முதல் பக்க செய்திகள் 

இந்தியா 'நம்பர்-1' : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது
பிப்ரவரி 19,2010,00:00  IST

Front page news and headlines today

கோல்கட்டா : டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக் காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முக்கியமான இரண்டாவது போட்டி, கோல் கட்டாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 296, இந்தியா 643/6 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. 347 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, 4 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. ஆம்லா (49), பிரின்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.ஹர்பஜன் மிரட்டல்: கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வலது காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக இந்திய அணியில் ஜாகிர் இடம் பெறவில்லை. ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க ஹர்பஜன், மிஸ்ரா சிறப்பாக பந்து வீசினர். சற்று நேரம் தாக்குப்பிடித்த பிரின்ஸ் (23) ஹர்பஜனிடம் சரணடைந்தார். டிவிலியர்சை (3) சொற்ப ரன்களுக்கு அவுட்டாக்கினார் மிஸ்ரா. தொடர்ந்து சுழலில் அசத்திய ஹர்பஜன், டுமினி (6), ஸ்டைன் (1) விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆம்லா சதம்: ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் ஆம்லா பொறுப்புடன் ஆடினார். இவருடன் 8 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பார்னல் நல்ல ஒத்துழைப்புக் கொடுத் தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்லா, டெஸ்ட் அரங்கில் 10 வது சதம் கடந்தார். இந்நிலையில் பார்னலை (22) வெளியேற்றி, திருப்பு முனை ஏற்படுத்தினார் இஷாந்த் சர்மா. இவரது துல்லிய வேகத்தில் அடுத்து வந்த ஹாரிசும் (4) நிலைக்க வில்லை."திரில்' வெற்றி: பின்னர் கடைசி வீரராக களமிறங்கிய மார்கல், ஆம்லாவுடன் இணைந்து இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஒருவழியாக ஹர்பஜன் சுழலில் சிக்கினார் மார்கல் (12). தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஆம்லா, 123 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். நாக்பூர் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இந்திய அணி, கோல்கட்டாவில் அதற்கு பதிலடி கொடுத்தது. இவ்வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது. தவிர, டெஸ்ட் அரங்கில் 124 புள்ளிகளுடன் தனது "நம்பர்-1' இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. 120 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் ஆம்லா கைப்பற்றினார்.ரூ. 81 லட்சம் பரிசு: கோல்கட்டா டெஸ்டில், இந்திய அணி வெற்றி பெற்றதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும், டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், 124 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் வரும் ஏப்ரல் மாதம், ஐ.சி.சி., வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சத்தை முதன் முறையாக பெற உள்ளது. கடந்த 2003ல் ரேங்கிங் அறிமுகமானதில் இருந்து, இவ்விருதை ஆஸ்திரேலியா தான் 7 முறை பெற்றது. இதற்கு இப்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஐ.சி.சி., ரேங்கிங்கில் "டாப்-5' டெஸ்ட் அணிகள்:ரேங்க் அணி புள்ளி
1 இந்தியா 124
2 தென் ஆப்ரிக்கா 120
3 ஆஸ்திரேலி யா 116
4 இலங்கை 115
5 இங்கிலாந்து 107கடைசி கட்ட "டென்ஷன்': கோல்கட்டா போட்டியின் கடைசி நாளான நேற்று, இந்திய அணி வெற்றிக்கு கடுமையாகப் போராடி வேண்டியிருந்து. தென் ஆப்ரிக்கா அணியின் முதல் 7 விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்த நிலையில், 8 வது விக்கெட்டுக்கு ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்த பார்னல் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து ஆடினார். அதற்குப் பின் கடைசி வீரராக களமிறங்கிய மார்கல், இந்திய வெற்றியை தாமதப்படுத்தினார். ஆம்லா, மார்கல் ஜோடியை பிரிக்க, இந்திய அணிக்கு 20.4 ஓவர்கள் தேவைப்பட்டது. சேவக், சச்சின் என பவுலர்களை மாற்றிப் பார்த்தார் இந்திய கேப்டன் தோனி. ஆனால் ஆட்டம் முடிய கடைசி 13 நிமிடங்கள் (9 பந்துகள்) இருந்த நிலையில், மார்கலை அவுட்டாக்கி, இந்திய அணிக்கு "திரில்' வெற்றி தேடித் தந்தார் ஹர்பஜன்.இயற்கை சதி முறியடிப்பு: கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. எளிய வெற்றியை நோக்கி 2 வது இன்னிங்சில் பந்து வீசத் துவங்கிய இந்திய அணிக்கு, 4 ம் நாள் ஆட்டம் சிக்கலாக அமைந்தது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, 34.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இயற்கை சதியை முறியடித்து, கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. காயம் காரணமாக ஜாகிர் கான் பந்துவீசாத நிலையிலும் சாதித்து காட்டியது.பவுலர்கள் காரணம்: தோனி: இந்திய கேப்டன் தோனி கூறுகையில், "" இப்போட்டியின் வெற்றிக்கு இந்திய பவுலர்கள் தான் முக்கிய காரணம். கடைசி நாள் ஆட்டத்தில் ஜாகிரும் இல்லை. இருப்பினும் ஹர்பஜன், மிஸ்ரா இணைந்து சிறப்பாக பந்து வீசினர். பார்முக்கு திரும்பிய இஷாந்த், முக்கிய கட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தினார். கும்ளே ஓய்வுக்குப் பின் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் ஹர்பஜன். கடுமையான விமர்சனங்கள் மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் ஹர்பஜன் சாதித்துக் காட்டியிருக்கிறார்,'' என்றார்.ஹர்பஜன் அபாரம்: கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானம், ஹர்பஜனுக்கு மிகவும் ராசியானது. இங்கு கடந்த 2001 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன். தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில்,8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிதேடிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" ஈடன் கார்டன் மைதானம் எனக்கு மிகவும் ராசியானது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில், 3 பவுலர்களை மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும் எங்கள் கடமையை சிறப்பாக செய்தோம். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நெருக்கடி அதிகம் இருந்தது. "நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணிக்கு அனைத்து தகுதியும் உண்டு,'' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்தியா கிரிக்கெட் டீம்ககு எனது வாழ்த்துக்கள். இனி எப்போதும் இந்தியா நம்பர் ஒன தான்.டோனிதான் மிக சிறந்த கேப்டன். தி கிரேட் இந்தியன் ரசிகன். 
by jp ஜெயப்ரகாஷ்,coimbatore,India    22-02-2010 20:42:35 IST
 இந்தியா நம்பர் ஒன் பிடித்தது ஒன்னும் நிரந்தரம் கிடையாது. ஆஸ்திரேலியா மீண்டும் நம்பர் ஒன் ஆகும் என்பது மட்டும் நிச்சயம்.  
by J லியோ,paramakudi,India    22-02-2010 17:29:49 IST
 I LOVE MY INDIA 
by S NAVAB JOHN,ABU DHABI,India    22-02-2010 00:58:35 IST
 உண்மையேல் நான் கடைசி விக்கட் விழும் என்று நினைத்தேன். இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தேன். எனது விருப்பம் நிறைவேறியது  
by S vellaisamyMA,manapparai,India    20-02-2010 04:09:48 IST
 INDHIYA ANIKKU VALTHUKKAL PALA. KOLKATTA PONDRA BATTINGKIRKU OTHULAIKKUM MAIDHANATHIL SIRAPPAGA SEYALBATTA PANDHU VEECHALARKALUKKU ORU PERIYA SABASH SOLLALAM. KADAISI NERATTHIL OUT AAGAMAL NANDRAGA VILAIYADI INDHIYA ANIYAI PADAI PADUTHIYA PARNELL MATRUM MORKEL IRUVARUKKUM SABASH. SAMIBA KALAMAGA INDHIYA ANI TEST POTTIGALILUM SIRAPPAGA SEYALPATTU VARUGIRATHU... VARUM KALANGALILUM ITHE POLA SIRAPPAGA SEYALPADA VALTHUKKAL. 
by U VIJAYA CHANDRAN,Dubai,United Arab Emirates    19-02-2010 22:09:17 IST
 India Rockzzzz.. world cricket is in our control.. BUT HOWLONG????? 
by G Pradeep,Madurai,India    19-02-2010 21:36:49 IST
 THIS IS ONE FOR FANS 
by MS DHONI,ranchi,India    19-02-2010 21:26:20 IST
 வெல்டன் டோனி &கோ, சச்சின், சேவாக், தி கிரேட் லக்ஷ்மன் , & ஜாகிர் சூப்பர் ப்ளேயிங். வாழ்த்துக்கள் இந்தியன் டீம் & இந்தியன் கோச் கேரி கிறிஸ்டன் (சவுத் ஆப்ரிக்கா ).......... ஒரு தின போட்டியிலும் வெற்றி நமதே  
by k பிரபா,Namakkal,India    19-02-2010 21:22:06 IST
 இந்தியாவின் மட்டமான பீல்டிங் பற்றி சொல்ல ஆளே இல்லையா. பில்டிங் ஒழுங்கா இருந்தால் 4 நாளிலேயே மேட்ச் முடிந்திருக்கும். 
by S ஆனந்த்,neyveli,India    19-02-2010 21:16:24 IST
 வாழ்த்துக்கள்  
by j manoj,madurai,India    19-02-2010 21:01:17 IST
 இந்திய அணியாக இருந்தால் எப்போதோ அவுட் ஆகி இருக்கும் என்பது தவறு, 4 வது நாள் மட்டும் தொடர்ந்து இருந்தால் எளிதாக வென்றிருக்கும். இதற்கிடையில் மழை குறுக்கிட்டும் மனம் தளராமல் போராடி வெற்றி அடைந்தது மிகுந்த பாராட்டுக்கு உரிய விஷயம் .  
by b vanmeegnathan,tirunelvelli,India    19-02-2010 20:15:35 IST
 வி ப்ரௌட் ஆப் indian 
by m நாகராஜ்,Hosur,India    19-02-2010 19:25:40 IST
 i wish india team i hope this time we''re win world cup 2011 
by ibm ibrahim,male,Maldives    19-02-2010 18:53:19 IST
 முதல் இடத்தை தக்க வைத்து கொள்ள முழி பிதுங்கியது இந்தியா என்று தான் சொல்ல வேண்டும். லாஸ்ட் பட்ச்மன் மோர்கல் கூட அமலவுடன் இனைந்து , எல்லா பௌளர் களையும் இரண்டு மணி நேரத்திற்கு காய விட்டார். இந்த வெற்றியை நினைத்து கொண்டே அடுத்த ஆட்டத்தில் தோற்று விடாமல் இதில் இருந்து பாடம் கற்று கொள்வுது தான் புத்தி சாலி தனம்.  
by Moo see,Chennai,India    19-02-2010 18:19:56 IST
 இனி எல்லா துறைகளிலும் நம்பர் 1 தான்.  
by V ayya,karur,India    19-02-2010 18:11:48 IST
 Congrats All indians and Team members,
Great ful bating and bowling, fielding is just and improve the future. Thanks & Regards  
by S ராஜ்குமார்,Tirupattur,India    19-02-2010 17:56:58 IST
  இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. நமது இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் (தெ.ஆ) கூறுகையில் சவுத் ஆப்ரிக்கா முதல் போட்டியில் நன்றாக விளையாடி இருப்பதால். இரண்டாவது போட்டியில் தடுமாறும் என்று குறிப்பிட்டு இருந்தார்.அதே போல் அவர்களும் சொதப்பிவிட்டனர்.பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது சரியாகத்தான் உள்ளது.இதே வெற்றியை தொடர வேண்டுமென்றால் கிறிஸ்டனின் சேவை! இவ்விடத்தில் நமக்கு மிக மிக தேவை!!சிந்திப்போம்!!!! செயல் படுவோம்!!!! வெற்றி பெறுவோம்!!!!  
by m pradeepkumar,trichy,India    19-02-2010 17:55:47 IST
 good luck, vetri thodarattum 
by k kannan,dubai,United Arab Emirates    19-02-2010 16:32:27 IST
 i love india.keep it up.i love sachin 
by m bala,madurai,India    19-02-2010 16:06:22 IST
 கன்கிராகிராட்ஸ் ஹர்பஜன். நெருக்கடியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை உலகின் தலை சிறந்த அணியாக கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள். 
by K PALANIAPPAN,singapore,Singapore    19-02-2010 15:16:08 IST
 WELDONE INDIA. PALI KU PALI VANGIVITATHU INDIAN TEAM 
by S SENTHIL KUMAR,DUBAI,India    19-02-2010 15:05:57 IST
 my very heartiest wishes to Indian Team,

All the best...... do the best........ 
by K ராஜ்குமார்,madurai,India    19-02-2010 14:56:57 IST
 Indian Team - ULTIMATE *********** 
by p Ayyampillai,salem,India    19-02-2010 14:34:00 IST
 ''இனி எப்பொழுதும் இந்தியா தான் நம்பர்.1''ஒருநாள் தொடரிலும் நம்பர்1 ஆக திகழ வாழ்த்துக்கள். 
by P.ரவிச்சந்திரன்,manama,Bahrain    19-02-2010 14:12:29 IST
 well done India 
by k mohan,chennai,India    19-02-2010 13:39:42 IST
 India always great team, But Captainship is very important. Now that place very caryfully doing it Mr.Dhoni. Best congrats india all Players. 
by congr mohamed,chennai,India    19-02-2010 13:34:07 IST
 ஆஹா! பிரமாதம் இனிமேல் மாதம் மும்மாரி மழை பெய்யும், வறுமை நீங்கி விடும்.. வேலையில்லா திண்டாட்டம் நீங்கிவிடும்... நாட்டில் எல்லோரும் 24 மணி நேரமும் உழைத்து இந்தியாவை உலகின் நெ. 1 வல்லரசாக முன்னேற்றி விடுவார்கள். 
by R Kannan,Chennai,India    19-02-2010 13:26:39 IST
 congrats to Indian cricket team 
by kamal kamnddin.elleri,dubai,United Arab Emirates    19-02-2010 13:13:30 IST
 amla is a examplery roll model for cricketars & 100% positive approcher 
by V KALAIARASAN,vellore,India    19-02-2010 12:28:35 IST
 தலை சிறந்த டெஸ்ட் அணியாக இந்தியt இருப்பதில் பெருமை !
 
by b vanmeeganathan,tirunellveli,India    19-02-2010 11:49:19 IST
 டோனி

'' பார்முக்கு திரும்பிய இஷாந்த் ''

சூப்பர் commady
 
by S தமிழ் மகன்,TUTICORIN,India    19-02-2010 11:27:39 IST
 really very great. h sing and shakeer khan i like it 
by elavarasan,dubai,India    19-02-2010 10:43:33 IST
 இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள். அதே வகையில் விளையாட்டு மற்றும் பொருளாதாரத்திலும் மென்மேலும் சிறந்து விளங்க இறைவனை பிராத்திப்போம்
 
by D LOGANATHAN,Chennai,India    19-02-2010 10:34:17 IST
 விஷஸ் டு இந்தியன் players 
by n anand,madurai,India    19-02-2010 10:26:12 IST
 My Heartiest congrats to the Indian Team. We also can not deney that Hasim Amlas 8 hour labour in the field.
I am sorry to say that our bowlers are not at par with the international standard, even a samll team like bangala is scoring 400 runs against India shows how weak are our bowlers. 
by S Ashwiniyer,peelamedu coimbatore,India    19-02-2010 10:14:29 IST
 நான் பார்த்த மேட்ச் ல இது போல பார்க்கல. வெரி இண்டரஸ்டிங் கா இருந்தது. சோ கடவுள் இஸ் கிரேட். அண்ட் தேங்க்ஸ் டு இந்தியன் கோச்  
by S சுரேஷ்,chennai,India    19-02-2010 09:56:52 IST
 ippamathry eppavum vilayadanum. namathu team l pandhu veechalargal innum vendum. nalvazthukal. 
by h.a.c krishnan,muscat,Oman    19-02-2010 09:53:56 IST
 இந்தியா எப்போதுமே அசத்தல் வெற்றி பெறும்  
by N ஜெயராமன்,cuddalore,India    19-02-2010 09:48:46 IST
 இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. நமது இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் (தெ.ஆ)கூறுகையில் சவுத் ஆப்ரிக்கா முதல் போட்டியில் நன்றாக விளையாடி இருப்பதால். இரண்டாவது போட்டியில் தடுமாறும் என்று குறிப்பிட்டு இருந்தார்.அதே போல் அவர்களும் சொதப்பிவிட்டனர்.பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது சரியாகத்தான் உள்ளது.இதே வெற்றியை தொடர வேண்டுமென்றால் கிறிஸ்டனின் சேவை! இவ்விடத்தில் நமக்கு மிக மிக தேவை!!சிந்திப்போம்!!!! செயல் படுவோம்!!!! வெற்றி பெறுவோம்!!!!  
by g. திருமலைசாமி.,unjha.gujarat.,India    19-02-2010 09:44:42 IST
 விஷஸ் போர் இந்தியன் டீம்
இந்தியாவிற்கு எனது வாழ்த்துக்கள்  
by m செந்தில் குமார் ,vellore,India    19-02-2010 09:24:47 IST
 JAIHIND, 
by r.k சக்திவேல்,madurai,India    19-02-2010 08:49:45 IST
 nalla irukku 
by Rajesh,Malana,Himachalpradesh,India    19-02-2010 08:10:05 IST
 ரமேஷ் ''Bravo'' வெஸ்ட் இண்டீஸ் டீம் ஆச்சே !!! அவரை ஏன் வாழ்த்துறீங்க ? 
by s விஜய்,hyderabad,India    19-02-2010 08:08:20 IST
 இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதே சமயம் ஆம்லா வின் ஆட்டம் மிகவும் சிறப்பானது. இதே நிலையில் இந்திய வீரரர்களாக இருந்தால் எப்போதோ அவுட்டாகி இருப்பார்கள். இந்திய அணிக்கு இது நல்ல படிப்பினைய ஆக எடுத்துக்கொண்டு இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும். நம் நாடு எல்லா துறைகளிலும் உலகத்தில் முதலாவதாக இருக்க கடுவுளை பிரார்த்திப்போம். 
by s satheeshkumar,jubail,Saudi Arabia    19-02-2010 02:04:40 IST
 Congrats! Bravo! excellant 
by MR RAMESH,Abu Dhabi,United Arab Emirates    19-02-2010 01:28:07 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்