முதல் பக்க செய்திகள் 

தலாய் லாமாவுடன் ஒபாமா பேசியது உறுதி மீறல் : ஆத்திரப்படுகிறது சீனா
பிப்ரவரி 20,2010,00:00  IST

Front page news and headlines today

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது ஒரு மீறலாகும் என்று சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை புத்த மதத் தலைவர் புகழ்ந்து பேசினார்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு தன்னாட்சி கேட்டு, புத்த மதத் தலைவர் தலாய் லாமா போராடி வருகிறார். இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தலாய் லாமா, இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மஸ்தலாவில் தங்கியுள்ளார். திபெத்துக்கு விடுதலை கோரி, அவர் உலகம் முழுவதும் சுற்றி பிரசாரம் செய்து வருகிறார்; உலகத் தலைவர்களிடமும் முறையிட்டு வருகிறார். இதற்கிடையே, அமெரிக்காவில் 10 நாள் பயணம் மேற் கொண்டுள்ள தலாய் லாமா, வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவை சந்தித்துபேசினார்."தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திக்கக்கூடாது' என, சீன அரசு கோரி வந்தது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த ஒபாமா, தலாய் லாமாவுடன் பேசினார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரிடம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குய் டியான்காய், எழுத்துபூர்வமாக அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து சீன வெளியுறவுத் துறை அதிகாரி மா சவோசூ குறிப்பிடுகையில், "சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத்; இது தனிநாடாவதை ஆதரிக்க மாட்டோம் என கூறி வந்த அதிபர் ஒபாமா, திபெத்தை தனிநாடாக்க கோருபவர் களை சந்தித்துள்ளது, அவர் கொடுத்த உறுதிமொழியை மீறுவதாக உள்ளது. சீன எதிர்ப்பாளர்களை ஆதரிப்பதையும், சீனாவின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்க - சீன உறவு மேம்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும்' என்றார். தலாய் லாமா - ஒபாமா சந்திப்பு நிகழ்ச்சியை படமெடுக்க, பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ராபர்ட் ஜிப்ஸ் குறிப்பிடுகையில், "தலாய் லாமா, சீன அரசுடன் மேற்கொண்டுள்ள நடுநிலையான அகிம்சை ரீதியிலான போராட்டத்தை ஒபாமா பாராட்டினார்' என்றார்.அதிபர் ஒபாமாவை சந்தித்த தலாய் லாமா கூறியதாவது: திபெத் பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் வாய்ந்தது. சீனாவில் புரட்சி ஏற்பட்டதற்கு பிறகு, புத்த மதக் கொள்கை உள்ளிட்ட சீனாவின் மதிப்பு அழிக்கப்பட்டு விட்டது. எந்த ஒரு பிரச்னையையும் ஒரு தலைபட்சமாக பார்க்கக்கூடாது. இதனால், உண்மையான விஷயங்கள் முழுமையாக தெரிய வருவதில்லை. திபெத்துக்கு தன்னிச்சையான அந்தஸ்து அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் புனிதத்துவமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அதிபர் என்ற முறையில் மனித மதிப்பை மேம்படுத்துவது குறித்தும், மத நல்லிணக்கம் குறித்தும் தான் முக்கியமாக பேசினேன். திபெத் விஷயம் கடைசியாகத் தான் பேசப்பட்டது. அரசியல் ரீதியாக ஒபாமா எனக்கு தலைவர். ஆன்மிகத்தை பொறுத்தவரை அவருக்கு நான் தலைவர். ஒபாமாவின் ஆட்சியில் இந்தியர்களுக்கும் பங்களிப்பு அளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஒபாமா அதிபரானது எல்லாருக்குமே மகிழ்ச்சி தான்.  இவ்வாறு தலாய் லாமா கூறினார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனையும் தலாய் லாமா சந்தித்து பேசினார். தைவான் நாடும் தங்கள் எல்லைக் குட்பட்ட பகுதி என சீனா கூறி வருகிறது. இதற்கிடையே, தைவான் நாட்டுக்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை அளிக்க, அமெரிக்காவுக்கும் - தைவான் அரசுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த விஷயம், அமெரிக்க - சீன உறவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலாய் லாமா சந்திப்பு, சீனாவுக்கு மேலும் எரிச்சலை கிளப்பியுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 எப்படியாவது சீனாவின் அடாவடி ஆட்சிமுறை ஒழிய உலக மக்கள் ஒன்றுபட வேண்டும். 
by J தீமோத்hy ஆசிர்,Bangalore, Karnataka,India    20-02-2010 13:58:52 IST
 அமிரிக்கா ஏமாற்த்து பேர் வழி என்பதே உண்மை . தெரிந்து கொள்வார் தலாய்லாம .  
by s hussain,dammam, ksa,India    20-02-2010 13:32:21 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்