முதல் பக்க செய்திகள் 

தமிழகம் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை : முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர்
பிப்ரவரி 20,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : "முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. விட்டுக் கொடுத்ததாக கூறுவது அரசியல் பிரசாரமே' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:* எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இருந்த போது மதுரையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில், உலகத் தமிழ்ச் சங்க கட்டடம் கட்டப்படுமென அறிவித்தாரே, இந்த அரசில் அதற்கான திட்டம் ஏதாவது இருக்கிறதா?
தி.மு.க., ஆட்சியில் டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப் பட்ட சீராய்வுக் குழு இது தொடர்பாக பரிந்துரைத்திருக்கிறது. அந்த பரிந்துரையை இந்த அரசு பரிசீலித்து, மதுரையில் உலக தமிழ்ச் சங்க மாளிகை கட்டும் நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும்.* முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து, சுப்ரீம் கோர்ட் ஐந்து பேர் குழுவை அறிவித்திருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை சம்பந்தமான வழக்கில், குறிப்பாக கேரளா அரசு நிறைவேற்றிய கேரளா நீர்ப் பாசனம் மற்றும் நீர் சேமிப்பு சட்டம், செல்லத்தக்கதல்ல என்று தக்க சட்ட ஆதாரங்களுடன் வாதிட்டோம். அதற்கு நேர்மாறாக கேரளா அரசு தனக்கு அத்தகைய சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என்றும், உரிமை உண்டு என்றும் வாதிட்டது. இந்த வாதங்களைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு, இதற்கொரு நடுவர் மன்றம் அமைக்கலாமா என்ற ஆலோசனையை தெரிவித்தது. அதை தமிழக அரசு ஏற்க மறுத்தது. ஆனால், கேரளா அதை வரவேற்றது. சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கில் முடிவெடுக்க வசதியாக, அரசியல் சாசனம் 131வது பிரிவின் கீழ் ஐந்து பேர் கொண்ட குழுவை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்துள்ளது. இக்குழு, அணை பாதுகாப்பு மற்றும் நீர்மட்ட உயரம் முதலியவைகளை பரிசீலனை செய்து அதன் அறிக்கையை அரசியல் சாசன அமர்வுக்கு ஆறு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு எதையும் விட்டுக் கொடுத்துவிடவில்லை. கேரள அரசுக்கு சாதகமாக எவ்வித முடிவும் வந்து விடவில்லை. அதற்குள் சில அவசரக்காரர்கள் ஏதோ தமிழக அரசு ஏமாந்து விட்டது. விட்டுக் கொடுத்து விட்டது என்றெல்லாம் கூறுவது அரசியல் பிரசாரமே தவிர வேறல்ல.* தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின் துணை ஆணையர், தி.மு.க., அரசின் மீது திடீர் பாய்ச்சல் நடத்தியிருப்பது ஏன்?
புறம் கூறுவது ஒன்றையே வேலையாக வைத்துக் கொண்டு, பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், அருந்ததியர் முன்னேற் றத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரிருவர் ஒழுங்குமுறையோடு செயல்படவில்லை என்பதற்காக நடவடிக்கைக்கு ஆளாகக் கூடும் என்ற நடுக்கத்தில் பிதற்றியதை நம்பி பேசியிருக்கிறார் போலும் இந்தத் துணை ஆணையர். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 எதுவுமே இல்லையே,என்ன இருக்கிறது விட்டு கொடுக்க,புதிய மொந்தையில பழைய கல்லு மாதிரி இருக்கு ஓங்க டைலாக்,முல்லை பெரியாறு பிரச்சனையில போச்சு,ஆந்த்ராவுக்கு வேலை தேடி போன தமிழனை ஓதசி தொரத்த்றான்,காவிரி தண்ணீர் வாங்கிட்டீங்க கன்னட கவிஞர் செலைய வெச்சீங்க,இந்தியாவுல எங்க -போனாலும் தமிழன் அடிவான்குறான்,இதுக்கு மேல என்ன இருக்குதுன்னு கொஞ்சம் கொஞ்சம் சொல்லுங்களேன், 
by k திரு,chennai,India    21-02-2010 15:06:56 IST
 காவிரிலே தண்ணி கேட்டு அடிவாங்கினது போதாதா ! இப்ப கேரளவில அடிவாங்கணுமா 
by n gokulakrishnan,gurgaon,India    20-02-2010 21:03:33 IST
 Hi Mu. Karunaanithi. First you try to stop our things (current, Soil, Water, Kerosine, Rice (all kind), Fruits, fishs, brisks, iron rods, medicines and much more), kerala will automatically will come to surrender to us and they will touch our legs (This is prohibitted). So, don''''t try to cheat all Tamilans. you are playing very good political game starting from 1964. Now, there is no oppotition party in political, so, you and your familiy are occupying total Tamil Nadu. If we want to save our rights, fitst kickout all keralites from our State, stop the things we are sending to kerala (legally or illegally), They will come down or not, we will see. But you are not stoping your own model quation and answer to send media. When you stop your style, our State become economically rich. 
by M boomi,Mumbai,India    20-02-2010 19:26:35 IST
  எவருக்கும் தகுதி இல்லை பொன்மனசெம்மல் எம்.ஜி ஆர் பற்றி பேசவதற்கு.

ஏழை எழிய மக்களின் எட்டாத கனியாக இருக்கும் எந்த ஒரு கனவையும் அவர்கள் வாழ்க்கையில் நிஜமாக்கி காட்டிய வல்லமை படைத்த ஒரே தலைவன் மறைந்த பொன்மான செம்மல் எம்ஜிஆர் மட்டுமே.

வேற யாரையும் திட்டு மறைந்த தலைவர் எம்ஜிஆர் அவர்களை புறம் பேசி அவர் விசுவாசிகளை சீன்டாதே.

உனக்கு எப்படி உன் கலைஞர் டாக்டர் கருணாநிதியோ அது போல அதிமுகவின் உண்மை தொண்டர்களுக்கு புரட்சி தலைவர் .இருபவர்களை பற்றி பேசு இல்லாதவர் பற்றி பேசாதே கோழையே..  
by RS அர்ஜுன் ,chennai ,India    20-02-2010 17:31:07 IST
 ஹலோ ரிஸ்வான் சார் கம் ஆன்.. உங்கள் விமர்சனத்தை படிச்சாதான் ஒரு திருப்தி கிட்டும்..

ஆனா இந்த மஞ்ச துண்டார் ரொம்ப ஓவர்..  
by Ma. முருகன்,Chennai,India    20-02-2010 15:08:10 IST
 தமிழன் செய்கிற முதல் தவறு ஓட்டு போடுவதுதான்!!! யாரும் இனிமேல் ஓட்டு போடாதிங்க!!! ஜனநாயகம் செத்து வருஷகணக்காட்சி!!!!  
by A பாலன்,Vanavasi Salem,India    20-02-2010 14:43:16 IST
 இன்னைக்கும் ஒரு அறிக்கைய ?
தாங்க முடியல.... இவர் பேசாம முதல்வர் பதவியை விட்டுவிட்டு முழுநேர கவிஞன் ஆகிவிடலாம்.

அண்ணன் சேகர் சிங்கப்பூர் கரெக்டாக கூறினார்கள்......

சில சமுக விரோதிகள் தினமலரில் இருக்கான் தான் செய்வார்கள்... command பிடிக்க வில்லை என்றால் என்ன எல்லாம் பண்றாங்க..

அண்ணன் ரிஸ்வான் இக்கு நடந்துதான் உங்களுக்கும். நல்லது சொன்னால் காலம் இல்லை....

இந்த நாடும் மக்களும் நாசமா போகட்டும். எவளவோ நம் கவலை பட்டாலும் இவர்கள் திருந்தவே மாட்டர்கள்...............  
by s mohamed shaheed,Al-khobar (திருநெல்வேலி),Saudi Arabia    20-02-2010 14:33:45 IST
 திரு இளங்கோவன் திரு கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கட்டும். தமிழில் ஒரு பழமொழி உள்ளது. ஆத்தோடு போனாலும் ஆதாயம் இல்லாமல் போக மாட்டான் என்று. அதுதான் நீங்கள் ஆதரிப்பவரின் கதை. எந்த ஒரு இலவச அறிவிப்பிலும் தி மு க வை சேர்ந்தவர்களுக்கு ஆதாயமில்லை என்றால் எதுவும் வரபோவதில்லை. உதாரணதுக்கு கலர் டிவியில் எந்த ஒரு கமிஷனும் வாங்காமல் ஆர்டர் கொடுத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைகிறீர்களா? அதேபோல் நீங்கள் கூறுவது போல் வரிசையில் நின்றாலும், தி மு க ஆளாக இல்லாவிடில், எந்த ஒன்றும் கிடைக்க போவதில்லை. வேண்டுமெனில் இலவச புடவை கிடைக்கும், ஏனெனில் அந்த புடவையை கட்டிக்கொள்ளும் நிலைமையில் எந்த ஒரு திமுக தொண்டன் கூட இல்லை. ஆனால் அதிலும் வாங்கும் கமிஷன் வங்கி இருப்பார். ஒரு ஒரு முறையும் திரு கருணாநிதி தோற்கும் பொழுதும், தமிழக கஜானாவை காலி செய்துவிட்டு போவர். அடுத்து வரும் MGR அல்லது ஜெயலலிதாவிற்கு இதை சரி செய்வதற்குதான் சமயம் சரியாய் இருக்கும். இதில் எப்படி திரு கருணாவின் இலவச அறிவிப்புகளை தொடர முடியும்? பாவம் ராமதாஸ்! அவர் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ ஆதரித்துதான் ஒரு ஒரு முறையும் சில வெற்றிகளை பெறுகிறார். அவர் இதுவரை முடிவெடுக்கும் இடத்தில் இருந்ததில்லை. அவர் எப்படி கருணாநிதியின் இலவச திட்டங்களை அழிக்க முடியும்?  
by EV ஸ்ரீனிவாசன்,Muscat, Oman,Oman    20-02-2010 14:29:25 IST
 இங்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. ஆனா கருணாவுக்கு பாராட்டு விழாவும் அதனால வர்ற பிரச்சனைகளும் தான் பெருச்ச தெரிது.

இப்ப பாராட்டு விழா நடத்தாத ஒரே சங்கம் பிச்சைக்கார சங்கம் தான்

தமிழ் சினிமா உலகத்தையே தன் குடும்பத்தால் ஆட்சி செய்கிறார் நம்ம கருணா. (sun pictures, உதயநிதி, தயாநிதி அழகிரி) .

அவுங்க எல்லாரும் அவுங்களுக்கு அடிமை மாதிரி வச்சுருக்காங்க.

அய்யா கருணா அவர்களே உங்க குடும்பம் இப்ப வாங்காத சொத்து IPL டீம் மட்டும் தான்.  
by tamilan,chennai,India    20-02-2010 12:51:15 IST
 திரு அய்யா அவர்களே நீங்க முதல்ல பதவிய ராஜினாமா செய்யுங்க  
by s p,Chennai,India    20-02-2010 12:48:36 IST
 தமிழர்களின் மானத்தையும்,வீரத்தையும்,உணர்வுகளையும் மாற்றானிடம் அடகுவைத்த இவரும்,இவர் குடும்பத்தாரும் இருக்கும்வரை நாம் தலை நிமிரவே முடியாது...அட மானங்கெட்ட பன்னாடைகள..இனிமேலாவது இலவசத்துக்கு பின்னாடி ஓடம இருங்க..வெளிநாட்டில் உள்ளவனெல்லாம் உங்களப்பாத்து சிரிப்பா சிரிக்கிறானுங்க..தமிழர்களுக்கு காசு கொடுத்தால் எதையும் விட்டுக்கொடுப்பார்கள் என்று இங்குள்ள மற்ற மாநிலத்தவர்(குறிப்பாக கேரளா,கர்நாடக,ஆந்திர)பேசும்போது தூக்கில் தொங்கவேண்டும் போல் உள்ளது..சொரணை இல்லாத ஜென்மங்களா நாம்????? 
by podhujanam,male',Maldives    20-02-2010 12:44:47 IST
 முல்லைப் பெரியாறு அணை பிரச்னை சம்பந்தமான வழக்கில், - வாதிட்டோம் - அதற்கு கேரளா வாதிட்டது - சுப்ரீம் கோர்ட் நடுவர் மன்றம் அமைக்கலாமா என்ற ஆலோசனையை தெரிவித்தது - தமிழக அரசு ஏற்க மறுத்தது - கேரளா வரவேற்றது. சுப்ரீம் கோர்ட், அணை பாதுகாப்பு மற்றும் நீர்மட்ட உயரம் முதலியவைகளை பரிசீலனை செய்து அறிக்கையை ஆறு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்திருக்கிறது. - இப்படியே கதை சொல்லி உங்க பிழைப்பை நடத்துங்க. நாளைக்கு வேற கதை சொல்லலாம்  
by a வேல் முருகன்,Kasimedu,India    20-02-2010 12:34:26 IST
 நண்பர் ரிஸ்வான், அ தி மு க கொள்கை பரப்பு செயலாளர் சிங்கப்பூர் சேகர், சீனா ஜியாங்,மற்றும் சிலர் இவர்கள் அனைவரும் வெளி நாடு போயி ஆபீஸ் நேரத்தில் ஒழுங்காக வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்து ஒ பி அடிக்காமல், இந்தியரின் மானத்தை வாங்காமல், ஆஸ்திரேலியாவில் அடி வாங்குவதை போல அடி வாங்காமல் நம் நாட்டிற்கு தேவையான அங்குள்ள நல்ல டெக்னிக், டெக்னாலஜி, சிறந்த நிர்வாக நடைமுறைகளை தமிழகத்தில் உள்ள நண்பர்களுக்கு சொல்லி தமிழகத்தை முன்னேற்ற செய்யலாம். இது நாளை முதல் உங்களிடம் இருந்து துவங்கட்டும்! வீணாக கமெண்ட்ஸ் எழுதி உங்கள் நேரம், ஆபீஸ் சம்பளம் பணம், இந்தியாவின் மானம் மரியாதையை வீணாக்க வேண்டாம்  
by A Gokulakrishnan,Arcot,India    20-02-2010 12:03:32 IST
 சில திமுகவினருக்கு கலைஞர் பற்றி எதிராக கருத்து சொல்பவர்களை தைரியமாக அவர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமால் சகோதரர்கள் அண்ணன் ரிஸ்வான் மற்றும் கைபுள்ளே,சேகர், பாண்டியன் இவர்களுக்கு பெயருக்கு முன்பு மிருகங்கள் நாய்.பன்றி கழுதை போன்றவற்றை எழுதி கருத்து சொல்கிறார்கள்.இது தான் திமுகவினர் உண்மையான பெயர்களில் இவர்களுக்கு கருத்து சொல்ல தைரியம் இல்லாத முதுகெலும்பு அற்றவர்கள் இவர்கள்.இலவசத்தில் சாப்பிட்டு இலவசத்தில் வாழும் இவர்களின் செயல்கள் இப்படி தான் இருக்கும்.மற்றவர்களின் பெயரில் அடைமொழி போட்டு கருத்து சொல்லும் திமுகவினரே உங்களின் உண்மையான பெயரில் கருத்து சொல்லுங்கள் அது தான் மனித தன்மை.  
by RK மனோஜ் ,chennai ,India    20-02-2010 11:54:46 IST
 திரு.இளங்கோவன் அவர்களே, நீங்கள் சொல்லுங்கள் யார் கேட்டது இவரிடம் இலவசம்,அவருடைய சொந்த பணத்தில் இருந்து இதை எல்லாம் கொடுத்தாரா? தமிழ் நாட்டில் தற்போது விலைவாசி என்ன என்று தெரியுமா?  
by padma Padma,Chennai,India    20-02-2010 11:37:22 IST
 
Dear Thiru MK,
The true Tamilan would back up DMK and Thiru MK forever.
If anyone suspect on your Tamil and your importance on the language enriching activities, they would be the stupid.
Please, just ignore such a plain blames and their false accusations. We know about you.
We know who is MGR, how he helped through MATHUR BOOMI news magazine to help kerala people to come to TN and occupy all the good jobs.
Some, stupid here doesn’t know the history. People from kerala can come to TN to launch a Tea shop or get a Central Government Jobs. But, cannot be allowed to take our TN state government jobs.. OK

Hello friends,
Anyone has a proof as Thiru MK allowed any other state people to come to TN to steal all our jobs.
The only funny kerala man (MGR), who born in KANDI was the one, made use of the opportunity during his period to do such a cunning and crooked work. Eventually ¼ of Coibatore kerala people and they even spread all over the TN.
But, without knowing the truth, some funny Tamilan praises him as PURATCHI THALAIVAR my foot lah.
Yes, the true Tamilan would back up DMK and Thiru MK forever.
 
by t jopet,singapore,Singapore    20-02-2010 10:18:36 IST
 தமிழகம் கெட்டு சீர் குலைந்து நிற்பதற்கு இந்த வயதான சீப் மினிஸ்டரும் அவர் குடும்பத்தின் தென் மாநில வியாபாரமுமே காரணம் ஆகும். அன்று சர்க்காரியா கமிஷனுக்காக கட்ச தீவை கொடுத்தொழிந்தார். இன்று இவரின் குடும்ப தொழிலுக்காக ஆந்திரா பாலாற்று தண்ணீரையும், செல்வி சுகமாக இருக்க கர்நாடக காவிரியையும் மாறன் குடும்ப தொலை காட்சியும் மற்ற பல இத்யாதி தொழிலுக்கும் முல்லை பெரியாரை கேரளத்துக்கும் தாரை வார்த்து விட்டு, கமுக்கமாக ஒண்ணுமே தெரியாத வடிவேலு போல இந்த பெரியவர் பேந்த பேந்த முழிக்கிறார். இன்னும் பல பல தில்லு முல்லுகள் செய்து தமிழக சரித்திரத்தில் ''இப்படி நடக்க கூடாத தலைவராக'' உருவெடுத்து விட்டார் கருணாநிதி. இவரின் தொடர்ச்சி தமிழகத்தின் வீழ்ச்சி AND VICE VERSA. 
by G பன்னாடை பாண்டியன் ,chennai,India    20-02-2010 09:55:56 IST
 இலங்கை தமிழ் மக்கள் இருபதாயிரம் பேர் இறந்தேபோது
எழுந்திராத தமிழகம்!முல்லை பெரியார் பிரச்சனைக்கு முழிக்கவா போகிறது
தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!
 
by V Isaivanan,New Orleans,United States    20-02-2010 09:43:01 IST
 கருணாநிதிக்கு ஒன்னு மட்டும புரிஞ்சிபோச்சு அடுத்த ஆட்சி நம்ம ஆட்சி இல்லை என்று. அதனால் அவரும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி அறிக்கைமேல் அறிக்கை விட்டு அவர் ஆட்சிக்கு சப்பை கட்டு கட்டிகொண்டிருக்கிறார் என்ன kodumai என்றால் அவர் இலவச திட்டம் அவரையே பூமராங் மாதிரி தாக்கபோகிறது என்று விலைவாசி விர்ரென்று விண்ணைநோக்கி போய்கொண்டிருக்கிறது. அம்மா கொடநாட்டில் ஆலோசனை. உருப்படும் தமிழ்நாடு 
by c senthilkumar,MURQAB ,Kuwait    20-02-2010 06:53:02 IST
 சிலர் முட்டாள்தனமாக எழுதுகின்றனர். அதை படிக்கும் போது மனசு வலிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் மிகுந்த அனுபவம் உள்ளவர் நமது கலைஞர் கருணாநிதி அவர்கள்தான். அவர் மக்களுக்காக செயல் படுத்திய திட்டங்கள் பல பல. ஆனால் அவற்றில் ஓரிரு திட்டங்கள் ஜெயலலிதா, ராமதாஸ் போன்றவர்களால் செயல் இழந்து பொய் விட்டது என்பது தான் உண்மை. இலவசமாக கொடுக்கிறார், இலவசமாக கொடுக்கிறார் என்று சொல்கின்றனர். ஆனால் எவன் அந்த இலவச பொருளை வாங்காமல் இருக்கிறான். முதல் வரிசையில் முதலாவது ஆளாக நிற்கிறான். லோன் வாங்கினால் தள்ளுபடி கிடைக்கும் என்றே கட்டாமல் இருக்கிறான். இப்படில்லாம் சலுகைகளை அனுபவித்திவிட்டு கலைனரை குறை சொல்ல எப்படித்தான் மனம் வருதோ. அம்மா அம்மா என்று அவள் காலில் விழுவதிவிட இந்த உலகில் கேவலமான செயல் இல்லவே இல்ல.  
by R. இளங்கோவன்,singapore,Singapore    20-02-2010 06:14:31 IST
 என்ன அடக்கம் என்னா அடக்கம்..மஞ்ச துண்டு வீரர்களே...உங்க தலைவர பாராட்டலேன்னு என் மீது உங்களுக்கு கோபம் இருந்துச்சுல்லே..இன்னிக்கி உங்க மஞ்ச துண்டாற்கு என் பாராட்டுகள்.
எதுக்குன்னு தெரியலே?? இந்த தபா தான் உங்க மஞ்ச துண்டார் ''சுய'' கேள்வி பதில் அறிக்கையில் ''தன்னை தானே'' பாராடிக்காம மத்தவங்க மீது ''எரிஞ்சு'' விழுந்திருக்கார்..அதுக்காகத்தான்.

அப்போ கேரளா அரசு இனி முல்லைபெரியார் அணையில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி நூத்து நாற்பதெட்டு அடி தண்ணீர தேச்கிவச்சுக்க அனுமதிக்கும்..
கேசை வாபஸ் வாங்கிடுவாங்க..அப்படித்தானே? மஞ்ச துண்டாரே..

தமிழ் மக்கள் காதுல உம்மை போல ஒருமனுஷன் ''பூ'' சுத்த இனி பிறந்துதான் வரணும்..
இந்த வைகோ வுக்கு வேலை இல்ல..ஹ்ம்ம்?? அதுதானே உங்களோட ''எரிச்சல்''. என்ன அவசரம் இவருக்கு..இன்னும் பெரியார் அணையை கேரளா இடிக்கவே இல்ல.. இன்னும் அவர்கள் புதுசா ஒரு அணையை கட்டவே இல்லே.. அதுக்குள்ளே என்னா அவசரம்?

நிம்மதியா மானாட ..நமீதா ஆட ச்ச்சே ''பார்கவிடராங்களா'' பாலாராம்..காவிரியாம்..பெரியாராம்..இதுவா ரொம்போ முக்கியம்..??
எத்தனை பாராட்டுவிழா இருக்கு..அதுக்கு ''இன்னா'' ''டைட்டில்ல'' இன்னா பட்டம் கொடுக்கறது..யாரவெச்சு நடத்தறது.. இப்படி யோசிக்க விடறாங்களா?

யப்பா தமிழ்நாட்டு சனங்களா..மஞ்ச துண்டார நிம்மதியா இருக்க விடுங்களேன்..அவரோட ஊடங்கங்கள் மட்டும் படியுங்க..அப்போ தெரியும்..''பாலாரும்..தேனாறும்'' கூவத்த காட்டிலும் சும்மா சோக்கா ஓடுதுன்னு..

அடுத்த ''சுய'' விளம்பர அறிக்கைக்காக காத்திருக்கிறேன் மஞ்சா துண்டாரே.. 
by P சேகர்,SINGAPORE,Singapore    20-02-2010 05:17:02 IST
 இது என்ன தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லுவது? உலகத்திலயே இவரு மட்டுதான் இப்படி அறிக்கை விடுறார்! இவருதான் பெரிய காமெடியன். சான்சே இல்ல போங்க. 
by M சந்திரன்,Chennai,India    20-02-2010 04:53:30 IST
 During review at Chennai,National Committee of SC/ST,Deputy Chairman,had asked data on various schemes implemented for SC/ST and excat numbers benefitted.Officials gave no details of TN.BUT MK HAVE DETALS OF WEST BENGAL & KERALA ONLY. 
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire)    20-02-2010 04:11:40 IST
 கட்டடம் கட்டுவது அல்ல புரட்சித் தலைவரின் முதன்மை நோக்கம். உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்து உலக மக்களோடு தொடர்பு கொண்டு உலகெங்கும் தமிழ் மொழி,தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம், தமிழ் வரலாறு, தமிழக வரலாறு எனத் தமிழின் சிறப்புகளைப் பரப்புவது; உரிய காலங்களில் இச்சங்கமே உலகத் தமிழ் மாநாட்டை நடத்தவது என் பனவே அவரது இலக்காக இருந்தது. ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்படது. உலகத் தமிழ்ச்சங்கம் அமைந்து முறையாகச் செயல்பட்டிருப்பின் ஈழத் தமிழர்களுக்குக் கூட விடிவு பிறந்திருக்கும்.  
by I. thiruvalluvan,chennai,India    20-02-2010 04:03:58 IST
 ஆதி திராவிடர் நலன் குறித்து முதல்வர் அவர்கள் உண்மையிலேயே கருத்து செலுத்தி நல்ல ஆணைகள் பலவற்றைப் போட்டுள்ளார். ஆனால் அவரது அதிகாரிகள் அவற்றை மீறி எதிராகச் செயல்படுகின்றனர். அவரது கட்டுப்பாட்டில் உள்ள கலை பண்பாட்டுத் துறையில் ஆதி திராவிடர்க்கான ஒதுக்கீடு ஒன்று கூட இல்லை என்பதை உணர்ந்து இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற கடுமையான ஆணையைப் போட்டார். ஆனால் , ஊழலில் திளைத்த ஒழுக்கக் கேடானவர் ஒருவர் குறுக்கு வழியில் அப்பதவிக்கு வந்தமையால் இதை அப்படியே புறக்கணித்துவிட்டு ஆதி திராவிடர்க்குரிய பணியிடங்களில் பணங்களைக் கொட்டிக் கொடுத்தவர்கள் தகுதிகள் இல்லாத பொழுதே நியமித்து விட்டார். உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் ஆதி திராவிடர் நலனுக்கான ஆணைகளைப் பிறப்பித்த முதல்வர் அவர்கள் இம் முறைகேடான அனைத்து நியமனங்களையும் நீக்கம் செய்து உரிய ஒதுக்கீட்டு அடிப்படையில் மறு நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். ஊழல்பேர் வழிகளின் பணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.  
by I. Thiruvalluvan,chennai,India    20-02-2010 03:56:18 IST
 ஐயா கே கே, நிறுத்தும் உம் காமெடி வசனத்தை, தமிழினம் இருண்டது உன்னால். உன்னால்தானையா காவிரி, கட்ச தீவு, மீனவர்களின் வாழ்வு இழந்தோம். தனக்கு சிலைகளையும், தன் பேரில் tv, இலவச tv, கவர்ச்சி கடிதங்களே உன் சாதனைகள்.  
by M Murugan,Pune,India    20-02-2010 03:53:18 IST
 ஜெ அறிக்கை விடும் வரை கேரளா அணையே கட்டவில்லை, மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை, என்று நாடகம் ஆடினீர்கள்! உமக்கு பாராட்டு விழாவில் பங்கேற்பதற்கே நேரம் போதவில்லை! 
by V பார்த்திபன்,Cambridge,United Kingdom    20-02-2010 01:57:25 IST
 நீங்க அவுங்கல சொல்ல வேண்டியது தான் அந்த அம்மா உன்ன சொல்ல வேண்டியது தான் உங்களுக்கு வேற வேலை இல்ல  
by A சரவணண்(யாமிருக்க பயமென்),DUBAI(MADURAI),India    20-02-2010 01:28:57 IST
 ச்சை..... என்னப்பா இன்னிக்கு ஒன்னும் உப்பு சப்பிலாம நியுஸ் இருக்கு. ஆமா இந்த கேப்டன் எங்க போனான்? ரொம்ப நாளா ஆள காணோம். தேர்தல் அப்போ மட்டும் வந்து நான் மக்களோட கூட்டணி, மாவாற்றுகிறவன் கூட கூட்டணி-னு கலர் கலரா பீலா விட வேண்டியது. தேர்தல் முடிஞ்சா ஒடனே எதாவது ஒரு வயதான ஹீரோயின் கூட பாட்டு பாட போய்ட வேண்டியது. நம்ம பொடி தாங்கி..... சாரி குடி தாங்கியவும் காணோம். வை.கோ. மட்டும் ஒரு ஓரமா ராம்போ ரேஞ்சுல சவுண்ட் வுட்டுகிட்டு இருக்காரு. அம்மா கொசு கூட சண்டை போட்டு முடிச்சிட்டு கொடநாட்டில போய் குப்புற படுத்துகிச்சு. இவரு என்னடானா ஒண்ணுமே புரியாத மாறி கேள்வி பதில் அறிக்கை தராரு. இளங்கோவன் என்னடான ஒரு மனோகரா ரேஞ்சுக்கு வசனம் பேசறாரு. என்ன ஆச்சு தமிழ் நாட்டில? எல்லோரும் மானாட மயிலாட பாருங்க. சிரிச்சு சந்தோசமா இருங்க.  
by k கைப்புள்ள,nj,India    20-02-2010 00:57:44 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்