முதல் பக்க செய்திகள் 

அருணாச்சலபிரதேசத்தில் தீ : 12 மாணவர்கள் பலி
பிப்ரவரி 11,2010,15:51  IST

Front page news and headlines today

இடாநாகர் : அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். அருணாச்சல் தலைநகர் இடாநகரில் இருந்து 260 கி.மீ., தொலைவில் இருக்கும் குருங் கம்பி மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. இந்த விடுதி முற்றிலும் மூங்கிலில் கட்டப்பட்டுள்ளது. விடுதியில் 62 மாணவர்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் டான் பாஸ்கோ பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்கள். விடுதியில் திடீரென தீ பிடித்தது. தீயில் கருகி 12 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்த மாணவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து மாவட்ட நீதிபதி ரேமு கெமேகி கூறுகையில் : தீக்கான காரணம் சரிவர தெரியவில்லை என்றார். விடுதியில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால், நேற்றிரவு மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்ததாகவும், மெழுகுவர்த்தியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் நடந்தால் மட்டும் தான் வருத்தப்பட வேண்டுமா. பிஞ்சுக்குழந்தைகள்மேல் நெருப்பின் கோரதாண்டவம். அது எங்கு நடந்தாலும் வயிறு பற்றி எரியத்தான் செய்கிறது. இன்னும் எத்தனை இளம் தலைமுறைத் தளிர்களைப் பலி கொடுத்தால் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பள்ளி, பள்ளி போக்குவரத்து வாகனங்கள், மற்றும் பள்ளி விடுதிகளிற்கான ஒழுங்கு முறை பின்பற்றப்படுகிறதா என்று லஞ்சம் வாங்காமல் கண்காணிப்பார்கள்? 
by K Sriram,Chennai,India    11-02-2010 22:01:29 IST
 Sorry to hear this news. My Hearty condolence to their family memebers. 
by S Hari lakshminarasimhan,Madurai,India    11-02-2010 21:51:13 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்