முதல் பக்க செய்திகள் 

செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை
பிப்ரவரி 08,2010,00:00  IST

செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோவில் பிரச்னையில் தமிழக அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. 13ம் நூற்றாண்டில் தமிழ் மன்னர்கள் இங்கு கட்டத் துவங்கிய கோட்டையை விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் தொடர்ந்து பலம் பொருந்திய கோட்டையாக கட்டினர். ஒரு ராஜ்ஜியத்தின் தலைமையிடமாக விளங்கிய செஞ்சிக் கோட்டையை சுற்றி பல கோவில்கள் உருவாக்கப்பட்டன.இந்தியர்களின் பண்பாடு, கலை, கலாசாரத்தை விளக்கும் நகரங்களில் ஒன்றாக 18ம் நூற்றாண்டு வரை வெகு சிறப்போடு செஞ்சி விளங்கியது. இந்து மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு செஞ்சிக்கு சரிவு ஏற்படத் துவங்கியது.தெய்வ வழிபாட்டின் மூலம் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், கலையையும் வளர்க்க முன்னோர் உருவாக்கிய கலைப் பொக்கிஷமாக விளங்கிய கோவில்கள், சிலைகள் சீரழிக்கப்பட்டன. விலைமதிப்பு மிக்க பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன. இப்போது பல கோவில்கள், சுவாமி சிலைகள் இல்லாத வெற்றிடமாக காட்சி தருகின்றன.இது போன்ற கோவில்களில் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலும் ஒன்று. நாயக்கர்கள் காலத்தை சேர்ந்த 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வழிபாடு நின்றிருந்த காலத்திலும், சிங்கவரம் அரங்கநாதர், பீரங்கி மேடு ஏகாம்பரேஸ்வரர் கலந்து கொண்ட மாசி மக தீர்த்தவாரி தடையின்றி நடந்தது.ஏகாம்பரேஸ்வரர், கோதண்டராமர் கோவில் உள்ளே படித்துறை வழியாக சென்று சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், ஆற்றின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி தருவார்.சிங்கவரம் ரங்கநாதர் சுவாமி, திண்டிவனம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி வழியாக சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், பாலத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார்.இதன் பிறகு, கோதண்டராமர் கோவிலில் வழிபாட்டை ஏற்படுத்த அறக்கட்டளை துவக்கி பஜனை, யாகம், பாகவத சொற்பொழிவுகள் நடத்தினர். பின், சிலை வைத்து வழிபாடு நடத்தினர்.கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி கோவில் இடத்தில் அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத நபர், தனது டிராக்டரில் பொருத்திய புதிய ஏர் கலப்பையை சரிபார்க்க கோவில் அருகில் இருந்த இடத்தை உழுதார்.இதன் பிறகே பிரச்னை உருவாகி டிச., 7ம் தேதி கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், போலீசில் புகார் செய்தார். மதம் சம்பந்தமான பிரச்னை என்பதால் போலீசார் பிரச்னையை தாசில்தார் சங்கரனுக்கு பரிந்துரைத்தனர். பிறகு டிச., 16ம் தேதி முதல் சமாதான கூட்டம் திண்டிவனம் சப் -கலெக்டர் மஞ்சுளா தலைமையில் நடந்தது.கோதண்டராமர் கோவில் உள்ள சர்வே எண் 67-1 உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை கடந்த 1878ம் ஆண்டு விழுப்புரம் தாலுகா மயிலம் தேவஸ்தான ஆதீனம் பரம்பரை தர்மகர்த்தா சிவாக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து, திண்டிவனம் தாலுகா செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு எப். டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியதாக பத்திரத்தை, கிறிஸ்தவர்கள் தாக்கல் செய்தனர்.இந்துக்கள் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டதால் ஜன., 20ம் தேதிக்கு கூட்டத்தை தள்ளி வைத்தனர். அதுவரையில் இரு தரப்பினரும் பிரச்னைக்குரிய இடத்திற்கு செல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த மாற்றமும், மாறுதலும் செய்யாமல் இருக்க தீர்மானம் நிறைவேற்றினர்.பின், ஜன., 20ல் கூடிய கூட்டத்தில் இரு தரப்பிலும் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்வது, பிப்., 1ம் தேதி கோவில் இடத்தை இருதரப்பினர் முன்னிலையில் சர்வேயர்களை கொண்டு அளப்பது. பின், பிப்., 3ம் தேதி மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.இதன்படி கடந்த 1ம் தேதி கோவில் இடத்தை அளப்பதை கண்காணிக்க அதிகாரிகள் வருவதற்கு முன், பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் ஆசிரியர் செல்வராஜ், பிரச்னைக்குரிய இடத்திற்கு வந்தனர்.அப்போது கோவிலில் அர்ச்சகர் சரவணன், பூஜைகளை செய்து கொண்டிருந்தார். பூஜையை நிறுத்தி கோவிலை பூட்டுமாறு ஜோசப் ஆல்பர்ட்டும், செல்வராஜூம் கூறியதால் பதட்டம் ஏற்பட்டது. அங்கு வந்த தாசில்தார் சங்கரன், கோவிலை பூட்டி சாவியை வாங்கினார்.இதன் பிறகு இந்துக்கள் தரப்பில் பதட்டம் ஏற்பட்டது. அதுவரை நடந்த சமாதான கூட்டத்தில் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், 3ம் தேதி நடந்த மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொள்ள இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் காஞ்சி கண்ணன், மாவட்ட பொதுச் செயலர் நேரு ஆகியோரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் புதுச்சேரி மாவட்ட சொத்து பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அருட்தந்தை அருள்புஷ்பம் வந்தனர்.இரு தரப்பிலும் பலர், தாசில்தார் அலுவலகம் முன் திரண்டதால், விழுப்புரத்தில் இருந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.வெளியூரில் இருந்து வந்தவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தினால் சிக்கலாகி விடும் என கருதிய போலீசார், மூன்று கட்டமாக கூட்டத்தை நடத்த சப்- கலெக்டர் மஞ்சுளாவிடம் கேட்டனர்.இதனால், முதலில் இந்துக்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி கருத்து கேட்டனர். அடுத்து கிறிஸ்தவர்களிடம் கருத்து கேட்டனர். மூன்றாவதாக நடந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூர் நபர்களை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.இந்துக்கள் தரப்பில் எட்டு பேரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் ஒன்பது பேரும் கலந்து கொண்டனர். இந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஒப்புக் கொண்டு 15ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.அதுவரை கோவிலில் வழிபாடு நடத்தாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் சிவசுப்ரமணி, கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிறுவனர் ரங்க ராமானுஜதாசர், கணேசன், பழனி, தமிழ்ச்செல்வி வெளிநடப்பு செய்தனர். கோபிநாத், அரங்க ஏழுலை, ஏழுமலை தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில், காஞ்சி கண்ணன் தலைமையில் இந்துக்கள், கோவிலில் வழிபாடு நடத்தச் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், கோவிலுக்கு வெளியே தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு கலைந்து சென்றனர்.கோதண்டராமர் கோவிலை பூட்டியதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னனியினர் அறிவித்துள்ளனர்.சப் - கலெக்டர் மஞ்சுளா தலைமையில் கூட்டம் நடத்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு தரப்பில் இதுவரை பதில் இல்லை.இந்த பிரச்னையில் அடுத்த கட்டமாக, இந்து அறநிலையத்துறை தலையிட வேண்டும் என்று செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் வழிபாட்டுக் குழு உறுப்பினர் லோகஜெயராமன், சிங்கவரம் ரங்கநாதர் கோவில் தேர் திருப்பணிக் குழு உறுப்பினர் ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரச்னைக்கான காரணம்:இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக இருந்த செஞ்சியில் இப்போதைய பிரச்னைக்கு இப்பகுதி விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதே முக்கிய காரணம்.பிரச்னைக்குரிய இடத்தை ஒட்டிய பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இரண்டு கோடி ரூபாய்க்கு விலை போகிறது. பிரச்னைக்குரிய இடத்தின் மதிப்பு மூன்று கோடிக்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பிலும் போட்டி ஏற்பட்டுள்ளது.இந்த இடத்தில் இந்து கோவில் உள்ளது என்பதற்கு கோபுரங்களும், மண்டபங்களும் மறுக்க முடியாத சாட்சி. இந்த இடம் தாங்கள் கிரயம் பெற்றது என கிறிஸ்தவர்கள் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளனர். எனவே, இந்த இடத்தை இரு தரப்பினரும் இழக்க தயாராக இல்லை.இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் விதமான தீர்க்கமான, முடிவான திட்டத்தை தமிழக அரசு எடுக்க வேண்டும். இப்பிரச்னையை தொடரச் செய்வதும்; காலம் கடத்துவதும் செஞ்சி பகுதியின் அமைதி கெடுவதற்கு வழி வகுக்கும்.சமாதான கூட்டத்தில் நடந்தது என்ன?செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னை கூறித்து மூன்று கட்டமாக சமாதானக் கூட்டம் நடந்தது. முதல் கூட்டத்தில் இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.இதில் காஞ்சி கண்ணன் பேசுகையில், இந்து கோவில் என்பதற்கு மண்டபங்கள், ராஜகோபுரம், கருவறையே சாட்சி. இந்து கோவில்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. இதை வாங்கியதும், விற்பனை செய்ததும் செல்லாது. கோவிலை பூட்டியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கோவில் இடத்திற்கான அரசு ஆவணங்களை முறைகேடாக திருத்தி உள்ளனர். இதை ஆய்வு செய்து திருத்தியவர்கள் மீது தேசிய ஒழுங்கு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்தின் மூலப்பத்திரம், டிரஸ்டி பத்திரத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. இப்போது பட்டாவில் உள்ள காண்டியார் என்பவர் யார், அவரின் தந்தை பெயர் என்ன? கிரயம் பெற்ற டாரூசுக்கும், காண்டியாருக்கும் என்ன உறவு, என கேள்வி எழுப்பினார்.அடுத்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் நடந்த கூட்டத்தில், அவர்கள் தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இந்துக்கள் தரப்பில் இந்து கோவில் தான் என்பதற்கும், அதில் தங்களுக்கு உள்ள உரிமைக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றார்.பங்கு குரு ஜோசப் ஆல்பர்ட் பேசுகையில், காண்டியார் என்பது பிரெஞ்ச் பெயர், செஞ்சி செயின்ட் மிக்கேல் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர். இவரது கல்லறை சர்ச்சின் பின்புறம் உள்ளது.காண்டியாருக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்யக் கோரி 2000வது ஆண்டு, செஞ்சி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டில் 250 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போலீசார் நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் சொத்தில் பிரவேசித்தவர்களை தடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சமாதானக் கூட்டம் தேவையில்லை. சொத்துக்கான ஆதாரத்தை கொடுத்துள்ளோம். சொத்தை எங்களிடம் ஒப்படையுங்கள். கிரய பத்திரத்தை தவிர வேறு மூலப் பத்திரங்கள் கிடையாது.முதல் கூட்டத்தில் கோவிலுக்கு இடம் ஒதுக்கித் தர அவகாசம் கேட்டோம். இப்போது அதை தரமுடியாது. வேண்டுமானால் மார்க்கெட் மதிப்பிற்கு கிரயம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.பிறகு உள்ளூர் பிரமுகர்களை கொண்டு நடந்த மூன்றாவது கூட்டத்தில், இரு கூட்டங்களிலும் என்ன கோரிக்கை விடுத்தனர் என்பது குறித்து முழுமையாக அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.இரண்டாவது கூட்டத்தில், பத்திரத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில் அது உண்மையானது என்று தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்தனர். இந்துக்கள் வழிபாட்டிற்கு கோரிக்கை விடுப்பது பற்றி கிறிஸ்தவர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும் என்று பொறுப்பை கிறிஸ்தவர்கள் மீது அரசு அதிகாரிகள் திணித்தனர். அவர்கள் தங்களின் பேராயரை கேட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர். அதற்காக 10 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அவகாசத்தை வழங்கி 15ம் தேதிக்கு கூட்டத்தை, சப் -கலெக்டர் மஞ்சுளா ஒத்தி வைத்தார்.இரண்டு நாளில் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிப்பதாக கூறித்தான் தாசில்தார், கோவில் சாவியை வாங்கினார். 15ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடத்தாமல் மூடிவைக்க முடியாது. வழிபட்டிற்கும், அபிஷேகம் செய்யவும் கோவிலை திறந்து விட வேண்டும் என, இந்துக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.இது குறித்து கிறிஸ்தவர்கள் கருத்தை கேட்காமல், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சப்- கலெக்டர் மஞ்சுளா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்களின் ஒரு பகுதியினர் வெளிநடப்பு செய்தனர்.செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : கிறிஸ்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த செஞ்சி வக்கீல் பூபதி கூறுகையில், "பீரங்கி மேட்டை சேர்ந்த கணேசன் சார்பாக, கடந்த 2000ம் ஆண்டு இந்து கோவில் உள்ள இடத்தின் பட்டா, கிறிஸ்தவரான காண்டியாருக்கு கொடுத்தது செல்லாது என்று வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கில் கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ., காண்டியார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். வழக்கு நடந்த ஐந்து ஆண்டும் எந்த அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்ற தகவலை அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் ஆஜராகவும் இல்லை.காண்டியார் தரப்பில் சம்மனை இறுதிவரை பெறவில்லை. பேப்பரில் விளம்பரம் செய்து எக்ஸ் பார்ட்டியாக வழக்கு முடிய வேண்டிய நிலையில், வழக்கு தொடர்ந்த கணேசன் உடல் நலம் இல்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர், வழக்கில் ஆஜராகாமல் போனதால் வழக்கை தள்ளுபடி செய்தனர். வழக்கில் சம்மன் அனுப்பிய தொகையைத்தான் அவரிடம் வசூலிக்க உத்தரவிட்டனர். இது அபராதம் கிடையாது. கிறிஸ்தவர்கள், மயிலம் ஆதினத்திடம் இருந்து 1878ல் கிரயம் பெற்று இருந்தாலும் செஞ்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2000ம் ஆண்டு வரை இதை அனுபவித்ததற்கான ஆதாரம் கிடையாது.கிரயம் பெற்று இருந்தாலும், கிரயம் பெற்றவர் வேறு, பட்டா பெற்றவர் வேறு. கிரயப்பத்திரத்திலோ, பட்டா ரசீதிலோ கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்று எந்த ஆதாரமும் கிடையாது.கிரையம் வாங்கியவர் தனிப்பட்ட நபர். அவரின் வாரிசுகள் யாரும் இதில் உரிமை கோரவில்லை. சொத்து யாருக்கு என்றும் அவர் எழுதி வைக்கவும் இல்லை.காண்டியார் பெயரில் பட்டா வழங்கி இருந்தாலும் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி எடுக்க வேண்டும். (அனுபவத்திற்கு கொண்டு வர வேண்டும்) அதுவும் நடக்கவில்லை. இந்த சொத்தை, கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை' என்றார்.மனதை புண்படுத்துகின்றனர் : கிறிஸ்தவர்கள் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் செல்வராஜ், சமாதான கூட்டத்தில் பேசுகையில், கிறிஸ்தவர்கள் கோவிலை பூட்டியதாக வரும் செய்திகள், கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. நாங்கள் பிரச்னைக்கு உரிய இடத்திற்கு சென்ற போது அங்கே சரவணன், வெங்கடேசன் என இருவர் இருந்தனர். கோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. முதல் கூட்டத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று கூறியிருந்த போது, ஏன் வந்தீர்கள் கோவில் பூட்டையும், சாவியையும் என்னிடம் தாருங்கள் என வாங்கினேன்.இதற்குள் அங்கு வந்தவர்கள் எங்களை மிரட்டினர். அப்போது அங்கு வந்த தாசில்தார், இந்துக்களை விட்டே கோவிலை பூட்டி சாவியை வாங்கினார். நாங்கள் வழிபாட்டை நிறுத்தியதாக கூறுவது தவறு என்றார்.இந்த பிரச்னை தொடர்பாக இந்து முன்னணி மாவட்டச் செயலர் சிவசுப்பிரமணி கூறுகையில்,"இதன் மூலம் இந்துக்களை பணிய வைக்க அரசு முயல்கிறது. எந்த அடிப்படையில் காண்டியார் பெயருக்கு பட்டா வங்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு, அரசிடம் எந்த ஆவணமும் இல்லை என பதில் கொடுத்துள்ளனர். இது குறித்து மேல் முறையீடு செய்ய உள்ளேன்' என்றார்.செஞ்சியில் இந்து கோவில்களின் நிலை : நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கட்டிய மிகப்பெரிய கோவில்கள், போரில் சேதப்படுத்தப்பட்டன. கலைநயம்மிக்க பட்டாபிராமர் கோவிலில் இருந்த உயரமான துண்களை பிரெஞ்சு ஆட்சியின் போது, புதுச்சேரி கடற்கரையை அழகு படுத்த எடுத்துச் சென்றனர். இன்றும் சிறப்பான கட்டுமானத்துடன் காணப்படும் செஞ்சிக் கோட்டை வெங்கட்ரமணர் கோவிலை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோவில்களில் மீதமிருக்கும் மண்டபங்கள், கோபுரங்கள், இதில் உள்ள சிற்பங்களும், பாரம்பரியத்தின் மீதும், கலையின் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் வருத்தமடையச் செய்யும். கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய கோவில்களை கட்டுவதற்கு முன், பழமையான கோவில்களை பராமரிப்பதும், அழிவில் இருந்து தடுப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.நமது சிறப்பு நிருபர்-

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Very good my dear brothers,

this is the beginning,,, soon we convert all தி ஹிந்துஸ் as to christians and change the hindu''''s head place Tirupathy as a big church.

do it in anyway.....open many schools, hospitals......slowly convert the hindu childrens to pray our lord jesus and offer more facilities for the patients.......etc......politicians and cinema actors will help us, they teach ''''Emmadhamum Sammadham'''' to only for hindus and not for our christians...ok

but all the hindus should be brain washed slowly and made to think as jesus is the only lord. 
by A Joseph,Bangalore,India    10-02-2010 19:28:13 IST
 சமீப மாக வந்த ரயில்வே பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எக்ஸாம் பி முஸ்லிம் கிறிஸ்டியன் மற்றும் சீக்கியர் களுக்கு கெடையாது. வாழ்க பாரதம்  
by G SRINIVASAN,srirangam,India    09-02-2010 19:45:37 IST
 அறநிலையத்துறை என்ன செய்யும். யாராவது சண்டை போட்டு கோயிலை கைப்பற்றி கட்டிகொடுத்தால் அதிகாரியை போட்டு கொள்ளையடிக்கும். அதுவரையில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும்.  
by t.c. shrinivaasan,chennai,India    09-02-2010 12:42:40 IST
 அனைவரும் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். மத சார்புடைய புராதன வழிபாட்டு சின்னம் அல்லது கட்டிடம் அல்லது கோவில் இருந்தால் அதை யாரேனும் வாங்கவோ விற்கவோ செய்யலாமா ? அப்படி செய்தல் அவர் ஒரு .....தேச துரோகி.  
by R RENGX,CHENNAI,India    09-02-2010 08:05:07 IST
 the general commons are not much interested on who owns the land . The land which hold ancient monuments shouldn''t be transfered to any third party at any cost. The income from Tirupathi is enough to buy Velakanni ,but it is possible for Christians to digest the fact.

Humans should first try to respect other''s feeling ,irrespective of their religion. At least in near future , this kind of acquiring land should be stopped by the Govt. 
by JK JK,chennai,India    09-02-2010 06:30:19 IST
 Being a Christian....I can see the problem as real estate issue....First of all I strongly condemn our Christian Priests involved on this…I strongly urge our bishop should take severe action against him…Its very clear that whoever involved both Christian and Hindu are towards the value of property and they don’t have any interest on integrity among the society….Best solution would be leave the temple to Hindus and Government should take the remaining property…Kind request to Hindu friends here…if you share this issue with any Christian and You can see 90% of Christian will not support this…This is issue created by the individuals not a religion….We already have enough problem and don’t give a chance to create another problem… 
by Jb John,Trichy,India    08-02-2010 23:17:18 IST
 it looks like whoever willing to pay more bribe will win it.. Relegion doesnt do anything here. ALL MONEY MINDED.. as dinamalar mentioned now the cost crosses 2-3 crores.. trying to earn as much they can with Relegion name....  
by J J,woodbridge,United States    08-02-2010 22:33:08 IST
 Hello Christians/Muslims,
You should remember something in the first case. There was no other religion in INDIA other than Hinduism. When different outside rulers invaded india, then came the other religions. So Your older generations were basically Hindus. Somehow either by conversion or by birth you have converted yourself to other religion. Chris..stop converting other religious people in the name of helping them out of poverty. Muslims...no need to tell. Stop all your activities. Even if there is a rotten mango in a bagfull of Mango basket everything will go waste.
Hindus, Its time for us to unite and drive out all these evil forces.both political and religious...JAIHIND. 
by SK சஷி,chennai,India    08-02-2010 22:32:08 IST
 அய்யா கிறித்துவ நண்பர்கள்ளே வணக்கம். கி. பி. 1498 இல் கள்ளிகோட்டை ல் வந்து இறங்கிய வாஸ்கோடாகாமா அதன் பிறகே British போன்ற வெள்ளையர்கள் வந்தார்கள். வந்து நம் India வை கொள்ளை அடித்தார்கள், சுரண்டினார்கள். மனதில் கை வைத்து சொல்லுங்கள் 600 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த கிறித்துவ மதம் நம் India வில் இருந்தது. so நீங்கள் India வில் எந்த ஒரு மண்ணையும் சொந்தமாகா நினைக்க கூடாது. நான் தெரியாமல் கேட்கிறேன் அது என்ன மற்றவர்களை கட்டாய படுத்தி மதம் மாற வைப்பது. இந்துக்களான எங்களுக்கு எந்த ஒரு குல தேவதை கோவிலும் வெளி நாட்டில் இல்லை. உங்களுக்குதான் வாடிகன் போன்ற வெளி நாட்டில் உள்ளது. கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே.....(தயவு செய்து கட்டாய மத மாற்றம் வேண்டாம் ). 
by R Ramana,Chennai,India    08-02-2010 20:30:33 IST
 இந்த நேரங்களில் மட்டும் தான் இந்துக்களே ஒன்று சேருங்கள் மற்ற நேரங்களில் வேறு சாதி என்று பிரித்து வைக்கும் கூட்டத்தினரை எப்படி நம்புவது?
பெயரிலும், முகத்திலும் மற்றும் உடம்பிலும் வித்தியாசங்கள் காட்டுவோர் ஒற்றுமை பற்றி பேசுவது காரியத்திற்க்காகவே.  
by GR Kris,Chennai,India    08-02-2010 20:24:30 IST
 as long as vatican Agent Sonia is there these things will continue,here TN another sub agent M K is there to support in the name of minorities,It is long term plan from vatican to destroy the indian culture by using indians(hindus) I dont know what they are going to achieve by pledging thier won mother land and culture to stay in power and harvesting money and property.Only god knows may be within 100 years india become mjority christian population.actually vatican estimated about 300 years,after Sonia is arrived here thier target has reduced to 1/3 of time.  
by N.K. Janarthanam,jubail,Saudi Arabia    08-02-2010 20:22:07 IST
 ஐய்யா, புண்ணியவான்களே....தயவுசெய்து உணர்ச்சிகரமாக பேசி/எழுதி பிரச்னையி பெரிதாக்க வேண்டாமே.. தன் மதத்தை புகழுங்கள்....பிற மதத்தை இழிவு படுத்தாதீர்கள்....
இப்படிக்கு.. அமைதி ஐ வேண்டும் இந்தியனுள் ஒருவன்....
 
by S ஜைனுல்,jubail, Saudi,India    08-02-2010 19:34:27 IST
 மிஸ்டர் பராங்குசம் அவர்களே, கிறிஸ்தவர்களில் புராட்டஸ்டன்ட், கத்தோலிக்கர் மற்றும் பெந்தெகொஸ்தே என்னும் மூன்று பிரிவினர் உண்டு. தனிதனி மத நம்பிக்கைகளைக்கொண்ட பிரிவுகள். ஒருவருக்கொருவர் எவ்விதத்திலும் ஒத்து போகமாட்டார்கள். அப்படியிருக்க அணைத்து வாசர்களே மற்றும் பொது மக்களே எதற்கெடுத்தாலும் பொதுவாக எல்லா கிறிஸ்தவர்களையும் தாக்கி மனதை புண்படுத்தாதீர்கள். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள் . 
by Thaa Jayathkumaar ,Trichy [ camp Bangalore ],India    08-02-2010 19:31:49 IST
 comment part 1:
அன்பான இந்துக்களே நாம் எல்லாம் நமக்கு நாமே அடிமைகள் .... அதான் பல நூற்றாண்டுகள் பழமையான இந்துக்கோவிலை கிறிஸ்தவர்கள் உரிமைகொண்டாடுகிறார்கள்...
இப்போதும் கூட எவ்வளவு பேருக்கு இந்த விஷயம் தெரிகிறதோ என்று தெரியவில்லை.. எவ்வளவோ இந்துக்களுக்கு இது ஒரு செய்தி மட்டுமே ..அதை பற்றி எந்த விழிப்புணர்வும் அவர்களுக்கு வர வாய்பில்லை,காரணம் நம்மை இணைப்பதற்கு எந்த ஒரு இயக்கமோ ,தலைமையோ இல்லை ,சினிமாவில் பீடி குடித்தால் கற்பை பற்றி பேசினால், வேலைக்காரியை கேவலமாக பேசினால்,ஆஸ்திரேலியாவில் சேட்டை செய்யும் மாணவர்களுக்கு என்று, எவ்வளவோ இதை விட சிறிய விசயங்களுக்கு பெரிய போராட்டம் செய்ய அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் உள்ளது ஆனால் உலகின் தொன்மையான ,பல சமயங்கள் தோன்ற காரணமாயிருந்த நம் சமயம் அது தோன்றிய இடத்திலேயே அடிமைப்பட்டு கிடக்க காரணம் பல இருக்கலாம் .அது அன்று ..ஆனால் இன்று, நம்மிடம் ஒற்றுமையும் விழிப்புணர்வும் இல்லாதது தான் முதல் காரணம் ... 
by k ஜெயமுருகன் கிளியூர் ராமநாதபுரம் ,kiliyoor,ramanathapuram,India    08-02-2010 18:33:18 IST
 அன்பான இந்துக்களே நாம் எல்லாம் நமக்கு நாமே அடிமைகள் .... அதான் பல நூற்றாண்டுகள் பழமையான இந்துக்கோவிலை கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்...
இப்போதும் கூட எவ்வளவு பேருக்கு இந்த விஷயம் தெரிகிறதோ என்று தெரியவில்லை.. எவ்வளவோ இந்துக்களுக்கு இது ஒரு செய்தி மட்டுமே ..அதை பற்றி எந்த விழிப்புணர்வும் அவர்களுக்கு வர வாய்பில்லை,காரணம் நம்மை இணைப்பதற்கு எந்த ஒரு இயக்கமோ ,தலைமையோ இல்லை ,சினிமாவில் பீடி குடித்தால் கற்பை பற்றி பேசினால், வேலைக்காரியை கேவலமாக பேசினால்,ஆஸ்திரேலியாவில் சேட்டை செய்யும் மாணவர்களுக்கு என்று, எவ்வளவோ இதை விட சிறிய விசயங்களுக்கு பெரிய போராட்டம் செய்ய அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் உள்ளது ஆனால் உலகின் தொன்மையான ,பல சமயங்கள் தோன்ற காரணமாயிருந்த நம் சமயம் அது தோன்றிய இடத்திலேயே அடிமைப்பட்டு கிடக்க காரணம் பல இருக்கலாம் .அது அன்று ..ஆனால் இன்று, நம்மிடம் ஒற்றுமையும் விழிப்புணர்வும் இல்லாதது தான் முதல் காரணம் ... 
by k ஜெயமுருகன் கிளியூர் ராமநாதபுரம் ,kiliyoor,India    08-02-2010 18:29:20 IST
 commend part 2....
நமக்கு பல கடமைகள் நம்முன் உள்ளது .மதம் வளர்பதோ,பரப்புவதோ,அதற்காக போராடுவதோ உயிரை விடுவதோ ஒரு சாதாரண மனிதனுக்கு , பாமரனுக்கு அவசியமும் இல்லை,அது முடியாத காரியம் .ஆனால் நம்மால் ஒன்று மட்டும் முடியும், வாக்களிக்க முடியும் ... நம்மை சிறுமை படுத்த நினைப்பவர்களை நாமும் சிறுமைபடுத்துவோம்,விரட்டி அடிப்போம், துரோகிகளை, வாக்களிப்பதன் மூலம் ...நம் சமயம், பண்பாடு, இனம் ,மொழி, தேசம் இதில் ஏதேனும் ஒன்றுக்கு எவன் ஒருவன் துரோகம் செய்ய நினைக்கிறானோ அவன் தான்
நம் முதல் எதிரி,துரோகி ... இந்துக்களே பாரதிய ஜனதா கட்சியை, மதவாத கட்சி என்று சொல்லும் நிலைமை இந்தியாவில் இருக்கும் வரை இந்துக்களையோ இந்து சமயத்தையோ காப்பாற்ற அந்த ராமன் தான் மீண்டும் அவதரிக்க வேண்டும் ... புரிந்து கொள்ளுங்கள் மக்களே புரிந்து கொள்ளுங்கள் ...ஜெய்ஹிந்த்  
by k ஜெயமுருகன் கிளியூர் ராமநாதபுரம் ,kiliyoor,India    08-02-2010 18:27:17 IST
 அய்யா
எல்லா கோவில் நில பத்திரங்களையும் திரும்ப செக் பண்ண சொல்லுங்கய்யா.

திருப்பதி கோவிலையும், மைலாபூரையும் அந்தோனியார் பேர்ல பத்திரம் போட்டுருக்க போறாங்க.  
by A காசி,trichy,India    08-02-2010 18:25:55 IST
 அரசியலில் ராமரால் அழித்தவர்கள் இருகிறார்கள். அந்த வரிசையில் நீங்கள் சேராமல், பகுத்தறி பேசி கொண்டிருக்காமல் இன்னொரு அயோத்தியாக உருவாகாமல் இருக்க உடனடி தீர்வு கண்டிட வேண்டும்  
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India    08-02-2010 18:04:04 IST
 This whole issue is a local issue, to bring this up in a national daily is not a very health sign ....  
by இந்தியன்,London,India    08-02-2010 17:45:24 IST
 அன்பு நண்பர்களே, தயவுசெய்து, இந்த பிரட்சனையை மதம் கண் கொண்டு பார்க்காமல் நிலப்பிரச்சனை கண் கொண்டு பார்க்கவும்.
!. இந்த பிரச்சனையை பார்க்கும் போது, யார் இந்த இடத்தை கிறிஸ்தவர்களுக்கு விற்று பணத்தை எடுத்துக் கொண்டது?
!! அனேகமாக ( நான் நினைக்கிறேன்) இன்று உள்ள மார்கெட் ரேட் போட்டு கொடுத்தால் கிறிஸ்தவர்கள் வாங்கி கொள்வார்கள் என்று. ஞாயமில்லை இருந்தாலும் மத பிரச்சனையை தவிர்க்க.
!!! சில நண்பர்கள் கருத்துகள் எழுதும் போது எதோ இந்திய கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வேற்று நாட்டு அந்நியர்களை பார்ப்பது போல் தோன்றுகிறது. நாங்களும் இந்தியர்கள் தான். உங்கள் சகோதர சகோதரிகள் தான். மதத்தால் மட்டுமே மாறுபட்டு உள்ளோம். தயவு செய்து பிரித்து பேச வேண்டாம்.
வாருங்கள்!!! மதம் கடந்த மனிதனாய் வாழ்வோம்.
தினமலருக்கு தாழ்மையான வேண்டுகோள்! உங்கள் இதழ் அயல் நாடு வாழ் தமிழர்களுக்கு பாலைவன ஊற்று. நம் நாடு மத பிரச்சனைகளால் பட்ட, படும் பாடு போதும். நன்றி.  
by A Johnson,Roma,India    08-02-2010 17:17:53 IST
 If this is not stopped right now, near future there wont be a temple in Srirangam, Thirupathi, Kanchipuram & Chidambaram; dont forget already mathura is gone; ayodya is under dispute;  
by S Sundar,chennai,India    08-02-2010 16:49:51 IST
 Well Said Mr. Pandian 
by P Sumi,Manama,Bahrain    08-02-2010 16:22:48 IST
 டியர்

A ப்ளடி பக்கிரி ,ARASAMARATHTHADI ,India

''''மாதா கோயில்கள் போல, பள்ளிவாசல்கள் போல தன இனங்களை இணைக்கும், மதபோதையூட்டும் இடமல்ல இந்து கோயில்கள்.''''''

மேலே குறிப்பிட்ட உங்கள் மொக்க கருத்துக்கு முடிவாக சொல்லுகிறேன். உங்களை போல இன்னும் ஒருவர் இருந்தாலே போதும் மதக்கலவரம் உண்டாகிவிடும்''''

பணிவாக கேட்கிறேன்'''' நீங்கள் சொல்லும் கருத்து அடுத்த மதத்தை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டும்!

நன்றி  
by M RIYAS,Al-khobar,Saudi Arabia    08-02-2010 12:57:00 IST
 என்னடா புண்ணாக்கு ஜனநாயகம்.? '' ஒண்ட வந்த பிடரி , ஊர் பிடரி யை விரட்டின கதை.'' '' இருக்க இடம் கொடுத்தா படுக்க படுக்க பாய் கேட்டானாம். '' கவனம் தேவை :- இந்திய கோவில் இடங்கள் மீது . அன்று ஒரு கஜினி. இன்று பல கஜினிகள்.  
by R பிரவீன்,Chennai,India    08-02-2010 12:50:39 IST
 yarukkum yentha pathippum illamal arasu
paarthukollavendum 
by s kumar,uae,United Arab Emirates    08-02-2010 12:14:02 IST
 இம்மானுவேல்,

என்ன? ஒரிசாவுல 2000 கிருத்துவர்கள் கொல்லப்பட்டனரா? கர்த்தர் மீது ஆணையாக கூறுங்கள்? இன்னும் எத்தனை காலம் தான் வரலாற்றை திரித்து திரித்து கூறிக்கொண்டிருப்பீர்கள்? மனசாட்சி கிடையாதா?

உங்களை எல்லாம் இயேசு எப்படி தான் மன்னிப்பாரோ? 
by Srinivasan,Chennai,India    08-02-2010 12:03:32 IST
 மற்றுமொரு சோமாலியா உருவாவதற்கு வாடிகன் அனுப்பிய தூதர்கள் இவர்கள், எங்கெல்லாம் இந்த தூதர்கள் காலடி எடுத்து வைக்கிறார்களோ அங்கு யுத்தம் எந்த பெயரிலும் வரும் (ஈராக் , பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள்,) மிக பெரிய உதாரணம்.

இன்றைய கால கட்டத்தில் இந்தியாவை பிளவு படுத்த யாரும் தேவையில்லை, கிறிஸ்துவர்களே போதும், இங்கிருந்து கொண்டு மற்றோருக்கு சலாம் அடிக்கும் இவர்கள் நாளை, பக்கத்தில் உள்ள முசுலிம் நாடுகளுக்கு எதிராக நம் மக்களை போர் வீரர்களாக அனுப்பி மடிய வைப்பது நிஜம்

எப்படியும் இந்தியர்கள் ஒற்றுமை இல்லாதவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது ,

வாழ்க வளமுடன்  
by k சஞ்சீவ்,bangalore,India    08-02-2010 12:00:29 IST
 இந்து கோயில்களுக்கு மட்டும் அறநிலைய துறை. மற்ற மதங்களில் கை வைத்தால் பொங்கி எழுவார்கள். அரசே இந்துக்களுக்கு எதிராக இருக்கும் போது நிலைமை இப்படி தான் இருக்கும். இந்து கோயில்களை நாங்களே பராமரித்துக்கொள்கிறோம் என்று இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோரிக்கை வைப்போம். கோயில்களை மீட்போம். அது வரை மத வழிபாட்டை பொறுத்தவரை நாம் தான் சிறு பான்மையினர், அதாவது நம் கோவில்களில் வழி பட அரசு மற்றும் பிற மதத்தினரை கெஞ்ச வேண்டிய நிலைமை தான் நீடிக்கும்.  
by N.S Sankaran,Chennai,India    08-02-2010 11:53:07 IST
 தமிழக அரசு இதை வளர விட்டு வேடிக்கை பார்க்காமால் இதை அரசியல் ஆதயதுக்கு அரசியல் ஆக்கி சொதப்பி அதில் குளிர் காய்ந்து ஒட்டு வேட்டை நடத்தாமால் மத இன விவகாரத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கு. அதை கெடுத்து வடமாநிலங்கள் போல இங்கேயும் மதவெறியை துண்டி ஒன்றாக இருக்கும் மக்களை உங்கள் குடும்ப நலன் அரசியல் நலனுக்க பிரித்து விடாதிர்.தமிழக அரசு உடனடியாக இதில் தலையிடனும்..இரு சமுதாயத்தினர் வசம் பேச்சு வார்த்தை எடுத்து முடிவு எடுக்கணும்.
தமிழக அரசியல் வாதிகள் வியாதிகள் இத அரசியல் ஆக்காவேணாம்.
கடவுளின் பெயாரால் சண்டை வேணாம் கடவுள் சாமி எதிர்பார்ப்பது பக்தர்களின் பக்தியை தான் நல்ல செயல்கள் தான் மனித பலிகளை இல்லை..  
by R. சூர்யா ,chennai ,India    08-02-2010 11:44:14 IST
 கண்ணில் நீர் வரும் செய்தி இது...... என் இந்திய தேசத்தில் என் போன்ற அப்பாவி ஹிந்துக்கள் இனி வாழ் வழி இல்லாமல் செய்து விடுவார்களோ இந்த பாவி அரசியல் வாதிகள் ....... இப்படி ஒரு அப்பட்டமான உரிமை மீறல் காலம் காலமாய் ஹிந்துகளின் உரிமையான இடம் இன்று நடுவர்களின் தீர்பிற்காக....இதில் என்ன தீர்ப்பு வேண்டி இருக்கிறது தெரியவில்லை ...ஹிந்து சகோதரர்களே நாம் ஒற்றுமையை இருந்தால் இவ்ளோ தைரியமாக நமது கோவிலை அபகரிக்கும் அயோக்கியர்களுக்கு அரசாங்கம் ஆதரவாக இருக்குமா ....... நாம் நம் தலையில் மிளகாய் அரைக்கும் அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்போம் ...அனால் கிருதுவர்களோ முஸ்லிம்களோ அப்படி அல்ல அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது அதனால் அவர்களுக்கு எதிராக சிறு துரும்பை கூட இந்த அரசாங்கம் கில்லி போடா போவது இல்லை .........உணர்ந்து கொள் உன் மதத்தில் சீண்டுவதும் உன் தாயை சீண்டுவதும் ஒன்றுதான் புரிந்துகொள்....... ஹிந்து சகோதரர்களே ஒன்றுபடுவோம் நமது மதத்தை நமது நாட்டை காப்போம் ........ உண்மையான மதவாதி எவன் என அடையாளம் கண்டு வாக்கு செய்வோம்  
by cs subash,isatown,Bahrain    08-02-2010 11:42:35 IST
 ஜெய் ,கனடா , Very nice comment......... :-) 
by sree sree ,Thanjavur.,India    08-02-2010 11:16:26 IST
 மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். ஆளுக்கு ஒரு நியாயம். சிறுபான்மையினர் என்றால் விட்டுக்கொடுக்க வேண்டும் பெரும்பான்மைக்குதான் எல்லா உரிமையும் . ஒரு கண்ணில் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்பு. நாட்டில் அமைதி நிலவ வழிபாடுகள் நடத்தி என்ன பயன்? மனிதர்களுக்குள் நீதி செய்தால் இறைவனும் மனிதனுக்கு நீதி வழங்குவார்? புரியும் மனம் இருந்தால் புரியும்! 
by a அரசன்,chennai,India    08-02-2010 11:00:05 IST
 Hello immanuel
i agree with your comments
mini
 
by ds mini,hofuf,Saudi Arabia    08-02-2010 10:54:18 IST
 Very Soon Hindus would be reduced to a minority in Tamil Nadu and the whole of India.Already 50% of people in Kanyakumari are Christians.Religious conversion is taking place rapidly under UPA nad DMK regime.It is time Hindus wake up from their deep sleep 
by g vinoth,Doha,Qatar    08-02-2010 10:52:36 IST
 Dear all christian are not giving problems for example at orissa morethan 2000 christians died we never fought back we forgived them, and priest stains with his two children were burned and his wife forgived tara sing so we always give off ........ pray and we will get and for all of you we never want that land see soon we hand over the same to the Hindus .... god bless you  
by d immanuel,chennai,India    08-02-2010 10:42:52 IST
 இந்த பிரச்சனை கோவில், சர்ச் இடத்துக்வோ இல்லை, பணம் படுத்தும் பாடு. ஐநூறு ஆண்டு சும்மா இருந்துவிட்டு இப்போது வருவதத்க்கு காரணம் பணம் மட்டுமே , இரு தரப்பினரும் சேர்ந்து முடிவெடுங்கள். அய்யா நண்பர்களே வீணான மத துவேச கருத்துக்களை பொதுவான இடத்தில பரப்ப வேண்டாம். நாம் என்ன அறிந்தோம் அங்கு என்ன நடக்கிறது என்று. அமைதி காப்போம். நல்லதே நடக்கும்  
by s தீபக் ,chennai,India    08-02-2010 10:33:17 IST
 My native place is near Gingee. That is 3 Crores properties, This is not for God. Only b cos of money..
But locking temple and not admit for pooja is too much.. If we lock the same thing for them. they will fire this whole TN.  
by s Dinesh Babu,Dubai,United Arab Emirates    08-02-2010 10:17:14 IST
 பூமியில் ஒவ்வொறு உயிரும் இன்புற்று இருக்கவேண்டும் என்பதே இந்துக்களின் சித்தாந்தம். நீங்க அனைவரும் நேற்றைய இந்துக்கள் என்பது நீங்கள் அறியாததா, உங்களின் பண கஷ்டம் தீர்க்கப்பட்ட அன்று நீங்கள் துரோகியா மாரினீர்கள் என்பதே உண்மை. நீங்க போடும் வெள்ளை அங்கி, வெள்ளை கால்சட்டையா மாறாம பார்த்துக்கோங்க. வாழ்க அனைத்து மதங்களின் நல்ல சிந்தனைகள், ஒழிக சில மத விரோதிகள்.
 
by த பாண்டியன்,தமிழ் நாடு,India    08-02-2010 10:02:15 IST
 I dont understand Y this christian wants to put them in trouble...தவளை தன்
வாயால் கெடும்
Most of the people mis understand abt hindus.they think Hindus are very soft people...they got no unity etc.
One thing people in india wont forgot that babar masjid and Gujarat church father Incident..where he was burn alived..because of this conversion issues.
'' ALL HINDUS NOT TO WORRY VERY SOON TN GONNA HAVE A GOOD HINDU CM EVEN THOUGH SHE IS ARROGANT BUT SHE KNOWS THE VALUE OF HINDUISM AND SHE KNOW HOW TO RESPECT HINDUISM N PROTECT HINDUS.''
sub collector manjula must be transfered immediately to Gujarat or Maharashtra or UP.to teach her a good lesson...because only in TN she can show her power since we all Eva 
by LG Yoganand,KualaLumpur,Malaysia    08-02-2010 09:56:37 IST
 எல்லோரும் சும்மா பார்த்து கொண்டிருக்க மாட்டோம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்துகளுக்கு என்று ஒரு தலைமை வேண்டும்.  
by S ayyavu,Tanjore,India    08-02-2010 09:35:10 IST
 இப்படியே விட்டால் தஞ்சை பெரிய கோவிலையே சொந்தம் என்று சொல்வார்கள். வாழ்க ஜன நாயகம்.  
by A காசி,Trichy,India    08-02-2010 09:27:53 IST
 please frnd stop talking about christians. christianity teach about peace and love not about the diversity.The people behind the problems are not christians. A real christian never do like that. The MLA of the concern area is behind the seen, many people know about it. But they dont want to tel about it, bcas of fear. So please dont critisice the hole christian community. The MLA is a HINDU. so u people must understand the politics. Dinamalr must investicate this issue seriously.
 
by A Immanuel,singapore,Singapore    08-02-2010 07:52:49 IST
 ஒரு காலத்தில் பார்சி எனப்படும் ஈரான் உலகிலேயே வலிமை மிகுந்த zorastrian மத மற்றும் நாகரீகம் செழித்த நாடாக விளங்கியது. இன்று சுய கலாசார மற்றும் மத அழிவால் எப்படி இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.

இந்நிலை இந்தியாவிற்கும் வராமல் இருக்க செஞ்சி கோதண்டராமரையும், அரசையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.  
by H ஜக்குபாய்,Putugai,India    08-02-2010 07:36:25 IST
 ஒரு அரபு, பாலைவனத்தில் அவரின் ஒட்டகத்துடன் போய் கொண்டிருந்தார். அப்போது கடுங்குளிர் காற்று வீச, அரபு தன்னுடைய டென்ட்ஐ விரித்து படுத்தார். அப்போது அவரது ஒட்டகம் வெளியே காற்று வீசுகிறது; குளிர் அடிக்கிறது; அதனால் நான் தலையை மட்டும் டென்ட் உள்ளே வைத்து கொள்கிறேன் என்றது. பிறகு மெல்ல மெல்ல உள்ளே வந்து அரபை வெளியே தள்ளி விட்டது. இதுதான் இந்துக்களின் நிலைமை இன்று. ஒரு காலத்தில் வியாபாரம் செய்ய வந்தவர்கள், மதத்தை, ஆசை வார்த்தைகள், மிரட்டல் உருட்டல்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை பயன் படுத்தி பரப்பினர். அது இன்று புற்றுநோய் போல இந்திய கலாசாரத்தையே அழித்து கொண்டிருக்கிறது. மாதா கோயில்கள் போல, பள்ளிவாசல்கள் போல தன இனங்களை இணைக்கும், மதபோதையூட்டும் இடமல்ல இந்து கோயில்கள். இந்து கோயில்களுக்கு வருபவர்கள் மத வழிபாட்டுக்கும் ஆன்மீகத்துக்கும் தான் வருகிறார்கள். இவர்களை இணைக்கும் ஒரு இயக்கம் இல்லாததால் பிரிந்து ஒற்றுமை இன்றி இருக்கிறார்கள். கொள்ளை அடிப்பதற்கு அறநிலை அமைச்சகம்; இப்போது அது தூங்கி கொண்டிருக்கிறது. ஏன் என்றால் இதில் தலை இட்டு தன் வோட்டு வங்கியை சேதப்படுத்த ஆளும் கட்சி தயார் இல்லை. இவ்வளவு காலம் தூங்கி கொண்டிருந்தவர்கள் இப்போது ஏன் விழித்தெழுகிறார்கள் ? உடன் இதில் யாவரும் சம்பந்தபட்டு இந்து கோயிலை மீட்க வேண்டும்.  
by A ப்ளடி பக்கிரி ,ARASAMARATHTHADI ,India    08-02-2010 06:41:10 IST
 செங்கிகொட்டை நம் வரலற்று சின்னம்,அதை சுற்றயுள்ள அணைத்து கோயில்கள் நிலங்கள் அனைத்தும் அப்படியே,இதில் யாருக்கும் உரிமை இல்லை,வெள்ளையர்கள் வெளியேறிய பிறகும் அவர்கள் பேரை சொல்லி ஆதாயம் தேடி மக்களை ஏமாற்றி பிரிவினி உண்டாக்கும் இவர்களை சிறையில் அடைக்கவேண்டும். 
by P.A. அருள்,singapore,India    08-02-2010 06:20:22 IST
 1)Joseph Albert visited temple,before survey and told Saravanan ,TO STOP PUJA & LOCK THE TEMPLE.
2)Now,for TEMPLE AREA ONLY,Christians say,pay MARKET PRICE.
3)SUB-COLLECTOR told puja will be stopped only for 2 days.Now,she has told to stop 15 days.
4)In MK'' own words-''If people voted are happy,he is also happy''.
5)Senji people deserves this rule. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire)    08-02-2010 03:48:03 IST
 now a days these christians are creating lot of problems for the hindus. They were coverting the poor people to christian community. We need to stop these. No one should stop morning pooja as well as evning pooja to God. Even Depty Manjula or thasildar is not having any rights to stop the pooja. If u all do that RAMA will kill the people. King will punish the people imm where as god will wait punish. U all going to see that. 
by S Jayaram,Alkhobar,Saudi Arabia    08-02-2010 03:23:29 IST
 These conversion group alias Pentecostal missionaries are under estimating the Hindu power. How can one take over someone''s land. The temple has been in custom for the last many years. All of sudden, a christian priest claim to build a church is something looks like an idiocy. The conversion starts now and may end with bloody war... 
by PR பராங்குசம் ராமஸ்வாமி,USA,United States    08-02-2010 02:00:46 IST
 i think this problem have started for money not for god...  
by c senthil,abudhabi,United Arab Emirates    08-02-2010 01:59:43 IST
 India has become the country where Hindus cannot live any longer. I dont understand how can anyone even claim that the existing temple/and related lands pertaining to Church. Our temples and sculptures were initially destroyed by the mugal kingdoms, and now our worship symbols are slowly getting destroyed by chiritian institutes and the psuedo politicians. I think Mr.karunanhidhi is instigating this.We should get untied to prevent this occurance anymore anywhere in india. 
by தமிழ்நேசன்,Denver,United States    08-02-2010 01:51:17 IST
 கோயிலை பார்த்தால் குறைந்தது 3 (முன்று) ஆண்டுகள் காட்டிலும் பழமையானது என்று தோன்றுகிறது. எதற்கு 3 ஆண்டு என்று சொன்னால், பாமரன் 3 ஆண்டுகள் அரசு நிலத்தில் குடியிருந்தாலே நிலம் அவனுக்கு சொந்தம், அப்படி பார்த்தால் கொதண்டரமருக்கு இந்த இடம் சொந்தம் இல்லையா? வாழ்க பகுத்தறிவு!  
by திரு ஜெய் ,கனடா ,Canada    08-02-2010 01:35:55 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்