிறிஸ்தவர்களே! ஒருவேளை நிலம் உங்களுக்குச் சொந்தம் என்றால் இயேசுவிடம் ஜெபம் செய்யுங்கள். அங்கே வழிபடுகின்ற மற்றவர்களும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகி விடுவார்கள்.  
by D தேவகுமார் ,Kadatchapuram,India    03-02-2010 07:10:05 IST
 Best joke of 2010...The whole of India belongs to Indians aka Hindus... All Indian christians are hindus 2-3 genertions back. If it is registered in the name of a British guy, can we say it belongs to UK? Joke.o.Joke..

தேவை இல்லாத பிரச்சனை. விலைவாசியை கவனிக்க வேண்டிய நேரத்தில், வெட்டி பிரச்சனை.  
by SS வைசிசு ,USA,India    03-02-2010 07:09:19 IST
 Hello Friends from other religion....Don''t be too sensitive...I don''t think that any christian organization claiming this....Looks like some induvidual or group tries to get money out of it as a real estate business....Dinamalar did not clearly say who was doing it.....Since someone who belongs to christian do this ...It DOES NOT MEAN that its ''Christians'' .....I would recommend dinamalar should change the title of artcile if any of the Christian Church NOT Involved on this or please publish clarly with name of person who involved on this..... 
by J John,Trichy,India    03-02-2010 07:00:33 IST
 Ariyans brought hinduism
Thomas brought christianity
khans broght in islam
the original dravidans were not HINDUS
Mr.ayan deva 
by j kulasekar,kuala lumpru,Malaysia    03-02-2010 06:57:31 IST
 Great news. Next on target could be Tirupathi Temple. God save India/Hindus. Vande mataram 
by Mahesh,NYC, USA,United States    03-02-2010 06:47:40 IST
 Dear Christian. Jesus told Love one another. Please follow that. Jesus had come this world to create the peace in the world. Kindly remember that. Love one another 
by I Man,Bangalore,India    03-02-2010 06:47:33 IST
 அலெக்ஸ் நீ வாயைமூடு முதலில். it is unwanted and uncorrect issue. dont create another temple and religion related problem in our nation. it will deatroye unity of india. bad politicians will gain some momentum from this. policy makers should immediately intervene in this issue and should diffuse the tension between the two community. 
by mr sathyamoorthi,madurai,India    03-02-2010 06:41:57 IST
 This is a simple matter and can be settled by talks at the town level.  
by mr Anil,Singapore,India    03-02-2010 06:16:22 IST
 துரதிஷ்ட வசமாக இடத்தை ஹிந்துக்களுக்கு விட்டுகொடுக்கும் பாக்கியம் கிருஸ்துவர்களுக்கு இல்லை. காரணம் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட கோவிலுக்கும் சம்பந்தமே இல்லை. 1878 ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கோவிலுக்கு எதிராக நியாயம் எந்தனை சதவிகிதம் இருந்து இருக்கும் என்பதை ஒரு சிறுவன் கூட யூகிக்க முடியும்.கிருஸ்துவர்கள் அனைத்து பொறம்போக்கு நிலங்களையும் இந்தியா முழுவதும் ஏற்கனவே வளைத்து விட்டதால், தற்போது மதச்சார்பின்மை மயக்கம் கொண்ட ஹிந்துக்களால் கைவிடப்பட்டு கொண்டு இருக்கும் கோவில்களில் பெரிதும் நாட்டம் கொண்டு உள்ளனர்.  
by R ரவி,Chennai,India    03-02-2010 06:09:50 IST
 பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளே ஹிந்து வேதங்களிலும் காணப்படுவதால் கிறித்தவ மதத்துக்கு பிற்காலத்தில் தோன்றியது இந்து மதம் என்று ஒரு பிரச்சாரம்; மானாவாரியாக மத மாற்றம்; நமது மதசார்பின்மை கோட்பாடுகளின் படி கிறித்தவர்கள் மீது தவறே கிடையாது; இன்னும் கொஞ்ச நஞ்சமாவது இந்துக்களுக்கு சுய உணர்வு இருககிறது என்பதுதான் இதில் ஆச்சரியம். இந்து மக்கள் எதையும் தாங்குவார்கள்; ஒருவரை ஒருவர் காலை வாரிக்கொண்டு நாட்களை கடத்துவார்கள். பாதிரியார்கள் காட்டில் மழைதான்  
by S பாலா sreenivasan,Chennai ,India    03-02-2010 06:08:35 IST
 The tamil nadu govt should not allow the chiristian community to tress pass in the temple and let hindu should worship the god. Dont create one more kandamal in tn. Let the chiritians pray in their church. Dont involve in hindu temples.  
by S srinivasan,chennai,India    03-02-2010 05:46:34 IST
 Dinamalar should declare that who claimed instead of saying christians...Is it church or some induvidual?...I am a christian too...I don''''t think that it was from Church...Whoever doing this are stupids and trying to create problem among society for no reason....Also kind request to dinamalar...Please findout who is behind it...If it was not a church then please don''''t use christians claims for that....I am 100 % sure that no good christians will support this stupid things... 
by JB John,Trichy,India    03-02-2010 05:36:48 IST
 All, There is a definite trend of christians taking over hindu lands. Visit tamilhindu.com and read about the happenings in Vilupuram dist.
We are already a minority in Kanyakumari, nagarcoil, nellai and tuticorin dists. We will soon be minority in Madurai, dindigul and vilupuram and arcot districts. Wake up now. Enough of the tolerant approach. We are being made fools by this smooth talkers - dravidian politicians, media, NGOs. Why should we allow christian organised celebrations like Tamil sangamam, which is heavily promoted by the media and the DMK group. These christians have taken over media (Vijay TV, Sun TV, Investigative journals - Junior Vikatan, Nakkeran, tamilan express). Very soon we will be minorities and we will have to move out elsewhere. Enough of this pretension. We should declare India a hindu country. 
by R ஷங்கர்,Sngapore,India    03-02-2010 05:32:31 IST
 இந்துக்களே இனியாவது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
மத மாற்றத்தை தடுக்க வேண்டும்.
கருணாநிதியை ஒழிக்க வேண்டும்.. 
by S மணி,chennai,India    03-02-2010 05:27:00 IST
 கிருதுவ சகோதரர்கள் இது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்ககூடாது. 500 ஆண்டுகளுக்கு முன் பழமையான கோவிலை உரிமை கேட்பது என்ன நியாயம். அங்கு சர்ச் கட்டப்படவில்லை. பத்திரம் கொண்டு கிரயம் வந்கினதாக இருந்தாலும் குட ஒரு ஹிந்து லோவிலை தடுப்பது நியாயமா.? சிந்திப்பீர். ஜெய் ஹிந்த். 
by V Kumar,Singapore,Singapore    03-02-2010 05:03:50 IST
 what is happening in T nadu? Is there no place/freedom for hindus in T nadu?What is dmk the so called secular party (Always against hindus in practice) doing?The collectir should interfere immediately and restore the temples to Hindus and bring peace. Ues we cannot expect a better treatment ti hindus under UPA and DMK.If needful action is not taken by the collector/govt the HIndu munnani/bjp/rss should take up with govt immediately. Meanwhile govt should ensure that the pooja is not stopped even for single day. 
by t veera,chennai,India    03-02-2010 04:41:51 IST
 These Christians came into being in India only because of the tolerance of the Hindus. They should be thankful for that instead of grabbing Hindu''''s properties and even temples. Disgusting. 
by C nami,malaysia,India    03-02-2010 03:59:06 IST
 All christianes are not original christianes ( they are from Italy?)they are converted from ஹிந்து religion but they forget the ancestors . Before 12th century There was no another religion except ஹிந்து இன்றைய கிருத்துவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து வந்தவர்களா ? 12ஆம் நூற்றாண்டுக்கு முன் எல்லோருமே இந்துக்கள் தான்.  
by AYEN DEVA,france,India    03-02-2010 03:47:50 IST
 உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும், 
by Ravi,NYC,India    03-02-2010 03:26:58 IST
  என் வேண்டுகோள். கிறிஸ்தவர்கள் விட்டு கொடுக்கவேண்டியவர்கள். கிறிஸ்தவர்களின் documents படி இந்த இடம் கிறிஸ்தவர்களின் சொந்தமாய் இருந்தால், இனியும் இதை குறித்து argue செய்யவேண்டாம். காரணம், கிறிஸ்தவர்களின் சொந்தமான
இடத்தில் ஹிந்து கோவில் இருக்க
நமது மனம் பண்பட்டு விட்டால் சமாதானம், கிறித்தவ சாட்சி பெருகிவிடும். இந்தியாவில் மத ஒருமைப்பாடு பெருகிவிடும். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் என்பது திருவிவிலியம். தயவுசெய்து அரசியல் ஆக்கிவிடாதீர்கள். Meekness is not Weekness. Please think about our future generation and Peace of our country.
அருள்திரு. பிரின்ஸ் வேதமாணிக்கம்  
by Rev பிரின்ஸ் வேதமாணிக்கம் ,USA,India    03-02-2010 03:24:30 IST
 now a days these christians are started creating too much of problems. They started converting the people, our CM will not comment anything on this. Hindus are majority but no use when ever these type of problem arises.  
by JAYARAM,alkhobar,Saudi Arabia    03-02-2010 03:21:43 IST
 இப்போ இவனுங்களும் கிளம்பிட்டானுங்களா? 
by B ரவி,Dallas,United States    03-02-2010 02:39:11 IST
 ஆட்சி தலைவியும் கிறிஸ்து
பாதுகாப்பும் கிறிஸ்து
கோதண்டராமர் கோவிலும் எங்களுக்குத்தான்
வtய மூடுடா 
by v alex,chennai,India    03-02-2010 02:36:01 IST
 ஆட்களை தான் போலி பிரச்சாரம் செய்து மதம் மாற்றி கொண்டு இருந்தார்கள். இப்போது போலி பத்திரம் கொண்டு கோவில்களையும் தேவாலயமாக மாற்ற முயற்சி எடுகிறார்கள் போலூம். 
by K கார்த்திக்,Mimneapolis,United States    03-02-2010 01:53:07 IST
 India for Hindus only..These Christ people came in middle and also who converted to christ all are prev hindus only..so all the properties in india belongs to Hindus only..other religious guys get out from india.. 
by K Vijay,Tirupur,India    03-02-2010 01:43:33 IST
 Hi to all Indians / Hindus,
We all have to do one thing.Sell the whole country to Converted Christians and Muslims.Hope that will be good.The politicians can live long.
What the hell is happening here? Another Babar Masjid in Tamil Nadu. 
by J ஜூனோ,lONDON,United Kingdom    03-02-2010 01:00:39 IST
 slowly slowly christians will take every thing ,,they claim minority and slowly conevrting all sc into christians.Most of the important central places are already under christian church trust .


Fellow Hindu friends aware to wake up.Jai Hind 
by Mr Nala Virumbi,Chennai,India    03-02-2010 00:55:54 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்