தூத்துக்குடி : கோவில்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை மதுரையில் சந்தித்து, தொகுதி பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை கோரி மனுகொடுத்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எல்.ராதாகிருஷ்ணன், மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டுக்கு நேற்று காலை 8 மணிக்கு வந்தார். அழகிரிக்கு பொன்னாடை போர்த்தி, கோரிக்கை மனு கொடுத்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும், முதல்வர் கருணாநிதி, எங்களுக்கும் மரியாதை கொடுத்து தொகுதிக்கு உதவுகிறார். தென் மண்டல தி.மு.க., அமைப்பு செயலராக அழகிரி பொறுப்பேற்ற பின், தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வருகிறார். கோவில்பட்டி தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது; தொழில் வளர்ச்சி இல்லை. முதல்வரிடம் கூறி, இக்குறைகளை தீர்க்கக் கோரி, அழகிரியிடம் மனு கொடுத்தேன். அவரும் பிரச்னைகளை தீர்ப்பதாகக் கூறி இருக்கிறார்.
ஜெயலலிதா தலைமையில் எங்கள் கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திறமையானவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. சட்டசபையில் பேசுவதற்கு எங்கள் கட்சி, எனக்கு வாய்ப்பு தரவில்லை. அழகிரியை சந்தித்ததற்காக, கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தால், அதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
அழகிரி பேட்டி: நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது: கோவில்பட்டி தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்; தொழில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு, ராதாகிருஷ்ணன் மனு கொடுத்துள்ளார். எந்தக் கட்சியாக இருந்தாலும், முதல்வர் கருணாநிதி திட்டங்களை நிறைவேற்றுவார். அவர், தி.மு.க.,வில் சேர்ந்ததாக நாங்கள் கூறவில்லை. கோரிக்கை மனு கொடுக்கவே வந்துள்ளார். பார்லிமென்டில் ஒரு அமைச்சரோ அல்லது எம்.பி.,யோ ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசினால், ஹெட்போன் மூலம் இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வரும். அதேபோல், தமிழிலும் வர வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. ஆனால், தமிழில் தான் பேச வேண்டும் என்று கூறுவதாக, தவறாக செய்தி வருகிறது. இது பற்றி பேசுவதற்காக சபாநாயகர் அழைத்திருந்தார். அப்போது, நான் இந்தோனேஷியா சென்றிருந்ததால் சந்திக்க முடியவில்லை. இது தொடர்பாக, டில்லி செல்லும் போது சபாநாயகருடன் பேசுவேன். இவ்வாறு அழகிரி கூறினார்.
"எம்.எல்.ஏ., பதவியில் தொடர்வேன்': ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான படர்ந்தபுளியில் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவே, மத்திய அமைச்சர் அழகிரியை சந்தித்து மனு கொடுத்தேன். அதே கோரிக்கைக்காக, முதல்வர் கருணாநிதியையும் சந்திக்கவுள்ளேன். அ.தி.மு.க., கொறடா கடந்த இரண்டு ஆண்டாக சட்டசபையில், எனது தொகுதி பிரச்னை குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை. பின், எப்படி மக்கள் பிரச்னையை தீர்ப்பது. நான் கொடுத்த மனுவை முதல்வருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அழகிரி தெரிவித்தார். சோதனையான காலகட்டத்தில் அ.தி.மு.க., தான் எனக்கு கைகொடுத்தது. தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக இருந்து, தொகுதி மக்கள் பிரச்னைகள் தீர பாடுபடுவேன். கோவில்பட்டியில் எனக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஓட்டு போட்டவர்கள் உள்ளனர். இரு தரப்பினருக்கும் நான் தான் எம்.எல்.ஏ., அதுபோல முதல்வர் கருணாநிதி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் பொதுவானவர். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார். கட்சி பதவி பறிப்பு: ராதாகிருஷ்ணனின் கட்சிப் பொறுப்பை ஜெயலலிதா பறித்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்ட ஜெ., பேரவை செயலர் பொறுப்பில் இருக்கும் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட ஜெ.,பேரவை செயலராக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அ.தி.மு.க.,வில் மாஜி அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், சண்முகநாதன் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்த போது, இவர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பணியாற்றினார். இதன் பலனாக அப்போது அனிதா ராதா கிருஷ்ணன், இப்பதவியை ராதாகிருஷ்ணனுக்கு பெற்றுத்தந்தார். இந்நிலையில், அனிதா ராதா கிருஷ்ணன் தி.மு.க.,வில் இணைந்தபோது, ராதாகிருஷ்ணனும் அவருடன் தி.மு.க.,வில் இணைவார், என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது, ராதாகிருஷ்ணன் மவுனம் சாதித்தார். இதற்கிடையே, மாவட்ட செயலராக சண்முகநாதன் செயல்பட்டபோது, ராதாகிருஷ்ணன் தனிமைப்படுத்தப்பட்டார். அதனால், அவர் கட்சி நிகழ்ச்சிகள்,பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்த்தார். திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் "மந்தமாக' பணியாற்றினார்.
இந்நிலையில், கோவில்பட்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., செயலாளராக மாணிக்க ராஜா நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும், என கருதி, அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழிகாட்டுதல்படி, மாற்றுமுகாமிற்கு செல்ல திட்டங்களை வகுத்தார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் கருணாநிதியை சந்திக்கவும் அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஜெ.,பேரவை செயலர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார். கடந்த நான்கு ஆண்டாக முதல்வர் கருணாநிதி,தி.மு.க.,வை விமர்சித்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திடீரென "தொகுதி மக்கள் பிரச்னையை' காரணம் காட்டி மத்திய அமைச்சர் அழகிரியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by NH Prasad,Chennai,India 09-02-2010 17:00:36 IST |
![]() ![]() |
by D Devakumar,Kadatchapuram,India 06-02-2010 22:33:10 IST |
![]() ![]() |
by s மதியரசன்,Dubai. ,India 06-02-2010 22:03:15 IST |
![]() ![]() |
by karu karmegam,Kuala Lumpur,Malaysia 06-02-2010 21:40:21 IST |
![]() ![]() |
by r அனந்தன்,salem.,India 06-02-2010 18:22:19 IST |
![]() ![]() |
by d karuvayan,tirupur,India 06-02-2010 17:53:10 IST |
![]() ![]() |
by M கணேசமூத்தி,Madras,India 06-02-2010 17:44:16 IST |
![]() ![]() |
by வாக்காளன்,india,India 06-02-2010 17:35:00 IST |
![]() ![]() |
by S Mohan,chennai,India 06-02-2010 16:48:04 IST |
![]() ![]() |
by A VENKATESH,KOVILPATTI,India 06-02-2010 16:03:52 IST |
![]() She is aregant fellow. ![]() |
by K Ramu,Kumbakonam,India 06-02-2010 16:02:22 IST |
![]() ![]() |
by s கணேசன்,Hosur,India 06-02-2010 15:13:16 IST |
![]() ![]() |
by kames dmdk,kovilpatti,India 06-02-2010 14:58:41 IST |
![]() DMK ![]() |
by M MAHAMED,dubai,United Arab Emirates 06-02-2010 14:18:03 IST |
![]() ALAGRI ITERVIEW AFTER 2 MONTH ; WE WILL BY 40,000 VOTES.HAHAHAHA. ![]() |
by raja rethinam,THILLAIYADI,India 06-02-2010 13:58:47 IST |
![]() ![]() |
by ka பண்ணி செல்வம்,Chennai,India 06-02-2010 13:30:21 IST |
![]() ![]() |
by S ARUN,Pune,India 06-02-2010 13:00:01 IST |
![]() ![]() |
by திமுக காரன்,india,India 06-02-2010 12:00:44 IST |
![]() ![]() |
by V VIJAY,NAGARCOIL,India 06-02-2010 11:48:44 IST |
![]() எது எப்படியோ எல்லா கட்சி காரர்களும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு சேவை செய்தால் மன்னிக்கவும் துரோகம் செய்யாமலிருந்தால் நல்லதுதான். இந்த ஆண்டு மற்றுமொரு இடை தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க வுக்கு கொஞ்சம் செலவு ஏற்ப்படலாம் - (சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம் ) ![]() |
by தில்லாலங்கடி,தில்லையாடி ,India 06-02-2010 11:25:12 IST |
![]() ![]() |
by M மொதமேது,riyadh,India 06-02-2010 11:18:53 IST |
![]() - கருப்பன், சேலம், இந்தியா. கருப்பன் சார் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. ஆரம்ப காலந்தொட்டு கலைஞர் - எம்ஜிஆர் காலம் வரை இருந்த அரசியல் நாகரிகம் எங்கே? M. தமிழ்நேசன், Chennai, India அவர்களே, உங்களுக்கு சொந்தமாக கவிதை பாட தெரியாதா? அடுத்தவர் எழுதியதை ஆல்டர் செய்து எழுதியிருக்கிறீர்கள்? அதுசரி அடுத்தவர் எழுதிக்கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்கும் தலைவியின் தொண்டன் தானே நீங்கள்? ஸ்ரீதர் அப்படியா? தமிழின தலைவனின் தமிழ் தாயின் மூத்த மகனின் வழி வந்த தொண்டன் ஆயிற்றே! ஸ்ரீதர் சார், எப்படி நீங்க எப்பவுமே இப்படி கலக்கறீங்க? ![]() |
by T ராஜராஜன் ,Trichy,India 06-02-2010 11:15:27 IST |
![]() ![]() |
by MR. Nalam virumbi,india,India 06-02-2010 11:13:15 IST |
![]() one of this type ![]() |
by n avudaiappan,elathur,India 06-02-2010 11:13:03 IST |
![]() in my knowledge compare to dmk admk give chance for so many new peoples. and when the admk win 2001 election in our constituancy colachel madeim annonce k.t pachaimal.realy no bedoy knows who is he.after he win .thats the thing peolple wants to change they will put vote correct. this is our glorias kanyakumari district. ![]() |
by l gladwin,manama,Bahrain 06-02-2010 10:59:09 IST |
![]() ![]() |
by P Dinesh,Rasipuram,India 06-02-2010 10:47:23 IST |
![]() சந்திரன் ![]() |
by B chandran,Kovilpatti,India 06-02-2010 10:07:01 IST |
![]() ![]() |
by Ramana,Chennai,India 06-02-2010 09:58:10 IST |
![]() ![]() |
by THA uNmaiyaanavan,CHN,India 06-02-2010 09:55:01 IST |
![]() ![]() |
by SV நல்லவன்,Chennai,India 06-02-2010 09:53:29 IST |
![]() ![]() |
by K Haneef,Chennai,India 06-02-2010 09:22:34 IST |
![]() ![]() |
by safar ஏறல் சபீக் அஹ்மத்,abudabi,United Arab Emirates 06-02-2010 08:17:26 IST |
![]() ![]() |
by G சுரேஷ் toa ,sivagangai,Singapore 06-02-2010 07:19:35 IST |
![]() கருணாவை தேடி வந்தவரே வருக! வருக! சூர்ப்பனையின் அடிமைவிலங்கை உடைத்தெறிந்து பொய்யராய் வருக! வருக! மண்புழு (விவசாயி நண்பன்) வாழ்க்கையை உடைத்தெறிந்து பண வாழ்வு தேடி வந்தவரே வருக வருக. வாய்மை தலைமை போதுமென்று பொய்மையை தேடி வந்தவரே வருக வருக. முதுகெலும்பு ஜென்மம் நீங்கி மாசுபட்ட மனித வாழ்வு தேடி வருக!வருக! பலகோடி கமிசன் பெற வருக! வருக! மணல் சாம்ராஜ்யம் நடக்க வருக! வருக! தமிழனின் வாழ்வு சிறக்க (கருணா & கோ) வருக! வருக! (அ) சிங்க தமிழா வருக! வருக! தலைவனுக்கு துதி பாட வருக! வருக! ஸ்ரீதர் பாட்டு எழுத வருக! வருக! ![]() |
by M Tamilnesan,chennai,India 06-02-2010 07:05:02 IST |
![]() ஒரு விதத்திலே இவரை பாராட்டலாம். ADMK எதிராக்க துணிந்ததுர்க்காக! ![]() |
by M Venkat,Tuticorin,India 06-02-2010 06:44:30 IST |
![]() ![]() |
by m சுப்பு,Tripoli,Libya 06-02-2010 06:40:41 IST |
![]() i have been notiicing your comments. If someboyd scolds dmk. you point Admk. kamaraj pointed out once both are dirty You are a racist ![]() |
by வெங்கட்,somerset,United States 06-02-2010 06:19:16 IST |
![]() ![]() |
by c jay,salem,India 06-02-2010 06:10:08 IST |
![]() ![]() |
by S.M DAWOOD,Chennai,India 06-02-2010 06:03:13 IST |
![]() கருணைத்தேடி வந்தவரே வருக வருக. சூர்ப்பனையின் அடிமைவிலங்கை உடைத்தெறிந்து சூரியனின் தம்பியராய் வருக வருக. மண்புழு வாழ்க்கையை உடைத்தெறிந்து மனிதவாழ்வு தேடி வந்தவரே வருக வருக. பொய்மை தலைமை போதுமென்று வாய்மையை தேடி வந்தவரே வருக வருக. முதுகெலும்பு அற்ற ஜென்மம் பழிநீங்கி முழுமனித வாழ்வு தேடி வருக வருக. ![]() |
by g sridhar,California,United States 06-02-2010 05:49:09 IST |
![]() ![]() |
by r குமார்,Singapore,Singapore 06-02-2010 04:55:17 IST |
![]() ![]() |
by m ரஜனி,Chennai,India 06-02-2010 04:43:47 IST |
![]() கடந்த ஆட்சியில், சுனாமி வந்தவுடன், தளபதி ஸ்டாலினிடம் திமுக சார்பில் காசோலையை கொடுத்து அனுப்பி, ஜெயாவிடம் சேர்க்க செய்த தலைவர் கலைஞர் நிச்சயம் மாபெரும் தலைவர். அவர் ஒன்றும் ஸ்டாலினை கட்சியை விட்டு நீக்கவில்லை. ஆனால் தேர்ந்தெடுக்க பட்ட மக்களுக்கு பணியாற்ற அனுமதிக்க விடாத ஒரு தலைவி, இல்லை இல்லை இது ஒரு தமிழகத்தை பிடித்த தலைவலி. எத்தனையோ, தலைவர்களை தந்த தமிழகம், ஏன் இப்படி ஒரு தறுதலையை தமிழகத்துக்கு கொண்டு வந்து, தாலி அறுக்கிறது? பண்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நாட்டில், தேர்ந்தெடுக்க பட்ட மக்களுக்காக பாடு படுவனின் பதவியை பறிக்கும் ஒரு பன்னாடையை வேறு எங்கும் காண முடியாது. கட்சி வேறு, மக்கள் பணி வேறு. எந்த திமுககாரனும், எவரிடத்திலும் பேசலாம், பழகலாம். ஆனால் அதிமுகாரன் திமுகவினருடன் பேசினால், அவ்வளவுதான். இதுதான் ஜனநாயகமா? இதை செய்யும், கட்சியை கல்லால் அடித்து கொல்ல வேண்டாமா? முதலில் தனது கட்சினரிடம் மனம் விட்டு பேசுபவன் தான் தலைவன். தன் கட்சி காரர்களை, அடிமையாக நடத்தும் இப்படி ஒரு ஜென்மம் உலகத்தில் எங்காவது உண்டுமா? ![]() |
by k கருப்பன்,Salem,India 06-02-2010 04:43:02 IST |
![]() You are definitely defeated by kovilpatti peoples,if bye election comes. MDMK or DMDK may use this opportunity. Regards, Pushparaj ![]() |
by R Pushparaj,Trivandrum, Karala,India 06-02-2010 04:36:00 IST |
![]() அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ![]() |
by I. Thiruvalluvan,chennai,India 06-02-2010 03:26:33 IST |
![]() ![]() |
by TMS PEER MOHD,abudhabi,United Arab Emirates 06-02-2010 03:05:39 IST |
![]() ![]() |
by அம்முகுட்டி ,malaysia,India 06-02-2010 02:32:46 IST |
![]() ![]() |
by k காளை,miami,United States 06-02-2010 02:25:26 IST |
![]() ![]() |
by A WILSONSAM,PONDY. KARAIKAL,India 06-02-2010 01:19:20 IST |